ஏதோ ஒரு நதியில்.. -16

16 " போகலாமா..." கௌதம் கருநீலக் கோட்டை சரி செய்தவாறு வெளியில் வந்தான். அவனது கம்பீரம் கவனத்தை ஈர்க்க பூஜா அவனையே பார்த்தா...


16

"போகலாமா..." கௌதம் கருநீலக் கோட்டை சரி செய்தவாறு வெளியில் வந்தான்.
அவனது கம்பீரம் கவனத்தை ஈர்க்க பூஜா அவனையே பார்த்தாள்.
"இப்போது கேள்வி கேட்பது என் முறையா? எப்படி அழகாய் இருக்கிறேனா?" அவன் நின்று திரும்பி போஸ் கொடுத்தான்.
"நீங்கள் சொன்னதைத்தான் நானும் சொல்வேன். நீங்கள் எப்போதும் அழகுதானே...?"
"ஈஸ்ட்...? நல்ல வேளை.. நீ தலையை விரியப் போட்டுக் கொண்டு வந்து விடுவாயோ என்று பயந்து கொண்டே வந்தேன்..."
"ஏன் உங்களுக்கு அது பிடிக்காதா?.. ஆக்சுவலா... எனக்கு அதுதான் கம்பர்ட்டபிளா இருக்கும்... தலையில் பின் குத்தி... பின்னல் போட்டு.... பூ வைத்து... ஐ பீல் ஸோ அன் ஈஸி.. பட் அத்தைக்கு இதுதான் பிடித்திருந்தது.. பொன்னியிடம் பூ கொடுத்து விட்டிருந்தார்கள்... ஸோ... அதை வைத்துக் கொள்ள பின்னல் போட்டேன்..."
"அம்மாவுக்கு மட்டுமில்லை... எனக்கும் மல்லிகைப் பூவென்றால் மிகவும் பிடிக்கும்... அதன் மணத்தில் மயங்கிப் போவேன்..."
கௌதம் இயல்பாய் குனிந்து அவள் தலையில் முகம் வைத்து பூவை வாசம் பிடித்தான்.
"ஹௌ நைஸ்..." என்றவன் அவள் தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான்.
அவள்... அவளாக இல்லை... அவளது பூவாசத்தில் அவன் மயங்கினானோ இல்லையோ... அவன் வாசம் பிடித்த விதத்தில் அவள் மயங்கிப் போனாள்.
"அம்மா போய்விட்டு வருகிறோம்...." மனைவியின் தோள் மீது கை போட்டபடி கூறிய மகனைப் பார்த்த வசுந்தராவின் மனம் நிறைந்தது. இதைத்தானே அவள் எதிர்பார்த்தாள்.
"போய் விட்டு வாங்கப்பா..."
"அத்தை சீக்கரம் சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டும்... கோமளா... அத்தையை பார்த்துக் கொள்ளுங்கள்..."
மருமகளின் அக்கறையில் மனம் நெகிழ்ந்து போனவளாய் வசுந்தரா அவளின் கரம் பற்றிக் கொண்டாள்.
"எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் கண்ணம்மா.. நீ போய் வா..."
கௌதம் குனிந்து மனiவியின் காதினில் முணு முணுத்தான்.
"நீ மாமியார் செல்லமா...?"
"உங்களுக்குப் பொறாமையாய் இருக்கிறதா?"
"பின்னே இருக்காதா...?"
இருவரும் ரகசியம் பேசிக் கொண்டே காருக்குள் ஏறிக் கொண்டார்கள். கௌதம் மனைவியிடம் சிரித்துப் பேசியவாறே காரைச் செலுத்தினான்.
திருமண வரவேற்பில் இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது... அனைவரும் கௌதமின் அருகே வந்து பேசுவதையும் அவனது கவனத்தைக் கவர முயல்வதையும் பார்த்தவாறே அவனது கரம் பற்றிக் கொண்டு உடன் சென்றாள் பூஜா.
"மீட் மை வொய்ப்... பூஜா..."
"ஓ... இவங்கதானா... அவங்க...?"
எல்லோருமே... ஏறக்குறைய இப்படியே பேசி... அவளைக் கை காட்டி தங்களுக்குள் ரகசியமும் பேசிக் கொள்ள... கௌதமின் முகம் மாறுவதைக் கண்டாள் பூஜா.
இதற்காகத்தான் இத்தனை நாளும் அவளை வெளியே அழைத்து வர தயங்கி இருக்கிறான்.. இதை உடைக்க... ஏதாவது செய்ய வேண்டுமே... வழி தேடி அவள் மனம் தவித்தது.
கௌதமின் கரம் பற்றியிருந்த அவளது கையை  அவனது கரம் விடுவித்து விட்டது. திகைப்படைந்தாள் பூஜா. அவன் அவளிடமிருந்து விலகி அருகில் வந்த மற்றொரு பெண்ணிடம் பேச ஆரம்பிக்க பூஜா உடைந்து போனாள்.
அவனது காயப்பட்ட மனத்தை ஆற்ற வேண்டும் விலக துடிக்கும் அவன் மனத்தை மாற்றவேண்டும்... என்ன செய்வது?...
எதேச்சையாக அங்கு அமைக்கப்பட்டிருந்த லைட் மியூசிக் மேடையைப் பார்த்தாள் பூஜா... அவளுக்காகவே அறிவிக்கப்பட்டது போல் அந்த மேடையில் ஒருவர் அறிவித்துக் கொண்டிருந்தார்.
"பாட விருப்பமுள்ளவர்கள் இந்த மேடையில் பாட வரலாம்..."
பூஜா முடிவு செய்தாள்.. கௌதம் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்க அவள் விறுவிறுவென மேடையேறி மைக்கின் அருகே சென்று நின்றாள்.
"கௌதம்... உங்க மிஸஸ் பாடப் போகிறார்களே... அவர்களுக்குப் பாடத் தெரியுமா?"
கௌதமுடன் பேசிக் கொண்டிருந்தவர் வினவ அவன் திகைத்து மேடையைப் பார்த்தான்... பூஜா நின்று கொண்டிருந்தாள்.
'இவளை யார் மேடையேறச் சொன்னது? என்னைக் கேட்காமல் ஏன் அங்கு போனாள்...?' அவனுக்குள் கோபம் துளிர் விட்டது.. ஏற்கனவே... அங்கிருந்தவர்களின் மறைமுகமான ஏளனப் பேச்சுக்களால் அவள் மேல் காள்ப்புணர்ச்சி கொண்டிருந்தவன் இப்போது அவள் மேடையேறி விட்டதைக் கண்டதும் பல்லைக் கடித்தான்.
பூஜா அவனது பார்வையைச் சந்தித்தாள். அதிலிருந்த கோபம் அவளுக்குப் புரிந்தது... ஆனாலும்.. அவள் நினைத்ததை செயலாற்றத் தொடங்கினாள். சிறு வயதிலிருந்தே அவளுக்கு நன்றாகப் பாட வரும்.. பழைய பாடல்களை விரும்பிப் பாடுவாள். அவளது விளம்பரப் படங்களில் பழைய பாடல்களை புகுத்தி புதுயுக்தியுடன் விளம்பரப் படம் எடுத்து வெற்றி பெற்றவள்.
இன்று வாழ்க்கையிலும் வெற்றி பெற விரும்பி பாட ஆரம்பித்தாள்.
 "மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ...
    எந்நேரமும் உன் ஆசை போல்
    பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ..."
கௌதமின் கண்களில் மின்னல் வெட்டியது. அவள் பாடல் சொல்லிய சேதி புரிந்தது... அவள் மேலிருந்த கோபம் குறைந்து ஓர்வித தாபம் எழுந்தது. பூஜா அவனைப் பார்த்துக் கொண்டே பாடிக் கொண்டிருந்தாள்.. எனது பாடல் உனக்காகத்தான் என்று சொல்லாமல் சொல்லின அவளது விழிகள்...
"பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம் மஞ்ச்ள்
    குங்குமம் என்றும் நீ தந்தது...
    ஓராயிரம் இன்பக் காவியம்
    உந்தன் கைகளில் அள்ளி நான் தந்தது..."
பூஜாவின் சேலையின் மேல் திருமாங்கல்யம் கிடந்தது... அவளது நெற்றி வகிட்டில் குங்குமம் ஜொலித்தது... அவளது தலையில் அவள் சூடியிருந்த மல்லிகைச்சரம் அவளது தோள் தொட்டு முன் புறமாய் தவழ்ந்தது.
"என் கண்ணன் கொஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம் தான்..."
கௌதமின் நெஞ்சில் கனல் மறைந்து காதல் பிறந்தது. அவளது குரலினிமையிலும்... அந்தப் பாட்டு சொல்லிய சேதியிலும் அவனது நெஞ்சம் சிறகைப் போல் லேசாகி பறந்தது.
"என் தேவனே... உன் தேவிநான்..
    இவ்வேளையில் உன் தேவை என்னவோ....?"
அவள் பாடி முடித்ததும்... எல்லோரும் வெகுநேரம் கை தட்டி ஆர்ப்பரித்தனர்... அவள் மேடையிறங்கி வரும்போதே அவளைப் பாராட்டினர்... கௌதமின் அருகில் வந்து அவள் வெட்கப் புன்னகை பூத்தபடி அவன் கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டாள்.
"கௌதம்... உங்கள் மிஸஸ் இவ்வளவு அருமையாய் பாடுவார்களா?"
"மிஸஸ் கௌதம்.. மல்லிகையை வைத்துத்தான் கௌதமை மயக்கி வைத்திருக்கிறீர்களா?"
"மிஸ்டர் கௌதம்.. யு ஆர் ஸோ லக்கி... இவ்வளவு இனிமையாய் ரசனையாய் பாடும் மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..."
"ஹாய்... கௌதம்.. உங்கள் மிஸஸ் மாடர்ன் கேர்ள்ன்னு எல்லோரும் சொன்னாங்க... வாணி ஜெயராம் பாடிய பாடலை அதே குரலில் பாடி அசத்திட்டாங்களே... இவங்களா மாடர்ன் கேர்ள்? நோ.. நோ... இவங்க குத்து விளக்கு..."
பூஜா நினைத்ததை சாதித்தாள். கௌதமின் மனதை தொட்டுவிட்டாள்.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.. -16
ஏதோ ஒரு நதியில்.. -16
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy