ஏதோ ஒரு நதியில்.. -8

8 " வா..." என்றான் கௌதம் ஒற்றைச் சொல்லாய்... அவள் அசையாமல் நின்றாள். " என்ன... ?" " நீங்கள் என்னை இன்சல்...


8

"வா..." என்றான் கௌதம் ஒற்றைச் சொல்லாய்... அவள் அசையாமல் நின்றாள்.
"என்ன...?"
"நீங்கள் என்னை இன்சல்ட் பண்ணுகிறீர்கள்?"
"அப்படிச் செய்தாலும் அது ஒன்றும் பெரிய தவறில்லை. நீ என் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்தவள். உன்னை என்ன செய்தாலும் தகும். ஆனால் இப்போது நான் அப்படி எதுவும் செய்யவில்லையே..."
"நீங்கள் பெரிய பெட்டிகளை எடுத்துக் கொண்டு என்னிடம் சின்னப் பெட்டியைக் கொடுத்தால் என்ன அர்த்தம்?"
"உன்னால் சுமக்க முடியாது என்று அர்த்தம்."
"ஸோ வாட்..?"
"நாங்கள் பலமில்லாதவர்கள்... யூஸ்லெஸ்... என்கிறீர்கள்."
"நாங்கள் என்றால் யார்? உன் ஒருத்திக்குத்தானே நான் தாலிகட்டி விட்டு லோல் படுகிறேன்?"
பூஜாவின் வேகம் கொஞ்சம் தணிந்தது.
"நாங்கள் என்றால் பெண்கள்..."
"பெண்ணுரிமையைப் பேசும் நேரம் இதுவல்ல. நான் பெண்களின் உரிமைகளை மதிப்பவன்... மிதிப்பவன் அல்ல.."
"அதுதான் தெரிகின்றதே... என் உரிமையைப் பறித்து என்னை கைதி போல் அழைத்துக் கொண்டு போய் கொண்டிருக்கிறீர்கள். பேச்சு மட்டும்... பெண்ணுரிமையை மதிப்பதாய் பேசுகிறீர்கள்..."
"உலகத்திலேயே நீ ஒருத்திதான் பெண்ணா? நீ பண்ணியிருக்கும் காரியத்தைக் கேட்டால் யாரும் உன் உரிமையைப் பாராட்டிப் பேச மாட்டார்கள். வாயை மூடிக் கொண்டு பேசாமல் வா...."
பூஜா பல்லைக் கடித்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள். பிறந்ததில் இருந்த யாரும் அவளை இந்த அளவுக்கு மிரட்டியதில்லை. இவன் என்னடாவென்றால் அவன் வீட்டு நாய்க் குட்டியைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறது போல அவளை அழைத்துக் கொண்டு போகிறானே.
இப்படியே திரும்பி விடலாமா? என்று ஒரு கணம் நினைத்தாள்... ஆனால் அதன் பின் விளைவுகளை நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மரணப் படுக்கையில் அங்கே ஒரு ஜீவன் அவளுக்காகக் காத்துக் கிடக்கும்போது இவனிடம் ரோசம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று தனக்குள் கூறிக் கொண்டவள்... அதன் பின் அவனோடு பேசுவதைத் தவிர்த்து ஏர்போர்ட் லவுஞ்சில் போய் அமர்ந்து கொண்டாள்.
கோயம்புத்தூரில் ஏர்போர்ட்டில் மறுநாள் இறங்கிய போது அவளுக்கு ஏனோ கால்கள் பின்னின. குற்றம் செய்து விட்டுத் தப்பி ஓடியவள். பிடிபட்டு திரும்பியிருப்பது போல் மனதில் ஓர் பதைபதைப்பு ஏற்பட அவள் ஒருவித நடுக்கத்துடனே அவனருகில் காரில் ஏறி அமர்ந்தாள். கௌதம் டிரைவரிடம்..
"கோதண்டம்.. இன்றைக்கு பேப்பர் ஒன்று வாங்கி வாங்க..." என்றான்.
"என்ன பேப்பருங்கோ ஐயா..."
"எதுவாக இருந்தாலும்.."
டிரைவர் நகர்ந்ததும் பூஜாவின் பக்கம் திரும்பி அதட்டினான்.
"ஏன் நெர்வஸாய் இருக்கிறாய்?"
"இல்... இல்.. இல்லையே..."
"பார்... தந்தியடிப்பது போல் பேசுகிறாயே.. இதோ பார் பூஜா.. பிரச்சனையெல்லாம் நமக்குள்தான்.. வெளியில் இருப்பவர்களுக்கு ஏன் நீ பயப்பட வேண்டும்..? இயல்பாய்... தைரியமாய்... இரு.. நான் பார்த்துக் கொள்கிறேன். புரிந்ததா..?"
"ம்ம்.."
டிரைவர் வந்த பேப்பரைக் கொடுத்து விட்டு காரைக் கிளப்பினான்.
பூஜா மனதிற்குள் பாதுகாப்பாய் உணர்ந்தாள்.
'யார் இவன்...? கொடும் தீயாய் சுடுகிறான். குளிர் நீராய் அதை அணைக்கிறான். புயலாய் சாடுகிறான்... தென்றலாய் மனம் வருடுகிறான்... தேளாய் கொட்டுகிறான்... தேனாய் இனிக்கிறான்... எதுதான் இவனென்று அறிய முடியாமல் போனாலும் இதமாய் இருக்கிறானே...'
கௌதமின் வீட்டிற்குள் கார் நுழைந்தது. வேலையாள்கள் வேகமாய் ஓடி வந்தார்கள்.. அவர்களது சின்ன எஜமானியின் வரவு அவர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டிருந்தது. அவளைப் பார்க்கும் ஆவலில் அனைவரும் வாசலுக்கே வந்து விட்டனர்.
"வாங்கம்மா..." என்று சொல்லியபடி ஆளுக்கு ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டனர்.
பூஜாவிற்கு அந்தப் பாசத்தைக் கண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்கள் வீட்டு எஜமானனுக்குக் கெடுதலை உண்டு பண்ணி விட்டுச் சென்று விட்டவளை இவ்வளவு ஆவலாய் வரவேற்கிறார்களே.
"அப்படியே நில்லுடி..." சிந்தாமணியின் குரல் அதட்டியது.
"சித்தி..." பூஜா திகைத்து நின்றாள்.
"என்ற மருமகனோடு சேர்ந்து நில்லுடி..." சிந்தாமணி முகமெல்லாம் சந்தோசம் மலர அவர்கள் இருவருக்கும் ஆரத்தி சுற்றினாள்.
"இப்போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா..."
பூஜா தன்னையறியாமல் வலது காலை எடுத்து வைத்தாள். உள்ளே சென்றவளை கௌதம் வசுந்தராவின் அறைக்கு அழைத்துச் சொன்றான். முதுகிற்கு ஒரு தலையணையை அணை கொடுத்துச் சாய்வாக அமர்ந்து இருந்தவள் அறைக்குள் வந்த பூஜாவைப் பார்த்தும் இரு கைகளையும் விரித்து,
"வாடாம்மா... வா..." என்று அழைத்தாள். அவள் முகத்தில் எல்லையற்ற ஆனந்தம் இருந்தது.
பூஜாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. தன்னையா இவ்வளவு அன்பாக வரவேற்கிறாள் இந்த மாதரசி..? திருமண மேடையை விட்டு இறங்கியதும் சொல்லிக் கொள்ளாமல் பறந்து விட்டவளிடம் இவ்வளவு வாத்சல்யமா? இவ்வளவு அன்பானவளின் மனதை துன்புறுத்திய ஒரே காரணத்திற்காகலே கௌதம் என்ன பேசினாலும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி அவளது கால்களில் தன்னையறியாமல் பணிந்தாள் பூஜா.
"நல்லா இருடாம்மா.." வசுந்தராவின் கைகள் அவளது தலையை தடவிக் கொடுத்தன.
அவளது கரங்கள் பூஜாவை அணைத்து அருகே அமர வைத்துக் கொண்டன. அவளது முகத்தில் நிம்மதி வந்திருந்தது...
"எப்படியம்மா இருக்கிறாய்?"
"இது நான் கேட்க வேண்டிய கேள்வி அத்தை..." பூஜா அழுது விட்டாள்.
"ஏன் அம்மிணி அழுகிற.. அழாதே.. நீ என்ன தப்பு செய்தாய்? வேலை இருக்குன்னு உங்க அப்பாகிட்ட சொன்னாயாம்... அவர் கேட்கவில்லை.. வேலையை முடித்துக் கொடுக்கத்தானே போனாய்... இனிமேல் போகமாட்டாயே...?" பூஜாவின் கண்ணீரைத் துடைத்து விட்ட வசுந்தராவின் கேள்வியில் எதிர்பார்ப்பு இருந்தது.
'என்ன பதில் சொல்வது..?' பூஜா தடுமாறினாள். அவள் வாயைத் திறப்பதற்கு முன்னால் கௌதம் முந்திக் கொண்டு பதில் கூறினான்.
"இனிப் போக மாட்டாள் அம்மா.. அங்கே வேலையெல்லாம் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் வந்தாள் அம்மா..."
வசுந்தராவின் முகம் மலர்ந்து விட்டது.
"அப்படியா... என்ற மருமகள் இனி என்னோடுதான் இருப்பாளா? சிந்தாமணி... கேட்டியா சேதியை... என்ற மருமகள் இனி என்னோடுதான் இருப்பாள்..." சிறு பெண் போல் குதூகலித்தாள்.
சிந்தாமணி வசுந்தராவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து... "இப்பத்தான் காய்ச்சல் கொஞ்சம் இறங்கியிருக்கு.. உடம்பை அலட்டிக்காதீங்க அண்ணி. இவ உன்ற மருமகள்... உங்களை விட்டு விட்டு எங்கே போவாள்? போக நினைத்தால் காலை முறிச்சு வீட்டில் போடுவீங்களா... அதை விட்டு விட்டு இவ்வளவு சந்தோசப்படுறீங்க.. பெண்ணாப் பிறந்தால் அடக்க  ஒடுக்கமா பெத்தவங்க பேரைக் காப்பாத்தோணும். வாழ வந்த இடத்தில் இருந்து பிழைக்கோணும்.. இப்படி வந்தட்டிக் கழுதை போல் ஓடி ஒளிஞ்சா அதுக்குப் பேரு பொண்ணில்லை... வெறும் மண்ணு..." என்று பூஜாவைப் பார்த்து முறைத்தவாறு கூறினாள்.
பூஜா பதில் சொல்லாமல் சங்கடத்துடன் தரையைப் பார்க்க கௌதம் அவள் சார்பாய் பதில் சொன்னான்.
"அவள் எங்கேயும் ஓடி ஒளியவில்லையே அத்தை. மும்பையில் தானே இருந்தாள். அவளுக்கென்று சில பொறுப்புக்கள் இருந்தன. முடித்துக் கொடுத்து விட்டு வந்திருக்கிறாள். இனி இந்த வீட்டின் மருமகளாக அவளுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவாள்."
சிந்தாமணி அமைதியாகி விட்டாள். கௌதம் பேசும் போது 'எனது மனைவி' என்ற வார்த்தையை தவிர்த்ததை கவனத்தில் பதித்துக் கொண்டாள். அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் பூஜாவின்  வயதைக் கடந்து வந்தவள் அவள். கௌதமின் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது அவளுக்குப் புரிந்தது. அவளுக்குப் புரிந்து என்ன பயன்? புரிய வேண்டியவளுக்குப் புரிய வேண்டுமே.
சிந்தாமணி கவலையுடன் வசுந்தராவைப் பார்த்தாள். தனக்குப் புரிந்தது போல் அவளுக்கும் புரிந்து விட்டதோ என்ற கவலை அவளுக்கு. ஆனால் வசுந்தராவின் முகத்தில் மலர்ச்சி இருந்தது. அவள் 'மருமகள்' என்ற வார்த்தையில் மனம் மகிழ்ந்திருந்தாள். சிந்தாமணி ஓர் வித நிம்மதியுடன் அறையை விட்டு வெளியேறினாள்.
நர்ஸ் காலையில் போட வேண்டிய ஊசி மருந்துடன் வசுந்தராவை அணுக கௌதம் பூஜாவைக் கண்ணசைவில் எழுப்பினான்.
"அம்மா... நாங்க குளித்துச் சாப்பிட்டு விட்டு வருகிறோமே..."
"போம்மா... போ... நான் மாத்திரை மருந்துன்னு இருக்கிறவள்.. இப்போதுதான் என்னைச் சாப்பிட வைத்தார்கள். நீ போய் பயணக் களைப்பு தீரக் குளித்து விட்டுச் சாப்பிடு.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்."
பூஜா பின் தொடர வெளியே  வந்த கௌதம் மாடிப் படியில் ஏறினான். தொடாந்து வந்த பூஜா.
"என் ரூம் எது...? என்று கேட்டாள்."
பதட்டமாய் திரும்பிய கௌதம் அவசரமாய் சுற்று முற்றும் பார்த்தான். ஒருவரும் அருகில் இல்லை. பூஜாவை முறைத்தான்.
"பேசாமல் வா..."
"இப்போது நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன்?"
"உனக்கு எதுவும் தவறாய் தெரியாது."
"கௌதம். மைன்ட் யுவர் வொர்ட்ஸ்."
"ஐ நோ இட்... நீ பண்ணிய கொடுமைகளுக்கு வேறு எப்படி என்னைப் பேசச் சொல்கிறாய்..."
"மும்பையில் எனக்கு என்ன பெயர் தெரியுமா?"
"தெரியும்... 'நெருப்பு.'.."
பூஜா ஆச்சர்யமாய் அவனை நோக்கினாள். கௌதம் அவளது பார்வையைக் கண்டு தோள் குலுக்கினான்.
"என்ன அப்படிப் பார்க்கிறாய்...?"
"உங்களுக்கு எப்படித் தெரியும்...?"
"நான் விரல் சப்பிக் கொண்டிருக்கும் பாப்பா என்று நினைத்தாயா? உன் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும்..."
கௌதம் அவனது அறைக் கதவைத் திறந்தான்.
"உள்ளே வா..."
"இதுதான் என் ரூமா..."
மீண்டும் கௌதம் சுற்று முற்றும் நோக்கினான். பூஜாவிற்கு குழப்பமாக இருந்தது.
'இவன் ஏன் எது கேட்டாலும் சுற்று முற்றும் பார்க்கிறான்...' நினைத்ததைக் கேட்டாள்.
"பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்பார்கள். உனக்கு அது தெரிந்திருக்கிறது போல எனக்குத் தெரியவில்லை. அதுதான் சுற்றிப் பார்த்தேன்."
"அப்படி என்ன நான் பெரிய ராணுவ ரகசியத்தைப் பேசி விட்டேன்."
"கணவன்... மனைவி சம்பந்தப்பட்ட விசயம் ராணுவ ரகசியம்தான்... அது நம்மைப் போன்றவர்களாக இருந்தாலும் சரி..."
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்ன்னு எனக்குப் புரியவில்லை... பட்... இப்போது அது மேட்டரும் இல்லை... இதுதான் என் ரூமா...?"
"உள்ளே வா சொல்கிறேன்..."
அவள் உள்ளே வந்ததும் அறைக் கதவைத் தாழிட்டான்.
"ஏன்... கதவை லாக் பண்ணுகிறீங்க..?"
"உன்னுடன் ஹனிமூன் கொண்டாடுவதற்காக இல்லை..."
"இது யாருடைய ரூம்."
"நேற்று வரை என்னுடைய ரூம்.. இன்றிலிருந்து நம்முடைய ரூம்.. நீ என்னுடன்தான் தங்கியாக வேண்டும்..."
"ஓ.. நோ... நான் இதற்குச் சம்மதிக்க மாட்டேன்."
"உன் சம்மதத்தை யார் கேட்டார்கள்?"
"வாட்...?"
"இனி அப்படித்தான்..."
கௌதம் எரிச்சலுடன் கூறினான். பூஜா என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். நேற்று வரை அவளுடைய வாழ்வில் அனைத்தையும் அவளே முடிவு பண்ணினாள். இன்று முடிவெடுக்கும் அதிகாரத்தை அவன் தட்டிப் பறித்துக் கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.. -8
ஏதோ ஒரு நதியில்.. -8
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy