ஏதோ ஒரு நதியில். -10

10 ' நானென்ன ஆட்டுக்குட்டியா ?' என்று வினவின பூஜாவிற்கு , " நீ என் பொண்டாட்டி..." என்று கௌதம் பதில் கொடுத்ததும் அவ...

10

'நானென்ன ஆட்டுக்குட்டியா?' என்று வினவின பூஜாவிற்கு,
"நீ என் பொண்டாட்டி..." என்று கௌதம் பதில் கொடுத்ததும் அவளுக்குக் கோபம் வந்தது.
'பொண்டாட்டியும் ஒரு வகையில் ஆட்டுக் குட்டிதானா? பேசாமல் பின் தொடர்வதுதான் அவள் கடமையா...'
கோபத்துடன் டைனிங் டேபிளின் அருகே வந்தவள் கௌதம் அமர்ந்த பின்னும் அமராமல் நின்று கொண்டிருந்தாள்.
"ஏன் இன்னும் உட்காரவில்லை...?" என்ற கேள்விக்கு,
"நீங்கள் உட்காரச் சொல்லவில்லையே..." என்று மிகவும் பதவிசாய் பதில் வேறு கூறினாள்.
சிந்தாமணிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
'ஆமாண்டி... நீ எல்லாவற்றையும் கேட்டுச் செய்கிறவள் தான். நாங்கள் சொல்லாமல் நீயாக எதுவும் செய்ய மாட்டாய்... நாங்கள் சொல்லித்தான் நீ கல்யாண மண்டபத்தில் காலையில் தாலி கட்டிக் கொண்டு மதியமே மும்பைக்கு பறந்தாய்...' என்று ஒரு பிடி பிடித்து விட வாய் திறந்தாள்.
கௌதம் தான் அவள் பேசவே இடம் கொடுக்க வில்லையே... பூஜா பதில் கூறியதும் கலகலவென்று நகைத்தவன் பூஜாவின் முகத்தைக் காதலுடன் பார்த்து...
"லுக் பூஜா.. நீ மும்பை நாகரிகத்திற்கு பழகியவள்.. நம் கொங்கு நாட்டுப் பழக்கங்கள் இன்னும் வரவில்லை...    அதனால் கொஞ்ச காலம் நான் சொல்கிறபடி சய்து பழகுன்னு நான் சொன்னதற்காக என் பெர்மிஷனை எதிர்பார்த்து நீ நின்றால் உன் சித்தி என்னை கொடுமைக்காரன் என்று நினைத்து விட மாட்டார்களா... நான் பெண்டாட்டி தாசன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்" என்று மையலுடன் சிரித்து வைத்தான்.
'என்னடா... இது? இப்படி ஓர் பார்வை பார்த்து இப்படி ஓர் சிரிப்பை வேறு சிரித்து வைக்கிறானே... இந்த சித்தி என்ன நினைத்துக் கொள்வார்கள். ஒரே நாளில் இவனிடம் மயங்கி இவன் காலடியில் விழுந்து விட்டேன் என்று நினைத்து விட மாட்டார்களா...'
பூஜா அவசரமாய் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அவள் முன்னால் தட்டை எடுத்து வைத்த கௌதம்,
"என்னடா வேண்டும்?" என்று அன்பொழுகக் கேட்டான்.
அவன் போட்ட காதல் கணவன் வேடத்தைத் தாங்க முடியாதவளாய் பூஜா டேபிளில் இருந்த பாத்திரங்களின் மூடியைத் திறந்து எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டாள்.
"போதும்டா... இன்னும் கொஞ்சம் அதிகமாய் சாப்பிட்டாலும் வயிறு வெடித்து விடும் டார்லிங்..." என்று கொஞ்சலாய் கௌதம் கூறவும்.
'இவன் ஏன் இதைச் சொல்கிறான்..?' என்ற சந்தேகத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்த பூஜாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் தட்டில் வைப்பதாக நினைத்துக் கொண்டு அவனது தட்டில் அவள் பரிமாறக் கொண்டிருந்தாள்.
"பார்த்தீர்களா அத்தை... உங்கள் மகள் என் மீது காட்டும் கரிசனத்தை... ஒரு வருடப் பிரிவையும்... அதனால் உண்டான துன்பத்தையும்... ஒரே நாளில் மறக்கச் செய்து விட்டாளே..." கௌதம் பெருமையாய் சிந்தாமணியைப் பார்த்துக் கூறினாள்.
"பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்... என்ற மகளுக்கு பொறுப்பு வந்து புருசனிடம் காட்டுகிற கரிசனத்தைப் பார்த்தால் மனசெல்லாம் மத்தாப்பூ போல மலர்ந்து போச்சே..." சிந்தாமணி அவனுடன் தாளம் போட்டாள்..
கரிசனம் காட்டியவள் பல்லைக் கடித்துக் கொண்டாள். 'இவனிடம் திரும்பத் திரும்ப மாட்டிக் கொள்கிறேனே...'
"சித்தி... எனக்கு டிபன் வையுங்க..."
பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு சிந்தாமணியிடம் கேட்டாள் பூஜா.
"அத்தை... நீங்கள் வைக்காதீங்க... என் பெண்டாட்டி எனக்குப் பரிமாறினாள் இல்லையா..? நான் அவளுக்குப் பரிமாற வேண்டும்."
கௌதம் அவள் தட்டில் டிபன் எடுத்து வைத்தான். பூஜா பதில் பேச முடியாமல் தவித்தாள். அவன் அதிகமாய் வைக்க... ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,
"போதுமே..." என்று அவனது கரம் பற்றித் தடுத்தாள்.
சிந்தாமணி அதைக் கண்டு சிரித்தாள்.
"நல்ல விளையாட்டுப் பிள்ளைகள்."
அந்த விளையாட்டுப் பிள்ளை சந்தடி சாக்கில் அவனது கரத்தைப் பற்றியிருந்த அவளது கையில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
பூஜாவிற்கு பதில் சிந்தாமணி  வெட்கமடைந்தாள்... நாணிக் கோணிக் கொண்டு டைனிங் ஹாலை விட்டு வெளியேறினாள்.
'சின்னஞ்சிறுசுகள்... ரொம்ப நாள் கழித்து ஒன்னாச் சேர்ந்திருக்கிருதுகள்.. இதுக சாப்பிடும் இடத்தில் நமக்கென்ன வேலை...'
அவள் தலை மறைந்ததும்... தன் கைமேலிருந்த பூஜாவின் கையை விலக்கி விட்ட கௌதம். தானும் நகர்ந்து அமர்ந்து கொண்டான். பூஜாவோ அவனது செய்கையால் பாதிக்கப்பட்டவளாய் தன் கையையே பார்த்துக் கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளைத் திரும்பி உணர்ச்சியற்ற பார்வை பார்த்த கௌதம்.
"சாப்பிடு..." என்றான் வறண்ட குரலில்.
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" அவள் குரல் நடுங்கக் கேட்டாள்.
"எப்படி...?"
"கொஞ்ச நேரம் முன்னால் செய்தது மறந்து விட்டதா?"
"அதுவா... அத்தையை இங்கேயிருந்த அனுப்ப வேண்டும்... அவர்களுக்கு நம் மீது சந்தேகம் வந்து விடக் கூடாது அதற்காகத்தான்... நீ வேறு அவர்கள் முன்னால் என்னிடம் வம்புக்கு வந்தாய்... அதனால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்  பண்ண வேண்டியதாய் போய் விட்டது..."
"ஆக்டிங்...?"
"யெஸ்... ஆகடிங்..."
"இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்... நான் ரத்தமும் சதையுமாய் உயிருடன் உள்ள மனுஷி... வெறும் இயந்திரம் அல்ல..."
அவள் படாரென்று எழுந்த கை கழுவப் போய் விட்டாள். கௌதம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்தன.
நீயா உயிருள்ள மனுஷி? மனித உறவுகளை மதிக்காமல் உன்னுடைய வேலை பெரிதென்று ஓடியவள் தானே நீ..? நீ வெறும் இயந்திரம் இல்லாமல் வேறு என்ன?
கௌதம் அதற்கு மேல் சாப்பிட மனமில்லாமல் எழுந்து விட்டான். பூஜாவைப் பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்தவன்,
"வா... அம்மாவைப் பார்த்து விட்டு வரலாம்" என்று அவளை அழைத்தான். அவள் மறு பேச்சுப் பேசாமல் கூடப் போனாள்.
வசுந்தரா... குட்டித் தூக்கம் போட்ட முடித்திருந்தாள். அயர்வாய் இருந்தாலும் தெளிவாய் இருந்தாள். மருமகளைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தாள். அவளது சிரிப்பைக் கண்ட பூஜா மனம் நெகிழ... தானாய் அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதைக் கவனித்த கௌதம் யோசனையுடன் தாயின் அருகே அமர்ந்து அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.
"காய்ச்சல் இல்லையே..." என்றான் வியப்புடன்.
"என் மகளைப் பார்த்தவுடன் என்ற அண்ணிக்கு வந்த காய்ச்சல் போயே போச்..." என்றாள் சிந்தாமணி மகிழ்வாக.
சற்று நேரம் தாயுடன் பேசிக் கொண்டிருந்த கௌதம் எழுந்தான்.
"ஓகேம்மா... நான் ஆபீஸ் கிளம்புகிறேன்..."
"போய் விட்டு வாப்பா."
கௌதம் அறையை விட்டு வெளியேறும் போது பூஜாவும் எழுந்தாள்.
"அத்தை.. ஒன் மினிட்டில் வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு கௌதமைப் பின் தொடர்ந்தாள்.
சிந்தாமணியின் விழிகளும் வசுந்தராவின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.
"நான்  எனக்காகத்தான் என் மகன் மருமகளைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறான்னு நினைத்தேன் சிந்தா.." பேசத் திணறினாள் வசுந்தரா.
"எனக்கும் அப்படித்தான் நினைப்பு இருந்தது அண்ணி... நம்ம கௌதம் வந்தவுடன் பூஜா இனி இந்த வீட்டிற்கு நல்ல மருமகளாக இருப்பாள்ன்னு சொல்லிச்சு... என்னடா.. மருமகன் எனக்கொரு நல்ல பெண்டாட்டியாக இருப்பாள்னு சொல்லாமல் இப்படிச் சொல்கிறாரேன்னு நினைச்சேன்... காலையில் பார்த்தால் இரண்டு பேரும் ஒருத்ததுக்கொருத்தார் ஊட்டி விட்டுக் கிட்டு சாப்பிடுகிறாங்கோ..." சிரித்தாள் சிந்தாமணி.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறியாத பூஜா கௌதமைப் பின் தொடர்ந்து வாசலுக்குப் போனாள். கௌதமின் முகத்தில் குறுநகை மலர்ந்திருந்தது.
'இவள் எதற்காக வருகிறாளோ... தெரியவில்லை... ஆனால் இவள் இயல்பாய் செய்யும் இச்செயல் என் அம்மாவின் மனதில் எவ்வளவு சந்தோசத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாத குழந்தையாய் என் பின்னே தொடர்ந்து வருகிறாளே...'
"ஏன் சிரிக்கிறீங்க..?"
"நத்திங்..."
"நோ... சம்திங் இஸ் இன் யுவர் மைன்ட்..."
"ஹா... ஹா... பூஜா... யு ஆர் சைல்ட்."
"யார்..? நானா குழந்தை...?"
"நீ தான்..."
"டோன்ட் பிளே வித் மீ...?"
"ஓகே..."
"உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்... அதனால் தான் உங்கள் பின்னால் வந்தேன்..."
"இப்போது என்னிடம் ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காக என் பின்னாலே வந்தாய் என்கிறாய்... ஓகே.. பட் அன்று அந்தத் திருமண மேடையில் என் கையால் தாலியை வாங்கிக் கொண்டு என் கையால் தாலியை வாங்கிக் கொண்ட என் கையைப் பிடித்துக் கொண்டு அக்கினியை நான் சுற்றும்போது என் பின்னால் தொடர்ந்து வந்து சுற்றினாயே... அது ஏன்?"
"அது.. அது..."
"உனக்கெல்லாம்... அது சும்ம்ம்மா.. பட் எங்களுக்கெல்லாம் அது ஏழேழு ஜென்ம பந்தம்..."
பூஜா குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தாள்.. காரை நெருங்கிய கௌதம் கார்க் கதவைத் திறந்து கொண்டே அவளின் சங்கடத்தைப் பார்த்தான். மனதில் இரக்கம் பிறக்கக் கேட்டான்.
"ஓகே... லீவ் இட்... இப்போது என்ன வேண்டும்?"
"நான் என் வீட்டிற்கு போய் விட்டு வர வேண்டும்..."
"வாட்... உன் வீடா... எது உன் வீடு...?"
"பொள்ளாச்சியில் என் அப்பாவின் வீட்டிற்குப் போய் விட்டு வர வேண்டும்."
"குட்... சரியாய் பேசிப் பழகு... இனி உன் வாழ்நாள் முழுவதும் என் வீடுதான் உன் வீடு... அன்டர் ஸ்டான்ட்...?"
"இது போல் என்னை ட்ரீட் பண்ணுவதை அவாய்ட் பண்ணுங்கள் கௌதம். எனக்கு இது பிடிக்கவில்லை..."
"உனக்கு என்னைக் கூடத்தான் பிடிக்கவில்லை... அதற்காக உன்னை அப்படியே விட்டுவிட முடியுமா?"
அவன் கோபமாய் கேட்க அவள் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்த்hள். கோதுமை நிற முகம் கோபத்தில் சிவக்கக் கேட்டபடி நின்ற அவனது தோற்றம் அவளது நெஞ்சில் பதிந்தது.
அவளையறியாமல் அவளது மனதில் நினைத்ததை வாய்விட்டுக் கூறி விட்டாள் பூஜா.
"உங்களைப் பிடிக்கவில்லையென்று எந்தப் பெண்ணாவது சொல்வாளா? உங்களை யாருக்குத்தான் பிடிக்காது...? சும்மா என்னைத் திட்ட வேண்டும் என்பதற்காக இல்லாததையெல்லாம் சொல்லாதீர்கள்..."
கௌதம் திறந்திருந்த கார்க் கதவை மூடி விட்டான்... இமைக்காமல் 'பிடித்திருக்கிறது...' என்று இயல்பாய் சொன்னவளையே பார்த்தான்... இப்போது இப்படிச் சொல்கிறவள் ஏன் அன்று பிரிந்து போனாள்?
"ஏன் கார்க் கதவை மூடி விட்டீங்க? ஆபீஸ் போக வில்லையா?"
"நீ இப்படிப் பேசினால் எப்படிப் போவது?"
"ஏன்.. நான் எதுவும் தவறாய் பேசி விட்டேனா..."
"நோ...நோ...சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் இன்று போய் இப்படிச் சொல்கிறாயே..."
"யு ஆர் ஹேன்ட்சம்... இது உங்களுக்குத் தெரியாதா?"
"தெரியாது... நீ இப்போது சொல்லும் வரை... உனக்கு என்னைப் பிடித்திருக்குமென்று எனக்கேத் தெரியாது..."
"இதற்குப் போய் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவானேன்..? பெண்களை வசீகரிக்கும் தோற்றம் உங்களிடம் இருக்கிறது... அதைத்தானே சொன்னேன்..."

எதிரே நிற்பவள் அவனுடைய கௌரவத்தையும் 

சுயமரியாதையையும் ஆட்டிப் பார்த்தவள் என்பதை கௌதம் 

மறந்தான். தன் தாயை நோயின் தாக்கத்திற்கு ஆளாக்கியவள் 

என்பதையும் மறந்தான். என்னவோ பிரிந்து சென்ற காதலி 
திரும்பி வந்து விட்டது போல் தாகத்துடன் அவளைப் 
பார்த்தான்


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -10
ஏதோ ஒரு நதியில். -10
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy