ஏதோ ஒரு நதியில். -14

14 " மும்பையில் எப்படி சாப்பிடுவாய் ?" கௌதம் வினவினான். " வாயால் தான்.." பூஜா சிரிக்காமல் பதில் சொன்னால். &...


14

"மும்பையில் எப்படி சாப்பிடுவாய்?" கௌதம் வினவினான்.
"வாயால் தான்.." பூஜா சிரிக்காமல் பதில் சொன்னால்.
"ஜோக்...? ஆனால் சிரிப்பித்தான் வரவில்லை..."
"உங்களுக்கு சிரிக்கத் தெரியவில்லைன்னு சொல்லுங்கள்..."
"இது ஜோக்... ஹா.. ஹா.. ஹா.."
பூஜா பொய்யாய் முறைத்தாள்... அவனது தட்டில் பொரியலைக் கொஞ்சம் வைத்தபடி
"யூனிட்டில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்து விடுவோம்.." என்று கூறினாள்.
"உனக்கும் சேர்த்தா?"
"நானும் யூனிட்டில் ஒரு ஆள்தானே..."
"ம்ம்... நான் ஹோட்டல் போய் சாப்பிடுவேன்..."
"ஜாலியாய் பிஸினெஸ் லன்ச்..."
"அதில் என்ன ஜாலி... பிஸினெஸ் வேறு... வயிறு வேறு... இரண்டையும் ஒன்றாக கவனித்தால் ஜாலி எங்கிருந்து வரும்?"
"அப்புறம் எதற்கு பிஸினெஸ் லன்ச்? அவாய்ட் பண்ணிவிட வேண்டியது தானே...?"
"எப்படி முடியும்? வந்ததிருக்கும் விருந்தினரை சரிவர உபசரித்து விருந்து கொடுத்துக் கொண்டே வியாபாரம் பேசி முடிக்க வேண்டும்... அது முக்கியம் ஆயிற்றே... உன் பீல்டில் பிஸினெஸ் லன்ச் இல்லையா...?"
"இல்லை.. நான் அதை என்கரேஜ் பண்ணுவது இல்லை.."
கௌதம் மெச்சுதலாய் புன்னகைத்தான்...
"உன் குணத்திற்கு நீ தேர்ந்தெடுத்த பீல்டு எப்படி ஃபிட் ஆனது என்பதுதான் எனக்கும் புரியவில்லை... ஆனால் நீ நிறைய சாதித்து இருக்கிறாய்..."
"எங்கேயிருந்தாலும்... நான் நானாக இருக்க முடியும்... என்னால் அது முடிந்ததால்... வெற்றி பெறவும் முடிந்தது..."
பேசிக்கொண்டே அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டனர். கைகழுவி விட்டு பூஜாவைப் பார்த்த கௌதம்...
"ஐ வான்ட் டு டேக் சம் ரெஸ்ட்..." என்றான்.
"இதை என்னிடம் சொல்லுவானேன்..."
"பெர்மிஷன் கேட்கத்தான்..."
"நீங்கள் ரெஸ்ட் எடுக்க என்னிடம் பெர்மிஷன் கேட்க வேண்டுமா?"
"நிச்சமாய்... காலையில் இருந்து நைட்வரை அது உன் ரூம்... நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... உன் பிரைவஸியில் தலையிட மாட்டேன் என்று உனக்கு உறுதி அளித்திருக்கிறேன்..."
"போதுமே... பகலில் பக்கம் பார்த்து பேசுன்னு எனக்குச் சொல்லி விட்டு... நீங்கள்தான் டமாரம் அடிக்கிறீங்க.. பேசாமல் ரூமுக்கு வருகிறீங்களா..."
அவள் முன்னால் தாவிப் படியேறினாள்... அவளது வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் கௌதமும் விரைவாய் அவளைப் பின் தொடர்ந்தான். அறைக் கதவைத் திறந்த போது இருவருக்கும் மூச்சு வாங்கியது. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
"ஏன் ஓடி வந்தாய்...?" கௌதம் வினவியபடியே கதவைத் தாழிட்டான்.
"நான் ஓடி வந்தால் நீங்களும் ஓடி வரவேண்டுமா?"
"பின்னே வேண்டாமா?"
"இது என்ன மும்பையா... விட்டால் நான் பறந்து விடுவேன் என்று நினைப்பதற்கு..."
"ஒரு வருடத்திற்கு முன் நீ கோயம்புத்தூரில் இருந்துதான் பறந்து போனாய்..."
பூஜாவின் முகம் கூம்பிவிட்டது..
'மறக்கவே மாட்டானா... எப்படி அவனால் மறக்க முடியும்?' அதே நினைவோடு கட்டிலில் அவனருகே படுக்கும் நினைவில்லாமல் படுத்தாள்.. கௌதமின் முகம் விகசித்தது.
"பூஜா... ஜஸ்ட் அரை மணி நேரம்... அதற்கு மேல் என்னை எழுப்பி விடுகிறாயா?" கௌதம் கேட்டபடி விழிகளை மூடினான்.
"ஓ... யெஸ்..." உற்சாகமாய் கூறியபடி தானும் கண் மூடிய பூஜா உறங்கி விட்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் எங்கோ செல்போன் மணியடித்தது. புரண்டு படுத்த பூஜா அரை உறக்கத்தில் பேசினாள்.
"ஹலோ...வ்வ்வ்..."
"ஹலோ சொல்கிறாயா... இல்லை கொட்டாவி விடுகிறாயா...?"
பூஜாவின் தூக்கம் பறந்தோடிவிட்டது... அரக்கப் பரக்க எழுந்தவள் அருகே கௌதமைத் தேடினாள்... பக்கத்தில் அவன் இல்லை... மாறாக டெலிபோனில் அவன் குரல் அழைத்தது.
"என்ன... பெட்டில் என்னைத் தேடுகிறாயா....?"
"ஆமாம்... எங்கே இருக்கிறீங்க..?"
"ஆபிஸில்...."
"என்னை எழுப்பச் சொன்னீர்களே..."
"ஆமாம் எழுப்பச் சொன்னேன்... அரைமணி நேரம் தூங்க வேண்டியவன் ஒரு மணி நேரம் தூங்கி விட்டு விழித்துப் பார்த்தேன்... நீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாய்... ஒகே... பாவம் எழுப்ப வேண்டாமென்று நான் கிளம்பி வந்து விட்டேன்... இங்கே வந்து வெகு நேரம் ஆகிவிட்டது. ஒருவேளை... நீ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயோன்னு போன் பண்ணினால் நீ மெய்யாகவே தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்... மணி என்ன தெரியுமா..? ஆறு..."
"மை காட்... கௌதம் நீங்கள் எழுந்தபோதே என்னை எழுப்பி விட்டிருக்கலாமில்லையா?"
"நல்ல கதை போ... எப்படி எழுப்பியிருக்க வேண்டும் என்கிறாய்... 'பூஜா... பூஜா... எழுந்து என்னை எழுப்பிவிடு'ன்னு எழுப்பியிருக்க வேண்டுமா?"
"ஸாரி... ஸாரி..."
"ஓகே... அம்மா உன்னைக் காணோமென்று தேடுவார்கள்... போ...."
"ம்ம்...தேங்க்யு...."
பூஜா போனை அணைத்து விட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள். முகம் கழுவி தலைவாரி... லேசான ஒப்பனையுடன் கீழே இறங்கி வசுந்தராவின் அறைக்குள் விரைவாய் சென்றாள்.
"ஸாரி அத்தை. தூங்கிவிட்டேன்... உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?" என்று பவ்யமாய் வினவினாள்.
"இதுதான் நீ காபி குடுக்கும் நேரமா? இந்த லட்சணத்தில்தான் உன் அத்தையை கவனித்துக் கொள்ளப் போகிறாயா?" சிந்தாமணி கடிந்து கொண்டாள்.
"தூங்கி விட்டேன் சித்தி...."
"தூங்குற நேரத்தில் தூங்கோனும்.. விழிக்கிற நேரத்தில் கரெக்டா விழிக்கோணும்... அதுதான் பொண்ணுக்கு அழகு..."
"விடு சிந்தா... பயணக் களைப்பு... காலையில் வந்ததில் இருந்து என் மருமகள் என்னைத்தானே சுத்திச் சுத்தி வருகிறாள்... கொஞ்ச நேரம் கண் அயர்ந்தால் தப்பில்லை...."
"அது சரி அண்ணி... மாமியாரும் மருமகளும் ஒன்னாச் சேர்ந்துட்டிங்க... இனி இந்த சிந்தாமணிக்கு இங்கே என்ன வேலை? நீங்களாச்சு உன்ற மருமகளாச்சு... நான் நாளைக்கே என்ற குடும்பத்தைப் பார்த்துக் கிளம்புகிறேன்...."
"சித்திக்கு... சித்தப்பாவை பார்க்க இது ஒரு சாக்கு...."
"போடி வாயாடி... நீ உன்ற குடும்பத்தை விட்டு ஒரு வருசம் போனதால... நான் என்ற குடும்பத்தை விட்டுவிட்டு இங்கே... வந்து டேரா போட வேண்டியதாகிருச்சு..."
'ஆரம்பித்தாகி விட்டதா... இதிலிருந்து தப்பிக்கவே முடியாதா?' பூஜா முகம் வாடினாள். வசுந்தரா அதை ஜாடையாகப் பார்த்த விட்டு பொன்னியிடம்,
"மருமகளுக்கு காபி கொண்டுவாம்மா..." என்று கூறினாள்.
"ஏம்மா... எனக்கு காபி கொண்டு வரட்டுமான்னு கேட்டியே நீ முதலில் காபி சாப்பிட்டாயா?... இந்தா சாப்பிடு..."
பூஜாவின் தலை கோதி அவள் கையில் காபியைக் கொடுத்தாள் வசுந்தரா... அந்தப் பாசத்தில் நெழ்ந்து போனாள் பூஜா. மாமியாரைப் பார்த்துக் கொண்டே அவள் குடித்துக் கொண்டிருக்கம்போது,
"சும்மா வெறும் கையில் கொடுத்து குடிக்கச் சொல்க் கூடாதும்மமா... வாயில் வைத்து புகட்டி விட வேண்டும்..." என்று கூறியவாறு கௌதம் கையில் பெட்டியோடு
உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் பூஜாவின் முகம் மலர்ந்தது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -14
ஏதோ ஒரு நதியில். -14
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy