எங்கிருந்தோ ஆசைகள். *18

18 யாழினிலே என்குரல் கேட்டு... நீ   துயில ஆசை கொண்டேன்... ' இவளுக்கு நான் யாரோ ஒருவனா.. ?' இந்த நினைவில் மனம் கொந்தளி...


18
யாழினிலே என்குரல் கேட்டு...
நீ  துயில ஆசை கொண்டேன்...


'இவளுக்கு நான் யாரோ ஒருவனா..?'
இந்த நினைவில் மனம் கொந்தளித்தான் அர்ஜீன்.. அவளுக்காக அடித்துப் பிடித்து.. இரவோடு இரவாக விமானத்தைப் பிடித்து அவன் பறந்து வந்தால்.. இங்கே அவள் மற்றவர்களும்.. அவளுடைய அண்ணனும் ஒன்றாகி விட முடியுமா என்று கேள்வி கேட்கிறாள்...
'என்னைவிட இவ அண்ணன் உசத்தியாப் போயிட்டானா...'
அவளுக்கு அவன் யார் என்ற நினைவு இல்லாமல் மனம் கொதித்தான் அவன்.. அவள்மீதான அவனது அக்கறையை கேள்வி கேட்டுவிட்டுப் போய்விட்ட கண்ணதாசனின் மேல் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. அந்த வேகத்தில்..
"அவ்வளவு அக்கறையிருக்கிறவர் எதுக்காக தங்கையை வெளியே வேலைக்கு அனுப்பனும்..?" என்று கேட்டு விட்டான்..
காவ்யாவின் முகம் ரத்தமாக சிவந்து விட்டது.. இப்படியொரு கேள்வியை எதிர்நோக்க நேரிடும் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை...
'என்ன வார்த்தைய கேட்டுட்டான்..' அவள் மனம் துடித்தது...
"அதுவா சார்.. நான் கொண்டு போகிற சம்பளப் பணத்தில்தான என் வீட்டு உலை கொதிக்கனும்.. அதான் தெரியாத்தனமா தங்கச்சிய வேலைக்கு அனுப்பிட்டார்.." என்றபடி எழுந்து கொண்டாள் காவ்யா...
அவள் மேஜையின் மேலிருந்த ஃபைல்களை அடுக்கி அவன் மேஜைமீது வைத்தாள்.. மேஜையைப் பூட்டி சாவியை ஃபைல்களின் மேல் வைத்தாள்.. பணக் கட்டுக்களை எடுத்து அவன் முன்னால் பரப்பி வைத்தாள்..
"என்ன இது..?" அவன் புருவங்கள் சுருங்கின...
"என்கிட்ட இருந்த பொறுப்பையெல்லாம் ஒப்படைச்சுட்டேன்.. பணத்தை எண்ணிப் பார்த்து சரியாய் இருக்குன்னு சொல்லிட்டிங்கன்னா நான் என் வழியைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.."
"வாட்..?"
"அதாவது நான் என் வேலையை விடறேன்னு சொல்றேன்.."
அவள் நிமிர்வாக பதில் சொல்லிய விதத்தில் அவனது ஈகோ காயமடைந்தது.. அத்தனை விரைவில் அவள் வேலையை விட்டுச்செல்லும் முடிவை எடுக்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.. அந்த முடிவை எந்தவிதத் தயக்கமோ.. தடுமாற்றமோ இல்லாமல் அவள் எடுத்ததில் அவன் மனம் பாதிப்படைந்தது..
"ஸோ.. நினைச்சவுடனே எதையும் நீ தூக்கிப் போட்டிருவ.." அவன் உறுத்துப் பார்த்தபடி சொன்னான்...
"நினைச்சதையெல்லாம் நீங்க பேசலாம்.. நினைச்சதை நான் செய்யக் கூடாதா..?"
"வேலைக்குன்னு வந்துட்டா அதில சில ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இருக்கும்.. அது வேணாம்ன்னு சொன்னா எப்படி..?"
"ரெஸ்பான்ஸிபிலிட்டிஸை யாரும் இங்கே தட்டிக் கழிக்கலை.."
"அப்படி நினைக்கிறவங்க.. இந்தக் கடையோட அட்மினிஸ்ட்ரேசனில அவங்க அண்ணன் மூக்கை நுழைக்கிறதை அலோவ் பண்ணியிருக்கக் கூடாது..."
"எங்க அண்ணனே ஒரு அட்மினிஸ்ட்ரேசன் ஆபிசர்தான் சார்.. அதுக்கு அதோட வேலையைப் பார்க்கவே நேரமில்ல.. இதில உங்க டப்பாக் கடையோட அட்மினிஸ்ட்ரேசனில மூக்கை நுழைக்கனும்னு அதுக்கு என்ன தலையெழுத்தா..?"
"டப்பாக் கடையா..? யு மீன்.. ஸ்மால் பாக்ஸ் ஸ்டோர்..?"
"எனக்கு இங்கிலீஷ் பிடிக்காது..."
"எவ்வளவு தைரியமிருந்தா என் கடையை குறைவாகப் பேசுவ..?"
"எவ்வளவு தைரியமிருந்தா நீங்க என் அண்ணனை குறைவாய் பேசுவீங்க...?"
"என் அட்மினிஸ்ட்ரேசனில் தலையிட உன் அண்ணன்யார்..? முதலில் இதுக்கு ஒரு பதிலைச் சொல்லு.. இங்கே வேலை பார்க்கிறது நீ மட்டும்தான்.. உன் அண்ணன் எதுக்காக உன்கூட வரனும்...?"
"இதுக்கெல்லாம் அதுக்கு நேரமில்ல சார்.. பண விவகாரத்த நீங்க என் தலையில கட்டினீங்க.. துணைக்கு ஆளில்லாம தனியா எப்படி பேங்குக்குப் போறதுன்னு நான் மறுகி நின்னேன்.. அண்ணன் எனக்கு துணைக்கு வந்துச்சு.. இதைப் பத்தி உங்களுக்கென்ன தெரியும்.? என் கூடவளர்ந்த என் அண்ணனுக்குத்தான் தெரியும்.."
"துணைக்கு ஆளைக் கூப்பிட்டுக்கொண்டு போக நான் அலோவ் பண்ணியிருந்தேனே..."
"யாரைக் கூப்பிடறது..? ஏகாம்பரம் ஆத்தாத மனுசரு.. அவரு வேலைக்கு வந்து போறதே பெரிய விசயம்.. கந்தசாமியைக் கூப்பிட்டா.. என் வேலை இது இல்லம்மான்னு கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டாரு... வேற என்னத்தைத்தான் செய்யறது..?"
காவ்யாவின் முகத்தில் தெரிந்த எரிச்சலில் அர்ஜீனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன.. இதில் இத்தனை இடர்பாடுகள் இருக்கக் கூடும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை...
"ஏகாம்பரமும்.. கந்தசாமியும் மட்டும்தான் இந்த ஆபிஸில் வேலை செய்கிறாங்களா..? மத்தவங்க உன் கண்ணுக்குத் தெரியலையா..?"
"தெரியலை சார்..." வெடுக்கென்று அவள் பதில் சொன்னாள்..
"வொய்..?"
"ஏனா..? ஏன் கேட்க மாட்டிங்க... மத்தவங்கள்ளாம் இளந்தாரிக.. அவங்ககூட நான் வெளியே போய் வந்தா என் வீட்டில என்னைச் சேர்க்க மாட்டாங்க.. என் அம்மா விசம் வைச்சே என்னைச் சாய்ச்சிரும்.. தேவையா..?"
"ஓ..."
இளம்வயது ஆண்களுடன் தனித்து வெளியே போவதை அவள் விரும்ப மாட்டாள் என்பதில் அவன் மனதில் இனம் புரியாத திருப்தி ஏற்பட்டது...
மேஜை மீதிருந்த ஃபைல்களை அவள் பக்கமாக நகர்த்தினான் அவன்..
"என்னது..?"
"காமெடி பண்ணாம இதையெல்லாம் அள்ளிக்கிட்டு உன்சீட்டில போய் உட்காரு.. நிறைய வேலையிருக்கு..."
எதுவுமே நடக்காததைப் போல அவன் பேசிய விதத்தில் காவ்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"நான் வேலையை விடறேன்னு சொல்றது.. உங்களுக்கு காமெடியாய் இருக்கா..?"
"ஆர்கியூ பண்ணினது போதும் காவ்யா.. வொர்க்கர்ஸீக்கு சேலரி கொடுக்கனும்.. சேலரி லிஸ்டைக் கொடு.."
"அதைப்பத்தி எனக்கென்ன கவலை..? உங்க சம்பளமே எனக்கு வேணாம்.. இந்த மாதம் நான் ஃப்ரீயாய் வொர்க் பண்ணிக் கொடுத்தேன்னு நினைச்சுக்கங்க.. யாருக்கு வேணும் உங்க சம்பளப் பணம்..? என்னவோ இந்த சம்பளத்துக்காகத்தான் நான் வேலைக்கு வர்றேன்னு பேசினிங்களே.. எனக்கு உங்க சம்பளம் வேண்டாம்.. சம்பளத்தையும் தாண்டி நிறைய விசயங்கள் இருக்கு.. அதெல்லாம் உங்க மரமண்டைக்குப் புரியாது.."
"மரமண்டையா..?"
"ஆமாம்.. மரமண்டைதான்..."
"அப்போ டப்பாக் கடை..! இப்ப மரமண்டை..! வெரிகுட்.. செக்கரட்டரின்னா இப்படித்தான் இருக்கனும்.. நான் ரொம்பக் குடுத்து வைத்தவன்.. கீப் இட் அப்... "
"உங்க இங்கிலீஷைத் தூக்கிக் குப்பையில போடுங்க.."
"போட்டுட்டாப் போச்சு.. நான் இருக்கலாமா.. இல்லை.. நானும் குப்பைத் தொட்டியில உட்கார்ந்துக்கனுமா...?"
சிரிக்காமல் அவன் கேட்டதில் காவ்யா கொஞ்சமாக மலையிறங்கினாள்.. கோபத்தில் உதடுகள் துடிக்க.. அவனை முறைத்துப் பார்த்தாள்.. உணர்ச்சி மிகுதியில் அவள் கண்கள் லேசாக கலங்கி விட்டன...
"நீங்க சென்னைக்காரங்க.. எல்லாமும் உங்களுக்கு விளையாட்டாத்தான் இருக்கும்.. நான் அப்படியில்ல..."
"நீ அப்படின்னு நான் எதுவும் சொன்னேனா..? இல்லையே..."
"எனக்கு மேலே படிக்க முடியலை.. வேலைக்குப் போகலாம்ன்னு நினைச்சா.. அதையும் எங்க வீட்டில வேணாம்ன்னு சொல்லிட்டாங்க... கொஞ்ச நாளைக்கு மட்டும் வேலைக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்லித்-தான் இந்தக் கடையில கணக்கு வழக்கைப் பாக்கிற வேலைக்கு வந்துக்கிட்டு இருக்கேன்.. இதை விட்டுறச் சொல்லி என் அம்மா சொல்லாத நாளே இல்ல.. என் விவகாரம் இப்படியிருக்க.. கேட்டிங்களே ஒரு கேள்வி.."
காவ்யாவின் குமுறலில் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று மனம் நொந்து போனான் அர்ஜீன்...
"எங்க வீட்டில யாரும் என்னை வேலைக்குப் போன்னு சொன்னதில்ல.. நான்தான் அடம் புடிச்சு வேலைக்கு வந்து போய்க்கிட்டு இருக்கேன்.. அது தெரியாம நீங்க வார்த்தையை விட்டுப்புட்ட பின்னால இங்கே வேலை பார்க்க என்னால முடியாது..."
காவ்யாவின் உறுதியில் அர்ஜீனின் மனம் அசைந்தது.. அவளில்லாத அந்தக் கடையை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...
"லுக் காவ்யா.. நைட் முழுவதும் தூங்காம இருந்த அசதியில பட்டுன்னு பேசிட்டேன்.. அதை மனதில் வைத்துக்காதே..."
"ஓஹோ.. உங்களுக்கு அசதி வந்தா நீங்க வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவீங்க.. நான் கேட்டுக்கனுமா..? நினைச்சதையெல்லாம் நீங்க பேசிடறதுக்கு இது ஒன்னும் சென்னையில்ல சார் ..எங்க மதுரை..."
"இருக்கட்டுமே.. மதுரை மண்ணில மன்னிப்பே கிடையாதா..?"
"சில பேச்சுக்கு மன்னிப்புக் கிடையாது.."
"நான் மட்டும்தான் பேசினேனா..? நீ பேசலையா..?"
"உங்களைப் போல பேசலை..."
"என்னை விட அதிகமாவே பேசின.. என் கடையை டப்பாக்கடைன்னு சொன்ன.. என் தலையை மரமண்டைன்னு சொன்ன.. நீயே பாரு.. என் முகத்தைப் பார்த்தா மரமண்டை மாதிரியா தெரியுது...?"
விசமக் குரலில் அவளை வம்புக்கிழுத்தான் அர்ஜீன்.. அவனையுமறியாமல் அவன் முகத்தை அவள் பார்த்து வைத்தாள்..
அந்த முகத்தில் தளும்பிய ஆண்மை நிறைந்த கம்பீரத்தில் அவளின் கன்னிமனம் சிக்கிக் கொண்டது.. அவன் பார்வை அதற்காகவே காத்திருந்ததைப் போல அவளை ஊடுறிவியது.. ஒரு வினாடிக்கு மேல் அவன் முகத்தைப் பார்க்க முடியாதவளாய் முகம் சிவக்க.. வேறு திசையில் பார்த்து வைத்தாள் காவ்யா...
அந்த முகச்சிவப்பு கோபத்தினால் வந்ததல்ல.. வெட்கத்தினால் வந்தது என்று கண்டு கொண்ட அர்ஜீனின் கண்கள் மின்னின.. அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தவித்ததில் அவனது ஆண்மை கர்வம் கொண்டது..
அது நேரம் வரை அவளைச் சரியாகப் பார்க்காமல் பேச்சிலேயே கவனமாக இருந்தவன்.. உச்சி முதல் உள்ளங்கால் வரை நிதானமாக.. ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான்.. அதை உணர்ந்தவளின் மெல்லிய விரல்கள் லேசாக நடுங்கத் தொடங்கியதில் அவனுக்குள் கிறக்கம் பரவியது..
தளர்வாகப் பின்னலிட்டிருந்த நீண்ட பின்னலை அவன் ஆர்வத்துடன் பார்த்தான்.. இது இந்தியப் பெண்மைக்கான அடையாளம் என்று அவனுக்குத் தோன்றியது.. அவளிடம் தெரிந்த அந்த பெண்மையின் மிளிர்வில் அவன் மயங்கிப் போனான்...
நெருக்கமாகக் கட்டிய மல்லிகைப் பூச்சரம் அவள் தோள்களில் வழிந்ததில் தெரிந்த குடும்பப் பாங்கான அழகில் அவன் மனம் சிக்கித் தவித்தது..
எப்போதும் சுடிதாரில் வருபவள் அன்று புடவையைக் கட்டியிருப்பதை கவனித்தவனுக்கு இவள் எல்லா விதமான உடைகளிலும் அழகாக இருக்கிறாள் என்ற நினைவு வந்தது...
ஊதா வண்ண ஷிபான் சேலையின் பார்டரில் ஜரிகை வேலைப்பாடு இருந்தது.. சேலையின் உள் பகுதியில் அதே ஜரிகை புள்ளிகளாக நிறைந்திருந்தது...
அழகான அந்தச் சேலையில்.. அவளது அழகு பன்மடங்கு அதிகமாகி விட்டதைப் போலத் தோன்றியதில் அவன் தாகத்துடன் அவளைப் பார்த்ததான்.. அவன் விழிகள்.. அவள் விழிகளில் எதையோ தேடின...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். *18
எங்கிருந்தோ ஆசைகள். *18
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy