ஏதோ ஒரு நதியில்... -13

13 பேசிக் கொண்டிருக்கும்போதே வசுந்தரா கண்களை அயர்வாய் மூடித் தூங்க ஆரம்பித்தாள். அவளது போர்வையை சரி செய்து விட்டு அவள் குடித்து விட்ட...


13

பேசிக் கொண்டிருக்கும்போதே வசுந்தரா கண்களை அயர்வாய் மூடித் தூங்க ஆரம்பித்தாள். அவளது போர்வையை சரி செய்து விட்டு அவள் குடித்து விட்டு வைத்த காலி டம்ளரை எடுத்துக் கொண்டு நர்ஸ் கோமளாவைப் பார்த்தாள் பூஜா.
"பார்த்துக் கொள்ளுங்கள்..."
"அதுதானே என் வேலை மேடம்..."
பூஜா அறையை விட்டு வெளியேறினாள். எதிர்பட்ட வேலையாள் பொன்னியிடம் காலித் தம்ளரை குடுத்து விட்டு மாடிப்படி ஏறினாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் கதவை மூடிவிட்ட சற்று நேரம் படுத்து எழுந்திருக்கலாம் என்ற நினைவில் படுக்கையில் விழுந்தாள். பழக்கமில்லாத ஓய்வில் கண்கள் மூட மறுத்தன.. எரிச்சலுடன் புரண்டு படுத்தாள். அவளது செல் போன் ஒலித்தது. எடுத்துப் பேசினாள்.
"ஹலோ..."
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்றான் கௌதம்.
"கௌதம்... வாட் எ சர்ப்ரைஸ்..."
"ஏன்... என்னைப் பார்த்து ஒரு வருடம் ஆகி விட்டதா?"
அவளது உற்சாகம் காற்றுப் போன பலூனாய் அடங்கி விட்டது.
"என் செல் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
"லூஸ் மாதிரி பேசாதே... முதலில் நீ எங்கேயிருந்து பேசுகிறாய்?"
'லூசா...?' கோபம் வந்தது அவளுக்கு.
"தேவையில்லாமல் திட்டாதீர்கள்."
"கேட்டதற்கு பதில் சொல்..."
"ஏன்... நம் பெட்ரூமில் இருந்துதான் பேசுகிறேன்."
அவள் இயல்பாய் கூற, மறுமுனையில் மௌனம் நிலவியது.
"ஹலோ.. கௌதம்.. லைனில்தானே இருக்கிறீர்கள்?"
"நான் லைன் மாற மாட்டேன்..." அவன் இரு பொருள் படக் கூறவும் அவள் முணுமுணுத்தாள்.
"இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை."
"வேறு எதில் குறைச்சலாய் இருக்கிறேன்?"
"சண்டை போடத்தான் போனில் கூப்பிட்டீர்களா?"
"சமாதானமாய் பேசவும் இல்லை. அம்மா என்ன செய்கிறார்கள்?"
"இப்போதுதான் தூங்குகிறார்கள்."
"இவ்வளவு நேரம் என்ன செய்தார்கள்?"
"என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்."
"உன்னுடனா... எதைப் பற்றி..."
"சும்மா... அட்வர்டைஸிங் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தோம்."
"ஈஸிட்? அம்மாவுக்கு அதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கிறதா?"
"இருக்கிறதே... என்னிடம் நிறைய கேட்டார்களே..."
"தேங்க்ஸ் பூஜா... அம்மா சாதாரணமாய் பேசி ஒரு வருடம் ஆகி விட்டது.. நீ சொல்வதைக் கேட்கும் போது மனம் சந்தோசமாகிறது."
பூஜா மனம் வருந்தினாள். 'ஒரு வருடம்' அவளால் வசுந்தரா நோய் படுக்கையில் விழுந்த ஒரு வருடம்... அவளால் பட்ட கஷ்டத்தை மறைத்துக் கொண்டு அவளுக்கு நன்றி சொல்கிறானே.
"என்னால்தானே அவர்களுக்கு இந்த நிலைமை..."
"உன்னால்தானே அவர்கள் இந்த அளவுக்குப் பேசினார்கள்."
"நீங்கள் எனக்காகச் சொல்கிறீர்கள்..."
"இல்லை... என் அம்மாவிற்காகத்தான் சொல்கிறேன்... ஏனென்றால் நான் அவர்களுக்காகத்தான் உன்னை அழைத்து வந்தேன்..."
"இல்லாவிட்டால் என்னைத் தேடி வந்திருக்க மாட்டீர்கள் இல்லையா?"
அவன் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு...
"உண்மைதான் பூஜா.. என் அம்மாவிற்காகத்தான் நான் உன்னைத் தேடி வந்தேன்..." என்றான்.
இப்போது அவள் மௌனித்தாள்.. அதை உணர்ந்தவன் போல் அவன் கேட்டான்.
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்..."
"எதற்காக..."
"என் அம்மாவை நோயிலிருந்து மீட்டுக் கொண்டிருப்பதற்காக..."
"நான் என்ன டாக்டரா?"
"ஒரு வகையில் அப்படித்தான்..."
"எந்த வகையில்...?"
"நீயே அவர்களுடைய நோய்... அந்த வகையில்."
பூஜா உதட்டைக் கடித்துக் கொண்டு வேதனையில் ஆழ்ந்தாள். இவன் உண்மையாய்த்தான் சொல்கிறான். ஆனாலும்...?
"என்ன பேச மாட்டேன் என்கிறாய்?"
"என்ன பேசுவது? குற்றவாளிக் கூண்டில் நிற்பளுக்கு பேச என்ன தகுதி இருக்கிறது?"
"ஏன் இல்லை... நோயும் நீயே... அதைத் தீர்க்கும் மருந்தும் நீயே என்ற வகையில் உனக்கு அந்தத் தகுதி உள்ளது.. கேள்.. என்ன வேண்டும்?"
'நீதான் வேண்டும்..'  என்று சொல்லத் துடித்தது மனது. ஆனால் எப்படி அதைச் சொல்வது... எனவே மனக் குதிரைக்கு கடிவாளமிட்டபடி...
"மதியம் சாப்பிட வருவீர்களா?" என்று கேட்டாள்.
"நான் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டேன்."
"இதுதான் நான் கேட்கும் பரிசு..."
இப்போது அவன் மௌனம் சாதித்தான். பின்பு
"பிரைவஸி வேண்டும் என்று நீ கேட்டதாக நினைவு... என்றான்."
"இப்போது தனிமை அச்சுறுத்துகிறதே..."
"ஏன்.. அம்மா... அத்தை.. வேலையாட்கள் என்று அத்தனை பேர் அங்கிருக்கிறார்களே...?"
'எத்தனை மனிதர் கூட்டமிருந்தாலும் நீயில்லாத வாழ்வு எனக்குத் தனிமைதான்.'
நினைத்ததை வெளியில் சொல்ல முடியாதவளாய்..
"பட்... நீங்களும் இருந்தால் பெட்டர்... தட்ஸ் ஆல்..." என்றாள்.
"தட்ஸ் ஆல்?"
"ம்.. தட்ஸ் ஆல்....?"
"டிரை பண்ணுகிறேன்.. மதியம் லஞ்ச்சுக்கு நான் வீட்டுக்கு வந்ததில்லை.. பெரும்பாலும் பிஸினெஸ் லன்ஞ்ச்தான்.." என்றவன் போனை வைத்து விட்டான்.
வருவானா.. மாட்டானா.. என்று மனம் கேள்வி கேட்க பொறுமையின்றி அறையில் இருந்த டி.வி.யை உயிர்ப்பித்தாள் பூஜா. நிகழ்ச்சிகளைவிட.. நிகழ்ச்சியின் இடையில் வந்த விளம்பரங்களில் கவனம் செலுத்தினாள். இடையில் மணி பார்த்தாள். மதியம் ஒன்று.. அவசரமாய் எழுந்து கீழே வந்தாள்.. வசுந்தராவின் அறைக்கு சிந்தாமணி சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள்.
"சித்தி.. அத்தைக்கு நான் சாப்பாடு கொடுக்கிறேன்."
"மகராசியாய் கொடு.. நான் வேணாமின்னா சொல்லுவேன்."
வசுந்தராவின் முகம் துடைத்துக் கொண்டிருந்தாள் நர்ஸ் கோமளம். சிந்தாமணி வசுந்தராவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து விட்டு அவள் எழுந்து அமர வசதி பண்ணிக் கொடுத்தாள். பூஜா அவளருகில் கட்டிலில் அமர்ந்து கொண்டு சாப்பாட்டை ஸ்பூனில் எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள்.
"நான் சாப்பிட்டுக் கொள்கிறேனம்மா..."
"கை நடுங்கும் அத்தை.. இன்னும் கொஞ்சம் உடம்பு தேறட்டும்."
பேசியபடி வசுந்தராவைச் சாப்பிட வைத்து விட்டாள் பூஜா.. கடைசி ஸ்பூன் சாதத்தை அவள் ஊட்டிக் கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தவாறு கௌதம் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த வசுந்தரா வியப்படைந்தாள்.
"கௌதம் நீயாடா..."
"நான்தான் அம்மா... மதியம் லஞ்ச் சாப்பிட வந்தேன்."
"ஆனால் மதியத்தில் நீ வீட்டிற்குச் சாப்பிட வர மாட்டாயே..."
தாய்க்கு பதில் சொல்லாமல் பூஜாவின் முகத்தை ஆராய்ந்தான் கௌதம். அவள் முகத்தில் மகிழ்ச்சி சுடர் விட்டுப் பிரகாசித்தது.
'ஏன் மகிழ்ந்து போகிறாய்..? விட்டுப் பிரிந்து பின் நழுவியது நீதானே.. உன்னைத் தேடி நான் வந்தபோது அடையாளம் தெரியாமல் 'யார் நீ' என்று கேட்டதும் நீதானே... என்னுடன் வரமறுத்து நஷ்ட ஈடு தருகிறேன் என்று பேரம் பேசியவள் நீதானே... இன்று காலையில் கூட விவாகரத்தைப் பற்றிப் பேசி விட்டுக் கன்னத்தில் அறை வாங்கியவளும் நீதானே... இத்தனையும் செய்து விட்டுக் காலையில் என் அணைப்பில் ஏன் அடங்கினாய்... என் அம்மாவிடம் ஏன் இவ்வளவு பரிவு காண்பிக்கிறாய்? என்னைப் பார்க்க ஏன் தவிக்கிறாய்?'
"வழக்கத்தை இன்று மாற்றிக் கொண்டு விட்டேன் அம்மா.." கௌதம் பூஜாவைப் பார்த்துக் கொண்டே வசுந்தராவிடம் பதில் கூறினான்..
'எனக்காக வந்ததிருக்கிறான்..' அந்த எண்ணமே இனிக்க பூஜாவின் உள்ளம் சிறகடித்தது.
வசுந்தரா சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து பொன்னியிடம் கொடுத்தாள். பின்னாலேயே வந்த கௌதம் தாழ்ந்த குரலில்.
"நீ கேட்டதைச் செய்து விட்டேன். சந்தோஷம் தானே... என்றான்."
"ம்ம்..." அவள் முகமலர்ச்சியாய் தலையாட்டினாள்.
"வா சாப்பிடலாம்."
அவர்கள் மெதுவான குரலில் பேசியவாறு டைனிங் ஹாலை நோக்கிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவின் மனம் மகிழ்ந்தது.
"பார்த்தாயா சிந்தாமணி...?"
"ஆமாம் அண்ணி... மதிய நேரம் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்காத என்ற மருமகன் இன்றைக்கு வீட்டுக்குச் சாப்பிட வந்திருக்கு.. இந்த அதியத்தை எங்கே போய் சொல்வது அண்ணி?"
"பெண்டாட்டி மேல் இவனுக்குப் பிரியம் இல்லாமல் இல்லை.."
"என்ற கூறு கெட்ட மகள் அடிச்ச கூத்திற்கு யாராய் இருந்தாலும் வெறுத்து விடுவார்கள்.. என்ற மருமகனாய் இருக்கக் கொண்டு இழுத்து வந்து பொழப்பு நடத்துது..."
"போனதையெல்லாம் மறந்து விடுவோம் சிந்தா."
"நீங்க சொன்னால் சரிதான் அண்ணி."
"சின்னப் பிள்ளை... அதும் வேலை மேல அதுக்கிருக்கிற ஈடுபாட்டைக் காலையில் கேட்டாயில்லையா? கேட்டதுக்கு அப்புறமும் அதைத் தப்பும் தவறுமாய் பேசக்கூடாது... வேலை மேல இருந்த ஆர்வத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டது... என்ற மகன் போய் கூப்பிட்டதும் வந்து விட்டதா இல்லையா? நாம அதைத்தான் பார்க்கோணும்."
"சரிங்க... அண்ணி... நீங்க மனசைப் போட்டு உழப்பிக்காம சித்த நேரம் தூங்கி எந்திர்ங்க... ஏன் அம்மிணி கோமளா... இப்படி வாய் பார்த்துக்கிட்டு நிற்காட்டி.. என்ற அண்ணிக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரை மருந்தை காலகாலத்தில் கொடுக்கிறது தானே? நான் சொல்லித்தான் செய்யோனுமாக்கும்?"
"இல்லை... மேடம்.. இதோ கொடுத்து விடுகிறேன்..."
கோமளம் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொண்டு வசுந்தராவிடம் விரைந்தாள். சிந்தாமணி டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.
"அத்தை... நீங்களும் எங்களுடன் சாப்பிடுங்கள்..."
"இருக்கட்டும் மருமகனே.. நீங்கள் புதிதாய் கல்யாணம் பண்ணி ஜோடி.. சேர்ந்து சாப்பிடுங்கள்..."
"சேர்ந்து சாப்பிடுங்கன்னு சொல்லிவிட்ட பரிமாறப் போனால் எப்படி? நாங்கள் எங்களுக்கு வேண்டியதைப் போட்டு சாப்பிட்டுக் கொள்கிறோம்..."
"கரடி போல் நிற்காமல் இடத்தைக் காலி பண்ணு என்கிறாய்."
கௌதம் பதில் சொல்லாமல் சிரித்தான். சிந்தாமணியும் சிரித்துக் கொண்டே போய் விட்டாள். பூஜா கௌதமிற்குப் பரிமாற ஆரம்பித்தாள்.
"நீயும் சாப்பிடு..."
"நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன்."
"சேர்ந்து சாப்பிடத்தானே வரச் சொன்னாய்?"
"ஊஹூம் உங்களைச் சாப்பிட வைக்கத்தான் வரச் சொன்னேன்."
"கூட யாரும் சாப்பிட வராவிட்டால் நான் சாப்பிட மாட்டேனே..."
"பிடித்தால் உடும்புப் பிடிதான்."
"எப்போது உன்னைத் தொட்டுப் பிடித்தேன்? இன்று காலையிலா?"
பூஜா வெட்கத்துடன் முகம் சிவந்தாள். கௌதம் அதை ரசித்தவாறு சாப்பிட ஆரம்பித்தான். பூஜா தனக்கும் பரிமாறிக் கொண்டு அருகே அமர்ந்தாள். மதிய நேரம்.. காலையும்.. மாலையும் போல் குளுமை இல்லாத நேரம்... அந்த நேரம் கூட அவர்களுக்கு குளுமையாய் இருந்தது போல் தோன்றியது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்... -13
ஏதோ ஒரு நதியில்... -13
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy