ஏதோ ஒரு நதியில்.. -12

12 " நான் ஏன் உன்னைத் தேடி வர வேண்டும் ? நீ நான் கட்டிய தாலியை மதிக்காமல் , மனைவியென்ற பொறுப்பை உணராமல் ஓடுவாய்.. நான் உன் பின்ன...


12

"நான் ஏன் உன்னைத் தேடி வர வேண்டும்? நீ நான் கட்டிய தாலியை மதிக்காமல், மனைவியென்ற பொறுப்பை உணராமல் ஓடுவாய்.. நான் உன் பின்னால் தேடி வந்து உனக்கு கல்யாணத்தைப் பற்றியும்... கணவன் மனைவி பந்தத்தைப் பற்றியும் டியூஷன் எடுத்து உன்னைக் கூட்டி வர வேண்டுமா? அதற்கு நீ வேறு ஆளைப் பார்க்க வேண்டும். இந்த கௌதமை என்னவென்று நினைத்து விட்டாய்... நீ மட்டும் தான் வெளிநாட்டில் படித்தவளா...? நானும் அங்கே படித்தவன்தான்... நான் கொங்கு நாட்டு தங்கமாய் திரும்பி வரவில்லையா? உன்னைப் போலா இருக்கிறேன்?"
"கௌதம் ப்ளீஸ்... நான் மனம் போன போக்கில் வாழ்பவள் அல்ல... என் மனமும் கண்டபடி போகாது... எனக்கென்று சில கடமைகள் இருந்தன.. நான்தான் உங்களைப் பாதிக்காமல் டைவர்ஸ் கொடுத்து விடரெடியாக இருந்தேனே..."
பூஜா சொல்லி வாய் மூடு முன்பே கௌதம் அவன் கன்னத்தில்,
'பளார்...' என்று ஓங்கி ஒரு அறை விட்டான்.
"கொன்றே விடுவேன். உன்னோடு பேசவே எனக்குப் பிடிக்கவில்லை. இதைப் போல் நீ இரண்டாவது முறையாய் கூறுகிறாய்... கல்யாணம் என்றால் உனக்கு அவ்வளவு விளையாட்டாய் போய் விட்டதா? சும்மா.. என்னிடம்  பொம்மையில்லை என்று கூறி விட்டு... நீ என்னிடம் விளையாடிப் பார்க்க நினைக்கிறாய்... என்னைப் பார்த்தால்... நீ சொல்லும் ரத்தமும் சதையும் நிறைந்த உயிருள்ள மனிதனாய் உனக்குத் தொன்றவில்லையா? விளையாட்டு பொம்மையாகத்தானே தோன்றுகிறதா?..."
அவன் அடித்த கன்னத்தைப் பிடித்துக் கொண்ட அசையாமல் நின்று விட்டாள் பூஜா... ஏனோ... அவள் வாங்கிய அடி அவளுக்கு வலிக்கவில்லை. மாறாக இனித்தது. மெதுவாக பதில் கூறினாள்.
"நான் வேறு எப்படி உங்கள் துன்பங்களுக்குப் பரிகாரம் செய்வது கௌதம்.. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டாமா?"
கௌதம் அவளை முறைத்தான். அவன் வாழ்வே அவள்தானே... அதை உணராமல் பேசுகிறவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்... பின் எழுந்து கைப் பெட்டியை எடுத்துக் கொண்டான்.
"கிளம்பி விட்டீர்களா..?" அவள் தவிப்புடன் கேட்டாள்.
"ம்ம்..." அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டான்.
"ஐ ஆம் ஸாரி..."
"எதற்கு..?"
அவன் விழிகள் அவளை ஊடுருவின. அவளது கண்களில் இப்போது கண்ணீர் வழிந்தது.
"எல்லாவற்றிற்கும்..."
கௌதம் பெட்டியை மர பெஞ்சில் போட்டான். என்ன நடக்கிறது என்பதை அவள் உணரும் முன் அவளை தன்புறம் திருப்பி இழுத்து அணைத்து அவள் இதழோடு இதழ் பதித்தான்.
எங்கேயோ ஒரு பேரலை எழுத்து பூஜாவின் மேல் ஓசையின்றி விழுந்து அடித்து இழுத்துச் சென்றது. அதில் மூழ்கிப் போனவளின் கரங்கள் அவளையறியாமல்
அவன் தோள்களைத் தழுவின. அவனுடன் இணைந்து... இசைந்து நின்றாள். அதை உணர்ந்த கௌதம் அவளை இறுக்கித் தழுவிக் கொண்டான். அவனது தோள் வளைவில் முகம் புதைத்த பூஜாவின் உணர்வுகள் அவள் வசத்தில் இல்லை. வானில் மிதக்கும் உணர்வுடன் இருந்தவளைச் சட்டென்று விடுவித்தவன் தன் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு விருவிருவென போய் விட்டான்.
பூஜா நிற்க முடியாமல் அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்து விட்டாள்... நடந்து முடிந்த நிகழ்வு அவளுள் ஓர் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணியது. அவனது கார் கிளம்பிப் போகும் ஓசை கேட்டது. அவளது மனம் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தது.
'இனி எப்போது வருவான். ரூமில் என்ன கூறினான்? நான் காலையில் போனால் நைட் தூங்கத்தான் வீட்டிற்கு வருவேன் என்று கூறினானே... மதியம் லஞ்சிற்கு கூட வரமாட்டானா...'
இதை எண்ணும்போதே... இப்படி ஏங்க தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அவளது மனம் அவளைச் சுட்டது. அவள் எதிலிருந்தோ தப்ப எண்ணி... விடுபட முடியாத துயரில் மாட்டிக் கொண்டாள். கௌதம் தன் வாழ்நாள் முழுவதும் அவளுடைய செயலை மன்னிக்கப் போவதும் இல்லை... மறக்கப் போவதும் இல்லை. அதே சமயம் அவளை விட்டு விலகப் போவதும் இல்லை... டைவர்ஸ் என்றதும் விட்டானே ஓர் அறை...
அடிபட்ட கன்னத்தைத் தடவிக் கொண்டவளின் மனதில் விசித்திரமான ஓர் நிறைவு வந்தது. அவன் அவளுக்கு டைவர்ஸ் கொடுக்கவும் மாட்டான். அவளை விலக அனுமதிக்கவும் மாட்டான்.
'இப்போதும்' என்று தோன்ற அவள் எழுந்து வீட்டிற்குள் சென்றாள். ஹாலில் நுழைந்ததும் அவள் கண்ணில் பூஜையறை தென்பட அங்கே சென்று கண் மூடி வேண்டி நின்றாள்...
'எனக்கென்று ஒரு குறிக்கோள் இருந்தது. அதன் வழியில் நான் போனேன். எனக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதில் பெண்மையின் தவிப்பும்... ஏக்கமும.. இருக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்... நான் செய்த தவறை எப்படிச் சீர் செய்யப் போகிறேன்..? வழிகாட்டு தெய்வமே... உன் அருள்விழி காட்டு.'
சமையலறையில் இருந்து வசுந்தராவுக்கு சூடாக காபி எடுத்துக் கொண்டு போன சிந்தாமணி... பூஜையறையில் கண் மூடி வேண்டிக் கொண்டிருந்த பூஜாவை கண்டதும் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.
'என்னடா... இது இந்த அம்மிணிக்கு இப்படி ஒரு பக்தி எங்கேயிருந்து வந்தது? இத்தனை நாள் இந்த அமைதியும் பதவிசும் எங்கே ஒளிந்து கொண்டிருந்தது.'
கண் திறந்து பார்த்த பூஜா சிந்தாமணியின் பார்வையைக் கண்டதும் முகம் சிவந்தாள்.
"என்ன சித்தி அப்படிப் பார்க்கிறீங்க?"
"என்னமோ உன்னைப் பார்க்கோணுமின்னு தோணுச்சு... பார்த்தேன்... என்ற பொண்ணுக்கு இவ்வளவு பொறுப்பு எங்கிட்டு இருந்து வந்துச்சுன்னு ஆச்சர்யம்தான்... வேறு என்ன அம்மிணி."
"கையில் என்ன சித்தி..."
"என்ற அண்ணிக்கு... அதான்... உன்ற மாமியாருக்கு காபி கொண்டு போறேன். நல்ல குணசாலி பொண்ணைப் பெத்திருந்தால் நான் இதைப் பார்க்க வேணாம்.. நான்தான் கட்டிக் கொண்டு வந்தவுடனே மாமியாரை சீக்கில தள்ளின பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கேனே... இதையெல்லாம் நான்தானே பார்க்ககோணும்..."
"ஏன் சித்தி இதையெல்லாம் இனி நான் பார்க்க மாட்டேனா? என்னிடம் கொடுங்கள்... நான் கொண்டு போய் கொடுக்கிறேன்..."
"இப்ப இந்த ஒத்தை தம்ளரைக் கொண்டு போய் கொடுத்தால் போதுமா... இந்த ஒரு வருசமா கட்டிலில்கிடந்த என்ற அண்ணிக்கு நீதான் வந்து பணிவிடை செய்தாயாக்கும்...."
"ஏன் சித்தி... நீங்களும் உங்கள் மருமகனைப் போல் அதையே சொல்லிக் காட்டுகிறீர்கள். நடந்ததை இன்னும் எத்தனை நாள் குத்திக் காட்டுவீர்கள்?"
"அப்படின்னா... என்ற மருமகன் இன்னும் கோபத்தில் தான் இருக்கா?"
சிந்தாமணி கொக்கி போட பூஜா சுதாரித்துக் கொண்டாள்.
"விளையாட்டாய் பேசுவார். எனக்கு மனதுக்கு கஷ்டமாகி விடும். அதைத்தான் சொன்னேன்... வேறு ஒன்றுமில்லை..."
"அவ்வளவுதானா..." என்று நிம்மதியடைந்த சிந்தாமணி,
"அது சரி... நீ இப்போது பகுமானமாய் காபி கொண்டு போய் உன்ர மாமியார் கையில் கொடுத்தால் மட்டும் போதுமா? மதியம்... ராத்திரியெல்லாம்.. சாப்பாடு யார் போடுவார்கள்?"
"ஏன்.. நான் சாப்பிட வைக்க மாட்டேனா?"
"நீ செய்து கொள்வாய் என்கிறாய்..."
"ஆமாம்..."
"நான் நிம்மதியாய் இந்த ஒரு வருஷமும் விட்டுப் பிரிந்திருக்கும் என் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளலாமா. உன்னை நம்பி என் அண்ணியை விட்டு விட்டுப் போகலாமா?"
"இது என்ன சித்தி... அவங்க என் மாமியார்..."
"இப்போ வந்திருக்கும் இந்தப் புத்தி அப்போது இல்லாமல் போச்சே... உன்னைப் பெரிதாய் நினைத்துப் பெண் கேட்டு கட்டிப் போன குடும்பத்தை கதி கலங்க வச்சிட்டயே... சரி வா... காபி ஆறுவதற்கு முன்னால் அண்ணி கிட்ட வந்து கொடு..."
"ஏன் சித்தி... இந்த ஒரு வருடமாய் நீங்கள் நம் வீட்டிற்கு போகவே இல்லையா...?"
"எப்படி பூஜா போக முடியும்? என் சொந்தத்தைப் பெரிதாக நினைத்து என் அண்ணன் மகனுக்கு என் மச்சான் மகளைப் பெண் கேட்டு வந்தார்கள். நீ பொறுப்பில்லாமல் ஓடிப் போனாய்... என் அண்ணி பேச்சு மூச்சில்லாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள்.. என்ற அண்ணன் மகன் ஒற்றை ஆளாய் நின்று தவிச்சுக்கிட்டு இருந்தப்போ... நான் விட்டு விட்டு எப்படிப் போக முடியும்..? என்ற குடும்பத்துப் பொண்ணு செஞ்ச தப்பிற்கு நான்தானே பொறுப்பு எடுத்துக்கணும்? நான் பொறுப்பை எடுத்துக்கிட்டேன்."
"சித்தி..."
"ஏண்டி அழுகுற... இனியாவது புத்தியோடு பிழைக்கப் பார்... வா.."
வசுந்தரா மருமகள் காபி கொண்டு வந்து கொடுக்கவும் மகிழ்ந்து போனாள். பூஜாவின் கை பற்றி அருகே அமர வைத்துக் கொண்டாள். காபியைக் குடித்துக் கொண்டே பூஜாவின் வேலையைப் பற்றி விசாரித்தாள். பூஜாவும் அவள் கேட்டதற்கெல்லாம் பதில் சொன்னாள்.
"அப்புறம்...? சொல்லும்மா...?"
"பெரிய கம்பெனிகளில் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விளம்பரப்படுத்த நினைப்பார்கள் அத்தை..."
"தெரியும்மா... நம்ம துணி மில்லுக்கும் விளம்பரப் படம் எடுத்தோமே..."
"அதேதான்... அந்த விளம்பரப் படங்களை எடுப்பது தான் என் வேலை."
"ஓஹோ... அதை நீ தனி ஆளாய் பார்த்தாயா..."
"இல்லை அத்தை... ஒரு வகையில் அது டீம் வொர்க்... என்னிடம் பதினைந்து பேர் வேலை பார்த்தார்கள்..."
"விளம்பரப் படம் எடுப்பதும் சினிமா எடுப்பது போல்தான் இல்லையா அம்மா..."
"ஆமாம் அத்தை... இதற்கும் கான்ஸெப்ட் ரெடி பண்ண வேண்டும்.... லொகேஷன் பார்க்க வேண்டும் பொருத்தமான ஆண்... பெண்ணை தேர்வு செய்ய வேண்டும். மேக் அப் போட்டு நமக்குத் தேவையான தோற்றத்திற்கு அவர்களை மாற்ற வேண்டும். ஷூட் பண்ண வேண்டும். ம்யூசிக் போட வேண்டும். டயலாக் பேச வைக்க வேண்டும். எடிட்டிங் பண்ண வேண்டும். அப்புறம் ரிலீஸ் பண்ண வேண்டும்..."
"இத்தனை வேலைகளையும் நீ ஒரே ஆள் பார்த்தாயா?"
"ஒரு வகையில் அப்படித்தான் அத்தை... எனக்கு உதவியாளர்கள் உண்டு. ஆனாலும் நானே எல்லாவற்றையும் பார்த்தால்தான் எனக்குத் திருப்தியாக இருக்கும்..."
"விளம்பரம் என்பது இன்றியமையாதது ஆகிவிட்டது."
"ஆமாம் அத்தை... ஒரு முதலாளி அவரது தயாரிப்பை அதிக அளவு செலவு செய்து விளம்பரப் படுத்தினாராம். அவருடைய தயாரிப்பும் மார்க்கெட்டிங் தரம் உயர்ந்ததும் மற்றவர்கள் எல்லாம் இனி இதற்கு விளம்பரம் எதற்கு என்று கேட்டார்களாம். அதற்கு அந்த முதலாளி 'என்ஜின் இல்லாமல் மற்ற ரயில் பெட்டிகள் ஓட முடியுமா?' என்று கேட்டாராம். என்ஜின் என்பது விளம்பரம் அத்தை... அது இல்லாமல் இன்று எந்தப் பொருளும் மார்க்கெட்டில் களம் இறங்க முடியாது... விளம்பரத்தின் சக்தியே தனி சக்தி... 'லக்ஸ்' சோப் விளம்பரத்தில் நடிப்பவர்கள்தான் நம்பர் ஒன் மாடல் என்ற நிலைமை இன்றும் உண்டு... ஐஸ்வர்யா ராய் சினிமாவை விட அதிகம் நேசிப்பது விளம்பரத்தைத் தான்... அசின் முதல் திரிஷா வரை சினிமாவுக்கு ஈக்குவலான கவனத்தை விளம்பரத்தில் வைக்கும் நடிகைகள் இன்று அதிகம் அத்தை..."
கண்கள் மின்ன விளம்பரப் துறையைப் பற்றி பேசும் மருமகளைக் காணம் போது அவள் அந்தத் துறையை எவ்வளவு நேசித்தாள் என்பதை வசுந்தராவால் புரிந்து கொள்ள முடிந்தது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.. -12
ஏதோ ஒரு நதியில்.. -12
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy