எண்ணியிருந்தது ஈடேற -198

198 அலையடிக்கும் நீரில் மிதக்கும் படகில்.. அலைபாயும் மனங்களோடு காதல் உணர்வில் மிதந்து கொண்டிருந்தவர்கள் பேசிக் கொள்ளும் பேச்சா இது.. ? ...


198
அலையடிக்கும் நீரில் மிதக்கும் படகில்.. அலைபாயும் மனங்களோடு காதல் உணர்வில் மிதந்து கொண்டிருந்தவர்கள் பேசிக் கொள்ளும் பேச்சா இது..? சற்றுப் பொழுதுக்கு முன் நந்தினியும் காதல் உணர்வில் மிதந்து கொண்டிருந்தவள்தானே.. ரகசிய சிநேகிதனிடம் ரகசியமாய் காதல் பாடலைப் பாடிக் கொண்டிருந்தவள் தானே.. சில நொடிகளில் அவளை வேறு உணர்வு வசப்படுத்த முடியுமானால் அது உணவின் ருசி மணத்தைத் தவிர வேறாக இருக்க முடியுமா..?
"ஹோட்டல் பிஸினெஸ் பண்ணுகிறவர்தான் முதலில் சமையல் வாசனையை ஸ்மெல் பண்ணியிருக்கனும் பாஸ்.. ஸ்மெல்லிலேயே தெரியுது பாருங்க.. இது செமத்தியான டேஸ்ட்டா இருக்கும்ன்னு.."
"ஹோட்டலில ஃபுட்டை மட்டும் கவர் பண்ண மாட்டோம் நந்தினி.. அதைப் பற்றியெல்லாம் உனக்குச் சொன்னாப் புரியாது.."
"பட்.. சாப்போட்டோட ருசியை உணர்த்தும் வாசனை அப்படியில்லை பாஸ்.. அது அறிவு ஜீவிகள், தத்திகள்ன்னு வித்தியாசம் பார்க்காத பொதுவுடமைத் தத்துவத்தை ஃபாலோ பண்ணுவது.."
"இதைப் பத்தி பேசச் சொன்னா மணிக்கணக்கா லெக்சர் எடுப்பியே.."
"இதை விடுங்க பாஸ்.."
"இதைச் சொன்னது நீதானா நந்தினி..?"
"என்ன ஆச்சாம்..? இதைப் பத்தின பேச்சைத்தான் விடச் சொன்னேன்.. மனசிலாயி.."
"அதானே பார்த்தேன்.. யார் நீ..?"
"நந்தினி.."
அவனைப் போலவே அவள் புருவங்களை உயர்த்தி இறக்கி வசீகரித்ததில் அவனது விழிகள் மின்னின.. அவளை அவன் நெருங்க.. அவள் அவனது மார்பில் கை வைத்துத் தள்ளி விட்டுக் கலகலத்துச் சிரித்தாள்..
"நந்தினி.."
வெகு சாதாரணமாக அவள் உச்சரித்த அவளது பெயரை படு போதையுடன் அவன் உச்சரித்தான்.. உதட்டைக் கடித்தபடி நின்றவளை அவன் நெருங்க.. அவள் விலகாமல் கண்மூடி நின்றாள்.. அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி அவளது கன்னத்தில் அவன் முத்தமிட்ட போது கண்மூடிக் கொண்டாள்..
அள்ள அள்ளக் குறையாத நீருற்று போன்றது காதல்.. அது வற்றாத ஜீவ நதி.. கடல் போன்றது.. வானம் தொடுவது.. வரையறைகளைத் தகர்ப்பது.. வாழ்ந்து விடத் துடிப்பது..
'இப்படி நான் ஆனதில்ல..
             புத்தி மாறிப் போனதில்ல..'
அடி ஆத்தாடி என்று அவள் மனதில் பேரலையொன்று அவள் மனதில் ஓங்கி அடித்தது.. அவள் அதில் அடித்துச் செல்லப்பட்டாள்.. விழிகளில் நீர் அரும்பியது... எதற்கென்று தெரியவில்லை... கண்டிப்பையும் கோபத்தையும் காட்டும் அந்தக் கம்மாண்டரின் விழிகளில் கொட்டிக் கொண்டிருந்த காதல் உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சியில் இறங்க அவளுக்கு மனமில்லை.. அது உண்மைதான் என்ற தீர்மானத்தில் அவள் உறுதியாக இருந்தாள்.. அது பொய்யென்றால் அவள் பூமியில் புதைந்து போய் விடுவாள்..
"என் ரவி.."
அவளது இந்த முணுமுணுப்பிற்குத்தான் எத்தனை சக்தி..! அவன் ஆவேசம் கொண்டவனாக அவளது முகமெங்கும் முத்தங்களைப் பதித்து விட்டுக் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.. பினைந்து நின்ற இருவரின் மனங்களும் காதலில் பினைந்திருந்தன..
கரையோர தென்னந்தோப்புகளையும், வயல் வெளிகளையும் கடந்து சென்று கொண்டிருந்தது படகு.. ஆங்காங்கே தெரிந்த தீவுகளில் வாய்க்கால்கள் ஓட..
அதில் கால் பதித்து பறந்த பறவைகளின் கூட்டம் மனதுக்குள் குதூகலம் நிரம்பிய புத்துணர்வை விதைத்தன.. தொலைவில் அந்த தண்ணீர் தேசத்தில் ஒற்றை வீடு தெரிந்தது..
"ஒற்றைப் பனைமரம் போல இது என்ன ஒற்றை வீடு..?"
காதல் உணர்வுகளில் இருந்து வெளிப்பட்டவளாக வியப்புடன் கேட்டாள் நந்தினி.. ரவிச்சந்திரன் திரும்பிப் பார்த்து விட்டுச் சிரித்தான்..
"உனக்கான வீடுடி அது.."
"எனக்கான வீடுன்னா..?"
"இப்ப முகர்ந்து மயங்கினியே.. மீன் வாசனை..! அது எங்கிருந்து வந்ததுன்னு நினைக்கிற..?"
"நம்ம கிச்சனில இருந்துதானே வந்தது..?"
"அதுசரி.. இப்பத்தானே ஜீஸ் குடுத்துட்டுப் போனாங்க..? அதுக்குள்ள சமையலை முடித்திருப் பாங்களா..?"
"முடித்திருக்க மாட்டாங்களா..?"
"ஜீபூம்பா மேட்டரா அது..? நீ சமைத்திருந்தா தெரிந்திருக்கும்.. எங்கே..? சாப்பிடத்தான் தெரியும், எனக்குச் சமைக்கத் தெரியலையேங்கிற ரகமாச்சே நீ.."
"சும்மா சும்மா சொல்லிக் காட்டாதீங்க பாஸ்.. ஒருநாள் உங்களுக்குக் கட்டாயம் சமைச்சுப் போடுவேன் பாருங்க.."
"அந்த ஓர் நாள் எப்போ வரும்ன்னு முன்னாடியே சொல்லிரு நந்தினி.. நான் ஃபாரின் பக்கம் எஸ்கேப் ஆகிடறேன்.."
"எதுக்காம்..?"
"உன் சமையில இருந்து தப்பிக்கத்தான்.. வேற எதுக்காம்..? உன் சமையலை டிரையல் பார்க்க நான்தான் கிடைச்சேனா..?"
"எல்லாப் பெண்டாட்டிகளுக்கும் புருசன்தான் மாட்டியாகனும்.."
அவள் அவனது சட்டை காலரைப் பிடித்து இழுத்துச் செல்லமாக முட்டினாள்.. அந்த ஒற்றை வீட்டை நெருங்க நெருங்க உணவின் வாசனை அதிகரித்து ஆளைத் தூக்கியது..
"பாஸ்.. அந்த வீட்டில் இருந்துதான் வாசனை வருது.." உற்சாகமானாள் நந்தினி..
"ப்ப்ப்பா.. என்னமா சந்தோசப் படறடி நீ.. உன்னை சந்தோசப் படுத்த நகை, டிரஸ்ஸீன்னு மெனக்கெட வேண்டிய அவசியமேயில்லை.. டேஸ்ட்டான ஃபுட்டைக் கொடுத்தாப் போதும்.."
"அதை விட பெட்டர் சாய்ஸ் ஒன்று இருக்கு பாஸ்.."
"என்னடி..?"
"நீங்க.."
நந்தினி ஆள்காட்டி விரலை நீட்டி அவனைச் சுட்டிக் காட்டினாள்.. ரவிச்சந்திரனின் கண்களின் மின்னல் கோடி சூரியன்களை உள்ளடக்கியதாக இருந்தது..
"நந்தினி..?"
"யெஸ் பாஸ்.. என்னை சந்தோசப் படுத்தற பர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் சாய்ஸ் நீங்க மட்டும்தான் பாஸ்.. உங்களைவிட உசத்தின்னு எதுவுமில்லை.. நீங்க.. நீங்க மட்டும்தான் என்னோட சந்தோசம்.."
ஆலிங்கனம் அழகானது.. ரவிச்சந்திரனின் அழகான ஆலிங்கனத்தில் அடங்கினாள் நந்தினி.. சிறு முத்தத்துடன் கூடிய தழுவலுடன் அவளை விடுவித்தான் ரவிச்சந்திரன்.. உணர்வுகள் ஆழமாகும் போது அங்கே ஸ்பரிசம் அன்னியமாகி விடுகிறது..
அவன் கையோடு கை கோர்த்து நின்ற நந்தினிக்கு உலகமே வசப்பட்டு விட்டதைப் போல இருந்தது.. வாழ்க்கை வசமானால் வானமும் வசமாகும்.. அவள் நினைத்த காதல் கை கூடி விட்டதே.. இதற்கு மேல் அவளுக்கு வேறென்ன வேண்டும்..?
நான்குவழிச்சாலையில் ஓரத்தில் உள்ள உணவகங்களில் வரிசையாக கார்களும், பஸ்களும் நிறுத்தப் பட்டிருப்பதைப் போல அந்த தண்ணீர் தேசத்தின் ஒற்றை வீட்டைச் சுற்றிச் சில படகுகளும், படகு வீடுகளும் நின்றிருந்தன.. வீட்டை நெருங்க நெருங்க பொறித்த மீனின் வாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது..
நந்தினி பொறித்த மீனின் வாசனையை உணராத காதல் மயக்கத்தோடு ரவிச்சந்திரனின் தோளில் தலை சாய்த்து நின்றதில் அவன் கர்வம் கொண்டான்.. அவனது படகுவீடு அந்த வீட்டை நெருங்கும் போது குரல் கொடுத்தான்..
"எட்வர்ட்.. அந்த ஹவுஸின் முன்னால் கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.."
"ஏன் பாஸ்..?" அவனது உத்தரவின் காரணம் புரியாமல் கேட்டாள் நந்தினி..
"உள்ளே போய் பார்க்க வேண்டாமா..?"
"எதுக்காம்..?"
"எதுக்கா..? இப்படிக் கேட்கிறது என் நந்தினிதானா..?"
பிரியத்துடன் சிரித்தவன் அவளது கன்னத்தை தட்டி விட்டு..
"இங்கே உடனுக்குடன் மீனைப் பிடிச்சு சமைச்சுக் கொடுப்பாங்கடி.. ஸ்டார் ஹோட்டல்களில் செய்கிறதைப் போல இல்லாம வில்லேஜ் ஸ்டைலில செய்து தருவாங்க.. வெரைட்டியாவும் டேஸ்ட்டாவும் இருக்கும்.. வா, போய் பார்க்கலாம்.."
"அப்படிங்கறிங்க.."
"அட..! வாடி.. போய்ப் பார்க்கலாம்.."
வீட்டின் ஓரமாக வரிசை கட்டியிருந்த படகுகளின் இடைவெளியில் சொறுகி ரவிச்சந்திரனின் படகு வீடு நின்றது.. அவன் முன்னே சென்று கை கொடுக்க.. சர்வ ஜாக்கிரதையாக அவன் கைபிடித்து நடத்து அந்த வீட்டுக்குள் இறங்கினாள் நந்தினி.. உள்ளே கும்பல் இருந்தது.. ஸ்டாலில் இருப்பதைப் போலத் திட்டுக்களில் மீன் உணவு வகைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.. அவகைளின் மிகச் சிறந்த விசேசமே தட்டுக்களில் வாலையிலைகளைப் பரப்பி அவற்றின் மீது பொறித்த, வறுத்த மீன் வகைகளைப் பரப்பி வைத்திருந்ததுதான்..
'லவ்லி..' நந்தினி அதை ரசித்தாள்..
பொறிக்கப்பட்டு பரப்பி அடுக்கப் பட்டிருந்த பல்வகை மீன்களைப் பார்வையிட்ட மக்கள் கூட்டம் அவரவர்க்கு வேண்டியதைத் தேர்வு செய்து சொன்னால் அவற்றை வாழையிலைகள் கட்டித் தந்தார்கள்..
எண்ணயில் பொறிக்கப்பட்ட, சமைக்கப்பட்ட அசைவ உணவு வகைகளின் சுவையைக் கூட்டுவது பசும் வாழையிலை..! இது எத்தனை பேருக்குத் தெரிகின்றது..? மாறிவரும் நவின யுகத்தில் வாழையிலைகளின் பயன்பாடு தொலைந்து கொண்டே வருகின்றது.. பிளாஸ்டிக் பேப்பர்களைக் கொண்டு கட்டப்படும் உணவு வகைகளில் பேப்பரின் வாசனை கலந்து உணவின் சுவையைக் குறைத்து ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றது..
மசால் தடவி வைக்கப் பட்டிருந்த மீன் வகைகள் பெறிக்கப் பட்டுக் கொண்டேயிருக்க.. சடுதியில் அவை காலியாகிக் கொண்டிருந்தன.. இரண்டு புறமும் கைப்பிடியோடு கருத்திருந்த இரும்பு வாணலியில் எண்ணை சூடாகிக் கொண்டிருந்தது.. பக்கத்திலிருந்த அடுப்பில் மண்சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பு..
"எங்க ஊர் கிராமங்களில இன்னமும் மண்சட்டியில சமைக்கிற பழக்கம் இருக்கு பாஸ்.. அதோட டேஸ்ட்டே தனி.." என்றாள் நந்தினி..
"நீ சொன்னா சரியாத்தாண்டி இருக்கும்.." புகழ்ச்சி போல சிலாகித்த ரவிச்சந்திரன் அவள் முறைத்த முறைப்பில் இரண்டு கைகளையும் உயர்த்தி..
"ஹேய்.. ஜஸ்ட் ஃபார் பன்.." என்று கவர்ச்சியாகச் சிரித்து அவளை மயக்கி வசப் படுத்தினான்..
அங்கே அவனைத் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள்.. அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், படகு வீடுகளை ஓட்டி வந்திருந்தவர்கள், அதில் பயணித்த சில பயணிகள் என்று ரவிச்சந்திரனுக்கு வணக்கம் கூற அவன் லேசான தலையாட்டலுடன் அவற்றை ஏற்றுக் கொண்டான்..
'இவனைத் தெரியாதவர்கள் இருந்தால்தான் அதிசயம்.. ஆரானு ஈ சுந்தரன்..? கேரளத்தின் ராஜனல்லோ..' மனதுக்குள் அவனைக் கொண்டாடி பூரித்துப் போனாள் நந்தினி..
ரவிச்சந்திரன் சிறப்பானதாக இருக்கும் என்று சில மீன் வகைகளைச் சுட்டிக் காட்டி நந்தினியிடம் சொல்லி விட்டு கை காட்ட அவை வாழையிலைகளில் கட்டித் தரப்பட்டன.. பொட்டலங்களுடன் படகு வீட்டுக்குத் திரும்பினார்கள்.. பிரயாணம் தொடர்ந்தது..
"லன்ச் ரெடியாக நேரமாகும்.. அது வரைக்கும் பசி தாங்க இதை மொக்குவோம்.. வா, வா.."
ரவிச்சந்திரன் மேல்மாடி பால்கனிக்குப் போகும் மரப்படிகளில் ஏறினான்.. நந்தினி தொடர்ந்தாள்.. அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தவன் எதிரேயிருந்த டீப்பாயை இழுத்து அதில் மீன் வகைகளைப் பரத்தினான்.. பக்கத்தில் குடி தண்ணீர்..
நீரில் மிதக்கும் படகில் தண்ணீரையும், சுற்றுப் புறத்தையும் வேடிக்கை பார்த்தபடி பொறித்த மீன் வகைகளை உண்ணுவதென்பது எத்துனை இனிமையானது.
அதை ரவிச்சந்திரனிடம் சொன்ன போது..
"அதைச் சொல்லு.." என்று அவளது நெற்றியில் விரல்களால் சுண்டி விட்டுச் சிரித்தான்..
அதை, இதையென்று பேசி அரட்டையடித்தபடி மீன் வறுவலையும், பொரியலையும் காலி செய்து விட்டு அங்கிருந்த குப்பைக் கூடையில் வாழையிலைகளையும் மீன்முள்களையும் போட்டு விட்டு வாஷ் பேசினில் சோப்புப் போட்டுக் கை கழுவினார்கள்..
"எவ்வளவு சோப்பைக் கரைத்தாலும் கையிலிருக்கிற மீன வாசனை போக மாட்டேங்குது பாஸ்.." குறை பட்டாள் நந்தினி..
"ம்ஹீம்.. உனக்கும் மீன் வாசத்துக்கும் விட்ட குறை தொட்ட குறைன்னு ஆழமான ஓர் அபெக்சன் இருக்கும் போல.." தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சிரிக்காமல் சொன்ன ரவிச்சந்திரன்.. அவன் சொல்வதைக் கூர்மையாக காது கொடுத்து அவள் கவனமாக கேட்டுக் கொண்டதில் 'பக்' கென சிரித்து விட்டான்..
"நான் எதைச் சொன்னாலும் நம்பிருவியா..?" அவள் தலையில் செல்லமாக குட்டு வைத்து இறுக்கிக் கொண்டான்..
அழகு மிகுந்த ஆலப்புழாவின் வேம்பனாடு ஏரியில் அசைந்தாடிச் சென்ற படகு வீட்டின் மேல் பகுதி பால்கனியில் நீர் சூழ அவர்கள் இருவரும் ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகம் கண்டு சொக்கிப் போனார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -198
எண்ணியிருந்தது ஈடேற -198
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-198.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-198.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy