எண்ணியிருந்தது ஈடேற -196

196 பஞ்சு போலப் பறக்கும் இட்லிகள்.. தொட்டுக் கொள்ள சட்னி.. மீன் குழம்பு.. முன்னதைவிடப் பின்னதே இட்லிக்குத் தோது என்று சப்புக் கொட்ட...


196


பஞ்சு போலப் பறக்கும் இட்லிகள்.. தொட்டுக் கொள்ள சட்னி.. மீன் குழம்பு.. முன்னதைவிடப் பின்னதே இட்லிக்குத் தோது என்று சப்புக் கொட்டிக் கொண்டே அபிப்ராயம் தெரிவித்தாள் நந்தினி.. இது உணவு சம்பந்தமான அபிப்ராயம் என்பதினால் அவள் சொல்வதே சரியானதாக இருக்கும் என்று ரவிச்சந்திரன் தீர்ப்பு வழங்கினான்.. எதனால் அப்படி என்று அவள் சண்டைக்கு வந்தாள்.. உணவு விசயத்தில் அவளளவுக்குத் தனக்குப் பாண்டித்யம் கிடையாது என்று தன்னடக்கதோடு அவன் சான்று பகர்ந்தான்.. பேசாமல் இருக்காவிட்டால் இட்லிகளாலேயே தாக்குதல் நடத்தப் போவதாக நந்தினி போர் முரசு கொட்டினாள்.. அவளுடைய ஆயுதம் உணவாகத்தானே இருக்க முடியும் என்று ரவிச்சந்திரன் கூறிவிட்டு அவளிடம் பலத்த கிள்ளை வாங்கினான்..
"ஹ..! கொஞ்சம் கூட வலிக்கவே இல்லைடி.. வெறும் வாய்தான்.. சுத்தமா ஸ்ட்ரென்த் இல்லை.."
கிள்ளிய கையை இறுக்கிப் பிடித்துத் தன் கையில் சிறை வைத்தபடி கேலி செய்தான் ரவிச்சந்திரன்.. தண்ணீரில் மிதந்தபடி காலை உணவை உண்ணும் அனுபத்தை ரசித்து அனுபவித்தாள் நந்தினி.. காலை உணவை முடித்தவர்கள் அறைக்குப் போகாமல் பால்கனிக்குப் போய் அங்கிருந்த சோபாவில் சரிந்து விட்டார்கள்..
படகின் முகப்பின் வளைவை ஒட்டி வளைவாய் அமைக்கப் பட்டிருந்த சோபாவின் மூலைப் பகுதியில் முதுகை சாய்த்து அமர்ந்து கால்களை நீட்டித் தன் மடியில் நந்தினியை இழுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. அவன் மார்பின்மீது சாய்ந்து கொண்டவளின் தோள் வளைவில் அவனது கரங்கள் இறங்கி ஒன்று சேர்ந்து அவளை வளைத்து இறுக்கிக் கொண்டன..
இறுக்கமாக அவளை வளைத்திருந்த ரவிச்சந்திரனின் பிணைந்த கைகளின் மீது கை வைத்து கதை பேசியபடி வெளிப்புறக் காட்சிகளை ரசித்துப் பார்த்தாள் நந்தினி.. திடிரென..
"ஹை.. வாத்து.." என அவள் துள்ளி எழ..
"அடங்குடி.." என்று தன்னுள் அடக்கிக் கொண்டான் ரவிச்சந்திரன்..
வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக ஏரியின் ஓரமாக நீந்திச் சென்றன.. வாத்துக்களை மேய்ப்பவர் கரையை ஒட்டி நடந்தபடி அவைகளை குச்சி கொண்டு மிரட்டி ஒருங்கிணைத்தபடி விரட்டிக் கொண்டு போனார்..
"தண்ணிக்குள்ள வாத்து மேய்க்கிறாரா பாஸ்..?"
"அறிவுத் திருக்கடல்ன்னு அப்பப்ப புரூவ் பண்ற.. பட்ஷே.. நீ சொல்வது ஒருவகையில் சரிதான்.. இப்ப அவர் வாத்துக்களை புதிய மேய்ச்சலிடங்களுக்கு அழைத்துக் கொண்டு போகிறார்.."
அவனை இருக்கையாக்கி மடி மீது உட்கார்ந்து அவன் மார்பின் மீது சாய்ந்து அவள் கதை பேசுவதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அலுக்காமல் கதை கேட்கலாம் என்று ஆணித்தரமாக ஜொள்ளியது அவன் மனது..
பக்கத்தில் ஓர் ஓடம் மிதந்து கொண்டிருந்தது.. ஆளில்லாத ஓடம் தனியாக மிதக்கிறதே என்று பரிதாபம் கொண்டாள் நந்தினி.. இது நீரோடு செல்கின்ற ஓடம் என்ற பாடலின் முதல்வரி அவளது வாயில் வெளிப்பட்டதில் அவள் தலையில் கொட்டு வைத்தான் ரவிச்சந்திரன்..
"வாகாய் தலை அகப்பட்டுக்கிட்டாக் கொட்டிப் புண்ணாக்குவீங்களா பாஸ்..?" தலையைத் தடவிக் கொண்டாள் நந்தினி..
"பின்னே.. சிச்சுவேசனுக்குத் தகுந்ததைப் போல டூயட் சாங் எதையாவது பாடுவியா.. அதை விட்டுவிட்டு சோக கீதம் இசைக்கிறா.. ஏண்டி இப்படி இருக்கிற..?"
"ஏதோ இருக்கிறேன்.. தனியாய் ஓடம் மிதந்தா ஐயோ பாவம்ன்னு தோணாதா.."
"அங்ஙன நோக்கு.."
அண்ணலும் சுட்டிக் காட்டினான்.. ஆரணங்கும் நோக்கினாள்.. கண்ணீருக்குள் இருந்து வெளிப்பட்ட ஒருவன் கூடையிலிருந்த ஈரமணலை ஓடத்தில் கொட்டி விட்டு மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கினான்..
"அவள் என்ன பாஸ் செய்கிறாரு..?"
"ம்ம்ம்.. மணலை அள்ளுகிறார்.."
"எதுக்கு..?"
"விற்க.."
"இதை வாங்கி என்ன பாஸ் செய்வாங்க..?"
"வீடு கட்டுவாங்க.."
"என்னது..?"
ஆச்சரியப் பட்டுப் போனாள் நந்தினி.. தண்ணீரின் அடியிலிருக்கும் மணலை அள்ளித்தான் வீடு கட்ட வேண்டுமா..?
ஆமாம் என்றான் ரவிச்சந்திரன்.. கேரள அரசாங்கத்தின் ஆணை அது என்றான்..
"இங்கே வீடு கட்டுவதற்கான மணலை ஆற்று நீரில் மூழ்கித்தான் அள்ள வேண்டும்.. ஆறோடும் பகுதி தூர் வாரியதைப் போல ஆழமாகும்.. மணல் விலை இங்கே அதிகம்தான்.. கவர்ன்மெண்டோட ஆர்டர் இது.. கேரளத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்கிற அரசியல் வாதிகள்தான் இங்கே ஆட்சியைப் பிடிக்க முடியும்.."
"ஓ.."
அழகாக உதடுகளைக் குவித்தாள் நந்தினி.. குனிந்து அவன் முத்தமிட முயன்றான்.. முகத்தைத் திருப்பி ஏமாற்றி அவன் முகத்தில் தலையை மோதி கலகலத்துச் சிரித்தாள்... அவளது சிரிப்பலைகளில் பரவிய உயிர்ப்பலைகளை ரசித்தான் ரவிச்சந்திரன்.. அவளுடன் இருக்கும் மணித்துளிகள் மறக்க முடியாதவை என்று
அவன் மனது சொன்னது..
சீராண வேகத்தில் வேம்பனாடு ஏரியில் படகு மிதந்து சென்று கொண்டிருந்தது.. படகு வீட்டின் பங்களாவில் இருந்து பால்கனியில் வேடிக்கை பார்ப்பதைப் போல இருப்பதாக சொன்னாள் நந்தினி..
"மொட்டை மாடிக்குப் போய் பார்க்கலாமா..?" என்று கேட்டான் ரவிச்சந்திரன்..
"மொட்டை மாடியா..? இது படகு பாஸ்.." என்றாள் நந்தினி..
"ஆஹா..! எப்பேற்பட்ட கண்டு பிடிப்பு.. தேறிட்ட போ.." பாராட்டினான் ரவிச்சந்திரன்..
'நிஜமாவே பாராட்டறானா..?'
'ஙே' என விழித்தாள் நந்தினி.. அது பாராட்டுதலைப் போலவும் இல்லாமலிருந்ததால் ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்தாள்..
"எதுக்கு இந்த விழி விழிக்கிற..?"
அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.. அவள் செய்வது அனைத்தும் அவனுக்கு வேடிக்கையானதாகவே இருப்பதாக குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் நந்தினி..
"ஊஹீம்..?" அவனுக்கு அதுவும் வேடிக்கையாகவே இருந்தது..
"அதென்ன பாஸ்.. நான் எதைச் சொன்னாலும் அதை ஜோக்காவே கன்சிடர் பண்றிங்க..? இது படகு பாஸ்.. இதில போய் மொட்டை மாடி.. சுற்றுச் சுவர்ன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு..?" நந்தினிக்கு கோபம் வந்து விட்டது..
"நீ டைட்டானிக் படம் பார்த்ததில்லையா..?" அவளை மட்டம் தட்டுவதைப் போல கேட்டான் அவன்..
"ஏன், ஏன், ஏன்..?"
"எதுக்கு இத்தனை ஏன்..? ஏண்டி நீ கேள்வியின் நாயகியாடி..? எதுக்கெடுத்தாலும் ஏன், என்னன்னு ராகம் பாடற..?"
"நீங்க மட்டும்தான் டைட்டானிக் படம் பார்க்கனுமா..? நாங்கள்ளாம் பார்க்கக் கூடாதா..?"
"நாங்கன்னு யாரை மென்சன் பண்ற.. உத்ராவையும் உன்னையும் சேர்த்து மென்சன் பண்றியா..?"
"உத்ராவைப் பத்தி நீங்க பேசக் கூடாது.."
"ஏன் பேசக் கூடாது..? அவங்க உன்னோட பிரண்ட்.."
"எனக்குத்தான் பிரண்ட்.. உங்களுக்கில்லை.."
"எனக்கு அவங்க என்ன எனிமியா..?"
"ஸ்ஸ்ஸ்.. உங்களோட முடியலை.. கண்னைக் கட்டுது.."
"ஏண்டி.. கண்ணாமூச்சி விளையாடப் போறியா..?"
"ஹலோ பாஸ்.."
"சொல்லுடி.. என் ஆசை பெர்சனல் செக்கரட்டரி.."
"ம்ஹீம்.. பி.டெக் கோல்ட் மெடலிஸ்ட்.. காலேஜ் பர்ஸ்ட்.. எனக்குக் கிடைச்சிருக்கிற பட்டத்தைப் பாரேன்.."
"யாரைப் பார்க்கச் சொல்கிற..?"
"உத்ரா வினித் அண்ணாவின் பெண்டாட்டி.."
"இது என்னடி வம்பாய் போச்சு..? இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே.."
"அவளைப் பத்தி நீங்க பேசக் கூடாது.."
"நான் எங்கேடி பேசினேன்...? நீதானே நாங்கள்ளாம்ன்னு அவங்களையும் சேர்த்து மென்சன் பண்ணின..?"
"நாங்கள்ளாம்ன்னா.. நாங்கள்ளாம்ன்னு அர்த்தம்.."
"ஆஹா.. எவ்வளவு தெளிவா மீனிங் சொல்றேடி.. உன் அறிவோட லெவலில அசந்து போறேண்டி நந்தினி.."
"பாஸ்.."
"சொல்லுடி.."
"நீங்கள்ளாம் ஹை-டெக் கோடிஸ்வரங்க.. டைட்டானிக் பார்ப்பீங்கங்கிற மமதையில பேசாதீங்கங்கிற மீனிங்கலி சொன்ன 'நாங்கள்ளாம்..' ங்கிற வார்த்தைதான் அது.."
"ஓ.. ஓ.. ஓ.."
"நான் ஏன்னு கேட்டா இவர் எதுக்கு இத்தனை ஏன்னு கேட்பாராம்.. இவர் மட்டும் இத்தனை '' போடலாமாம்.."
"நான் ஹை-டெக் கோடிஸ்வரன்.. நீ யாருடி..? மண் குடிசையில பிறந்து வளர்ந்த ஏழைப் பெண்ணா..?"
ரவிச்சந்திரன் மடக்கியதில் திருதிருத்தாள் நந்தினி.. அவன் சொல்வதும் சரிதானே.. அவள் பணக்காரக் குடும்பத்தில் கோடிஸ்வரர் மேகநாதனின் மகளாக பிறக்கும் போதே வாயில் தங்க ஸ்பூனைக் கவ்வியபடி பிறந்தவள் தானே..
'என்னத்தைப் பிறந்து என்ன பண்ண..? இவன் முன்னாடி.. ஓலைக்குடிசையில் இருப்பவளைப் போலயில்ல இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸா இருக்கு..'
"என்னடி..? பதிலைக் காணோம்.. கமான்.. கிவ் மி த ஆன்சர்.."
"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நான் டைட்டானிக் படத்தைப் பார்த்திருக்க மாட்டேன்னு
எப்படி நீங்க சொல்லலாம்..? இதுக்குப் பதிலை நீங்க சொல்லங்க.."
"அபாண்டமா பழி போடக் கூடாது.. நான் என்ன கொஸ்டின் பண்ணினேன்னு மனதுக்குள்ளே ரிவைண்ட் பண்ணிப் பார்த்துட்டுத்தான் பேசனும்.."
அவன் போட்ட போட்டில் ஒற்றை விரலால் நெற்றியில் தட்டி அவன் என்ன பேசினான் என்பதை மனதுக்குள் ரிவைண்ட் செய்து நினைத்துப் பார்த்தாள்..
"நீ டைட்டானிக் படம் பார்த்ததில்லையா..?" மனதுக்குள் வந்த அவன் கேட்டான்..
"நினைவுக்கு வந்துருச்சா..? 'நீ டைட்டானிக் படம் பார்த்ததில்லையா..?' அப்படித்தானேடி கேட்டேன்.. நீயெல்லாம் டைட்டானிக் படத்தைப் பார்த்திருக்க மாட்டேன்னா சொன்னேன்..?"
மறுபடியும் அவன் மடக்கியதில் அவள் அசடு வழியும் முகத்தோடு அவன் பக்கமாகத் திரும்பி அவனது சட்டைப் பொத்தானைத் திறுகியபடி.
"ஹி.. ஹி.." என்று சிரித்து வைத்தாள்..
'இவள் இருக்கிறாளே..'
அவளது காதைப் பிடித்து திருகினான் ரவிச்சந்திரன்..
"போதும் பாஸ்.. வலிக்குது..."
அவள் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் காதை விட்டான்..
"எதுக்காக டைட்டானிக்கை கட்டி இருத்தீங்க பாஸ்..?" அப்போதும் சட்டைப் பொத்தானை விடாமல் திருகியபடி கொஞ்சலாக கேட்டு வைத்தாள் நந்தினி..
'இப்படிக் கேட்டால் என் சொத்து முழுதையும் இவளுக்கே எழுதிக் கொடுத்து விடுவேன் என்பதை இவள் அறிவாளா..?'
அவளது நெற்றியின் மையத்தில் விரலால் தொட்டு இழுத்து மூக்கைக் கடந்து உதடுகளில் மையம் கொண்டான் ரவிச்சந்திரன்.. உணர்ச்சி மேலிட்டில் அவள் சட்டை பொத்தானை மறந்து அவன் கழுத்தைக் கட்டி முத்தம் பதித்தாள்..
"உன்னைக் கட்டி இழுக்க நினைக்கிறவனை ஏண்டி டைட்டானிக்கை கட்டி இழுக்கச் சொல்கிற...?" வேட்கையுடன் அவளை அணைத்து விழிகளுக்குள் பார்த்துக் கேட்டான் ரவிச்சந்திரன்..
"நான் ஒன்னும் சொல்லலை... நீங்கதான் டைட்டானிக்குன்னு எதையோ சொல்ல வந்தீங்க.." சிணுங்கினாள் நந்தினி..
"சொல்ல வந்ததை நீ சொல்ல விட்டால்தானே.. எத்தனை கொஸ்டின்.. இதில வேற சண்டைக்கு வர்றா.." அவளது மூக்கைப் பிடித்துத் திருகினான் ரவிச்சந்திரன்..
"ஸோ.. பேசியே டைம் பாஸ் பண்ணுவீங்க.. என்னன்னு சொல்ல மாட்டிங்க.."
"பெரிதா ஒன்றுமில்லைடி.. டைட்டானிக் கப்பலிலே மொட்டை மாடி எது..?"
"கப்பலோட மேல்தளம்.."
"அதைப் போல இங்கேயும் இருக்காதா..?"
"பாஸ் அது கப்பல்.. இது படகு.."
"திரும்பத் திரும்ப இதையே ரிவிட் பண்றா.. ஏய்ய்.. இப்படி வாடி.."
ரவிச்சந்திரன் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.. அழகிய கடைசலுடன் கூடிய மரப் படிகள் நடுவில் ரெட் கார்பெட் விரிக்கப் பட்டு கண் சிமிட்டின..
'இதென்னடா இது.. ஜீபூம்பா வேலையாய் இருக்கு..'
கனவில் நடப்பவளைப் போல ரவிச்சந்திரனின் கை பிடித்துப் படிகளில் ஏறினாள் நந்தினி.. அவன் சொன்னதைப் போல மொட்டை மாடி இருந்தது.. வெறும் மொட்டைமாடியில்ல.. பால்கனியுடன் கூடிய மொட்டை மாடி..
அங்கும் அசத்தலான சோபாக்கள் போடப் பட்டிருந்தன.. வட்ட வடிவமாக வளைத்து அமைக்கப் பட்டிருந்த சோபாவில் நந்தினியுடன் சரிந்தான் ரவிச்சந்திரன்..
எங்கும் தண்ணீர்.. கரையோர தென்னந் தோப்புக்கள்.. அதையொட்டிய சின்னஞ்சிறு தீவுகள்.. வயல் வெளிகள்..
அவற்றை வேடிக்கை பார்த்தபடி சோபாவில் சரிவது பெரும் சுகம்.. பால்கனியில் படுத்துக் கொள்ளும் வகையில் கைபிடி இல்லாத நீண்ட சோபாக்கள் இருந்தன.. அதில் தலையணை போலிருந்த திண்டுகள்..
யாருமற்ற தனிமையில், தண்ணீர் தேசத்தில், மிதக்கும் படகு வீட்டின் மேல் மாடி பால்கனியில், எவரும் பார்க்காமல் மறைவாக சோபாவில் ஒருவர் மீது ஒருவர் சரிந்து தண்ணீரையும் சுற்றுப் புறத்தையும் வேடிக்கை பார்ப்பது என்பது அப்பேற்பட்ட ஆனந்தம்..!

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -196
எண்ணியிருந்தது ஈடேற -196
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-196.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-196.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy