எங்கிருந்தோ ஆசைகள். -9

9 உன் கண்ணிரண்டும் எனைத்தேடி... அலைபாய ஆசை கொண்டேன்... அர்ஜீனின் கண்கள் மின்னின.. ரகசியச் சிரிப்பில் குழுங்கும் அந்தப் பெண்களைப...


9
உன் கண்ணிரண்டும் எனைத்தேடி...
அலைபாய ஆசை கொண்டேன்...


அர்ஜீனின் கண்கள் மின்னின.. ரகசியச் சிரிப்பில் குழுங்கும் அந்தப் பெண்களைப் பார்த்தபோது அவன் உள்ளத்தில் பரவிய புத்துணர்வை அதற்கு முன்னால் அவன் உணர்ந்ததில்லை..
அவனுடைய உலகமே வேறு.. அங்கே இது போன்ற ரகசியப் பேச்சுக்களுக்கும்.. பொங்கும் சிரிப்பலைகளுக்கும் இடமே இருந்ததில்லை.. ஆசையோ.. கோபமோ.. எதுவாக இருந்தாலும் ஒன்று அதை நேரடியாக வெளிப்படுத்தி விடுவார்கள்.. இல்லையென்றால்.. அதுபோன்ற உணர்வே இல்லாததைப் போல உணர்வுகளை வெளிப்படுத்தாமல் நகர்ந்து விடுவார்கள்...
இதுபோல கள்ளமலர் சிரிப்பினில் மனதை நனைக்க மாட்டார்கள்...
காவ்யாவைப் பின் தொடர்ந்து வந்தவனுக்கு.. அவள் வண்டியை நிறுத்திவிட்டு.. இறங்கிச் சென்ற கடையைக் கண்டதும் ஆச்சரியமாகி விட்டது..
எந்தக் கடையை அவனுடைய அப்பா வாங்கியிருந்தாரோ.. அந்தக் கடைக்குள்தான் அவள் சென்று கொண்டிருந்தாள்...
'இந்தக் கடையைத்தானே நான் டேக் ஓவர் பண்ணனும்..?'
அவன் வந்த இடமும்.. அவள் சென்ற இடமும் ஒன்றாக இருந்ததில் அவனுக்குள் ஒர் ரகசிய சந்தோசம் உற்பத்தியானது...
'இந்தக் கடைக்கு எதுக்கு வந்திருக்கா..? கம்யூட்டர் வாங்க வந்திருப்பாளோ.. பார்த்தா அப்படித் தெரியலையே..'
அவன் காரை விட்டு இறங்கிய போதே.. வாசலில் காத்திருந்த கந்தசாமி ஓடி வந்தார்...
"ஐயா.. வணக்கமுங்க..."
சென்னையின் 'குட்மார்னிங்..'களுக்கு பழக்கப் பட்டிருந்தவனுக்கு மதுரை மண்ணின்.. 'வணக்கம்' வித்தியாசமானதாக இருந்தது...
'இது மதுரை...'
சற்று முன்னால் அந்த சிறு பெண் அவனை மிரட்டிய மிரட்டலை நினைத்துக் கொண்டவன் லேசான சிரிப்புடன் தலையசைத்தான்...
"ஐயா சாவியைக் கொடுத்தீங்கன்னா.. நான் காரைக் கொண்டு போய் கடைக்கு பின்னால இருக்கிற காரை நிப்பாட்டற இடத்தில நிப்பாட்டிட்டு வர்றேனுங்க..." கந்தசாமி பவ்யத்துடன் கேட்டார்..
கார்சாவியை அவரிடம் கொடுத்து விட்டு.. கடையின் படிகளில் தாவி ஏறினான் அர்ஜீன்.. உள்ளே சென்றவனின் விழிகள் விற்பனைப் பகுதியில் அவளைத் தேடின.. அவனோ.. விற்பனைப் பிரிவில் இருந்தவர்களிடம் ஒரு புன்னகையை சிந்தியபடி கடையின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் விட்டாள்..
அர்ஜீன் அவளைப் பின்பற்றிப் போக முயன்றபோது.. கடையில் நின்றிருந்த இளங்கோ அவனைத் தடுத்தான்..
"என்ன வேணும் சார்..?"
"இந்தக் கடைதான் வேண்டும்..."
மிடுக்காகச் சொன்ன அர்ஜீனை ஏற இறங்க பார்த்தவனின் விழிகளில் கேலி வந்தது...
"ஏன் சார்... இந்தக் கடையை விலைக்கு வாங்கப் போறிங்களா..?"
"ஆல்ரெடி வாங்கியாச்சு.. இப்ப இந்தக் கடையை டேக்ஓவர் பண்ண வந்திருக்கேன்.. வேர் இஸ் மிஸ்டர் துரியோதனன்...?"
அர்ஜீனின் அலட்சியமான கேள்வியில் இளங்கோவின் கண்களில் இருந்த கேலி மறைந்து பயம் கலந்த மரியாதை வந்தது...
அவன் அவசரமாக அர்ஜீன் உட்காருவதற்காக நாற்காலியை இழுத்துப் போட்டான்...
"வணக்கம் சார்.. உட்காருங்க சார்.. ஏஸியோட அளவைக் கூட்டி வைக்கவா சார்..."
"வேண்டாம்.." அர்ஜீன் மறுத்து விட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தான்...
"துரியோதனன் எப்போ வருவார்...?"
"இதோ போன் போட்டுக் கேட்கிறேன் சார்.. நீங்க வந்துட்டிங்கன்னு சொல்றேன்..."
"ஓகே.. அவர் வருகிற வரைக்கும் நான் கடையைச் சுத்திப் பார்க்கிறேன்..."
மிடுக்காக சொல்லிவிட்டு... காவ்யா திறந்து கொண்டு போன கதவைத் திறந்து பார்த்தான் அர்ஜீன்... அங்கே அலுவலகப் பகுதி தெரிந்தது...
'ஓ.. கடையோட பின்பக்கம்தான் ஆபிஸ் இருக்கா..?'
சத்தமில்லாமல் கதவை மூடியவன்.. அலுவலகப் பகுதிக்குள் சென்றான்.. வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த பழைய இரும்புப் பீரோக்கள்.. பாரம்பர்யத்தை மதிக்கும் மதுரையின் மரபைச் சுட்டிக் காட்டின...
அசைக்க முடியாத அந்த பீரோக்களின் பின்னால் மறைந்து நின்றான் அர்ஜீன்.. காவ்யாவும்.. பாவனாவும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் தெளிவாக அவன் காதில் விழுந்தன.. அவர்களின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்த போது ஏகாம்பரம் வந்துவிட.. அவன் நகர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான்.. சத்தமில்லாமல் வெளியே வந்தபோது... துரியோதனன் பரபரப்புடன் கடைக்குள் வந்து கொண்டிருந்தார்...
"ஸாரி.. ஸாரி.. லேட்டாகிருச்சு..."
"இட்ஸ் ஆல்ரைட்..."
"வாங்க.. உங்க கேபினைக் காட்டறேன்..."
துரியோதனன் மரியாதையுடன் அவனை அழைத்துக் கொண்டு போய் முதல்நாள் வரை அவருடைய அறையாக இருந்த அந்த ஆடம்பரமான.. வசதி மிகுந்த அறையில் அமர வைத்தார்...
"நீங்களும் உட்காருங்க.." என்று அர்ஜீன் சொன்னவுடன் எதிரே அமர்ந்தார்...
நேற்று வரை அவருடைய உடமையாக இருந்தது.. இன்று வேறொருவரின் உடமையாகி விட்டதில் அவர் மனதில் இருந்த வருத்தத்தை அவரது முகம் பிரதிபலித்தது...
அர்ஜீன் டேபிள் வெயிட்டை உருட்டியபடி அவரின் முகம் சொல்லிய உணர்வுகளை அவதானித்தான்...
"காலம் மாறுது... இல்லையா மிஸ்டர் துரியோதனன்..?"
"யெஸ்.. யெஸ்..."
அந்த ஏஸியின் இதமான குளிரிலும் வியர்த்த முகத்தின் வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தார் துரியோதனன்...
"அது தெரியாம நிறையப் பேர் ஆட்டம் போட்டிடறாங்க.." அர்ஜீனின் விழிகள் அவரைத் துளைத்தன...
"யெஸ்.. அஃகோர்ஸ்..."
அவன் எதற்காகச் சொல்கிறான் என்று புரியாதவராய் பூம்பூம் மாடு போல அதற்கும் தலையாட்டி வைத்தார் துரியோதனன்..
"நாங்க பரம்பரைப் பணக்காரங்கதான் மிஸ்டர் துரியோதனன்... கோடிஸ்வரக் குடும்பம்தான்.... இருந்தும் பாருங்க.. என் தாத்தா காலத்தில அவருக்கு தொழிலில் நஷ்டம் வந்ததாம்.. அதைச் சமாளிக்க அவர் டவுனில் இருந்த பெரிய கடையை விற்க வேண்டியதாய் போச்சாம்..."
அர்ஜீன் பேசப்பேச.. துரியோதனனின் களைத்த முகத்தில் வெளிச்சம் பரவியது... அவருக்கு அவன் ஆறுதல் சொல்கிறானென்று அவர் நினைத்து விட்டார்...
"அப்படியா..? உங்க குடும்பத்துக்கும் இப்படியொரு நிலைமை வந்துச்சா..? நான்கூட இந்தக் கடையை விற்க வேண்டி வரும்ன்னு நினைக்கவே இல்லைங்க..."
"நினைத்துப் பார்க்காததெல்லாம் நடப்பதுதானே வாழ்க்கை...?"
"அதைச் சொல்லுங்க..."
"பிஸினெஸ்ஸில் ஏற்ற தாழ்வுகள் சகஜமானது.. அதில் திடிர்ன்னு பணம் புரளும்.. திடிர்ன்னு பணம் வரளும்.."
"ஆமாமாம்..."
"அதைப் புரிஞ்சுக்காம என் டாடி கூடப் படிச்ச நண்பர் ஒருத்தர் கடையை விற்கப் போறியான்னு டாடியைத் தாழ்வாய் பேசினாராம்..."
"அடக்கடவுளே..! இப்படிக்கூட ஆளுக இருந்திருக்காங்க பாருங்க... அந்த மாதிரி மனுசங்களை யெல்லாம் கிட்டச் சேர்த்துக்கவே கூடாதுங்க..."
"நீங்க சொல்கிறதைத்தான் டாடியும் செய்தாராம்.. அதுக்குப் பின்னாலே.. அந்த நண்பரைக் கிட்டவே சேர்த்துக்கலையாம்.. விலக்கி வைச்சாராம்...."
"அதுதான் சரி.. அவனெல்லாம் ஒரு மனுசனா..?"
"இல்லேங்கறிங்களா...?"
"ஆமாம் தம்பி.. அவனெல்லாம் மனுசப் பிறவியிலே சேர்த்தியே இல்லை.. கூடப் படிச்ச நண்பன் கஷ்டத்தில இருந்தா சொல்லிக் காட்டறவனெல்லாம் ஒரு நண்பனா..?"
"அதுவும் இல்லைங்கறிங்களா..?"
"ஆமாம் தம்பி.. இப்ப என்னையே எடுத்துக்கங்க.. நாங்க பேராய் பொழைச்ச குடும்பம்.. திடிர்ன்னு பணமுடை வந்துருச்சு.. சமாளிக்க கடையை விற்க வேண்டியதாப் போச்சு.. இதுக்காக நான் குறைந்தவன்னு அர்த்தமாகிருமா..?"
"தெரிந்தால் சரி.. பை தி வே மிஸ்டர் துரியோதனன்.. எங்க டாடியோட பெயர் பார்த்தசாரதி..."
"வாட்..?"
துரியோதனனுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது.. அந்தக்கடை அர்ஜீனின் பெயரில் வாங்கப் பட்டிருந்தது.. அந்த அர்ஜீனின் அப்பாவும்.. அவர் கூடப் படித்த பார்த்தசாரதியும் ஒரே ஆளா..?
"அவரோட தாத்தா காலத்தில மதுரையில தொழில் பண்ணவந்தாங்களாம் அப்பா இந்த ஊரில்தான் ஸ்கூல் ஸ்டடிஸை முடிச்சாராம்.. அப்புறம்தான் சென்னை..."
துரியோதனனின் முகத்தையே ஊன்றிக் கவனித்தபடி பேசினான் அர்ஜீன்.. அவர் முகத்தில் வந்து போன ஓராயிரம் உணர்வலைகளை மதிப்பிட்டபடியே நிதானமாகப் பேசினான்...
"அப்ப அவர் கூடப் படிச்ச பிரண்டின் பெயர் துரியோதனனாம்... விசித்திரத்தைப் பார்த்தீங்களா மிஸ்டர் துரியோதனன் அவனெல்லாம் ஒரு மனிதனா..? அவனெல்லாம் ஒரு நண்பனான்னு நீங்க கேட்ட அந்த மனிதரின் பெயரும்.. உங்க பெயரும் ஒன்றுதான்..."
துரியோதனனின் முகத்தில் ஈயாடவில்லை.. அவர் சிரமப்பட்டுத் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.. அவனை ஏறிட்டுப் பார்த்தார்...
"நீங்க.. பார்த்தசாரதியோட மகனா...?"
"யெஸ்..."
"அவன்தான் இந்தக் கடையை வாங்கப் போகிறான்னு எனக்குத் தெரியாது..."
"ஆல்ரெடி... வாங்கிட்டார்..."
அர்ஜீன் அழுத்தமாகச் சொல்லியதில் துரியோதனனின் முகம் விழுந்து விட்டது...
"ஒருவேளை.. இது உங்களுக்குத் தெரிந்திருந்தா இந்தக் கடையை எங்களுக்கு கொடுத்திருக்க மாட்டிங்க இல்லையா...?"
அர்ஜீனின் கேள்வியில் துரியோதனன் நிமிர்ந்து பார்த்தார்...
"மத்தவங்களை விட நீங்க இந்தக் கடைக்கு அதிக விலை கொடுக்க முன் வந்தீங்க... நீங்க கொடுத்த விலையில பாதிக்குக்கூட மத்தவங்க இந்தக் கடையைக் கேட்கலை... இந்தக் கடையை விற்ற பணத்தில நான் என் கஷ்டங்களை சரி செய்துட்டு மேற்கொண்டு தொழில் தொடங்கவும் முடிந்திருக்கு.. ஆனாலும்கூட.. இந்தக் கடையை வாங்கறது என் கூடப் படித்த பார்த்த சாரதிதான்னு தெரிந்திருந்தா.. கட்டாயம் நான் இந்தக் கடையை அவனுக்கு விற்றிருக்க மாட்டேன்...."
துரியோதனனின் முகத்தில் தெரிந்த உறுதியில்
'கெட்டாலும் மேன்மக்கள்.. மேன் மக்களே..' என்று எண்ணிக் கொண்டான் அர்ஜீன்...
"உங்களைக் காயப் படுத்துகிறதுக்காக இந்தக் கடையை டாடி வாங்கலை.. இத்தனை வருசங்களா அவர் மனசில இருந்த காயத்தின் ரணம் ஆறனும்ங்கிறதுக்காகத் தான் வாங்கியிருக்கார்.."
"புரியுது.. அது அறியாப் பருவம்.. எதுசரி.. எது தப்புன்னு புரியாத வயசில பேசின பேச்சு.. அதை இத்தனை வருசமாகியும் பார்த்தசாரதி மறக்கலையே..."
"மறக்கிறதைப் போல நீங்க பேசலையே..."
"பார்த்தசாரதியிடம் நான் மன்னிப்புக் கேட்கனுமே.."
"வேண்டாம்.. காலங்கடந்த மன்னிப்பினால யாருக்கு என்ன லாபம்...? அதனால அவர் பட்ட மன வேதனையை திரும்பவும் வாங்கிக்க முடியுமா..? பேசின பேச்சுக்கள் நமக்கு எஜமானன் மிஸ்டர் துரியோதனன்... அது மத்தவங்களைக் காயப் படுத்துகிறதைப் போல இருக்கக் கூடாது.. அன்றைக்கு நீங்க மேலே இருந்தீங்க.. அந்த மமதையில.. வாய்க்கு வந்ததை பேசிட்டிங்க.. என்றைக்கும் அதே நிலைமையிலேயே நீங்க இருந்துவிட முடியுமா..? ஒருநாள் கீழே இறங்கித்தானே ஆகனும்...? அப்போ உங்க நிலைமை என்னவாகும்ன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா..?"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -9
எங்கிருந்தோ ஆசைகள். -9
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy