எண்ணியிருந்தது ஈடேற -195

195 வெதுவெதுப்பான ஷவர் நீரில் குளித்து உடை மாற்றி தலை முடியை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.. அறைக்கதவு தட்டப் பட்டது.. திறந்...


195


வெதுவெதுப்பான ஷவர் நீரில் குளித்து உடை மாற்றி தலை முடியை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.. அறைக்கதவு தட்டப் பட்டது.. திறந்தாள்.. உள்ளே வந்த ரவிச்சந்திரன்..
"எதுக்கு ரூமை லாக் பண்ணின..?" என்று கோபித்துக் கொண்டான்..
"நேரா படகு வீட்டுக்கு வந்துட்டோம்.. பிரஷ் கூடப் பண்ணலை.. பிரஷ் பண்ணிக் குளிச்சு ரெடியாக வேண்டாமா..?" சமாதானம் சொன்னாள் நந்தினி..
"அதுக்கேன்டி கதவை லாக் பண்ணின..?"
"இது என்ன பாஸ் கொடுமையாய் இருக்கு.. நான் குளிச்சு டிரஸ் சேன்ஜ் பண்ண வேண்டியிருந்ததுன்னு சொன்னேனே.."
"ஸோ வாட்.. இது நம்மோட ரூம்.."
"இல்லைன்னு யார் சொன்னதாம்..?"
நந்தினி பின்னலை விசிறிப் பின்னால் தள்ள முனைய அது ரவிச்சந்திரனின் முகத்தில் பட்டு விலக யத்தனித்தது.. அவன் அதை விலக விடாமல் இறுக்கிப் பற்றி இழுத்தான்..
"வலிக்குது பாஸ்.."
நந்தினி சுழன்று திரும்பி அவன் தோள்களைத் தழுவி அவன் மீது சாய்ந்து நின்றாள்..
"வலிக்கட்டும்.."
"எதுக்கு இந்த கோபமாம்..?"
"ஏன் கதவை லாக் பண்ணின..?"
"இல்லைன்னா.."
அவள் முகம் குங்குமமாய் சிவந்தது.. அதை ஆசையுடன் பார்த்தவன் அவளது கன்னத்தை நிமிண்டி..
"இல்லைன்னா..?" என்று தூண்டினான்..
"நீங்க.."
"நான்.."
"சேர்ந்து குளிக்கலாம்ன்னு அடம் பிடிப்பீங்க.."
இரு உள்ளங்கைகளையும் குவித்து முகத்தை மூடிக் கொண்டாள் நந்தினி.. விரலிடுக்குகளில் அவனைக் கள்ளப் பார்வை பார்த்ததில்..
"என் நந்தினி.." என்று அவன் கள்வெறி கொண்டான்..
"ரவி.." பேச முடியாமல் அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் நந்தினி..
"ஒன்றாய் குளித்தால்தான் என்னடி..?"
அவன் வம்பு செய்ததில் அவளது வெட்கம் அதிகரித்தது..
'வாயடிக்கிறதெல்லாம் சும்மா..'
அவளது பெண்மையின் மென்மை தன்மையில் மனம் நனைந்தவனாய் இளநகையுடன் குளிக்கப் போனான் ரவிச்சந்திரன்.. அவனைப் பற்றிய நினைவுகள்
தந்த நாணப் புன்னகையுடன் அவள் கண்ணாடியில் மெலிதான ஒப்பனையில் ஈடுபட்டிருந்தாள்.. திடிரென அவள்மீது தண்ணீர் துளிகள் தெறித்தன.. சிலிர்த்து முகத்தை அழகாக சுருக்கியவள் திரும்பிப் பார்த்தாள்.. குளித்து முடித்த ஈர உடம்புடன் வந்திருந்த ரவிச்சந்திரன் தலையைச் சிலுப்பித் தலையில் இருந்த நீர்த்துளிகளை அவள்மீது சிதற விட்டுக் கொண்டிருந்தான்..
'இவன் தெரிந்து செய்கிறானா..? இல்லை தெரியாமச் செய்கிறானா..?' அவள் தடுமாறிப் போனாள்..
அப்படியே 'ரோஜா' திரைப்படத்தின் காட்சிதான்..
'மனசுக்குள்ள அரவிந்தசாமின்னு நினைப்பு..'
உதட்டைச் சுழித்து அழகு காட்டியவளின் முந்தானைச் சேலையைத் தன் தலைமீது போர்த்தித் துவட்டி விடும்படி அடம் பிடித்தான் அவன்..
தாள முடியாத தவிப்புடன் மறுக்கவும் முடியாமல் துவட்டவும் முடியாமல் தினறினாள் நந்தினி..
அவன் வேறு அவள் வேறு அல்ல.. ஆனாலும் அவனுக்கும் அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்ற தயக்கம் நெருஞ்சி முள்ளாய் ஊடாடி நெஞ்சில் நிரடுகின்றதே..
"ஏண்டி..?"
அவன் கேள்விக்கு என்னவென்று பதிலுரைப்பாள்..? அவனோ அவளிடம் விலகலை உணர்ந்தவனாய்..
"ஏன்..?" என்று சீறினான்..
"நத்திங் பாஸ்.." தயக்கத்துடன் தன் முந்தானையால் அவனது தலையைத் துவட்டி விடத் தொடங்கினாள் நந்தினி..
"ஒன்றும் வேண்டாம் போ.." அவளைத் தள்ளி விட்டு விட்டு டவலைத் தேடினான் ரவிச்சந்திரன்..
அவன் விலக்கி விட்டதைத் தாங்க முடியாதவளாய்..
"நான் துவட்டி விட்டுக்கிட்டு இருக்கேனில்ல..?" என்று கோபித்துக் கொண்டாள் நந்தினி..
திரும்பி தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்தான் அவன்..
"பாஸ்..?" குரல் நடுங்க அழைத்தாள் அவள்..
"நான் யாரோ.. நீ யாரோன்னு நினைத்துட்ட இல்ல.."
"இல்லை பாஸ்.."
"உனக்கும் எனக்கும் இன்னும் மேரேஜ் ஆகலை.. அதுதானே உன் நினைவு..?"
மிகச் சரியாக அவள் மனதைக் கணித்து விட்டான் என்ற குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தாள் நந்தினி..
"அதனால் என்னடி..? எனக்கு மேரேஜ்ன்னு ஒன்று நடந்தா அது உன்னோடுதான் நடக்கும்.. தட் ஸேம் டைம்.. உனக்கும் மேரேஜ்ன்னு ஒன்று நடந்தால் என்னோடுதான் நடக்கனும்.. நடந்தே ஆகனும்.. மைண்ட் இட்.."
அவனது கர்ஜனையில் நடுங்கிப் போனாள் நந்தினி.. சிறிய விலகலுக்கு இந்த அளவுக்கு கோபம் கொள்வானா..?
"நீலிமலைக்காட்டில இதுபோல நீ விலகி நிற்கலைடி.. இயல்பா பக்கத்தில வந்த.. அப்ப வராத கள்ளம் இப்போ எப்படிடீ உன் மனதில் வந்தது..?"
"பாஸ்.."
"நீ என்னை சந்தேகப் பட்டுட்ட இல்ல.."
"இல்லை பாஸ்.."
"உனக்குத் தெரியுமாடி..? உன்னை என் மனசில் நினைத்த அந்த செகண்டில இருந்து வேற ஒரு பெண்ணை நெருங்க விட்டதில்லை.."
'இது ஒரு பெருமையா..?'
நந்தினி அவனைச் சமாதானப் படுத்தும் முயற்சியை கை விட்டு எங்கோ வெறித்துக் கொண்டு நின்றாள்.. மூர்க்கமாக அவள் முகம் பற்றித் தன் பக்கமாக திருப்பினான் ரவிச்சந்திரன்..
"என்ன..?" என்றான்..
"ப்ளீஸ்.. உங்களைப் பெண்கள் சுத்தின பெருமையையும் நீங்க அவங்களை இக்னோர் செய்த பெருமையையும் என்னிடம் சொல்லித் தம்பட்டம் அடித்துக்காதீங்க.. எனக்குக் கேட்கப் பிடிக்கலை... கஷ்டமா இருக்கு.." நந்தினியின் கண்களில் கண்ணீர் அரும்பி விட்டது..
"ஏய்ய்.. ச்சீ.. அழக் கூடாது.." மனத்தாங்கலை மறந்தவனாக அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான் ரவிச்சந்திரன்..
மழலையாக தன் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்திய காதலியின் மீது அவனுக்குள் மூண்டிருந்த கோபம் காணாமல் போய்விட்டது..
"ஸாரிடி.." உண்மையான வருத்தத்துடன் சொன்னான்..
அவள் பதில் சொல்லாமல் அவனிடமிருந்து விலகி முந்தானைச் சேலையால் அவனது தலையைத் துவட்டி விட ஆரம்பித்தாள்..
"வேண்டாம்.. விடு.. நானே துவட்டிக்கிறேன்.." அவன் டவலைக் கையில் எடுத்தான்..
வேகமாக அவன் கையிலிருந்த டவலைப் பறித்து எறிந்த அவளது விழிகளில் தீப்பொறி பறந்தது..
"என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படியிருக்கு..? ஏன்..? நான் துவட்டி விட்டா ஆகாதா..? துரை தானாத்தான் தலையைத் துவட்டிக்குவாரா..?"
கச்சை கட்டிக் கொண்டு அவள் உரிமை பாராட்டியதில் அவன் மனதில் காதல் வந்தது.. அவள் காட்டிய நெருக்கம் அவனைத் தாலாட்டியது..
"நீதானேடி தயங்கின..?"
"தயங்கினா..? நீங்க விலகிப் போயிருவீங்களா..?"
"விலகிப் போகிறதா..? உன்னை விட்டா..? நானும் விலக மாட்டேன்.. உன்னையும் விலக விட மாட்டேன்.."
"டயலாக்கெல்லாம் பிரமாதம்தான் சாரே.."
"ஆள்தான் பிரமாதமா இல்லைங்கறியா..?"
"ஹை.. நீங்க டக்கரா இருக்கீங்கன்னு நான் ஜொள்ளுறதை நீங்க கேட்கனுமாக்கும்.. செம ஐடியாதான் சாரே.."
"உன் வாய் இருக்கே வாய்.."
அவளது உதடுகளை நிமிண்டினான்.. இதழ் சுழித்து நாக்கை நீட்டி அழகு காட்டியவள் அவனது தலையைத் துவட்டி விடுவதைத் தொடர்ந்தாள்..
"நந்தினி.."
"ம்ம்ம்.."
"அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்டி.."
"எப்போது சொன்னதை..?"
"உன்னைக் காதலிக்கும்போது சொன்னதை.."
"என்ன சொன்னீங்களாம்..?"
"என் மனதில் எந்தப் பெண்ணைப் பற்றிய காதல் உணர்வும் வந்ததில்லைடி.. எந்தப் பெண்ணையும் நான் காதலித்ததில்லை.. நான் மனதில் நினைத்த.. காதலித்த.. ஒரேயொரு பெண் நீதாண்டி.. நீ மட்டும்தாண்டி.."
காதல் மிகுதியால் கரகரத்து அவனது குரல்..! அவனை மார்போடு அனைத்துக் கொண்டாள் நந்தினி.. அவளது இடுப்பில் கைவைத்து இழுத்து அணைத்து முகம் பதித்தான் ரவிச்சந்திரன்.. அவனது உச்சந்தலையில் முகம் புதைத்தவளுக்குள் காதல் பொங்கியது..
'என்மீது இத்தனைக் காதலை வைத்திருக்கிறாயே.. என்ன தவம் செய்தேன் நான்..'
குழந்தையாய் இருந்தவளைக் குமரியாய் மாற்றியிருந்தது அவனுடைய காதல்.. ஒருவர் மீதான காதலை மற்றொருவர் உணரப் பேசத் தோன்றாமல் மௌனத்தில் உரைந்து சிலையாகியிருந்தார்கள் அவர்கள்..
'பேச மறந்து சிலையாய் இருந்தால்..
             அதுதான் தெய்வத்தின் சன்னதி..
    அதுதான் காதல் சன்னதி..'
காலத்தால் அழியாத காவிய வரிகள்.. கண்ணதாசன் எனும் மகத்தான கவிஞன் வரைந்த கவி வரிகள்.. அவற்ர்க்கு உயிர் கொடுத்து சிலையாய் சமைந்திருந்தவர்களை தட்டியெழுப்பியது செல்போனின் மணியொலி..
"இது மட்டும் இல்லைன்னா.." சிரிப்புடன் விலகி செல்போனை காதுக்குக் கொடுத்தான் ரவிச்சந்திரன்..
டவளுக்காக அவன் அறையை விட்டு வெளியேற.. பின் தொடர்ந்த நந்தினியின் மனதில் அமைதி விரவியிருந்தது.. இனம் புரியாத பயங்களையும், தயக்கங்களையும் உள்ளடக்கிய கேள்விகளுக்கான பதில் கிடைத்து விட்டதைப் போல உணர்ந்தாள்..
நீரைக் கிழித்துக் கொண்டு சென்ற படகின் அழகு அவள் மனதைக் கவர்ந்து இழுத்தது.. பால்கனி சோபாவில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. ஆடம்பரப் படகு வீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்வது தான்தானா என்ற சந்தேகம் கணநேரம் வந்து போனது..
வேம்பனாடு ஏரியின் அழகு மனதை மயக்கியது.. மயங்கிய மனதை மேலும் மயக்கிய மனோ ரம்யமான காட்சிகள் அவளைச் சுற்றி வலம் வந்தன.. நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் படகின் மீது ஓங்கியடிக்கும் நீரலைகளின் ஒலி.. ஏரியின் இருபக்கமும் பச்சைப் பசேலென காட்சியளிக்கும் வயல்வெளி.. கால்வாய் வலை பின்னல்கள்.. அவற்றில் பயணிக்கும் ஓடம் போன்ற சிறு படகுகள்..
பிரிந்து செல்லும் கால்வாயின் ஓரமாக இருந்த வயல்வெளிகளில் நாரைகள் இருந்தன.. தென்னந் தோப்புகளில் கூடு கட்டியிருந்த பறவைகள் கூட்டமாக பறப்பதைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது.. காயலின் ஊடே ஏரி.. அதிலிருந்து பிரியும் கால்வாய்கள் என ஆலம்புழாவின் அழகு மனதை அள்ளுவதாக இருந்தது.. படகின் அருகே பறந்து வந்த மீன் கொத்திப் பறவையொன்று மீனைக் கவர்ந்து செல்லும் காட்சியைப் பக்கத்தில் பயணித்த படகிலிருந்த ஒருவன் செல்போனில் படம் பிடித்தான்..
தண்ணீரின் கரையை ஒட்டித் தீவுகள் காட்சி தந்தன.. ஆங்காங்கே கரைகளில் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.. நந்தினிக்கு நீலிமலைக் காட்டில் அவளும் ரவிச்சந்திரனும் மீன் பிடித்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன..
'நீ பிடித்த மீன் உனக்கு.. நான் பிடித்த மீன் எனக்கு..' என்று அவன் பயமுறுத்தியது நினைவுக்கு வந்ததில் அவளது இதழ்களில் சிரிப்பு விரிந்தது..
"என்னடி..? உனக்கு நீயாய் சிரிச்சுக்கற..?" ரவிச்சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து ஓட்டிக் கொண்டான்..
அவள்மீது அவன் கவிழ்ந்து சாய்ந்திருந்ததில் சொக்கிப் போன நந்தினி அவன் மீது சாய்ந்து அவர்கள் மீன் பிடித்த கதையை நினைவு படுத்தினாள்..
"எனக்கு ஒரு பீஸ் மீனாவது கிடைக்குமான்னு நான் பயந்து போனேன் தெரியுமா..?"
"ஹா.. ஹா.. அது மறக்குமா..? ஆமாம்.. பத்து மணியாகப் போகுது.. இன்னும் பிரேக் பாஸ்டை மொக்கலையே.. என்னடி ஆச்சு..? பசிக்கலையா..?"
அவன் மென்மையாக வினவினான்.. அவள் குடை போன்ற ஜிமிக்கிகள் ஆட அழகாக தலையை அசைத்து..
"ஊஹீம்.." என்றாள்..
"உலக அதிசயத்தில் இதையும் ஒன்றாச் சேர்த்துடனும்.."
"எழுதிப் போடுங்க பாஸ்.."
"ஏன் பசிக்கலை..?"
"தெரியலை.. உங்க பக்கத்தில் இருந்தால் பசியே தெரிய மாட்டேங்குது.."
குழந்தையாகச் சொன்னவளை பிரியத்துடன் அணைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. எங்கே நானென்று தேடட்டும் என்னை என்று அவன் தேடிய காதல் கிடைத்து விட்டதில் அவன் மனதிலும் அமைதி விரவியது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -195
எண்ணியிருந்தது ஈடேற -195
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-195.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/enniyirunthathueedera-195.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy