அம்மம்மா.. கேளடி தோழி...! -86

86 கல்லாலடித்தால் காயம் ஆறிவிடுமென்று சொல்லாலே அடித்தாயோ... ? "ஏண்டி ராதிகா... உனக்குக் கல்யாணமாகி இன்னும் இரண்டுவாரம் கூட ஆ...


86
கல்லாலடித்தால் காயம் ஆறிவிடுமென்று
சொல்லாலே அடித்தாயோ...?

"ஏண்டி ராதிகா... உனக்குக் கல்யாணமாகி இன்னும் இரண்டுவாரம் கூட ஆகலை.. அதுக்குள்ளே.. அச்சு அசல் தேனூத்துக்கார பொண்ணு போலவே மாறிட்டயே.. அது எப்படிடீ..."
கீதாவின் கேள்வியில் ராதிகாவின் முகத்தில் சன்னமாக மென்மை பரவுவதை காரின் முன்பக்கமாக பொருத்தியிருந்த கண்ணாடியின் வழியாகப் பார்த்தான் பாலமுரளி...
அவள் முகத்தில் பரவியிருந்த மென்மை அவன் மனதிலும் பரவிப் படர்ந்தது.. சொல்ல முடியாத இதமான உணர்வின் ஆளுகைக்குள் அவன் அகப்பட்டான்...
"சும்மாயிரு கீதா..." ராதிகா முணுமுணுத்தாள்...
"நிஜத்தைத்தாண்டி சொல்றேன்... என்னவோ விருந்தாளியாய் வந்தவளைப் போல ஒட்டாமல் நம் வீட்டில் எப்படிடீ உன்னால இருக்க முடிஞ்சது...?"
"ஏய்ய்.. அப்படியெல்லாம் இல்லைடி.. நீயாய் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு உளராதே..."
"உளருகிறேனா..? நானா..? இருக்கும்.. இருக்கும்.. உனக்கு அத்தானின் பேச்சைத்தவிர மத்தவங்க பேச்செல்லாம் உளரலாகத்தான் இருக்கும்.. உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு..."
"அதை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்...? நான் என்ன சொல்லனும்கிறதை நீ சொன்னா... நான் சொல்லிட்டுப் போறேன்..."
"என்னாச்சு.. உன் மனச்சாட்சி தூங்குதா..?"
"ஆமாம்.. நீ ஆராரோ பாடு..."
"அதை நம்ம வீட்டு லேடி ஹிட்லரே பாடினதில்ல.. அப்புறம் எப்படி நமக்கு வரும்..?"
"நமக்குன்னு உன்னோடு என்னையும் கூட்டுச் சேர்க்காதே..."
"இதப் பாருடா.. அட்வான்ஸா முந்திக்கிறா.. என்ன விசயம் ராது..? அடுத்த பத்தாம் மாசமே ஆரிராரோ பாடுகிற உத்தேசத்தில இருக்கிறயா..?"
"ஏய்ய்.. உன்னை..."
ராதிகாவின் முகம் குங்குமமாக சிவந்து விட... தங்கையை அடிக்க கை ஓங்கினாள்.. அவள் விளையாட்டாக தலையைச் சாய்த்து சிரித்தாள்.. அந்த சகோதரிகளின் செல்லச் சண்டையை கண்ணாடி வழியாக ரசித்துப் பார்த்தான் பாலமுரளி..
"இப்படி உன்னை அடிச்சு நொறுக்க வசதியாய் இருக்கும்ன்னுதான் உன் அக்கா பின்சீட்டில் ஏறினாளா கீதா..?" என்று வேறு கேட்டு வைத்தான்...
இரண்டு நாள்களாக அவர்களுக்கு ஊடே இருந்த மௌனத்திரையை அவன் விலக்கியதில் ராதிகாவின் மனம் இறகைவிட லேசானதாக ஆகிப் போனது...
அவன் பாணியிலேயே அவளும் கீதாவை ஊடே வைத்துப் பதில் கொடுத்தாள்...
"நானாடி பின் சீட்டில் ஏறினேன்..? நீதானே ஏறச் சொன்ன...?"
"தெரியாம வாய் விட்டுட்டியே கீதா..."
"தெரிஞ்சு யாராவது வாய் விடுவாங்களா கீதா..."
"நீ புத்திசாலின்னு நினைச்சேன்.. இப்படி உன் அக்கா கிட்ட வகையாய் மாட்டிக்கிட்டு மாத்து வாங்கறியே..."
"அவரென்ன உனக்கு எடுத்துக் கொடுக்கிறாரா கீதா...?"
"மைச்சினிக்கு சப்போர்ட்தான்... இல்லையா கீதா.."
"அதானே.. உன் அத்தானுக்கு.. அத்தைமகளும்.. மச்சினியும் வருத்தப்பட்டா மனசு தாங்காதே..."
"இங்கே மச்சினி மட்டும்தானே இருக்கா.. அத்தை மகளை ஏன் இழுக்கனும் கீதா..?"
"இவரோட அத்தை மகளை இழுக்கறதுக்கு ஒரு ஆள் பிறந்துதான் வரனும் கீதா.. அவதான் இவர் கையைப் பிடிச்சு இழுத்தா..."
பேச்சின் போக்கில் ராதிகா அதைச் சொல்லிவிட.. கீதா...
"வா ஹ்ரே.. வா.." என்றாள்...
'வாய்... விட்டுட்டேனே...'
ராதிகா கையைப் பிசைந்தபடி கலவரத்துடன் முன்பக்கம் பார்க்க... லேசாக முகம் திருப்பிய பாலமுரளியின் முகத்தில் சிரிப்பிருந்தது...
'அப்பாடி...' ராதிகா நிம்மதியாக உணர்ந்தாள்...
சிரிப்போடு சேர்த்து.. அவன் 'கவலைப் படாதே...' என்ற பாவனையில் இமை மூடித் திறக்க.. அவள் இமை கொட்ட மறந்து விழி விரித்தாள்...
"என்னாச்சு ராது.. இந்த முழி முழிக்கறே..."
கீதா ராதிகாவின் தோளில் தட்டவும் தான் அவள் தந்நிலைக்கு வந்தாள்...
"ஒன்னுமில்ல..." என்றபடி.. முகம் திருப்பிக் கொண்டாள்...
"இதைவிடு.. அதைச் சொல்லு..." கீதா உற்சாகத்துடன் தூண்டினாள்
"எதை..?" ராதிகா புரியாமல் விழித்தாள்..
"அதாண்டி.. அத்தானோட அத்தைமக அத்தானின் கையைப் பிடிச்சு இழுத்தாளில்ல... அந்தக் கதையைச் சொல்லு..."
"ஏய்ய்.. விடுடி.. நானே வாய்தவறி எதையாவது சொல்லி வைச்சா.. நீ அதையே பிடித்துக்கிட்டு தொங்குவியா..?"
"ஊஹீம்... நீ வாய் தவறிப் பேசற கேஸ் இல்லையே... நிஜத்தைச் சொல்லு..."
கீதா எவ்வளவோ கிண்டிக் கிளறியும் ராதிகா வாய் திறக்க மறுக்க அவள் பாலமுரளியைப் பார்த்தாள்...
"நீங்க சொல்லுங்க அத்தான்..."
"என்னத்தை சொல்லச் சொல்ற...?"
"அந்த தலைவலி கேஸ் உங்க கையைப் பிடிச்சு இழுத்தாளா..?"
"தலைவலி கேஸா..? அது யாரு..?"
"உங்க அத்தைமகதான்... வேற யாரு..?"
"இது வேறயா.. ஹா.. ஹா..."
"உங்க சிரிப்பை அப்புறமாய் வைச்சுக்கலாம்.. முதல்ல நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்க..."
"அவ என் கையைப் பிடிச்சு இழுத்தது உண்மை தான்..."
"அடிப்பாவி.. பட்டப்பகலில் ஒருத்தி.. ஒரு ஆண்பிள்ளையின் கையைப் பிடிச்சு இழுத்தாளா..? இதைக் கேட்க யாருமேயில்லையா..? இந்த உலகத்தில் ஆண்களின் நிலைமை பாதுகாப்பில்லாம போய்விட்டதா..? அவ.. அண்ணன் தம்பிகூடப் பிறக்கலையா...?"
முகத்தை படுதீவிரமாக வைத்துக் கொண்டு கீதா பேசப்பேச... ராதிகா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்... பாலமுரளியாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. வாய் விட்டு சிரித்தவனுக்கு... கீதாவின் மீது சகோதர வாஞ்சை உண்டானது...
தூரத்தில் நான்கு வழிச் சாலையின் ஓரமாக இருந்த ஹோட்டல் கண்ணில்பட.. காரை நிறுத்தினான்...
"என்னத்தான்..?" என்றாள் கீதா...
"காருக்குத்தான் ஆயில் தேவைப்படுமா..? மனுசருக்கு தேவைப்படாதா..?"
"அடக்கடவுளே.. உங்க அத்தை மகளைக் கிண்டல் பண்ணினா நீங்க ஆயிலை வாங்கி வாயில் ஊற்றி விடுவீங்களா..? என்ன ஆயிலை ஊற்றப் போறிங்க அத்தான்... கிருஷ்ணயாயிலா..?"
கீதா சிரிக்காமல் கேட்டு வைக்க.. பாலமுரளி அவள் தலையில் செல்லமாக குட்டு ஒன்றை வைத்தான்...
"வாயாடி.. அப்படியே உன் அக்காவின் வாய் உன்கிட்டேயும் இருக்கு..."
"ஊஹீம்.. தப்பாச் சொல்றிங்க அத்தான்.. ராதுவோட வாய் அவகிட்டத்தான் இருக்கு... என்னோட வாய்தான் என்கிட்ட இருக்கு..."
"அடேங்கப்பா.. உன்கிட்டயும்.. உன் அக்கா கிட்டயும்.. வாயைக் கொடுத்து ஜெயிக்க முடியுமா..?"
கீதாவிடம் பேசியபடி காருக்குள் பார்த்த பாலமுரளி...
"நீ எதுக்கு உள்ளேயே அடைகாக்கிற.. இறங்கி வா.. காபி சாப்பிடலாம்..." என்றான்...
அவன் நேரடியாக பேசிவிட்ட மகிழ்ச்சியில் ராதிகாவின் கண்கள் கலங்கி விட்டன.. அவசரமாக அவள் காரை விட்டு இறங்கினாள்...
"பார்த்தியாடி ராது.. மச்சினிக்கு இவர் கிருஷ்ணாயிலை கொடுப்பாராம்.. பெண்டாட்டிக்கு மட்டும் காபியை கொடுப்பாராம்.. என்ன ஓர வஞ்சனை..?" கீதா முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதைப் போல பாவனை காட்டினாள்...
"பின்னே.. ஆயிரம்தான் இருந்தாலும்.. உன் அக்கா தானே என் பெண்டாட்டி..?" மைத்துனியிடம் விளையாட்டாய் பேசியபடி காபிக் கப்புகளை அவர்களிடம் கொடுத்தான் பாலமுரளி...
காபியை உறிஞ்சியபடி அவனை மேல் பார்வை பார்த்த கீதா....
"அப்போ.. உங்களுக்கு ஆயிரம் இருக்குன்னு சொல்லுங்க..." என்று வம்புக்கு இழுத்தாள்..
"ஐயையோ.. குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணி விட்டிராதேம்மா..."
பயப்படுவதைப் போல பாவனை செய்தான் பாலமுரளி...
இயல்பான மனநிலைக்கு திரும்பி விட்டதில் ராதிகாவும் அவர்களின் பேச்சில் கலந்து கொண்டாள்... கலகலப்பான அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இருவரின் மனதிலும் இருந்த கிலேசங்கள் பறந்தோடி விட்டன... காரில் ஏறிய பின்னால்...
"பாட்டைப் போடுங்க அத்தான்.." என்று கீதா சிணுங்க... பாலமுரளி பாடலை ஒலிக்க விட்டான்.. அது...
   "நாங்க புதுசா
             கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கோ..
       நல்லாப் பாட்டுப் படிக்கும்
             வானம் பாடிதானுங்கோ"
    என்று பாடிவைத்தது... "இதுக்குக் கூட நீங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடின்னு தெரிஞ்சிருக்குடி ராது..." கீதா அதிசயிக்க... ராதிகா வெட்கப் பட்டாள்...
அரட்டையும் சிரிப்புமாக காருக்குள் களை கட்ட... கார் தேனூத்து கிராமத்திற்குள் நுழைந்தது...
"சும்மா சொல்லக்கூடாது அத்தான்..." என்று கீதா எதையோ சொல்ல ஆரம்பிக்க...
"அப்போ பணத்தைக் கொடுத்துவிட்டே சொல்லு..." என்று கைநீட்டினான் பாலமுரளி...
"அதானே பார்த்தேன்.. ஊருல உலகத்தில மைத்துனிகளுக்கு அள்ளிக் கொடுக்கிற அத்தான் களைத்தான் பார்த்திருக்கேன்.. இங்கே கிள்ளிக் கொடுக்கக் கூட வழியைக் காணோம்..." கீதா நீட்டி முழக்கினாள்...
"உனக்கெதுக்கு அந்த குறை..? கையை நீட்டு..." என்றான் முரளி...
"கொடுங்க.. கொடுங்க..."
கீதா உற்சாகமாய் கைநீட்ட... அதில் ஒரு கிள்ளு கிள்ளி விட்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றைக் கொடுத்தான் பாலமுரளி...
"ஸ்ஆ..." வலியில் கையை உதறிய கீதா... பணக்கட்டை வியப்புடன் பார்த்தாள்...
"என்னத்தான் இது..." அவள் விழிகள் விரித்தன...
"நீதானே கிள்ளிக் கொடுக்கச் சொன்ன...? கிள்ளினேன்... கொடுத்துட்டேன்.. எப்படி..?" முரளி கண்சிமிட்டினான்...
"அதுக்காக இவ்வளவு பணமா...? வேண்டாம் அத்தான்..." கீதா பணத்தை திருப்பி நீட்டினாள்...
"ஏன்...? நான் கொடுத்தால் வாங்கிக்க மாட்டியா..?"
"அப்புறம் லேடி ஹிட்லர்கிட்டயும் மாத்து வாங்க வேண்டியிருக்கும்... தேவைதானா...?"
"அத்தான் கொடுத்தார்ன்னு சொன்னாத்தானே உன் அம்மா கோவிச்சுக்குவாங்க..? அண்ணன் கொடுத்தார்ன்னு சொல்லு.. ஒன்னுமே சொல்ல மாட்டாங்க..."
முரளி இலகுவாகக் கூற...
"அத்தான்..." என்று கண் கலங்கி விட்டாள் கீதா..
"அசடு.. இதுக்குப் போய் கண் கலங்குவாங்களா..? ராதிகாவோட தம்பியும்.. தங்கையும் எனக்கும் தம்பி தங்கைதான்..."
பாலமுரளி என்னவோ இயல்பாக இதைச் சொல்லி விட்டு போய் விட்டான்... அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களின் உள்ளங்களில் நெகிழ்ச்சி பொங்கியது...
வாழ்வின் சில தருணங்கள்.. இப்படியும் அமைவதுண்டு...
மறுவீட்டுப் பலகாரங்களை விநியோகம் பண்ண ஆரம்பித்திருந்தாள் மேகலா... ஊருக்கே விருந்து வைத்தாள்... வந்தவர்கள் சீர்வரிசைகளையும் சேர்த்து பார்வையிட்டுப் போனார்கள்... விட்டுக்கொடுக்காமல் நிறைவாக மருமகளைப் பெற்றவர்கள் சீர்செய்து விட்டதில் மேகலாவுக்கும் மன நிறைவு...
இருகுடும்பங்களும் இணைந்து புதுமணத்தம்பதி-களுடன் குலதெய்வ கோவிலுக்குப் போனார்கள்.. அங்கே ராதிகா பொங்கல் வைக்கிறேன் பேர்வழியென்று கைவிரல்களைச் சுட்டுக் கொள்ள.. அதைக் கேலி செய்து சிரித்தாள் கீதா...
பெருமாள் கோவிலுக்குப் போனபோது.. கோவிலின் அழகில் மயங்கி.. தன் செல்போனில் படம் பிடித்துக் கொண்டாள்.. பெருமாளையும்.. தாயாரையும் சேவித்து விட்டு... நவகிரகங்களை வலம் வந்து வணங்கி விட்டு.. பிரகாரத்தில் அமர்ந்தார்கள்...
மேகலா விச்ராந்தியாய் பேசிக் கொண்டிருந்தாள்... ராஜேஸ்வரி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்... திரும்பி வரும் வழியில் அடிக்கடி ராதிகாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்...
கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் சென்னைக்கு கிளம்பும் நேரம் வந்தது...
"வரேன் ராது... வரேன் அத்தான்... வரேன் அத்தை..." கீதா வரிசையாக விடைபெற... சுந்தர் அவளைப் போலவே தொடர்ந்து சொல்லி விடைபெற்றுக் கொண்டான்...
"ராதிகா... வரவாம்மா..." கிருஷ்ணமூர்த்தியால் பேச முடியவில்லை...
"அடடா... என்ன தம்பி இது.. நீங்க போயி சின்னப்புள்ள போல கண் கலங்கலாமா..? பொம்பளப் புள்ளைக மேல இந்தளவுக்கு பாசம் வைக்கக் கூடாது தம்பி... என்னைக் கிருந்தாலும் அதுக இன்னொருத்தர் வீட்டுக்கு வாழப் போகிறதுகதானே..." மேகலா ஆதரவாகப் பேசினாள்...
"பார்த்துங்கங்க அக்கா... பார்த்துக்கங்க மாப்பிள்ளை..." கிருஷ்ணமூர்த்திக்கு தொண்டையை அடைத்தது...
ராஜேஸ்வரி எதுவும் பேசாமல் நகர்ந்தவள் வேகமாக திரும்பி ராதிகாவை அணைத்துக் கொண்டாள்...
"அம்மா...!"
நம்ப முடியாத திகைப்புடன் ராதிகா விழி விரித்து பிரமிக்க... அவள் உச்சந்தலையில் முத்தமிட்ட ராஜேஸ்வரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ராதிகாவின் தலையில் விழுந்து நனைத்தது...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -86
அம்மம்மா.. கேளடி தோழி...! -86
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-86.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-86.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy