எங்கிருந்தோ ஆசைகள். -3

3 ஊரடங்கும் வேளையிலே... உனைப்பார்க்க ஆசை கொண்டேன்.. கண்ணதாசன் அப்படியொன்றும் அடக்கு முறையைப் பிரயோகிக்கும் அண்ணனல்ல.. தங்கைமீது...


3
ஊரடங்கும் வேளையிலே...
உனைப்பார்க்க ஆசை கொண்டேன்..


கண்ணதாசன் அப்படியொன்றும் அடக்கு முறையைப் பிரயோகிக்கும் அண்ணனல்ல.. தங்கைமீது அன்பான அண்ணன்.. விட்டால் பாசமலர் சிவாஜியைப் போல.. பாட்டுப்பாடி விடும் குணமுள்ளவன்.. காவ்யாதான் அவனுடைய தங்கைக்கொரு கீதத்தை காது கொடுத்தும் கேட்க மாட்டாள்.. அவளுக்கு கிடைக்காத மேல் படிப்பும் உயர்பதவியும் அவனுக்குக் கிடைத்திருப்பதில் கடலளவு பொறாமையை அவன் மீது கொண்டிருந்ததால்.. அவன் பறக்கவிடும் பாசப் பறவையை 'சூ..சூ...' என்று விரட்டி விடுவதிலேயே அவள் குறியாக இருந்தாள்..
கண்ணதாசன் சொல்லித்தான் பார்த்தான்.. ஆனால் அவனைப் பெற்றவர்கள் காவ்யாவின் மேல்படிப்பு விசயத்தில் பிடிவாதமாக இருந்து விட்டார்கள்..
"பாருய்யா.. நம்ம ஆளுகள்ல ஆம்பளைப் பையன் படிக்கிறதும் பொம்பளப்புள்ள அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ளே இருக்கறதும்தானே வழக்கம்..?"
"அம்மா.. அது அந்தக்காலம்..."
"அதனாலதான் உந்தங்கச்சியை பட்டப்படிப்பு படிக்க வைச்சோம்.. அவ பார்க்க நினைச்ச வேலைக்கும் அனுப்பி வைச்சோம்..."
"அவ மேலபடிக்க ஆசைப்படறாப்பா..."
"படிக்க வைக்கலாம்.. முடியாதுனில்ல.. அதுக்கப்புறம்..? அவ அந்த படிப்புக்கேற்ற வேலையைப் பார்க்கனுமுன்னு ஆசைப்படுவா.. அந்த வேலை மதுரைக்குள்ள கிடைக்குமா..? நீயே சொல்லு.. இவ சென்னைக்கோ.. பெங்களூருக்கோ போயாகனும்.. வீட்டுப் பொண்ணைவேலை பார்க்க வெளியூருக்கு அனுப்பி வைச்சிட்டு.. நாங்க மடியிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கனும்..."
"அப்பா.. நம்ம பொண்ணுதான் வெளியூரில வேலைக்குப் போகுதா..? இந்தக் காலத்திலே எங்கே வேலை கிடைச்சாலும் போகத்தானே வேணும்.. ஊருக்கு ஊரு லேடிஸ் ஹாஸ்டல் இருக்கு.. இவ அதில தங்கிக்கிட்டு வேலை பார்த்தா ஆகாதா...?"
"பாக்கட்டும்.. தாராளமா பாக்கட்டும்.. எப்பத் தெரியுமா..? இவள ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துரலாம்.. அவன் அனுமதிச்சா தாராளமா வேலை பார்க்கட்டும்... நான் வேணாம்ன்னு சொல்லல..."
கண்ணதாசன் போராடி ஓய்ந்துவிட்டான்.. பெற்றவர்களை மீறி எதையும் செய்து பழகியிராதவனுக்கு இந்த விசயத்தில் தங்கைக்கு உதவிக்கரம் நீட்ட முடியவில்லை.. அவனுக்கே காவ்யாவின் கோபம் நியாயமானதுதான் என்று தோன்றிவிட்டது...
அவளுக்காக அவளுடைய அண்ணன் பேசியதை அவளும் அறிவாள்தான்... இருந்தும் பிடிவாதமாக அண்ணன் எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமல் இருந்தாள்...
தங்கையைச் சமாதானப் படுத்த முயன்ற கண்ணதாசன் திரும்பத்திரும்பத் தோல்வியைத் தழுவி கஜினி முகமதுவாக ஆனாலும் அவன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தனைப் போல.. தினமும் சமாதானப் புறாவை காவ்யாவை நோக்கிப் பறக்க விட்டுக் கொண்டேயிருந்தான்...
ஏதோ அவனால் ஆனது.. காவ்யாவின் திருமணப் பேச்சை கொஞ்ச நாள்களுக்கு தள்ளிப் போட்டதுதான்..
அவள்தான் அவனிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாளே...
"பாருண்ணே.. நீ உங்கம்மா.. அப்பாவுக்கு தவப்புதல்வனாவே இரு.. ஆனா.. அவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டு உடனடியா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சேன்னு வைய்யி.. நான் பத்ரகாளியாவே.. மாறிருவேன்.. சொல்லிட்டேன்.. மேலே படிக்கத்தான் விடலை.. கொஞ்ச நாளைக்கு வேலைபார்க்கவாவது விட்டுத் தொலைங்க.. கல்யாணத்தைப் பண்ணிவைச்சு.. என்னை அடுப்படியில அடைச்சு வைக்கிறதை லேட்டாப் பண்ணித்தொலைங்க.. அதுக்கொன்னும் அவசரமில்ல..."
அதனால் சிவதாணு எந்த மாப்பிள்ளையைப் பற்றிச் சொன்னாலும் அவன் அதில் குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தான்...
"என்னய்யா.. எல்லா சம்பந்தத்தையும் தட்டி விடற.. நல்ல சம்பந்தம் கை நழுவிப் போகுதேய்யா..."
சிவதாணு புலம்பும்போது கண்ணதாசனின் மனச்சாட்சி உறுத்தும்தான்.. ஆனால்.. நல்ல சம்பந்தம் என்று அவர்களுக்கு மட்டும் தோன்றினால் போதுமா..? காவ்யாவுக்கும் தோன்ற வேண்டாமா..? என்னதான் அருமையான மாப்பிள்ளையாக இருந்தாலும்.. அவள் மனதுக்குள் பிடிக்காமல் போய்விட்டால் அவள் திரும்பிப் பார்ப்பாளா...?
காவ்யா விரும்பாத மணவாழ்வை அவள்மீது திணிக்கக் கூடாது என்பதில் மட்டும் கண்ணதாசன் உறுதியாக இருந்தான்..
அவன் என்ன செய்து என்ன பண்ண..? காவ்யா அதற்கும் அவன்மீது குற்றம் கண்டு பிடித்தாள்...
"அதென்ன.. மாப்பிள்ளை எவனாவது பொண்ணு கேட்டு வந்தா என்ன விட்டுட்டு உங்கிட்ட சம்மதம் கேட்கறாங்க..? கட்டிக்கப் போறது நீயா.. இல்ல நானா...?"
அவள் கேட்பதிலும் அர்த்தம் இருந்ததுதான்.. சிவதாணுவும்.. அன்னபூரணியும் அதைத்தான் செய்து வந்தார்கள்.. காவ்யாவின் திருமணத்தை அவளிடம் பேசாமல் அவள் அண்ணனிடம் பேசி வைத்தார்கள்...
அவர்கள் பக்கம் அதற்கான நியாயம் இருந்தது.. குடும்பத்திற்கு மூத்தமகன்.. காவ்யாவின் அண்ணன்.. பொறுப்பான உயர் பதவியில் இருப்பவன்.. வீட்டுக்குத் தேவையானதை செய்து கொண்டிருப்பவன்...
அவனிடம் அவன் தங்கையின் திருமணத்தைப் பற்றிப் பேசாமல்.. வேறு யாரிடம் அவர்கள் பேசுவார்கள்..?
எது எப்படியோ.. கண்ணதாசனின் தயவில் காவ்யாவின் திருமணம் தள்ளிப் போடப் பட்டிருந்தது...
"அம்மா.. லேட்டாச்சு..."
"யாரால லேட்டாச்சு..? என்னாலயா..? இல்ல உங்கப்பாவாலயா..?"
இப்படியெல்லாம் இடக்காக கேள்வி கேட்க அன்னபூரணியால் மட்டுமே முடியும்...
"இப்ப அதாம்மா பிரச்னை...?"
"பின்னே..? அது பிரச்னை இல்லையா..? ஏழு கழுதை வயசாகியும் நீ எட்டு மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு இருப்ப.. உன்னை எழுப்பி விடறதுக்கு.. கையில காபித்தம்ளரோட.. நான் மாடிப்படியேறி வரனும்.. அதுக்கப்புறமா நீ அவசர அவசரமா குளிச்சு முடிச்சு ஓடி வரதுக்குள்ளே.. இட்லியை அவிச்சு.. மதியத்துக்கு சோறு கட்டி வைக்கனும்.. இத்தனையையும் நான் செஞ்சு வைச்சா.. நீ வந்து லேட்டாயிருச்சும்மான்னு சொல்லுவ... இப்ப என்னடி செய்யனும்..? இட்லியைப் பிய்ச்சு ஊட்டி விடனுமா...?"
"ஒன்னும் வேணாம்.. நானே முழுங்கிக்கறேன்..."
காவ்யா அவசரகதியில் பாத்திரங்களை உருட்ட.. அந்த சத்தத்தில் அன்னபூரணி அதட்டினாள்..
"எதுக்கு சாமான்ஜட்டை உருட்டுறவ..? நீ உருட்டி விட்டுட்டுப் போறத பொறுக்கி எடுத்து தேய்ச்சு வைக்க எனக்கென்ன எட்டுக் கையா இருக்கு...?"
"வேலைக்கு ஆள் இருக்கேம்மா..."
"அவ தானா பொறுக்கிக்க மாட்டா.. நான்தான் எடுத்துப் போடனும்..."
"அப்ப காலாகாலத்தில உன் செல்ல மகனுக்கு கல்யாணத்தை பண்ணி வைய்யி.. மருமக வந்து இதையெல்லாம் பாத்துக்குவா..."
"அந்தக் குடுப்பினைதான் எனக்கு இல்லாமப் போச்சே.. தொங்கச்சி கல்யாணம் நடக்காம நான் எவ கழுத்திலயும் தாலியக் கட்ட மாட்டேன்னு இவன் அடம் பிடிக்கிறானே..."
அன்னபூரணி.. அனல் பூரணியாக.. காவ்யா தமையனை முறைத்தாள்.. பல்லிடுக்கில் அடிக்குரலில் பேசினாள்...
"அண்ணா.. இப்படி பாசமலர் வேசம் கட்டாதேன்னு உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் உன் மண்டையில ஏறவே ஏறாதா..?"
"ஏறாது.." கண்ணதாசன் புன்னகை மன்னனாக ஆனான்..
"உனக்குத் தேவைன்னா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே...?"
"எனக்குத்தான் தேவையில்லையே..."
"இப்படிச் சொல்லிச் சொல்லியே உங்கம்மாகிட்ட என்னைத் வசவு வாங்க வைய்யி..."
"அது உனக்கும் அம்மாதான்..."
"எனக்கு முதல்ல.. உனக்குத்தான் அம்மா..."
தங்கையின் கோபத்தை செல்லமாக ரசித்தான் கண்ணதாசன்.. அவளோ உன் செல்லத்தை உன்னுடனே வைத்துக்கொள் என்று முகம் திருப்பிக் கொண்டாள்...
"போதும்மா..." என்று கிளம்பியவளை..
"இதாலயே ரெண்டு போடு போட்டிருவேன்.." என்று கரண்டியைக் காட்டி மிரட்டி நிறுத்தி வைத்தாள் அன்னபூரணி...
"ஏம்மா..."
"ரெண்டு இட்டிலி போதுமா...? அதான் வத்திக்குச்சி போல வத்திக்கிடக்க.. இப்படிச் சாப்பிட்டா எப்படி உடம்பு ஊதும்..? ஊரு பூராவும் எங்கம்மா எங்கண்ணனைத்தான் தாலாட்டுது.. என்னப் பேயோட்டுதுன்னு சொல்லி வைச்சிருக்க.. அவங்கள்ளாம் என்னப் பாத்து.. பூரணி பெத்த பொண்ணுக்கு ஒழுங்காய் சாப்பாடு கூடப் போடறதில்லன்னு பேசி வைக்கிறதுக்கா பிளான் போடற..?"
"அம்மா..."
"கத்தாம இன்னும் ரெண்டு இட்டிலியைப் பிய்ச்சு வாயில போட்டுக்கிட்டு ஓடு..."
"ஆபிஸீக்கு நேரமாகுதும்மா..."
"இதனால ஒன்னும் அதிக நேரமாகிறாது.. கண்ணா.. நீ போகிற வழியில உந்தங்கச்சியை விட்டுட்டுப் போப்பா..."
"வேணாம்..."
"ஏன் வேணாம்..? அவன் கார் வைச்சிருக்கான்.. அதில போக உனக்குக் கசக்குதா..?"
"கசக்குதுதான்.. நான் சாதாரண கிளார்க்.. ஆபிசரோட ஓசிக்கார் சவாரியெல்லாம் எனக்குத் தோதுப்படாது.. என்னோட ஓட்டை வண்டியே எனக்குப் போதும்..."
காவ்யா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மதிய உணவுடப்பாவைத் தேடி எடுத்து.. துரித கதியில் ஹேண்ட் பாக்கில் திணித்தாள்...
"இவளைத் திருத்தவே முடியாதுடா..." என்று சொன்ன தாயிடம்..
"சின்னப்புள்ளதானம்மா..." என்று கண்ணதாசன் சொல்லிக் கொண்டிருந்ததை காதில் வாங்கிக் கொள்ளாதவளாக வாசலுக்கு பாய்ந்தாள்.. வண்டியை எடுத்தாள்.. போக்குவரத்தில் கலந்தாள்...
நேரம் ஆகிவிட்டதே என்ற பதட்ட உணர்வில் ஏதோ ஒரு திரைப்படத்தில் விவேக்.. 'ஓடிப்போயிரு.. ஓடிப் போயிரு..' என்று ஜெபித்துக் கொண்டே வண்டியை ஓட்டுவதைப் போல...
"நேரமாகிருச்சே.. நேரமாகிருச்சே.." என்று முணுமுணுத்தபடி வண்டியை ஓட்டினாள்..
சிக்னலில் தாமதித்தவள்.. வண்டியைக் கிளப்பித் திருப்ப.. அவளுக்கு முன்னால் போய் கொண்டிருந்த காரும் அதே திருப்பத்தில் திரும்பியது...
காவ்யா அதை எதிர்பார்த்திருக்கவில்லை.. நேரமாகி விட்டது என்ற பதட்டத்தில் இருந்தவள் வேகத்தை குறைக்கும் முன்னால் அந்தக் காரில் மோதிவிட்டாள்...
"டங்..." என்ற பலத்த சப்தத்துடன் அந்தக் காரின் மீது அவள் வண்டி மோத.. காவ்யா அலறியடித்துக் கொண்டு பிரேக்கைப் பிடித்தாள்...
அவளைப் போலவே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனும் பிரேக்கில் கால் வைத்திருக்க வேண்டும்.. காரும் அசையாமல் நின்று விட்டது.. அவன் கதவைத்திறந்து மிடுக்குடன் வெளிப்பட்டான்...
கூட்டம் கூடி விட்டது.. காவ்யா சுதாரித்து வண்டியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து காலை ஊன்றிக் கொண்டதால் வண்டி குடைசாயாமல் தப்பித்து விட்டது...
ஆனால்.. காரின் மீது அது மோதிய வேகத்தில் காரின் பக்கக் கதவில் பெண்டு விழுந்து.. பெயிண்ட் உதிர்ந்து.. பார்க்கச் சசிக்காமல் காரின் வடிவம் மாறிப் போனது...
இறங்கி வந்தவன்.. அவளைக் கவனிக்காமல் சிதிலமடைந்து விட்டக் காரைக் கவனித்ததில் கூட்டம் கோபம் கொண்டது...
"ஏம்ப்பா.. ஏய்ய்.. எந்த ஊருக்காரன்ப்பா நீ..? இப்புடியா பொம்பளப் புள்ள மேல காரை ஏத்துவ..? கண்ணை என்ன பொடனியிலயா வைச்சுக்கிட்டு காரை ஓட்டின...?"
பெண்களுக்கு வக்காலத்து வாங்கும் மதுரை மண்ணின் மைந்தர்களைப் பற்றித் தெரியாத அவன் வியப்புடன் புருவங்களை உயர்த்தினான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -3
எங்கிருந்தோ ஆசைகள். -3
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy