எங்கிருந்தோ ஆசைகள். -10

10 கள்ளமலர் சிரிப்புக்காரி... என்னைத் தேட ஆசை கொண்டேன்... காலத்தினால் அழியாத காயங்கள்.. மனதில் படும் காயங்கள்தான்.. அதை ஆற வை...



10
கள்ளமலர் சிரிப்புக்காரி...
என்னைத் தேட ஆசை கொண்டேன்...


காலத்தினால் அழியாத காயங்கள்.. மனதில் படும் காயங்கள்தான்.. அதை ஆற வைக்கும் மருந்தைக் கண்டு பிடித்தவர் எவருமில்லை... ஆனால்.. மனிதராகப் பிறந்தவர்கள் அதை நினைத்துப் பார்ப்பதில்லை... எத்தனை பொய்யாமொழிப் புலவர்கள் வந்து வன்சொல்லைத் தவிர்த்து இன்சொல்லைப் பேசும்படி எடுத்துக் கூறினாலும் அதிகார போதையில் இருப்பவர்கள் அதை மனதில் கொள்வதில்லை.. காலம் ஒரு நாள் மாறும் என்ற எண்ணமே இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள்...
நம் பெரியவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு மொழியிலும் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது...
'வார்த்தைகளைக் கொட்டி விட்டால் அள்ள முடியாது...'
எவ்வளவு தெளிவான வார்த்தைகள் இவை..!
கொட்டி விட்ட எந்தப் பொருளையும் அள்ளி விடலாம்... வார்த்தைகளை அள்ளி விட முடியுமா..? அதையேன் மனித ஜீவன் நினைத்துப் பார்ப்பதில்லை..?
துரியோதனனின் முகத்தில் தெரிந்த குற்ற உணர்வை கண்டுகொள்ளாமல் பேச்சை வேறு திக்கில் செழுத்தினான் அர்ஜீன்...
"ஓகே.. கடையோட அக்கவுண்ட்ஸைப் பார்த்து விடலாமா..?"
"ஷ்யூர்.. ஷ்யூர்..."
பேச்சு திசைமாறியதில் நிம்மதியானார் துரியோதனன் அதைக் கவனித்த அர்ஜீனின் மனதில் பரிதாபம் ஏற்பட்டது.. அதற்கு மேலும் அவரைச் சோதிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன்.. அவன் கடையை எடுத்துக் கொள்ளும் வேலைகளில் இறங்கினான்...
"இளங்கோ.. அக்கவுண்ட் செக்சனில் இருக்கிற காவ்யாவை வரச் சொல்லு..." இளங்கோவிடம் சொன்னார்..
'அவ வரப் போறாளா...' அர்ஜீனின் கண்களில் சுவராஸ்யம் தோன்றியது...
'வரட்டும்.. ரோட்டில என்ன பேச்சுப் பேசினா.. இப்ப இந்த சீட்டில என்னைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணப்போறான்னு பார்த்து விடலாம்..'
அவன் மனதில் எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.. அந்த இளங்கோ முன்னே வர.. பின்னே கை நிறைய ஃபைல்களுடன் வந்து சேர்ந்தாள் காவ்யா.. அவனைக் கவனிக்காமல் துரியோதனனைப் பார்த்து
"குட்மார்னிங் சார்..." என்றாள்...
அந்த குட்மார்னிங்கில் துரியோதனன் மகிழ்ந்து போனார்.. இருந்தும் கடமை தவறாதவராக.. அர்ஜீனைக் காட்டி...
"இனி இவர்தான் உன் புது முதலாளி காவ்யா.. கடையை வித்தாச்சு.. இவர்தான் வாங்கியிருக்கார்.." என்று தழைந்த குரலில் சொன்னார்..
"அப்படியா சார்..? எனக்குத் தெரியவே தெரியாதே.."
காவ்யா போலியாக ஆச்சரியப் பட்டதில் அர்ஜீன் அயர்ந்தே போனான்...
'பாருடா.. இப்பத்தான் இவளும் இவ பிரண்டும் கடையை வித்துட்டதைப் பத்தியும்.. வரப் போகிற புது முதலாளியைப் பத்தியும்... கதைகதையாய் பேசித் தள்ளினாங்க.. அத்தனை கதையையும் பேசிட்டு இங்கே வந்து அப்படியான்னு ஒன்றும் தெரியாத பேபியைப் போலக் கண்ணை விரிக்கிறாளே.. வாட் எ கேர்ள்..!'
அவளை வெட்டி விடுவதைப் போல அவன் பார்த்த அதே நேரத்தில் வரவழைத்துக் கொண்ட மரியாதையுடன் அவளும் அவனைப் பார்த்தாள்...
அண்ணலும் நோக்கி.. அவளும் நோக்கியதில்.. அவளுக்குள் காதல் மின்னல் பாயவில்லை...
'இவனா..?..!...' என்ற அதிர்ச்சி பாய்ந்தது...
மேஜை மேல் கைகளை ஊன்றி அதில் முகவாயைப் பதித்து அவளையே கூர்மையான பார்வை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜீனின் முகத்தில் தெரிந்த ரகசியப் புன்னகையில் அவள் அரண்டே போனாள்...
'அட ஙொப்புரானே..! இருந்திருந்தும் புது முதலாளியோட காரைத்தான் நான் இடிச்சு நொறுக்கியிருக்கனுமா..? இவன்தான் புது முதலாளின்னு தெரியாம வரிஞ்சு கட்டிக்கிட்டுச் சண்டையை வேற போட்டு சைச்சிருக்கேனே.. தாயே மீனாட்சி..! இந்த மதுரையில பொறந்த தமிழச்சிக்கு இப்படியொரு சோதனையா வந்து சேரனும்...?'
அவளின் தவிப்பை ரசித்துப் பார்த்த அர்ஜீன்...
"என்ன மிஸ்டர் துரியோதனன்.. உங்க ஆபிஸ் ஸ்டாபுக்கு எம்.டியிடம் எப்படி குட்மார்னிங் சொல்லனும்னு தெரியாதா..?" என்று கெத்தாக வினவினான்..
அவன் வம்புக்கு இழுப்பதை காவ்யாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
"என்னம்மா காவ்யா..?" துரியோதனன் புருவங்களை உயர்த்தவும் வேறு வழியின்றி...
"குட் மார்னிங்.." என்று அர்ஜீனின் முகம் பார்க்காமல் சொன்னாள்..
அந்த நேரம் பார்த்து துரியோதனனின் செல்போன் அலறிவைத்தது... எடுத்துப் பார்த்தவர்.. சங்கடத்துடன்..
"பெர்ஸனல் கால்... இதோ வந்திடறேன்..." என்று அர்ஜினிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்...
'தனியா விட்டுப்புட்டுப் போறாரே...'
காவ்யா அவனிடம் தன்னந்தனிமையில் அகப்பட்டுக் கொண்டவளாய் மனதுக்குள் கைபிசைந்தாள்...
அர்ஜின்.. சுழல் நாற்காலியில் தோரனையாக சாய்ந்து அமர்ந்தான்.. லேசாகச் சுழன்றபடி..
"குட்மார்னிங்குன்னு சுவரைப் பார்த்துச் சொல்றயே.. சுவர்தான் உன் முதலாளியா..?" என்று கேட்டான்...
'திமிர்..!' காவ்யா மனதுக்குள் பல்லைக் கடித்தாள்...
"என்ன பதிலைக் காணோம்...?"
'உனக்குப் பதிலைச் சொல்லிட்டாலும்..' காவ்யா பேசாமல் நின்றாள்...
"பேச்சு வராதா..? நீ ஊமையா...?"
'ஏன் சொல்ல மாட்ட..? இப்பத்தான் முக்கு ரோட்டில வைச்சு ஒரு கட்டப் பஞ்சாயத்தையே கூட்டி உன்ன நட்ட நடுவில நிப்பாட்டினேன்.. அரை மணிநேரம் கூட ஆகலை.. அம்புட்டையும் மறந்துட்டு என்னைப் பார்த்து ஊமையான்னு கேட்டு வைக்கிற.. நான் வாயைத் திறந்தா என்னவாகும்ன்னு தெரிஞ்சும் இப்புடி வாயைப் பிடுங்கறியே... எல்லாம் உன் நேரம்ய்யா...'
"கொஞ்சநேரத்துக்கு முன்னாலேதான் வீடு கட்டி விளாசித்தள்ளின.. இப்ப பேசாமடந்தை போல நிற்கிற.. உண்மையில யார் நீ...?"
'மோகினிப் பிசாசு..! வீட்டுக்குப் போ.. நடு ராத்திரிக்கு உன்னைத் தேடிவந்து பேச்சு வார்த்தை நடத்தறேன்.. இப்ப ஆளை விடு...'
"என் காரை நொறுக்கினதுமில்லாம.. என்மேலயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்ச ஆளாச்சே நீ.. எங்கே உன் அண்ணன்மார்களையெல்லாம் காணோம்.. அவங்க இல்லாம நீ தனியாவா வேலைக்கு வந்த..?"
இவன் ஒரு முடிவோடுதான் இருக்கிறான் என்று காவ்யாவிற்குப் புரிந்து விட்டது... என்னதான் பேசா மடந்தை போல.. அசையா மரமாய் நின்றாலும்.. இவன் வம்பிழுப்பதை நிறுத்த மாட்டான் என்பது புரிந்துவிட அவள் மௌன விரதத்தை கை விட்டாள்...
'இவன் புது முதலாளியாய் இருந்தால் என்ன..? பெரிய இவனா இவன்..? என்ன செய்து விடுவான்..? இவனால் என்னதான் செய்து விட முடியும்..? வேலையை விட்டுப் போன்னுதானே சொல்ல முடியும்..? இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்...'
காவ்யா சுவரைப் பார்ப்பதை விட்டுவிட்டு.. அவனை மிதப்பாக ஒர் பார்வை பார்த்தார்...
'அஃது...' அவன் ரசித்தான்.. அவன் விழிகளில் சுவராஸ்யம் தோன்றிவிட.. அவளை ஏற இறங்கப் பார்த்தான்...
'பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை கெட்டான் போ...' காவ்யா இப்போது வெளிப்படையாகவே பல்லைக் கடித்தாள்...
"அண்ணன்மார்களைப் பார்க்கிறதுக்கு நீங்க இவ்வளவு ஆசைப்படுவீங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு சார்..."
"ஓஹ்ஹோ.. தெரிஞ்சிருந்தா என்ன செய்திருப்ப..?"
"ரோட்டில பஞ்சாயத்துப் பண்ணினா சாருக்குப் பிடிக்காதாம்ண்ணே.. அதனால கடைக்கு வந்து பஞ்சாயத்து பண்ணுங்கன்னு கையோட கூப்பிட்டுக்கிட்டு வந்திருப்பேன்..."
அவளின் பதிலில் அவன் அயர்ந்து போனான்... வெளிப்படையான மெச்சுதல் அவன் விழிகளில் தெரிந்தது...
"தைரியசாலிதான்..." பாராட்டினான்...
"இது மீனாட்சி ஆளற மதுரை மண்ணு சார்... இந்த ஊரு பொண்ணுகளுக்கு தைரியம் அதிகம்தான்... அதனால..."
"அதனால...?"
"இப்படி ஓரக்கண்ணாலே பாக்கிறது.. ஊடுசால் போட்டுப் பேசறது.. மனசுக்குள்ள பெரிய மன்மதராசான்னு நினைச்சுக்கிறது.. இதெல்லாம் இங்கே வேணாம்..."
"வேற எங்கே வைத்துக்கலாம்...?"
அவன் புருவங்களை உயர்த்தி மிதப்பாக கேட்டு வைத்ததில்.. அவன் அடங்கவே மாட்டான் என்று காவ்யாவிற்குத் தெளிவாக புரிந்துவிட்டது...
"வேற எங்கேயும் வைச்சுக்க முடியாது.. ஏன் சார்..? சென்னையில இல்லாத தொழிலா..? எதுக்காக வேலை மெனக்கெட்டு மதுரைப் பக்கம் வந்து மாட்டியிருக்கீங்க...?"
அவளின் தைரியமான கேள்வியில் அவன் கண்களின் மின்னல் அதிகரித்தது.. அவன் பார்த்தாலும் பார்த்தான்.. இது போன்ற ஒரு பெண்ணை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை...
'கொஞ்சமாவது.. முதலாளியிடம் பேசிக்கிட்டிருக்- கோம்ன்னு இவ நினைத்துப் பார்க்கிறாளா..'
அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தபடி...
"மதுரை உன் ஊர்தானே..?" என்று விசாரித்தான்...
"பின்னே.. உங்க ஊரா..?" அவள் சண்டைக்கு வந்தாள்...
"என் ஊரை நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேனே.."
"இங்கே யார் விட்டுக் கொடுத்ததாம்...?"
"நீதான் விட்டுக் கொடுத்த..."
"நானா...?"
"யெஸ்.. மதுரைக்கு வந்து மாட்டியிருக்கீங்களேன்னு கேட்டு வைத்தா என்ன அர்த்தம்..? உங்க ஊரில் வெளியூர்காரங்க வந்து பிழைக்க முடியாதுன்னுதானே அர்த்தம்..?"
அவன் மடக்கிவிட.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் என்னவோ மிரட்டுவதற்காகத்தான் அப்படிச் சொன்னாள்.. அவன் கதையையே மாற்றி விட்டதில் இவன் கெட்டிக்காரன்தான் என்ற நினைவு அவள் மனதில் எழுந்தது...
அந்த நினைவில் அவளையுமறியாமல் அவள் உதட்டைச் சுழித்துவிட.. அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்க்க ஆரம்பித்து விட்டான்...
'இது வேறயா..?'
அவனுக்கு முன்னால் விரல் சொடுக்கி தன்னுணர்விற்கு மீட்டுக் கொண்டு வரலாமா என்று யோசித்தவள்.. நடைமுறைக்கு அது சரிப்பட்டு வராது என்று கைவிட்டு விட்டாள்..
"நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை முதலாளி சார்..."
அவள் வேண்டுமென்றே 'முதலாளி' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்க...
"முதலாளி சாரா..?" என்று புருவங்களை சுருக்கினான் அவன்...
"ஆமாம் முதலாளி சார்.. நீங்க ஆயிரம்தான் இருந்தாலும் முதலாளி.. நான் வெறும் தொழிலாளிதானே முதலாளி சார்.."
"நல்லாத்தான் பேசற..."
"நல்லாத்தான் பேசுவோம்.. ஆனா பேச்சு பேச்சா இருக்கனும்.. அதுக்கு மேலே ஏதாச்சும் தில்லுவாரித்தனம் பண்றதைப் போல தெரிஞ்சுச்சுன்னு வையுங்க.. எங்க பேச்சே வேற மாதிரியிருக்கும்..."
"அதாவது.. இன்னைக்கு காலையில சிக்னல்லே பேசினயே.. அதைப் போல இருக்கும்ன்னு சொல்ல வர்ற..?"
அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில்...
'இவன் பயப்படவே மாட்டானா...' என்று காவ்யாவிற்கு ஆயாசமாக இருந்தது...
"ஸோ.. இதைத்தான் நீ மதுரையில வந்து நான் மாட்டியிருக்கிறதா சொல்லியிருக்க..."
"புரிஞ்சுக்கிட்டாச் சரி..."
"அது புரிகிறது இருக்கட்டும்.. 'தில்லுவாரித் தனம்'ன்னா என்ன..? அதுதான் புரியலை.."
"அதுக்குன்னு டிக்ஷனரியெல்லாம் கிடையாது சார்.. மதுரை மண்ணுக்கு வந்திட்டிங்கள்ல.. போகப்போகப் பாருங்க.. இது போல ஆயிரம் வார்த்தைகளை தினம்
தினம் கேட்பீங்க.. அதுகளுக்கெல்லாம் அர்த்தம் புரியாம தலை தெறிக்க சென்னையைப் பார்த்து ஓடிராம தாக்குப் பிடிங்க..."
"ஓ..."
அர்ஜீன் டேபிளின் மீது சாய்ந்து அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. தொண்டை உலர்ந்து.. நாவறள்வதை உணர்ந்தவள்...
'என்னடா இது...' என்று மனதுக்குள் திகைத்துப் போனாள்..
யாரிடமும் மயங்காத மீனாட்சி.. சொக்கநாதனிடம் மயங்கிப் போனாளாம்.. அந்த மீனாட்சி ஆள்கின்ற மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்து.. ஆண்களைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காவ்யா.. ஒரு ஆண்மகனின் விழிகளை நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் திணறிப் போகிறாளா...?
இது என்ன மாயம்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -10
எங்கிருந்தோ ஆசைகள். -10
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy