எங்கிருந்தோ ஆசைகள்.. -5

5 ஓரவிழிப் பார்வையிலே... நீ எனைத் தேட ஆசை கொண்டேன்.. காவ்யா தடாலடியாக பேச்சை மாற்றினாள்... "விட்டுங்க அண்ணே... பிழைச்சுப...


5
ஓரவிழிப் பார்வையிலே...
நீ எனைத் தேட ஆசை கொண்டேன்..


காவ்யா தடாலடியாக பேச்சை மாற்றினாள்...
"விட்டுங்க அண்ணே... பிழைச்சுப் போகட்டும்..."
அவளின் அந்தர் பல்டியை அவன் வெகுவாக ரசித்தான்...
'இவ சொல்லலைன்னா நான் பிழைக்க மாட்டேனாமா..? என்னமா பல்டி அடிக்கிறா..! யார் பிழைக்கிறாங்களோ.. இல்லையோ.. இவ பிழைச்சுக்குவா..'
"பாவம்.. வெளியூர்காரரு..."
'வெளியூர்காரன்னா.. பாவப்பட்டவனா..?'
"இப்பத்தான் காரை ஓட்டப் பழகியிருப்பாரு போல.."
'பிறந்ததில இருந்து பழகிப்பார்த்தவன் நான்...'
"ஓட்டத் தெரியாம ஓட்டி.. என் வண்டி மேல மோதிட்டாரு.."
'இதை நான் சொல்லனும்...'
"நம்ம ஊருக்கு வந்தவர.. நாமதான் மன்னிக்கனும்.."
'ஆஹா.. என்னே.. இவ பெருந்தன்மை..!'
காவ்யாவின் பேச்சில் பஞ்சாயத்துக்கு வந்த அண்ணன்மார்கள் மனம் மாறினார்கள்... மீசையை முறுக்கியபடி அவனைப் பார்த்து
"தங்கச்சி.. சொல்றதாலே விட்டுட்டுப் போறோம்.. இல்லைன்னா நடக்கறதே வேற.. இனியாச்சும் பாத்து காரை ஓட்டு..." என்று அறிவுரை சொல்லி விட்டு கலைந்து போனார்கள்...
அதற்கு மேலும் அங்கே நின்றால் அவன் சேதாரத்திற்கான பணத்தைக் கேட்டு விடுவான் என்ற பயத்தில் காவ்யாவும் கிளம்ப யத்தனித்தாள்..
"ஹலோ..." என்ற அவன் குரல் அவளை நிறுத்தியது...
"இது மதுரை சாரே... எதுவா இருந்தாலும் நெத்தியடியா நேராப் பேசித்தான் எங்களுக்குப் பழக்கம்.. இந்தப் போன் போடற வேலைய எல்லாம் வேற யாருகிட்டயாவது வைச்சுக்கறிங்களா...?"
"நேராப் பேசனும்னா பெயர் தெரிய வேணாமா..?"
"உங்க பேரை நான் கேட்டேனா..?"
சிலுப்பிக் கொள்ளும்போதே... இவன் பெயர் என்னவாக இருக்கக் கூடும் என்ற எண்ண இழை அவள் மனதில் ஓடியது...
அதை அறிந்து கொண்டவனைப் போல.. விசமமாக சிரித்தவன்...
"என் பெயர் அர்ஜீன்.." என்றான்..
'அர்ஜீன மகராஜனாக்கும்.. ஆளைப் பாத்தா ஊருக்கு ஒரு பொண்ண லுக் விட்டு கணக்கு பண்ணுகிறவனப் போலத்தான் தெரியுது...'
அவள் ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பப் போனாள்..
"பார்த்தீங்களா... நெத்தியடியைப் பத்தியெல்லாம் விளாசித் தள்ளிட்டு ஒன்னும் சொல்லாம போறிங்களே..."
'இவனுக்கு நான் என்னத்தைச் சொல்றது..?' குழப்பமாக அர்ஜீனைப் பார்த்தாள் காவ்யா...
"என் பெயரை மட்டும் கரெக்ட் பண்ணினீங்களே.."
"கரெக்ட் பண்ணினேனா..? நானா..?"
"நீங்கதான்.. பின்ன அந்த ரெட்கலர் ஸாரி கட்டிட்டுப் போற பொண்ணா வந்து கரெக்ட் பண்ணுச்சு..?"
'இவன் என்ன இப்படிப் பேசி வைக்கிறான்..?'
கலவரமான காவ்யா சுற்று முற்றும் பார்த்து வைத்தாள்.. அவர்கள் சண்டை போடுவதற்கு வசதியாக.. காரையும்.. கைனடிக் ஹோண்டாவையும் ஓரம் கட்டியிருந்ததால்.. சாலையில் போக்குவரத்து பாதிக்காமல் கார்களும்.. சைக்கிள்களும்.. இருசக்கர வாகனங்களும்.. நடந்து செல்பவர்களுமாக இருந்தது...
'இவங்களில யார் காதிலயாவது இவன் பேசி வைக்கிறது விழுந்து வைச்சா.. என் கதி.. என்னத்துக்கு ஆகிறது...'
"ஊஹீம்.. நீங்க அடங்கவே மாட்டிங்க.. திரும்பவும் அண்ணன்களை பஞ்சாயத்துப் பண்ண அழைச்சுர வேண்டியதுதான்..."
"அது எதுக்குங்க.. உங்க அண்ணன்களுக்கு வீண் சிரமத்தைக் குடுக்கறிங்க...?"
"அதை அவங்க சொல்லனும்.. நீங்க சொல்லாதீங்க. கரெக்ட் பண்றதைப் பத்தி என்கிட்டப் பேசறிங்களா..?"
"ஓ.. நீங்க அப்படி வருகிறீங்களா...?"
"எப்படியும் வரலை.. தேமேன்னு இந்தத் திருப்பத்திலதான் திரும்பினேன்..."
"தடால்ன்னு என் கார்மேல மோதி.. கோடு போட்டு பெயிண்டை சுரண்டிட்டீங்க..."
'இவன் அதை விடவே மாட்டானா..? இல்ல.. இதைச்சொல்லியே கரெக்ட் பண்ணப் பார்க்கிறானா...?'
அர்ஜீனின் கள்ளப் பார்வையைப் பார்த்தால் ஆமாம் என்பது போலத்தான் இருந்தது...
"அர்ஜினன்னு சரியாத்தான் பேரு வைச்சிருக்காங்க.."
"நீங்க வைச்சிங்களா...?"
"ஓ.. அந்த நினைப்பு வேற மனசில இருக்கா..? ஆளைப் பாத்தா பதினைஞ்சு கழுதை வயசாகிருக்கும் போலத் தெரியுது.. இதில இவரு பிறந்தப்ப.. நான் பக்கத்தில நின்னு பெயரை வைச்சேனாம்... பப்பான்னுதான் மனசில நினப்பு..."
அவள் படபடக்க.. அவன் அலட்டிக் கொள்ளாமல் அவளை உற்றுப் பார்த்தான் காவ்யா பல்லைக் கடித்தாள்...
"பார்வையென்ன வேண்டிக்கிடக்கு..."
"உங்களைப் பார்த்தா பாப்பா மாதிரி தெரியலையே.."
"இது வேறயா..? நான் பப்பான்னு சொன்னது உங்களை... என்னையில்ல..."
"ஓ.. ஆமாம்.. அதென்ன.. பதினைந்து கழுதை வயசுன்னு சொல்கிறிங்க.. எங்க பாட்டி ஏழு கழுதை வயசுன்னுதான் சொல்லுவாங்க.. இங்கே கணக்கு இடிக்குதே..."
'கணக்கு' என்ற வார்த்தையைச் சொல்லியவனின் கண்கள் மின்னி அவனைக் காட்டிக் கொடுத்தன...
'இவன் கணக்கு பண்றதிலேயே குறியாய் இருக்கானே...' காவ்யாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது...
"ஏழு கழுதை வயசையெல்லாம் ஏற்கனெவே என்னப் பாத்து எங்க அம்மா சொல்லியாச்சு.. நீங்களும்.. நானும் என்ன ஒரே வயசா...?"
"அது இருக்காது..." அர்ஜீன் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டான்...
அத்தோடு நிறுத்தாமல் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை திரும்பவும் பார்வையிட்டான்...
'ம்ஹீம்.. பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளைகூட இப்படிப் பாக்க மாட்டான்...'
காவ்யா எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அந்தக் கேள்வியைக் கேட்டான்...
"என்ன.. உங்களுக்கு.. பதினாறு.. பதினேழு வயது இருக்குமா..?" காவ்யாவுக்கு தூக்கிவாரிப் போட்டது...
'ஆத்தாடி.. இம்புட்டு நேரமும் இவன் என் வயசைத்தான் கணக்குப் பண்ணிக்கிட்டு இருந்தானா..?'
ஆனாலும் அவன் அநியாயத்திற்கு அவளை பதினாறு வயது பருவ மங்கையாக்கியதில் காவ்யாவுக்குள் லேசான சிரிப்பு குமிழிட்டது...
'ஆளு.. பக்கா கில்லாடிதான்...'
"என்னங்க.. நான் சொன்னது சரிதானே...?"
"பின்னே..? நீங்க சொன்னா பொய்யாவா இருக்கும்..? யாரு நீங்க..? அர்ச்சுனனில்ல.. கண்ணில படற பொண்ணுகளையெல்லாம் கணக்குப் பண்ணிக் கவிழ்க்கிறதில நீங்க.. மகாபாரத அர்ஜீன மன்னனாச்சே.."
"அப்படிங்கறிங்க...?"
இவனுடன் பேசிக் கொண்டிருந்தால் இப்படியே தான் பேச்சை இழுத்துக் கொண்டிருப்பான்.. இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்திருந்த காவ்யா.. அப்படித்தான் என்று பதில் சொல்லாமல் நகர முனைந்தாள்...
"எந்த ஸ்கூல்...?"
அவன் கேட்ட கேள்வியில் அவளுடைய கைனடிக் ஹோண்டாவிற்கே கோபம் வந்து நகர மறுத்தது...
"ஸ்கூலா..?" விளக்கெண்ணையைக் குடித்தவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு காவ்யா கேட்டாள்...
"ம்ம்ம்.. ஸ்கூல்தான்.. பதினாறு வயதில் ஸ்கூலில் தான படிப்பாங்க..? அதான்.. எந்த ஸ்கூலில் படிக்கறிங்கன்னு கேட்டேன்..." அவன் பொறுமையாக விளக்கம் சொன்னான்...
'நிஜமாவே இவன் என்னை ஸ்கூலுக்குப் போகிற பொண்ணுன்னுதான் நினைக்கிறானா..?'
சந்தேகத்துடன் அவன் முகத்தை ஊன்றிக் கவனித்து ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் காவ்யா... அவன் முகத்தில் சலனமேயில்லை.. உணர்வுகளை துடைத்து வைத்ததைப் போலவும் ஒரு முகம் இருக்கக்கூடும் என்பதை இப்போது தான் நேரடியாக காவ்யா பார்க்கிறாள்...
அவளைச் சுற்றியிருந்தவர்கள் அதுபோன்ற இயல்புடன் இருந்ததில்லை.. அடுத்தது காட்டும் பளிங்கைப் போல.. நெஞ்சு கடுத்ததை உடனடியாக முகத்தில் காட்டி விடுவார்கள்...
"அடியாத்தி.. இந்தாளு என்ன முகத்திலே முள்ளைக் கட்டி வைச்சிருக்காரு..."
அன்னபூரணி கோபம் கொண்ட சிவதாணுவை வர்ணிக்கும் வார்த்தைகள் இவை.. அவ்வபோது இந்த வார்த்தைகள் காவ்யாவை நோக்கியும் பாய்ந்து வரும்.. கண்ணதாசன் மட்டும் இதில் விதிவிலக்கு... அவன் புன்னகை மன்னன்..! முகத்தில் முள்ளைக் கட்டிக் கொள்ளும் கோபத்தை அவன் காட்டியதேயில்லை...
அப்படிப் பட்டகுண இயல்புடைய மக்களைப் பார்த்து பழகிய காவ்யாவிற்கு.. இப்படிக்கூட உணர்வுகள் துடைத்த முகத்துடன் ஒருவன் இருப்பானா என்றிருந்தது..
காவ்யாவுக்கு 'பள்ளிக்கூடம்' என்று பெயரை எழுதிவைத்து படிக்கக்கூடப் பிடிக்காது.. அவள் படித்தது கட்டுக் கோப்பை உயிராய் நினைக்கும் பள்ளியில்... அதைத்தவிர வேறு எந்தப் பள்ளியில் படித்தாலும் காவ்யாவை வழிக்கு கொண்டு வரமுடியாது என்று அன்னபூரணி அபிப்ராயப்பட்டு விட்டதால்.. மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை அதே பள்ளியில்தான் காவ்யா படிப்பைத் தொடர வேண்டியிருந்தது...
மேல்நிலைப் பள்ளியின் தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவள்.. மொட்டை மாடிக்குப் போய்.. கொட்டும் மழையில் நனைந்தபடி.. இரண்டு கைகளையும் விரித்து..
"விடுதலை... விடுதலை...
             விடுதலை..."
என்று உற்சாகப் பாடல் பாடியதை அர்ஜீன் அறிவானா..? அறிந்திருந்தால் அவள் பள்ளியில் படிக்கிறாளா என்று கேட்டிருப்பானா..?
இவனை என்னதான் செய்வது என்று யோசித்தவளுக்கு.. எதுவும் செய்ய முடியாது என்ற ஞானோதயம் வந்தது.. ஏதாவது செய்யலாமா என்று நினைக்கக் கூட அவளுக்கு நேரமில்லை என்பதை அவளது அறிவு வலியுறுத்தியது...
ஆனாலும் இவனைச் சும்மா விடக்கூடாது என்ற கோபத்துடன் எதிரே தெரிந்த மழலையர் பள்ளியை கை காட்டினாள் காவ்யா..
"அதோ.. அந்த ஸ்கூல்தான்..."
திரும்பிப் பார்த்தவனின் கண்களில் மின்னல் வந்து போனது.. அவன் உதட்டை வளைத்து ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி...
"ஓ.. எல்.கே.ஜி படிக்கிற பாப்பாவா நீங்க..?" என்று கேட்டான்...
"பாப்பா.. பீப்பான்னு சொன்னீங்க.. எனக்கு கெட்ட கோபம் வந்திரும்.."
"கோபமே கெட்டது.. இதில நல்ல கோபம்.. கெட்ட கோபம்ன்னு இரண்டு வகையிருக்கா என்ன..?"
"ரௌத்ரம் பழகுன்னு பாரதியாரே சொல்லியிருக்கார்.. நினைப்பில வையுங்க.. ரௌத்ரம் மனுசங்களுக்கு அழகு..."
"ஓ...." அவன் மீண்டும் உதட்டைச் சுழித்தான்...
'உசிரே போகுது.. உசிரே போகுது...
              உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே..'
தேவையில்லாமல் இந்தப் பாடல் எதற்காக வந்து மனதில் மையம் கொள்கிறது என்று தெரியாமல் திகைத்தாள் காவ்யா...
'இவன் பண்ணும் அழும்பில் என்னால நேரத்துக்கு வேலைக்கு போக முடியலையில்ல.. அதனால இந்தப் பாட்டுத் தோணியிருக்கும்..' மனதை சமாதானப் படுத்தி அடக்கி வைத்தாள்...
'மானே தவிக்கிறேன்...
             மடிப்பிச்சை கேட்கிறேன்..
    வழியை விடுடா...
             மாங்கா மடையா...'
அவளைக் கேட்காமல் மனதில் பாடல் வந்து விட்ட கோபத்தில் அதே பாடலையே அவளின் விருப்பம் போல மனதுக்குள் மாற்றிப் பாடி வன்மம் தீர்த்துக் கொண்டாள் காவ்யா...
"பெயர் என்ன..?" என்றான் அவன்...
"ராணி மங்கம்மா..." என்றாள் அவள்...
"நினைச்சேன்.." அதற்கும் அவளை ஒருமார்க்கமாக பார்த்து வைத்தான் அவன்...
"நினைச்சுக்கிட்டே நில்லுங்க.. நினைப்பு பொழப்பக் கெடுக்குமாம்.. உங்களுக்குத்தான் பொழப்பில்ல... வேலை வெட்டியில்லாம.. விட்ட விடிகாலையிலே பொம்பளப் புள்ளகிட்ட வம்பு வளர்த்துக்கிட்டு இருக்கீங்க.. எனக்கு பொழப்பு இருக்கே.. அதனால.. நான் ஜீட் விடறேன்..." அவன் பதிலை எதிர்பார்க்காமல் கைனடிக் ஹோண்டாவில் பறந்துவிட்டாள் காவ்யா...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -5
எங்கிருந்தோ ஆசைகள்.. -5
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy