எங்கிருந்தோ ஆசைகள்..-2

2 உன்னைத் தொட்ட காதல் வந்து... என்னைத் தொடவே ஆசை கொண்டேன்.. "என் அப்பா.. ஸ்டேட் கவர்ண்மென்டில் வேலை பார்க்கிறார்..." ...


2
உன்னைத் தொட்ட காதல் வந்து...
என்னைத் தொடவே ஆசை கொண்டேன்..

"என் அப்பா.. ஸ்டேட் கவர்ண்மென்டில் வேலை பார்க்கிறார்..."
"இதைப் பாருடா.. சென்டரலும்.. ஸ்டேட்டும் இங்கே ஒன்னாச் சேர்ந்திருக்கா..? இதைக் கொண்டாடனுமே..."
"ஆபிஸ் கேண்டின் காபி படு கேவலமா இருக்கும்.."
"கப்புன்னு பிடிச்சுக்கிட்டு துப்பு சொல்லிட்ட பாரு.. கற்பூரபுத்திதான் உனக்கு.. ஐ லக் இட்..."
"இங்கிலிஷை விடவே மாட்டியா...?"
"பிறந்ததில இருந்து பீட்டர்தாம்மா.. அவ்வளவு சீக்கிரமா அவன் ஓடிற மாட்டான்.. மெதுவாத்தான் துரத்தனும்..."
"அடச்சீ.. நீ அடங்கவே மாட்டியா.. ஆள் வர ஆரம்பிச்சாச்சு...."
வெகுநாள்களாய் பழகிய சிநேகிதிகளைப் போல இருவரும் ரகசியக் குரலில் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்...
அது எப்படித்தான் பழகிய சில நிமிடங்களிலேயே பாவனாவுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது என்று இன்று வரை ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறாள் காவ்யா...
"என்னடி.. அந்த தொங்குமீசை உன்னையே முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கான்..? சைட்டா..?"
"என்னைச் சொல்றியா..?"
"அவனைச் சொல்றேன்..."
"அதானே பார்த்தேன்.. உன்கூடப் பிரண்டானது தப்போன்னு ஃபீல் பண்ண வைச்சுராதே..."
"அதெல்லாம் செய்ய மாட்டேன்.. உன்னைப் பார்த்தவுடனே கண்டு பிடிச்சுட்டேனே..."
"நான் சைட்டெல்லாம் அடிக்காத அக்மார்க் நல்ல பொண்ணுன்னுதானே...?"
"ஊஹீம்.. உன் டேஸ்ட் இவ்வளவு மட்டக் கேவலமாயிருக்காதுன்னுதான்.. நீ இவனைப் போய் சைட் அடிப்பியா..? மாட்டவே.. மாட்ட..."
பாவனா பேசிய விதத்தில் காவ்யாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது.. அவளுக்கு பாவனாவை பிடித்து விட்டது.. அதுநாள்வரை வெற்றிடமாக இருந்த
அவளது அந்தரங்கத் தோழிக்கான இடத்தை பாவனா நிரப்பி விட்டாள்.. அவளுடனான நட்பில் காவ்யா உயிர்த்தெழுந்தாள்..
"ஏன் காவ்யா.. எனக்கொரு சந்தேகம்..."
"ஒழுங்கான சந்தேகம்தான..?"
"உனக்கு நான எதைப் பேசினாலும் சந்தேகம்தான்.. என்னை நம்பவே கூடாதுங்கிற முடிவோட இருக்கியா..?"
"நம்பற மாதிரி நீ பேசிப் பழகனும்.."
"உன் கூடல்லாம் என்னால பழகிப் பார்க்க முடியாது.. அதுக்கான ஆளே வேற..."
பாவனாவின் ரகசிய கண்சிமிட்டலில் அவள் கையைக்கிள்ளி வைப்பாள் காவ்யா...
"இப்பப் புரியுதா..? ஏன் நான் உன்னைச் சந்தேகப் படறேன்னு...?"
"அதைவிடு.. இதுக்கு வா..."
"எதுக்கு...?"
"கம்ப்யூட்டர்கள் விக்கிற கடைக் கணக்கைப் பார்க்கிறவங்களும் கம்யூட்டரைப் பத்தித்தான் படிச்சிருக்கனும்னு ஏதாச்சும் சட்டமிருக்கா என்ன...?"
"ஏன் இந்த சந்தேகம்..?"
"இல்ல... நீயும் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சயின்ஸ்.. நானும் அதேதான்.. அதனால கேட்டேன்..."
"ஆக்சுவலா எனக்கு எம்.ஸி.ஏ படிக்கனும்கிற ஆசை.. அதனாலதான் கம்யூட்டர் சயின்ஸை எடுத்தேன்..."
"படிச்சிருக்க வேண்டியதுதான..?"
"அப்பா விடலை பாவனா..."
"ஏண்டி..."
"அதிகம் படிச்சா.. அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளை தேட முடியாதாம்..."
கன்னம் சிவக்காமல் எரிச்சலுடன் சொன்னாள் காவ்யா.. எப்போது கல்யாணம் என்று சொல்லி ராதா அவளை விட்டுப் பிரிந்து போனாளோ.. அன்றிலிருந்தே காவ்யாவிற்கு கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டால் பிடிக்காமல் போய்விட்டது.. அதிலும் அவள் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல் போனதற்கு கல்யாணமே காரணமாகிப் போனதில் இன்னும் அதிகமாக கல்யாணத்தின் மீது வெறுப்பைக் கொண்டாள்...
"ஓ.. அதான் இந்த காண்டா...?"
"நீயேன் மேலே படிக்கலை...?"
"எங்க வீட்டில இந்த மாதிரியெல்லாம் அப்பா யோசிக்கலை.. எனக்குத் தான் படிச்சது போதும்ன்னு ஆகிப் போச்சு..."
"அடிப்பாவி..! படிப்பு போதும்ன்னு நினைச்சியா..? கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலக அளவு பாவனா.."
"மதுரையின்னா.. எதுக்கெடுத்தாலும் செந்தமிழில் பேசிச் சோதிக்கனுமா..? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிடித்தம் இருக்கும்.. எனக்கு புருசன் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொண்டு வந்து கொட்ட.. ஹாயாய் பிள்ளை குட்டிகளைப் பெற்று.. வளர்த்து.. குடும்பத் தலைவியாய் குடும்பம் நடத்தத்தான் பிடிக்கும்.. மேலே படிச்சா.. படித்த படிப்பு வீணாகிப் போயிரக் கூடாதுன்னு வேலைக்குப் போகத் தோணும்.. தேவையா..?"
இப்படிப் பேசுகிற ஒருத்தியை அப்போதுதான் முதன்முதலாக பார்த்தாள் காவ்யா.. அவளவள்.. வானத்தைத் தொட்டு வர நினைத்துக் கொண்டிருக்க.. இங்கே விட்டுச் சிறகடிக்க வாய்ப்பிருந்தும்.. சிறகடிக்க மாட்டேனென்று பிடிவாதமாக இறக்கையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பவளை என்னவென்று காவ்யா சொல்லுவாள்...?
"எனக்கெல்லாம் உன்னைப் போல வீடு கிடைச்சிருந்தா சாதிச்சிருப்பேண்டி..." அவள் பெருமூச்சு விட்டாள்..
"ரொம்பத்தான் ஏங்கிப் போகாதே.. ஓசூரில் எங்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு கல்யாணமாச்சு.. குழந்தை பிறக்கிற வரைக்கும் அவங்க சந்தோசமாத்தான் வேலைக்குப் போனாங்க.. குழந்தை பிறந்து ஆறு மாசமானதும் லீவு முடிஞ்சு வேலைக்கு அவங்க கிளம்பினப்ப.. அந்தக் குழந்தையும்.. அவங்களும் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா.. சொல்லில் அடங்காது காவ்யா.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. என் குழந்தையை வேலையைக் காரணம் சொல்லி நான் பிரிய மாட்டேன்னு.."
"எத்தனை நாளைக்கு பாவனா..? அந்தக் குழந்தை படிக்கப்போகும்.. வேலைக்குப் போகும்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தப் போகும்.. அந்தச் சமயத்தில இந்தப் பெண் அடையாளமில்லாம தன்னோட அடையாளத்தைத் தொலைச்சிட்டு.. இன்னாரோட பெண்டாட்டி.. இன்னாரோட அம்மான்னு நிப்பா.. அப்ப இவ அடையாளத்தைத் தேடிப் போனாலும் அது திரும்பக் கிடைக்காது..."
"இதுவும் சரிதான்.. ஆனா அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்களுக்கு காவ்யா.. மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையில அடையாளம் தேவையில்லன்னு நான் நினைக்கிறேன்.. இது என்னோட விருப்பம்..."
பாவனா சில விசயங்களில் மிகத் தெளிவாக இருந்தாள்.. அவளது வாழ்வின் நல்லது.. கெட்டதை அவளே தீர்மானித்தாள்.. இது இன்னொரு வகையான வாழ்க்கைப்பாடம்.. இந்தப் பாடத்தை பாவனாமிடமிருந்து கற்றுக் கொண்டாள் காவ்யா...
"விடிஞ்சு எழுந்திருச்சா.. வானத்தையும்.. பூமியையும் வேடிக்கை பார்த்துக் கிட்டுத்தான் நிக்கனுமுன்னு ஏதாச்சும் சட்டமிருக்கா..?"
அன்னபூரணியின் குரலில் திரும்பினாள் காவ்யா.. கையில் காபித்தம்ளரோடு மாடியேறி வந்த கோபம் அன்னபூரணியின் முகத்தில் தெரிந்தது...
"இப்பத்தான் எழுந்திருச்சேன்ம்மா.."
"எழுந்திருச்சா.. கீழே இறங்கி வந்து காபியை வாங்கிக் குடிக்கனும்.. உன் அண்ணன் வரல..? அவன் ஆம்பளை..! அவனே கீழே வந்து காபிய குடிக்கிறான்.. நீ என்னடான்னா தினமும் என்ன மாடியேற வைக்கிற.. எனக்கென்ன வயசா திரும்புது...?"
ஒருவாய் காபிக்கு இத்தனை பாட்டா என்றிருந்தது காவ்யாவிற்கு.. அவளால் அதை அன்னபூரணியிடம் சொல்லி விட முடியாது.. ஆய்ந்து விடுவாள் ஆய்ந்து... எந்த அளவுக்கு மகள்மீது பாசத்தைப் பொழிகிறாளோ.. அந்த அளவுக்கு அவள் கோபத்தையும் காட்டுவாள்...
"காலையில என்னடி வானிலை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க..? வேலைக்குப் போகலியா...?"
"போகனும்மா..."
"எப்ப..?"
"இப்பம்மா..."
"மணி என்னன்னு தெரியுமா..? தினமும் இதே கதைதான்.. உச்சிப் பொழுது வார வரைக்கும் தூங்க வேண்டியது.. அப்புறமா கண்முழிச்சு.. அரக்கப் பரக்க கிளம்பி ஓட வேண்டியது.. உன் அண்ணனைப் பாரு..."
'பாத்தாலும்.. கழுதையில..' எரிச்சல் மண்டியது காவ்யாவிற்கு...
எதற்கெடுத்தாலும்.. அண்ணனைப் பாரு.. அண்ணனைப் பாருதானா..? அதைவிட்டால் வேறு பேச்சே அன்னபூரணியின் வாயிலிருந்து வராதா..?
"அண்ணனை எதுக்கும்மா பார்க்கச் சொல்ற...?"
"அவனைப் பாத்தாலாவது உனக்குப் புத்தி வருதான்னு பாக்கத்தான்... சோம்பேறி.. எட்டுமணி வரைக்கும் பொம்பளப்புள்ள தூங்கலாமாடி..? நாளைக்கு வாக்கப்பட்டுப் போன இடத்திலும் இதே மாதிரிதானே தூங்கி என் மானத்தை வாங்குவ..?"
"ஏம்மா.. என் தூக்கத்துக்கும்.. நான் வாழ்க்கைப் பட்டுப் போகிறதுக்கும் என்ன சம்பந்தம்...?"
"அதை உன் அப்பாகிட்ட வந்து கேளு.. விளங்கச் சொல்லுவாரு..." இடக்காக பேசிவிட்டு இடத்தைக் காலி பண்ணினாள் அன்னபூரணி...
அன்னபூரணி தங்கம்..! பேச ஆரம்பித்தால்.. அரை மணியோடு நிறுத்திக் கொள்ளுவாள்.. காவ்யாவைப் பெற்றெடுத்த அப்பா சிவதாணு அப்படியல்ல.. அவரிடம் பேச்சைக் கொடுத்தால் கையில் மைக் இல்லாத அரசியல்வாதியைப் போல நாள் முழுவதும் பேசித்தள்ளி விடுவார்.. விட்ட விடிகாலையில் அவரிடம் போய் பேச்சைக் கொடுத்து.. விளக்கம் கேட்க காவ்யா என்ன முட்டாளா..?
அவள் குளியலறைக்குள் ஓடிப் போய் விட்டாள்.. குளித்து மஞ்சள் வண்ண சுடிதாருக்குள் புகுந்து.. முதல்நாள் வேலை முடிந்ததும தூக்கிக் கடாசிய ஹேண்ட்பேக் எந்த மூலையில் ஒளிந்திருக்கிறது என்பதைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு அவள் மாடிப்படியில் கால் வைத்தபோது.. கண்ணதாசன் அவன் அறையிலிருந்து வெளிப்பட்டான்...
மடிப்புக் கலையாத பேன்ட்.. சர்ட்டும்.. மிடுக்கான தோற்றமுமாக இருந்தவனைப் பார்த்தபோது காவ்யாவின் மனதில் பொறாமை பொங்கி எழுந்தது...
அவளால் படிக்க முடியாத மேற்படிப்பை படித்து முடித்தவன் கண்ணதாசன்.. டி.என்.பி.எஸ்.சி பரிட்சையை எழுதி.. மாநில அரசாங்கத்தில் முக்கிய பதவியை வசித்து.. கை நிறைய சம்பளம் வாங்குபவன்.. காவ்யாவின் குடும்பம் குடியிருக்கும் இந்த மாடிவீடு அவன் சம்பாதித்து.. அவன் பெயரில் லோன்போட்டுக் கட்டியது.. சிவ தாணுவின் பழைய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்கள்...
மகனால் உயர்ந்திருந்த வாழ்க்கைத் தரத்தில்.. அன்னபூரணிக்கு அவன் பெருமையை விட்டால் வேறு பேச்சைப் பேசத் தெரியாது...
"குட் மார்னிங் காவ்யா..."
"இந்தா பாருண்ணே.. நான் உன் தங்கச்சி..."
"ஸோ..?"
"உன் ஆபிஸில அலப்பறையை போடறதைப் போல என்கிட்டயும் போடாத.. நான் ஒன்னும் அம்மா இல்ல.. நீ எதைப் பேசினாலும்.. ஜிஞ்சா.. ஜால்ரா.. அடிக்கறதுக்கு.."
காவ்யாவின் படபடப்பை அவன் லட்சியமே பண்ணிக்கொள்ளவில்லை.. கழுத்து டையை சரிசெய்தபடி தங்கையைப் பார்த்துச் சிரித்தான்...
சித்திரை மாசத்து கத்தரி வெயிலில இவனுக்கு எதுக்கு டை..? அதற்கும் வயிறெரிந்தாள் காவ்யா...
"உன்னோடது பிரைவேட் ஆபிஸாச்சே.." கண்ணதாசன் கேட்டான்...
"உனக்கு இப்பத்தான் அது தெரியுமா..? நீ பெரிய ஸ்டேட்கவர்ண்மென்டு ஆபிசர்ன்னு குத்திக்காட்டறியா..?"
"ரிலாக்ஸ் காவ்யா..."
"இங்கிலிஷை எடுத்து விடாதே..."
"உன் ஆபிஸில லேட்டாப் போனாக் கோவிச்சுக்க மாட்டாங்களா..? கவர்ண்மென்ட் ஆபிசில ஸ்ட்ரிக்டா இருக்கோம்.. அதனால கேட்டேன்..."
"நீ வேணும்னா போனைப் போட்டு போட்டுக்குடு.."
என்னதான் மிளகாயின் காரத்தை விட அதிகமான காரத்தோடு காவ்யா பதில் சொன்னாலும் கண்ணதாசன் கண்டு கொள்ளாமல் புன்னகை மன்னனாகவே
இருந்தான்..
அவள் பெண்ணாக பிறந்து விட்ட கொடுமையினையும்.. அதனால் மேலே படிக்க முடியாமல் போய்விட்ட துயரத்தையும் வாய்க்குள் முணுமுணுத்தபடி.. வேகமாக படியிறங்கினாள் காவ்யா...
"ஏண்டி இப்படி ஓடி வர்ற.. உன் அண்ணனைப் பாரு.. எப்படி நிதானமா நடந்து வர்றான்.. உனக்குத்தான் எதுவும் தெரியலைன்னாலும்.. அவனப் பாத்தாவது கத்துக்கலாமில்ல...?"
அன்னபூரணி.. அதற்கும் கடிந்து கொண்டாள்...
"விடும்மா.. சின்னப் பொண்ணுதானே.. போகப்போக கத்துக்குவா..."
'ஆமாண்டா அண்ணா.. நான் இதைத்தான் கத்துக்கனும்.. எம்.ஸி.ஏ யை கத்துக்கக் கூடாது...' பல்லைக் கடித்தாள் காவ்யா..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-2
எங்கிருந்தோ ஆசைகள்..-2
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy