அம்மம்மா.. கேளடி தோழி...! -85

85 குற்றால அருவியிலே.. குளித்த போதும் உந்தன்நினைவு... "எதுக்கு அவ இப்படி ஓடுறா.. ?" ராதிகா விளங்காமல் கேள்வி கேட்டுவை...


85
குற்றால அருவியிலே..
குளித்த போதும் உந்தன்நினைவு...

"எதுக்கு அவ இப்படி ஓடுறா..?"
ராதிகா விளங்காமல் கேள்வி கேட்டுவைக்க.. அருகிலிருந்த ஹேமா அதை ரசித்துச் சிரித்தாள்..
"சும்மாவும் ஓடலைடி ராது... பின்னங்கால் பிடறியில படற மாதிரியில்ல ஓடுற..."
அவளது பேச்சும் சிரிப்பும் பாலமுரளிக்கு உவப்பானதாக இருக்கவில்லை... முகத்தில் ஒர்விதமான கடினத்தன்மையுடன் ராதிகாவை முறைத்தான் அவன்...
"ஷோபா என் சொந்தக்காரப் பொண்ணு.. அத்தைமக.. தெரியுமில்ல..."
"தெரியும்.. தெரியும்..."
"தெரிஞ்சுமா அவளைக் கேலி பண்ற...? எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. அடக்கி வாசி..."
பாலமுரளியின் கடுமையில் ஹேமாவின் சிரிப்பு நின்று விட்டது...
ராதிகாவின் பார்வை பாலமுரளியை குற்றம் சாட்டியது... அவன் முகத்தில் நிலவிய திருப்தியில் அவள் மனம் அடிவாங்கியது... அவன் மனதின் மறுபக்கத்தில் இருந்த குரூரத்தில் அவள் துன்பம் கொண்டாள்...
"வரேண்டி ராது.. கிளாஸீக்கு டயமாச்சு..."
பிரிந்து விரைந்த ஹேமாவின் முதுகைப் பார்த்த வண்ணம் நின்றிருந்த ராதிகாவின் மனதில் தனிமை சூர்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை...
ஒரு கல்யாணம் ஒரு பெண்ணின் நெருக்கமான தோழியை பிரித்து நிறுத்துமானால் அதை என்னவென்று சொல்வது...?
பிறந்தது முதல் அறிந்திருந்த சொந்தங்களையும்.. தோழமையையும் துறந்து விட்டு.. புகுந்த வீட்டின் உறவுகளோடு தன்னை இணைத்துக் கொள்ளும் பெண் புனர் ஜென்மமாய் அதை உணர மாட்டாளா...?
ஆண்களுக்கு அத்தனை சொந்தங்களும்.. தோழமைகளும் நிலைத்திருக்க... பெண்ணுக்கு
மட்டும் அது பறிபோகுமானால் அது மிகப் பெரிய கொடுமையல்லவா..?
தோழி முகம் வாடி பிரிந்து சென்றதில் எல்லையற்ற மனத்துயர் கொண்டாள் ராதிகா...
"என்னடி... என்கூட வரனும்கிற நினைப்பிருக்கா.. இல்லையா...?"
பாலமுரளியின் கேள்வி அவளைக் குத்தியது.. வாய் பேசாமல் மௌனமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் ராதிகா...
பாலமுரளி கோபத்திலிருந்தான்.. அதைப் பேச்சில் வெளிப் படுத்தினான்...
"உன்கிட்ட சொன்னேனா.. இல்லையா..?"
"என்ன சொன்னீங்க...?"
"அதுகூட உனக்கு மறந்து போச்சா..? ஏன் மறந்து போகாது..? உன் நினப்பெல்லாம் வேற பக்கமில்ல இருக்கு.."
"பேச வந்ததை மட்டும் பேசுங்க..."
"இல்லைன்னா..?"
"எனக்கும் பேசத் தெரியும்.."
"உனக்குப் பேசத் தெரியும்ன்னு எல்லாருக்குமே தெரியுமே.. அந்தப் பெண்கூட பேசாதேன்னு உனக்குச் சொல்லியிருந்தேன் ராதிகா..."
"எந்தப் பெண்...?"
இடக்காக ராதிகா கேட்க.. அதற்கும் முறைத்தான் முரளி...
"உன் பிரண்ட்..."
"அவ பெயர் ஹேமா.. அந்தப் பெண்ணில்லை..."
"எனக்கு அது அவசியமில்லை..."
"எனக்கு மட்டும் உங்க அத்தை மகளை கேலி பண்ணாம இருக்கனும்கிற அவசியமில்லை..."
"போட்டா போட்டியா..?"
"ஆமாம்ன்னுதான் வச்சுங்கங்க..."
"எதுக்கு வந்த..? ஹால் டிக்கெட் வாங்கத்தானே.."
"நான் அதுக்குத்தான் வந்தேன்.. நீங்க துணைக்கு வந்தீங்க..."
"வந்தவளுக்கு அந்தப் பெண்கூட என்ன பேச்சு..?"
"இதென்னங்க வம்பாய் போச்சு... உங்க அத்தை மகதான் என் கண் முன்னாடியே உங்களை உரசித் தள்ளினா... காலேஜ் பாதையைப் பார்த்தா.. பார்க்கைப் பார்த்ததைப் போல இருக்குன்னு மெல்ட் ஆனா.. உங்க கூட தனிமையில பேசனும்னு பிரியப்பட்டு பொங்கி வழிஞ்சா..."
"அதுக்கு..?"
"அதுக்காக நான் உங்க ரெண்டு பேருக்கும் தனிமையை உண்டாக்கி கொடுத்துட்டு ஹேமாகூட பேசிக்கிட்டு நின்னேன்... இப்படியெல்லாம் செஞ்சாத்தானே என்னை கற்புக்கரசின்னு நீங்க சொல்வீங்க... கண்ணகி சிலைக்குப் பக்கத்திலே எனக்கும் சிலையை வைப்பீங்க..."
ராதிகா சிரிக்காமல் பேச... பாலமுரளிக்கு சிரிப்பு வந்து தொலைத்தது...
'இவள என்ன செய்தால் தேவலாம்...'
"அடேங்கப்பா.. அந்த அளவுக்கு நீ தியாகியா..?"
"இல்லையா பின்னே..? என்னைத் தியாகச் செம்மலாக்கி விட்டுத்தான் வேற வேலை பார்க்கிறதுன்னு நீங்களும் உங்க அத்தை மகளும் ஒரு முடிவோட இருக்கிறப்போ.. என் பங்குக்கு நானும் ஏதாவது செய்தாகனுமா.. வேணாமா..?"
"ஓஹோ... அதுக்குத்தான் அம்மையார் அந்தப் பொண்ணுகூட ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீகளாக்கும்.."
"ஆமாம் பாஸ்..."
"பாஸா...?"
"பின்னே..? அத்தானா..? அதையெல்லாம் நான் சொல்லிக் கூப்பிட்டா நல்லாயிருக்காது.. உங்க அத்தை மக ரத்தினம் சொல்லிக் கூப்பிட்டாத்தான் உங்களுக்கு காதில தேன் வந்து பாய்கிறதைப் போல இனிச்சு வைக்கும்.."
'போடி நீவேற.. சுடுதண்ணிய ஊத்திதைப் போல சுட்டு வைக்குது.. அவ பேச்சை இவ விடவே மாட்டேங்கிறாளே...'
பாலமுரளியே ஷோபாவின் இமை கொட்டுதலில் இருந்து விடுபட்டு விட்ட விடுதலை உணர்வுடன் அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சை விட்டுக் கொண்டிருந்தான்.. அவனிடம் போய் ஷோபாவைப் பற்றியே ராதிகா பேசிவைத்தால் அவனுக்கு எப்படியிருக்கும்..?
"கடுப்பைக் கிளப்பாதே.. அந்த சங்கருக்குத்தானே நீ தூது சொல்லி விட்டுக்கிட்டு இருந்த...?"
'நீ ரொம்பத்தான் கண்ட...' ராதிகாவுக்குள் எரிச்சல் மண்டியது...
"வாயிருந்தா எதையும் பேசிடலாம்கிற நினைப்பு இருக்கக் கூடாது.. யாரைப் பத்தியும் நான் பேசல.. யாருக்கும் நான் தூது விடல..."
"இதை என்னை நம்பச் சொல்றியா..?"
"நம்பாட்டிப் போங்க.. எனக்கென்ன போச்சு..?"
இப்படிச் சொல்லிவிட்டு பளீரென்ற அறையை கன்னத்தில் வாங்கினாள் ராதிகா...
வலிதாங்க முடியாமல் துடித்துப் போனவளாக கன்னத்தைப் பிடித்துக் கொண்டவளின் பார்வையில் எதைக் கண்டானோ.. முரளி வேகம் தணிந்தான்...
"என்னை மிருகமாக்கறேயேடி.." மனம் குமுறினான்..
ராதிகா பேசவில்லை... அவர்களின் கார் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்க.. கடலை வெறித்தபடி கற்சிலையைப் போல அமர்ந்திருந்தாள்...
"அவகூட பேசாதேன்னு சொன்னேன்.. நீ என் கண்ணெதிரேயே ரகசியப் பேச்சு பேசற.. கட்டின புருசன் பார்த்துக்கிட்டு இருக்கான்கிற நினைப்பு உன் மனசில இல்லையேடி..."
"உங்களுக்கு மட்டும் இருந்தா..?" ராதிகா நிதானமாக கேட்டாள்..
"இல்லை.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. கட்டின பெண்டாட்டி பார்த்துக்கிட்டு இருக்காங்கிற நினைப்பு உங்களுக்கு மட்டும் இருந்ததா..? என் கண் முன்னாடியே அவ உங்க கையைப் பிடிச்சு இழுக்கிறா... நீங்களும் கையை உறுவிக்காம.. கையை வாகாய் கொடுத்துக்கிட்டு நிற்கறிங்க..."
"ஏய்ய்ய்ய்..."
"என் வீட்டில தங்குறதுக்கு அவகிட்ட விளக்கம் சொல்கிறிங்க.. அசிங்கமா இல்லையா...?"
"பல்லைக் கழட்டி விடுவேன்.."
"அது எதுக்கு..? அதுதான் குறைன்னு சொல்லி அந்த ஷோபா பின்னாலே போகிறதுக்கா..?"
'அவ பின்னாலே போயிட்டாலும்...'
"ஏண்டி.. உன் வீடுன்னு எதைச் சொல்கிற..? இங்கேயிருக்க பண்ண வீட்டை உன் வீடுன்னு சொல்லு கேட்டுக்கறேன்.. தேனூத்தில இருக்கிற நம்ம வீட்டை உன் வீடுன்னு சொல்லு கேட்டுக்கறேன்.. அதை விட்டுட்டு உன் அப்பா வீட்டை உன் வீடுன்னு சொன்ன... பல்லைக் கழட்டி விடுவேன்..."
"இதுக்கொன்னும் குறைச்சலில்லை.. என் அப்பாவோட வசதியைத் தெரிஞ்சுத்தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.. அதுக்கப்புறமா எதுக்காக அவ முன்னாலே தாழ்வா பேசனும்..? உங்களுக்கு அவ வீடுதான் உசத்தின்னு தோணியிருந்தா அவளையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே..? யாரு வேண்டாம்ன்னு உங்க கையைப் பிடிச்சுத் தடுத்தது..?"
அந்தப் பேச்சில் மீண்டும் ஓர் அறையை வாங்கினாள் ராதிகா... 'யார் தடுத்தது..?' என்ற கேள்வியில் கொதித்துப் போயிருந்தான் பாலமுரளி...
சங்கரை ராதிகா திருமணம் செய்து கொள்ள முடியாமல் அவன் தடுத்தான்... ஏன்...? ராதிகாவின் மீது அவன் கொண்டிருந்த காதல்... ஆசை.. மோகம்... அனைத்தையும் உள்ளடக்கிய வெறி...
இவை எதுவுமே அவன்மேல் ராதிகாவுக்கு இல்லையே... இருந்திருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை அவனைப் பார்த்து சொல்லியிருப்பாள..?
"செய்திருக்கனும்டி..." அவன் வன்மத்துடன் சொன்னான்...
"எங்க தகுதிக்கு அவவீடுதான் சரிப்பட்டிருக்கும்டி.. என் அக்காவும் அதைத்தான் சொல்லுச்சு... அது பேச்சை நான் கேட்டிருக்கனும்... கேட்காம போனதுக்கு இப்ப அனுபவிக்கறேண்டி..."
இதயத்தில் அடிவாங்கினாள் ராதிகா... கன்னத்தில் அடித்த அடி அவளுக்கு வலிக்கவேயில்லை... வார்த்தைகளால் அவன் அடித்த அடி... சாட்டையடிகளாக அவள் மனதில் விழுந்தன...
கானகத்தில் தனித்து விடப்பட்டவளாக அவள் குமுறினாள்...
சூர்ப்பனகையை மணந்திருக்க வேண்டுமென்று ராமன் சொல்வானா என்ற கேள்வியை மனதில் எழுப்பியவாறு அவள் குமுறினாள்...
வாலியை வதம் செய்ததிற்கு கூட ராமன் பக்கம் ஒரு நியாயம் இருந்தது... அவளை உயிரோடு வதம் செய்ய பாலமுரளியின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று அவள் குமுறினாள்...
இருவரும் காரை விட்டு இறங்கிய போது... ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை... மௌனமாக  வீட்டுக்குள் சென்றார்கள்... மகளின் வழக்கத்துக்கு மாறான மௌனத்தில் ராஜேஸ்வரி புருவம் உயர்த்தினாள்.. மகளின் கன்னத்தில் படிந்திருந்த விரல் தடங்கள் அவளுக்கு கவலையை ஊட்டின...
'என்னவாயிருக்கும்...'
சிந்தித்தாலும்.. மகளிடம் அந்தக் கேள்வியை அவள் கேட்கவில்லை... மறுநாள் ராதிகா கிளம்புவதாக இருந்தது... அவளுடன் கொடுத்தனுப்ப வேண்டிய மறுவீட்டு பலகார வகைகளை செய்வதற்காக வேலையாள்கள் வந்திருந்தார்கள்... வேலை மும்முரத்தில் ராஜேஸ்வரி அதை மறந்தே போனாள்...
மறுநாள் சீர் வரிசைப் பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டன...
"இதெல்லாம் எதுக்கு..?" பாலமுரளி ஆட்சேபித்தான்...
"நாங்களும் வசதியானவங்கதான்... பொண்ணு கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போனா.. அவளுக்கு லாரி நிறைய தாய் வீட்டுச் சீரை அடுக்கி அனுப்புகிறவங்கதான்..."
ராஜேஸ்வரி நொடித்த போது... ராதிகாவுக்கு மன நிறைவாக இருந்தது... பெண்ணைக் கொண்டு போய் புகுந்தவீட்டில் விட்டுவிட்டு வரும் பொறுப்பில் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பமும் கூட வந்தது...
கிருஷ்ணமூர்த்தியின் காரில் ராஜேஸ்வரியும் சுந்தரும் அமர்ந்திருக்க.. கீதா.. முரளியின் காரில் ஏறிக் கொண்டு விட்டாள்...
"ஏய்ய்.. இங்கே வாடி..." என்று ராஜேஸ்வரி அதட்டின போது...
"போங்கம்மா.. எனக்கு ராதிகாகூட பேசியாகனும்... அதுதான் மறுவீட்டு விருந்தே முடிஞ்சாச்சே.. இன்னுமா இவங்க புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டோ முன்னு தனியாவே சுத்துவாங்க.. கொஞ்சம் என் கூடவும் சுத்தட்டும்..."
முதல் நாளில் இருந்து பாலமுரளியுடன் பேசாமல் மௌனப் போராட்டம் நடத்திக்
கொண்டிருந்த ராதிகாவுக்கு.. கீதாவின் அண்மை மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -85
அம்மம்மா.. கேளடி தோழி...! -85
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-85.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-85.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy