அம்மம்மா.. கேளடி தோழி...! -94

94 ஊரெல்லாம்   உறங்கையிலே... உன்நினைவில் விழித்திருந்தேன்... பாலசரஸ்வதி அந்த வைர நகை செட்டை கையில் எடுத்துப் பார்த்தாள்... அவள் ம...


94
ஊரெல்லாம்  உறங்கையிலே...
உன்நினைவில் விழித்திருந்தேன்...

பாலசரஸ்வதி அந்த வைர நகை செட்டை கையில் எடுத்துப் பார்த்தாள்... அவள் முகத்தில் கர்வம் பொங்கி வழிந்தது... முதல்நாள் மாலையில் தான் அவள் கேட்டாள்... அன்று இரவே அவளுடைய தம்பி... அவளுக்காக அந்த நகையை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து விட்டான்...
அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்தாள்...
'இப்ப வருவாள்ல... வந்து பார்க்கட்டும்... அந்த ஒற்றை நகைக்காக ஏன் அத்தனை அடிகளையும் வாங்கினோம்ன்னு நொந்து போயிருவா... என்னவோ... அந்த டிசைனை வாங்கவே முடியாதுங்கிறதைப் போலத்தானே அலட்டிக்கிட்டா... இந்தா.. வாங்கியாச்சு... போட்டாச்சு... இப்ப என்ன பண்ணுவா...'
ராதிகாவின் முன்னால் அந்த நகைகளுடன் நின்று அவள் முகம் மாறி இருள்வதைப் பார்த்து விட வேண்டு மென்று ஆசைப்பட்டாள் பாலசரஸ்வதி...
'இன்னும் என்ன பண்ணித் தொலைக்கிறா...'
அவள் விழிகள் எதிர்பார்ப்புடன் மாடிப் படிகளின் மீது படிந்து மீண்டன...
"ஏம்மா... உங்க மருமகளுக்கு இன்னும் விடியலையா..?"
"எதுக்கும்மா கேட்கிற...? நேத்து போட்ட சண்டை உனக்குப் போதலையா..? உன் தம்பியிடம் மூட்டிவிட ஏதாவது மிச்சம் மீதி வைச்சிருக்கியா...?"
எச்சரிகையுடன் மகளைப் பார்வையிட்ட மேகலாவின் மீது பாலசரஸ்வதியின் மனதிற்குள் எரிச்சல் பொங்கியது...
'ம்ஹீம்... இப்படிப்பட்ட அம்மாவின் வயிற்றில் பிறந்த நான் புண்ணியம்தான் பண்ணியிருக்கனும்... எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்காங்களே..!'
"நீங்க ஒரு ஆளு போதும்மா... தம்பி பெண்டாட்டியைப் பத்தி தம்பிகிட்ட போட்டுக் கொடுக்கிறதுதான் என் பிழைப்புன்னு பட்டம் கட்டறதுக்கு... என்ன வரம் வாங்கி வந்தேனோ..? கடவுளே..."
"காலங்கார்த்தாலே கடவுளைத் தொந்தரவு பண்ணாதே... சின்னப்புள்ளத்தனமா நீ பண்ணி வைக்கிற வேலைகளுக்கு நீ கூப்பிட்ட உடனே... இதோன்னு கடவுள் ஓடி வந்திருவாராக்கும்..."
எப்போதும் கடிந்து பேசாத தாய்... காலையிலிருந்து இப்படித்தாளித்துக் கொண்டிருக்கிறாளே என்றிருந்தது பாலசரஸ்வதிக்கு...
'மகராசி... என்னையும்.. என் தம்பியையும் தான் பிரிச்சு வைக்க வந்திருக்கான்னு பார்த்தா... என்னையும்.. என் அம்மாவையுமில்ல பிரிச்சு வைச்சிட்டா...!'
அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது...
"இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்தக் காய்ச்சு காய்ச்சறிங்க...?"
"இப்ப நீ எதுக்காக அவளைத் தேடற...?"
"இதென்னம்மா வம்பாப் போச்சு... வீட்டுக்கு வந்த மருமக விடிஞ்சு இத்தனை நேரமாகியும் மாடியை விட்டு கீழே இறங்கி வரலைன்னா அதை ஏன்னு கேட்க மாட்டாங்களா..?"
"அவ வந்து எதைச் செய்யனும்..? உனக்குத்தான் அவளைக் கண்டாலே ஆக மாட்டேங்குதே.. எதுக்கு உன் கண்ணில பட்டு... உன் ரத்த கொதிப்பை அதிகமாக்கனும்னு மாடியிலேயே இருக்கிறா போல... உனக்கு அதுவும் பொறுக்கலையா...?"
"அம்மா... நானும் பார்க்கிறேன்... என்னவோ எதிரிக்காரியிடம் பேசறதைப் போலவே என்னிடம் பேசறிங்க... அப்படி நான் என்ன தப்பைம்மா பண்ணிட்டேன்...?"
"நீ எதுவும் செய்யலை தாயி... சந்தோசமா ஊருக்கு கிளம்பு.."
"ஒரு நகைமேல ஆசைப்பட்டதுக்கு இம்புட்டு கோபமாம்மா..?"
"நீ ஒரு நகைமேல என்ன.. நகைக்கடைமேலேயே ஆசைப்பட்டிருந்தாலும் நான் அதைப்பத்தி கவலைப் பட்டிருக்க மாட்டேன்... உன் அக்காகாரி கேட்கிறதை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைடா மகனேன்னு உன் தம்பியிடம் சொல்லியிருப்பேன்... நீ அதைச் செய்யலையே.. உன் தம்பி பெண்டாட்டியின் நகைமேலயில்ல ஆசைப்பட்ட..?"
"அது தப்பாம்மா...?"
"பின்னே..? இல்லையா...? உன் புருசன் உனக்கு ஆசையாய் நகை வாங்கிக் கொடுத்து.. அதை உன் நாத்தனார் ஆசைப்பட்டா.. நீ உடனே கழட்டிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பியா..?"
"அது.. வந்து.. வந்து..."
பதில் சொல்ல முடியாமல் பாலசரஸ்வதி திகைத்து நின்றாள்...
அவளுடைய நகைகளின் மீது அவளின் நாத்தனார் ஆசைப்பட்ட தேயில்லை என்ற உண்மை அவளை உறுத்தியது...
மேகலா மகளை நிமிர்ந்து பார்த்தாள்... அவளது கூரிய பார்வையில் பாலசரஸ்வதியின் வாயடைத்துப் போனது...
"நீ யாரு சரசு...? உன் அப்பா உன்னை எப்படி வளர்த்தாரு..? அந்த நினைப்பு உனக்கு இருக்கா... இல்லையா..? இந்த ஊருக்கே நியாயம் சொன்ன மகராசன் பெத்த பொண்ணாநீ...? உன் மனசில நியாயம் செத்துப் போச்சா..? அவரிருந்தா நீயிப்படிப் பேசியிருப்பியா..?"
"அம்மா...!" பாலசரஸ்வதியின் கண்கள் கலங்கி விட்டன...
"ராதிகா பாவம்.. சின்னப் பொண்ணு... அவ தப்பே செஞ்சிருந்தாலும் அதை நீ மன்னிச்சு விட்டிருக்கனும்... அப்ப நீ பெரிய மனுஷி..! இப்ப...?"
"நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லாயில்லைம்மா.. முரளியே என் பக்கம் நிக்கிறப்போ.. உங்களுக்கென்ன வந்துச்சு...?"
"அவன் நிற்பாண்டி... தகப்பனில்லாத பொண்ணு கண்ணில ஒரு சொட்டு கண்ணீர் வந்திரக் கூடாதுன்னு என் மகன் பொறுப்பா நிற்பான்.. ஆனா நீ...? தகப்பனில்லாத தம்பியை தூண்டி விடறோம்கிற நினைப்பில்லாமத்தானே அந்த வேலையைச் செஞ்ச...?"
மேகலாவை விட்டிருந்தால் பாலசரஸ்வதியை ஒருகை பார்த்திருப்பாள்... அதற்குள் முரளி படியிறங்கி வந்துவிட்டான்...
"என்னக்கா... ரொம்ப நேரமா காத்திருக்கயா...?"
"ஆமாடா... நல்ல வேளையாய் நீ வந்த..."
தாயாரின் சொல்லம்புகளிலிருந்து தம்பி விட்ட நிம்மதியுடன் தம்பியைப் பார்த்துச் சொன்ன பாலசரஸ்வதியின் வார்த்தைகளில் நன்றியுணர்வு பொங்கி வழிந்தது...
"நீ சாப்பிட்டாச்சா... பிள்ளைகள் எங்கே..?"
"அவங்க அப்பவே காருக்குள் உட்கார்ந்துட்டாங்க.."
பாலசரஸ்வதியின் பார்வை மாடிப்படிகளில் ராதிகா வருகிறாளா என்று தேடி ஏமாந்தது...
ராதிகா வருகின்ற சுவடே தெரியாததில் அவள் மனதில் ஏமாற்றம் துளிர்த்தது...
"சதிஷ் உங்ககூட வருவான்.. பத்திரமா போயிட்டு வாங்க..."
முரளி வாசல் பக்கம் நகர... அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாக பாலசரஸ்வதி வாய் விட்டே கேட்டு விட்டாள்...
"உன் பெண்டாட்டி எங்கேடா..?"
"அவளுக்கு தலைவலியாம்.. ரூமில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கா... நீ வா... போகலாம்..."
முகம் மாறாமல் பதில் சொன்ன மகனின் திறமையை மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் மேகலா....
'தலைவலியா...? எவ்வளவு திமிரிருந்தா என்னை வழியனுப்ப வராம மாடியிலேயே படுத்திருப்பா...' பாலசரஸ்வதி மனதிற்குள் வெகுண்டாள்...
"சரி.. நான் போய் அவகிட்ட சொல்லிட்டு வர்றேன்.."
பாலசரஸ்வதி படிகளில் ஏற ஆரம்பிக்க... முரளியும்.. மேகலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
"அக்கா இரு... இப்ப அவகிட்ட சொல்லாட்டி என்ன..?"
"அதுசரி... அப்புறம் சொல்லாம ஊருக்குப் போயிட்டேன்னு என்மேல பழி வாரதுக்கா...?"
அவள் நிற்காமல் படியேறி விட்டாள்...
"அடேங்கப்பா... உன் அக்கா பழிபாவத்துக்கு ரொம்ப அஞ்சினவதான்..."
"விடுங்கம்மா... என்னவோ அதுக்கு ஒரு கோபம்... அக்கா குணம் இப்படியா இருந்துச்சு..? கொஞ்ச நாளானா எல்லாம் சரியாப் போயிரும்... அதுக்காக நாமளே அதை குறைவா பேசினா எப்படி..?"
மகனின் தயாள குணத்தில் நெகிழ்ந்து விட்டாள் மேகலா... இப்படிப்பட்ட உடன்பிறப்புடன் பிறந்தவளுக்கு அவனின் அருமை தெரிந்து நடக்கத் தெரியவில்லையே என்றிருந்தது அவளுக்கு...
மாடியிலிருந்த பாலமுரளியின் அறைக்குள் நுழைந்த சரஸ்வதிக்கு பொறாமையுணர்வு பொங்கி எழுந்தது...
திருநெல்வேலியில் அவளுடைய வீடு பணக்காரத்தனத்துடன் இருந்தாலும்... தேனூத்து வீட்டைப் போல... இவ்வளவு பிரம்மாண்டமானதாக இல்லை... அதைப் போலத்தான் அவளுடைய படுக்கையறையும் சாதாரணமாக இருக்கும்...
பாலமுரளியின் அறை... பெரிதாக... அழகாக... ஒரு குட்டிப் பங்களாவைப் போல அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இருந்தது... எதையும் கவனத்துடன்... ஒர்விதமான நேர்த்தியுடன் செய்து பழக்கப்பட்டிருந்த பாலமுரளி... அவனுடைய படுக்கையறையை பார்த்துப் பார்த்து வடிவமைத்திருந்தான்...
முன்புறம் வரவேற்பறை... அதையொட்டிய பெரிய அலுவல் அறை... அதையடுத்து படுக்கையறை... அதன் ஒரு பக்கம் அகன்ற பால்கனி... மறுபக்கம் உடை மாற்றும் அறை... அதையொட்டிய குளியலறை... என்று அதி நவினமாக அமைந்திருந்தது அவனுடைய அறை...
அந்த அறை இனி ராதிகாவுக்கு சொந்தம் என்ற நினைவில் பாலசரஸ்வதிக்கு கடுப்பாக இருந்தது...
அறைக்கதவைத் தொட்டதும் அது திறந்து கொண்டது... முன்பக்க வரவேற்பறையைக் கடந்து.. அலுவல் அறையையும் கடந்து.. படுக்கையறைக்குள் நுழைந்தாள் பாலசரஸ்வதி...
காய்ச்சல் தணிந்திருந்தாலும்.... அயர்வு குறையாத-வளாக ராதிகா கண்மூடி படுத்திருந்தாள்...
'என்ன சொகுசு...!' பாலசரஸ்வதிக்கு எரிந்தது...
"ம்க்கும்..." தொண்டையை கனைத்தாள்...
மூடியிருந்த இமைகளை லேசாகத்திறந்து பார்த்த ராதிகா... அவசரமாக எழுந்து அமர்ந்தாள்...
"வாங்கண்ணி..."
"அடேங்கப்பா.. வரவேற்பெல்லாம் நேத்தைப் போலவே பலமாயிருக்கு... நான் உன்கூட கலந்துரையாட வரலை... இதைக் காட்டிட்டுப் போக வந்தேன்..."
பாலசரஸ்வதி... காது.. கழுத்து... கைகளில் அணிந்திருந்த நகைகளைப் பெருமையுடன் காட்ட... ராதிகா... அமைதியாக அவற்றைப் பார்த்தாள்...
"என்தம்பி... நேத்து ராத்திரியே இதை வாங்கிட்டு வந்து கொடுத்திட்டான்.. இப்பவாவது இந்த வீட்டில உன்நிலைமை என்ன... என்நிலைமை என்னங்கிறதை புரிஞ்சு... நடந்துக்க..."
"அதுக்கென்ன அண்ணி... இனி புரிஞ்சு நடந்துக்கறேன்..."
"அஃது... அந்த பயம் இருக்கட்டும்... யாருகிட்ட..?"
வெற்றிப் பெருமிதத்துடன் திரும்பப் போனவளின் கண்களில் ராதிகாவின் கழுத்திலும்.. காது.. கைகளிலும் இருந்த நகைகள் பட்டு விட்டன... அவள் கொதித்து விட்டாள்...
"எவ்வளவு கொழுப்பிருந்தா.. இந்த வைர நகைகளைப் போட்டுகிட்டே தூங்குவ...? முன்ன... பின்ன வைரத்தைப் பார்த்திருந்தாத்தானே அதோட மதிப்புத் தெரியும்..? உனக்கென்ன தெரியும்..? அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்ங்கிறது சரியாத்தான் இருக்கு..."
எதற்கு பாலசரஸ்வதி இந்த அளவுக்கு கோபப் படுகிறாள் என்று கைகளைப் பார்த்த ராதிகாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...
'இந்த நகைசெட்டை நான் போட்டுக்கவே இல்லையே...'
முதல்நாள் இரவு அதைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தது அவள் நினைவில் நிழலாக வந்து போனது...
'இதெப்படி என் காது.. கழுத்து.. கைகளுக்கு வந்தது...?'
அவள் புரியாமல் விழிக்க... பாலசரஸ்வதி கொதித்துக் கொண்டிருந்தாள்...
"என்னைக் கடுப்பேத்தேன்னே இதுகளை மாட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கயா..? உனக்கு எவ்வளவு திமிர்...?"
"பாருங்கண்ணி... இது என்னோட நகை... இதை நான் தூங்கும்போதுகூட போட்டுக்குவேன்... அது என்னோட இஷ்டம்... இதனால உங்களுக்கென்ன கஷ்டம்...?"
ராதிகா நிதானமாக வினவ... பதில் சொல்ல முடியாமல் தினறிப்போனாள் பாலசரஸ்வதி...
'இவ்வளவு நேரமா... அந்தம்மா கீழே பேசு.. பேசுன்னு பேசி திணற வைச்சாங்க... இவ மாடியிலே திணறடிக்கிறா.. ரெண்டு பேரும் சொல்லி வைச்சுக்கிட்டு செய்யறாங்களோ...'
" என்னக்கா... சொல்லியாச்சா.. போகலாமா..?"
அறைவாசலில் குரல் கேட்க... இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்... பாலமுரளி அறைவாசலில் நின்றிருந்தான்..
"பார்த்தியாடா முரளி..."
தம்பியிடம் வழக்கு வைக்க அவசரமாக ஆரம்பித்தாள் சரஸ்வதி...
"எல்லாம் பார்த்துட்டேன்.. அவதான் சொல்றாள்ல.. அது அவளோட நகை... அதை எப்ப வேணும்னாலும் அவ போட்டுக்குவா... அதில உனக்கு என்ன பிரச்னை..? நீ ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போகத்தானே வந்தே..? சொல்லிட்ட இல்ல.. கிளம்பு.."  கண்டிப்புடன் பேசினான் முரளி...
பாலசரஸ்வதியின் முகம் சுணங்கிப் போனது... அவள் விர்ரென்று கோபமாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்...
அவள் நினைத்து வந்தது என்ன..? இங்கே நடந்தது என்ன..? புதுநகையின் வரவில் அவளுக்கு ஏற்பட்டிருந்த மகிழ்ச்சி இப்போது காணாமல் போய் விட்டிருந்தது...
ராதிகா.. புரியாமல் நகைகளை மீண்டும் பார்க்க... அவள் அருகில் வந்தான் முரளி...
"நான்தான் அதைப் போட்டு விட்டேன்.." என்றான்...
நிமிர்ந்து பார்த்த ராதிகாவின் கண்கள் ஒளிர்ந்தன... அதைப் பார்த்த முரளி... பார்வையை விலக்க முடியாமல் அப்படியே நின்றான்... இருவர் பார்வைகளும் ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்திருக்க... வார்த்தைகள் தேவைப்படாத ஒரு மோன நிலைக்கு மீண்டும் அவர்கள் சென்றனர்...
"ஐயா.." அறைவாசலில் மீனாட்சியின் சத்தம் கேட்டது...
"சின்னம்மா... ஊருக்குப் போகனுமாம்... உங்களை வரச்சொன்னாங்க..."
பிணைந்திருந்த பார்வைகள் விலகிக் கொள்ள... பெருமூச்சுடன் வெளியே போனான் முரளி... ராதிகாவின் மனதில் பரவசம் படிந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -94
அம்மம்மா.. கேளடி தோழி...! -94
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-94.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-94.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy