எண்ணியிருந்தது ஈடேற -201

201 லேசாக எழுந்து அமர்ந்து ரவிச்சந்திரனின் மடியில் சொகுசாக சாய்ந்து படுத்துக் கொண்டாள் நந்தினி.. அவனுக்கு அதுதான் பிடித்தமானதாக இரு...


201


லேசாக எழுந்து அமர்ந்து ரவிச்சந்திரனின் மடியில் சொகுசாக சாய்ந்து படுத்துக் கொண்டாள் நந்தினி.. அவனுக்கு அதுதான் பிடித்தமானதாக இருந்தது.. அவன் மடிமீது சாய்ந்தபடி தண்ணீரையும் கரையோர தீவுகளையும் வேடிக்கை பார்ப்பது நந்தினிக்குப் பிடித்தமானதாக இருந்தது.. உறக்கம் கொள்ளும் பின் மதிய வேளையில் அவர்கள் உறங்காமல் அன்றையப் பொழுதையும் படகு வீட்டில் பயணிக்கும் அனுபவத்தையும் ரசித்து அனுபவித்துக் கொண்டே வந்தார்கள்..
மெல்ல மதியப் பொழுது நகர்ந்து மாலை வந்து சேர்ந்தது.. பறவைகள் கரையோரத் தோப்புக்களில் இருந்த கூடுகளுக்குக் கூட்டம் கூட்டமாக திரும்பிக் கொண்டிருந்தன.. சூடான இஞ்சி டீயும் வெங்காய பஜ்ஜியும் அவர்களைத் தேடி வந்தன.. மொட்டை மாடி பால்கனியில் அமர்ந்தபடி அவற்றை ருசிக்கலாமே என்று ஆலோசனை சொன்னான் ரவிச்சந்திரன்.. ஆகட்டும் என்றாள் நந்தினி.. இவர்கள் முன்னே செல்ல இஞ்சி டீயும், வெங்காய பஜ்ஜியும் பின்னே வந்தன..
மாலை நேரத்துச் சூரியனின் சிவந்த கதிர்கள் தண்ணீரின் மேற்பரப்பில் படிந்திருந்த காட்சியைப் பார்க்க வெகு அழகாக இருந்தது.. அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த படகுகளையும், படகு வீடுகளையும் பார்வையிட்டபடி உண்ட வெங்காய பஜ்ஜி
அதிகமாக ருசித்தது.. குடித்த 'இஞ்சிடீ' தேவாமிர்தமாக இனித்தது..
மாலை மயங்கி இருள் பரவிய போது படகு வீட்டின் வேகம் மெல்லக் குறைந்து யாருமே இல்லாத தீவு ஒன்றில் படகு வீடு நஞ்கூரமிட்டு நின்று விட்டது..
"என்ன பாஸ் இது..?" நந்தினி பயந்து விட்டாள்..
"இதுதான் படகு வீடுகளின் யூசுவலா செய்வாங்க.. பகலில் ஏரியில் மிதந்து வரும் படகுகள் நைட் டயத்தில ஏதாவது ஒரு தீவில் நங்கூரம் பாய்ச்சி நின்று விடும்..
இனிக் காலையில்தான் படகு கிளம்பும்.." விளக்கினான் ரவிச்சந்திரன்..
"ஆளில்லாத இந்தத் தீவில் தனியாய் இருக்கிறதா..?" சுற்று முற்றும் பார்த்தாள் நந்தினி..
இருள் அவளை அச்சுறுத்தியது.. தன்னிச்சையாக ரவிச்சந்திரனின் பக்கமாக நகர்ந்து ஒன்றிக் கொண்டாள்.. அவள் பயந்து போயிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ரவிச்சந்திரன் அவளை இறுக்கி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்தினான்.
"இங்கே பயப்படறதுக்கு எதுவுமே இல்லைடி.. நம்ம படகுவீடு மட்டும் தீவில ஸ்டே பண்ணலை.. மற்ற படகு வீடுகளும் தள்ளித் தள்ளி ஸ்டே பண்ணியிருக்கும்.."
"பகலில ஒன்னும் தோணலை பாஸ்.. இருட்டிலே பயமாய் இருக்கு.."
"பக்கத்தில் நானிருக்கேனில்ல..? பயம் என்ன பயம்..? இதுவாவது ஆலப்புழா.. படகுவீடு.. ஹெல்ப்புக்கு ஒன்றுக்கு முன்றாய் ஆள்கள் பக்கத்தில் இருக்காங்க.. யாருமே இல்லாம நீலிமலைக் காட்டிலே வுட்-ஹவுஸில் பத்திரமாய் இருந்தோமே.. மறந்து விட்டதா..?"
'எப்படி மறக்கும்..?'
பயம் குறைந்தவளாக விலகி நின்றாள் நந்தினி.. இருவரும் கீழ்தளத்திற்கு இறங்கி வந்தார்கள்.. எட்வர்ட் என்று ரவிச்சந்திரனால் அழைக்கப் பட்டவன் தீவிலிருந்த எலக்ட்ரிக் கம்பத்தில் இருந்து படகுக்கு மின் இணைப்பைக் கொடுத்தான்..
படகுவீடு விளக்குகளுடன ஒளிர்ந்து நீரில் மிதக்கும் மாளிகை போல ஜொலித்தது.. அதன் அழகில் பிரமித்துப் போனாள் நந்தினி..
"இப்படித்தான் போட்-ஹவுஸீக்கு கரண்ட் சப்ளை ஆகுமா..?" அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் விசாரித்தாள்.
"ம்ம்ம்.."
"நாம தண்ணியில ஜர்ன் பண்ணினப்பவும் படகில கரண்ட் இருந்துச்சே.. டிவி ஓடுச்சு.. மிக்ஸி, கிரைண்டர்ன்னு அத்தனைக்கும் கரண்ட் கிடைச்சுச்சே.. அது எப்படின்னு அப்ப யோசிக்கலை பார்த்திங்களா..?"
"உனக்கு அறிவு பத்தலைன்னு சொல்லு.. அதை நான் பார்க்க வேறு செய்யனுமா..?"
"பாஸ்.."
நந்தினி சிறு குழந்தையைப் போலக் கால்களைத் தரையில் உதைத்துச் சிணுங்கிய விதம் ரவிச்சந்திரனின் மனதை கொள்ளை கொள்ளுவதாக இருந்ததில் அவள் அழகில் அவன் மனம் லயித்தான்..
"தண்ணீரில் ஜர்ன் பண்ணும் போது போட் ஹவுஸில் ஜெனரேட்டர் மூலம் கரண்ட் சப்ளை ஆகும்.. கரையோரமாக நிற்கும் போது அங்கே கிடைக்கிற ஈபி கனெக்சனில் இருந்து கரண்டை கனெக்ட் பண்ணி விடுவாங்க.."
அவன் சொல்வதை அதீத வியப்புடனும், ஆர்வத்துடனும் கேட்டுக் கொண்டவளின் ஈர்ப்பில் ஈர்க்கப் பட்டான் ரவிச்சந்திரன்..
அழகான பெரிய ஹாலின் சோபாக்கள் அவர்களை வா, வா என அழைத்தன.. காலையில் படகு வீட்டில் கால் வைத்ததிலிருந்து அந்த நிமிடம் வரை அவர்கள் ஹாலில் உட்காரவே இல்லை.. படுக்கையறையையும் குளித்து உடை மாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பயன் படுத்தினார்கள்.. அதற்குப் பின்பு அந்த அறைப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை..
எங்கும் தண்ணீர்.. அதில் மிதக்கும் படகுவீடு.. சுற்றிலும் பசுமை.. கரையோர வயல் வெளிகள், தீவுகள்.. தென்னந் தோப்புக்கள் என்று ஆலப்புலாவின் படகுவிடு பயணம் அற்புதமான காட்சிகளை அள்ளியள்ளித் தரும் போது அவற்றைப் பால்கனியில் உட்கார்ந்து ரசித்துப் பார்ப்பதை விட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்து.. படுக்கையறையின் ஏஸி குளிரில் இதமான நுரை மெத்தையில் அமிழ்ந்து தூங்குபவர்கள் பைத்தியக்காரர்கள் அல்லவா..
"டிவி பார்க்கலாமா..?" ரவிச்சந்திரன் கேட்டான்..
"இங்கே கேபிள் கனெக்சன் இருக்கா என்ன..? டிஷ் ஆண்டெனா வசதி படகு வீடுகளில் இருக்குமா..?"
"இரண்டுமே இல்லைதான்.. சி.டி போட்டுப் பார்க்கலாமே.. உனக்குப் பிடித்த சினிமாவை சூஸ் பண்ணிச் சொல்லு.. அதையே பார்க்கலாம்.."
ரவிச்சந்திரன் நீட்டிய சிடிக்களை வாங்கி அங்கிருந்த டீப்பாயில் வைத்த நந்தினி..
"அப்புறமா பார்க்கலாம்ங்க.." என்றாள்..
"இப்ப என்ன செய்யலாம்..?"
"ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாமா..?"
"இங்கேயா..?" சந்தேகமாய் கேட்டான் ரவிச்சந்திரன்.
"ம்ம்ம்.." அழுத்தமாக தலையாட்டினாள் நந்தினி..
"பயந்தியேடி.."
"இப்ப பயமில்லை பாஸ்.. பக்கத்திலேதான் நீங்க இருக்கிங்கள்ல.." அந்தப் பதில் அவனுக்குப் பிடித்த மானதாக இருந்தது..
"குட்.." என்றான்..
அவர்கள் இருவரும் படகு வீட்டை விட்டு இறங்கி நடந்தார்கள்.. வயல்வெளியைப் போல இருந்தது அந்த தீவுப் பகுதி.. ஆளரவம் இல்லை.. நந்தினிக்கு ஸ்வெட்டரையும் தாண்டிக் குளிர் தாக்கியது.. ரவிச்சந்திரன் ஒரே சால்வையை இருவருக்கமாக சேர்த்து போர்த்தி விட்டு அவளுடைய தோளில் கைபோட்டு நடந்தான்.. அவனது உடலின் கதகதப்பில் குளிர் குறைந்து விட்டது.. இருட்டிலும் தெரிந்த பசுமையான வயல் வெளியும் சிலுசிலுவென்ற காற்றும் நந்தினியைக் குழந்தையைப் போலக் குதூகலிக்க வைத்தன..
"டிபரண்டான எக்ஸ்பீரியன்ஸ் பாஸ்.."
"உனக்குப் பிடிச்சிருக்கா..?"
"ரொம்பப் பிடிச்சிருக்கு.."
"போட்-ஹவுஸையா..?"
"உங்களை.."
அவள் இந்தப் பதிலைத்தான் சொல்வாள் என்று அவனுக்குத் தெரியும்.. இந்த பதிலைத்தான் அவள் சொல்ல வேண்டும் என்று அவன் எதிர் பார்த்தான்
என்பது அவளுக்கும் தெரியும்.. தெரிந்தே அவன் கேள்வி கேட்டான்.. தெரிந்தே அவளும் பதிலைச் சொன்னாள்..
"என்னைப் பிடிச்சிருக்கா..? எவ்வளவுடி பிடிச்சிருக்கு..?"
"இவ்வளவு.."
அவள் கைகளை விரித்துக் காட்டினாள்.. அவன் அவளை அணைத்துக் கொண்டான்.. திரும்பி வரும்போது படகு வீட்டை முதலில் யார் தொடுவது என்று அவர்களுக்குள் போட்டி வந்தது.. சால்வையிலிருந்து வெளிப்பட்டு நந்தினி ஓடினாள்..
"ஏய்ய்.. நில்லுடி.."
அவளைத் துரத்திக் கொண்டு ஓடின ரவிச்சந்திரன் வெகு சீக்கிரத்தில் அவளை முந்திச் சென்று படகு வீட்டைத் தொட்டு விட்டான்.. மூச்சு இரைக்க, இரைக்க ஓடி வந்த நந்தினி..
"ம்ம்ம்.. இது கள்ளாட்டம் பாஸ்.." என்று தரையை கால்காளல் உதைத்துச் சிணுங்கினாள்..
"ஓடி வருகிற ஓட்டப் பந்தயத்தில கள்ளாட்டம் விளையாட என்ன இருக்கு..?" அவளை மடக்கினான் ரவிச்சந்திரன்..
இந்த நாள் இனிய நாள் என்று தோன்றியது நந்தினிக்கு.. அந்த இரவு.. ஆளில்லாத தனித்தீவு.. உடலைத் துளைக்கும் குளிர்காற்று.. பச்சைப் பசேலென்ற புல்வெளி.. அதில் அவளும் ரவிச்சந்திரனுமாக உலவிய உலாவல்.. ஓடிய ஓட்டப் பந்தயம்..!
இந்த விளையாட்டில் தோற்பதும் கூட சுகமான ஓர் அனுபவம்தான்.. வெற்றிக்குச் சமமானதுதான்..
ஹா, ஹா என்று மூச்சு விட்டபடி நந்தினி ஹாலில் இருந்த சோபாவில் சரிந்தாள்..
"இதோ.. இங்கே இருக்கிற இடத்தில இருந்து ஓடி வர முடியலை.. இப்படி மூச்சு இறைக்குது.. இதில் பேச விடு.. வயநாடுவரை உன் வாய் கேட்கும்.."
"ஆஹா.. இவர் பெரிய மௌனகுரு.. பேசவே மாட்டார்.. வாயைத் திறந்தா ஆர்டர் மழைதான்.. போடு தோப்புக்கரணம்ன்னா நாம எண்ணிக்கங்க.. சாரேன்னு காதைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்து எழுந்திருக்கனும்.. செம கம்மாண்டர்..! இதில என்வாயைப் பத்தி இவர் பேசறார்.."
"கம்மாண்டர்ன்னு வேண்டும்ன்னா சொல்லு.. மௌனகுருன்னு சொல்லாதே.."
"ஏனாம்..?"
"நான் உன்கூட வாழனும்னு ஆசைப்படறேண்டி.. சாமியாராய் போக ஆசைப்படலை.."
அவன் கண்சிமிட்டியதில் உதட்டைக் கடித்துக் கொண்டு விரல் நகங்களைப் பார்த்தாள் நந்தினி..
"என்ன படம் பார்க்கலாம்.. சொல்லுடி.."
அவளையே குறுகுறுவெனப் பார்த்தபடி சொன்னான் ரவிச்சந்திரன்.. அவன் முகம் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு கேசட்டை எடுத்து நீட்டினாள் நந்தினி..
"இந்தப் படம்ன்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமே.."
ஒரு தினுசாக அவன் வினவியதில் என்னடா இது என்று ஆகி விட்டாள் நந்தினி.. அப்படி எந்தப் படத்தின் சிடியை எடுத்துக் கொடுத்திருக்கிறாள்..?
ரவிச்சந்திரனின் கைகளில் சுழன்று கொண்டிருந்த சிடியின் பெயர் கார்டு 'பிரேமம்' என்று சிரித்தது..
'ஐயோடா.. இந்த சிடியையா எடுத்துக் கொடுத்துத் தொலைத்திருக்கிறேன்..?' அரண்டு விட்ட நந்தினி அழ மாட்டாத குறையாய்..
"பாஸ்.." என்றாள்..
"இந்த பாஸீக்கு மலர் டீச்சரைப் பிடிக்காதுடி.. நந்தினியைத்தான் பிடிக்கும்.. நீ மலர் டீச்சராகனும்னுதானே ஆசைப்படுகிற..?"
அவளுக்குச் சுருக்கென்று முள் தைத்ததைப் போல ஆகிவிட்டது..
'எப்படிப் பேசுகிறான்.. இவன் மட்டும் அஜந்தாவின் போட்டோவை வைத்திருப்பானாம்.. அதுக்கு ஒரு விளக்கத்தையும் செப்புவானாம்.. நான் கேணச்சியைப் போல அப்படிங்களான்னு நம்பிரனுமாம்.. இவன் என்னை நம்ப மாட்டானாம்..'
"நான் உன்னை என்னவோன்னு நினைத்தேண்டி.."
"வேண்டாம் பாஸ்.." இறுகிய முகத்துடன் சொன்னாள் நந்தினி..
"எது வேண்டாம்..?"
"இந்தப் பேச்சு.."
"ஓ.. நீ என்னைத்தான் வேண்டாம்ன்னு சொல்கிறியோன்னு நான் நினைத்தேன்.."
"நினைப்பீங்க.. நினைப்பீங்க.. ஏன் நினைக்க மாட்டிங்க.. கம்மாண்டராச்சே.. கண்டதையும் நினைக்கத்தான் செய்வீங்க.. உங்களை ஏன்னு கேட்க முடியுமா..?"
"கேளேன்.. ஏன்னு கேள்வி கேட்காதவளைப் போலப் பேசறா.. இப்பக் கூட அஜந்தாவின் போட்டோவை ஏன் வைத்திருந்தேன்னு கேள்வி கேட்டுத் துளைத்தவதானே நீ..? பேச வந்திட்டா.."
"நான் பேச வரலை பாஸ்.. வேணும்ன்னா அஜந்தாவையோ அந்தக் கிண்கிணியையோ பேச அனுப்பறேன்.."
"கிண்கிணியா..? யார் அது..?"
"எனக்கென்ன தெரியும்..? நீங்கதானே கோழிக் கோடில் அவளை மடியில் உட்கார வைத்துக் கொஞ்சிக் கிட்டு இருந்தீங்க..? உங்களுக்குத்தான் அவ யாருன்னு தெரிஞ்சிருக்கனும்.."
"ஓ.. தரங்கிணியைச் சொல்கிறியா..? ஹா.. ஹா.."
"அவ பெயரைச் சொல்லும் போதே சிரிச்சு மகிழ்ந்து போறிங்களே.. கீப் இட் அப்.. ஆம்பளையில்ல.. எதை வேணும்னாலும் பேசுவீங்க.. செய்வீங்க.. கேள்வி கேட்க யாரிருக்கா..?"
"நீயிருக்கயேடி.."
ரவிச்சந்திரன் சிடியைத் தூக்கி விட்டெறிந்து விட்டு அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.. கோபத்துடன் நந்தினி திமிறினாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -201
எண்ணியிருந்தது ஈடேற -201
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-201.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-201.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy