ஏதோ ஒரு நதியில். -11

11 அவளைப் பருகுவது போல் ஓர் பார்வை பார்த்துக் கொண்டு நின்றவளை ஏறெடுத்துப் பார்க்க பூஜா சங்கடப்பட்டாள். ' ஏன் இப்படி விழுங்கி விடு...


11
அவளைப் பருகுவது போல் ஓர் பார்வை பார்த்துக் கொண்டு நின்றவளை ஏறெடுத்துப் பார்க்க பூஜா சங்கடப்பட்டாள்.
'ஏன் இப்படி விழுங்கி விடுவது போல் பார்க்கிறான்...?
அப்போது டிரைவர் காரின் அருகே வந்தான்.
"நான் வரனுமாங்க ஐயா..."
"வேண்டாம்..." என்றபடி தோட்டத்துப் பக்கம் சென்ற கௌதம் திரும்பி "பூஜா... வா... ஸ்விம்மிங் பூலைப் பார்க்க வேண்டும் என்றாயே... பார்க்கலாம் வா.." என்று அழைத்தான்.
"நான் எப்போது அப்படிக் கேட்டேன்..?' திருதிரு வென விழித்தபடி பூஜா அவனைத் தொடர்ந்து சென்றாள். பூச்செடிகள் சுற்றிலும் மறைவாய் வளர்ந்திருக்க நடுவில் இருந்த நீச்சல் குளத்தின் அருகில் இருந்த சாய்வான மர பெஞ்சில் கைப்பெட்டியை வைத்து விட்டு அமர்ந்த கௌதம் பெஞ்சில் சாய்ந்து கொண்டு,
"உட்கார்..." என்று கனிவுடன் கூறினான்.
'இவ்வளவு அன்பாய் இவன் யாரைச் சொல்கிறான்?' என்ற யோசனையுடன் அவள் சுற்று முற்றும் பார்க்க...
"உன்னைத்தான் சொல்கிறேன் பூஜா... உட்கார்" என்றான் கௌதம்.
"என்னையா சொல்கிறீர்கள்...?"
"வேறு யாரைச் சொல்வேன்...? நீதானே என்னுடன் இருக்கிறாய்?"
கௌதமின் வார்த்தைகளில் ஏதோ மறைபொருள் இருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது. புரியாமல் அவனைப் பார்த்தபடி அவனருகே இயல்பாய் அமர்ந்தாள். அவன் திருப்தியாய் புன்னகைத்துக் கொண்டான்... அவளுக்கு அவன் சிரிப்பின் பொருளும் புரியவில்லை. குழந்தையாய் விழித்தாள்.
அவளது அறியாத்தனத்தை ரசித்தபடி அவன் கேட்டான்.
"என்னவென்று கேட்டுவிடு..."
"என்னவென்று கேட்பதாம்... கேட்டால் சொல்லி விடுவீர்களா?"
"உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வேன்?"
"நான் மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்?"
"ஸ்பெஷல்தான்.. ஏன் உனக்குத் தெரியாதா...?"
"உண்மையிலேயே தெரியவில்லை... உங்களின் தோற்றம் வசீகரமும் அழகும் நிறைந்தது... இதை எந்தப் பெண்ணிடம் நீங்கள் கேட்டாலும் சொல்வாளே..."
"மற்ற பெண்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை... மற்ற பெண்களை வசீகரிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை... நான் பேசுவது உன்னைப் பற்றி..."
"அதுதான் கேட்கிறேன்.. நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?"
"ஏனென்றால்... உன் கழுத்தில்தான் நான் தாலி கட்டி இருக்கிறேன். சும்மா இல்லை... உன்னைப் பிடித்துப் போனதால்... உன் தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டதால்.... உன் கழுத்தில் தாலி கட்டினேன். உனக்கு இது தெரியுமா?"
'எப்படித் தெரியும்? அவள்தான் காலையில் தாலியை வாங்கிக் கொண்டு மதியமே மும்பைக்கு பிளைட்டில் ஏறி விட்டாளே.'
அவள் இதழ் கடித்து மௌனம் சாதிக்க அவன் அவளை ரசித்துப் பார்த்தான். அவனது பார்வையைக் கண்ட அவள் முகம் சிவந்தாள்.
"அப்படிப் பார்க்காதீங்க..."
"ஏன்...?" அவன் உல்லாசமாய் சிரித்தான்.
"நான் இப்போது சற்று முன்தானே சொன்னேன்..."
"என்ன சொன்னாய்?"
"நினைவில்லையா?"
"நீ நினைவு படுத்து..."
"நான் உயிருள்ள மனுஷி... இயந்திரம் அல்ல..."
அவள் சங்கடத்துடன் நகம் பார்த்தாள்... அவன் அவளருகில் நகர்ந்து அமர்ந்தான். பூஜா விலகி அமர்ந்தாள்.
"ச்சு..." அவன் கோபமாய்ப் பார்த்தான்.
"ஏன் விலகிப் போகிறாய்?"
"என்னை விளையாட்டு பொம்மையாய் நினைக்காதீர்கள்."
"யார்... நான் அப்படி நினைத்தேனா? நானா உன் வாழ்க்கையுடன் விளையாடினேன்? நானா உன் கௌரவத்தை பங்கம் செய்தேன்? நானா உன்னைப் பெற்றவரை நோய் படுக்கையில் தள்ளினேன்...? இவ்வளவு கொடுமைகளையும் எனக்குச் செய்தவள் நீ... என் வாழ்க்கையில் நீ விளையாடி விட்டு என்னைக் குற்றம் சொல்கிறாயா...?"
பூஜா கண்ணீர் மல்க அவனருகே அமர்ந்தாள்... இப்போது அவன் நன்றாக விலகி அமர்ந்தான்..
அவன் முகத்தில் இருந்த கனிவு மறைந்து கடுமை நிறைந்திருந்தது.
"இதற்குத்தான்... நான் அப்படிச் சொன்னேன்..." பூஜா நீச்சல் குளத்தை வெறித்தாள்.
"எதற்குத்தான்...?" அவன் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
"உங்களது இளக்கம் தற்காலிகமானது... நிரந்தரமானது இப்போது நீங்கள் காட்டும் வெறுப்புத்தான்.. உங்களால் அவ்வளவு சீக்கரம் எனது செயலை மறந்து
விட முடியாது...மன்னித்து விடுங்கள் என்று நான் கேட்கப் போவதில்லை... ஏனென்றால் நான் செய்தது மன்னிக்க முடியாத பெரும் தவறு... அது எனக்கும் தெரியும்.. பட் நோ அதர்வே... நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது..."
"உன் பக்கம் ஆயிரம் நியாயம் இருந்திருக்கலாம். அதை என்னிடம் சொல்லியிக்கலாமே... உன்னை மும்பைக்கு நானே அழைத்துக் கொண்டு போயிருப்பேனே... நீ ஏன் ஒளிந்து மறைந்து ஓட வேண்டும்?"
"ஒரு வகையில் அது சிறு பிள்ளைத்தனம். இன்னொரு வகையில் நான் பயந்து போயிருந்தேன். என் அப்பாவின் உடம்பு சரியில்லை. உயிருக்கு ஆபத்து என்று வரவழைத்தார்கள். என்னைக் கைதி போல் சிறை பிடித்து உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைத்து விட்டார்கள்."
"உன் வீட்டில் தவறு செய்து விட்டார்கள். அவர்களது காவலை உடைக்கும் வெறி... அதிலிருந்த தப்பிக்க நினைக்கும் பரிதவிப்பு உன் மனதில் வந்து விட்டது..."
"யெஸ்... யு ஆர் கரெக்ட்... என்னைக் கட்டிப்போட முடியுமா? என்று அவர்களிடம் நான் விட்ட சவாலாய் கூட அது இருக்கலாம். இன்னொரு பக்கம் அவர்கள் தேர்தெடுத்த மாப்பிள்ளையும் அவர்களைப் போல் தானே இருப்பான் என்று... ஐ ஆம் ஸாரி... இருப்பார் என்று நினைத்தேன்..."
அவள் தன்னையறியாமல் 'அவன்' என்று சொன்னதை 'அவர்' என்று திருத்திச் சொல்ல அவனது மனவெம்மை கொஞ்சம் மறைந்த குளிர் பரவியது. இதமாய் உணர்ந்தவன்...
"ஏன்... என்னை நீ பார்த்ததே இல்லையா... ஓ... என்னையே அடையாளம் தெரியாமல் யார் நீ? என்று கேட்டவள் தானே நீ... மறந்து விட்டாய் என்றல்லவா நினைத்துக் கோபப்பட்டேன்.. ஏன் அப்படிக் கேட்டாய்..?" என்று வினவினான்.
"இல்லை கௌதம்.. உங்களைப் போட்டோவில் கூட நான் பார்த்தது இல்லை. அப்பாவிடம் எனக்குக் கல்யாணம் வேண்டாம்ன்னு தீர்மானமாய் கூறியிருந்தேன். அவர்
நான் திருமணத்தைப் பற்றி கேட்டால் சம்மதிக்க மாட்டேன்னு நினைத்து எனக்குத் தெரியாமலே திருமணத்தை முடிவு செய்து விட்டார். திருமணத்திற்கு முதல் நாள் ஈவினிங்தான் நான் பொள்ளாச்சிக்கே வந்தேன். வந்து பார்த்தால் வீடெல்லாம் உறவுக்காரர்களின் கூட்டம். ஊருக்கே தெரிந்த என் திருமணத்தைப் பற்றி எனக்குத் தெரியவில்லை... இது எவ்வளவு பெரிய கொடுமையென்று யாராவது நினைத்துப் பார்த்தீர்களா...?"
அவள் உதடு கடித்து உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. கௌதம் அவள் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டான்.. அவன் முகத்தில் இரக்கம் தெரிந்தது.
"எனக்கு உன் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது உன் அப்பா செய்த தவறு. நானும்.. என் அம்மாவும் எப்படி அதற்குப் பொறுப்பாவோம்? உனக்கு ஒன்று தெரியுமா பூஜா? உன்னை எனக்கான மனைவியாக தேர்வு செய்தது என் அம்மா. ஊரில் உள்ள மற்ற மாமியார்கள் போல் அவர்களை நினைத்து விடாதே... அவர்கள் விதி விலக்கு... மருமகளை மகளாய் பார்க்கும் தன்மை உடையவர்கள்... 'பூஜா தாயில்லாத பெண் கௌதம்.. என்னைத் தன் தாயாய் நினைத்தக் கொள்வாள்...' இதுதான் அவர்கள் உன்னைப் பற்றிக் கூறும் போது கூறிய முதல் வார்த்தைகள்.. அவர்களுக்கு உன்னை
மிகவும் பிடிக்கும் பூஜா... அவர்களுக்கு உன்னைப் பிடித்திருந்ததால் மட்டுமே... நான் அந்த வீடியோ கேசட்டைப் பார்த்தேன்..."
"எந்த வீடியோ கேசட்..."
"சிந்தா அத்தையின் மகள் ரேவதியின் கல்யாண வீடியோ கேசட்... அந்தக் கல்யாணத்தில்தான் அம்மா உன்னை முதன் முதலாய்ப் பார்த்தார்களாம்... அதை நானும் பார்த்தேன்..."
பூஜா படபடப்பாய் உணர்ந்தாள்.. தாங்க முடியாமல் நகம் கடித்தாள்.. பொறுமையில்லாமல் அவசரமாய் கேட்டாள்.
"உங்களுக்கு என்னைப் பிடித்திருந்ததா...?"
கௌதமின் மனதில் தென்றல் வீசியது... அவளைக் குறும்பாகப் பார்த்தான்.. அவளது தவிப்பை ரசித்தான். பின் மெதுவான குரலில் அவளிடம் கிசுகிசுப்பாய் கேட்டான்...
"இதற்கு என்ன பதில் சொல்லட்டும்...? பிடித்திருந்தது என்று சொல்லவா... இல்லை பிடிக்க வில்லை... என் அம்மாவிற்காக கல்யாணம் பண்ணிக் கொண்டேன் என்று செல்லவா?"
"உண்மை எதுவோ அதைச் சொல்லுங்கள்..."
"உனக்கு நான் என்ன பதில் சொன்னால் பிடிக்கும்."
"விளையாடாதீர்கள் கௌதம்... ப்ளீஸ்..."
அவளது கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது. கௌதம் அவளை ஆச்சர்யமாய் பார்த்தான்...
"ஏய்ய்... ஏன் இப்படி எமோஷனல் ஆகிறாய்? பெரிய விளம்பரப் பட நிறுவனத்தின் நிர்வாகி... வெற்றிகரமான விளம்பரப் படங்களை எடுத்துத் தள்ளியவள்... பல மாடல்களை உருவாக்கியவள்... நீ போய் சிறு குழந்தை போல் கண் கலங்குகிறாயே..."
"கௌதம்... இத்தனை அடையாளங்கள் இருந்தாலும்.. நானும் ஒரு பெண் தானே... நானே சொன்னது போல் உயிருள்ள மனுஷி... எனக்கும் எதிர்பார்புகளும்... ஏக்கங்களும் உண்டு.... ப்ளீஸ்... சீக்கரம் சொல்லி விடுங்கள்..."
"ஓகே... ஓகே... நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். பூஜா... நீ அந்த வீடியோவில் பிரௌன் கலரில் ஜரிகை வேலைகள் செய்த சுடிதாரில் இருந்தாய்... உன் ஒவ்வொரு அசைவும்.. எனக்குள் ஓர் மாற்றத்தையும்... பாதிப்பையும் உண்டு பண்ணியது. அதுவரை நான் எந்தப் பெண்ணாலும் ஈர்க்கப்பட்டதில்லை.... உன்னைப் பார்த்த பின்பு..." கௌதம் பேச்சை நிறுத்தி அவள் முகம் பார்க்க... அவள் பதட்டமாய் கேட்டாள்.
"என்னைப் பார்த்த பின்பு...?"
"நான் உன்பால் வசீகரிக்கப்பட்டேன் பூஜா... உன்னை எனக்கு மிகவும் பிடித்திருந்தது..."
அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இதைக் கூறினான் கௌதம். அவளது முகம் பூவாய் மலர்ந்தது. கண்கள் மின்ன அவனைப் பார்த்தவள் மனம் விட்டுச் சிரித்தாள்.
"நீ மட்டும்... என்னிடம் பேசியிருந்தால்... இந்த ஒரு வருடமும் துன்பமில்லாமல் கழிந்திருக்கும்... நானே உன்னை மும்பையில் வேலைகளை முடித்து விட்டு வா... என்று சொல்லியிருப்பேன்.. நீ அவசரப்பட்டு விட்டாய்..."
"ஆமாம்... அவசரப்பட்டுத்தான் விட்டேன்.. மறுநாளே நான் ஒரு விளம்பரப் படத்தை பைனலைஸ் பண்ணி ஒப்படைக்க வேண்டி இருந்தது. அதற்கடுத்து இந்த ஒரு வருடமும் டைட் ஷெட்யூல்..."
"காரணம் எதுவாக இருந்தாலும் நீ செய்த செயல் கொலைக்குச் சமானம் பூஜா... என் அம்மா மண்டபத்திலேயே மயங்கி விழுந்தார்கள்... இந்த ஒரு வருடமும் அவர்கள் பட்ட வேதனை... வார்த்தைகளால் அதைச் சொல்லிவிட முடியாது..."
"இப்போது என்னைத் தேடி வந்தது போல்... அப்போது தேடி வந்திருக்கலாமே...?"
"ஏன் வர வேண்டும்...?"
கௌதம் கடுமையாகக் கேட்டான்.. இனிய கனவு கலைந்தது போல் மலங்க மலங்க விழித்தாள் பூஜா. அவளது பார்வை அவனது மனதை இளக்கவில்லை. அவனது முகத்தில் எல்லையற்ற கோபம் தெரிந்தது.
அவன் அவளை வார்த்தைகளால் சுட்டான். அவனது கோபத்தைக் கண்டு அவள் பயந்தாள். இவனது கோபம் ஏன் தன்னை இந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை அறியாதவளாய் குழம்பி நின்றாள். மழையை வேண்டி நின்ற வாடிய பயிர் மழை மேகத்தைப் பார்ப்பது போல் அவனைப் பார்த்து நின்றாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -11
ஏதோ ஒரு நதியில். -11
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy