எண்ணியிருந்தது ஈடேற -205

205 "சுகமானோ அம்மே.. ?" ஓமனா அஜந்தாவின் கண்களில் பட்டு விடாமல் மறைவாக நின்றபடி நந்தினியிடம் குசலம் விசாரித்தாள்.. சுகம்...


205


"சுகமானோ அம்மே..?"
ஓமனா அஜந்தாவின் கண்களில் பட்டு விடாமல் மறைவாக நின்றபடி நந்தினியிடம் குசலம் விசாரித்தாள்.. சுகம்தான் என்று நந்தினி பதில் சொல்வதற்கு முன்னால் அஜந்தா முந்திக் கொண்டு முன்னால் வந்து எட்டிப் பார்த்து..
"இவள் சுகத்திற்கு என்ன கேடு..? இதைக் கேட்கத்தான் நீ ஈ கொட்டாரத்தில ஜோலி பார்க்கிறயோ..?" என்று சிடுசிடுத்தாள்..
ஓமனாவின் முகம் வாடி விட்டது.. அஜந்தா அவளைத் திட்டியதைக் கூட அவள் பெரிதாக எண்ணவில்லை.. அஜந்தா திட்டாமல் இருந்தால்தான் வியப்பு.. வயநாட்டு அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து வேலையாள்களையும் அரட்டிப் பயமுறுத்தித் தான் அந்த அரண்மனையின் வருங்கால ராணி என்பதை நிலை நிறுத்த முயன்று கொண்டிருப்பவள் அஜந்தா.. தலைக்கனம் பிடித்தவள்.. வேலையாள்களைத் துச்சமாகப் பார்ப்பவள்.. பாவிப்பவள்.. அவள் திட்டுவதற்கெல்லாம் சோர்ந்து நின்றால் வயநாட்டு அரண்மனையில் எந்த வேலையாளும் வேலை செய்ய முடியாது.. நந்தினியிடம் குசலம் விசாரித்துக் குழாவ முடியவில்லையே என்பதால் தான் ஓமனா முகம் வாடிப் போனாள்..
"அதுதானே.. என் சுகத்திற்கு ஒரு கேடும் வராது ஓமனா.. டோன்ட் வொர்ரி.. என் அப்பாம்மாவின் வீட்டில் பிறந்து, அவங்க பணத்தில் படித்து வளர்ந்தவள் நான்.. என் சுகம் நன்றாகத்தான் இருக்கும்.. மத்தவங்களுக்கு கேடு நினைக்காதவள் நான்.. எனக்கு எந்த ஒரு கேடும் வரவே வராது ஓமனாக்குட்டி.. இதுக்கு நம்மைப் படைச்ச ஆண்டவனே கேரண்டி கொடுப்பார்.. மனசிலாயி.."
நந்தினியின் உள்குத்தில் அஜந்தா கொதித்துப் போனாள்..
'என்ன ஒரு தைரியம்..!' அவளது ரத்த அழுத்தம் எகிறியது..
என் அப்பாம்மாவின் வீட்டில் பிறந்து, அவங்க பணத்தில் படித்து வளர்ந்தவள் என்று நந்தினி குத்திக் காட்டியதில் அஜந்தா பேச்சு வராமல் கோபத்தில் கொந்தளித்தாள்.. நந்தினி அவளுடைய அப்பாம்மாவின் பணத்தில் வளர்ந்தவள், அஜந்தா அப்படி வளரவில்லை என்பதை நாசுக்காக சுட்டிக் காட்டி விட்ட நந்தினியின் கெட்டிக்காரத்தனத்தில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. என்னைத்தானே சொன்னாய் என்று கேட்கவும் முடியாது.. அப்படிக் கேட்டால் நந்தினி என்ன பதிலைச் சொல்வாள் என்று அஜந்தாவுக்குத் தெரிந்திருந்தது.. நான் என்னைப் பற்றிச் சொன்னேன்.. நீ அப்படியில்லாமல் உன் தாய்மாமன் மகனின் தயவில் வளர்வதால் உனக்குக் குத்துகிறது.. அதற்கு நான் என்ன செய்வேன் என்று இமை கொட்டுவாள்..
'தேவைதானா..?'
அஜந்தா யாழினியிடம் கோள் மூட்ட அரண்மனைக்குள் விரைந்தாள்..
"நந்தினி மேடத்திண்ட சாதுர்யம் எவருக்கு வரும்..? அஜந்தா அம்மே கொட்டாரத்துக்குள்ள ஓடிப் போயி.." ஓமனா மகிழ்ந்து போனாள்..
"பாவம்.. ஆசையாசையா என்னிடம் நலம் விசாரிக்க வந்தவளை ஓட்டி விட்டுட்ட இல்ல.. இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது ஓமனா.. துரத்தப் போகுது பாரு.." நந்தினி பயமுறுத்தினாள்..
"அதில்ல அம்மே.. ஈ கொட்டாரத்தில ஜோலி பாக்கற பணியாள்களோட பாவமல்லோ ஆ அம்மையைத் துரத்தி..? ஞான் எந்தா செஞ்ஞு..?"
"அப்படிங்கிற..?"
"ஆமாமல்லோ.."
"அப்பச் சரி.. எண்ட ஓமனா சொன்னா ஞான்.."
"மலையுச்சியில இருந்து அம்மே குதிக்குமோ..?"
"அது சரி.. என்னை மலையுச்சியில இருந்து உருட்டி விட அம்புட்டு ஆசை..? அப்படியெல்லாம் வாய் விட மாட்டேன்.. எண்ட ஓமனா சொன்னா ஞான் பேச்சை விட்டிரும்ன்னுதான் சொல்ல வந்தேன்.. அதுதான் சாக்குன்னு நீ மலையுச்சியில இருந்து உருட்டி விடத் தயாராகிட்ட.. எந்தா பாசம்..? எந்தா பாசம்..! ரோமாஞ்சனம் உண்டாகிப் போயி.."
"எந்தா அம்மே இது..? நந்தினி மேடம் சம்சாரிச்சது அதல்லோ.." ஏக்கமாகிப் போனாள் ஓமனா..
"அதல்ல ஓமனா.. ஞான் வேற கேட்டகிரி.. ஓமனா சொன்னா ஞான் ஓமனாக் குட்டியை மலையுச்சியில இருந்து உருட்டி விடும்.. ஞான் மட்டும் ஷேஃபா நின்னுக்கும்.."
"அம்மைக்கு ஈ ஓமனாக்குட்டியிண்ட பிரேமம் இல்லையோ..?"
"வல்லிய பிரேமம் உண்டு ஓமனா.. பட்ஷே.. மலையுச்சியில இருந்து குதிக்கிற அளவுக்கு பிரேமமில்லோ.. கேட்டோ.."
ஓமனா சோகமாக பெட்டிகளைச் சுமந்து கொண்டு போனாள்.. எதிரே வந்த ரம்யமாலினி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துவிட்டு..
"நீங்க வந்திருக்கீங்க.. உங்களைப் பார்த்த பின்னாலும் ஓமனாக்குட்டி முகத்தில இத்தனை சோகமா..? நம்பவே முடியலைங்க.." என்று நந்தினியிடம் சொன்னாள்..
"என்னைப் பார்த்த பின்னால்தான் சோகமாகிட்டா.." என்றாள் நந்தினி..
"ஏனாம்..?"
"என்னை மலையுச்சியில இருந்து தள்ளி விட முடியலையாம்.."
"என்னது..?"
புரியாமல் விழி விரித்த ரம்யமாலினி, நந்தினிக்கும் ஓமனாவுக்கும் நடுவில் நடந்த உரையாடலைப் பற்றிக் கேட்டதும் சிரிக்க ஆரம்பித்தாள்..
"நீங்க இருக்கீங்களே.. எப்படித்தான் இப்படிப் பேசறீங்களோ.." ரம்யமாலினி சிலாகிக்க..
"நீதான் இவளை மெச்சிக்கனும்.. உண்மையில் இவ ஜீரோ.. ஹீரோயின் போல நீ பில்ட் அப் கொடுக்காதே.." ரவிச்சந்திரன் நந்தினியைப் பார்வையில் தின்றபடி மட்டம் தட்டுவதைப் போலப் பேசினான்..
"நான் ஜீரோவா..?" நந்தினி வெட்டும் பார்வையுடன் அவனுடன் சரசமாக மோதினாள்..
"யெஸ் மை டியர்.." கொஞ்சியவன் தங்கை பக்கத்தில் நிற்கும் நினைவு வந்ததில்..
"மை டியர் செக்கரட்டரி.." என்று பிழை திருத்தம் செய்தான்.. அதை கண்டு கொண்ட அவன் காதலியின் விழிகள் மின்னின..
"பாஸ் யாராம்..?" பொய் சண்டையை அவள் தொடர்ந்தாள்..
"நம்பர்ம்மா.. நம்பர் ஒன்.." அவன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்..
"இந்த நம்பர் ஒன் பக்கத்தில ஜீரோவான நான் சேரச்சேர மதிப்பு அதிகரிக்கும் பாஸ்.. பெரிய பிஸினெஸ் மேக்னெட்டுன்னு சொல்லிக்கறீங்க.. இந்தச் சின்னக் கால்குலேசன் கூடத் தெரியலையே.." அவனைப் போலவே புருவங்களை உயர்த்தி இறக்கினாள் நந்தினி..
"வாவ்.." கைகளைத் தட்டிப் பாராட்டினாள் ரம்ய மாலினி..
"அண்ணா.. நீ கிளீன் போல்டு.."
"உனக்கும் தெரிஞ்சு போச்சா..?"
ஆழமான பார்வையால் நந்தினியைக் கிறங்கடித்தபடி தங்கையிடம் கேட்டான் ரவிச்சந்திரன்.. அவன் எதைச் சொல்கிறான் என்று புரியாமல்..
"என்ன சொல்கிற..?" என்று பதிலுக்குக் கேட்டாள் ரம்யமாலினி..
"ச்சும்மா.."
ரவிச்சந்திரன் இமைகளைச் சிமிட்டிக் கொண்டிருந்த போது வீணா வந்து விட்டாள்..
"நந்தினி.. வாம்மா.."
அவள் இருகைகளையும் விரிக்க.. ரவிச்சந்திரனை மறந்து அவனது அன்னையின் கைகளுக்குள் பசுவிடம் ஓடும் கன்றாய் பாய்ந்து தஞ்சம் புகுந்த நந்தினி வீணாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு..
"அத்தை..!" என்று செல்லம் கொஞ்சினாள்..
"ஆ மனுஷி அஜந்தாவிட அத்தை.. கேட்டே.."
கோபத்துடன் ஒலித்த யாழினியின் குரலில் நந்தினி பதறி விலக.. அதில் சினம் துளிர்க்க மாமியாரைப் பார்த்தாள் வீணா.. அஜந்தா பின் தொடர அங்கே வந்து கொண்டிருந்தாள் யாழினி..
"நந்தினி வந்து கொஞ்ச நேரம் கூட ஆகலை.. அதுக்குள்ள பாட்டியிடம் பத்த வைச்சிட்டா..." முணுமுணுத்தாள் ரம்ய மாலினி..
சினத்துடன் தலையை லேசாக அசைத்து அதை ஆமோதித்தாள் வீணா.. அவளது முகம் இறுகியிருந்தது..
"நினக்கு இது சரியல்ல வீணா.."
நந்தினியை முறைத்தபடி மருமகளைக் கண்டித்தாள் யாழினி.. ரவிச்சந்திரனின் கண்கள் இடுங்கின.. அவனது பார்வையைச் சந்திப்பதைத் தவிர்த்தாள் யாழினி.. எதைச் செய்தால் பேரனின் கோபத்திற்கு ஆளாக நேருமோ அதையே அவள் பேரன் அரண்மனைக்குள் காலடி வைத்த உடனே செய்து வைப்பதைக் கண்ட அருள்மொழிவர்மன் நொந்து போனவராக தலைமீது கை வைத்து நின்று விட்டார்..
"எது சரியில்லை அத்தை..?"
வீணா  மாமியாரின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கேள்வி கேட்ட விதத்தை மெச்சும் புன்னகை ரவிச்சந்திரனின் இதழ்களில் உதித்தது..
இப்படியொரு நிமிர்வைத்தான் அவன் தன் தாயிடம் எதிர்பார்த்தான்.. ரவிச்சந்திரனின் தாய் ஊமையாக நிற்பதா..? நியாயத்திற்காக உரத்த குரல் கொடுத்துப் போராட வேண்டாமா..?
"எந்துவெண்டு பறஞ்ஞோ..?"
"ஆமாம் அத்தை.."
"ஈ மனுஷி ஆரானு..?"
"நந்தினி.."
"ஆ பேரை ஞான் அறியும்.. நந்தினியாம் நந்தினி.. ஈ மனுஷி ஆரானு..? நிண்ட மோனோட செக்கரட்டரி.. ஜோலி பார்க்க வந்து.."
"அதுக்கென்ன அத்தை..? இது தெரிந்த விசயம் தானே.."
"ஈ. மனுஷியிடம் நீ கொஞ்சிக் கொஞ்சிச் சம்சாரிச்சு.. அஜந்தா நிண்ட கணவனோட அணியத்தி மோள்.. அவளிண்ட ஓர் திவசமும் பிரியத்துடன் சம்சரிச்சதில்ல.."
"பிரியம் தானா வரனும் அத்தை.."
"அதைத்தான் ஞான் பறஞ்ஞு.. நினக்கு எண்ட மோளிண்ட குடும்பத்து மேல துளியளவும் பிரியமில்ல.. கேட்டே.."
"பிரியம் இல்லாமல்தான் இத்தனை வருசமா என் நாத்தனாரையும் அவங்க குடும்பத்தையும் 'என் அரண்மனை'யில் தங்க அனுமதிச்சிருக்கேனா அத்தை..?"
வீணா நிதானமாக கேட்ட கேள்வியில் விதிர்த்துப் போய் விட்டாள் யாழினி.. வயநாட்டு அரண்மனையை என் அரண்மனையென்று யாழினியின் மருமகள் சொந்தம் கொண்டாடுகிறாளா..? யாழினியின் மகளையும், அவளது குடும்பத்தையும் வயநாட்டு அரண்மனையில் தங்க யாழினியின் மருமகள் அனுமதித்திருக்கிறாளா..?
"எதி பறஞ்ஞாலும் ஆலோசிச்சுப் பறஞ்ஞனும்.. கேட்டே.."
"ஆலோசிச்சுத்தான் பேசறேன் அத்தை.. இது என் அரண்மனை.."
"நீ எவரிடம் பறஞ்ஞுன்னு அறிஞ்ஞு சம்சாரிக்கனும் வீணா.. ஞான் யாழினி.. அருள்மொழிவர்மனோட பார்யா.. ஈ கொட்டாரத்தின் தம்புராட்டி.."
"நான் வீணா.. ரவிவர்மனோட மனைவி.. இந்த அரண்மனைக்கு ராணி.."
இரண்டு பெண் சிங்கங்கள் எதிரெதிர் நின்று மோதிக் கொள்வதைப் போல இருந்து அந்தக்காட்சி.. அரண்மனையின் நுழைவாயில் அருகே மூண்டிருந்த சொற்போரை ரவிவர்மனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.. மனைவியைத் தடுக்கவோ, கடிந்து பேசவோ அவர் யத்தனிக்கவே இல்லை.. அமைதியாக இருந்தார்.. அதை யாழினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
"ரவிவர்மா.." அவள் அலறினாள்..
"அம்மே.."
"நிண்ட பார்யா சம்சாரிக்கிறத கேட்டே.. ஈ கொட்டாரத்துக்கு நிண்ட பார்யா தம்புராட்டியெண்டா ஞான் ஆரானு..?"
ரவிவர்மன் மௌனம் சாதித்தார்.. அவருக்குப் பதில் வீணாவே பேசினாள்..
"நீங்க ராஜமாதா.."
"எந்தா..?"
"ஆமாம் அத்தை.. உங்களுக்குக் கல்யாணமாகி இந்த அரண்மனையில் மருமகளா வாழ வந்தப்ப உங்க மாமியார் ராணியா இருந்தாங்க.. உங்க மாமனார் ராஜாவா இருந்தார்.. நீங்க வந்ததும் உங்க மாமியார் ராணிப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்துட்டு ராஜ மாதாவாகிட்டாங்க.. மாமாவுக்கும் ராஜா பட்டம் வந்தது.. என் விசயத்தில் அப்படி நடக்கலையே.. நான் கல்யாணமாகி இந்த அரண்மனைக்கு வாழ வந்து இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாகிட்டேன்.. இதோ.. என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவங்களாகி அடுத்த தலைமுறைக்கான ராஜா, ராணியாய் நிற்கிறாங்க.. இன்னும் எனக்கு ராணி பட்டம் வந்து சேரலையே.. நான் தான் இந்த அரண்மனைக்கு ராணி.. நீங்க ராஜ மாதாதான் என்கிறதை வசதியாய் நீங்க மறந்து போயிட்டிங்களே.. பரம்பரை, பரம்பரையாய் வருகிற பட்டமும் அதிகாரமும் உங்க மாமியாரிடமிருந்து உங்களுக்குக் கிடைத்தது அத்தை.. உங்க பிறந்த வீட்டிலிருந்து அதை நீங்க கொண்டு வரலை.. உங்களுக்கு அடுத்து எனக்கு வர வேண்டிய பட்டத்தையும் அதிகாரத்தையும் உங்க கிட்டேயே தக்க வைச்சுக்கிட்டா அது உங்களுக்கு மட்டும் உரிமையாகிருமா...? நான் வாய் திறந்து கேட்கலை என்கிறதுக்காக கடைசிவரைக்கும் நீங்களே ராணின்னு சொல்லிக்குவீங்களா..? இல்லை அத்தை.. இப்ப இது என்னோட அரண்மனை.. இங்கே ராஜா உங்க மகன்தான்.. மாமா இல்லை.. ராணி நான்தான்.. நீங்க இல்லை.."
இத்தனை தீரமும் கோபமும் உரிமைப் போராட்டமும் எங்கிருந்து வீணாவுக்கு வந்தது..?
அவள் கைபிடித்து இழுத்துப் போகும் நந்தினியைப் பார்த்தார் ரவிவர்மன்.. வீணாவுக்கான உந்துசக்தி நந்தினிதான் என்பதில் அவர் மனம் நந்தினியை வாழ்த்தியது..
அதே எண்ணத்துடன் நந்தினியை உறுத்துப் பார்த்த யாழினியின் மனம் அவளை,
'அனைத்தும் ஈ பெண் குட்டியாலதான்..' என்று வெறுத்து
ரவிச்சந்திரன் மெலிதான கைதட்டலுடன் யாழினியைக் கேலியாக நோக்கினான்.. பார் என் அம்மாவை.. என்ற இறுமாப்பைக் கொண்ட பேரனின் பார்வையை அந்தப் பாட்டியால் எதிர் கொள்ள முடியவில்லை..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -205
எண்ணியிருந்தது ஈடேற -205
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-205.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-205.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy