எண்ணியிருந்தது ஈடேற -197

197 கரையை ஒட்டிய தீவுகளில் கால்வாய் நீர் ஓடிக் கொண்டிருந்தது.. வாய்க்காலைக் கடக்க தென்னை மரங்களை குறுக்காக போட்டிருந்தார்கள்.. அதைப...


197


கரையை ஒட்டிய தீவுகளில் கால்வாய் நீர் ஓடிக் கொண்டிருந்தது.. வாய்க்காலைக் கடக்க தென்னை மரங்களை குறுக்காக போட்டிருந்தார்கள்.. அதைப் பார்த்த நந்தினி..
"தென்னை பாலம்.." என்றாள்..
அவள் சொன்னதைக் கவனிக்காமல் அவளது கன்னத்தில் விரலால் கோடிழுத்தான் ரவிச்சந்திரன்.. அவளையே பார்த்த அவனது விழிகளில் வேட்கையும் தாபமும் நிரம்பிய அழைப்பிருந்தது.. நந்தினி கிளர்ந்தாள்.. அவள்மீது அவன் பரவியிருந்த அழகான அந்தப் பொழுது மயக்கம் நிரம்பியதாக இருந்தது..
தண்ணீர் தேசம்..! அதில் மிதக்கும் படகு வீடு..! அரண்மனையின் உப்பரிகை போல ஒரு பால்கனி..! அதில் பஞ்சணைகள் போடப் பட்டிருப்பதைப் போல படுக்கும் வசதியுடன் போடப்பட்டிருக்கும் சோபாக்கள்.. ஒருபுறம் நீர்.. மறுபுறம் தீவுகளும், வயல்வெளிகளும், ஆகாயத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருக்கும் பறவைகள்.. ஈரப் பசையுடன் கூடிய கேரளத்துக்கே உரிய சிலுசிலுவென்ற குளிர் காற்று.. படகின் மேல்பகுதி பால்கனியில் அவளும் அவனும் மட்டுமாக இருக்கும் அழகான தனிமை..!
போதை நிரம்பிய அந்தப் பொழுதில் காதலன் காதலியிடம் என்ன வேண்டுவானோ அதை வேண்டினான் ரவிச்சந்திரன்.. நந்தினியின் மீது பரவிப் படர்ந்து முகத்தோடு முகம் வைத்து இதழ்களில் ஆழமான முத்தத்தைப் பதித்தான்.. வெறி கொண்ட சிங்கத்தின் பாய்ச்சலை அவனிடம் உணர்ந்தாள் நந்தினி.. அவளது மேனி நடுங்கியது..
மற்றைய பொழுதாக இருந்தால் அவளது நடுக்கத்தை உணர்ந்தவுடன் ரவிச்சந்திரன் விலகி அவளை அமைதிப் படுத்தியிருப்பான்.. அது விலக முடியாத கள்ளூரும் போதை நிரம்பிய பொழுது..! அவளது நடுக்கத்தைப் புறக்கணித்து நெருக்கத்தை அதிகப் படுத்தினான்.. அவளது சிறு விலகலிலும் சினம் கொண்டு உறுமினான்.. இரை தேடும் சிங்கத்தின் வெறியினை அவனுள் கண்டவளால் விலக முடியவில்லை.. அவன் வேண்டாம் என்று நினைத்தால் விலகி விடலாம்.. அவளுக்கு அவன் வேண்டுமே..
அவனைக் கண்ட நொடி முதல் இந்த நொடிவரை அவனுடன் கழித்த அத்தனை தினங்களிலும் அவள் மீதான அவனது தீராத மோகத்தையும் ஆசையையும் அவள் தெளிவாக வரையறுத்து வைத்திருந்தாள்.. அவளது விலகலை அவன் விரும்ப மாட்டான்..
நந்தினியின் கைகள் அவன் கழுத்தை வளைத்தன.. அதில் திருப்தியானவனின் விழிகள் ஜொலித்ததில் அவனது நெற்றியில் சிறு முத்தம் பதித்து முடியைக் கோதி விட்டாள்.. அவன் விழி மூடி அவளது முத்தத்தையும் முடி கோதலையும் அனுபவித்தான்..
"எனக்கு வேடிக்கை பார்க்கனும்.." அவள் கோரிக்கை வைத்தாள்..
"தள்ளிப் போகாமல் வேடிக்கை பார்க்க முடிந்தால் பாரு.." அவன் அனுமதி கொடுத்தான்..
"எப்படி முடியும் சாரே..?"
"இப்படி முடியும்.."
அவளது இடையில் கை கொடுத்து அவன் தூக்கிக் கொள்ள அவனது கழுத்தைக் கைகளால் பிணைத்து மாலையாக்கி அவன் கைகளில் அவள் சயனித்தாள்..
பால்கனியைச் சுற்றி அவன் வலம் வந்து சுற்றிக் காட்ட எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு மோகத்தீயை குளிர வைத்தாள்.. அவன் காட்டிய நெருக்கத்திற்குக் குறைவில்லாத நெருக்கத்தை அவள் அள்ளியள்ளி தந்ததில் அவன் போதை கொண்டான்..
"ஸ்நேகிதனே..! ஸ்நேகிதனே..!
             ரகசிய ஸ்நேகிதனே..!"
ரகசியக் குரலில் கிசுகிசுப்பாய் அவள் பாடியதில் கிளர்ந்து கிறங்கினான் ரவிச்சந்திரன்.. இத்துனை அழகான இணக்கத்தையும் நெருக்கத்தையும் அவன் எதிர் பார்த்திருக்கவில்லை.. குழந்தைத்தனமான சுபாவம் கொண்டவளிடமிருந்து வெளிப்பட்ட காதலின் போதையில் அவன் கரையேற முடியாமல் மூழ்கினான்..
அவனை மோக வெள்ளத்தின் போதையில் மூழ்க வைத்து மூச்சுத் திணற வைக்கும் சாமர்த்தியம் கொண்டவளாக இருந்தாள் நந்தினி.. காதலிக்கு மட்டும் கைகூடும் சாமர்த்தியம் அது.. காதலனின் தேவையை அறிந்து செயல்படும் சாமர்த்தியம் அது..
"சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்..
             செவி கொடு ஸ்நேகிதனே..!"
அவன் குனிந்து செவியைக் கொடுக்க அவள் நுனிப் பற்களால் செவி மடலைக் கடித்தாள்.. 'ஹா' என்று கிறங்கிப் போனான் அவன்.. அழுத்தமாக இறுக்கி அவன் அணைத்ததில் எழும்புகள் நொறுங்கும் இன்ப இம்சையை அவள் உணர்ந்தாள்..
"இதே அழுத்தம், அழுத்தம்..
             இதே அணைப்பு, அணைப்பு..
    வாழ்வின் எல்லை வரை வேண்டும்
             வேண்டும்.."
தாள முடியாத காதலோடு அவளை சோபாவில் கிடத்தி மேலே பரவியவனின் காதோரமாக அவள் பாடினாள்..
"சின்னச் சின்ன அத்து மீறல்கள்..
             புரிவாய்..
    என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச்
             செய்வாய்..
    மலர்களில் மலர்வாய்.."
அவளது உடலெங்கும் பரவிய நூதனமான மயக்கத்தில் ஆழ்ந்து அமிழ்ந்தபடி அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள்.. நாடி நரம்பெங்கும் வியாபித்திருக்கும் காதல் போதையிலிருந்து வெளிவர இயலாமல் தவித்தாள்.. அவளது அந்தத் தவிப்பு அவனுக்கானது என்பதில் அவன் மனது நிறைந்தது.. மெல்லிய பூவின் இதழ்களை வருடும் நுட்பத்தோடு அவளது கை வளைவில் முகம் பதித்தான்..
"பூப்பறிக்கும் பக்தன் போல
             மெதுவாய்..
    நான் தூங்கும்போது விரல்நகம்
             களைவாய்..
    சத்தமின்றித் துயில்வாய்.."
அவளது விழிமீது இமைமூட.. அதன் மீது அவன் இதழ் மூட அவர்கள் துயில் கொள்ளாமல் துயில் கொண்டார்கள்.. அவள் கைவிரல்களை உதற அவன் அவற்றைப் பற்றி நீவிக் கொடுத்தான்.. அவள் புருவங்களை நெறித்தால் புருவங்களை நீவி அமைதியைக் கொடுத்தான்.. அவளுக்கான காதல் சேவைகளை செய்யும் சேவகனாக அந்த ராஜாதி ராஜன் மாறியதில் அவனது ராணியான அவள் இன்பம் கொண்டாள்..
"ஐ விரல் இடுக்கில்..
             ஆலிவ் எண்ணை பூசி
    சேவைகள் செய்ய வேண்டும்.."
அட்டூழியமாக அவள் கட்டளையிட.. அவன் 'அதற்கென்ன' என்பதைப் போல தலையை ஆட்டி முத்தம் கொடுத்தான்..
"நீ அழும்போது
             நான் அழ நேர்ந்தால்
    துடைக்கின்ற விரல் வேண்டும்.."
அவளது குரல் நெகிழ்ந்து உருகியதில் அவன் உருகிப் போனவனாக அவளது இதழ் மூடிச் சேர்த்தனைத்துக் கொண்டான்..
கூடலில்லாத கூடல் காதலில் மட்டுமே சாத்தியம்.. காதலனின் தேவையறிந்து வழங்கும் அட்சய சுரபியாக காதலி மாறும் போது.. தேவைகளைக் கட்டுப்படுத்தி அவளை ரட்சிக்கும் ரட்சகனாக காதலன் மாறுவான்..
உண்மையான காதல் ஒரு போதும் வஞ்சிக்காது..
நந்தினியின் காதருகே முணுமுணுப்பாக தன் கோரிக்கைகளை வைத்தான் ரவிச்சந்திரன்.. அவள் முகம் சிவக்க விரல்களால் முகம் மூடி விரலிடுக்கில் அவனைப் பார்த்து 'ச்சீய்' எனும் பாவனையில் முகம் சுருங்கினாள்.. கள்வெறி கொண்டவனாக அவள் மீது கவிழ்ந்தான் அவன்.. காதலனின் தாகம் அறிந்தவளாக..
"சொன்னதெல்லாம் பகலினில்
             புரிவேன்..
    நீ சொல்லாததும் இரவினில்
             புரிவேன்..
    காதில் கூந்தல் நுழைப்பேன்.."
என்று தன் பின்னலால் அவன் முகம் வருடினாள் நந்தினி.. மயிலிறகால் அவள் மனம் வருடியதைப் போல சிலிர்ப்பைக் காட்டினான் ரவிச்சந்திரன்.. அவனது ஸ்வெட்டருக்குள் தானும் நுழைந்து அவனை அவள் அதிசயப் பட வைத்தாள்.. அவன் செய்வதைப் போலவே அவனது நெற்றியின் மையத்தில் விரல் வைத்துக் கீழே இறக்கி மூக்கைக் கடந்து அவனது மீசையை நிரடி இதழ்களில் வந்து நின்றாள்.. அவளது நுனி விரலை அவன் கடிக்க.. மூக்கைச் சுருக்கிச் சிரித்து மயக்கினாள்..
"உந்தன் சட்டை நானும் போட்டு
             அலைவேன்..
    நீ குளிக்கையில் நானும் கொஞ்சம்
             நனைவேன்..
    உப்பு மூட்டை சுமப்பேன்.."
யார்..? நீதானே..? என்னை வேண்டுமானால் உன்னை சுமக்க வைப்பாய் என்று அவன் சொன்னதில் கலகலத்துச் சிரித்தாள்..
"உன்னையள்ளி எடுத்து
             உள்ளங்கையில் மடித்து..
    கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்.."
என்று அவள் பாட.. அவனோ உன் முந்தானையில் ஒளித்துக் கொள் என்றான்..
"நீ வெளிவரும் போது
             விடுதலைகள் செய்து
    வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்.."
என்றவளிடம் என்ன வரம் வேண்டும்..? கேள்.. தருகிறேன்.. என்றான் அவன்..
நந்தினி அவன் காதலை வரமாக கேட்டாள்.. வரம் கொடுக்கும் தேவதை வரம் கேட்கலாமா என்று அவன் நியாயம் கேட்டான்.. இவர்களின் காதல் பாடலைக் கேட்டபடி நேரம் நகர்ந்து கொண்டிருந்தது..
சுகமான ஈரக்காற்று உடல்களில் படிய அவர்கள் ஒருவரிடம் ஒருவர் கதகதப்பைத் தேடிக் கொண்டிருந்த போது மரப்படிகளில் குரல் கேட்டது.. நந்தினி அவசரமாக விலகி அமர்ந்தாள்.. ரவிச்சந்திரன் எழுந்து சென்று என்ன வென்று வினவினான்..
"ஆரஞ்சு ஜூஸ் சாரே.." என்றான் பணியாள்..
இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் நிரம்பியிருந்த ஆரஞ்சு ஜூஸீடம் வந்தான் ரவிச்சந்திரன்.. ஒன்றை நந்தினியிடம் கொடுத்து விட்டு இன்னொன்றை பருக ஆரம்பித்தான்.. பாதித் தம்ளர் ஜீஸை காலி செய்ததும் நந்தினி அவனுடைய தம்ளரைப் பிடுங்கிக் கொண்டாள்.. அவன் குடித்த ஜீஸை அவள் குடித்ததில் அவன்
முகத்தில் மென்மை படர்ந்தது.. அவள் குடித்த ஜீஸை அவன் குடிக்க ஆரம்பித்தான்..
ஜூஸ் தம்ளர்களை எடுத்துப் போக வந்த பணியாளிடம் வாய் வளர்த்தாள் நந்தினி.. அங்குள்ளவர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றிக் கேட்ட போது வீட்டுக்கொரு சைக்கிள் இருப்பதைப் போல.. அங்கே வீட்டுக்கொரு ஓடம் இருக்கும் என்று தெரிய வந்தது..
"நிஜமாவா..?" என்று அவள் வாய் பிளந்ததில் பணியாள் சிரித்து விட்டுப் போய் விட்டான்..
"இவனை இண்டர்வியு எடுத்துக் கவர் ஸ்டோரி எழுதப் போகிறயா..?" ரவிச்சந்திரன் கேலி செய்தான்..
"எழுதினா என்ன பாஸ்..? ஏன் நான் கர்ஸ்டோரி எழுதக் கூடாதா..?"
"எந்த மேகசின்ல போடுவாங்களாம்..?"
"ஏனாம்..? எனக்காக நீங்க ஒரு மேகசினை ஆரம்பிக்க மாட்டிங்களா என்ன..?"
"ஏன் ஆரம்பிக்க மாட்டேன்..? உனக்காக எதையும் செய்வேன் என்கிறபோது கேசின் ஆரம்பிக்க மாட்டேனா..? என்ன ஒன்று.. படிக்கத்தான் ஆள் தேட வேண்டும்.."
அவன் கவலைப் படுவதைப் போல பாவனை செய்ய.. அவள்..
"பாஸ்.." என்று அவன் மார்பில் குத்தினாள்..
அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.. கண்ணாடி கதவுகளைக் கொண்ட ஜன்னல்களை அவள் செல் போனில் படம் பிடித்துப் பத்திரப் படுத்திக் கொண்டாள்.. பட்டாம் பூச்சியின் சுறுசுறுப்போடு இங்கும் அங்குமாக ஓடித் திரிந்தவளை அவன் காதலுடன் வேடிக்கை பார்த்தான்..
"இங்கே கிச்சன் இருக்கா பாஸ்..?"
"இல்லாமலா உனக்கும் எனக்கும் பிரேக் பாஸ்ட் கொடுத்தாங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே உணக்கையாய் ஆரஞ்சு ஜூஸ் குடிச்சியே.. அது எங்கிருந்து வந்தது..?"
"நான் மட்டுமா குடிச்சேன்..? நீங்களும்தான் குடித்தீங்க.."
"சத்தமாய் சொல்லாதே.. கேட்கிறவங்க நீ ஜூஸைப் பத்தித்தான் சொல்கிறேன்னு நினைக்க மாட்டாங்க.. வேற எதையாவது நினைச்சிறப் போறாங்க.."
"இதுவே தண்ணீர் தேசம்.. இங்கே போய் யார் வாய் பார்க்கப் போகிறாங்களாம்..?"
"இங்கே வேலை செய்கிறவங்க வாய் பார்க்க மாட்டாங்களா..?"
"ஆமாமில்ல.."
மரியாதையாய் வாயை மூடிக் கொண்ட நந்தினி அந்தப் பக்கமாக போய் பார்த்தாள்.. சுவரில் டைல்ஸ் ஓட்டப்பட்டு மர அலமாரிகளுடன் கூடிய மாடுலர் கிச்சனாக அதி நிவீனமாக இருந்தது சமையலறை..
'பாருடா..' அதையும் படம் பிடித்தாள்..
சிங்கில் குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டியது..
'தண்ணீரில் மிதக்கும் படகு வீட்டில் ஷவரில் தண்ணீர் கொட்டுது.. வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் கொட்டுது.. கிச்சன் சிங்கிலும் தண்ணீர் கொட்டுது..'
புருவங்களை மெச்சுதலாக உயர்த்தி விட்டு வெளியே வந்தவளின் நாசி வறுத்த மீனின் வாசனையை உணர்ந்து..
"ம்ஹா.." என்று அதை உள்ளே இழுத்து அனுபவித்து வாசம் பிடித்தது..
"நம்ம கிச்சனிலா பாஸ்..?"
காதலை மறந்து உணவின் உபாசகியாய் நாக்கைச் சப்புக் கொட்டினாள்..
"இப்பத்தான் ஒரிஜினல் நந்தினியாய் இருக்கேடி.."
தலையில் அடித்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -197
எண்ணியிருந்தது ஈடேற -197
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-197.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-197.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy