எங்கிருந்தோ ஆசைகள்.-7

7 சிந்துகின்ற மழைத்துளிகள்.. என்மனதைச் சொல்ல ஆசைகொண்டேன்.. இப்படியும் சிலர் உண்டு... வசதி வாய்ப்பு இருக்கும் போது கட்டித்தழுவி ...


7
சிந்துகின்ற மழைத்துளிகள்..
என்மனதைச் சொல்ல ஆசைகொண்டேன்..


இப்படியும் சிலர் உண்டு... வசதி வாய்ப்பு இருக்கும் போது கட்டித்தழுவி உறவு கொண்டாடுவார்கள்.. அதுவே சிறிதளவு குறைந்து விட்டால் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்... அப்படிப்பட்ட மனிதர்களுடன் நட்பு பாராட்டி.. ஒட்டி உறவாட முடியுமா..?
"அவன் கடை இப்ப விலைக்கு வருது ஆனந்தி.. என்னைச் சொன்னவனுக்கும் கடையை விற்க வேண்டிய நெருக்கடி வந்து விட்டது.. இந்தக் கடையை நான்தான் வாங்கப் போகிறேன்னு அவனுக்குத் தெரியாது... நான் தெரியவிடாம பார்த்துக்கிட்டேன்.. இந்தக்கடையை விலைக்கு வாங்கினால்தான் என் மனசில் எரியும்
நெருப்பு அணையும்ன்னு தோன்னுச்சு.. வாங்கிட்டேன்.. தப்பாம்மா...?"
"இல்லை டாடி.." மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாள் ஆனந்தி...
"என்னதான் அவனை ஜெயித்துட்டாலும்.. அவன் கடையை டேக் ஓவர் பண்ண என்னாலே போக முடியாதும்மா.. அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்...? நீயே சொல்லு..."
"வேண்டாம் டாடி.. நீங்க போக வேண்டாம்.. அர்ஜீனைப் போகச் சொல்றேன்..."
ஆனந்தி அர்ஜீனிடம் பேசினாள்..
"அர்ஜீன்.. நீ டாடியோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கனும்.."
"அவர் என் உணர்வுகளைப் புரிஞ்சுக்க மாட்டாரா...?"
"ஷ்யூர்.. அஃப்போர்ஸ்.. உன் எதிர்பார்ப்பு நியாயம் தான்.. பட்.. டாடிக்கு ஒன்றுன்னா தோள் கொடுக்க நீயும் நானும் ஓடனுமா வேணாமா...?"
"இதில் தோள் கொடுக்க என்ன இருக்கு...?"
"நிறைய இருக்கு.. உனக்குத் தெரியுமா அர்ஜீன்..? அந்தக்கடையை வித்திருக்கிறவர் நம்ம டாடி கூட ஒன்றாய் படித்தவராம்.. நாம பிறந்து வளர்ந்தது சென்னை.. ஆனா அப்பா பிறந்து வளர்ந்தது மதுரையாம்..."
ஆனந்தி தம்பியிடம் விளக்கினாள்.. அவள் சொன்னதைக் கேட்கக் கேட்க அர்ஜீனுக்கு கோபம் பொங்கியது...
"இவ்வளவு நடந்திருக்குதா...?"
"யெஸ்.. டாடி நிலைமையிலே யாராய் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாங்க.. நமக்கு அது வெறும் கடை.. டாடிக்கோ பல வருசங்களாய் அவர் மனதிலிருக்கிற ரணத்தை ஆற்றும் மருந்து..."
"ஐ ஃபீல் கில்ட்டிக்கா.. இது தெரியாம நான் அவர்மேல கோபப்பட்டுட்டேன்க்கா..."
"விட்டுத்தள்ளு.. நம்ம டாடிதானே.. அதையெல்லாம் கேர் பண்ணிக்க மாட்டார்.. அந்தக் கடையை வாங்கிட்டார்.. ஆனாலும் டேக் ஓவர் பண்ண அவரால போக முடியலைடா.."
"அங்கேதான் நம்ம டாடி நிற்கிறார்..."
"இதை நீ புரிந்துக்கிட்டாச் சரி..."
இப்படியாகத்தானே.. தந்தைக்காற்றும் கடமையாக வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்த அர்ஜீன்.. மதுரைப்பக்கம் பார்வையைத் திருப்பினான்... அவன் வந்து விட்ட செய்தியை அறிந்ததும் அவரே அவனைப் பார்க்க வந்தார்.. முறைப்படி கடைக்கு வந்து கணக்குகளை வாங்கிக் கொள்ள அவன் கிளம்பியிருக்கிறான்...
'காத்திருக்கட்டும்.. கூடப் படிக்கிறவன் பண நிலைமையை வைச்சு பழகறவனெல்லாம் என்ன மனிதன்..? இவனுக்கெல்லாம் ஓடிப் போய் நிற்கனுமா..? காத்துக்கிடக்கட்டும்...'
அவன் மனதில் கோபம் மையம் கொண்டிருந்தது.. பார்த்தசாரதியின் மனதில் இப்படியொரு வடு இருக்கக் கூடும் என்று அவனும் சரி.. ஆனந்தியும் சரி.. நினைத்தும் பார்த்ததில்லை..
அந்தக் கோபத்துடனே கிளம்பியவனின் காரைத்தான் காவ்யா கண்டம் பண்ணிவிட்டு.. அதற்காக வருத்தப் படாமல் சண்டையும் போட்டு விட்டாள்...
அதுநேரம் வரை அர்ஜீனின் மனதிலிருந்த எரிச்சலும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விட்டன..
அவன் மனதில் உல்லாசம் மையம் கொண்டது.. அதுநாள்வரை அவன் பார்த்த பெண்களிலிருந்து காவ்யா முற்றிலுமாக வித்தியாசப்பட்டாள்.. அவன் கவனத்தைக் கவர முயன்ற பெண்களையே பார்த்துப் பழகியிருந்தவனின் கவனத்தை முதன் முறையாக எந்தவித முயற்சியுமின்றி அவள் கவர்ந்து விட்டாள்...
முன்னால் போய் கொண்டிருந்த அவளின் வண்டியின் வேகத்தைப் பார்த்தவனுக்கு.. இவளுக்கேத்த வண்டி என்றே தோன்றியது...
'இந்த ஓட்டை வண்டியையும் இந்த அளவுக்கு ஸ்பீடா ஓட்டறாளே...' மனதுக்குள் பாராட்டிக் கொண்டான்...
அவன் பின்தொடர்வதைக் கவனிக்காதவளாக.. தன் போக்கில் வண்டியை விட்டவள் இறங்கி நின்ற இடத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் உயர்ந்தன..
'இவ இங்கேதான் வேலை பார்க்கிறாளா...?'
புயல் போல உள்ளே வந்த காவ்யாவைக் கவனிக்காமல் கந்தசாமியிடம் கதையளந்து கொண்டிருந்தாள் பாவனா..
"ஈஸ் இட்..? ஐ கானட் பிலிவ் திஸ்..."
"அப்படின்னா..?" அந்த கந்தசாமி விழித்தார்..
அவருக்கு தமிழே தரிங்கனத்தோம் போட்டால்தான் கொஞ்சமாக வந்து சேரும்.. அதில் இப்படி இங்கிலிஷில் பாவனா பீட்டரை விட்டால் அவர் பாவம் என்னதான் பண்ணுவார்...?
"அப்படியா.. நம்ப முடியலையேன்னு சொன்னேன்.."
"இதை முதலிலேயே சொல்றதுக் கென்னம்மா..?"
"ஏன் கந்தசாமி.. உங்களுக்கு இங்கிலிஷ் தெரியாதா...?"
"அதை என்ன கழுதைக்கு தெரிஞ்சுக்கனும்..?"
"ஏன்..? நாங்கள்ளாம் தெரிஞ்சுக்கலையா..?"
"ஏம்மா..? நீங்களும் நானும் ஒன்னா..? நீங்கள்ளாம் கம்யூட்டரில கணக்கு எழுதிக்கிட்டு இருக்கீங்க.. நானோ.. கம்யூட்டர் விக்கிற கடையை காவல்காத்துக்கிட்டு இருக்கேன்... எனக்குத் தெரிஞ்சவரைக்கும் போதும்மா.."
"யு ஸீ மிஸ்டர் கந்தசாமி..."
"பாரும்மா.. என்னமோ கேக்கனும்னு கூப்பிட்டீங்க.. நானும் நம்ம ஆபிசிலே கணக்கு வழக்கைப் பாக்கற புள்ளையாச்சேன்னு நின்னு ஏன்னு கேட்டேன்... அது ஒரு குத்தமாம்மா...?"
"நோ.. நோ..."
"அப்புறம் எதுக்காகம்மா.. இந்த எழவெடுத்த இங்கிலிஷை அமிலத்தைக் காய்ச்சி என் காதில ஊத்தறதைப்போல பேசி வைக்கறிங்க..? உங்களுக்குத் தமிழ் தெரியாதா...?"
"ஏன் தெரியாது.. நல்லாத் தெரியுமே..."
"அப்ப.. அதில பேசித் தொலைக்கிறதுக் கென்னம்மா..?"
"என்னவோ போங்க கந்தசாமி.. உங்களைப் பார்த்தாலே எனக்கு இங்கிலீஷ்தான் வாயில வருது..."
"எனக்கு வேற என்னென்னமோ வாயில வருது.. பொம்பளைப் புள்ளையாச்சேன்னு பாக்கறேன்.. எங்க வீட்டுப் பக்கம் இப்புடி யாராவது பேசியிருந்தாங்கன்னு வையுங்க.. நடக்கறதே வேற..."
ஆள் பார்க்கிறதற்கு நோஞ்சானைப் போல இருந்தாலும்.. அந்தக் கந்தசாமியின் மீசை அவரின் முகத்தில் பாதியை மறைத்து பெரியதாக இருந்து வைத்தது...
அந்தக் கடா மீசையை முறுக்கி விட்டபடி கந்தசாமி கொலைவெறிப் பார்வையை பார்த்ததில்..
'ஆத்தி..' என்று மனதுக்குள் அரண்டு போனாள் பாவனா...
எதனால் மதுரை மாநகரின் மக்கள்.. ஆங்கில மொழியைக் கேட்டால் கொலைவெறிக்கு ஆளாகிறார்கள் என்ற விவரம் அவளுக்கு பிடிபடவே இல்லை...
"இப்ப நான் என்னத்தைச் சொல்லிப்புட்டேன்னு நீங்க மீசைமேல கை போடறிங்க கந்தசாமி..? நாமள்ளாம் ஒரே ஆபிசில வேலை பார்க்கிறோம்.. ஒன்னுக்குள்ள ஒன்னு..."
"இதப்பாருடா.. அம்மாவுக்கு இம்புட்டு நேரமும் இங்கிலீஷா வாயில வந்துச்சு.. இப்ப மட்டும் தமிழ்ல பொளந்து கட்டறாங்க..."
"ஆயிரம்தான் இருந்தாலும் தமிழ் நம்ம தாய் மொழியில்லையா..?"
"அஃது.. அந்த நினைப்பு மனசில எப்பவும் இருக்கட்டும்..."
"எப்பவும் இருக்குதோ இல்லையோ.. உங்ககிட்ட பேசும்போது மட்டும் கண்டிப்பா நினைப்பில இருக்கும்..."
"சந்தோசம்.. ஆமா.. அங்கே எனக்கு சோலிக்கழுதை ஆயிரம் இருக்கு.. அதைப் பாக்க விடாம.. நீங்க என்னா கழுதைக்கு என்னை நிப்பாட்டி வைச்சிருக்கீங்க...?"
"கழுதையை விடுங்க கந்தசாமி.. அது வேலையைப் பார்க்கப் போகட்டும்.. நீங்க நான் கேட்கிற தகவலைச் சொல்லுங்க..."
"அதென்ன கழுதைத் தகவல்ம்மா..."
"கந்தசாமி.. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.. கழுதையை ஓட்டி விட்டுட்டு பேசுங்க..."
"அது கழுதை.. அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது.. நம்ம பேச்சுக் கழுதையில அந்தக் கழுதை எதுக்கு வரப் போகுது...?"
"கந்தசாமி.. தெரியாத்தனமா உங்ககிட்ட இங்கிலீஷில பீலா விட்டுட்டேன்.. அதுக்காக.. நாலு அடி வேண்டும்னாலும் அடிச்சுக்கங்க.. ஆனா கழுதைக்கு மட்டும் டாட்டா சொல்லிருங்க..."
பாவனா கையெடுத்தே கும்பிட்டு விட.. அடர்ந்த மீசையின் இடையே பல் வரிசையே தெரியாமல் சத்தமாக சிரித்து வைத்தார் கந்தசாமி...
"இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும்..."
"தௌசன்ட் டைம் ஸாரி சொல்லிடறேன்... அடச்சீ.. திரும்பவும் இங்கிலீஷே வந்து தொலைக்குது.. பாருங்க கந்தசாமி.. தெரியாம பேசிப் புட்டேன்.. இதுக்காக
நீங்க மறுபடியும் கழுதையை கூப்பிட்டாராதீங்க... ப்ளீஸ்..."
"போகுது விடுங்க.. உங்களுக்கு இப்ப என்ன தகவல் வேணும்...?"
"நம்ம கடையை வித்துட்டாங்களாமே..."
பாவனா குரலைத் தாழ்த்தி வினவ.. அவளை விசித்திரமாகப் பார்த்தார் கந்தசாமி...
"ஏம்மா.. இது மதுரையே அறிஞ்ச விசயமாச்சே.. இதையென்ன கழுதைக்காக ரகசியப் பேச்சைப் போல கேட்கறிங்க..."
கழுதையை கந்தசாமியால் விடவே முடியாது என்று தெரிந்த பின்னால்.. அதை விடச் சொல்லும் வேலைக் கழுதையை வெட்டியாகச் செய்யாமல்.. கழுதையைக் கவனிக்காமல் பேச்சைத் தொடர்வதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் பாவனா...
"நிஜமாவா.. இது மதுரைக்கே தெரிந்த நியுஸா..?" கண்களை விரித்தாள்...
"ஆமாம்மா.. ஆமாம்.. இதை வாங்கியிருக்கிறவரு பெருங்கொண்ட பணக்காரராம்..."
'பெருங்கொண்ட' என்ற வார்த்தைக்கான அர்த்தம்.. மிக அதிக அளவிலானது என்று தானாகப் புரிந்து கொண்ட பாவனா...
"ஓ.." என்று உதட்டைக் குவித்தாள்...
"அவங்க மெட்ராஸ்காரங்களாம்... லண்டனில படிச்சவங்களாம்..."
"இதைப் பாருடா..." என்று பேச்சு ஆர்வத்தில் சொல்லிவிட்ட பாவனா.. கந்தசாமியின் கை மீசையை முறுக்க ஆரம்பித்ததும்.. தவறை உணர்ந்து கொண்டவளாக அலறினாள்...
"ஆன்னா.. ஊன்னா.. மீசையிலேயே கவனமாகிடறேங்களே.. நீங்க மட்டும் இதைப்பாருடான்னு சொல்லலாம்.. நான் சொல்லக் கூடாதா...?"
"நீங்களும்.. நானும் ஒன்னாம்மா...?"
"அதெப்படி ஒன்னாக முடியும்..? உங்களுக்கிருக்க கெடாமீசை எனக்கு இருக்கா..? இல்லையே.. ஸோ.. நீங்க வேற.. நான் வேற..."
பாவனா தணிந்து பேசியதில் கந்தசாமி மீசையை மறந்துவிட.. அவள் நிம்மதிப் பெருமூச்சுடன் மீண்டும் அவர் வாயைக் கிளற ஆரம்பித்தாள்...
"லண்டனில படிச்சவரு எதுக்காக மதுரைப் பக்கம் ஒதுங்கறாரு..?"
"யாருக்குத் தெரியும்..? ஆனா.. ஆளு பார்க்கறதுக்கு வாட்டசாட்டமா.. அர்ச்சுன மகராசனைப் போலவே அம்புட்டு அழகா இருக்காரில்ல..."
"வாவ்..! சூப்பர் இன்பர்மேசன் கந்தசாமி.. இது போல முதலாளியிருந்தா.. வேலை பாட்டுக்கு ரேஸில ஓடற குதிரையைப் போல ஓடிரும்ல்ல... ஆமா.. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்...?"
"என்னம்மா இப்படிக் கேட்டுப்புட்டிங்க.. எனக்குத் தெரியாததும் இந்த மதுரையில இருக்கா..? அவரு நம்ம ஊரு பாண்டியன் ஹோட்டலில்தான் ரூம் போட்டுத் தங்கியிருக்காரு.. விடியக்காலமே அவரப் பார்க்க நம்ம பழைய முதலாளி போனாரில்ல.. அப்ப நானும் கூடப் போனேன்..."
"வெல்.. நம்ம முதலாளி.. அதுக்குள்ள பழைய முதலாளியா ஆகிட்டாரா..? பிழைச்சுக்குவீங்க கந்தசாமி..."
"நீங்க பிழைக்க மாட்டிங்களா...?"
திரும்பவும் கந்தசாமியின் கை மீசையைத் தொடப்போக....
"கொஞ்ச நேரத்துக்கு உங்க மீசையை மறந்துருங்க கந்தசாமி.." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள் பாவனா...
"அது நீங்க பேசற விதத்துலதாம்மா இருக்கு.." கறாராய் சொல்லி விட்டார் கந்தசாமி...
"எதுக்கும் நான் யோசிச்சே பேசறேன்.. ஆமாம் கந்தசாமி.. ஆள் பார்க்க அம்சமா இருக்கார்.. ஓகே.. குணம் எப்படி..?"
"ஏம்மா.. பொண்ணு.. கிண்ணு கொடுக்கப் போறிங்களா...?"
"வாட் ஏ பிட்டி..! ஏன் கந்தசாமி என்னைப் பார்த்தா பொண்ணாத் தெரியலையா..? நான் அவருக்கு மேட்ச் ஆக மாட்டேனா...?"
அந்த கந்தசாமியின் பார்வையே 'இல்லை' என்று சொல்லி விட்டது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.-7
எங்கிருந்தோ ஆசைகள்.-7
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy