அம்மம்மா.. கேளடி தோழி...! -93

93 உன் ஓரவிழிப் பார்வையிலே... ஓராயிரம் கதைகள் சொன்னாய்... கண்ணிமைக்காமல் அவன் முகத்தைப் பார்த்த அவள் பார்வையில் எதைக் கண்டானோ... ...


93
உன் ஓரவிழிப் பார்வையிலே...
ஓராயிரம் கதைகள் சொன்னாய்...

கண்ணிமைக்காமல் அவன் முகத்தைப் பார்த்த அவள் பார்வையில் எதைக் கண்டானோ... முரளியின் முகத்தில் இதம் பரவியது.. அவனையே அள்ளிப் பருகுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தெரிந்த காதல் அவனுக்கு ஆச்சரியத்தையூட்டியது...
"என்னடி இப்படிப் பார்க்கிற...?"
அவளது கலைந்திருந்த முடியை விலக்கி விட்டபடி மெதுவான குரலில் அவன் கேட்டான்...
'ஒன்றுமில்லை' என்று சொல்லும் விதமாக லேசாக தலையை அசைத்த ராதிகா அயர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்...
"காபி சாப்பிடு ராது... அப்புறமாய் தூங்கலாம்..." பாலமுரளியின் கை அவளது நெற்றியின் மீது படிந்து வருடிக் கொடுத்தது...
அந்தத் தொடுதலில் இமைதிறந்து விழிவிரிய அவனைப் பார்த்தவளின் உதடுகள் துடித்தன... மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்த அவன் முகத்தில் இதுவரை அவள் பார்த்தறியாத கனிவும்.. பிரியமும் நிரம்பியிருந்தன..
ராதிகா புரண்டு படுத்து.. அவன் மடியில் முகம் புதைத்தாள்.. அவளின் அந்தச் செய்கையை அவனால் நம்பவே முடியவில்லை... அவனின் இடுப்பைச் சுற்றி வளைந்திருந்த அவளது கரத்தில் விரவியிருந்த நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.. என்னவோ... விலகி ஓடுகிறவனை இழுத்துப் பிடித்து தக்க வைத்துக் கொள்ள பதற்றம் காட்டுவதைப் போல இருந்தது அவளின் அந்தச் செய்கை...
அவள் பயந்து போயிருப்பதை பாலமுரளியால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவனின் ரௌத்திரத்தில் அவள் நடுங்கிப் போயிருப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு அவள்மீது இரக்கம் பிறந்தது...
'ஏன் இப்படி பயப்படுறா...?' தனக்குள் கேட்டுக் கொண்டான் முரளி...
'இது ஏழேழு ஜென்மத்துக்கான பந்தம்ன்னு இவளுக்குத் தெரியாதா..? அடித்தாலும்.. உதைத்தாலும் நான் இவ புருசன்தானே... இவ என் பெண்டாட்டிதானே.. எது மாறிப் போயிரும்ன்னு இவ இந்தளவுக்கு பயப்படறா..?'
"ராதிகா..." அவளது முடிகோதி அழைத்தான் பாலமுரளி...
"ம்ம்ம்..." அவள் முணுமுணுத்தாள்...
"காபியைக் குடிடி..."
"ம்ம்ம்..."
"சூடு ஆறுகிறதுக்கு முன்னாலே குடிச்சிரு ராது.. உன் உடம்புக்கு சரியில்லை..."
அவனது வார்த்தைகளில் எதையோ புரிந்து கொண்டவளாக அவன் முகத்தையே பார்த்தாள் ராதிகா.. விழிகளில் கண்ணீர் திரையிட்டு அவள் பார்வையை மறைத்தது.. அவளது கண்களின் ஓரமாக வழிந்த கண்ணீர் அவன் மடியை நனைத்தது...
"அடச்சீ... கோபத்தில நாலு அப்பு.. அப்பிட்டேன்.. அதுக்குப்போயி கண் கலங்கலாமா..? ஏண்டி.. உன்னை அடிக்க எனக்கு உரிமையில்லையா...?"
'கொல்லக் கூட உரிமையிருக்கு...'
நினைத்ததைச் சொல்லாமல் சோகையாக சிரித்தாள் ராதிகா... அவளின் துயரம் நிரம்பிய முகத்தில் மின்னல் கீற்றாக ஒளிர்ந்த அந்தச்சிரிப்பை கண்டவனுக்கு மனம் ரணமானது...
முதன்முதலில் அவளைப் பார்த்தபோது அவனை வசீகரித்த அந்த பிரகாசமான நிலவுமுகத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்று ஏங்கிப்போனான் பாலமுரளி...
'எப்படியிருந்தவ இவ...!'
"எழுந்திருடி..."
இதமான அவனது வற்புறுத்தலில் எழுந்து கொண்ட ராதிகா கட்டிலை விட்டு இறங்கப் போனாள்... அவனது புருவங்கள் உயர்ந்தன...
"எங்கேடி போற...?"
"காபி கொண்டு வர..."
அந்த நிலையிலும்... அவளின் கடமையுணர்ச்சியில் அவனுக்கு பெருமிதம் உண்டானது...
"இப்போச் சொல்லு... நேத்துச் சாயங்காலத்தில இருந்து நான் என்ன ஆனேன்.. எப்படிச் சாப்பிட்டேன்னு உனக்குக் கவலையில்ல... இப்ப காபி கொண்டு வரப் போகிறாளாம்... காபி.. அதெல்லாம் காபி வந்தாச்சு.. இந்தாக்குடி..."
கட்டிலின் பக்கத்திலிருந்த டீப்பாயிலிருந்து தம்ளரை எடுத்து அவன் நீட்ட.. ராதிகாவின் விழிகள் மீண்டும் விரிந்தன...
'இவனா எனக்கு சேவகம் பண்ணுகிறான்...?'
இதை ஏற்கனெவே பண்ணை வீட்டில் அவளுக்கு செய்தவன்தான் என்ற நினைவில் அவள் வெட்கப் புன்முறுவலுடன் காபியை வாங்கிக் கொண்டாள்...
"பார்த்து.. கெட்டியாய் பிடிச்சுக்க... உன்னாலே முடியலைன்னா... இப்படிக் கொடு..." அவன் கவலைப்பட்டான்...
'எதுக்கு இப்படிச் சொல்கிறான்..?' அவளுக்கு புரியவில்லை...
'முடியலைன்னா என்ன செய்வானாம்.. பச்சைப் புள்ளைக்கு புகட்டி விடுவதைப் போல எனக்கும் புகட்டி விடுவானா...?'
அவளது நினைவில் ஓட்டத்தை அறிந்து கொண்டவனைப் போல கூர்மையான பார்வையுடன்...
"நேத்து ராத்திரி.. அதைத்தான் செஞ்சேண்டி..." என்றான் முரளி.. அவள் தூக்கிவாரிப் போட்டவளாக அவனைப் பார்த்தாள்...
'இவன் என்ன சொல்கிறான்...?'
"ம்ஹீம்.. இன்னைக்கு கண்முழிச்சதில இருந்து இப்படித்தான் மொச்சைக் கொட்டை கண்ணை முழித்து முழித்து பார்த்து வைக்கிற... நேத்து ராத்திரி கண் முழிக்காம கிடந்த... ஆஸ்பத்திரிக்கு அம்மாவும்... நானுமா கூப்பிட்டுக்கிட்டு போய் வந்தோம்.. உன்னால கண் முழிச்சு கஞ்சி குடிக்க முடியலை.. நான்தான் உன்னை தோளில் சாய்ச்சு புகட்டி விட்டேன்..."
அவன் இயல்பாக பேசிக் கொண்டே போக.. ராதிகா தன் காதுகளை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
"எதுக்கு அப்படிப் பார்க்கிறவ..?" காபியை உறிஞ்சியபடி அவன் கேட்டான்...
அவள் மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது...
"எனக்கு நினைவேயில்ல..."
"நினைவில்லாமத்தான் கிடந்த..."
"அப்புறம் எப்படி ஹாஸ்பிடலுக்கு வந்தேன்...?"
"அது பெரிய விசயம் பாரு..? ஏண்டி இதுக்கு முன்னாலே கூட ஒருதடவை கண்முழிக்காம மயங்கிப் போனவளா என் காருக்குள்ள கிடந்த... அப்ப நான் என்ன செஞ்சேன்...?"
அவன் புருவங்களை உயர்த்த... அவளின் கன்னங்களில் செம்மை படர்ந்தது... விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்... அவன் விழிகளில் உல்லாசம் நிரம்பியது...
"அப்பவும் உன்னைக் கையிலதான் தூக்கிக்கிட்டுப் போனேன்.. நேத்தும் அதைப் போலதான் கையில சுமந்தேன்... சும்மா சொல்லக் கூடாதுடி... கொஞ்சம் கூட கனக்கவேயில்ல... அப்படியே பஞ்சு பொதியைத் தூக்கிக் கிட்டதைப் போல... மெத்து.. மெத்துன்னு கிடந்த.."
ராதிகாவின் முகச் சிகப்பு அதிகரிக்க... அவளை ஆசையுடன் பார்த்தான் முரளி...
அவள் வேண்டாத பெண்டாட்டி என்ற உணர்வே அவனுக்குள் ஏற்படவில்லை... என்னவோ.. திருமணமான நாள் முதலாய் அவளோடு பின்னிப் பிணைந்து குடும்பம் நடத்துகிறவனைப் போல... ஒரு மார்க்கமாக அவளை பார்த்து வைத்தான் பாலமுரளி..
ராதிகாவுக்கு எழுந்து கொள்ளவே மனமில்லை... விட்டால் அவன் விலகிச் சென்று விடுவானோ என்ற பயத்துடன் காலி தம்ளரை வைத்துவிட்டு மீண்டும் அவன் மடியில் சரிந்தாள்...
பாலமுரளியும் அதைத்தான் விரும்பினான்... முதல்நாள் இரவிலிருந்து அவளது நெருக்கம் தந்த இதத்தில் மூழ்கிக் கொண்டிருந்தவனுக்கு... அந்த இதம் விலகுவதில் மனமில்லை...
அவன் மடிமீது உரிமையுடன் முகம் புதைத்திருந்தவனின் கூந்தலில் முகம் புதைக்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது... ஏதோ ஒன்று தடுக்க.. அவளைத் தொட்டு இறுக்கிக் கொள்ளாமலும்... அதேசமயம் அவளை விலக்கி விட்டு விலகிச் செல்லாமலும் அப்படியே அவன் அமர்ந்திருந்தான்...
எவ்வளவு நேமாய் அவர்கள் அப்படியிருந்தார்களோ... அவர்களுக்கே அது தெரியவில்லை... நேரம் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்க... அவன் மடியிலிருந்து முகம் விலக்காமல் அவளும்... அவளை விலக்காமல் அவனும்.. அப்படியே சிலை போல உறைந்திருந்தார்கள்..
அந்த மோனநிலையைக் கலைப்பதைப் போல செல்போன் அலறியது... அப்போதும் ராதிகா விலக வில்லை... முரளி அவளை விலக்கவில்லை... கைநீட்டி செல்போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன்...
"ம்..ம்..ம்... இதோ... கொஞ்சநேரத்தில் கீழே இறங்கி வர்றேன்... நீ ரெடியாய் இரு..." என்றான்...
அவன் பேச்சிலிருந்து அவன் கிளம்பப் போவதை அறிந்து கொண்டவளாய் ராதிகா பெருமூச்சு விட்டாள்... அதை உணர்ந்தவனுக்கும் விலக நேர்வதில் விருப்ப மில்லைதான்... ஆனாலும் என்ன செய்வது..? அவன் கிளம்பியாக வேண்டுமே என்று நினைத்தவனுக்கும் பெருமூச்சு வந்தது...
எப்படி அவளை விலக்குவது என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்த போது... அவளே விலகி அமர்ந்தாள்...
"ஒன்னுமில்லை... அக்காதான் போனில பேசுச்சு... ஊருக்கு கிளம்பனுமாம்..."
என்னவோ தவறை இழைத்து விட்டதைப் போன்ற குற்ற உணர்வுடன் அதைச் சொன்னான் முரளி...
"ம்ம்ம்..."
அவள் தலையசைத்தாள்.. பாலமுரளி எழுந்து கொள்ளாமல் அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.. அவன் கைவிரல் தடங்களின் கன்றல் மாறாமல் அப்படியே இருந்தது...
"ஸாரிடி..." அவனது குற்ற உணர்வு அதிகமானது...
"பரவாயில்ல...", ராதிகா நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்...
"தகப்பனில்லாத பொண்ணுடி... பிறந்த வீட்டிலே தனக்கு பாசம் கிடைக்காம போயிருமோன்னு அது பயப்படுது... அதனாலேதான் அதோட சின்ன மாமியா பொண்ண நான் கட்டனும்னு ஒத்தக் காலில மல்லுக்கு நின்னுச்சு... நான் உன்னைக் கட்டிக்கிட்டேன்.. அதோட பயத்தை நீ உண்மையாக்கிறக் கூடாதுங்கிற கொதிப்பில தான் கையை நீட்டிட்டேன்..."
நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு என்பது இதுதான் போல என்று நினைத்துக் கொண்டாள்...
இதைத்தான் முதல் நாளில் அவளது மாமியாரும் சொன்னாள் என்பதும் அவளின் நினைவுக்கு வந்தது...
'ஒவ்வொருத்தருக்கும் அவங்க பக்கத்தில நியாயம் இருக்கும்...'
எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை...!
இதைச் சொன்ன மாமனாரின் மீது அவளுக்குள் மரியாதை வந்தது...
"அதுக்காக உன்னை அப்படியே விட்டுட்டேன்னு அர்த்தமில்லடி... நீ ஒருவார்த்தை சொல்லியிருந்தா போதும்.. நான் உன்னை ஏன்னே கேட்டிருக்க மாட்டேன்.. உன் கையிலதான் போனிருக்கில்ல... நம்ம ரூமுக்குள்ளே உட்கார்ந்து இப்படியிப்படின்னு நீ எனக்குப் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாமில்ல...?"
அவனது கேள்வியில் இருந்த நியாயத்தில் உதட்டைக் கடித்து மௌனித்தாள் ராதிகா...
சொல்லியிருக்கலாம்தான்.. ஆனால்.. எந்த தைரியத்தில் அவள் அதைச் சொல்லுவாள்..? அவள் சொல்வதை காது கொடுத்து அவன் கேட்பானா என்ற சந்தேகம் அவளுக்குள் துளிர்த்திருந்ததே...
அவனும் அதையேதான் சொன்னான்...
"உனக்குச் சந்தேகம்டி... என்னடா... நம்ம கூட குடும்பம் நடத்த மாட்டேன்னு சொன்னவன்தானே இவன்.. நாம பேசறதை காது கொடுத்துக் கேட்பானான்னு நினைச்சிட்டேயில்ல..? உன்கூட குடும்பம் நடத்த மாட்டேன்னுதான் சொன்னேன்... ஆனா.. என் வாழ்க்கை உன்னோட தானேடி... நான் உன் புருசன்டி... உனக்கு மட்டும்தான் புருசன்... அந்த தைரியம் உன் மனசில் இல்லாம ஏன் போனது..?"
ராதிகாவின் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் தோன்றி கன்னத்தில் உருண்டோ... அதை இரக்கத்துடன் பார்த்தான் முரளி...
"அழாதே... உன்னை அடிச்சதில நீ பட்ட வேதனையைவிட நான் அதிகமா வேதனைப் பட்டேன்... உனக்கு அது தெரியாது.. நீதான் எதையும் தெரிஞ்சுக்காம வாழ்க்கை நடத்துகிறவளாச்சே..."
'அடப்போடா...' என்றிருந்தது ராதிகாவிற்கு...
அவள் எதையும் அறியாமல் வாழ்க்கை நடத்துகிறாளாம்... அவன் சொல்கிறான்...
அவனை மட்டுமே நினைத்து... அவனால் மட்டுமே தொடப்பட்டு... அவனோடு கலந்து.. அவன் கரம் பிடிக்க போராடி... அவன் மனைவியென்று தாலி வாங்கிக் கொண்டவளைத் தள்ளி வைத்து விட்டு... வெட்டியாய் வியாக்கினம் பேசிக் கொண்டு நின்றிருக்கிறான்...
அவன் மீதான அவளின் காதலை என்றாவது ஒர் நாளில் அவன் அறிவானா..?
            "என் மனது ஒன்றுதான்...
               உன்மீது  ஞாபகம்...
         வான் நிலவு ஒன்றுதான்...
               வான் மீது சத்தியம்..."
தோட்டக்காரனின் எவ்.எம் ரேடியோவில் இருந்து ஒலிபரப்பான பாடல் காற்றோடு கலந்து வந்து ஜன்னல் வழியாக அவர்கள் காதினுள் நுழைய... அந்த அதிகாலை அழகானதாக விடிந்திருப்பதாக உணர்ந்தாள் ராதிகா...
"உன் பக்கமான நியாயத்தை தயங்காம நீ எனக்குச் சொல்லலாம்... நான் என் அம்மாவுக்கு மகன்தான்.. அக்காவுக்கு தம்பிதான்... உனக்கு புருசன்..! அதை மறந்து விடாதே..."
'மறப்பேனா..? அதுக்காகத்தானே போராடினேன்..'
"அவங்களைக் காப்பாத்தற கடமை எனக்கு இருக்கு... அதில பங்கு போட்டுக்கற கடமை உனக்கு இருக்கு.. நீ என்னில் பாதிடி... நீவேற... நான் வேறன்னு இல்லை... இதை புரிஞ்சு நடந்துக்க..."
'சொல்லிட்டேல்ல... இனிப்பாரு... தூள் கிளப்பிர மாட்டேன்...'
"உண்மையைச் சொல்லப் போனா... இந்த நகைக்காக... அக்காவை அந்த அளவுக்கு நீ எதிர்த்து நின்னதில எனக்கு அம்புட்டு சந்தோசம்டி... ஆயுசு முழுக்க... இந்த சந்தோசம் எனக்குள் இருக்கும்..."
அவன் குளிக்கப் போன பின்னாலும்.. நெடுநேரம் அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள் ராதிகா...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -93
அம்மம்மா.. கேளடி தோழி...! -93
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-93.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-93.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy