அம்மம்மா.. கேளடி தோழி...! -88

88 அலைமீது செல்லும் துரும்பாய்.. அலைக்கழித்தான் எந்தன் மனதை... ஒரு நொடியில் அவளது பரவச நிலை கலைந்தோடி விட.. தன்னைப் புழுவைப் போல ...


88
அலைமீது செல்லும் துரும்பாய்..
அலைக்கழித்தான் எந்தன் மனதை...

ஒரு நொடியில் அவளது பரவச நிலை கலைந்தோடி விட.. தன்னைப் புழுவைப் போல உணர்ந்தாள் ராதிகா...
எத்தனைதான் யத்தனங்கள் செய்தாலும்... அவன் பின்னாலே ஓடும் இந்த ரோசம் கெட்ட மனதை கட்டிப் போட கடிவாளத்திற்கு எங்கே போவது என்று மனம் நொந்தாள்...
அவனின் ஒரு பார்வையில் உயிர் துடிப்பதை தடுத்து நிறுத்தும் மார்க்கம் புரியாமல் மனம் சோர்ந்தாள்...
அவன் அருகிலிருக்கும் போது இனிப்பான மன இதம் மனதுக்குள் பரவி.. உடலுக்குள் உருவாகும் பரவச அலைகளை அழிக்கும் வகையறியாமல் மனம் தவித்தாள்...
அவளது அடிபட்ட பார்வையில் வழக்கம் போலவே அவன் இறங்கிவந்தான்... எதுவுமே நடக்காததைப் போன்ற இயல்பான குரலில்...
"சரி.. சரி.. நீ சொன்னதையெல்லாம் செய்து தொலைக்கிறேன்... இப்ப டிபனைப் போட வர்றியா... இல்லை மீனாட்சியை போடச்சொல்லி சாப்பிட்டுட்டு போகவா..." என்று கேட்டான்...
'அவளுக்கா நீ தாலியைக் கட்டியிருக்கிறாய்..?' என்று கேட்கத் துடித்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ராதிகா...
கேட்டு விடலாம்.. அந்தக் கேள்வி அவனை மட்டும் பாதிக்க வேண்டும்... சம்பந்தமேயில்லாமல் வேறு ஒரு பெண்ணைப் பாதித்து விடக்கூடாது...
அவர்கள் வீட்டில் வேலை செய்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக இன்னொரு ஆணுக்கு மனைவியாகப் போகும் மீனாட்சியை சம்பந்தப் படுத்தி பாலமுரளியிடம் ராதிகா கேள்வி கேட்கலாமா..? அது தவறில்லையா...?
ராதிகாவினால் அதைச் செய்யமுடியாது.. ஆகையால் அவள் யாதொரு வாக்குவாதமும் செய்யாமல் பாலமுரளிக்கு டிபன் எடுத்துவைக்க போய் விட்டாள்...
அதன் பின்னால் பாலமுரளி... வீட்டுச் சாப்பாட்டைத் தவிர வேறு எங்கேயும் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டான்... தட்ட முடியாமல் கலந்து கொள்ள நேரிடும் வியாபார சந்திப்புகளிலும் பெயருக்கு எதையாவது கொறித்துவிட்டு.. சாப்பிட வீடு தேடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்...
மகளிடம் தினமும் செல்போனில் பேசும் மேகலா பேச்சுவாக்கில் ஒருநாள் இதையும் சொல்லி மகிழ்ந்து வைக்க பாலசரஸ்வதிக்கு பொறாமை வந்து விட்டது...
"இதென்னம்மா அநியாயமா இருக்கு.." அவள் பொறுமி வைக்க 'இதென்ன இவ இப்படிப் பேசி வைக்கிறா...' என்று திகைத்தாள் மேகலா...
"ஏண்டி.. உன்தம்பி நேரா நேரத்துக்கு வயித்துக்குள்ள சாப்பாட்டைப் போட்டுக்கிறது உனக்கு அநியாயமாய் போயிருச்சா..." என்று மகளுடன் சண்டைக்கு கிளம்பிவிட்டாள்...
"அட.. நான் அதைச் சொல்லலைம்மா..."
"வேற எதைச் சொல்றன்னு சொல்லித்தொலை..."
"நீங்களும்.. நானும் சொன்னாக் கேட்காதவன் இப்போ அவ பேச்சை மட்டும் கேட்கிறானே..."
"நினைச்சேண்டி.. உன் புத்தி இப்படித்தான் போகுமின்னு எனக்கும் தெரியும்.. ஏண்டி... நீயும்.. அவளும் ஒன்னா..."
"அதைச்சொல்லுங்க.. நான் யாரு..? மாணிக்க வாசகத்தின்மக.. பாலமுரளிக்கு அக்கா.. தேனூத்து பெரியவீட்டுப் பொண்ணு... அவ அப்படியா..? அவ எனக்கு சமமா ஆவாளா..?"
இவள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இது எங்கே போய் முடியுமோ என்று மேகலாவுக்கு பெருத்த கவலையாக போய்விட்டது... கொஞ்சமாவது சரஸ்வதி தன் தம்பி மனைவியை மதித்து நடந்தால் தேவலை என்று அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது...
அதை சரஸ்வதியிடம் யார் சொல்வது.. தன்னால் அது முடியாத ஒன்று என்பதை அறிந்து வைத்திருந்த மேகலா வழக்கம் போல மருமகனின் உதவியை நாடலாமா என்று யோசித்தாள்...
ஆனால்.. திருமணம் முடிகிறவரையில் சரஸ்வதியைக் காவல் காக்கும் பொறுப்பிலேயே
மருமகன் ஏகத்துக்கும் களைத்துவிட்டான் என்ற நினைவில் அப்போதைக்கு அவளால் செய்ய முடிந்த ஒரே காரியமான செல்போனை அணைத்து தூக்கி எறியும் வேலையை செவ்வனே செய்து முடித்தாள் மேகலா...
அப்படிப்பட்ட அருமையான அக்கா விருந்துக்கு அழைக்க வந்திருக்கும் போது.. அவள் முன்னாடியே.. அவளின் கணவன் ராதிகாவிற்கு ஆதரவாகப் பேசினால் அவள் பொறுத்துக் கொள்வாளா என்ன..?
ராஜராஜன் மெலிதான தர்மசங்கடத்துடன் மைத்துனனின் மனைவியைப் பார்த்தான்.. அவனின் இரக்கமான பார்வையில் அவனிடமிருந்த தர்மசங்கடம் ராதிகாவையும் தொற்றிக் கொண்டது...
பேச்சை மாற்றும் விதமாக... வந்த நோக்கத்தை சொல்ல ஆரம்பித்தான் ராஜராஜன்..
"முரளி.. எங்க வீட்டு விருந்துக்கு உங்களையும்.. ராதிகாவையும் அழைக்கத்தான நாங்க வந்திருக்கோம்.."
"ஆமாண்டா முரளி.. என் அத்தையும்.. மாமாவும் என்னிடம் கண்டிப்பா சொல்லி விட்டிருக்காங்க..."
"என்னன்னு அக்கா...?"
"என்ன வேலையிருந்தாலும் ஒதுக்கி வைச்சுட்டு... உன் தம்பி நம்ம வீட்டு விருந்துக்கு வந்தே ஆகனுமுன்னு சொல்லிட்டாங்க..."
மறந்தும் அவள் ராதிகாவையும் சேர்த்துச் சொல்லவில்லை... ராதிகா அதைக் கவனிக்கத்தான் செய்தாள்.... இது போன்ற அழைப்பை அவளது கல்லூரி வட்டாரத்திலோ.. அல்லது அவளின் பிறந்த வீட்டு உறவினர் வட்டாரத்திலோ கேட்டிருந்தால்.. அந்த திசைப் பக்கமே தலை வைத்து படுத்திருக்க மாட்டாள்... அப்படி இல்லாமல் அவளை இந்த முறையில் அழைத்து வைத்தது அவளின் சொந்த நாத்தனார்.. மௌனமாக அதை சகித்துக்கொள்வதைத் தவிர வழியேதும் அவளுக்கு புலப்படவில்லை...
"ம்ம்.. இந்த வாரம் முழுக்க எனக்கு வேலையிருக்கேக்கா..."
"என்னடா விளையாடறியா..?"
"இல்லைக்கா.. நிஜமாகவே எனக்கு மூச்சு முட்டற அளவுக்கு வேலையிருக்கு.. அடுத்தவாரம் வருகிறேன்.."
"ஏண்டா சொல்லமாட்டே.. உன் மாமியார் மறுவீட்டு விருந்துக்கு அழைச்சப்போ.. இந்த மூச்சு முட்டற வேலை எங்கே ஓடிப் போனது..?"
"அக்கா.. எதுக்கும்.. எதுக்கும் நீ முடிச்சுப் போடற..?"
"அப்போ... அதுவும்... இதுவும் ஒன்னில்லைங் கறியா..? அந்த அளவுக்கு நீவந்துட்டியா..? ஒற்றை உடன் பிறப்பு.. குடும்பத்துக்கு மூத்தமகள்... என் வார்த்தைக்கு நீ கொடுக்கிற மதிப்பு இவ்வளவு தானா..? தெரிஞ்சு போச்சுடா தம்பி.. தெரிஞ்சு போச்சு... நீ... நீயாய் இல்லை.."
"ஆமா.. எனக்குள்ளே பத்துபேரு இருக்காங்க.. ஏன்க்கா.. நீ வேற..."
"வேறயாய்தாண்டா ஆகிப் போயிட்டேன்... சென்னையில போயி ஒரு சொப்பன சுந்தரியை பிடிச்சுக்கிட்டு வந்திருக்க இல்ல.. இனி நான் வேறயாய் தான் தோணுவேன்..."
பாலசரஸ்வதி விடாமல் வழக்கடித்ததில் முரளி எரிச்சலாகிப் போனான்... அதுவும் அவன் முன்னிலையிலேயே ராதிகாவை அவள் 'சென்னையில் பிடித்து வந்த சொப்பன சுந்தரி..' என்று குறிப்பிட்டதை அவன் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை...
அவன் முகம் கடுமையானது.. அருகில் ராஜராஜனும்... குழந்தைகளும் இருப்பதை மறந்தவனாக புருவங்களை உயர்த்தினான்...
"என்னக்கா இது..? என்னென்னவோ பேசறே... சென்னையில் பிடித்து வந்த சொப்பன சுந்தரியா..? அவ யாருன்னு உனக்குத் தெரியாதா..? என் பெண்டாட்டியைப் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது...?"
பாலமுரளியின் கடுமையில் சரஸ்வதியின் கண்கள் நிரம்பிவிட்டன.. கணவனின் முன்னிலையில் தன் மதிப்பு சரிவதை அவள் உணர்ந்தாள்....
"முரளி..."
"பேசாதே.. எனக்குன்னு பார்க்க வேணாமா..? வாய்க்கு வந்ததை பேசிருவையா.. நான்தான் உனக்குத் தம்பி... என்னைப் பேசத்தான் உனக்கு உரிமையிருக்கு.. அவளைப் பேச இல்லை.. இனியொருதரம் என் பெண்டாட்டியைப் பத்தி இப்படிப் பேசிவைத்தேன்னு வை.. நான் சும்மா இருக்க மாட்டேன்..."
பாலமுரளி கோபத்துடன் எழுந்து போய்விட்டான்.. ராஜராஜன் மனைவியை கடிந்து கொண்டான்...
"எதுக்கு வந்துட்டு என்ன பேச்சுப் பேசற சரஸ்.. இப்பப்பாரு.. உன்தம்பி கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாரு.."
"இல்லத்தான்..."
"என்னவோ போ.. வரவர.. உனக்கு பேசத் தெரிய மாட்டேங்குது... உன்தம்பி கோவிச்சுக்கிட்டதில் தப்பேயில்லை... உன்னை என்கூடப்பிறந்தவங்க யாராவது இப்படிப் பெயர் வைச்சுச் சொன்னா... நான் கேட்டுக்கிட்டு இருப்பேனா..?"
ராதிகாவை மட்டம் தட்டப் போய்.. தன் நிலையை தாழ்த்திக் கொண்டதில் சரஸ்வதி மனதிற்குள் குறைவாக உணர்ந்தாள்...
'எல்லாம் இவளாலேதான்.. என்ன சொக்குப் பொடி போட்டாளோ என்தம்பி அப்படியே மாறிப் போயிட்டான்.. முன்னமேயெல்லாம் அவன் இப்படியா இருந்தான்..?'
முன்னாடியெல்லாம் அவள் இப்படி இருந்ததில்லை என்பதை மறந்து விட்டு சரஸ்வதி பொறுமினாள்...
அவள் பேசிய பேச்சை மறந்து விட்டு.. அதற்கும் ராதிகாவை குற்றம் சாட்டி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்...
'ஷோபா சொன்னது சரியாத்தான் இருக்கு... என் தம்பியை வசியம் பண்ணியில்ல... கைக்குள்ள வைச்சிருக்கா...'
மனைவியின் மடத்தனத்தால்.. மைத்துனன் தன்னைக்கூட பொருட்படுத்தாமல் போய் விட்டானே என்ற எண்ணம் ராஜராஜனை குடைந்து கொண்டிருந்தது.. மேகலாவுக்கும் அதே கவலைதான்.. அவர்களின் எண்ணத்தை அறிந்ததைப் போல செல் போனின் மணியொலித்தது... பாலமுரளிதான் பேசினான்...
"ஸாரி மாமா... ஏதோ கோபத்தில் எழுந்து வந்துட்டேன்... மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன்... அப்போ பேசிக்கலாம்..."
"அதனால் என்ன முரளி... நீங்க வாங்க..."
மைத்துனன் மன்னிப்புக் கேட்டதில் ராஜராஜனின் மனம் லேசாகிப் போனது... மேகலா நிம்மதியுடன் எழுந்தாள்.. மதிய விருந்து தயாரிப்பிற்காக ராதிகா  எழுந்தாள்.. காவேரியும்.. மீனாட்சியும் சமைத்துக் கொண்டிருக்க.. அவர்களுடன் பேசிய படி அவளும் சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தாள்.. அதைப் பார்த்த பாலசரஸ்வதிக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"ஏம்மா... என்னவோ இவதான் சமைத்துக் கொட்டுகிறதைப் போல வேசம் கட்டிக்கிட்டு நிற்கிறாளே.. எனக்கெல்லாம் இப்படி நடிக்க வராதும்மா.. அடேங்கப்பா.. பெரிய கைகாரிதான்..."
"இப்பத்தான் உன்தம்பி கோவிச்சுட்டுப் போனான்.. அப்படியும் நீ அடங்கலையா..? மாப்பிள்ளை பக்கத்தில் இல்லைங்கிற தைரியமா..?"
"உலகத்திலேயே... பெத்த பெண்ணை... அவ புருசனை விட்டு மிரட்டி வைக்கிற அம்மா நீங்க ஒருத்தங்கதான்ம்மா..."
"என்ன செய்கிறது சரசு.. நீ அப்படி என்னை ஆக்கி வைச்சுட்டியே..."
"சமைக்க காவேரி இருக்கா.. மேல் வேலைக்கு மீனாட்சி இருக்கா... இவளுக்கு அடுப்படியில் என்ன வேலைண்ணேன்..?"
"அப்படி நினைக்காம... நம்ம நாத்தனார் குடும்பத்துக்கு விருந்து சமைக்கிறதுக்கு நாமும் ஒத்தாசை பண்ணலாமுன்னு நினைக்கிறா பாரு.. அதை நீ மெச்சிக்க வேணாமா..?"
"அதுதான் எனக்கும் சேர்த்து நீங்க மெச்சிக்கறிங்கேள.. அது போதும்.. அடேங்கப்பா.. வந்து ஒரு மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே குடும்பமே இவ கைக்குள்ளயா..?"
"அதைப் பார்த்து நீயும் பழகிக்க.. இப்போப் போயி மாப்பிள்ளைக்கு இந்த ஜீஸைக் குடுத்துட்டு வா..."
"எனக்கில்லையா...?"
"உனக்குத்தான் முதலில் கொடுக்கனும்.. பேசிப்பேசி உன் தொண்டைத்தண்ணி வற்றிப் போயிருக்கும் பாரு.. இந்தா.. இதைக் குடிச்சு தொண்டையை நனைச்சுக்க..."
எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்த மேகலாவை உறுத்துப் பார்த்தாள பாலசரஸ்வதி... அவளுடைய பிறந்த வீட்டில்.. அவளுக்கான உரிமை பறிபோய் விட்டதைப் போல உணர்ந்தாள்.. மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் அவளுக்குள் தோன்றியது...
மதிய உணவுக்கு வந்திருந்த பாலமுரளி... ராஜராஜனைத் தேடிப் போய் மன்னிப்புக் கேட்டான்.. தன்மையாகப் பேசினான்.. என்னதான் மனைவியின் மீது தவறிருந்தாலும்.. மைத்துனன் தனக்காக பார்க்க வேண்டாமா என்ற சிறுதுளி கோபம் ராஜராஜனின் மனதில் இருந்தது.. முரளியின் தன்மையான பேச்சில் அது மறைந்து விட்டது.. மதிய உணவின் போது அவன் மீண்டும் விருந்துக்கு அழைக்க.. அந்தவார இறுதியில் வருவதாக பாலமுரளி கூறினான்.. பாலசரஸ்வதியிடம் கோபத்தை மறந்து சிரித்துப் பேசினான்....
இரவில் ராதிகா இறுக்கமான முகத்துடன் படுக்கைக்கு வந்தாள்... எதையோ படிப்பதைப் போல படுத்திருந்த பாலமுரளியின் பார்வை ஆராய்ச்சியுடன் அவள் முகத்தில் படிந்தது... அவன் முகம் பார்க்காமல் ஒருக்களித்து படுத்துக் கொண்டவளின் பக்கம் திரும்பி...
"என்னடி..?" என்று கேட்டான்...
"என்னடின்னா..? என்ன அர்த்தம்..?"
"எதுக்கு முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கேங்கிற அர்த்தம்தான்..."
"இங்கே கலகலன்னு சிரிக்கிறதைப் போலதான் எல்லாம் நடக்குதா..?"
"இப்படி முகத்தை ஒரு முழ நீளத்துக்கு தூக்கி வைச்சுக்கிறதைப் போல என்ன நடந்திருச்சு..? என் அக்கா யதார்த்தமா ஒரு வார்த்தை சொல்லி வைச்சிருச்சு.. அதுக்கா இந்தப் பாடு...?"
"ஆமாங்க... எனக்கு பட்டப் பெயர் வைத்து உங்க அக்கா பேசுகிறது யதார்த்தமான பேச்சுத்தான்.. அதுக்காக நான் வருத்தப்படறதில யதார்த்தமில்லை தான்.. தப்புத்தாங்க.. பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுருங்க..."
"ராதிகா..."
"எனக்கு தூக்கம் வருது.. ப்ளீஸ்.. டோன்ட் டிஸ்டர்ப்.. மி..."
'இவளை என்ன கையையா பிடித்து இழுத்தேன்..? தொந்தரவு பண்ணாதேன்னு சொல்கிறா.. தூக்கம் வருதாமில்ல.. அந்ததூக்கம் எனக்கு வருதா...?'
முரளி மனதிற்குள் பொருமிக்கொண்டிருக்க.. ராதிகா தூங்கிப் போனாள்...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -88
அம்மம்மா.. கேளடி தோழி...! -88
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-88.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-88.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy