எண்ணியிருந்தது ஈடேற -200

200 ரவிச்சந்திரன் அவளை விட்டு முற்றிலுமாக விலகி நின்று விட்டான்.. ' விலகுகிறானே.. ' தவித்துப் போனாள் நந்தினி.. இந்தச் ச...


200


ரவிச்சந்திரன் அவளை விட்டு முற்றிலுமாக விலகி நின்று விட்டான்..
'விலகுகிறானே..' தவித்துப் போனாள் நந்தினி..
இந்தச் சிறு விலகலையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே.. அவன் நிரந்தரமாக விலகி விட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா..?
'ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன்..' மனம் நொந்த அதே வேளையில்..
'இந்தக் கேள்வியைக் கேட்காமலிருக்க முடியுமா..?' என்ற எண்ணமும் மனதில் எழுந்தது..
"அவ போட்டோ என்னிடம் இருந்ததை நீ எப்போது பார்த்த..?"
குற்றவாளியை விசாரிப்பதைப் போல புலன் விசாரணை செய்தான் அவன்..
'அடேங்கப்பா.. செய்வதையெல்லாம் இவன் செய்து விட்டு என்னை என்கொயர் பண்ண வந்துட்டானா..?' பழைய நந்தினியாக பொங்கினாள் அவள்..
என்னாங்கிற.. இப்ப என்னாங்கிற என்பதைப் போல அவனை முறைத்துப் பார்த்தவள்..
"மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் நாம கோழிக்கோடுக்கு ஜர்ன் பண்ணி வந்த போது பார்த்தேன்.." என்று எரிந்து விழுந்தாள்..
"ஓ.. இத்தனை நாளா அதைப்பத்தி எதுவும் கேட்காம மனதுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிற.."
"கேட்கிறதுக்கான ரைட்ஸ் இப்பத்தான் வந்திருக்குது பாஸ்.."
"கெட்டிக்காரிதாண்டி நீ.."
"இந்தக் கெட்டிக்காரியை நீங்க தத்தின்னு சொல்கிறதா ஞாபகம்..?"
"வாயெல்லாம் வயநாட்டைத் தாண்டிக் கிழியுதுடி.. புத்தி மட்டும்தான் இல்லை.."
"எப்படி இருக்கும்..? அதைத்தான் ஒட்டு மொத்தமா உங்க அத்தை மக ரத்தினம் விலைபேசி வளைச்சுப் போட்டுக்கிட்டாளே.."
"உன்னை.."
ரவிச்சந்திரன் கோபச் சிரிப்புடன் பல்லைக் கடித்து விட்டு..
"இந்த அஜந்தா ஒரு வேலையை பண்ணி வைச்சிட்டா.. என் எக்ஸ்போர்ட் கம்பெனியோட டெல்லி பிரான்சுக்கு மெயில் அனுப்பி சீக்ரெட் டீடெயில்ஸைக் கேட்டிருக்கா.. நீங்க யார்ன்னு அவங்க கேட்டப்ப என் வுட்-பின்னும் எக்ஸ்போர்ட் கம்பெனியை நான் இவ பெயருக்கு மாற்றி எழுதி விட்டதாகவும் சொல்லியிருக்கிறா.."
"மைகாட்.. இது எப்போ நடந்தது பாஸ்.."
"எதுடி..? இவ இந்த சதிவேலையை செய்ததா..?"
"ஊஹீம்.. நீங்க இவ பெயருக்கு எக்ஸ்போர்ட் கம்பெனியை எழுதி வைத்தது.."
"நினைத்தேன்.. உன் புத்தி இப்படித்தானே யோசிக்கும்..? எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறாயே.. அவ பெரிய உண்மை விளம்பி.. பாரு.."
"அப்ப நீங்க அவளுக்கு கம்பெனியை எழுதிக் கொடுக்கலையா..?"
"அதற்குத்தானே நான் வன்பாடு பட்டு சம்பாதிக்கிறேன்..? கோபத்தைக் கிளராம வாயை மூடிக்கிட்டு இருக்கிறயா.."
அதற்கு மேலும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் அடித்தாலும் அடித்து விடுவான் என்பதால் அவள் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்..
"டெல்லி பிரான்ச்சில இருந்து என்னிடம் பெர்மிசன் கேட்டு மெயில் வந்தது.. அப்போ நான் யூரோப் கண்டரிஸில இருந்தேன்.."
"நீங்க உலகம் சுத்தற பெருமையைப் பீற்றி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்க வேண்டாம் பாஸ்.."
"வா.. நீயும் நானும் சேர்ந்து உலகம் சுற்றலாம்.."
அவன் வாக்குவாதத்தை மறந்து அழைத்ததில் அவளது புன்னகை விரிந்தது.. அவனில்லாத வாழ்வை அவளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.. அவளில்லாத உலகை அவனும் நினைத்துப் பார்க்க மாட்டான் என்றே அவளுக்குத் தோன்றியது..
"முதலில் ஆலப்புழாவை சுத்தி முடிக்கலாம் பாஸ்.. படகு வீட்டுக்குள்ள வந்து பாதிநாள்கூட ஆகலை.. அதுக்குள்ளே உலகம் சுற்ற அழைச்சாச்சு.. ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.."
"யார்..? நீ..? தெரியாமல் கேள்வி கேட்கிற ஆள்..? போடி.. நீ தெரிந்தே கேள்வி கேட்கிற கில்லாடி.. யாரிடம் கதை விடுகிற..?"
"உங்களிடம் கதை விட்டுட்டாலும்.. கழுதையில.. நீங்க கேட்டுட்டுத்தான் வேற வேலை பார்ப்பீங்க.. போவிங்களா.."
"எங்கேடி போகச் சொல்கிற..?"
"நிச்சயமா அந்த அஜந்தாகிட்டப் போகச் சொல்லலை.. மனசிலாயி.. அவ ஏன் பாஸ் உங்க கம்பெனியோட சீக்ரெட் டீடெயில்ஸைக் கேட்டா..?"
"போட்டி கம்பெனிக்கு விலை பேசியிருக்கலாம்.."
"அடிப்பாவி.. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வாளா..?"
"அவ எதையும் செய்வா.. எதற்கும் அஞ்சாதவ.. நான் இந்தியாவுக்கு வர நாளாகும்ங்கிற தைரியத்தில எக்ஸ்போர்ட் கம்பெனியோட டெல்லி பிரான்ச் மேனேஜரை நேரடியா மீட் பண்ணியிருக்கா.. அவங்க நம்புகிறதைப் போலப் பேசியிருக்கிறா.. உடனே அந்த டீடெயில்ஸ் வேண்டும்ன்னு அவங்களை அவசரப் படுத்தியிருக்கிறா.."
"வயநாட்டு அரண்மனையை விட்டு எப்படி டெல்லி வரை போனா..? வீட்டில யாரும் அவளை எங்கே போகிறான்னு கேட்கவே இல்லையா..?"
"அவந்திகா அத்தையும் இதில கூட்டு.. குடும்பத்தோடு யோகானந்தன் மாமாவோட சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்குப் போகனும்ன்னு காரணம் சொல்லிட்டு டெல்லிக்கு பிளைட் பிடிச்சுட்டாங்க.. மாமா சைடு சொந்தம்ன்னா தாத்தா, பாட்டி தள்ளியே நின்றுக்குவாங்க.. அந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணியிருக்காங்க.."
"அதிலெல்லாம் கெட்டிக்காரங்களாச்சே.."
"நான் அவங்களை விடக் கெட்டிக்காரன்.. உலகம் முழுவதும் என்னோட பிஸினெஸ் பரவியிருக்கு.. எல்லா பிஸினெஸ்ஸையும் என் விரல் நுனியில் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறேன்.. எனக்குத் தெரியாம ஒரு சிறு துகள் கூட நகராது.. யோகானந்தனின் மகளுக்கு இது தெரியலை.."
'இவன் சூப்பர் மேன்..' நந்தினிக்குப் பெருமையாக இருந்தது..
"என்னோட கம்பெனியின் பிரான்ச் மேனேஜர் இம்மீடியட்டா எனக்கு மெஸேஜ் பண்ணிட்டார்.. எந்த டீடெயில்ஸையும் லீக் அவுட் பண்ணக் கூடாதுன்னு
நான் ஆர்டர் போட்டதை அவளிடம் சொன்ன அடுத்த செகண்டில அவ எஸ்கேப் ஆகிட்டாளாம்.. அவளோட போட்டோவை மெயிலில் அனுப்பி இவதானா அவன்னு கேட்டேன்.. ஆமாம்ன்னு பதில் வந்தது.. அவளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினேன்.. இல்லவே இல்லைன்னு அவ சாதிச்சா.. அவமேல வேண்டும்ன்னே பழி போடறேன்னு பிளேட்டை என் பக்கம் திருப்பி விட்டுட்டா.. தாத்தா, பாட்டி வருத்தப் பட்டாங்க.. தெரிந்த கதைதானேன்னு விட்டுத் தொலைத்தாலும் என்னோட பிஸினெஸ் சம்பந்தமா எந்த டீடெயில்ஸையும் கறக்க முடியாதுன்னு அவளை வார்ன் பண்ணிட்டுத்தான் விட்டுத் தொலைத்தேன்.. அந்த மெயிலை அனுப்புகிறதுக்காக ஸ்டோர் பண்ண வைத்திருந்த போட்டோ அது.."
அவனது நீண்ட விளக்கம் இட்டுக் கட்டியதாக இல்லாமல் வெகு இயல்பானதாக இருந்தது.. நந்தினியின் மனம் தெளிந்தது..
'இப்பேற்பட்ட கீழ்த்தரமான குனம் படைத்தவ பேரழகியா இருந்தாலும் இவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்..'
ரவிச்சந்திரனின் குணாதிசியத்தைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால் நிம்மதியானாள் நந்தினி.. விலகி நின்றிருந்தவனின் பக்கத்தில் நெருங்கி கைகளை அவன் கழுத்தில் போட்டு மாலையாக்கி அவனைக் காதலுடன் பார்த்தாள்..
"சந்தேகம் தீர்ந்துருச்சா..?" என்றான் அவன்..
"அஜந்தாவைப் பற்றிய சந்தேகம் தீர்ந்துருச்சு.. பட்.. நான் உங்களுக்கு பெர்பெக்ட் மேட்ச்சா இருக்கிறேனாங்கிற சந்தேகம் மட்டும் தீரலை.. தீரவும் தீராது.." என்றாள் அவள்.
"ஏண்டி படுத்தற..?" ஆற்றாமையுடன் கேட்டான் ரவிச்சந்திரன்..
"ஏண்டா இத்தனை அழகாய் இருக்கிற..?" பதிலுக்கு ஆற்றாமைப் பட்டாள் நந்தினி..
"என்ன சொன்ன..? 'டா' வா..?" அவன் கண்கள் மின்னின..
வெகு நேரமாக காணாமல் போயிருந்த மின்னல் வந்து அவன் கண்களில் உட்கார்ந்ததில் திருப்தி அடைந்தாள் நந்தினி.. காதலியுடன் கொஞ்சிக் குழாவ ஆலப்புழாவின் படகு வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனைக் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கடுப்பைக் கிளப்பி விட்ட குற்ற உணர்வுடன் இருந்தவளுக்கு அவனது சந்தோசம் மீண்டு விட்டதில் சந்தோசமாகி விட்டது..
"ஆமாண்...டா.." அழுத்தமாக 'டா..' போட்டாள்..
"அடி கள்ளி.." அவன் கள்ளூரும் சிங்கமானான்..
அனைத்து மனக்கிலேசங்களும் மறந்து போனவளாக அவனது ஆலிங்கத்தில் அடங்கிப் போனாள் நந்தினி.. வெகு நேரம் கழித்து அவளை விடுவித்தவன் கலைந்திருந்த அவளது முடியைக் கோதி விட்டு நெற்றியிலே முத்தமிட்டான்..
நந்தினி சரிந்து அவன் தோளில் சாய்ந்து அவனது சட்டை பொத்தான்களைத் திருக ஆரம்பித்தாள்..
"அது சரிடி.. என் பாட்டி, அத்தை, அஜந்தான்னு வரிசை கட்டி அவங்களை விட நான் அழகான்னு கேட்டியே.. என் அம்மாவையும், ரம்யாவையும் ஏன் சொல்லலை..?" அவளது முகம் நிமிர்த்திக் கேட்டான் அவன்..
அவள் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தவளின் விழிகளில் எல்லையற்ற பிரியம் குடி கொண்டது..
"அத்தையையும், ரம்யாவையும் விட நான் அழகாயிருக்கனும்னு ஆசைப்படலை பாஸ்.. ஆசைப் படவும் மாட்டேன்.."
"ஏண்டி..?"
"அது அப்படித்தான்.. நீங்க பேரழகன்னா, அத்தை பேரழகி.. ரம்யா அந்த தேவதையின் மடியில் உதித்த அன்புத் தேவதை.. தேவதைகளுக்கு நிகரில்லை பாஸ்.. நானும் அவங்களுக்கு நிகரில்லை.."
அவள் பேசப்பேச ரவிச்சந்திரனின் விழிகள் பிரகாசித்தன.. அது ஏன் என்று அவளுக்குத் தெரியவில்லை.. விழிகள் பளபளக்க..
"என் அம்மாவின் நம்பிக்கையைக் காப்பாத்திட்டடி.." என்றான்..
"அத்தை என்னை நம்பினாங்களா..? எப்போ..? எதுக்கு..?"
ரவிச்சந்திரன் அவளை இழுத்து அணைத்துக் கரையோரத் தீவைச் சுட்டிக் காட்டினான்.. அந்தத் தீவின் இயற்கையழகில் வீணாவைப் பற்றிய கேள்வியை மறந்து போனவளாக ஆவலுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் நந்தினி..
சுற்றுப்புற அழகை ரசிக்கத் தோதாக படகுவீடு மெதுவாக மிதந்து சென்று கொண்டிருந்தது.. மதிய உணவு உண்ண அழைப்பு வந்தது.. ரவிச்சந்திரனும் நந்தினியும் இறங்கி டைனிங் ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.. அழகானதொரு அரண்னையின் விருந்து மண்டபத்தில் அமர்ந்திருப்பதைப் போல நந்தினிக்கு இருந்தது..
சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், அப்பளம், பொறித்த மீன், பச்சடி, மீன்குழம்பு, மீன் பொரியல்.. என்று மதிய உணவு சைவமும் அசைவமும் கலந்து வெளுத்துக் கட்டியது..
பளபளப்பான நீண்ட டைனிங் டேபிள் வழவழப்பாகவும் இருந்தது... உயர்தரமான பீங்கான் தட்டுக்கள்.. மிதந்து செல்லும் படகில் தண்ணீரை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்தபடி சாப்பிடும் அனுபவம் அருமையான அனுபவமாக இருந்தது..
நந்தினி ரவிச்சந்திரனுக்குப் பரிமாறினாள்..
"அசத்தறடி.." கேலி செய்தாலும் அவள் பரிமாறிச் சாப்பிடுவதை அவன் விரும்பினான்..
"நீயும் சாப்பிடு.."
அவன் வற்புறுத்தியதில் சாப்பிட ஆரம்பித்தாள்..
சாதம், மீன்குழம்பு, பொறித்த மீன், பச்சடி, மீன் பொரியல் என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டவள் சாம்பார், கூட்டு, பொரியல், அப்பளத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை..
"இதில இவ எப்படிக் கைகழுவினாலும் மீன்வாசனை போக மாட்டேன் என்கிறதாம்.. இப்படி மீன் வெரைட்டிஸா மொக்கினா மீன் வாசம் எப்படிப் போகும்..?" வைத்துக் கேலி செய்து தீர்த்து விட்டான் ரவிச்சந்திரன்..
உண்ட மயக்கம் தீர முன் பக்க பால்கனிக்கு வந்தவர்கள் படுத்துக் கொள்ளும் வகையில் கைபிடி இல்லாமல் நீண்டிருந்த சோபாக்களில் படுத்து திண்டை இழுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டார்கள்.. படுத்தபடி நீரை வேடிக்கை பார்ப்பது அற்புதமாக இருந்தது..
கடந்து சென்ற ஓடங்களைக் கவனித்த நந்தினி அங்கே வீட்டுக்கு ஒரு சைக்கிள் நிற்பதைப் போல வீட்டுக்கு ஒரு ஓடம் இருக்கும் என்பதை நினைவு படுத்திக் கொண்டாள்..
"கடை கண்ணிக்கு போய் வர ஓடத்தை எடுன்னு இவங்க பேசிக்குவாங்கள்ல.." ஒருக்களித்துப் படுத்து எதிர் பக்க சோபாவில் படுத்திருந்த ரவிச்சந்திரனிடம் கேட்டாள்..
"கடைக்குப் போய் வருகிறதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அது என்ன 'கண்ணி'க்கு போய் வருகிறது..?"
"கண்ணி வைக்க பாஸ்.."
"நீ கண்ணி வைப்பியா..?"
"நந்து வைப்பான்.. கண்ணி வைத்துப் பிடிக்கிறதில அவன் செம கில்லாடியாக்கும்.."
பேசிக் கொண்டிருந்தவள் திடிரென மௌனமாகி விட்டதில் அவளுக்கு வீட்டு நினைவு வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டான் ரவிச்சந்திரன்.. எழுந்து அவளருகில் வந்து தலைமாட்டில் அமர்ந்து, அவள் தலைக்கு வைத்திருந்த திண்டைத் தூக்கிக் கடாசி விட்டு அவள் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு தலைகோதி விட்டான்..
அண்ணாந்து அவன் முகம் பார்த்த நந்தினியின் கண்கள் கலங்கியிருந்தன..
"என்னடி..?" இதமாக வினவினான்..
"நந்துக்கு போட்டிங் போகிறதுன்னா ரொம்பப் பிடிக்கும் பாஸ்.. இந்த படகு வீடு ஜர்னியில் அவனும் இருந்திருந்தா நல்லாயிருக்கும் இல்ல..?"
'இவளை என்னதான் செய்வது..?'
காதலனும், காதலியுமாக வருபவர்கள் தம்பியையும் உடன் அழைத்து வருவார்களா..? அதைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கண்ணீர் விடும் தன் காதலியின் குழந்தைதன்மையில் மனதைப் பறி கொடுத்தான் ரவிச்சந்திரன்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -200
எண்ணியிருந்தது ஈடேற -200
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-200.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-200.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy