ஏதோ ஒரு நதியில் -19

19 கௌதம் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான். அவளது கேவல் அடங்கம் வரை அமைதியாய் அவள் போக்கில் அழவிட்டு தலை கோதிக் கொடுத்தான். அவளது முது...


19

கௌதம் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான். அவளது கேவல் அடங்கம் வரை அமைதியாய் அவள் போக்கில் அழவிட்டு தலை கோதிக் கொடுத்தான். அவளது முதுகு தட்டி அவளை சமாதானப் படுத்தினான். கேவல் ஓய்ந்து அவள் விலகி அமர்ந்து முகத்தை துடைத்துக் கொண்டதும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன்.
"சொல்லுடி... ஏன் இத்தனை சோகம்?" என்று கேட்டான்.
"உங்களுக்கே தெரியாதா?"
"நான் உன்னைக் குத்திக்காட்டுவது போல் பேசுகிறேன் என்று நீ நினைக்கிறாய்..."
"குத்திக் காட்டுவது போல் இல்லை... குத்திக் காட்டுகிறீர்கள்... நேற்றுக் கூட அப்படித்தான்..."
"நேற்று என்றால் எப்போது... காலையிலா.. மாலையிலா... இல்லை... இரவிலா..?" அவன் கண் சிமிட்டினான்.
அவள் முகம் சிவந்தது... இருந்த போதும் அவனது இயல்பு மனத்தை வாட்டியது.. எனவே கடினமான முகத்துடன்,
"நீங்கள்தான் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொண்டீர்களே..." என்றாள் துயரத்துடன்.
அவளது துயரம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை.
"எப்படி நடந்து கொண்டேன்...?" என்றான் உல்லாசமாய்.
"காலையில் வேலையின் நினைவாய் போய்விட்டீர்கள்.."
"ம்ம்...மதியம்?"
"அக்கறையாய் ஈவினிங் வெளியில் போகலாம் ரெடியாய் இரு என்றீர்கள்.."
"ஓஹோ... மாலையில்...?"
"சும்மா இருந்தவளை சீண்டினீர்கள்..."
"யார்... நான் உன்னைச் சீண்டினேன்?"
"ஆமாம்..."
"மல்லிகையைப் பற்றிப் பாடி மயக்கியது நானா... இல்லை நீயா?"
"மல்லிகையை வாசம் பிடித்தது யார்..? நானா... இல்லை நீங்களா?"
"ஓ... அப்போ... தெரிந்தேதான் பாடினாய்..?"
"ஆமாம்.. அது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? என் அம்மாவிற்கு மட்டும் மல்லிகை பிடிக்கும் என்றில்லை... எனக்கும் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னது யார்...?"
"சாட்சாத் நானேதான்... அதனால்தானே மல்லிகையைப் பற்றிப் பாடி மயக்கினாய்...?"
"நான் பாடுவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள்?"
"என்ன செய்தேன்?"
"உங்களுடைய தொழில் வட்டாரத்தில் உங்களுடைய நண்பரின் திருமண வரவேற்பில்... என்னை கூட அழைத்துக் கொண்டு போய்விட்டு ஒதுங்கி... விலகிப் போனீர்கள்... அது நியாயமா?"
அவன் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.. இவள் அதை உணர்ந்து இருக்கிறாள்... ஆனால்... இவளால் தானே அந்த ஒதுக்கம் வந்தது?
"ஐ ஆம் ஸாரி... பட்... அது எதனால்? உன்னால்..."
"அதையே தினமும் சொல்லிக் காட்டவா என்னைத் தேடிவந்து அழைத்து வந்தீர்கள்...?"
"இல்லைதான்.. ஆனால் உன்னோடு காதல் கொண்டு கலந்து வாழ ஆசைப்பட்டும் அழைத்து வரவில்லை... என் அம்மாவிற்காக உன்னைத் தேடி வந்தேன்... அவர்கள் மட்டும் உடல் நலத்தோடு இருந்திருந்தால்... நான் உன்னைத் திரும்பிக் கூடப் பார்த்து இருக்க மாட்டேன்.."
"அப்படியென்றால்... நாமிருவரும் விலகியே இருந்திருக்கலாமே... நேற்று இரவு ஏன் என்னைத் தொட்டீர்கள்...? வந்த அன்றே ஏன் என்னை முத்தமிட்டீர்கள்..." அவள் குரல் நடுங்கியது.
கௌதம் உணர்ச்சி வசப்பட்டிருந்த அவளது முகத்தை தன்புறம் திருப்பி உற்றுப் பார்த்தான்.. அவளது இதழ்கள் துடித்தன... கண்களின் விழியோரம் கண்ணீர் அணை கட்டியிருந்தது.. அந்த நிலையிலும் வெகு அழகாய்... அன்று மலர்ந்த பூப்போல் இருந்தவளைப் பருகுவது போல் பார்த்தவாறே கூறினான்..
"ஏன்... ஏன்... ஏன்..? கேள்வியை எளிதாகக் கேட்டு விட்டாய்... என்னை விட்டு விலகி ஓடினாய்... ஆனாலும் உன் நினைவு என்னை விட்டு விலகவில்லையே... ஓராண்டு துடித்தேனடி... அந்த வேதனையை... துடிப்பை... உன்னால் உணர முடியுமா? உன்னைக் கொன்றுவிட வேண்டுமென்றுதான் இப்போதும் என் நெஞ்சு துடிக்கின்றது... ஆனால் நீ செத்துவிட்டால்... அப்போதே... நானும் உன்னுடன் வந்துவிடுவேன் போன்ற இந்த தாபமும்... தவிப்பும்... எங்கிருந்தோ வந்து என்னை சித்ரவதை செய்கின்றதே... அதற்கு நான் என்ன செய்வேன்...? ஏய்ய்..
"அவன் கண்கள் சிவக்கத் தொடர்ந்தான்.."
முத்தமிட ஆசை வந்தால் உன்னைத்தான் என்னால் முத்தமிட முடியும்... தொட்டுவிட துடிப்பு வந்தால் உன்னைத் தொட்டுத் தழுவினால்தான் என் துடிப்பு அடங்கும் என்ற நிலையில் உன்னைத் தொடாமல் முத்தமிடாமல் எப்படி நான் விலகியிருப்பது...? அதே சமயம் நீ உண்டாக்கியிருக்கும் ரணமும் இன்னும் ஆறவில்லையே... அந்த வலியின் வேதனையில் ஒரு சொல் சொன்னால் நீ தாங்க மாட்டாயா?.. விலகிப் போனால் நான் திரும்பி வரும் வரை நீ காத்திருக்க மாட்டாயா?.. ரணமாக்கிய உனக்கு அந்தப் பொறுப்பும் கடமையும் இல்லையா? அதுசரி.. பொறுப்பையும்... கடமையையும் பற்றி உன்னிடம் போய் சொல்கிறேன் பார்... உனக்கும் அவற்றிற்கும் ரொம்பத் தூரமாயிற்றே..."
இப்போதும் குத்தினான்தான்... ஆனால் இந்தக் குத்தல் மொழி அவளை வேதனைப் படுத்தவில்லை... மாறாக அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ளச் சொன்னது... அவள் நெருங்கி அவன் மார்பில் புதைந்தாள்.. கௌதமின் கரம் அவளைச் சுற்றிக் கொண்டது... இருவருமே அமைதியிழந்த நிலையில் ஒருவரிடம் ஒருவர் அடைக்கலமாயினர்... அமைதி திரும்பியதும்... அவன் அவளை விடுவித்தான்.. நெற்றியின் வியர்வைத் துளிகளை தன் கைக்குட்டையில் துடைத்து விட்டான்.
"ஏஸியிலும் வியர்க்குமா உனக்கு?"
"ச்சு... போகலாம்.."
"ஏன்..? இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம்..."
"கௌதம்..."
"ம்ம்ம்..."
"ஐ லவ் யூ..."
அவன் அவளைப் பார்த்து ஓர்விதமாய் சிரித்தான்... பூஜாவின் உள்மனம் அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது... உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
"ஒரு வேளை... நான் உன்னைத் தேடி வந்திருக்கா விட்டால்... நீ ஐ லவ் யூ என்று என்னைப் பார்த்து சொல்லியிருப்பாயா?"
"மாட்டேன்தான்... ஆனால் என் ஆயுள் இருக்கும் வரை வேறு யாரிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்க மாட்டேன்..."
"ம்ம்... விரும்பாத திருமணம் என்று உன் வாயாலேயே என் காது குளிர ஆயிரம் முறை சொன்னாய்... விரும்பாத கணவனை இப்போது எப்படி விரும்புகிறாய்?"
"விரும்பாத திருமணம்தான்... ஆனால் உங்களுடன் ஆன இந்த திருமணத்தை மட்டும் நான் விரும்ப வில்லையென்று சொல்லவில்லை... திருமணத்தையே நான் விரும்பவில்லை.... இதை என் அப்பாவிடம் ஸ்ட்ராங்காய் சொன்னேன்... அவர் கேட்கவில்லை.."
"நஷ்ட ஈடுதர ரெடியாய் இருந்தவள்தானே நீ.."
"நஷ்டப் படப்போவது நான் என்று எனக்கு அப்போது புரியவில்லையே.. நீங்களே சொன்னது போல்.. நான் மெச்சூரிட்டி இல்லாமல் பேசிவிட்டேன்.."
"அது மட்டுமா.. டிவோர்ஸ் தரவும் ரெடியாய் இருந்தாய்..."
"என்னால் நீங்கள் பாதிக்கப்படக் கூடாது.. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் என்று நினைத்தேன்... மறந்தும் இன்னொரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை...."
"நீயில்லாத வாழ்வு ஒர் வாழ்வா?"
"கௌதம்... எனக்குத் தெரியவில்லையே.. தொழிலில் ஆயிரம் வெற்றி பெற்றிருந்தால் நான் எல்லாம் தெரிந்தவள் ஆகி விடுவேனா? நீங்கள் சொல்வது போல் நான் மக்கு கௌதம்..."
பூஜா அவனது கழுத்தில் கை கோர்த்துக் கொண்டாள். அவள் முகம் பார்த்த கௌதமின் மனம் இளகியது. தன் உதாசீனத்தை தாங்கிக் கொண்டு காதல் சொல்பவளை காதலிக்காமல் எப்படி இருக்க முடியும்?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில் -19
ஏதோ ஒரு நதியில் -19
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy