எண்ணியிருந்தது ஈடேற -203

203 "இந்த காற்று வெளியிடை கண்ணம்மா..              நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.." அமுதூறும் குரலில் அவன் பாடிய...


203


"இந்த காற்று வெளியிடை கண்ணம்மா..
            நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.."
அமுதூறும் குரலில் அவன் பாடிய பொழுது காற்று வெளியிடை கலந்த பொழுதாகவே இருந்தது.. குளிர் நிரம்பிய கேரளாவின் தீவுப் பகுதியில்.. ஓர்புறம் நீரும், மறுபுறம் நிலப் பரப்புமாக இருக்க.. வாய்க்காலின் குறுக்கே போடப்பட்டிருந்த தென்னை மரத்தில் உட்கார்ந்து வாய்க்கால் நீரில் கால்களை நனைத்து ஆடியபடியே பாரதியின் பாடலை பாடுவது என்பது எத்தனை இனிமையானது..
இதுபோன்ற ஒரு பொழுதைத்தானே பாரதி வேண்டி நின்றான்.. எட்டயபுரத்தின் முண்டாசுக் கவியின் சிந்தனையெல்லாம் காணிநிலமும் அதில் கேணியும், தென்னை மரங்களும்தானே.. இவற்றை முதலில் வடிவமைத்து விட்டுத்தானே அவன் பக்கத்தில் கொண்டாட ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாடினான்..?
ஆலப்புழாவின் படகு வீட்டையும் அந்த அற்புதத் தீவையும் கண்டிருந்தால் என்னவெல்லாம் பாடியிருக்க மாட்டான்..
"அமுதூற்றினை யொத்த இதழ்களும்
             நிலவூறித் ததும்பும் விழிகளும்.."
அவளது ஈரம் படர்ந்த இதழ்களையும் இருளில் மின்னும் விழிகளையும் போதையுடன் பார்த்தபடி தாபத்துடன் அவன் பாட..
"பத்து மாசுப் பொன்னொத்த
             நின் மேனியும்
    இந்த வையத்தில் நானுள்ள மட்டிலும்"
என்று தொடர்ந்து பாடினாள் நந்தினி..
"என்னை வேற்று நினைவின்றி
             தேற்றியே
    இங்கோர் விண்ணவனாகப்
             புரியுமே.."
ரவிச்சந்திரனின் கை அவளை இறுக்கிக் கொண்டது.. நகர்ந்து அவன் மடியில்.. அவள் அமர்ந்து ஒன்றிக் கொள்ள.. போர்த்தியிருந்த சால்வையை விரித்து அவளுக்குப் சேர்த்துப் போர்த்தி இழுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"நம்பலாமா..?"
"நம்புடி.. நான் ரவிச்சந்திரன்.."
"வேற்று நினைப்பால்லாம என் நினைப்பை மட்டும் மனசில் வைச்சிருப்பீங்களா..?"
"ஏற்கனெவே அப்படித்தானேடி இருக்கேன்..?"
"ஐ லவ் யு பாஸ்.."
"ஐ லவ் யு டி.."
ஆலப்புழாவின் படகு வீட்டில் ஏறிய நொடியிலிருந்து இந்த நொடி வரை அவர்கள் எத்தனை முறை 'ஐ லவ் யு..' சொல்லிக் கொண்டார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தாள் நந்தினி.. நினைவுக்கு வரவில்லை..
அவளும்தான் என்ன செய்வாள்..? அந்தச் சூழலில் அவன் மீதான காதல் மயக்கம் அதிகரித்துத் தொலைக்கிறதே.. வாயைத் திறந்தால் 'ஐ லவ் யு' என்ற உச்சரிப்புத்தான் வந்து தொலைக்கிறது..
"இது டேன்ஜசஸ் பிளேஸ் பாஸ்.."
அவனிடமிருந்து விடுபட்டு எழுந்து கொண்டாள் நந்தினி..
"ஊஹீம்.. அப்படியெல்லாம் இல்லை.. ஆலப்புழாவில் படகு வீடுகள் தான் மெயின் பிஸினெஸ்.. ஸோ.. இங்கேயிருக்கிற தீவுகளில் பாதுகாப்பு பலமா இருக்கும்.. நைட் இவங்க இங்கே ஸ்டே பண்ணிக் கரண்ட் கனெக்சன் கொடுத்துக்கனுமில்லையா..?"
"நான் அந்த டேன்ஜரஸைச் சொல்லலை.."
"வேற எந்த டேன்ஜரஸைச் சொன்ன..?"
பதில்சொல்லாமல் நந்தினி நடக்க ஆரம்பித்தாள்.. நிலா வெளிச்சத்தில் அவளது கன்னச்சிகப்பை கண்டு கொண்ட ரவிச்சந்திரன் இரண்டே எட்டில் அவளை அணுகி அவன் பக்கமாகத் திருப்பினான்..
"பாஸ்.."
தள்ளாடும் பூங்கொடியாய் அவன்மீது படர்ந்து மார்பில் சாய்ந்து கொண்டாள் நந்தினி..
"என்னைப் பார்த்தா உனக்கு டேன்ஜரஸ் மேன் போலத் தெரிகிறதா..?"
"உங்களைப் பார்த்து நண் பயப்படலை பாஸ்.."
"பின்னே..?"
"என்னைப் பார்த்தே பயப்படறேன்.."
நந்தினி சொல்ல வருவதை புரிந்து கொண்ட ரவிச்சந்திரனின் விழிகள் மின்னின.. அவர்கள் படகு வீட்டிற்குத் திரும்பும் வரைக் காத்திருந்த வேலையாள்கள் அவர்கள் படுக்கையறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டதும் படகுவீட்டைச் சுற்றிப் பாதுகாவலாக சூழ்ந்து படுத்து விட்டார்கள்..
ஏஸியின் மெல்லிய ரீங்கார ஒலியுடன் மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் நுரை மெத்தையில் வீழ்ந்த நந்தினி அறையைச் சுற்றிப் பார்வையை ஓட்டினாள்.. நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளைப் போன்ற அழகும் வசதியும் கொண்ட அறை.. காலையில் குளித்து உடை மாற்ற அறைக்குள் வந்தது.. அவ்வபோது பாத்ரூமை உபயோகப் படுத்த வந்து சென்றதைத் தவிர அன்று முழுவதும் அந்த அறையை உபயோகப்படுத்தவேயில்லை என்ற நினைவு வந்தது.. ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை.. மதிய உணவுக்குப் பின்னர் கண்களைச் சுழற்றிய தூக்கத்திற்கு சற்று நேரம் அயர்ந்த போதுகூட பால்கனியில் தண்ணீரையும் கரையோர இயற்கை காட்சிகளையும் வேடிக்கை பார்த்தபடிதான் கண் அயர்ந்தார்கள்.
ரவிச்சந்திரன் கதவைத் தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான்.. நந்தினி இமைகளை மூடித் திறந்து அவனை அழைத்த விதத்தில் விழிகள் பிரகாசிக்க கட்டிலில் படர்ந்து அவள் மீது பரவினான்.. இமை மூடி அவனை அமைதித்தாள்.. கிளர்ச்சியில்லாத அவளது அமைதியில் விலகி அவளின் இமையில் முத்தமிட்டான்.. இமைகளைத் திறந்து அவனைப் பார்த்தவளின் விழிகளில் சொந்தம் இருந்தது.. அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. விலகிப் படுத்து அவளுக்காக கைநீட்டினான்.. கண்கள் மின்ன அவனிடம் தாவியவளை மார்பில் சரித்துக் கொண்டான்.. பரந்து விரிந்திருந்த அவனது மார்பைத் தலையணையாக்கி இமைமூடி அவள் படுத்திருந்தாள்.. அவளது முடி கோதியவன்..
"நந்தினி.." என்று கிசுகிசுப்பாக அழைத்தான்.
அவனும் அவளும் மட்டும் இருந்த அந்த ஏஸி அறை தாழிடப்பட்டிருந்தது.. அவர்களின் பேச்சு அறையைத் தாண்டி வெளியே பயணிக்காது.. இருந்தும் அவன் அவளிடம் கிசுகிசுத்தான்.. அவள் அவனைவிட கிசுகிசுப்பாக..
"ம்ம்ம்.." என்று முணுமுணுத்தாள்..
காதல் என்பதே ரகசியமான பரவச உணர்வுதான்.. அதில் பேச்சிலும் சிரிப்பிலும் வெகு இயல்பாக ரகசியம் கலந்து விடும்.. காதலுக்கு சுவை சேர்ப்பது ரகசியக் கிசுகிசுப்புகள்தான்..
"பயமாய் இல்லையா..?"
"எதுக்கு பயம்..?"
"இது தனி ரூம்.."
"எனக்குத் தெரியாது பாருங்க.. நீங்க சொல்லித் தெரிய வைக்கறீங்க.. சூப்பர் பாஸ்.."
அவள் அவன் சொன்னதை சூப்பர் என்று சொன்னாளா.. இல்லை அவனை சூப்பர் பாஸ் என்று கொண்டாடினாளா என்று புரியாத விதத்தில் செல்லமாக சிணுங்கினாள் நந்தினி..
"நான் சொல்லித் தெரிய வைக்க வேண்டியது நிறைய இருக்குடி.."
அவளது முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த அவனது கையின் அழுத்தத்தில் அவளுக்குள் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.. குளிர் நிரம்பிய ஆலம்புழாவின் படகு வீட்டின் ஏஸி அறையில் அவளுக்குள் ஏதோ நிகழ்ந்தது.. உடலெங்கும் பரவிய வெப்ப அலைகளில் அவள் தடுமாறினாள்..
"பாஸ்.."
நடுங்கிய அவளது குரலில் ரட்சகனாகி அவளை அமைதிப் படுத்தினான் ரவிச்சந்திரன்.. அவள் முதுகில் அழுத்தம் கொடுத்துப் பதிந்திருந்த கை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தது..
"பயம் வந்திருச்சா..?"
அவன் குரலில் இருந்த நகைப்பில் அவள் அமைதியானாள்..
"எனக்கொன்னும் பயமில்லை.." உண்மையாகச் சொன்னாள்..
"பயமில்லையா.. தனி ரூமில நீயும் நானும் ஒன்னா, ஒரே கட்டிலில படுத்துத் தூங்கப் போறோம்.. உனக்குப் பயம் வரலையா..?"
"நாம இப்படித் தனி ரூமில ஒரே கட்டிலை ஷேர் பண்ணிக்கிட்டுப் படுத்துத் தூங்கறது ஒன்னும் பர்ஸ்ட் டைமில்லை பாஸ்.. செகண்ட் டைம்.. நீலிமலைக் காட்டில வுட்-ஹவுஸில ரெண்டு நாள் தனிக் குடித்தனம் பண்ணியிருக்கோம்.. மறந்து போச்சா..?"
"எப்படிடீ மறக்கும்..?"
அந்த நாள்களின் நினைவை இருவரும் அசை போட்டபடி சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்..
"அப்ப நீ என் காதலை ஏற்றுக்கலைடி.." மௌனம் கலைத்தான் ரவிச்சந்திரன்..
"இப்பவும் என் மனசில குழப்பம் இருக்கு பாஸ்.." சஞ்சலத்துடன் சொன்னாள் நந்தினி..
"இப்பத்தான் உன்னோட அபத்தமான உளரலுக்கு ஒரு புல்ஸ்டாப் வைத்தேன்.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா..?" அதட்டினான் அவன்..
"ஸாரி.. ஸாரி.. இனிமே உளர மாட்டேன்.."
"பார்க்கலாம்.. உளரலுக்கும் உனக்கும் இருக்கிற ரிலேசன்ஷிப் இருக்கே.. ஸ்ட்ராங்கான ரிலேசன்ஷிப்.. உனக்குன்னு இப்படியெல்லாம் எப்படித் தோணுதோ.."
"ஸாரி சொன்ன பின்னாலும் திட்டக் கூடாது.."
"நான் திட்டுகிறதைப் போல நீயும் பேசக்கூடாது.."
"ஆகட்டும்.."
புரண்டு அவன் மார்பில் முகவாயை பதித்து அவன் முகம் பார்த்துக் சொன்னாள் நந்தினி.. அந்த இரவு மறக்க முடியாத
புரண்டு அவன் மார்பில் முகவாயை பதித்து அவன் முகம் பார்த்துக் சொன்னாள் நந்தினி.. அந்த இரவு மறக்க முடியாத இரவு என்று நினைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. அவனிடம் நந்தினி காட்டிய அந்த அன்யோன்யம் அலாதியானதாக வார்த்தைகளால் உணர்த்த இயலாத பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது..
"நந்தினி.."
"ம்ம்ம்.."
"அன்றைக்கு என் காதலை நீ ஏற்றுக்கலை.."
"இன்னைக்கு நீங்க இல்லாம நான் இல்லை.."
உணர்ச்சி மிகுதியால் விம்மி விட்டாள் நந்தினி.. அவளை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் என்று இருந்தது.. இதைத் தாண்டிய சுகத்தையா கூடல் கொடுத்து விடப் போகிறது..?
"இப்ப உன்னை எடுத்துக்கனும்னு நான் நினைச்சா நீ தடுத்து விடுவியாடி..?"
"மாட்டேன்.."
"இந்த உன் காதலையும் தனிமையையும் நான் யூஸ் பண்ணிக்க நினைக்கலாம் என்கிற பயம் உனக்கில்லையா..?"
"யூஸ் பண்ணிக்குவீங்களா..? நீங்களா..? குட் ஜோக்.."
அவள் சிரித்த சிரிப்பில் அவன் மீதான அதீத நம்பிக்கை பிரதிபலித்தது.. அந்த நம்பிக்கையில் மனம் திளைத்தான் அவன்..
அதற்கு மேல பேச என்ன இருக்கிறது..? என்பதைப் போல சரிந்து அவன் மார்பில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்தாள் நந்தினி.. அவளது முதுகைத் தட்டிக் கொடுத்தபடி அவனும் உறங்கி விட்டான்.. அதிகாலையில் கண் விழித்த நந்தினி அவனது உறக்கத்தைக் கலைக்காமல் விலகி அவன் முகம் பார்த்தாள்.. வசீகரமான அழகிய கவர்ச்சி நிரம்பிய முகம்..! கலைந்திருந்த அவனது முடியைக் கோதி விட்டுக் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.. வழக்கம் போல அவனது கவர்ச்சியிலும் அழகிலும் மருண்டவளாய்..
"இவனுக்கு நான் ஈக்குவலா..? என்னிடம் என்னத்iக் கண்டான்..? இப்படிப் பித்தா இருக்கிறானே.. சூப்பர் மேனுக்கு காதலியை சூஸ் பண்ணத் தெரியலை.." என்று வாய் விட்டுச் சொன்னாள்..
"ரவிச்சந்திரன் எல்லாத்திலும் சூப்பர் மேன்தான்டி.. என் லவ்வரை சூஸ் பண்ணினதிலும் நான் சூப்பர் மேன்தான்..." கண் விழித்த ரவிச்சந்திரன் கண் சிமிட்டினான்..
'எல்லாத்தையும் கேட்டுட்டான்..' நந்தினிக்கு வெட்கமாகி விட்டது..
'கள்ளன்..'
அந்தக் கள்வனிடம் அகப்படாமல் தப்பி கட்டிலிலிருந்து இறங்கிக் கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.. எதிரில் தெரிந்த அற்புத அழகில் பிரமித்து நின்று விட்டாள்..
தண்ணீரின் அலைகள் கரையில் மோதுவதால் ஏற்படும் மெல்லிய சலசலப்பு.. பறவைகளின் வித விதமான 'கீச், கீச்..' ஒலி.. குளிர்ச்சி நிரம்பிய ஆலப்புழாவின் அழகிய அமைதி..
பறவைகளின் சப்தமும், நீரலைகளின் ஓசையும் இணைந்து வெளிப்பட்ட இயற்கையழகின் பரிணாமத்தில் வியந்து அயர்ந்து நின்று விட்ட நந்தினியின்
பின்னால் வந்து நின்று கழுத்தில் கைகளைப் படற விட்டு அவளது உச்சந்தலையில் முகவாயைப் பதித்தான் ரவிச்சந்திரன்..
ஏகாந்தம் நிரம்பிய இயற்கையின் பொழுது எப்படியிருக்கும் என்பதை உணர்த்திய அதிகாலைப் பொழுது ஆலப்புழாவின் அந்த விடிகாலைப் பொழுது..
சில்லென்ற குளிர் காற்றில் அவர்கள் வயல்வெளியில் உலவித் திரும்பினார்கள்.. தென்னம் பாலத்தில் உட்கார்ந்து கால்வாய் நீரில் கால்களை நனைத்து ஆட்டியபடி சூடான டீயைக் குடித்தார்கள்.. சொர்க்கத்தில் இருப்பதைப் போல உணர்ந்தாள் நந்தினி.. அவனிடம் சொன்னபோது அவளருகில் இருந்தால் அனைத்தும் சொர்க்கம் என்றான்.. அவனது வார்த்தைகள் மற்றுமொரு சொர்க்கத்திற்கு அவளை இட்டுச் சென்றன..
இரைச்சல்கள் இல்லாத அமைதியான தொரு உலகத்தில் ஒர்நாள் வாழ்ந்த நிறைவுடன் கரைக்குத் திரும்பினார்கள்..
படகு வீட்டை விட்டு இறங்க மனமில்லாமல் இறங்கினாள் நந்தினி.. அங்கேயே இருந்து விடலாம் போல இருந்தது.. சூழ்ச்சிகள் நிரம்பிய வயநாட்டு அரண்மனைக்குத் திரும்பாமல் அவளும் ரவிச்சந்திரனுமாக படகு வீட்டில் அமைதியாக வாழலாம்..
நினைவுகளும் கனவுகளும் சுகமானவைதான்.. நனவுகள் அவற்றுக்கு எதிர் திசையில் பயணிக்கின்றனவே..
ஆலப்புழாவின் படகு வீட்டிற்கு எதிர்திசையில் ரவிச்சந்திரனின் கார் விரைந்தது.. நந்தினியின் மனமோ படகு வீட்டிலேயே வெகு நேரம் இளைப்பாறியது..


- ஏழாம் பாகத்தில் தொடரும்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -203
எண்ணியிருந்தது ஈடேற -203
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-203.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-203.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy