அம்மம்மா.. கேளடி தோழி...! -87

87 அம்மா என்று சொல்லச் சொல்லி... அறியாத மழலைக்கு சொன்னது யார்.. ? "ராதிகா...! என் மகளே...!" ராஜேஸ்வரியின் குரல் தேம்ப...


87
அம்மா என்று சொல்லச் சொல்லி...
அறியாத மழலைக்கு சொன்னது யார்..?

"ராதிகா...! என் மகளே...!"
ராஜேஸ்வரியின் குரல் தேம்பியது...
அங்கிருந்த அனைவருமே அந்தக் காட்சியில் கரைந்து நெகிழ்ந்து விட்டார்கள்.. ராஜேஸ்வரியின் கோபம்.. வைராக்கியம்.. ரோசம் என்ற அத்தனையும்.. தாய்மை என்ற உணர்வுக்கு முன்னால் பொடிப் பொடியாக நொறுங்கிப் போய் கொண்டிருந்தன...
"ராஜி... இங்கே பாரு... உன் பெண்ணை எங்கே விட்டுட்டுப் போற... அவளோட வீட்டிலதான விட்டுட்டுப் போற..." மேகலா ராஜேஸ்வரியைத் தேற்ற முயன்றாள்..
"அண்ணி... என்மக.. பச்சைக் குழந்தையண்ணி..."
"எனக்கு அது தெரியாதா..?"
"சின்னவளைப் போல துறுதுறுப்பாய் இருந்தாலும் பொறுமைசாலி... அடிச்சா திருப்பி அடிக்கத் தெரியாது.."
"இங்கே உன் மகளை யாரடிக்கப் போறா..? என்மகன் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டவன்.. எனக்கு மருமகள்தான்.. மகள்.. நீ எதுக்கு வீணாய் மனசைப் போட்டு உழட்டிக்கிற..."
"நீங்க வசதியில பெரியவங்களா இருக்கலாம்.. ஆனா நாங்களும் கம்மியானவங்க இல்லண்ணி.. என் புருசன் கவர்மெண்ட் ஆபிசர்... கை நிறைய சம்பாதிக்கிறாரு... சென்னையில சொந்தவீடு.. காருன்னு வசதியாய் வாழ்கிறவங்கதான் நாங்க..."
"இதை நீ சொல்லனுமா ராஜி..."
"சொல்லித்தான் ஆகனும் அண்ணி.. என் மகளை இளவரசியைப் போலத்தான் நான் வளர்த்திருக்கேன்..."
"இங்கே மகாராணியாய் அவ இருப்பா.. போதுமா.."
"ஏதாவது கோபதாபம் இருந்தா எங்ககிட்ட அதைக் காட்டுங்கண்ணி.. தயவு செய்து என் புள்ளைகிட்ட அதைக் காட்டிராதீங்க..."
"ராஜி.. ராஜி.. எதுக்கும்மா இப்படியெல்லாம் பேசுற...?"
"சென்னையில பிறந்து வளர்ந்தவ.. படிச்சுக்கிட்டு இருக்கிற பொண்ணு... உங்க நாட்டு வழக்கம் தெரியலைன்னா..?"
"சொல்லிக் கொடுக்கிறேன்..."
"அவ கத்துக்க சிரமப்பட்டா...?"
"பொறுத்துப் போறேன்.. போதுமா...?"
சின்னக் குழந்தைக்கு ஆறுதல் சொல்லுவதைப் போல ராஜேஸ்வரிக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்தாள் மேகலா...
அவள் சென்று வெகு நேரமாகியும்.. ராதிகாவின் மனம் அலைகடலாய் பொங்கிக் கொண்டிருந்தது...
'அம்மா...!'
தாயின் மன்னிப்பில்... அன்பில்.. பரிதவிப்பில்.. கரிசனத்தில்.. அவள் நெகிழ்ந்திருந்தாள்...
இழந்து விட்டதாக அவள் நினைத்திருந்த தாயின் மடி திரும்பவும் கிடைத்து விட்டதில் அவள் மனதில் எல்லையற்ற சாந்தி நிலவியது...
அந்த அமைதியின் அரவணைப்பில்... பாலமுரளியின் அணைப்பில்லாமல் தூங்க நேரிடும் இரவுகளை அவள் பொறுத்துக் கொண்டாள்...
ராஜேஸ்வரியின் கண்ணீர் அவனையும் கரைத்ததாலோ என்னவோ.. அவனும் சுடுசொற்களை வீசாமல் இயல்பாகவே பேசிப் பழகினான்..
வாழ்க்கை அமைதியான நதியைப் போல ஓட ஆரம்பித்த அந்த வேளையில் தான்.. சுற்றி வரும் சூறாவளிக் காற்றாக.. விருந்துக்கு அழைக்கவென்று பாலசரஸ்வதி வந்து சேர்ந்தாள்...
"வா.. சரசு..." என்று வரவேற்ற மேகலாவிடம்....
"அட.. என் பெயர்கூட உங்களுக்கு ஞாபகமிருக்-காம்மா...?" என்று இடக்காக கேட்டாள்...
'வந்ததுமே ஆரம்பிச்சிட்டாளா... இவளை எது பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலையே...' மேகலா நொந்து போனாள்...
"ஏண்டி... பெத்து வளர்த்து பெயர் வைச்சவளுக்கு.. வைச்ச பெயர் மறந்துருமா..?" அவள் எரிச்சலுடன் கேட்டாள்...
"இல்ல.. நீங்கதான் ஊருபூரா சொல்லி வைச்சிருக்கீங்களாமே..."
"என்னத்தை சொல்லி வைச்சிருக்கேன்...?"
"என் மருமகதான் மகள்ன்னு சொன்னீங்களாமே...?"
'இது ஒரு தப்பா..? கடவுளே..!' மேகலா தெய்வத்தை உதவிக்கு அழைத்தாள்...
"சரிசரி... வந்ததும் வராததுமா வம்பைக் கட்டி இழுக்காதே... மாப்பிள்ளை எங்கே...?"
"வெளியில் உங்க மகனிடம் குசலம் விசாரிச்சுக்கிட்டு நிற்கிறாரு..."
"அவருக்காவது வளமை தெரிஞ்சிருக்கே..."
"எனக்குத் தெரியலைன்னு சொல்லிக் காட்டறிங்களாம்மா.. யாரை யாரு விசாரிக்கிறதும்மா...? கல்யாணம் பண்ணிக் கொடுத்த மகளை பிறந்த வீட்டில் விசாரிக்கனுமா... இல்ல.. அந்த மக வந்து பிறந்த வீட்டை விசாரிக்கனுமா...?"
பாலசரஸ்வதி பேசிய பேச்சில் பதில் சொல்ல முடியாமல் களைத்துப் போனாள் மேகலா...
'இவ நான் பெத்து வளர்த்த பொண்ணுதானா...?'
ஆயாசத்துடன்... "பிள்ளைகள் எங்கேடி..?" என்று கேட்டாள்...
"ராஜிவும்.. சாதனாவும் மாடிக்கு ஓடிட்டாங்க..."
பாலசரஸ்வதி சொல்லிக் கொண்டிருந்த போதே.. கைக்கு ஒரு பிள்ளையாக... இரண்டு கைகளிலும்... பாலசரஸ்வதி பெற்ற பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் ராதிகா...
"வாங்கண்ணி... அண்ணன் எங்கே..?" என்று வரவேற்றவளுக்கு பதில் சொல்லாமல் முகம் திருப்பிக் கொண்டாள் பாலசரஸ்வதி...
ராதிகாவின் முகம் வாடி விட்டது... அதைக் கவனித்த மேகலா...
"மாப்பிள்ளை வாசலில் நம்ம முரளிகூட பேசிக்கிட்டு இருக்காராம்மா..." என்று சொன்னாள்..
அதற்குள் ராஜராஜனும் முரளியும் உள்ளே வந்துவிட.. அவனை வரவேற்று விட்டு காபி கொண்டு வர உள்ளே சென்றாள் ராதிகா....
அன்று இரவு சாப்பாட்டுக்குப் பின்னால்... குடும்பம் மொத்தமும் ஹாலில் கூடியிருந்த போது... ராஜராஜன் முரளியை விருந்துக்கு அழைத்தான்...
"காலையில இருந்தே எம்புடாம ஓடிக்கிட்டே இருக்கீங்க முரளி..."
"ஓரே வேலை மாமா..."
"கொஞ்சம் வேலையைக் குறைச்சுக்கிட்டு வீட்டையும் நினைச்சுப் பாருங்க... ராதிகா சின்னப் பொண்ணு... இப்படி விடியற்காலையில எழுந்து ஓடிட்டு.. அர்த்த ராத்திரியில வீட்டுக்கு வந்தா...அது பாவமில்லையா...?"
ராஜராஜன் யதார்த்தமாக உரிமையுடன் பேசிவைக்க.. சரஸ்வதிக்கு கோபம் வந்துவிட்டது...
"ஏங்க.. இதைச் சொல்லத்தான் வேலை மெனக்கெட்டு காரை எடுத்துக்கிட்டு... திருநெல்வேலியில் இருந்து வந்திருக்கோமா...?"
"அதில்லைடி..."
"வந்த வேலையை முதலில் கவனிங்க.. அவனே நிற்க நேரமில்லாம பறந்துக்கிட்டு இருக்கான்... அவனிடம் சீக்கிரம் வான்னு சொல்லிக்கிட்டு.. அவன் சீக்கிரமா வந்து சேர்ந்தா தொழில்களை யார் பார்க்கிறது...?"
"அதுக்காக... எப்பவும்.. வேலை.. வேலைன்னும் இருக்கக் கூடாதுடி..."
"எல்லாம் தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருப்பாங்க...? அவங்கள்ளாம் மெத்தப் படிச்ச மேதாவி.. நம்மளவிட கணக்குப் போட அவங்களுக்கு நல்லாத் தெரியும்.. புருசன் சீக்கிரமாய் வீட்டுக்குவந்தா செலவளிக்க பணத்துக்கு எங்கே போகிறதுன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன..?"
"சரஸ்..."
ராஜராஜன் நெற்றிக் கண்ணைத் திறக்க.. சரஸ்வதி அமைதியானாள்... ராதிகா உதட்டைக் கடித்தபடி... முள்ளின் மேல் அமர்ந்திருப்பதைப் போல அமர்ந்திருந்தாள்.. குடும்பத்தார் பேசிக் கொண்டிருக்கும் போது... அவள் மட்டும் எழுந்து போவதென்பது அவளுக்கு சரியானதாக படவில்லை...
என்னவோ பாலமுரளியின் பணத்துக்காக கணக்குப் போட்டு அவனை ராதிகா கல்யாணம் பண்ணிக் கொண்டதைப் போல பாலசரஸ்வதி பேசியவிதத்தில் ராதிகா மனதிற்குள் காயப் பட்டுப் போனாள்....
அவளா பாலமுரளி வீட்டுக்கு நேரம் கழித்து திரும்புவதை விரும்புகிறாள்..?
காலையிலேயே ஓடிவிடுகிறவன் நள்ளிரவைத் தொடும் நேரத்தில்தான் திரும்பி வருவான்.. அவன் வரும் வரைக்கும் கண்விழித்து அவனுக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள் ராதிகா...
மேகலா கூட அதட்டுவாள்...
"அவன் வரும்போது வரட்டும்... நீ சாப்பிடாம கண்முழிச்சு காத்திருக்கனுமா...? வயிற்றுக்குள்ள எதையாவது போட்டுட்டு கொஞ்சம் கண்ணசந்தா என்ன ராதிகா..?"
"இல்லை அத்தை... அவர் வந்துடட்டும்..."
பிடிவாதமாக மறுத்து விடுவாள் ராதிகா...
அவளுக்குத் தெரியும்.. என்னதான் அவளை வெறுத்தாலும்... அவனுக்காக சாப்பிடாமல் ராதிகா காத்திருப்பாள் என்ற நினைவில் பாலமுரளியும் வெளியே சாப்பிடாமல் வீட்டுக்கு வந்து விடுவான் என்பது...
அந்த வகையில் அவனையும் ஒரு தளையால் பிணைத்துத்தான் வைத்திருந்தாள் ராதிகா...
அவன் பலவான்தான்.. தாய்க்கும்.. தமக்கைக்கும் கட்டுப்படாதவன்தான்... ஆனால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அவனை ராதிகாவினால் கட்டுப்படுத்த முடிந்தது..
"ஏய்ய்.. நீ கொடுத்தனுப்பற சாப்பாட்டை சாப்பிடனும்கிற கட்டாயம் எனக்கில்லை... நான் பல ஜோலிக்காரன்.. போற இடத்துக்கெல்லாம் உன் சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக்கிட்டு அலைய என்னால முடியாது...."
"அப்போச்சரி.. நீங்க சாப்பிடாத சாப்பாட்டை நானும் சாப்பிடல..."
ராதிகா முகம் மாறாமல் கூறிவிட.. அவன் பல்லைக் கடித்தான்...
"திமிராடி..? என்னை உன் கட்டுக்குள்ள வைக்க நினைக்கிறயா..?"
"இல்லவே இல்லை... புருசன் சாப்பிடாத சோற்றை நான் மட்டும் ருசிச்சுச் சாப்பிட முடியாதுன்னு நினைக்கிறேன்..."
"ஏன்..? என் அம்மாவும்.. அக்காவும் ருசிச்சுச் சாப்பிடல..? அதைப்போல நீயும் இருந்துட்டுப் போக வேண்டியது தானே..."
"உங்க அப்பா வெளியில சாப்பிட... உங்கம்மா வீட்டில சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருக்க மாட்டாங்க... உங்க அத்தான் வெளியில சாப்பிட உங்க அக்காவும் அதைக் கண்டுக்காம தான் மட்டும் சாப்பிட்டுட்டு இருந்திருக்க மாட்டாங்க..."
ராதிகாவின் உறுதியான வார்த்தைகளுக்கு பாலமுரளியிடம் பதிலில்லை... அவள் சொன்னதில் உண்மை இருந்ததை அவன் உணர்ந்ததால் பேச முடியாமல் அவளை முறைத்தான்...
மாணிக்கவாசகம் உயிரோடிருந்த வரை அவர் சாப்பிடாமல் மேகலா சாப்பிட்டதில்லை... ராஜராஜனும் அப்படித்தான்.. என்ன வேலையாக இருந்தாலும்.. சாப்பிட வீட்டுக்கு ஓடிவந்து விடுவான்... அவன் வந்த பின்னால் தான் பாலசரஸ்வதி சாப்பிடுவாள்...
"அவங்களும் நீயும் ஒன்றா...?"
இந்தக் கேள்வியில் அவள் தகித்துப் போனாள்.. அனலாகக் கேள்வி கேட்டவனை கனலாக பதிலுக்கு முறைத்தாள்...
"அவங்களும் நானும் ஒன்றில்லைதான்... அவங்களுக்கெல்லாம் பெண்டாட்டியை மதிக்கிற புருசன் கிடைத்திருக்காங்க... எனக்கு அப்படியா..?"
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேண்டி... என்ன தைரியமிருந்தா என்கிட்டேயே இப்படிப் பேசுவ...?"
"நீங்க எதையும் பேசலாம்.. நான் நியாயத்தைக்கூடப் பேசக்கூடாதா..? அப்படிப் பேசினா.. உடனே சுத்தியலை கையில தூக்கி விடுவீங்களா..?"
"சுத்தியலா...? அது எதுக்கு...?"
"வேற எதுக்கு..? என் பல்லை உடைக்கத்தான்..."
இதுதான் ராதிகா... அதிதீவிரமான சண்டையிலும்... அவளுக்கே உரித்தான இடக்குப் பேச்சில் அவனுக்கு சிரிப்பை வரவழைத்து விடுவாள்....
அன்றும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட.. இறுக்கம் குறைந்தவனாக...
"இப்ப.. என்னதாண்டி செய்யச் சொல்ற..?"என்றான்...
"காலையிலே எப்ப வேண்டும்னாலும் நீங்க போங்க.. போகிறப்போ.. நான் கொடுக்கிற டிபனை பிய்த்து வாயில் போட்டுக்கிட்டுப் போங்க..."
"அப்புறம்...?"
"மதியத்தில எங்கே வேணா சுத்துங்க.. நீங்க இருக்கிற இடத்துக்கு நம்ம கார் டிரைவர் சாப்பாட்டுக் கூடையை கொண்டு வருவார்.. ஏஸி கார்ல உட்கார்ந்துக்கிட்டு அதை வயிற்றுக்குள் தள்ளி விட்டுட்டு.. காலி கூடையை கொடுத்தனுப்புங்க..."
"ஐடியாவெல்லாம் பிரமாதம்..."
"நீங்க அர்த்த ஜாமத்தில வருவீங்களோ... இல்லை கோழி கூவுறப்ப வருவீங்களோ எனக்கு அது தெரியாது.. நீங்க வருகிற வரைக்கும் நான் சாப்பிடாம காத்திருப்பேன்.. வந்து.. வீட்டில சமைச்சிருக்கிறதை நீங்க சாப்பிட்டாத்தான் நானும் சாப்பிடுவேன்..."
"அது எதுக்கு தேவையில்லாம நீ காத்திருக்கிற..?"
"எனக்கு அது தேவைதான்...?"
அவள் தீவிரவான முகபாவத்துடன் சொல்ல.. அவள் விழிகளுக்குள் ஊடுறிவிப் பார்த்தபடி... அவன் நிதானமாக கேட்டான்...
"எதுடி உனக்குத் தேவை..? நானா..?"
ராதிகாவின் முகம் கணப்பொழுதில் குங்குமமானது.. அவன் பார்வை அவள் முகத்திலிருந்து இறங்கி... உடல் பூராவும் பரவி மேய ஆரம்பிக்க... அவள் கிளர்ச்சியுடன் தடுமாறிப் போனாள்...
'ஆமாம்...' என்று அவள் மனம் கூவியது... அவனைத் தேடிய உடலும்... மனமும்.. கிறங்கித்தவித்தது... அவன் தொட்டுவிட்டால் உருகிவிடும் பாகாக அவள் குழைந்து நின்றபோது.. அதே நிதானத்துடன் அவன் தொடர்ந்து கேட்டான்...
"அப்புறம் ஏண்டி.. சங்கருக்கு தூது விட்ட...?"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -87
அம்மம்மா.. கேளடி தோழி...! -87
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-87.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-87.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy