எங்கிருந்தோ ஆசைகள். -6

6 சில்லென்ற மழைக்காற்றில்... உன்முகம் வருட ஆசை கொண்டேன்... ' இன்ட்ரெஸ்டிங்...! ' அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்ட...


6
சில்லென்ற மழைக்காற்றில்...
உன்முகம் வருட ஆசை கொண்டேன்...


'இன்ட்ரெஸ்டிங்...!'
அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜீனின் முகத்தில் புன்முறுவல் வந்தது...
அதுநேரம்வரை அவன் மனதிலிருந்த எரிச்சல் மறைந்து.. ஒர் மயிலிறகு மனம் வருடுவதைப் போல உணர்ந்தான் அவன்..
'இவ யாராய் இருப்பா...?'
பெயர்கூடச் சொல்லாமல் பறந்து விட்டவளின் முகவரியை அறிந்து கொள்ள அவன் மனம் துடித்தது.. அவசரமாக காரில் ஏறி.. காவ்யா போன திசையிலேயே காரை ஓட்டினான் அவன்...
தூரத்தில் காவ்யா செல்வது அவன் பார்வை வட்டத்துக்குள் வந்தது...
'பிடிச்சிட்டேன்..' அவன் மனதில் வெற்றிப் பெருமிதம் வந்தது...
இடைவெளி விட்டுக் காரைப் பின்தொடர்ந்தான்.. அவளை அவன் தொடர்ந்து கொண்டிருப்பதை அறியாதவளாய் கைனடிக் ஹோண்டாவை புயல் வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தாள் காவ்யா...
'இந்த வேகத்தில போனா.. காரில இடிக்க மாட்டாளா...?'
லேசாகச் சிரித்துக் கொண்டான் அர்ஜீன்.. செய்வதையும் செய்து விட்டு.. ஊரைக் கூட்டி நியாயம் கேட்ட அவளின் அடாவடியில் அவன் மனதின் சிரிப்பு அதிகமானது...
'ராணி மங்கம்மா..! சரியாத்தான் சொல்லியிருக்கா...'
அவளின் பெயர் பொருத்தத்தை ரசித்துச் சிரித்துக் கொண்டான் அவன்..
அன்று காலைவரை இந்தச் சிரிப்பு அவனிடம் வரவில்லை.. எரிச்சலுடன்தான் அவன் இருந்தான்...
'அவனவன் கம்யூட்டர் பிஸினெஸ்ஸை பெங்களூருக்கும்.. ஹைதராபாத்துக்கும் கொண்டு போய்க்கிட்டு இருக்காங்க.. இதில.. மதுரையில இருக்கிற கடையை விலைக்கு வாங்கனுமா..?'
அவனுக்கு சுத்தமாக இந்த வியாபாரத்தைப் பிடிக்கவில்லை.. அவன் சொல்வதை பார்த்தசாரதி கேட்டால்தானே...
"உனக்குப் புரியாது அர்ஜீன்.. இது தேவையான ஒன்று..." என்று சொல்லிவிட்டார்...
"எதுப்பா தேவை..? இது என்ன ஃபாரின் காண்ட் ராக்டா..? நாம் தேவைன்னு சொல்ல..?" அர்ஜீன் படபடத்தான்...
"இதில சில விசயங்கள் மறைந்திருக்கு அர்ஜீன்.. இப்போதைக்கு நாம அந்தக் கடையை டேக் ஓவர் பண்ணியாகனும்.. அங்கே இருக்கிறவங்களுக்கு புது முதலாளி யார் என்பதை தெரியப் படுத்தியாகனும்.. ஸோ.. நீ மதுரைக்கு போகிற..."
பேச்சுக்கு முற்றுப் புள்ளியை வைத்து விட்டார் பார்த்தசாரதி.. இதற்கு மேல் அவருடன் பேசப் பிடிக்காத  கோபத்தில் சுந்தரியிடம் சப்தம் போட்டான் அர்ஜீன்...
"இதுக்குத்தான் நான் பாரினைவிட்டு வரமாட்டேன்னு சொன்னேன்.. நீங்க கேட்கலை.. கண்ணில தண்ணியா விட்டிங்க... இப்பப் பார்த்தீங்களா..? இவர்கூட நான் போராட வேண்டியதா இருக்கு..."
"டாடி சொல்றதிலயும் ஏதாச்சும் ப்ளஸ் பாயிண்ட் இருக்கலாமே அர்ஜீன்..."
"நீங்க இப்படித்தான் பேசுவீங்கம்மா.. உங்க கிட்டயெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது..."
அர்ஜீனின் கோபத்தை சுந்தரியால் எப்போதுமே எதிர்கொள்ள முடிந்ததில்லை.. அவன் கோபத்தை எதிர் நோக்கும் சக்தி படைத்த ஒரே ஜீவனான ஆனந்திக்கு போன் போட்டாள் அவள்...
ஆனந்தி.. அர்ஜீனின் அக்கா.. அவனைவிட மூன்று வயது பெரியவளாக இருந்த போதும் அவனுடைய இனிமையான சிநேகிதி.. அவனுக்கு நடக்கக் கற்றுக் கொடுத்தவளிடமிருந்து அவன் வளர்ந்து வாலிபனான தருணத்தில் பிரிந்தான் அர்ஜீன்...
மென்மையான ஆனந்திக்கும்.. வன்மையான அர்ஜீனுக்கும் குண இயல்புகள் வேறுபட்டவையாக இருந்தன.. அர்ஜீன் அவன் வயதுப் பையன்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தான்.. அவன் உலகம் வேறானதாக மாறிப் போன போதிலும்.. அவனுக்கு ஆனந்திதான் கடிவாளம் போடுபவளாக இருந்தாள்...
"நைட் லேட்டா வந்தியா அர்ஜீன்...?"
"ம்ம்ம்.. பார்ட்டி..."
அவள் முகம் பார்க்காமல் முணுமுணுத்து வைக்கும் தம்பியின் மீது ஆனந்திக்கு பாசம் பொங்கும்...
"டாடி சத்தம் போட்டாருடா..."
"இப்பத்தான அவரைப் பார்த்தேன்... 'குட்மார்னிங் மை டியர் சன்' அப்படின்னாரே..."
"உன்னிடம் அப்படித்தான் சொல்லுவார்... அம்மாகிட்டத்தான் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுவார்..."
"வாட் கேன் ஐ டு ஃபார் தட்..? இவர் சப்தம் போடறாருங்கிறதுக்காக நான் பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியுமா..? இவர் பார்ட்டிக்கு போறதில்லையா...?"
"அது பிஸினெஸ் பார்ட்டிடா..."
"எனக்கும் அப்படித்தான் அக்கா... இவருக்காக என் பழக்கத்தை நான் மாத்திக்க முடியாது..."
"எனக்காக மாத்திக்கலாமில்ல..?"
இப்படிக் கேட்டவளிடம் முடியாது என்று சொல்ல முடியாமல் மௌனித்தான் அர்ஜீன்.. பார்த்தசாரதியிடம் முடியாது என்று அவன் சொல்லி விடுவான்.. சுந்தரி அவன் முகம் பார்த்துப் பேசவே நடுங்குவாள்.. தைரியமாக அவனிடம் பேசக்கூடியவள் ஆனந்தி மட்டும் தான்...
"பார்ட்டியை அவாய்டு பண்ண முடியாதுக்கா/"
"ஓகே.. சீக்கிரமா வீட்டுக்கு வரப்பார்..."
அவன் வந்தான்.. ஆனந்தி சொன்ன வார்த்தைக்காக.. பார்ட்டிகளில் கலந்து கொண்டாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான்...
அப்படிப்பட்ட ஆனந்தி சென்னையில்தான் வசித்தாள் வெளியூர்களில் இருந்து வந்த மாப்பிள்ளைகளைத் தட்டிக் கழித்து விட்டு சென்னையில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக சத்திய மூர்த்தியை தேர்வு செய்தவள் ஆனந்தி...
"என்னால சென்னையை விட்டுப் போக முடியுமாடா..?"
அந்த வகையில் அவள் குந்தவை.. ராஜராஜ சோழனின் அன்பு அக்கா.. அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல்.. பழையாறையிலேயே தேங்கி நின்றதைப் போல.. அர்ஜீனை விட்டுப் பிரிய மனமில்லாமல் சென்னையில் தேங்கி நின்றவள் ஆனந்தி...
அர்ஜீன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்.. ஆனந்தியிடமிருந்து போன் அழைப்பு அவனைச் சென்றடைந்து விடும்...
அந்தத்கால குந்தவைக்குத்தான் தம்பியிடம் தூது செல்ல வந்திய தேவன் தேவைப்பட்டான்.. இந்தக்கால ஆனந்தியின் கணவன் சத்தியமூர்த்தி அந்த வேலைகளையெல்லாம் செய்யக் கூடியவன் அல்ல என்பதோடு.. அதற்கான அவசியமே இல்லாமல் செல்போன் அவள் கையிலிருந்ததே..
"அர்ஜீன்..."
ஆனந்தியின் வாயிலிருந்து வரும் தம்பிக்கான இந்த அழைப்பில் ஒளிந்திருக்கும் பாசத்திலும்... பரிவிலும்.. வாத்சல்யத்திலும்.. சிநேகிதத்திலும் நெகிழ்ந்து போய்விடுவான் அர்ஜீன்...
அப்படி ஒற்றை அழைப்பில் தம்பியை கட்டுப்படுத்த முடிந்த ஆனந்தியிடம் அர்ஜீனனின் கோபத்தைப் பற்றிச் சொன்னாள் சுந்தரி...
"இவன் மதுரைக்கு போக மாட்டேன்கிறான்.. உன் டாடி என்னடான்னா இவன் மதுரைக்குப் போயே தீரனும்னு ஒற்றைக் காலில் நிற்கிறார்.. இவங்க இரண்டு பேருக்கும் இடையில மாட்டிக்கிட்டு படாதபாடு படறேன் ஆனந்தி..."
"அவன் காரணமில்லாம கோபப்பட மாட்டான்ம்மா.. டாடி இதைச் செய்கிறதுக்கு முன்னாலே அவனிடம் கன்சல்ட் பண்ணியிருக்கலாமே..."
இதுதான் ஆனந்தி.. அவள் சொன்னால் அர்ஜீன் கேட்டுக் கொள்வான் என்பதற்காக.. எதையும் யோசிக்காமல் அவனிடம் சொல்லிவிட மாட்டாள்.. அர்ஜீன் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்லி வாதாடுவாள்..
"இதை அவரிடம் யார் சொல்றது..? நீயே சொல்லு.."
"நீங்கதான் சொல்லனும்..."
"நான் சொன்னாக் கேட்டுக்கிறவரா உங்க டாடி...?"
"அதுக்கு அர்ஜீன் என்ன பண்ணுவான்..? அவனைக் கேட்காம அவனுக்குப் பிடித்தமில்லாம.. ஒரு பிஸினெஸ் டீலிங்ஸை டாடி முடிச்சிருக்கார்.. அந்த பிஸினெஸ் டீலிங்கை அவன் ஏத்துக்கனும்னு கட்டாயப்படுத்தறது நியாயமில்லைம்மா.. டேக் ஓவர் பண்ண டாடிதான் போகனும்... அர்ஜீனைக் கட்டாயப் படுத்தக் கூடாது..."
"இதை உன் டாடிகிட்ட நீயே சொல்லு ஆனந்தி..."
"என்னம்மா நீங்க...?"
சலித்துக்கொண்ட ஆனந்தி பார்த்தசாரதிக்கு போன் போட்டாள்...
"இது அப்படியில்லை ஆனந்தி.. அது பெரிய கடை.. அதில இருக்கிற கம்யூட்டரெல்லாம் தரம் வாய்ந்தது.. பாரினில இருந்து இம்போர்ட் பண்றாங்க.. நம்ம பிஸினெஸ்ஸீக்கு அந்தக் கடையை வாங்கறது உதவியாயிருக்கும்.."
"இது மட்டும்தானா டாடி..?"
புத்திசாலியான ஆனந்தி.. தகப்பனாரை மிகச்சரியாக கணித்து விட்டாள்.. அவர் எக்ஸ்போர்ட் கம்பெனியை நடத்துகிறவர்.. கம்யூட்டர்களை விற்பனை செய்யும் கடையை நடத்துகிறவர் அல்ல...
அவர் எதற்காக வேலை மெனக்கெட்டு.. பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட கோவில் நகரமான மதுரையிலிருக்கும் கம்யூட்டர்களை விற்பனை செய்யும் கடையை விலைக்கு வாங்க வேண்டும்..?
'எங்கேயோ இடிக்குதே...'
இடிக்கத்தான் செய்தது.. அதை பார்த்தசாரதியும் ஒப்புக் கொண்டார்...
"அந்தக் கடையின் ஓனரும்... நானும்.. மதுரையில ஒன்னாய் படிச்சவங்கம்மா.. அப்ப என்னோட தாத்தா மதுரையில தான் இருந்தாரு.. நம்ம பூர்விகம் திருநெல்வேலிப் பக்கம் ஆனா.. என் தாத்தா தொழில் பண்ண மதுரைக்கு வந்தாராம்..."
"ஓ..."
"அப்ப உன் தாத்தாவோட.. அதான்.. என் அப்பாவோட கம்பெனி நஷ்டத்தில ஓட ஆரம்பிச்சது.. அதைச் சமாளிக்க.. டவுனில் இருந்த பெரிய கடையை விற்கத் தீர்மானிச்சார் என் அப்பா..."
"சொல்லியிருக்கீங்க டாடி..."
"அதை பிரண்டாச்சேன்னு அவன்கிட்டப் பகிர்ந்துக் கிட்டேன்... அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா..?"
"என்ன சொன்னார்...?"
"கடையை விற்கிற அளவுக்கா உன் நிலைமை வந்துருச்சு..? இது தெரியாம நான் உன்கூட பழகிக்கிட்டு இருக்கேனேன்னு சொல்லிட்டான்ம்மா..."
எல்லா மனித ஜீவன்களும்.. வாழ்வின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சொல்லடிகளால் மனக்காயமடையத்தான் செய்கிறார்கள்.. சொல்லடி வாங்காத மனித ஜீவன் உலகில் இல்லையோ...
ஆனந்தியினால் பார்த்தசாரதியின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது...
அவர் நட்பை மதித்திருக்கிறார்.. நண்பனென்று நினைத்திருக்கிறார்.. தன் மனச்சுமையை அவனிடம் சொன்னால் சாய்ந்து கொள்ளத் தோள்கொடுப்பான் என்று நம்பியிருக்கிறார்...
ஆனால் அந்த நண்பன் அதைச் செய்யவில்லை.. வீழ்ந்து விட்டவனைத் தூக்கி விடக் கை கொடுக்காமல்... அவன் வீழ்ந்து விட்டானென இகழ்வாய் பேசும் நண்பனாக அவன் இருந்து விட்டான்...
இத்தனைவருடங்களாக அந்த நண்பன் சொன்ன சொல்லை அவர் நினைவில் வைத்திருக்கிறார் என்றால்.. அந்தக் காயம் மனதில் ஆறாமல் ரணமாக இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது...?
சும்மாவா சொன்னார்.. பொய்யா மொழிப் புலவர்...
'தீயினால்  சுட்டபுண்  உள்ளாறும் -ஆறாதே
         நாவினால்  சுட்ட  வடு'
என்று...
"அவனும் நானும் அதுக்கப்புறமா பேசிக்கலை.. பிரிஞ்சுட்டோம்.. அவன் என் மனசைப் புண்படுத்தினது மில்லாம.. எங்ககூடப் படித்த மற்ற ஸ்டூடன்ஸ்கிட்டயும் இதைச் சொல்லிட்டான்.. அந்த வயதில் எனக்கு எப்படியிருந்திருக்கும்..? நீயே சொல்லு..."
"கஷ்டமாத்தான் இருந்திருக்கும்..." மனம் வலிக்கச் சொன்னாள் ஆனந்தி...
அவளும்.. அர்ஜீனும் இது போன்ற துன்பங்களை அனுபவித்ததில்லை.. அதைவிட.. அவர்கள் அப்படித் துன்பப்படும்படி பார்த்தசாரதி விட்டதில்லை...
அப்படிப்பட்டவருக்கு இளம்வயதில் இப்படியொரு துன்பமா..?
"எங்கப்பா கடையை விற்றார்.. நெருக்கடியை சமாளித்தார்.. என் வசதி கூடியது.. அந்த பிரண்ட் திரும்பவும் என்னுடன் பேச வந்தான்.. நான் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.. நான் அங்கே படித்த காலத்தில் அதற்குப்பிறகு எப்போதும் அவனிடம் பேசியதில்லை..."



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -6
எங்கிருந்தோ ஆசைகள். -6
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy