அம்மம்மா.. கேளடி தோழி...! -82

82 யார் மனதில் யாரென்று.. யாரறிவார் இவ்வுலகில்... ? "சுந்தர்... அக்காவையும்... அத்தானையும் சாப்பிடக் கூப்பிடு..." பம்...


82
யார் மனதில் யாரென்று..
யாரறிவார் இவ்வுலகில்...?

"சுந்தர்... அக்காவையும்... அத்தானையும் சாப்பிடக் கூப்பிடு..."
பம்பரமாக சுழன்று கொண்டிருந்த ராஜேஸ்வரி ஆணையிட்டாள்...
ராதிகாவும்.. பாலமுரளியும் ஹாலில்தான் இருந்தார்கள்.. பாலமுரளி டிவியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்க.. ராதிகா... கீதாவுடன் வாயடித்துக் கொண்டிருந்தாள்...
சுந்தரிடம் சொல்லாமல் ராஜேஸ்வரியே நேரடியாக அவர்களை சாப்பிட வரும்படி அழைக்கலாம்... அதைவிட்டு சுந்தரை ஊடே வைத்ததில் ராதிகா மனம் வருந்தினாள்... அவளது வருத்தத்தை அவளின் கண்களில் கண்ட கீதா தமக்கையைத் தேற்றினாள்...
"விடுடி.. லேடி ஹிட்லர் சும்மா பிலிம் காட்டறாங்க.."
"இன்னுமா கீதா...? இவர் என்ன நினைச்சுக்குவார்..?"
"அத்தான்தானே.. ஒன்னும் நினைக்கமாட்டார்.. அவரைப் பாரேன்.. அப்படியே நியுஸில் அமிழ்ந்து போயிருக்கார்.. லேடி ஹிட்லர் சொன்னதையா காதில போட்டிருக்கப் போறார்..?"
கீதாவின் வார்த்தைகளில் ராதிகாவிற்கு தெம்பு வரவில்லை... அவளுக்குத்தான் அவனின் குணத்தைப் பற்றி நன்கு தெரியுமே.. எதுவுமே காதில் விழுகாததைப் போன்ற அவனின் முக பாவனையில் ஏமாற அவள் தயாராக இல்லை...
எந்த நொடியும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்ற பய உணர்வுடன் அவள் அவனை சாப்பிட வரும்படி அழைத்தாள்...
பாலமுரளி டிவியை அணைத்து விட்டு கீதாவைப் பார்த்தான்.. அவள் யாருடனோ செல்போனில் பேசியபடி வாசல் பக்கம் நடந்துவிட.. மனைவியைப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் கதி கலங்கிப் போனாள் அவனின் மனைவி...
"இந்த விருந்துக்கு நாம வரலைன்னுதான் உன் அம்மா அன்னைக்கு அவ்வளவு சண்டை போட்டாங்களா..?"
அவன் நிதானமாக கேட்ட போது... அவன்காதில் ராஜேஸ்வரியின் பேச்சு விழுந்திருக்கிறது என்பது ராதிகாவுக்கு புரிந்து விட்டது...
'ம்ஹீம்.. இவன் எதையும் காதில போட்டுக்க மாட்டானாம்... கீதா கதை சொல்கிறா.. அவளுக்கு இவன் குணத்தைப் பத்தி என்ன தெரியும்..? இவன் கடப்பாரையைக் கூட விழுங்கிவிட்டு ஒன்றும் தெரியாதவனைப் போல முகத்தை வைத்துக்கிட்டு உட்கார்ந்திருப்பானே...'
"ஏன் இப்படிப் பேசறிங்க..? விருந்தில் ஏதும் அம்மா குறை வைத்தாங்களா..?" ராதிகா தணிந்த குரலில் கேட்டாள்...
அவள் கேள்வியிலும் ஓர் அர்த்தம் பொதிந்திருந்தது.. ராஜேஸ்வரி நேரடியாக மகளிடமும்... மருமகனிடமும் பேசவில்லையென்றாலும் வரவேற்பிலும்.. கவனிப்பிலும்... உபசரிப்பிலும்.. விருந்து தயாரிப்பிலும் ஒரு சிறு குறையைக் கூட வைக்கவில்லை...
"கீதா... அக்காவும்.. அத்தானும் வந்துட்டாங்க பாரு... ஆரத்தி கரைச்சு வைச்சிருக்கே... எடுத்துட்டு வந்து ஆரத்தி சுத்து..."
"சுந்தர்... அக்காவுக்கும்.. அத்தானுக்கும் மாடிரூம் ரெடியாயிருக்கு.. கூப்பிட்டுக்கிட்டுப் போ..."
"என்னங்க... ஆபிஸீக்கு லீவு போட்டுட்டு அடங்கி வீட்டில உட்காருங்க.. உங்க தலைமேல ஒன்னும் ஆபிஸ் ஓடலை... பெண்ணும் மாப்பிள்ளையும் வந்திருக்கப்ப நீங்க ஆபிஸீக்கு ஓடினா நல்லாவா இருக்கும்..?"
"கீதா... உன் அத்தானுக்கு என்னென்ன பிடிக்கும்ன்னு உன் அக்காகிட்ட கேட்டுச் சொல்லு..."
"சுந்தர்... மாடிரூமில ஏஸி ஓழுங்கா ஓடுதான்னு செக் பண்ணினயா..?"
நொடிக்கு ஒரு தரம் வீட்டில் உள்ளவர்களை அழைத்து ராதிகாவையும்.. பாலமுரளியையும் கவனிக்கச் சொன்னாள்... அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்துப் போட்டாள்...
என்ன ஒன்று.. இத்தனையும் செய்தவள் வாயார மகளிடமும் மருமகனிடமும் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்... அவள் அதைச் செய்யவில்லை.. எதில் குற்றம் காண்பதென்று கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு காத்திருந்த பாலமுரளி மிகச்சரியாக அதை மட்டும் பிடித்துக் கொண்டான்...
"ஏண்டி கேட்க மாட்ட..? இந்த விருந்துச் சாப்பாட்டை நான் முன்னே.. பின்னே.. கண்டதே இல்லை பாரு.. இன்னைக்கு புதுசாயில்ல வாய்க்கு ருசியா சாப்பிட்டுப் பழகுறேன்.. பேச வந்திட்டா பேச... விருந்தில உன் அம்மா குறையே வைக்கலியா..? இதைப் போலத்தான் அந்த சங்கர் மருமகனா வந்திருந்தாலும் செய்திருப்பாங்களா..?"
அவன் நெஞ்சின் தணல் பேச்சில் வெளிப்பட்டு விட்டது.. ராஜேஸ்வரி சங்கருக்கு பெண் கொடுக்க நினைத்தவள் என்ற பகை உணர்வு இன்னமும் அவன் நெஞ்சில் மறையாமல் இருப்பதை கண்டு கொண்ட ராதிகாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை...
"என்னடி... பதிலுக்குப் பதில் பேசித் தள்ளுவ.. இப்ப அந்த வாய் எங்கே போச்சு..? பேச்சையே காணோம்..."
"இப்படிப் பேசினா எப்படிப் பதில் சொல்றது..? அவங்க மனசில எதுவும் இல்லை.. இதை நான் சொன்னா நீங்க கேட்டுக்கவா போறிங்க..?"
"தெரியுதில்ல.. அதனால நான் சொல்றதை நீ கேளு.."
"என்ன..?"
"நாம நாளைக்கே தேனூத்துக்கு கிளம்பியாகனும்.."
"அதுக்குள்ளேயா..? நேத்துத்தானே வந்தோம்..?"
"விருந்தும்.. மருந்தும் மூணு நாள்டி.. நாளையோட அந்த மூணுநாள் கணக்கு முடிஞ்சிருச்சு..."
பாலமுரளி கறாராகச் சொல்லி விட்டான்.. அந்த இரண்டு நாள்கள் அவன் வாயை மூடிக் கொண்டு அங்கே தங்க ஒப்புக்கொண்டதே பெரிய விசயம் என்று தோன்றிப் போனதில் ராதிகாவும் எதிர்வாதம் செய்யாமல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.. டைனிங் டேபிளில் அவள் அதைச் சொல்ல.. சுந்தரின் முகம் வாடிவிட்டது...
"அதுக்குள்ளேயா அக்கா..?" என்று ஏக்கத்துடன் கேட்டான்...
"என்னாடி ராது... அத்தான் இப்படிச் சொல்றாரு.. உங்ககூட ஊரையெல்லாம் சுத்தனும்னு பிளான் போட்டிருந்தேனேடி... அத்தனையும் அம்பேலா..." கீதா குறைபட்டாள்...
"இரண்டு நாள்கூட ஆகலை.. அதுக்குள்ளே ஊருக்குத் திரும்பனும்னு சொல்றியேம்மா.. ஏன் மாப்பிள்ளை.. நீங்க ஒரு வாரம் தங்கிட்டுப் போகக் கூடாதா..?" கிருஷ்ணமூர்த்தி பணிவுடன் பாலமுரளியிடம் கேட்டார்...
"இல்லை மாமா.. நான் இங்கே வந்ததே பெரிய விசயம்... மறுவீட்டு விருந்துக்கு போகாம இருக்கக் கூடாதுன்னு அம்மா சொன்னதால கிளம்பி வந்தேன்.. மத்தபடி எனக்கு மூச்சு விடக்கூட நேரமில்லாம வேலை குமிஞ்சு கிடக்கு... உங்களுக்கே அது நல்லாத் தெரியும்.." பாலமுரளி மரியாதையான குரலில் மறுப்புச் சொல்லி விட்டான்...
அத்தனை பேரும் அவர்களின் ஆதங்கத்தை வெளிப் படுத்தியும் ராஜேஸ்வரி மட்டும் ஒருவார்த்தை கூட தடுத்துப் பேசவில்லை.. மௌனமாக சமையலறைக்குள் போய் விட்டாள்...
'அம்மா...! உங்களுக்கு என்மேல பாசமே இல்லையா...?'
ராதிகாவின் இதயம் வலித்தது... அவள் மனம் தாயின் மடி தேடி மௌனக் கண்ணீர் விட்டது...
"ராதிகா..."
வாசலில் குரல் கேட்க.. பாலமுரளியின் முகம் மாறியது...
"ஹேமா போல இருக்கே..."
ராதிகா கணவனை மறந்தவளாக அவசரமாக எழுந்ததில் அவன் முகம் சுளித்தான்...
"யாராய் இருந்தால் என்ன..? பாதி டிபனில் ஓடனுமா...? உட்காரு..." அதட்டினான்...
அவனது கடுமையில் ராதிகா என்னவோ குற்றம் செய்தவளைப் போல முகம் மாறி உட்கார்ந்து விட.. கிருஷ்ணமூர்த்திக்கு என்னவோ போல ஆகிவிட்டது...
அவனுக்கு ஹேமாவைத் தெரிந்திருக்காது என்ற நினைவில் அவர்  மகளுக்கு ஆதரவாகப் பேசினார்...
"அதுவேற யாருமில்லை மாப்பிள்ளை.. நம்ம ராதிகா வோட கிளாஸ்மேட்..."
"ஓஹோ..."
"ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ்..."
"அப்படியா..?"
"ஒன்னாவே இருந்தவங்க.. ராதிகாவுக்கு மேரேஜ் ஆனதும் பிரிஞ்சு போயிட்டாங்க..."
"அதில அந்தப் பெண்ணுக்கு ரொம்ப வருத்தமா மாமா...?"
"அப்படியில்லை மாப்பிள்ளை... ராதிகா சென்னையிலேயே இருந்திருந்தா ஹேமாவால அவளைத் தினமும் பார்த்திருக்க முடியும்.. அவ தேனூத்தூக்குப் போய் விட்டதில ஹேமாவுக்கு வருத்தமிருக்கத்தானே செய்யும்..?"
"இருக்கும்... இருக்கும்..."
அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல் பாலமுரளி எழுந்து கொண்டான்... கை கழுவியனுக்கு கை துடைக்க டவலை நீட்டிய ராதிகாவை உறுத்துப் பார்த்தவன்....
"உன்னைப் பார்க்காம அந்த ஹேமாவால இருக்க முடியாதாமே... அதனாலதான் சென்னையிலேயே சங்கரை உனக்கு மாப்பிள்ளையாக்கனும்னு பார்த்தாளா..." என்று கேட்டான்...
"ப்ளீஸ்... அவளுக்கு அப்படியெல்லாம் எண்ணம் கிடையாது..." ராதிகா தீiமான குரலில் மறுத்தாள்...
"இதை என்னை நம்பச் சொல்றியா...?"
கை துடைத்த டவலை ஏறக்குறைய ராதிகாவின் முகத்தில் வீசிவிட்டு ஹாலுக்கு சென்றான் பாலமுரளி... கீதாவிடம் பேசிக்கொண்டிருந்த ஹேமா அவனைப் பார்த்ததும் சிநேகிதமாய் சிரித்து வைக்க.. பதிலுக்கு சிரிக்காமல் அவளுக்கு எதிரேயிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாய் சாய்ந்து அமர்ந்தான்...
"ஹேமா..."
ஒருவழியாய் ஹாலுக்கு வந்த ராதிகா ஆவலுடன் சிநேகிதியை அழைத்தபடி அவள் பக்கத்தில் உட்காரப் போனாள்...
"ராதிகா..."
பாலமுரளியின் கண்டிப்பான குரலில் திரும்பியவள் அவனின் கண்சமிக்ஞையைப் புரிந்து கொண்டவளாக வேறு வழியின்றி அவனருகே உட்கார்ந்தாள்...
'இவனென்ன இப்படி இருக்கிறான்.. என் பக்கத்தில் கூட அவளை உட்காரவிட மாட்டானா..?' ஹேமாவின் புருவங்களில் முடிச்சு விழுந்தது...
"ஹால் டிக்கெட் வந்திருச்சு... நீ வாங்க வரலையா...? அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்..."
"எக்ஸாம் எப்போடி..." ராதிகா கவலையானாள்...
"இந்த மன்த் என்டில... நீ படிச்சுக்கிட்டுத்தான இருக்க...?"
"த்ச்சு.. இல்லைடி..." ராதிகா படிப்பின் நினைவில் சூள்கொட்டினாள்...
"நீயாடி இப்படிப் பேசற..? என்னவோ போ... எக்ஸாமையாவது ஒழுங்காக அட்டெண்ட் பண்ணப் பாரு..." ஹேமா கிளம்பி விட்டாள்...
"ஸோ... ஹால் டிக்கெட் வாங்க வருகிற சாக்கில காலேஜில சங்கரை மீட் பண்ணுன்னு இவ சொல்ல வந்தாளா...?" பாலமுரளியின் புருவங்கள் ஏறி இறங்கின...
ஏற்கனெவே படிப்பின் மீதான கவலையில் இருந்த ராதிகாவிற்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது...
"எல்லாத்தையும் நீங்க குதர்க்கமாவேதான் யோசிப்பிங்களா..?" என்று சண்டைக்கு கிளம்பி விட்டாள்...
"அந்தப் பெண்னைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை... அவகூட நீ பேசிப் பழகறதை நிறுத்திக்க..." அமர்த்தலான குரலில் சொன்னான் பாலமுரளி...
"ஐயா... சாமி... நீங்களே பேசிப் பழகச் சொன்னாலும் இனி அது முடியாத காரியமாய் போச்சே... அவ சென்னையில இருக்கா... நான் தேனூத்தில இருக்கேன்... இதில எங்கே பேசிப் பழகறது..?" ராதிகா கோபம் தாங்காமல் வெடித்தாள்...
"என்னவோ தேனூத்துக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதில ரொம்ப வருத்தப்படற மாதிரி தெரியுது... இவ்வளவு காண்டை மனசில வைச்சுக் கிட்டிருக்கவ ஏண்டி வரும்போது அந்த ராத்திரி நேரத்தில காருக்குள்ள அந்தக் கொஞ்சு.. கொஞ்சின..?" முரளி அடிக்குரலில் சீறினான்...
ராதிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்தவள்.. அவன் அதற்கும் ஏதாவது ஒன்றைச் சொல்வான் என்ற நினைவில் பார்வையை தழைத்துக் கொண்டாள்...
சற்று நேர மௌனத்திற்கு பின் அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.. எதுவுமே நடக்காததைப் போன்ற குரலில்...
"சரிசரி கிளம்பு..." என்றான்...
"எங்கே..?" ஓய்ந்து போன குரலில் கேட்டாள் ராதிகா...
"வேற எங்கே.. உன் காலேஜீக்குத்தான்..."
"எதுக்கு..?"
"ஹால் டிக்கெட்டை வாங்க.."
"வேணாம்..."
"ஏன் வேணாம்..? நாலு வருசப் படிப்பு...! என்னாலே அது வீணாகிப் போனதா பேச்சு வர வேணாம்.. பரிட்சை சமயத்தில நம்ம பண்ணை வீட்டில வந்து தங்கி பரிட்சையை எழுதிக்க... படிப்பை முடிக்காம விட்டதா என்மேல பழி போட வேணாம்... அந்தக் குறை உனக்கெதுக்கு..? வா.. நானும் கூட வர்றேன்... ஹால் டிக்கெட்டை வாங்கிட்டு வந்திரு..."
என்னதான் இணக்கமான குரலில் பாலமுரளி சொன்னாலும்... என்னவோ அவனிடம் தனது சுதந்திரத்தை யாசகமாகப் பெறுவதைப் போல ராதிகாவுக்குத் தோன்றியது... தன்னைச்சுற்றி தளைகள் பிணைக்கப் படுவதைப் போல அவள் உணர்ந்தாள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -82
அம்மம்மா.. கேளடி தோழி...! -82
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-82.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-82.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy