எங்கிருந்தோ ஆசைகள்..-14

14 ஏகாந்தமாய் உன் மடிசாய... என் மனதில் ஆசை கொண்டேன்... ஒரு வாரத்திற்குள் கடையை முழுவதுமாக தன் வசப்படுத்தி விட்டான் அர்ஜீன்.. கட...


14
ஏகாந்தமாய் உன் மடிசாய...
என் மனதில் ஆசை கொண்டேன்...


ஒரு வாரத்திற்குள் கடையை முழுவதுமாக தன் வசப்படுத்தி விட்டான் அர்ஜீன்.. கடையில் வேலை செய்கிறவர்களிடம் தோழமையுடன் பழகினான்.. வரவு.. செலவுக் கணக்கை காவ்யாவிடம் ஒப்படைத்தான்.. அவன் இல்லாத நாள்களில் பேங்கில் வரவு செலவு நடத்தும் அதிகாரத்தை அவள் கையில் கொடுத்தான்...
"தினமும் கலெக்சன் ஆகிற பணத்தை பேங்கில கட்டிரு..."
"எனக்குப் பழக்கமில்லை..." அவள் மறுத்தாள்...
"பழகிக்க..." அவன் கறாராய் உத்தரவிட்டான்...
"திருடி கையில பெட்டிச்சாவியா..? நீங்க கெட்டிக் காரர்தான்..." முகம் திருப்பிக் கொண்டாள் காவ்யா...
அர்ஜீன் குற்ற உணர்வுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான்...
"அதை நீ மறக்கவே மாட்டியா..?"
"மறக்கிற வார்த்தைகளை நீங்க பேசலை.."
"ஏதோ கோபத்தில பேசின பேச்சு.. அதைப் போய் நீ பெரிதா எடுத்துக்கிட்டா எப்படி..? யு ஆர் எ கிளவர் கேர்ள் காவ்யா... இது போல ஸில்லித்தனமான பேச்சுக்களையெல்லாம் நீ மறந்து விடணும்.. நினைவில வைத்துக்கக் கூடாது..."
"இதிலயும் கெட்டிக்காரர்தான்.." அவளுக்கு கோபத்தில் முகம் சிவந்தது...
"பெண்களுக்கு வெட்கத்தில்தான் முகம் சிவக்கனும்.. இப்படிக் கோபத்தில் முகம் சிவக்கக் கூடாது.. ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது காவ்யா..."
"நான் கோபக்காரிதான்.. பிறந்தப்ப இருந்து இப்படித்தான் நான் இருக்கேன்... இனிமேலும் இப்படித்தான் இருப்பேன்.. உங்களுக்கு மட்டும் கோபம் வரலாம்.. எனக்கு வரக்கூடாதா..?"
"இதையே நானும் கேட்கலாமில்லையா...?"
"தாராளமா கோபப் படுங்க.. ஆனா.. கோபத்தில எதை வேணும்னாலும் பேசிருவீங்களா...?"
"நீயும் அப்படிப் பேசலாமா..?"
"எப்படிப் பேசினேன்..?"
"நீங்க யாருன்னு என்னைக் கேட்கலாமா..?"
அப்படிக் கேட்காமல் வேறு எப்படிக் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை...
'இவன் என்னதான் மனசில நினைச்சுக்கிட்டு இருக்கான்..?'
"அந்தக் கோபத்தில சட்டுன்னு பேசிட்டேன்... ஆம் ஸாரி..."
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாக இருந்தாள்...
"அதுதான் ஸாரி சொல்லிட்டேனில்ல..? சிரி..." அவன் இலகுவாகப் பேசிச் சிரித்தான்..
காவ்யா முகச்சுளிப்புடன் அவனையே பார்த்தாள்.. அவளது அந்தப் பார்வையில் அவன் புருவங்கள் சுருங்கின.. என்ன என்ற பாவனையில் புருவங்களை உயர்த்தினான்..
"நீங்க ஃபாரின் போய் படிச்சுட்டு வந்தவர்.. சென்னையில பொழைக்கிறவர்..."
"வாட் ஃபார்..?"
"உங்களுக்கு எதை வேண்டும்னாலும் பேசிச்- சிரிக்கிறது ஈஸியா இருக்கலாம்.. எனக்கு அப்படியில்லை.."
"நீ என்னதான் சொல்ல வருகிற..?"
"நீங்க இந்தக் கடையோட ஓனர்...."
"இல்லைன்னு யார் சொன்னது..?"
"நான் இங்கே வேலை பார்க்கிறவ..."
"ம்ப்ச்.. இதை எதுக்கு இப்பச் சொல்கிற..?"
அர்ஜீன் எரிச்சல் பட்டான்.. அது நேரம் வரை வராத எரிச்சல் அப்போது மட்டும் எதற்காக வந்து சேர்ந்தது.. என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டாள் காவ்யா...
"இப்பன்னு இல்ல சார்.. எப்பவும் இதை நீங்க நினைப்பில வைச்சுக்கனும்..."
காவ்யா அவன் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு வேலையில் கவனமானதில் அவனுக்குள் கோபம் எழுந்தது... புருவங்கள் முடிச்சிட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. யதேச்சையாக தலை நிமிர்ந்தவளின் பார்வை அவனைச் சந்தித்ததும்.. அவள் முகம் சிவந்தது...
அவன் முகச்சுளிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட.. அவனுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தீ அணைந்து அங்கே இதம் பரவியது...
அவளின் கன்னச் சிகப்பை ரசித்துப் பார்த்தவனின் விழிகளில் உல்லாசம் வந்தது.. அவளை முதன் முதலாகச் சந்தித்த தினத்தில் அவள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்த நினைவில் அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்...
"ஏன் காவ்யா...?"
அவன் அழைத்ததில் அவள் நிமிர்ந்து பார்த்தாள்..
"அதெப்படி என் பெயரைச் சொன்னதும் நான் கண்ணில் படற பொண்ணுகளையெல்லாம் கணக்குப் பண்ணிக் கவிழ்க்கிறதில கில்லாடின்னு சொன்ன..? அர்ஜீனன்னா காதல் மன்னன்னு அர்த்தமாகுமா..?"
திடிரென்று அவன் அப்படிக் கேட்டதும் அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. யோசித்த பின்னால்தான் அவன் எதைச் சொல்கிறான் என்றே அவளுக்குப் புரிந்தது...
"அதுவா சார்.. பி.எஸ்.ஸி முடிச்சுட்டு வேலைக்கு வந்துக்கிட்டிருக்க என்னைப் பார்த்து உனக்குப் பதினாறு வயசு தானேன்னு கணக்குப் போட்டிங்கள்ல.. அதிலயிருந்து கண்டு பிடிச்சதுதான் சார்..." என்று சிரிக்காமல் பதில் சொன்னாள்...
"ஹா.. ஹா.. உண்மையிலேயே உன்னைப் பார்த்தா ஸ்கூல் கோயின்ங் கேர்ள் போலத்தான் இருக்குது..."
"இருக்கும்.. இருக்கும்.. எதுக்கும் இதைப் போல கணக்குப் போடறதை நிப்பாட்டி வையுங்க..."
"ஏன்...?"
"ஏனா..? உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.. திருப்பாச்சி ஊரு அருவா செய்கிறதுக்குத்தான்... பெயர் வாங்கியிருக்கு அதை வாங்கிக் குவிச்சு.. யூஸ் பண்றதுக்கு எங்க மதுரைதான் பெயர் வாங்கியிருக்கு... அதனால அடக்கி வாசிங்க..."
"இல்லேன்னா..."
"உங்க மதுரைக்கார மச்சானுக... அருவாளைத் தூக்கிக்கிட்டு வந்து கணக்கெழுதி விட்டுப் போயிருவானுக..."
"இதைப் பாருடா.. பேனா இல்லாமலே கணக்கை எழுதுவாங்களா...?"
"எங்க ஊரு ஆளுகளுக்கு.. வெட்டரிவாளும்.. வேலுக்கம்பும்தான் பேனாவும்.. பென்சிலும்..."
"அடேங்கப்பா.. பயங்கர பில்ட் அப்பா இருக்கு..." வாய்விட்டு சிரித்தவன் ஆழ்ந்த குரலில் கேட்டான்..
"பயமுறுத்தறியா...?"
அவன் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று பிடிபடவில்லை...
ஆமாம் என்று சொன்னால் இவன் என்ன செய்து விடுவான் என்ற வீம்பு அவளுக்குள் எழுந்தது...
"உங்களை எதுக்காக நான் பயமுறுத்தனும்... எங்க ஊரு பழக்கத்தைச் சொன்னேன்... எங்க ஊரில மண்ணையும்.. பெண்ணையும் பத்திரமாப் பார்த்துக்குவாங்க..."
"எல்லா ஊரிலயும் அப்படித்தான்..." கடினமான குரலுடன் அவன் சொன்னான்...
'கோவிச்சுக்கிட்டானோ...' என்று தோன்றிய போதும்.. அதைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளவில்லை..
'கோவிச்சுக்கிட்டாக் கோவிச்சுக்கட்டுமே.. இவன் கோவிக்கிறதாலே என் வீட்டிலே குழம்பு கொதிக்காம போயிரப் போகுதா..? இல்ல சோறு வேகாமப் போயிரப் போகுதா...?'
அலட்சியத்துடன் தலையை சிலுப்பிக் கொண்டவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அவளது இயல்பான வெடுக்.. வெடுக்கென்ற பேச்சிலும்.. மூக்கு நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கோபத்திலும் அவன்மனம் மையம் கொள்வதை ஆச்சரியத்துடன் அவன் உண்ரந்தான்..
"இப்படி நான் ஆனதில்ல...
             புத்தி கெட்டுப் போனதில்ல...
    முன்னே பின்னே நேசமில்ல...
             மூச்சு முட்டிப் போனதில்ல..."
அந்தக் கடைக்கு அடுத்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் வரிகளில் அவன் மனம் நிலைத்தது...
ஏதோ வேலையாக அவன் பக்கம் பார்த்தவளின் கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொண்டதில் அர்ஜீனின் மனதில் மோகம் மூண்டது.. அவளது அகன்ற விழிகளில் ஒளிர்ந்த ஒளிர்வில் அவன் அப்படியே அமிழ்ந்து போனான்...
"கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ளே..
             கட்டுத்தறி கண்டேனே...
    படபடக்கும் நெஞ்சுக்குள்ளே...
             பட்டாம்பூச்சி பார்த்தேனே...
    இசை கேட்டேனே..."
பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதன் இசையில் அவன் மனம் நனைந்தது.. இது போன்ற பாடல்களை அவன் அதற்கு முன்னால் கேட்டதில்லை.. மெலிதான பாப் இசையையும்.. நரம்புகளை முறுக்கேற்றும் மேற்கத்திய தாளத்துடன் கூடிய இசையையும் கேட்டுப் பழக்கப் பட்டிருந்தவன் அவன்.. மதுரை மண்ணின் மனம் நிறைந்த ரம்யம் பொங்கும் விழாக்கால நாள்களை உணர்த்தும் தினசரி நாள்களை அவன் சந்தித்ததே இல்லை...
அவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த காவ்யாவிற்கு வேலை ஓடவில்லை..
'இதுக்குத்தான் இந்த ரூமில உட்கார வைச்சானா..?'
அதற்குத்தான் என்று தெரிந்தும்.. அவள் மனதுக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டாள்.. அவன் ஆண்மை ததும்பும் கம்பீரத் தோற்றத்துடன் இருந்ததில் அவளுடைய
கன்னி மனது சலனப்பட்டு விடாமலிருக்கப் போராடித் தவித்தது.. அதே நொடியில் அவன் பார்வையில் லேசான பரவசத்தையும் உணர்ந்து தொலைத்தது...
"அடி ஆத்தாடி..!
             இள மனசொன்னு..
    ரெக்கைகட்டி பறக்குது சரிதானா..?
             அடி அம்மாடி...!
    ஒரு அலையொன்னு மனசில...
             அடிக்குது முறைதானா...?"
அவன் மனதிலிருப்பதைக் கேட்பதைப் போல பாடல் ஒலிக்க.. அவன்
"ஹௌ.. நைஸ்..." என்று ரசித்துச் சொன்னான்...
'இவன் எதைச் சொல்றான்..?'
அவளைத்தான் சொல்கிறானோ என்று அவளுக்குச் சந்தேகம் வந்து விட்டது.. இந்தாரு.. இதையெல்லாம் வேற ஆளுகிட்ட வைச்சுக்க என்று பொங்கி விடலாமென்று அவள் வாய்திறக்க யத்தனித்த போது...
"பாட்டைச் சொன்னேன்.." என்றான் அவன்...
'நிஜமாவே இவன் பாட்டைத்தான் சொன்னானா..?'
கண்களில் சந்தேகத்துடன் நம்பாத பாவனையில் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள் காவ்யா...
"உயிரோடு.. உயிர்சேர...
             ஒருகோடி ஆனந்தம்...
    இவன் மேகமாக யாரோ காரணம்...?"
அவன் பாடலுடன் சேர்ந்து விசிலடித்ததில் அவளின் வேலை தடைபட்டது... அன்றைக்குப் பார்த்து வேலை செய்ய மாட்டேனென்று மக்கர் செய்து விட்ட ஏஸியை மனதுக்குள் சபித்தாள் காவ்யா....
'அதனால்தானே இவன் ஜன்னலை விரியத் திறந்து வைச்சுக்கிட்டு பாட்டைக் கேட்டுக்கிட்டே விசிலடிச்சு வைக்கிறான்..?'
மூடப்பட்ட அறையில் அவனுடன் தனித்து வேலை செய்ய சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவள்.. ஏஸி ரிப்பேரானதில் மகிழ்ந்துதான் போயிருந்தாள்...
'அப்பாடி.. இவன் ஜன்னலை திறந்து வைப்பான்...'
அதுவே இப்படிப் பாடலைக் கேட்க வைத்து.. கூடவே அவனை விசிலையும் அடிக்க வைக்கும் என்று அவள் கனவா கண்டாள்..?
'இவன் எதைச் செஞ்சாலும் அது வில்லங்கமாத்தான் வந்து விடியுது...'
வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவளை பார்வையால் அளவிட்டபடியே...
"உங்க ஊரில் ஒரு லிவிங்னெஸ் தெரியுது..." என்றான் அர்ஜீன்...
"ஓஹோ..." அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் காவ்யா...
"எங்க வீட்டில் ஏதாவது ஒரு பண்டிகையோ.. பங்சனோ நடந்தால் எப்படியொரு கலகலப்பான சிச்சுவேசன் இருக்குமோ.. அதைப் போல இந்த மதுரையில் தினமும் கலகலப்பான நாளாவே இருக்குது.. ஐ லைக் இட்.."
அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்லிய விதத்தில்.. அவன் விரும்புவது மதுரையை மட்டும் தானா என்று அவள் தடுமாறிப் போனாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-14
எங்கிருந்தோ ஆசைகள்..-14
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy