அம்மம்மா.. கேளடி தோழி...! -84

84 என் நினைவிருக்கிறதா காதலனே.. ? உன் நினைவுகளால்தான் நான் வாழ்கிறேன்.. பாலமுரளியின் முகம் கருத்து விட்டது... யாருடன் பேசக்கூடாது...


84
என் நினைவிருக்கிறதா காதலனே..?
உன் நினைவுகளால்தான் நான் வாழ்கிறேன்..

பாலமுரளியின் முகம் கருத்து விட்டது... யாருடன் பேசக்கூடாது என்று ராதிகாவை அவன் எச்சரித் திருந்தானோ.. அந்த ஹேமாவுடன் பேசியபடி அவனைப் பொருட்படுத்தாமல் ஹால் டிக்கெட்டை வாங்கச் சென்று விட்டாள் ராதிகா...
'ஆஹா...' குளிர்ந்து விட்டாள் ஷோபா...
கிடைத்தது வாய்ப்பென்று அவள் பாலமுரளியிடம் கடலை போட ஆரம்பிக்க... அதை ரசிக்கும் மன நிலையில் இல்லாத முரளி கொலைவெறியோடு அவளைப் பார்த்தான்...
இதமான காலை நேரக்காற்றில் அந்த மரத்தடி அதிகமான குளுமையோடு இருந்தது... சுற்றிலும் இருந்த பசுஞ்செடிகளும்... மரங்களும்.. ஷோபா சொன்னதைப் போல ஒரு பூங்காவில் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது...
இவையெதுவும் பாலமுரளியின் மனக் கொதிப்பை தணிக்கவில்லை...
தூரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த ராதிகாவைக் கண்டதும் அவளைக் கடுப்பேற்றவென்று ஷோபா அவனருகில் நெருங்கி அமர்ந்து கொஞ்சிப் பேச ஆரம்பித்தாள்..
ஆனால் அருகில் வந்திருக்க வேண்டிய ராதிகாவோ... சற்று தூரத்தில் நின்று ஹேமாவுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.. அது முரளிக்கும்... ஷோபாவுக்கும் பெருத்த சோதனையாக அமைந்து விட்டது...
முரளியின் அண்மை ஷோபாவுக்கு பிடித்த மானதாகத்தான் இருந்தது... என்றுமே அவன்மேல் அவள் ஒரு கண்ணை பதித்துத்தான் இருந்து வந்தாள்.. அதிலும் ராதிகாவின் காதலனாக அவனைக் கண்டு கொண்ட தினத்திலிருந்து அவன் மீதான ஈர்ப்பு ஷோபாவுக்கு அதிகரித்து விட்டது... ராதிகாவைத் தோற்கடிக்க.. எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்த ஷோபா.. முரளியிடம் நெருங்கிப் பழகி.. அதன் மூலம் ராதிகாவை துன்பப் படுத்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருந்தாள்..
நினைத்தை செயல்படுத்த அன்று அவளுக்கு அருமையான வாய்ப்பு தானாக அமைந்து விட்டதில் உற்சாகம் கொண்டிருந்தவள் ராதிகா அருகே வராமல் சற்றுத் தள்ளி நின்று ஹேமாவுடன் பேச ஆரம்பிக்கவும் திணறிப் போனாள்...
அவள் அனுபவப் பட்டவள்... அவளுக்குத்தான் தெரியும்... ராதிகாவும் ஹேமாவும் கூட்டணி சேர்ந்தால் என்ன ஆகுமென்று...
அவள் பயந்ததைப் போலத்தான் நடந்தது...
அவளிருந்த திசையை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி அவர்கள் இருவரும் ரகசியக்குரலில் பேசி குபீரென்று சிரித்து வைத்தார்கள்.. ராதிகா எதையாவது சொன்னால்... ஹேமா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்... ஹேமா எதையாவது சொன்னால் ராதிகா வாய் பொத்திச் சிரித்தாள்...
'இவளைக் கடுப்படிக்கலாம்ன்னு நினைச்சா... இவ என்னைக் கடுப்படிக்கிறாளே.. கடைசியில்
இவளுக ரெண்டு பேரும் என்னை ஜோக்கராகவே ஆக்கிட்டாங்களே...' மனம் புழுங்கிப் போனாள் ஷோபா..
பாலமுரளியின் கோபமோ வேறுதிசையில் பயணித்துக் கொண்டிருந்தது...
'நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அந்த ஹேமாகூட ஜோடி போட்டுக்கிட்டு போறாளே.. திரும்பி வந்ததும்தான் வந்தா.. கிட்டே வராம எட்டே நின்று என்ன ரகசியப் பேச்சு வேண்டிக்கிடக்கு..? அவகிட்ட இவ எதைச் சொல்கிறா..' அவனின் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது...
எப்படியாவது ராதிகாவை புண்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவன் தோள்மேல் சலுகையாய் சாய்ந்தபடி...
"அத்தான்..." என்று ஷோபா கொஞ்சலாக அழைக்க...
"ச்சை..." என்று எரிந்து விழுந்தான் பாலமுரளி...
ஷோபாவின் செய்கை அவனுக்கு சகிக்க முடியாததாக ஆகித் தொலைத்திருந்தது... அவளைக் கண்டாலே காத தூரம் ஓடுகிறவனை இப்படிப் பக்கத்தில் அமரவைத்து பேசிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கியதற்காகவே ராதிகாவை
என்ன செய்தாலும் தகும் என்ற கொலை வெறியின் உச்சகட்டத்தில் இருந்தான் அவன்...
அதைப் புரியாமல் நெருங்கி அமர்ந்து.. சும்மாவும் இருக்காமல் தோளிலும் சாய்ந்து வைத்து.. வாங்கிக் கட்டிக் கொண்ட ஷோபாவின் முகம் அவமானத்தில் சிவந்து விட்டது...
அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை முரளியின் வாயிலிருந்து கேட்க நேரிடும் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை...
எப்போதுமே அவனைக் கண்டால் அவளுக்கு பயம்தான்.. நெருங்கிப் பேச நினைத்தாலும்.. முள்ளாய் குத்தும் அவனது சுபாவத்தைக் கண்டு அஞ்சி விலகி நின்றவள்தான்...
என்னவோ அவளின் போதாத காலம்.. அன்றைக் கென்று பாலமுரளி இணக்கமாக பேசி வைக்க.. ராதிகாவைப் பழிவாங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்து பக்கத்தில் அமர்ந்து பேசிவிட்டாள்...
'எல்லாம்... இந்த ராதிகாவால் வந்தது...'
உள்ளம் கொதித்த போதும்.. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
"அத்தான்...!" என்று அஞ்சி இமை கொட்டினாள் ஷோபா...
அவளைப் பெற்ற பரந்தாமனே அவளின் இமை கொட்டுதலில் பயந்து போயிருக்கிறார் எனும் போது பாலமுரளி பயப்பட வேண்டாமா..?
அவனோ.. "சகிக்கலை..." என்று சொல்லி விட்டான்...
அதுதான் உண்மையும் கூட.. அது பரந்தாமனுக்கு மிக நன்றாகவே தெரியும்.. அவர் படித்துப் படித்து மகளிடம் சொல்லியிருக்கிறார்.. இது போன்ற இமை கொட்டல்களைப் பயன்படுத்தி சங்கரை விரட்டியடித்து விட வேண்டாமென்று... அவள் கேட்டால் தானே...
காலங்கடந்த ஞானோதயத்தால் யாருக்கு என்ன பயன்..? அதிலும் ஷோபாவுக்கு என்ன பயன்..?
'ம்ஹீம்.. எத்தனையோ கேட்டாச்சு... இதைக் கேட்க மாட்டோமா...'
அவள் மனதைத் தேற்றிக் கொண்டவளாக.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத லேடி விக்கிரமாதித் தனைப் போல தன் உராய்வினைத் தொடர்ந்தாள்...
'சொன்னாலும்.. சொல்லாட்டியும் இவன் வேதாள மேதான்... எப்படித்தான் அந்த ராதிகாவுக்கு இவன்மேல் காதல் வந்து தொலைத்ததோ.. அதுவும்... அழகான சங்கரை வேணாம்ன்னு சொல்லிட்டு இந்தக் காட்டான் மேல ஆசைப்பட்டிருக்காளே...'
அவளது நினைவை மட்டும் பாலமுரளி அறிந்திருந் தானென்றால் அந்த இடத்திலேயே அவளை ஒரு வழி பண்ணியிருப்பான்...
அகத்தில் இருப்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரே காரணத்தினால் ஷோபா தப்பிப் பிழைத்தாள்...
"என்னத்தான் சொல்கிறிங்க..."
என்னவோ பாலமுரளி சொன்னது காதிலேயே விழுகாததைப் போலச் சொல்லச் சிணுங்கலுடன் கேட்ட ஷோபாவை ஒரு விதமாக பார்த்து வைத்தான் பாலமுரளி..
அது எப்படித்தான்... இப்படியொரு பெண்ணை அவனுக்காக அவனது அக்கா சிபாரிசு செய்தாளோ என்றிருந்தது அவனுக்கு...
'அக்காவுக்கு அம்மா சொல்கிறதைப் போல புத்தி கொஞ்சம் மட்டுத்தான் போல...'
"சொல்லுங்க அத்தான்..."
ஷோபா மீண்டும் சிணுங்கி வைக்க.. அங்கேயிருந்து ஓடிவிட்டால் தேவலை என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான் பாலமுரளி...
'இவகிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே.. இந்த ராதிகாக் கழுதைதான் ஹால் டிக்கெட் வாங்குகிற வேலை முடிஞ்சா வந்து சேர வேணாமோ அந்த ஹேமாக் கழுதைகூட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..? இவபுத்தி எனக்குத் தெரிஞ்சிருக்கிறதைப் போல கூடப் படிச்ச அவளுக்கா தெரியாது..? என்னடா நம்ம புருசன்காரன் இந்த மேனாமினுக்கியின் பக்கத்தில உரசிக்கிட்டு உட்கார்ந்திருக்கானே... பதறியடிச்சுக்கிட்டு ஓடி வருவோமுன்னு நினைக்கிறாளா... எதையும் கண்டுக்காம அந்த ஹேமாகூட ரகசியப் பேச்சு பேசிக்கிட்டிருக்காளே..'
"சொல்லுங்க அத்தான்..."
எதையாவது சொல்ல வேண்டுமேயென்று ஷோபா சிணுங்கிவைக்க.. அவள் அவ்வளவு ஆர்வமாக அந்த வார்த்தையை மீண்டும் கேட்க விருப்பம் காண்பிக்கும் போது சொல்லாமல் இருக்கக் கூடாது என்று தோன்றி விட்டது பாலமுரளிக்கு...
"ம்ம்... சகிக்கலைன்னு சொன்னேன்..."
இதைக் கேட்டபின்பாவது அவள் தள்ளி உட்காரு வாளா என்ற அவனின் அபிலாஷை காற்றில் பறந்தது...
"ஆமாம் அத்தான்... எனக்கும் சகிக்கலைதான்..." என்று அவள் சொல்லி வைத்தாள்...
எப்போதிருந்து இவள் இப்படியாகப்பட்ட நியாயப் பிறவியாக மாறினாள் என்ற வியப்புக்கு ஆளானான் பாலமுரளி...
'இவ செய்கிறதை சகிக்க முடியாதுன்னு இவளுக்கே தெரிஞ்சிருக்கே.. அப்புறமும் எதுக்காக இப்படி உரசிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறா.. தள்ளி உட்கார வேண்டியது தானே...'
அவன் இப்படி யோசித்து வைக்க.. அதை அறியாத அறியாப் பெண்ணைப் போல...
"ராதிகா செய்கிறதை உங்களால சகிச்சுக்க முடியாதுதான்..." என்றாள் ஷோபா..
'இவ எதுக்கு இப்ப தேவையில்லாம ராதிகாவைப் பத்திப் பேசி வம்பைக்கட்டி இழுக்கிறா...'ஷோபாவை முறைத்தான் முரளி...
இதுபோல ராதிகா அவன் தோள் சாய்ந்த பொழுது அவன் நினைவுக்கு வந்து மிதந்தது.. அந்த இரவு நேரக் கார் பயணத்தின் இதமான பாடல் வரிகள் அவன் மனதில் ஒலித்தன...
             'எனக்காக வா... நான்
                 உனக்காக வா...'
அவன் மனதில் பொங்கிய தாபம் அறியாதவளாக ஷோபா அவனை இன்னும் அதிகமாக உராய.. அவன் சுள்ளென்று பேசி விட்டான்...
"த்ச்சு.. தள்ளி உட்காரு ஷோபா..."
"ஏன் அத்தான்..?" அவள் மீண்டும் இமைகொட்ட.. அப்படியே அவள் கன்னத்தில் நான்கு அப்பு அப்பி...
'இனிமே இப்படி இமை கொட்டி வைப்பியா..?' என்று அரட்டி வைக்க வேண்டும்போல ஆவேசப்பட்டுப் போனான் முரளி...
"இங்கே எதுக்கு வந்திருக்க..?"
"படிக்க..."
"இதுதான் நீ படிக்கிற லட்சணமா..?"
'இப்போத்தான் அது உன் நினைவுக்கு வந்ததா..?'
"இது காலேஜ்ம்மா... நீ சொன்னதைப் போல பூங்கா இல்லை..."
'இதையேன் உன் பெண்டாட்டி முன்னாலே நீ சொல்லலை...?'
"இப்படிப் பட்டப் பகலில் ஒரு ஆம்பளை பக்கத்தில் உட்கார்ந்து தொட்டுத் தொட்டுப் பேசி வைக்கிறயே.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா...?"
'அதுசரி.. உன் பெண்டாட்டி பார்த்தா மட்டும் ஒன்னுமில்லை... மத்தவங்க பார்த்தா அது தப்பு... என்னே உன் நியாயம்...'
"படிக்கிற பெண்ணாய் லட்சணமாய் இரு..."
'அதை இப்போவந்து நீ சொல்லாதே...'
விட்டால் அன்று முழுக்க அவன் உபதேசம் பண்ண ஆரம்பித்து விடுவான் என்று தோன்றி வைக்க... அரண்டு போன ஷோபா அவசரமாக பேச்சின் போக்கை திசை மாற்றி விட்டாள்...
"பாருங்க அத்தான்.. நீங்க காத்துக்கிட்டிருக்கிற நினைவு கொஞ்சம்கூட இல்லாம ராதிகா.. அவ பிரண்ட் கூடநின்னு அரட்டையடிச்சுக்கிட்டு இருக்கா..."
பாலமுரளிக்கும் அதே கொதிப்புத்தான் என்றாலும்.. ஷோபாவின் முன்னால் ராதிகாவை குறைவாக பேசும் மனமில்லாதவனாய் மௌனம் சாதித்தான்...
'கொஞ்சம் கூட பெண்டாட்டிக்கு எதிராய் பேச மாட்டானே...'
"அந்த ஹேமா இருக்காளே.. அவ கொஞ்சம் கூட சரியில்லாத பொண்ணு அத்தான்..."
ஷோபாவின் வாயினால் இத்தகைய நற்சான்றிதழை பெற்று விட்ட ஒரே காரணத்துக்காவே ஹேமாவை உலகிலேயே சிறந்த பெண் என்று அறிவித்து விட பாலமுரளிக்கு தோன்றியது தான்...
ஆனால் அவள்தான் சங்கருக்கு தூது சொல்லும் வேலையைச் செய்து கொண்டிருந்தாளே.. அதனால் இதற்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தான் பாலமுரளி...
"அவளாலேதான் ராதிகா கெட்டுப் போறா..."
இந்தப் பேச்சுடன் நூறு சதவிகிதத்துக்கு முரளி இசைந்து போனாலும்.. ஷோபா பேசிய வார்த்தைகளில் அவனுக்கு கோபம் வந்து விட்டது...
அவன் கூர்மையாக ஷோபாவைப் பார்க்க.. அந்த பார்வை வீச்சின் ஜ்வாலையைத் தாங்க முடியாதவளாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள் ஷோபா...
'இப்படி முறைக்கிறானே...'
"ராதிகா என் பெண்டாட்டி.. இன்னொரு தடவ. இப்படிப்பட்ட பேச்சை என்கிட்டப் பேசிவைக்காதே.. நான் கோபக்காரன்... ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்..."
தீக்கங்குகளாய் சுட்ட அவன் வார்த்தைகளில் நடுங்கிப் போனாள் ஷோபா.. அவளைக் காப்பாற்ற வென்று வந்ததைப் போல ஒரு வழியாய் ராதிகாவும் வந்து சேர்ந்து விட.. தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று வகுப்பறையை நோக்கி ஓட்டம் பிடித்தாள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -84
அம்மம்மா.. கேளடி தோழி...! -84
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-84.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-84.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy