எங்கிருந்தோ ஆசைகள். -11

11 சொக்குப்பொடி சொக்கநாதனின்... மீனாட்சியாக ஆசை கொண்டேன்... "நீ யென்ன சொர்ணாக்காவா.. ?" அவன் நிதானமாக வினவினான்... ...


11
சொக்குப்பொடி சொக்கநாதனின்...
மீனாட்சியாக ஆசை கொண்டேன்...


"நீ யென்ன சொர்ணாக்காவா..?" அவன் நிதானமாக வினவினான்...
"என்னது..?" காவ்யாவிடம் தோன்றியிருந்த தவிப்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட.. அவள் அர்ஜீனை பயமின்றி முறைத்தாள்...
"மெல்ல.. எதுக்கு இத்தனை கோபம்..? இந்த மிரட்டு மிரட்டினா வேற எப்படிக் கூப்பிடுவாங்க...?"
"பார்த்து சார்.. உங்க இஷ்டப்படி பட்டப் பெயர் வைச்சுக்கூப்பிட இது ஒன்னும் உங்க ஊரில்ல..."
"மதுரை..."
அவளுக்குப் பதில் அவன் சொல்லிவிட்டு.. புருவங்களை உயர்த்தினான்...
'கிண்டலா..' அவள் எரிச்சல்பட்டாள்...
"ஆமாம்.. உன் பெயர் என்னன்னு சொன்ன..?"
"எதுவும் சொல்லலை..." வெடுக்கென்று பேசினாள்..
"சும்மா சொல்லாதே... சிக்னல்ல கேட்டப்ப ராணி மங்கம்மான்னு நீ சொல்லலை..." அவன் விடாமல் கிண்டிக்கிளறினான்...
"நினைவிருக்கில்ல..? அப்புறமும் ஏன் கேட்கனும்..?"
"உன் பெயர் அது இல்லைன்னு தெரிஞ்சு போச்சே..." மர்மத்தைக் கண்டு பிடித்து விட்ட பாவனையில் அவன் விழிகள் உருட்டியதும்...
'கண்டு பிடித்து விட்டான் போல...' என்று நினைத்துக் கொண்டாள் காவ்யா...
இது என்ன பெரிய இமாலய ரகசியமா..? என்ற நினைவுடன் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கு.. அடுத்து அவன் பேசியதில் தூக்கிவாரிப் போட்டது...
"உன் பெயர் அல்லிதானே.." என்றான் அவன்...
"அல்லியா..?" அவள் முகம் அஷ்ட கோணலானது...
"ம்ம்.. அல்லிதான்.." அவன் தோள்களை ஸ்டைலாகக் குலுக்கி இரண்டு கைகளையும் விரித்தான்..
'பெரிய்ய்...ய ஸ்டைல் மன்னன்..' அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது...
'ஆனா.. இவன் எப்படி என்னை அல்லின்னு சொல்லலாம்..?' அவளுக்கு கோபம் வந்தது...
அதுவரை கடைக்குள் தனியாகப் போய் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த துரியோதனன் பேச்சு முடிந்தவுடன் அவசரமாக அர்ஜீனின் அறைக்கு திரும்பி வந்தார்...
"ஸாரி.. வீட்டிலயிருந்து பேசினாங்க.. அர்ஜன்ட் மேட்டர்..." விளக்கம் சொன்னவரிடம்...
"இட்ஸ் ஆல்ரைட்..." என்றான் அர்ஜீன்...
"இந்த ஃபைல்களில் நீங்க கேட்ட விவரங்கள் இருக்கு அர்ஜீன்..."
காவ்யாவிடமிருந்த ஃபைல்களை வாங்கி அர்ஜீனின் கையில் கொடுத்தபடி துரியோதனன் பேச.. காவ்யாவிற்கு புரையேறி விட்டது...
'இவன் பெயர் அர்ஜீனன் ஆச்சே காலையில் சொன்னானே.. அதை மறந்து தொலைத்துட்டேனே.. ஏகாம்பரம் கூடச் சொன்னாரே...'
அவன் எதற்காக அவளை 'அல்லி' யென்று அழைத்தான் என்று அவளுக்குப் புரிந்துவிட்டதில் அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது...
'நானும்.. பாவனாவும் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டிருப்பானோ...'
அவன் கண்களின் ஜொலிப்பு அவள் சந்தேகத்தை உறுதி செய்தது...
'வாய்க்கு வாய் இவனை அர்ச்சுன மகராசனாம்ன்னு சொன்னோம்.. அதையெல்லாம் இவன் கேட்டிருப்பானோ.. அவள பவளக்கொடின்னு சொன்னேன்.. அவ என்னை அல்லின்னாளே....'
பாவனாவிடம் போய்ச் சொல்ல முடியாமல் அவளுக்கு  அங்கேயே வேலை இருந்தது.. மனதின் பரபரப்பை அடக்கிக் கொண்டு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் கேட்ட ஃபைல்களை எடுத்து அவனிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.. காவ்யாவின் பரபரப்பை யூகித்துக் கொண்டவனைப் போல.. ரகசியப் புன்னகையுடன்
அவள் கொடுத்த ஃபைல்களை வாங்கி ஆராய்ந்து கொண்டிருந்தான் அர்ஜீன்...
நேரம் கடக்கக் கடக்க.. காவ்யாவின் கால்கள் வலிக்க ஆரம்பித்தன.. உட்காரச் சொல்லிக் கெஞ்சின...
'இவன் மட்டும் பெரிய இவனைப் போல நாற்காலியில உட்கார்ந்துக்கனும்.. நான் மட்டும் கால் கடுக்க நிக்கனுமா..? சம்பளம் கொடுத்தா.. நான் இவனுக்கு அடிமையா..?'
கோபமும்.. ரோசமும் கொப்புளிக்க... நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரும் எண்ணத்துடன் அவள் அதைத் தொட்ட அதே நொடியில்...
"ஏன் நிற்கறிங்க..? உட்காருங்க.." என்றான் அர்ஜீன்...
'இத்தனை நேரமும் இவனுக்கு இது தோணலையா..?' அவளுக்குள் எரிச்சல் மண்டியது...
இவன் சொல்லி நான் உட்காருவதா என்ற எண்ணத்துடன் அவன் சொன்னதை அவள் மறுக்க நினைத்தபோது.. கால்கள் கடுத்து அதைப் பலமாக ஆட்சேபித்தன...
கடைசி வார்த்தை அவனுடையதாகி விட்டதே என்ற கோபத்துடன் வேறு வழியில்லாமல் கால்களைக் காப்பாற்ற உட்கார்ந்தாள் காவ்யா...
கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு அவன் ஊன்றிப் படித்தான்.. அவன் கேட்கும் விவரங்களை சொல்ல முடியாமல் துரியோதனன் தத்தளித்த போதெல்லாம் அந்த விவரங்களைச் சொல்லி அவருக்கு கை கொடுத்தாள் காவ்யா.. அவளை நன்றியுடன் பார்த்த துரியோதனன்..
"காவ்யா வேலையில கெட்டி மிஸ்டர் அர்ஜீன்..." என்று சொன்னார்...
"பார்த்தாலே தெரியுது..." என்று நமட்டுச்சிரிப்புடன் சொன்னான் அர்ஜீன்...
காவ்யா முகம் சிவக்க ஃபைலில் பார்வையைப் பதித்தாள்... அவர்கள் மூவருக்கும் ஜீஸ் வந்தது.. அதைப் பருகியபடி துரியோதனன் அறியாத வண்ணம் அவளை அடிப்பார்வை பார்த்தான் அர்ஜீன்...
'பார்வையைப் பார்...' அவள் சங்கடத்துடன் அவனைப் பார்க்காமல் சுவரைப் பார்த்தபடி ஜீஸைக் குடித்து முடித்தாள்..
நண்பகல் உணவு நேரம் கடந்தும் அவன் ஃபைல்களுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு இருக்க.. காவ்யாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது...
'என்னமோ மண்ணுக்குள்ள புதையலைத் தேடறவனைப் போல ஃபைலுக்குள்ள தலையை நுழைச்சுக்கிட்டு தேடறானே.. எதைத் தேடறான்..? என்னத்தை தேடினாலும்.. வயித்துக்குள்ள எதையாவது கொட்டிட்டுத் தேடித் தொலைக்கக் கூடாதா..?'
காலையில் அரையும் குறையுமாக சாப்பிட்டு விட்டு ஓடி வந்தவளுக்கு பசி அதிகமானது..
'நல்லவேளையா அம்மா அரட்டலைப் போட்டு ரெண்டு இட்லியை சேத்து முழுங்க வைச்சுச்சு.. இல்லேன்னா இந்நேரத்துக்கு பசி வேகத்தில மயக்கம் போட்டு விழுந்திருப்பேன்...'
என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் ஒரு அளவுக்கு மேல் பசியைத் தாங்க முடியாத காவ்யா.. 'எலிதான் காயுதுன்னா.. மசால் வடையும் சேர்ந்து எதுக்காக காயனும்..?' என்ற ஞானோதயம் வரப் பெற்றவளாக எழுந்து கொள்ளப் போனாள்..
'நான் சாப்பிட்டுட்டு வந்திடறேன் சார்...'
மனதில் நினைத்ததைச் சொல்ல அவள் வாய் திறந்த அதே நொடியில் "காவ்யா நீங்க சாப்பிட்டு விட்டு வந்து விடுங்களேன்.." என்றான் அர்ஜீன்...
போடா.. நீயுமாச்சு.. உன் வேலையுமாச்சு என்று தோன்றிவிட்டது காவ்யாவிற்கு..
அது எப்படித்தான் அவள் வாயைத் திறக்கும் அதே நேரத்தில் அவனும் வாய் திறந்து பேசித் தொலைக்கிறானோ என்றிருந்தது அவளுக்கு..
இவன் சொல்லி நான் சாப்பிடப் போவதா என்ற வீம்பு மனதிற்குள் தோன்றிய போதும்.. துரியோதனனும் சாப்பிடக் கிளம்பி விட்ட பின்பு அதைச் சொன்னால் அவனுடன் அவள் தனித்துப் பேச விரும்புவதைப் போலத் தோன்றிவிடும் என்பதால் அவள் வாயை மூடிக் கொண்டு சாப்பிடப் போனாள்..
அவளுக்காக காத்திருந்த பாவனா சண்டைக்கு வந்தாள்...
"மணியைப் பாருடி.. மூணாச்சு.. என்னடா நம்ம பிரண்டு நமக்காக சாப்பிடாமக் காத்துக்கிட்டு கிடப்பாளேன்னு நினைச்சுப் பார்த்தியா..? புது முதலாளி முகத்தைப் பார்த்ததும் உனக்கு சாப்பாடு மறந்து போயிருச்சா..?"
"அவன் முகத்தைப் பார்த்திட்டாலும்..." எரிச்சல் பட்டாள் காவ்யா..
"ஏண்டி..? ஆள் அழகாத்தானே இருக்கான்..?" என்று கேட்டாள் பாவனா..
"நீ எப்போடி அவனைப் பார்த்த..?" காவ்யா புருவங்களை உயர்த்தினாள்..
"எல்லாம் பார்த்தாச்சு.. இதுவரைக்கும் முப்பது தடவையாவது அந்தப் பக்கம் வேலையிருக்கிறதைப் போல நான் வந்திருப்பேன்.. அவனும் என்னைப் பார்த்தான்.. நீதான் பார்க்கலை..." அமர்த்தலாகச் சொன்னாள் பாவனா..
"அடிப்பாவி.. இது எப்போ...?"
"காலையில இருந்து இதுதானே என் வேலை..."
"உன்னை.."
பல்லைக் கடித்தபடி ஹேண்ட் பேகில் இருந்த மதிய உணவு டப்பாவை எடுக்கப் போன காவ்யா.. வடையின் வாசனையை முகர்ந்தவளாக சுற்று முற்றும் பார்த்தாள்...
"என்னடி..?"
"வடைவாசனை வருதேடி..."
"இங்கேயிருந்து வருது..."
பாவனா அவளின் மேஜை டிராயரை இழுத்துக் காட்டினாள்.. உள்ளே வடைகள் நிரம்பியிருந்தன...
"அடிப்பாவி.. எதுக்குடி இத்தனை வடைக...?"
"அதிகமில்ல காவ்யா.. கொஞ்சம்தான்..."
"கொஞ்சம்ன்னா..?"
"ரெண்டு டஜன்.."
"இருபத்தி நாலு வடையா..?"
வாய் பிளந்த காவ்யா மீதமிருந்த வடைகளை எண்ணினாள்.. பத்து வடைகள் இருந்தன..
"பதினாழு வடைகள மொங்கான் போட்டயாடி..?"
"நீ வர்றவரைக்கும் பசிதாங்க வேணாமா..?"
நியாயம் கேட்ட பாவனா வடைகளையும்.. டிபன் கேரியரையும் எடுத்து வெளியில் வைத்தாள்...
"இன்னுமாடி உனக்குப் பசிக்குது..?" அதிசயித்தாள் காவ்யா...
"யானைப் பசிக்கு சோளப் பொறி போதுமாடி..?"
அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட ஆரம்பித்தார்கள்...
"காவ்யா உனக்கொன்னு தெரியுமா..?" ரகசியக் குரலில் கேட்டாள் பாவனா...
"அவன் நிஜமாவே அழகா இருக்கிறான் அதுதானே.." என்றாள் காவ்யா...
"அதே தான்.. அது எப்புடிடீ.. நாம நினைச்ச மாதிரியே இருக்கான்...?"
"த்ச்சூ.. நாமன்னு சொல்லி என்னையும் கூட்டுச் சேர்க்காதே.." என்றாள்...
"போடி... நீ கூட்டுச் சேரலைன்னா விடு.. அவன் அர்ச்சுன மகராசனைப் போல இருப்பான்னு நாம பேசினா.. அவன் நிஜமாவே அர்ஜீனனா இருந்து வைக்கிறான்.. ம்ஹீம்.. என்னால்தான் பவளக்கொடியாக முடியுமோ.. என்னவோ.. ஆள் செம ஸ்மார்ட்டுடி..."
 "எனக்கொன்னும் அப்படித் தோணலை... எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. ஆளு அழகு.. வேலையைப் பார்த்தா சொலகுன்னு..."
"அடடா.. என்னமா சொலவடையில புகுந்து விளையாடறடி நீ.. ஆனாலும் மதுரை மண்ணு இவ்வளவு விவரம் விளைஞ்ச மண்ணா இருக்கக் கூடாதுடி..."
"பேச்சை நிறுத்திட்டு சாப்பிடற வழியைப் பாரு.. நான் சீக்கிரமா போகனும்..."
"கொடுத்து வைச்சவ.. அவன் முன்னாலேயே உட்கார்ந்திருக்கலாம்..."
"ஏன்...? நீ வேணும்னா போயேன்..."
"நிஜமாகவா சொல்கிற..?"
"உண்மையாத்தான் சொல்றேன்.. அது எனக்குப் பெரிய விடுதலையா இருக்கும்..."
பாவனா உற்சாகத்துடன் சாப்பாட்டை முடிக்க.. அவளை விவரம் சொல்லச் சொல்லி அர்ஜீனின் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு.. 'அப்பாடி' என்ற நிம்மதியுடன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் காவ்யா..
போன பாவனா இரண்டே நிமிடத்தில் பூமணத்தோடு திரும்பி வந்து விட்டாள்..
"என்னடி.." என்று திகைத்த காவ்யாவிடம்...
"முடியலைடி.." என்று தலையைப் பிடித்துக் கொண்டாள்...
"என்ன முடியலை..? அவன் கேட்கிற விவரத்தை ஃபைலைப் பார்த்துச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.." காவ்யா கோபப்பட்டாள்...
திரும்பவும் அவன் முன்னிலையில் போய் உட்கார வேண்டுமா..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -11
எங்கிருந்தோ ஆசைகள். -11
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy