அம்மம்மா.. கேளடி தோழி...! -79

79 நீ பாடும் பாடல்... எனக்காகத்தானா.. ? நீ பேசும் பேச்சு... நான் கேட்கத்தானா.. ? தலையின் ஈரம் காய... விரித்து விடப்பட்ட கூந்தலுடன...


79
நீ பாடும் பாடல்... எனக்காகத்தானா..?
நீ பேசும் பேச்சு... நான் கேட்கத்தானா..?

தலையின் ஈரம் காய... விரித்து விடப்பட்ட கூந்தலுடன் மாடிப்படிகளில் இறங்கி வந்த மருமகளின் தோற்றத்தில் மகிழ்ந்து போனாள் மேகலா...
"காபி சாப்பிடும்மா..."
மருமகளுக்கு காபி குடித்து... அவள் குடித்து முடித்ததும்... அவள் கையிலேயே மகனுக்கான காபித்தம்ளரைத் திணித்து மீண்டும் மாடியறைக்கு பற்றி விட்டாள் மேகலா...
"காப்பி..."
அவள் வருவதற்கு முன்னாலேயே எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனின் முன்னால் காபித்தம்ளரை நீட்டினாள் ராதிகா...
"வைச்சுட்டுப் போ..."
அவள் முகம் பார்க்காமல் அவன் சொல்ல.. அவளுக்கு என்னவோபோல ஆகிவிட்டது...
'நானென்ன இவனுக்கு வைத்த ஆளா...?'
கோபத்துடன் அருகிலிருந்த மேஜையின் மேல் அவள் காபியை வைத்த விதத்தில் காபித் தம்ளர் ஓசையெழுப்பியது...
"ஏய்ய்..."
அறையை விட்டுவெளியேற இருந்தவள் அவன் அழைப்பினில் நின்று முறைத்தாள்...
"என் பெயர் 'ஏய்ய்' இல்லை..."
"ஓஹோ... நான் ஏய்ய்ன்னு சொன்னதில உன் கிரிடம் இறங்கி விட்டதோ..."
"உங்களுக்கு என்ன வேணும்..?"
"எனக்குன்னு இந்த சுத்து வட்டாரத்தில ஒரு மரியாதை இருக்கு..."
"இருக்கட்டும்... அதையெதுக்கு வேலைமெனக்-கெட்டு என்னிடம் வந்து சொல்கிறிங்க..."
"பெரிய பெரிய ஆளுகளே என்னிடம் பார்த்துத்தான் பேசுவாங்க...."
"பேசட்டும்.. எனக்கென்ன வந்துச்சு..?"
"அப்படியெல்லாம் எளிசா நீ சொல்லிரமுடியாது... இந்த ஊரு.. உலகத்துக்கு நீ என் பெண்டாட்டி..."
'உனக்கு மட்டும் நான் தங்கச்சியா...?'
கேட்க நினைத்ததை கேட்காவிட்டால் அவள் ராதிகா இல்லையே... அவள் கேட்டே விட்டாள்... அவன் பல்லைக் கடித்தான்...
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்... என்னடி பேச்சுன்னு இப்படிப் பேசி வைக்கிற...?"
'எரியுதில்ல.. இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும்...?'
அவள் இமை கொட்டியவளாக அறியாதவளைப் போல கேள்விவேறு கேட்டாள்...
"எதுக்கு இப்படிக் கோபப்படறிங்க..? அப்படி நானென்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுட்டேன்..? நீங்கதானே இந்த ஊரு உலகத்துக்கு முன்னாடி நான் உங்க பெண்டாட்டின்னு சொல்லி வைச்சீங்க... அப்ப.. உங்களுக்கு நான் யாருங்கிற கேள்வி எனக்குத் தோணுமா.. தோணாதா..?"
"தோணும்.. தோணும்... ஏன் தோணாது... இங்கே பாரு..."
எதைச் சொல்லக் கூடாது என்று அவன் நாக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தானோ.. அதை அவன் சொல்லி வைக்க.. அவள் உடனே கண்களை அகல விரித்து அவனை இமைக்காமல் பார்த்து வைத்தாள்..
'ஆரம்பிச்சுட்டாளா.. எப்போ... எப்போன்னு காத்துக்கிட்டு இருந்திருப்பா போல... உடனே மொச்சைக் கொட்டை கண்ணை முழிச்சுக்கிட்டு பார்வையிட ஆரம்பிச்சிருவாளளே...'
"ஏய்ய்..."
"திரும்பவும் ''யா...? என் பெயர் 'ஏய்' இல்லை... ராதிகா..."
"அதைச் சொல்லிட்டாலும்..."
"நீங்க சொல்லாத ஆளா..?"
"பழையகதையை இழுக்காதே..."
"சரி... இழுக்கலை... நீங்க விசயத்தைச் சொல்லுங்க.."
"எனக்கு மரியாதை ரொம்பவும் முக்கியம்... இப்படி காபித் தம்ளரை ணங்குன்னு வைக்கிறது.. சாப்பிடுற தட்டை டொம்முன்னு வைக்கிறதையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே..."
எதற்காக அவன் இத்தனை பீடிகைகளைப் போட்டான் என்பது விளங்க.. ராதிகா அவனை உறுத்துப் பார்த்தாள்...
"அப்படிங்களா பாஸ்.. மரியாதை உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா..? எனக்கு இல்லையா...?"
"இந்த பாலமுரளியின் பெண்டாட்டிக்கு மரியாதை என்னைக்குமே குறையாது..."
"அடேங்கப்பா.. கிருஷ்ணமூர்த்தியின் மகளா இருந்தா மட்டும் எனக்கு மரியாதை குறைஞ்சிருமா..?"
"ஏண்டி.. விதண்டாவாதத்துக்கு பிறந்தவளே.. ஒரு சொல்லில் நீ அடங்கவே மாட்டியா...?"
"எனக்கும் மரியாதை இருக்கு பாஸ்.. ஆனானப் பட்ட உங்க அத்தை மக ஷோபாவே என்கிட்ட அடக்கித்தான் வாசிப்பா.. நீங்க என்னடான்னா.. காபியைக் கொண்டு வந்தா கையிலகூட வாங்கிக்காம அப்படி வைச்சிட்டுப் போங்கறிங்க... நானென்ன உங்க வீட்டு வேலைக்காரியா..? எனக்கும் கோபம் வரும்... கோபம் வந்தா அதை உங்ககிட்ட காட்ட முடியுமா..? யாரு நீங்க... இந்த தென்காசிப் பட்டினத்துக்கு பட்டம் கட்டி விட்டிருக்கிற ராஜா.. உங்ககிட்ட வாயைத் திறக்க முடியுமா...? அதான் கையில் அகப்பட்டது மேலே என் கோபத்தைக் காட்டறேன்..."
அவள் விசுக்கென்று வெளியில் சென்றுவிட. அந்த அறையே வெறுமையானதாக ஆகிவிட்டதைப் போல உணர்ந்தான் பாலமுரளி.. அவள் வைத்து விட்டுப் போயிருந்த காபியை எடுத்து உறிஞ்சியவனுக்கு என்றும் இல்லாத வகையில் அன்று அதிகமாகவே காபி ருசித்தது...
'செம வாய்...' லேசாக சிரித்துக் கொண்டான்...
குளித்து உடைமாற்றி அவன் சாப்பிட வந்தபோது... ஹாலில் குழுமியிருந்த உறவினர்கள் அவர்களுக்கிடையே நடந்த பேச்சு வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தனர்..
சாப்பிடப் போகாமல் அவர்கள் மத்தியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனுக்கு வழக்கம் போல எல்லா இடங்களிலிருந்தும் அழைப்புக்கள் வரத் துவங்கி விட்டன...
"உரம்தானே... நம்ம உரக்கடையில நேத்தே லோடு வந்து இறங்கியிருக்கனுமே... போய் எடுத்துக்கங்க..."
"அறுத்து வைச்ச கல்லை முதல்ல எண்ணி முடிங்க.. அப்புறமாய் லாரியில ஏத்தலாம்... ஒரு செங்கல் கூட வீணாகப் போயிரக்கூடாது..."
"சொல்லிட்டேன்ங்க... இந்நேரம் அவங்க அனுப்பி வைச்சிருப்பாங்க... நீங்க கையிருப்பை கணக்கில் பாருங்க.. பட்டு ஜவுளி வியாபாரம்ன்னா சும்மா இல்லை..."
"நீ எதுக்கு இருக்க...? மில்லில ஒரு பிரச்னைன்னா வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருப்பியா... பேசித் தொலைக்க வேண்டியது தானே..."
அவன் செல்போனைக் காதுக்கு கொடுத்தபடி வாசல்பக்கம் நகர ஆரம்பிக்க மேகலா கவலையானாள்...
அவளது கவலைக்கான காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்று ராதிகாவிற்கு விளங்கவில்லை...
"என்னத்தை...?"
"அவன் வாசப்பக்கம் போனா.. அப்படியே வேலை ஞாபகத்தில சாப்பிடாமப் போயிருவான்ம்மா... நாமளா பிடிச்சு வைச்சு எதையாவது வயித்தில போட்டு அனுப்பி வைச்சாத்தான் உண்டு..."
"நிஜமாகவா...?"
ராதிகாவிற்கு அவனது உயரம் தெரியும்.. இப்படி மூச்சுவிடக் கூட நேரமில்லாத வேலைப் பளுவில் மூழ்கியிருப்பவன் என்று அதுவரை தெரியாது.. ஒரு மனிதன் சாப்பிடக்கூட மறந்து விடுவானா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவளறிந்த வரையில் இரவு பகல் என்று பாராமல் சாப்பாடு தூக்கத்தை மறந்து வேலையில் மூழ்குபவர்கள் விஞ்ஞானிகள் மட்டும் தான்.. இன்று தான் ஒரு தொழிலதிபனும் அவ்வாறு இருக்கக்கூடும் என்பதை அவள் கண்கூடாகக் காண்கிறாள்...
"கூப்பிடலாமா அத்தை..."
"போன் பேசிக்கிட்டு இருக்கானே..."
"ஏன்..? போன் பேசினா என்ன..?"
"அவன் போன் பேசறப்போ நாம ஊடே பேசினா அவனுக்கு பழியா கோபம் வரும்..."
"அப்ப.. என்னதான் வழி...?"
இப்படிக் கேட்ட மருமகளை புன்சிரிப்புடன் பார்த்தாள் மேகலா...
"நீதான் வழி..." என்று அவள் கன்னத்தில் தட்டினாள்...
"நானா..."
"ம்ம்ம்.. காதலிச்சு கட்டிக்கிட்ட புதுப்பெண்டாட்டி முன்னாலே வந்து நின்னா.. எந்த மடையனாவது போனில பேசிக்கிட்டு இருப்பானா..?"
உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று சொல்லத் தோன்றியது ராதிகாவிற்கு... மற்றவர்கள் போனால் கூட அவன் போனால் போகிறதென்று போனை காதை விட்டு எடுக்கக் கூடும்.. அவள் முகத்தைப் பார்த்து விட்டால் அவ்வளவுதான்.. வைக்க நினைக்க போனைக் கூட இறுக்கிப் பிடித்தபடி பேச்சை வளர்க்க ஆரம்பித்து விடுவான்...
இதை இந்த அம்மாவிற்கு யார் புரிய வைப்பது என்றிருந்தது ராதிகாவிற்கு... இதை அவளால் வெளியில் சொல்லவும் முடியாது..
அவள் நிலைமையை உணராத மேகலா ஆதுரமாக புன்னகைத்தபடி...
"போம்மா..." என்றாள்...
அதற்கு மேலும் தயங்கி நின்றால் மேகலாவின் மனதில் சந்தேக மேகம் சூழ்ந்து விடக் கூடும் என்று தோன்றியதால் ராதிகா தயக்கத்துடன் வாசலுக்குப் போன பால முரளியைத் தேடிப் போனாள்...
மேகலா சொன்னதைப் போலவே... காதிலிருந்த செல்போனை எடுக்காமல் பேசியபடி கார்கதவைத்
திறந்து கொண்டிருந்த பாலமுரளி அவளைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்...
அவன் கையிலிருந்த போனை நோக்கி அவள் சுட்டு விரலை நீட்ட... அவன் போனை அணைத்து அவள் கையில் கொடுத்தான்...
"சீக்கிரமாய் பேசிட்டுக் கொடு... எனக்கு நேரமாகுது... ஆமாம்... உன் போன் எங்கே போச்சு...?"
இது வேறா என்றிருந்தது ராதிகாவிற்கு...
"ம்ம்... குருவி தூக்கிக்கிட்டு போயிருச்சு..." அவள் நொடித்தாள்...
பாலமுரளி சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்... மற்றவர்கள் தள்ளி நின்றாலும்.. அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட.. முகம் மாறாமல் அடிக்குரலில் சீறினான்...
"உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில ஏறவே ஏறாதா..? அறிவுங்கிறது
இருக்கா.. இல்லை.. சுத்தமாகவே காலியாகிருச்சா..? உன் கழுத்தில் தாலியைக் கட்டிட்டா.. உனக்கு நானென்ன விளையாட்டுப் பிள்ளையா..?"
"இல்லவே இல்லை.. யாரு நீங்க..?"
"அந்த நினைப்பிருந்தா இப்படி பேசிவைப்பியா..?"
"ஹலோ..."
"அடி வாங்கப் போறடி..."
"எதுக்கு பாஸ் இப்படிக் கோவிச்சுக்கறிங்க...?"
"ஒன்னு ஹலோன்னு போன் பேசுவ... இல்லைன்னா கொள்ளைக் கூட்டத் தலைவனை அடியாள் கூப்பிடற மாதிரி பாஸ்ன்னு கூப்பிட்டு வைப்ப.. உன்கிட்ட படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கேண்டி..."
"என்னத்தை சொன்னீங்க..."
"இந்த ஊரு உலகத்துக்கு முன்னாலே நான் உனக்குப் புருசன்னு..."
"தனிரூமில் நீங்க யாரு மச்சான்..? அந்நியனா..?"
அவள் சிரிக்காமல் கேட்டு வைக்க.. அவனுக்கு காத்திருந்த வேலைகளைப் பற்றிய நினைவு ஓடியே போய் விட்டது...
இப்படி எக்குத்தப்பாய் கேள்வி கேட்பவளை என்னதான் செய்யலாம் என்ற யோசனையுடன் அவளை அவன் உற்றுப்பார்க்க.. அவளோ...
"போங்க மச்சான்... என்னை இப்படி உத்து உத்துப் பார்க்காதீங்க... எனக்கு வெட்கம்.. வெட்கமா வருது..." என்று சொல்லி வைத்தாள்...
அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவள் முன்னால் சிரித்து வைக்கக்கூடாது என்ற சுதாரிப்புடன் கடினமாக முகத்தை வைத்துக் கொண்டான்...
"இப்ப உனக்கு என்னதாண்டி வேனும்..?"
"நீங்க மட்டும் அடிக்கடி இப்படிக் கேட்கலாமா..?"
"எப்படி..?"
"உனக்கென்ன வேணும்.. உனக்கென்ன வேணும்ன்னு கேட்டு வைக்கறிங்க.. எனக்கு என்ன வேணும்கிறதைச் சொன்னா உடனே கொடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பீங்களா..?"
அவள் ஒயிலாக புருவங்களை உயர்த்த.. அவனுக்கு உலகமே அழகு மயமானதாக ஆகிவிட்டதைப் போலத் தோன்றியது...
அவள் அவனுக்கு வேண்டாத பெண்டாட்டி என்ற நினைவே அவனுக்கு மறந்து போய்விட.. ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்து வைத்தான்...
"மச்சான்.. மச்சான்ங்கறியே.. நீ சென்னையில பிறந்து வளர்ந்தவளா..?" அவளைப் பார்வையில் சாப்பிட்டபடி அவன் கேட்டான்...
"ஏணாம்..? தேனூத்தில் பிறந்தவங்க மட்டும்தான் மச்சான்ங்கிற வார்த்தைக்கு உரிமைக் காரங்களா..?" அவள் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இறக்கினாள்...
"ஊஹீம்.. நாங்கள்லாம் வேற மாதிரிச் சொல்லுவோம்..."
"ஹை.. யாருகிட்ட காது குத்தறிங்க... இப்பத்தான் தோட்டக்காரரோட வொய்ப் அவரைப் பார்த்து மச்சான்னு கூப்பிட்டுச்சு..."
"நாங்கள்லாம்ன்னா.. எங்க குடும்பத்திலன்னு அர்த்தம்டி..."
"அப்படிச் சொன்னாத்தானே எனக்குப் புரியும்..?"
"அப்படிச் சொல்லு.. நீயே சரியான டியூப்லைட்.. மக்கு பிளாஸ்திரி..."
"திட்டி முடிச்சாச்சா..?"
"இன்னும் பாக்கியிருக்கு.."
"அதை நாளைக்கு திட்ட ஸ்டாக் வைச்சுக்கங்க... இப்ப உங்க குடும்பத்தில எப்படிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லுங்க..."
"அத்தான்னு அழகாக் கூப்பிடுவாங்க.. அனனைக்கு கூட கீதா இதைச் சொல்லித்தான் என்னைக் கூப்பிட்டதாய் ஞாபகம்..."
"ஹலோ..." அவள் உக்கிரமானாள்...
"திரும்பவும் போனா..?" அவன் சிரிப்பை அடக்கிக் கொள்ள படாத பாடுபட்டான்...
"அத்தான்னு கூப்பிடனும்ன்னா அதை மட்டும் சொல்லுங்க... அதை விட்டுட்டு என் தங்கையைப் பத்திப் பேசற வேலையெல்லாம் இங்கே வேணாம்..."
"உதாரணத்துக்கு சொன்னேண்டி..."
"முதல்ல மத்தவங்களுக்கு நீங்க உதாரணமாய் இருக்கறதுக்கான வழியைப் பாருங்க... உதாரணம் சொல்கிறாராம்... உதாரணம்... சாப்பிட வாங்க..."
"அதிகாரமெல்லாம் தூள் பரக்குது..."
"இந்த ஊரு உலகத்துக்கு முன்னாலே நான் உங்க பெண்டாட்டியாச்சே.. அதனால ஒழுங்காய் சாப்பிட வந்திருங்க..."
"வரலைன்னா...?"
"நீங்க எங்கே போனாலும் அங்கே வந்து அத்தனை பேர் முன்னாலேயும் உங்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விட ஆரம்பிச்சுருவேன் எப்படி வசதி...?"
'நீ சொன்னதைப் போல செய்... அதுதான் வசதி' என்று சொல்ல ஆசைப்பட்டான் முரளி.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -79
அம்மம்மா.. கேளடி தோழி...! -79
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-79.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-79.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy