எண்ணியிருந்தது ஈடேற -199

199        "சொக்குப் பொடி மீனாட்சி - உன்              சொக்கநாதன் நான்தாண்டி.." ரவிச்சந்திரன் பாடலில் கன்னம் சிவந்தா...


199


       "சொக்குப் பொடி மீனாட்சி - உன்
             சொக்கநாதன் நான்தாண்டி.."

ரவிச்சந்திரன் பாடலில் கன்னம் சிவந்தாள் நந்தினி.. அவளுடைய சொக்கநாதன் ஆளை மயக்கும் அதீத பேரழகனாய் இருந்தான்.. இவன் மனதில் நானா என்ற பிரமிப்பு அவள் மனதில் எழுந்தது..
"பாஸ்.."
"சொல்லுடி.."
அவளது கன்னத்தில் அவனது உதடுகள் உரசின.. கண்மூடிக் கிறங்கிய நந்தினி பேசத் தடுமாறினாள்.. அவளது இதழ்களை வருடிக் கொடுத்தான் அவன்.. அவளை பேச் சொல்லி ஊக்கப் படுத்தினான்..
"பேசுடி.."
"ஆர் யு ஷ்யூர்..?"
தடுமாறினாள் நந்தினி.. அவள் எதைப் பற்றிக் கேட்கிறாள் என்று புரியாமல் புருவங்களை உயர்த்தி அவளது தடுமாற்றத்தை அதிகப் படுத்தி அலைக்கழித்தான் ரவிச்சந்திரன்..
"இப்படிக் கேட்டா எதைன்னு நான் மீன் பண்ணிக்கிறது..? மீன் சாப்பிட்டா மீனிங்கே இல்லாமப் பேசனும்னு 'லா' எதுவும் இல்லைடி.."
"ம்ப்ச்.. நான் அதைச் சொல்லலை.."
"வேற எதைச் சொல்ற..? மீன் வாசம் போகலைன்னு நீ கவலைப்பட்டதுக்கு நான் சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டுக் கேட்கறியா.. ஹா.. ஹா.. அது கிண்டலுக்குன்னு சொன்னதுடி.. நீ குழந்தைடி.. சீரியஸா முகத்தை வைத்துக்கிட்டு நான் சொன்னதை டீச்சர் சொல்கிறதை ஸ்டூடண்ட் கேட்டுக்கிறதைப் போல முகத்தை வைத்துக்கிட்டு நீ கேட்டது இருக்கே.. ஹா.. ஹா.. யு ஆர் ஸோ ஸ்வீட் நந்தினி.."
கொஞ்சியபடி அவளது இதழ்களில் அவன் முத்தமிட அவளுக்கு 'ஜிவ்' வென்று ஆகிப் போனது..
"பாஸ்.." கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் அவளுக்கு மூச்சுத் திணறியது..
ஆழ்கடலின் சுழலில் அகப்பட்டுக் கொண்ட துரும்பினைப் போல அவள் அலை பாய்ந்தாள்.. அலைகடலின் மீது படகு ஆடுவதைப் போல அவளது மனம் அல்லாடியது.. அவள் மீதான அவனது பிரேமம் (காதல்) உண்மையானதுதானா என்று அவளுக்குத் தெரிய வேண்டியிருந்தது..
அதையறியாத ரவிச்சந்திரன் அவளைக் கட்டியனைப் பதிலும் கொஞ்சிக் குழாவுவதிலும் கவனம் செழுத்திக் கொண்டிருந்தான்..
அவன் உறுதியானவன்.. அவள் மீதான அவனது காதல் நிலையானது என்பதை அவன் அறிவான்.. அவனது காதலை அவள் ஏற்றுக் கொள்ளாத போதே
அவன் அவளை விட்டுக் கொடுத்ததில்லை.. விட்டு விலகியதில்லை.. அவனை அவள் காதலிப்பாளா, மாட்டாளா என்று சந்தேகம் கொண்டதில்லை.. நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.. என் காதலி நீதான்.. இதுதான் அவனது நிலைப்பாடாக இருந்தது..
அப்படிப்பட்டவன் அவன் மீதான அவளது காதலை அறிந்த பின்னால் விட்டு விலகி நிற்பானா..?
"என்ன நந்தினி..?" அவளது முடிகோதி வினவினான்.
அவளது மூச்சுத்திணறலில் புருவம் உயர்த்திக் கிறங்கடித்தவன்..
"ஹேய்.. கிண்டலுக்குச் சொன்னதையெல்லாம் மனதில் போட்டு உழட்டிக் கொண்டிருப்பியா..? இது கேரளாடி.. மீன்தான் இம்பார்ட்டண்ட் ஃபுட் அயிட்டம்.. இங்கே பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர்ன்னு மூன்று வேளைச் சாப்பாட்டிலும் மீன் வெரைட்டிஸ் இருக்கும்.. இதில் மீன் வாசம் போகலைன்னு நீ வருத்தப்பட்டா எனக்குச் சிரிப்பு வராதா..?" என்று சமாதானப் படுத்த முயன்றான்..
"என் கொஸ்டினே வேற பாஸ்.."
"என்னதாண்டி உன் பிராப்ளம்..? என்ன கொஸ்டின் பண்ணின..?"
"நீங்க.. நீங்க.."
"நான்..? நான்..?"
"பாஸ்.."
கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் தவித்தாள் நந்தினி.. எப்படிக் கேட்பது..? அவளிடம் அவன் மனதாரக் காதல் சொன்னான்.. அவளோ அவன்மீது உயிரையே வைத்து விட்டாள்.. இருவருமாக தனிமையைத் தேடி ஆலப்புழாவின் வேம்பனாடு அருவியில் படகு வீட்டில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.. இப்போது போய் மனதில் எழும் சஞ்சலத்தை கேள்வியாக கேட்டு வைக்கிறாளே.. அவன் அதை என்னவென்று எடுத்துக் கொள்வானோ.. இந்த அளவுக்கு நெருக்கமான பின்னும் அவனை அவள் சந்தேகிக்கிறாள் என்று எடுத்துக் கொள்ள மாட்டானா..?
அவளது தவிப்பையும் தயக்கத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்தவன்..
"ஹேய்.. நீ யாடி இது..? ஐ கான்ட் பிலிவ் திஸ்.. மனதில் உள்ளதை மறைக்காமல் பேசிவிடும் நந்தினி எங்கே ஒளிந்து கொண்டாள்..? இந்த பயந்தாகுளி நந்தினி எங்கிருந்து வந்தாள்..? ம்ம்ம்..?"
"அது இல்ல பாஸ்.."
நந்தினி அவன் மார்பில் சாய்ந்து விழி மூடிக் கொண்டாள்.. அவனது கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.. அவளது உச்சந்தலையில் முகம் புதைத்து அசையாமல் அவன் நின்றான்..
"உன் மனது அமைதியில்லாம ஏன் தவிக்குது நந்தினி..? மென்மையாக வினவினான்.."
அமைதியைத் தேடி அவனிடம் அவள் அடைக்கலம் புகுந்திருப்பதை உணர்ந்தவனாக அவன் இதமாக வினவியதில் அவள் மனம் நெகிழ்ந்தாள்..
'இதுதான் இவன்.. என் ரவிச்சந்திரன்..'
அவனருகில் இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.. மலையளவு தைரியம் மனதுக்குள் வந்து விடுகிறது..
'எப்போதும் எனைப் பிரியாமல் கூடவே இருப்பானா..?'
அவளுக்குள் கலக்கம் வந்தது.. அவன் அவளை விட்டுப் பேகாமலிருக்க வேண்டுமே என்ற பயத்துடன் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.. அவளது அணைப்பு காதலின் வெளிப்பாடாக இல்லாமல் அவளது மன நடுக்கத்தின் வெளிப்பாடாக இருப்பதை புரிந்து கொண்டவனாக அவன் அவளது முதுகில் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்த முயன்றான்..
"ஹேய்.. நந்தினி.. என்னைப் பாருடி.."
"ஐ லவ் யு பாஸ்.."
'இதைக் கேட்கத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்..'
"ஐ லவ் யு ஸோ மச் நந்தினி.." என்றான்..
"ஆர் யு ஷ்யூர்..?"
ஆழ்ந்த அவளது கேள்வியில் புருவங்கள் சுருங்க யோசனையானான் ரவிச்சந்திரன் இதே கேள்வியைத்தான் அவள் சற்று முன்பும் கேட்டாள் என்பதில் அவளது யோசனை அதிகமானது... அவன் மார்பில் சாய்ந்திருந்தவளை விலக்கி நிறுத்தி கூர்ந்து பார்த்தான்..
"என் காதலை சந்தேகப் படறியா..?" நிதானமாக கேட்டான்..
"தெரியலை பாஸ்.." தேம்பினாள் நந்தினி..
"ஏய்ய்.. ம்ப்ச்.. கிட்ட வா.."
மனதை மறைக்காமல் சொல்லி அழுகிறவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று மனதுக்குள் ஆழ்ந்து சிந்தித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்தான்.. அவன் பேசுமுன் அவள் பேசினாள்..
"உங்க காதலை நான் சந்தேகிக்கிறேனா இல்லையான்னு எனக்குத் தெரியலை பாஸ்.. பட்.. என்னோட காதல் உண்மையானது.. எனக்குக் காதலிக்கவும் தெரியாது.. காதல்ன்னா எப்படியிருக்கும், அது கருப்பா, சிவப்பான்னும் தெரியாது.. அப்படிப் பட்டவ உங்களை உயிருக்குயிரா காதலிக்கிறேன் பாஸ்.. இப்ப எனக்குக் காதலிக்கவும் தெரியும்.. காதல்ன்னா என்னன்னும் தெரியும்.. உங்களைக் காதலிக்கக் காதலிக்க உங்க காதல் உண்மையானது தானாங்கிற பயம் எனக்கு அதிகமாகுது பாஸ்.."
"ஏண்டி..? என்னை ஏமாற்றுக்காரன்னு நினைக்கறியா..?"
"எனக்கு ஏமாற்றம் வந்திருமோன்னு பயப்படறேன்.. நீங்க எங்கே..! நான் எங்கே..?"
"வொய்..? நான் எங்கேயிருக்கிறேனோ அங்கேதான் நீயும் இருக்கிறாய்.."
"இல்லை பாஸ்.. நீங்க படா ஹேண்ட்சம் மேன்..! பிக் பெர்சனாலிட்டி.. உங்க பக்கத்தில் நிற்கக்கூட, ஏன் உங்க நிழலுக்குப் பக்கத்தில் வரக்கூட எனக்குத் தகுதி கிடையாதுன்னு இன்பீரியரா ஃபீல் பண்றேன் பாஸ்.."
"முட்டாள்.."
ஆத்திரத்துடன் சிரித்தான் ரவிச்சந்திரன்.. அழகின் வடிவமாய் அவனை அலைக்கழித்தவள் அழகில்லையாம்.. அவளுக்காக, அவளது காதலுக்காக ஏங்கியவனின் நிழலுக்கு அருகே வரக்கூட அவளுக்குத் தகுதியில்லையாம்.. தாழ்வு மனப்பான்மை வருகிறதாம்.. புலம்புகிறாள்..
'இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸா..? இவளுக்கா..?'
ரவிச்சந்திரனுக்கு எங்கு போய் முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.. காதலைச் சொல்லாமல் அவனைக் கலங்கடித்து காத்திருக்க வைத்து ஒரு வழியாய் காதல் சொல்லியிருப்பவள் சந்தோசமாய் அவனுடன் டூயட் பாடிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு இப்படிப் புலம்பித் தள்ளுகிறாளே..
"அடித்தேன்னா பாரு.. இப்படிக் கூட நீ பினாத்துவியா..?"
"பாஸ்.."
"அழாதே.. அழாதேன்னு சொல்கிறேனில்ல..?"
அவன் அதட்டிய அதட்டலில் அவள் அழுகையை அடக்கிக் கொண்டாள்.. கைகளை விரித்து..
"வா.." என்றான்..
வந்தாள்.. அவனது கைகளுக்குள் புகுந்து கொண்டாள்.. அவனது இறுக்கமான அணைப்பில் அடங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.. சிறு குழந்தைக்குச் சொல்வதைப் போல அவள் மனதில் பதியும்படி ஆழ்ந்த குரலில் அவன் எடுத்துச் சொன்னான்..
"உன் கண்களுக்கு நான் அழகனா இருப்பதில் சந்தோசம்டி.."
"நீங்க அழகன்தானே பாஸ்.. பேரழகன்.."
"தேங்க் யு.."
மகிழ்ந்து போனவனாக அவளது நெற்றியில் முட்டினான்..
"தட் ஸேம் டைம்.. என் கண்களுக்கு நீ மட்டும் தாண்டி அழகாய் தெரிகிற.."
"உங்க கண்களை திறமையான கண்டாக்டர்கிட்டக் காட்டி இம்மீட்டியட்டா செக் பண்ணிக்கங்க பாஸ்.." சிரிக்காமல் சொன்னாள் நந்தினி..
"ஹா.. ஹா.." என்று சிரித்து வைத்தான் ரவிச்சந்திரன்..
"நீ அழகிடி.."
"பொய்.."
"மெய்.."
"உங்க பாட்டியை விட அழகா..?"
"ம்ம்ம்..? இதிலென்ன சந்தேகம்..? பாட்டி பாரபட்சம் பார்ப்பாங்க.. மகனுக்கு ஒரு நியாயம்.. மகளுக்கு ஒரு நியாயம்ன்னு சொல்வாங்க.. மகளை வீட்டோட வைத்துக்குவாங்க.. மருமகளை அடிமையாய் நினைப்பாங்க.. குடும்பத்தோட அதிகாரம் அவங்க கையில் மட்டும்தான் இருக்கனும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க.. கூட்டிக் கழித்துப் பார்த்தா அவங்களிடம் குறைகள்தான் அதிகமிருக்கும்.. அந்தக் குறைகளே அவங்களோட அழகைக் குறைத்துக் குரூரமானவங்களா காட்டி விடும் நந்தினி.. அவங்களை விடக் கள்ளமில்லா வெள்ளை மனது கொண்ட நீ பேரழகிடி.."
"ஆர் யு ஷ்யூர்..?"
"இந்த மூன்று வார்த்தைகளை விடவே மாட்டியா..? ஐ ஆம் ஷ்யூர் எபௌட் தட் நந்தினி.. போதுமா..?"
"போதாது பாஸ்.."
"இன்னும் என்னடி..?"
"உங்க அத்தை அவந்திகாவை விட நான் அழகா..?"
"கேட்டியே ஒரு கேள்வி.. ஏண்டி.. அவங்களாலே என் குடும்பம் படுகிற துன்பம் கொஞ்ச நஞ்சமா..? பெருந்தன்மையான பாட்டியை குரூரமானவங்களை மாத்தியதே இந்த சூனியக்கார அத்தைதானேடி..? அவங்களோடு உன்னை ஒப்பிடறதே தப்பு.. இதில கேள்வி வேற கேட்கிற.. அடச்சீ.. அடங்கு.."
"ஊஹீம்.."
"அடங்க மாட்ட..?"
"மாட்டேன்.. அஜந்தாவை விட நான் அழகா பாஸ்..?"
மனம் படபடக்க இந்தக் கேள்வியைக் கேட்டாள் நந்தினி.. இதற்கான பதிலை அவள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது..
ரவிச்சந்திரன் அவளை உண்மையாக காதலிக் கிறானோ இல்லையோ.. நிச்சயமாக பொய்யுரைக்க மாட்டான் என்று அவள் நம்பினாள்.. ஆமாம்.. நீ என் காதலை மறுத்தாய்.. உன் மனதை வென்று காட்ட வேண்டும் என்ற சவாலுக்காகத்தான் நான் உன்னிடம் என் காதலை வற்புறுத்தினேன் என்று சொன்னாலும் சொல்லி விடுவான்.. பொய்யாக அவள் மனதில் நம்பிக்கையை விதைக்க மாட்டான்..
அஜந்தா நந்தினியிடம் ரவிச்சந்திரன் அவளைக் காதலிப்பதாகச் சொல்லியிருந்தாள்.. அஜந்தாவின் வார்த்தை நம்பத் தகுந்ததாக இருக்காது என்று நந்தினி அதை ஒதுக்கித் தள்ளியிருந்தாலும் மனதின் ஓர் மூலையில் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்து கோழிக் கோடுக்கு வந்து கொண்டிருந்த போது ரவிச்சந்திரனிடம் அஜந்தாவின் புகைப்படம் இருந்ததை படர்த்த நினைவு நெருஞ்சி முள்ளாக நிரடிக் கொண்டிருந்தது.. ரவிச்சந்திரன் எதற்காக அஜந்தாவின் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும்..? அத்தை மகள் என்ற பாசமா..? அது இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டதே..
"எப்படி நந்தினி இப்படியொரு கேள்வியைக் கேட்கிற..?" நம்ப முடியாதவனாக கேட்டான் ரவிச்சந்திரன்..
"அவ அழகு பாஸ்.."
"ம்ப்ச்.. பேசாதே.. அவந்திகா அத்தையைக் கூட ஒரு வழியில் சேர்த்து விடலாம்.. இந்த அஜந்தா இருக்கிறாளே.. இவளை எதிலும் சேர்க்க முடியாது.. கடைந்தெடுத்த வில்லி.. பாட்டியையும் அத்தையையும் பாய்சனா ஆக்கி வைச்சிருக்கிறா.. அவளைப் போய் அழகு என்கிறாயே.."
"அவ அழகில்லைன்னா அவ போட்டோவை எதுக்காக வைத்திருந்தீங்க பாஸ்..?"
நந்தினி கேட்டு விட்டாள்.. அவளால் மனதில் அதை மறைத்து வைத்துக் கொள்ள முடியவில்லை.. நெருஞ்சி முள்ளின் நெருடலோடு அவனிடம் ஒட்டி உறவாட முடியாது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -199
எண்ணியிருந்தது ஈடேற -199
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-199.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-199.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy