எண்ணியிருந்தது ஈடேற, -202

202   "விடுங்க என்னை.." "விட முடியாதுடி.. ஹா.. ஹா.." "தரங்கிணின்னு சொன்னவுடனே கிண்கிணின்னு இவர் சிரித்து ம...


202
 "விடுங்க என்னை.."
"விட முடியாதுடி.. ஹா.. ஹா.."
"தரங்கிணின்னு சொன்னவுடனே கிண்கிணின்னு இவர் சிரித்து மகிழ்ந்து போவாரம்.. நான் இவரிடம் கொஞ்சிப் பேசனுமாம்.. நல்ல கதையாய் இருக்கே.."
"நானாடி அவ பெயரைச் சொன்னேன்..? நீதானே சொன்ன..?"
"நான் சொன்னா நீங்க ரசிச்சுச் சிரிக்கனுமா..?"
"சொன்னது நீ.. என்மேலக் குற்றமில்லை.."
"இதையே நானும் சொல்லலாமில்ல..?"
"சொல்லு.. என்ன சொல்லப் போகிற..?"
"இங்கேயிருக்கிற சிடிஸ் அத்தனையும் உங்களுடையது.. நீங்க வைத்திருந்தது.. கைக்கு வந்த ஏதோ ஒன்னை நான் உறுவி நீட்டினா அது 'பிரேமம்' பட சிடியா இருந்து தொலைக்குது.. இதில என்மேல குற்றமென்ன..?"
ரவிச்சந்திரன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சளைக்காமல் பதிலுக்கு நேர் கொண்ட பார்வையாக நந்தினி பார்த்ததில் சிரித்து விட்டான்..
"ஓகே.. ஓகே.. உன்னை நான் கோவித்துக் கொண்டது தவறுதான்.. ஐ ஆம் ஸாரி.."
கொஞ்சம்கூட யோசிக்காமல் தயங்காமல் அவன் மன்னிப்புக் கேட்டதில் மனம் இளகி விட்ட நந்தினி..
"ஸாரியும் வேண்டாம்.. பூரியும் வேண்டாம்.." என்றபடி எழுந்து கொண்டாள்..
"இருட்டிருச்சுல்ல.. வயிறு பூரியைக் கேட்குது போல.. அது எப்படிடீ உன் மூக்கு வகையா வாசனையை மோப்பம் பிடிச்சுருது..? கிச்சன்ல பூரி சுடற வாசனையை கண்டு பிடிச்சுட்டயே.."
காற்றில் மிதந்து வந்த எண்ணை வாசனையை முகர்ந்து ரசித்தபடி அவளை கேலி செய்தான் ரவிச்சந்திரன்..
"நைட் டிபன் பூரியா.. பாஸ்..?"
அவனையும் சிடிக்களையும் மறந்து நந்தினி கிச்சன் பக்கமாக தாவி விட்டாள்... இவள் இருக்கிறாளே என்று தலையை ஆட்டி ரசித்த ரவிச்சந்திரன் சிரித்துக் கொண்டான்..
"பூரியில்லை பாஸ்.. சப்பாத்தியாம்.."
முகத்தைத் தூக்கியபடி வந்து சேர்ந்தாள் நந்தினி.. பூரி போடச் சொல்லவா என்று ரவிச்சந்திரன் கேட்டான்.. வேண்டாம் என்று மறுத்து விட்ட நந்தினி சிடிக்களை குடைய ஆரம்பித்தாள்.. மலர் டீச்சர் படம் பார்க்க வேண்டாமா என்று ரவிச்சந்திரன் வம்பிழுக்க அவனை முறைத்தாள்.. இருவருமாக சேர்ந்து 'காற்று வெளியிடை' படம் பார்த்தார்கள்..
"வாட் எ பிலிம்..!" என்றான் ரவிச்சந்திரன்..
நந்தினி கண் கலங்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
'இவளுக்கு பூஞ்சை மனது..'
நந்தினியை அணைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. அவள் அழுகிறாள் என்று கேலி செய்தான்.. வெட்கத்துடன் கண்ணீரை மறைத்துத் துடைத்துக் கொண்டவளை விரல் விலக்கிப் பார்த்தான்.. மனபாரம் தாங்காமல் அவன் மார்பில் முகம் புதைத்து கட்டிக் கொண்டாள் நந்தினி..
"நீயென்ன பப்பாவாடி.. சினிமா பார்த்துட்டு ஊம், ஊம்ன்னு அழுகிற..?" கிண்டலைப் போல அதை இதை பேசி அவளது மன பாரத்தை குறைத்து விட்டான் ரவிச்சந்திரன்..
அப்போதும் முகத்தை ஒரு முழ நீளத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு மாடிபகுதியின் பால்கனிக்குப் போனான்.. படகின் மேல் பகுதி பாதி பால்கனியாகவும் மீதி திறந்தவெளியுமாக இருந்தது.. திறந்த வெளியில் குளிரில் நடுங்கியபடி இருவரும் நின்று ஆகாயத்தில் மின்னிய நட்சத்திரக் கட்டங்களை எண்ணினார்கள்.. நந்தினி நந்தகுமாருக்குப் பிடிக்கும் என்று 'நிலா, நிலா ஓடிவா..' பாடலை பாடினாள்.. அவள் பாடும் பாடலைக் கேட்டு ஆகாயத்தில் உள்ள நிலா குதித்து இறங்கி வந்து விடப் போகிறது என்று அதற்கும் கிண்டல் செய்தான் ரவிச்சந்திரன்.. நந்தகுமாரின் நினைவில் மனம் கனக்க.. நின்றிருந்தவளிடம்.. "உனக்கு அழுவதென்றால் வெல்லக் கட்டியா..? ஏதாச்சும் சான்ஸ் கிடைக்குமான்னு வலை போட்டுத் தேடிக் கண்டு பிடிக்கிற பாரு.. அங்கே நிற்கிறேடி நீ.." என்று அதட்டினான்..
"நான் இங்கே நிற்கிறேன் பாஸ்.." சுதாரித்துக் கொண்ட நந்தினி பதிலடி கொடுத்தாள்..
சிலுசிலுவெனக் பனிக்காற்று அவர்களின் உடல் தழுவியதில் நந்தினி கைகளைக் குறுக்கிக் கட்டிக் கொண்டு..
"குளிருது பாஸ்.." என்று சிணுங்கினாள்..
"கிட்டே வா.." அவன் அணைத்துக் கொண்டான்..
அவனது நெருக்கத்தில் அவள் மனதிலிருந்த பாரம் குறைவதைப் போல இருந்தது.. அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்..
"உன் நெஞ்சிலே பாரம்..
             உனக்காகவே நானும்..
    சுமைதாங்கியாய் மாறுவேன்..
             உன் கண்களின் ஓரம்..
    எதற்காகவோ ஈரம்..?
             கண்ணீரை நான் மாற்றுவேன்..
    வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்..
             வெண் மேகமே..! புது அழகிலே..
                 நாமும் நணையலாம்..
    உறவுகள் தொடர்கதை..
             உணர்வுகள் விடுகதை
    ஒருகதை என்றும் முடியலாம்..
             முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே.."
பிசிரற்ற குரலில் அவன் பாடிய பாடல் மிருதுவாக அவள் மனதில் இறங்கித் தாலாட்டியது..
'இவன் இரவுப் பாடகன்..!' அவள் மையல் கொண்டாள்.. மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் அவன் பாடிய பாடல் நினைவுக்கு வந்தது.. அன்றும் இது போலதான்.. அமைதி சூழ்ந்திருந்த இரவு நேரம்.. அவளும் அவனும் மட்டும் இருந்த தனிமைப் பொழுது.. அன்று கிடாரை மார்பில் சாய்த்திருந்தான்.. இன்று கிடாருக்குப் பதில் நந்தினியைத் தோளில் சாய்த்திருக்கிறான்..
அவர்கள் இருவரும் இறங்கி வந்தபோது இரவு உணவு டைனிங் ஹாலில் தயாராக இருந்தது..
சப்பாத்தி, குறுமா, மீன்வறுவல்..
"இங்கே மீன் வறுவலோ, பொரியலோ இல்லாம சாப்பாடே இருக்காது போல.." நொட்டை விட்டபடி சொன்னாள் நந்தினி..
"உனக்காகவே மீனை பொறித்து வைத்துக்கிட்டுக் காத்திருக்கிற தேசம் எங்கள் மலையாள தேசம்.." என்றான் ரவிச்சந்திரன்..
"ஓ.." உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் நந்தினி..
எட்வர்ட் அவர்களுக்காக தட்டுக்களை எடுத்து வைக்க..
"வெயிட்.." என்றாள் நந்தினி..
"எந்தா மேம்..?" தயங்கி நின்றான் எட்வர்ட்..
"பாஸ்.. ஒரு ஐடியா.." விரல் சொடுக்கிய நந்தினி..
"நிலாச் சாப்பாடு சாப்பிடலாமா..?" என்று விழிகள் மின்ன கேட்டாள்..
"நிலாச்சாப்பாடு..?" ஆச்சரியத்துடன் கேட்ட ரவிச்சந்திரன்..
"ஓகே.." என்று இரு கைகளையும் விரித்து அனுமதி வழங்கியபடி எழுந்து கொண்டான்..
எட்வர்ட் அவர்களுக்கான உணவு வகைகளையும் தட்டுக்களையும் மாடிக்குக் கொண்டு வந்தான்.. குடி தண்ணீர் ஜக்கும் தம்ளர்களுமாக அங்கு வந்த நந்தினி..
"நாங்க சாப்பிட்டுக்கறோம்.. நீங்க போங்க.." என்று அவனை அனுப்பி விட்டாள்..
படகு வீட்டின் மேல் தளத்தில் நட்சத்திரங்கள் மின்ன.. நிலா பவனி வர அவளும் ரவிச்சந்திரனும் நிலாச் சாப்பாடை சாப்பிட ஆரம்பித்தார்கள்..
நந்தினி ரவிச்சந்திரனுக்குப் பரிமாற அவன் சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து அவளுக்கு ஊட்டினான்.. குருவி வாயைத் திறப்பதைப் போலத்
திறந்து சப்பாத்தி துண்டை வாங்கிக் கொண்ட நந்தினி.. தானும் ஒரு விள்ளலை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.. சாப்பாத்தித் துண்டை வாங்கிக் கொள்ளும் சாக்கில்
அவளது கைவிரல்களை லேசாக அவன் கடித்து வைக்க கைவிரல்களை உதறியவள்..
"ஊட்டின விரலுக்கு அருமையா கிப்ட் கொடுக்கறிங்க பாஸ்.. இந்த விசயத்தில உங்களை அடிச்சுக்க ஆளில்லை.." என்றாள்..
தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த படகுவீட்டின் மேல்தளத்தில் நிலாவையும் நட்சத்திரங்களையும் வேடிக்கை பார்த்தபடி அவர்கள் உண்ட நிலா விருந்து நிலாச்சோறின் அழகை உணர்த்தியது..
இரவு உணவை உண்டு முடித்ததும் அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்..
"தூக்கம் வருதா..?" ரவிச்சந்திரன் கேட்டான்..
"ஊஹீம்.." இல்லையென்று தலையை ஆட்டிய நந்தினி..
"ஒரு ஸ்மால் வாக் போயிட்டு வரலாமா..?" என்று கேட்டாள்..
"திரும்பவுமா..?"
"ம்ம்ம்.."
"இருட்டிலா..?"
"பக்கத்திலேதான் நீங்க இருக்கீங்களே.."
அதே பதில்.. அவனுக்குப் பிடித்தமான பதில்.. அன்றைய நாளை அவள் மென்மேலும் இனிப்பாக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்..
அவர்கள் இருவரும் படகு வீட்டை விட்டு இறங்கித் தீவுப் பகுதியில் நடந்தார்கள்.. பக்கத்தில் நடந்து வந்த நந்தினி சளசளக்காமல் அந்த இரவின் நிசப்தத்தை
ரசித்து நுகர்ந்தவளாய் அமைதியாக நடந்து வந்ததில் வியப்படைந்தான் ரவிச்சந்திரன்..
'வாயைத் திறந்தா மூடவே மாட்டா... வாய் வலிக்கிறதைப் பத்திக் கவலைப்படாம பேசித் தள்ளுவா.. இப்ப என்னடான்னா பேசா மடந்தையாய் வருகிறா..'
நந்தினியின் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூவின் வாசனை மனதை மயக்குவதாக இருந்தது.. ரவிச்சந்திரன் அவளை இழுத்து கைவளைவில் நிறுத்திக் குனிந்து அவள் சூடியிருந்த பூவில் முகம் பதித்து..
"ம்ஹா.." என்று முகர்ந்து சிலிர்த்தான்..
"போதுமே.." அவன் நெஞ்சில் கை வைத்து வெட்கத்துடன் தள்ளி விட்டு நடந்தாள் நந்தினி..
தீவுக்குள் ஓடி வந்த வாய்க்கால் நீரைக் கடக்க தென்னை மரங்களை வெட்டிப் போட்டிருந்தார்கள்..
"செங்கல் இல்லாம, கம்பி இல்லாம, இயற்கையை துணையாய் வைச்சு உருவாக்கின பாலம்.." என்றாள் நந்தினி..
"ஏய்ய்.. நீ இப்படியெல்லாம் கூட யோசிச்சுப் பேசுவியாடி..?" ஆச்சரியம் போல அவளைக் கலாய்த்தான் ரவிச்சந்திரன்..
"ஏனாம்.. உங்க அத்தை மகள் ரத்தினமும், கோழிக்கோடு கிண்கிணியும் மட்டும்தான் யோசிப்பாங்களா..? நான் யோசிக்க மாட்டேனா..?" பின்னலைத் தூக்கிப் பின்னால் விசிறியபடி கேட்டாள் நந்தினி..
"அவங்களைப் பத்தி நான் நினைக்கிறதே இல்லை.. நீதான் நினைவு படுத்தற..?"
"ஹலோ பாஸ்.. என்ன..?" நந்தினி நின்றுவிட்டாள்..
"என்னடி..?" அவளிடம் வம்பிழுக்கப் போகும் சுவராஸ்யத்துடன் ரவிச்சந்திரனும் நின்று விட்டான்..
"இதுதான் சாக்குன்னு அதுகளை நினைச்சிருவீங்களோ..?"
"எதுகளை..?"
"ஹை.. ஐயாவுக்கு அதுக யாருன்னு தெரியாதாக்கும்..? என் வாயாலே நான் சொல்லனுமாக்கும்.."
"எப்படிடி இப்படியொரு லாங்வேஜில பேசற... எனக்கும் தமிழ் தெரியும்.. என்னாலே மட்டும் உன்னைப் போல பேச முடியறதில்லையே.."
"அதுக்குத் தமிழ்நாட்டில பிறந்து வளர்ந்திருக்கனும் பாஸ்.."
"நான் பிறந்தது வேணும்னா வயநாடா இருக்கலாம்.. வளர்ந்தது தமிழ்நாட்டிலேதான்.. ஊட்டி கான்வென்டில படிச்சேன்.."
"அடேங்கப்பா.. படா ஆள்தான்.."
"'படா' வா.."
"ம்ம்ம்.. 'படா ஷோக்கான ஆளுப்பா நீ'ன்னு சொல்வாங்கள்ல அந்த 'படா..'"
"சத்தியமா அர்த்தம் புரியலை.."
"புரியாமலே இருக்கட்டும்.. இது ஒன்னிலேயாவது உங்களை விட நான் எக்ஸ்பர்ட்டா இருக்கிறேனில்ல.. அதுவே போதும்.. வாங்க.. இப்படி உட்காரலாம்.."
தென்னை மரப் பாலத்தில் உட்கார்ந்து வாய்க்கால் நீரில் கால் பதித்தார்கள்.. பனிக்கட்டிகளின் மீது கால் வைப்பதைப் போல சில்லென்று இருந்தது.. பலத்து அடித்த குளிர் காற்றும் சேர்ந்து கொள்ள..
"ஸ்ஆ.." என்றபடி அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் நந்தினி..
அவள் தோளில் கைபோட்டு வளைத்துக் கொண்ட ரவிச்சந்திரன்..
"இந்த காற்று வெளியிடை கண்ணம்மா..
           நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.."
என்று பாடினான்..
நந்தினியின் மேனி சிலிர்த்தது.. அந்நாள் பொன்னாள் என்று தோன்றியது... எப்படிப்பட்ட அற்புதமான அனுபவங்களை அவளுக்கு அள்ளித் தருகின்றான் அவன்..
அன்று நீலிமலைக் காட்டின் மரவீடு.. இன்று ஆலப்புழாவின் படகு வீடு..!
கேரளத்தைக் கடவுளின் தேசம் என்று சொல்வது சாலச்சிறத்து என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. அங்கே வந்திருப்பதினால் அவள் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறாள்.. இறைவனின் அனுக்கிரகம் அவளுக்குக் கிட்டியிருக்கிறது..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற, -202
எண்ணியிருந்தது ஈடேற, -202
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-202.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-202.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy