எங்கிருந்தோ ஆசைகள். -4

4 கிட்டவந்து கட்டிமுத்தம்... நீ தரவே ஆசைகொண்டேன்... பெண்களுக்கான பாதுகாப்பையும்.. மரியாதை-யையும் கொடுப்பதில் மதுரை மக்களை யாரும் ...


4
கிட்டவந்து கட்டிமுத்தம்...
நீ தரவே ஆசைகொண்டேன்...

பெண்களுக்கான பாதுகாப்பையும்.. மரியாதை-யையும் கொடுப்பதில் மதுரை மக்களை யாரும் மிஞ்சிவிட முடியாது.. போருந்தில் பயணம் செய்யும் போது.. பெண்கள் வந்து விட்டால்.. புதுப்பெண்டாட்டியின் அருகில் உட்கார்ந்திருக்கும் புதுமாப்பிள்ளை கூட எழுந்து நின்று இடம் கொடுப்பான்...
இதுதான் மதுரை...!
'பொம்பளப் புள்ளப்பா...'
இந்த வார்த்தையில் தொனிக்கும் வாத்சல்யத்தை மதுரை மண்ணில் வாழ்ந்து பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்...
மீனாட்சி ஆட்சி செய்யும் மண் என்பதால் இந்த மரியாதை அவர்கள் மனதில் வந்ததோ.. இல்லை.. அழகர் கோவில் கொண்டுள்ள ஊரில் அவரின் தங்கைக்கு நிகரான பெண்களைக் காப்பது மதுரை மண்ணின் தர்மம் என்பதால் அந்த வழக்கம் வந்ததோ.. தெரியாது...
மதுரை மக்கள்... பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்..
"ஹலோ.. இவங்க மேல நான் காரை மோதல இவங்கதான் என்காரு மேல இவங்க வண்டியை மோத விட்டிருக்காங்க.. பாருங்க.. என் காருக்கு என்ன கதியாகி இருக்குன்னு..."
அவ்வளவுதான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பொங்கி விட்டார்கள்...
"உனக்கு அது ஒரு குறையாய் போச்சா..? ஏம்ப்பா.. இந்தப்புள்ள காயம் படாம தப்பிச்சிருச்சேன்னு சொல்லாம.. உன் காருல பெயிண்டு போனதப் பத்தியா கதை சொல்ற..? இந்தப் புள்ளயவிட உன் காருதான் உனக்குப் பெரிசா போச்சா...?"
'பின்னே..? இல்லையா..?' என்று கேட்கத்தான் அவனுக்குத் தோன்றியது....
கோடிக் கணக்கில் மதிப்புப் பெறும் வெளிநாட்டுக் காரைவிட அவள் பெரிதில்லை என்று சொன்னால் அந்த மக்கள் முதுகில் டின் கட்டி விடுவார்கள் போலத் தோன்றியதால் அவன் காவ்யாவிடமே நியாயம் கேட்டான்...
"ஏங்க.. உங்கமேல நானா மோதினேன்...?"
உன்மீது என் காரா மோதியது என்று அவன் கேட்டிருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை இடம் மாறியதில் அவளுக்கு கோபம் வந்துவிட்டது...
"எங்க வந்து.. யார்மேல மோதுவிங்க..? என்மேல மோதிருவீங்களோ..? இது மதுரை.. பாத்துப் பேசுங்க..."
அவளின் படபடப்பில் அதுவரை அவளைச் சரியாகப் பார்க்காதவன்... உச்சிமுதல் பாதம்வரை ஊன்றிக் கவனித்தான்...
பார்த்தால் உடனே மனதில் ஒட்டிக் கொள்வதைப் போல பளீரென்ற அழகுடன் இருந்தவளின் மீது அவனுக்குள் சுவராஸ்யம் ஏற்பட்டது..
"நீங்கதானே என்மேல மோதினிங்க...?"
இப்போது வேண்டுமென்றே அவன் காரை விட்டுவிட.. காவ்யா கொதிகலனானாள்...
"நீங்க பெரிய கள்ளழகரு.. உங்க மேல ஆசைப்பட்டு மோதிட்டேன்.. போவீங்களா..."
அவனுக்கு யார் அந்த கள்ளழகர் என்று தெரியவில்லை... அந்த கள்ளழகர் மன்மதனை விடப் பேரழகன் என்பதும்.. அந்தக் கள்ளழகரின் கண்ணழகுக்கு ஈடான அழகு மூவுலகத்திலும் இல்லை என்பதும்.. அந்தக் கள்ளத்தனம் மிக்க கள்ளழகர் பெண்களின் மனதைக் கொள்ளையடிப்பதில் வல்லவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
அவன் சென்னைவாசி.. வெளிநாடுகளுக்கு பறந்து.. பறந்து வியாபாரம் செய்பவன்.. கள்ளழகரின் அழகின் பெருமையை அவன் அறிந்திருக்கவில்லை.. அதனால்..
"யார் அந்த கள்ளழகர்..," என்று கேட்டு விட்டான்..
"கேட்டிங்களா அண்ணே.. நம்ம ஊருக்கே வந்து இவரு அழகரைத் தெரியலங்கிறாரு.. இவரைச் சும்மா விடலாமா..?" என்று காவ்யா கூடியிருந்த கூட்டத்தைத் தூண்டிவிட்டாள்...
"அதானே.. எந்தக் காட்டு மனுசனோ வந்து எங்க மதுரை அழகரை யாருன்னு கேட்பானா..? ஏம்ப்பா... உனக்கு கள்ளழகரைத் தெரியலைன்னா.. மதுரைக்குள்ள எதுக்கு வந்த...?"
இது என்னடா வம்பாப் போச்சு என்று ஆகிவிட்டது அவனுக்கு...
'கள்ளழகரைத் தெரியலைன்னா மதுரைக்குள்ள வரக்கூடாதா..?'
இந்த வியாக்கினத்தை வேறு எந்த ஊரிலும் அவன் கேட்டதில்லை.. அவனுக்கு என்ன தெரியும்..? அண்ணனும்.. தங்கையுமான.. அழகரும்.. மீனாட்சியும்... மதுரை மண்ணின் சுவாசக்காற்று என்பது...
"அழகர் ஆத்தில இறங்கறப்ப வந்து பாருப்பா.. அவரு யாரு.. எப்பேற்பட்டவருன்னு உனக்கு அப்பப் புரியும்.."
அழகர் எதற்காக ஆற்றில் இறங்க வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை.. அவர் மீனாட்சியின் அருமை அண்ணன்.. மீனாட்சி கல்யாணத்தின்போது சீர் கொண்டுவர வைகை ஆற்றில் இறங்கினார்... அவர் இறங்கும் போது மழை கொட்டோ கொட்டென்று கொட்ட. வைகையாற்றில் வெள்ளம் வந்தது...
இந்தக் கதையெல்லாம் அவனுக்குத் தெரியுமா..? அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்று காவ்யா மெய் சிலிர்ப்பதை அவனால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா..? இன்றும் அழகர் ஆற்றில் இறங்கினால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் தெய்வச் செயலை அவன் கண்டிருக்கிறானா...?
எதுவும் தெரியாதவனை நிற்க வைத்து கேள்வி கேட்டால் அவன்தான் என்ன பதிலைச் சொல்லுவான்...?
"விடுப்பா.. ஏய்.. வெளியூர்காரனுக்கு நம்ம ஊரு அழகரைப் பத்தி என்ன தெரியும்..? ஏம்ப்பா.. மதுரைக்குள்ள காரை ஓட்டறப்ப சூதானமா ஓட்டனும்னு உனக்குத் தெரியாதா...?"
'சூதானம்..' என்றால் 'பத்திரம்..' என்று மதுரையில் அர்த்தமென்றும் அவனுக்குத் தெரியவில்லை...
அதனால் அவன் சாட்சிக்காரர்களை விட்டுவிட்டு சண்டைக்காரியிடமே பேச்சு வார்த்தையை தொடர்ந்தான்..
"லுக் மேடம்..."
'மேடமா..? இவனுக்கு என்னைப் பார்த்தால் மேடம் போலத் தெரியுதா..?'
காலையில் கண்ணாடி பார்க்காமல் வந்து விட்ட மாபெரும் தவறை நினைத்து வெகுவாக கவலைப்பட்டுப் போனாள் காவ்யா... இப்படி விளிக்கிறவனை 'லுக்' விடாமல் இருக்கக் கூடாது என்று இப்போது அவள் அவனை உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்தும் வைத்தாள்...
'நல்லாத்தான் இருக்கான்...'
அவன் நன்றாகத்தான் இருந்தான்.. வாட்டசாட்மாய்.. ஆறடி உயரத்தில்.. அளவான மீசையோடு கம்பீரமாக இருந்தான்.. அவள் பார்வையிடுவதைக் கவனித்த ரகசிய மின்னல் அவன் கண்களில் வந்தது...
"நீங்களே சொல்லுங்க மேடம்..."
மேடத்தை விடாமல் தொடுத்துக் கொண்டிருந்த-வனை என்ன செய்தால் தேவலாம் என்ற கொலை வெறிக்கு ஆளான காவ்யா...
"என்னத்தைச் சொல்லுறது..?" என்று வெடுவெடுத்தாள்...
"நான் காரைத் திருப்பினேன்.. நீங்களும் உங்க வண்டியைத் திருப்புனீங்க..."
"உங்களுக்குத்தான் இந்தப் பக்கம் வேலை-யிருக்குதா..? எங்களுக்கெல்லாம் இல்லையா..? நீங்க இன்னைக்கு வந்த ஆளு..."
"கரெக்டா கண்டு பிடிச்சிட்டிங்களே.. நான் காலையிலதாங்க மதுரைக்குள் என்ட்ரி ஆனேன்.. பாண்டியன் ஹோட்டலில் ரூமைப் போட்டு.. குளிச்சு சாப்பிட்டு விட்டு கிளம்பி வர்றேன்..."
"இந்தக் கதைய நான் கேட்டேனா..?" காவ்யா முறைத்தாள்...
"நீங்க கேட்கலைன்னாலும் நான் சொல்லனுமில்ல..? இது என் கடமைங்க..."
"உங்க கடமை உணர்ச்சியில புல்லரிச்சுப் போயிட்டேங்க.. போதுமா.. இத்தனை வருசமா.. இந்தத் திருப்பத்திலதான் நானும் வண்டியைத் திருப்பறேன்.. ஒருநாளும் இதுபோல ஆனதில்ல..."
"ஹைய்யோ.. இதைத்தாங்க நானும் சொல்ல நினைச்சேன்.. இத்தனை நாளா.. நானும் எத்தனையோ ஊர்களுக்குப் போயிருக்கேன்.. ஆனா.. உங்களைப் போல யாரையும் நான் பார்த்ததில்லை..." அவன் விசமச் சிரிப்புடன் சொன்னான்...
"என்னது..?" காவ்யா வீரத் தமிழச்சியாகி முறைத்தாள்...
"உங்க மேல மோதினதைப் போல வேற யாரு மேலயும் நான் மோதினதில்லன்னு சொல்ல வந்தேங்க... டங் ஸ்லிப்பாகிருச்சு.."
"இப்பயும் உங்க நாக்கு பிறண்டுதான் பேசுது.. நீங்க என்மேல மோதலை சாரே.. என் வண்டிமேல உங்க காரு மோதுச்சு..."
"ஓ.. இதை அப்படிக்கூடச் சொல்லலாம்..."
"சொல்லுவீங்க.. சொல்லுவீங்க.. பூவை புய்ப்பம்ன்னும் சொல்லலாம்.. நீங்க சொன்னதப் போலவும் சொல்லலாம்கிற மாதிரியில்ல உங்க கதை இருக்கு..."
"நம்ம கதையை விடுங்க..."
"நம்ம கதையா..? நீங்க யாரு..? நான் யாரு..? நமக்குள்ள என்ன கதை ஓடுது...?"
"எந்தக் கதையும் ஓடலை.. நாம சமாதானமாப் போயிரலாமே..."
"ஓஹோ.. நாங்க சண்டைக்கு வந்தோமாக்கும்..? கேட்டிங்களா அண்ணே.. இவரு பெரிய சீமைத்துரை.. சீமையில இருந்து காரை இறக்குமதி பண்ணியிருக்காரு.. இவரோட காரை நான் இடிச்சு நொறுக்கிட்டேன்னு என்மேல பழியப் போட்டுட்டு.. இப்ப ஒன்னுமே நடக்காத மாதிரி சமாதானம் பேச வர்றாரு..."
"ஏங்க.. இப்ப நீங்களும்.. நானும்தான பேசிக்கிட்டு இருக்கோம்.. எதுக்காக உங்க அண்ணண்களை ஜட்ஜ் மென்டுக்கு கூப்பிடறிங்க...?"
அவன் பேசிய விதத்தில் காவ்யாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவனுடைய கார் சரியான அடி வாங்கியிருப்பதை முதல் பார்வையிலேயே அவள் கண்டு கொண்டிருந்தாள்..  அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு வைத்தால்.. எங்கே அவன் அதற்கான செலவைக் கொடு என்று கேட்டு விடுவானோ என்ற பயத்தில்தான் அவள் மதுரை மாநகரின் அண்ணன் மார்களை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்...
அது தெரியாதவனாக.. அவன் அவளுடன் சமாதானம் பேச வந்து விட்டதில் அவளின் ரகசிய சிரிப்பு அதிகமானது...
"என்னசாரே... ஊருக்குப் புதுசா..?"
"ஆமாம்ன்னு உங்களுக்கும் தெரியும்.. உங்க அண்ணன்களுக்கும் தெரியும்.. நான் வெளியூர்தான்..."
"காரை விட்டு மோதிட்டு வியாக்கினம் பேசறிங்களா...?"
"மோதினதில யாருக்கு டேமேஜ் ஆகியிருக்கு..? உங்களுக்கா..? இல்லை.. உங்க வண்டிக்கா..?"
"கேட்டிங்களா அண்ணே.. எனக்கு அடி படலையாம்.. என் கை.. கால் உடையலியாம்.. என் எழும்பு நொறுங்கலையாம்... என் வண்டி சுக்கு நூறாகலையாம்.."
அவள் அடுக்கியதில் அவன் அயர்ந்து விட்டான்...
"ஏங்க.. நான் கேட்ட கேள்விக்கு இத்தனை அர்த்தமிருக்கா..?"
"கல்யாண வயசில இருக்கற பொம்பளப்புள்ள மேல காரை விட்டு மோதிட்டு.. எதுவும் ஆகலைன்னு பேசறாரு பாருங்கண்ணே..."
எத்தனை நேரம்தான் கூடியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்..? பஞ்சாயத்துக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் 'கேட்டிங்களா அண்ணே...' 'பார்த்தீங்களா அண்ணே..' என்ற காவ்யாவின் அபயக்குரலை கேட்ட பின்னாலும் அந்த அண்ணன்மார்கள் சும்மா இருந்தால் அழகர் கோவித்துக் கொள்ள மாட்டாரா..?
"ஏம்ப்பா.. அதான் பஞ்சாயத்து பண்ண நாங்க கூடியிருக்கோமில்ல.. எங்கள விட்டுட்டு பொம்பளப் புள்ளைகிட்ட என்ன பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கிறவன்...?"
"ஹலோ... யாருங்க நீங்க...? முதல்ல பஞ்சாயத்துன்னா என்னன்னு சொல்லுங்க..."
"பாருடா.. இவன் நம்ம பஞ்சாயத்தைப் பத்தித் தெரியாம பேசறான்.. விட்டு விளாசுங்கடா..."
"நான் போலிசைக் கூப்பிடறேன்..."
அவன் செல்போனை கையில் எடுக்கவும் காவ்யா பயந்து போனாள்.. ராங் ரூட்டில் வந்து அவன் கார்மேல் மோதி அதைச் சேதாரம் பண்ணியது அவள்தான்.. விசாரணையில் அது வெளிவந்து விட்டால் அவள் நிலைமை என்ன ஆகும்...?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -4
எங்கிருந்தோ ஆசைகள். -4
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy