அம்மம்மா.. கேளடி தோழி...! -78

78 நீ தொட்டு   விட்டு   விட்டால்.. நானும்   உன்னை   விடுவேனா... ? அப்படியே அவள் கன்னத்தில் நான்கு அப்பு.. அப்பினால் என்ன என்ற கோப...


78
நீ தொட்டு  விட்டு  விட்டால்..
நானும்  உன்னை  விடுவேனா...?

அப்படியே அவள் கன்னத்தில் நான்கு அப்பு.. அப்பினால் என்ன என்ற கோபம் அவனுக்குள் கிளர்ந்தது..
அது அவர்களின் முதலிரவு நேரம்.. அவனோ கோபத்துடன் விலகி நிற்கிறான்.. அவள் காலில் விழுந்து கதறுவாள் என்று பார்த்தால் அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் கட்டிலில் படுத்து கண்களை மூடித்தூங்க ஆரம்பித்தாள்...
"ஏய்ய்... எழுந்திருடி..." அவன் அதட்டினான்...
"எதுக்கு..?" அவள் அசையாமல் இமைகளை மட்டும் லேசாகத் திறந்து கேள்வி கேட்டாள்...
"இங்கே ஒருத்தன் கத்திக்கிட்டு நிற்கிறேன்.. நீ எனக்கென்னன்னு தூங்கப் போறியா...?"
"ஹலோ.. நானா உங்களைக் கத்தச் சொன்னேன்..?"
ராதிகா நிதனமாகக் கேட்க.. அவன் திகைத்துப் போனான்.. அவள் சொல்வது நியாயம்தான்... அவள் அவனைக் கத்தச் சொல்லவில்லை தான்...
'அதுக்காக... இவ கண்டுக்காம கட்டையைச் சாய்ப்பாளா..'
அவனுக்குள் கோபம் தலைக்கேறியது...
"நான் பார்த்தாலும் பார்த்தேன்... உனைப் போல ஒருத்தியைப் பார்த்ததே இல்லைடி..."
"இதென்னங்க வேடிக்கையாய் இருக்கு... டபிள் ஆக்டிங்கெல்லாம் சினிமாவில்தான் வரும்.. நானென்ன ரெட்டைப் பிறவியா..? என்னைப் போல இன்னொருத்தி எப்படி இருப்பா..?"
"இங்கே பாரு... நான் ஏற்கனெவே கடுப்பில் இருக்கேன்... நீ மேலே மேலே கிளப்பி விடாதே..."
"கிளப்பி விட்டாலும்..."
அவள் எரிச்சலுடன் முணுமுணுத்த விதத்தில் அவனது கோபம் பன்மடங்கு பெருகிப் பல்கிப்பரவியது...
"இந்த எகத்தாளமெல்லாம் என்னிடம் வேணாம்..."
"ஓகே.. வேணாம்..."
"என்னத்தை வேணாம்..?"
"இந்த எகத்தாளமெல்லாம் உங்ககிட்ட வேணாம்..."
"என்னடி..? சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறயா...? முதலில் எழுந்திரு..."
அவன் அதட்ட.. அவள் எழுந்து கொள்ளாமல் மோகனமாய் ஒருக்களித்துப் படுத்து அவன் முகம் பார்த்தாள்...
"பாருங்க.. எனக்குத் தூக்கம் வருது... எழுந்து நின்னா கட்டாயம் மயக்கம் போட்டு உங்க மேலேயே சரிஞ்சுருவேன்.. தேவையா..?"
மைதீட்டிய விழிகளை விரித்து.. குடை போன்ற இமைகள் படபடக்க அவள் கேள்வி கேட்ட விதத்தில்... அவனுக்குள் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன... ஆமாம்.. நீ எனக்கு தேவைதான் என்று அவனது செல்கள் கூவின... தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றபடி அவன் அவளை முறைத்துப் பார்த்தான்...
"ஏய்ய்.. நீயே எனக்குத் தேவையில்லைன்னு ஒதுக்கி வைச்சிருக்கேன்.. இதில தேவையான்னு கேள்வி வேற கேட்கறியா...?"
"ஹலோ.. நீங்கதான் என்னை ஒதுக்கி வைச்சிருக்கிறதா சொல்லிக்கிட்டிருக்கீங்க... நான் உங்களை ஒதுக்கி வைக்கலை... அப்படிச் சொல்லவும் இல்லை..."
ஒய்யாரமாக விழிகளைச் சுழற்றியவளின் கண்களில் அப்பட்டமான அழைப்பிருந்தது... ருசியான பால் முன்னாலிருக்க.. ருசிகண்ட பூனை தவித்தது... அவளின் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்ற அவசர முடிவை மனம் எடுத்து பின் அதைவிட அவசரமாய் அதை அழித்தது...
'ஊஹீம்.. இவளைக் கண்ணுக்கு முன்னாலே வைச்சிருந்தா வேலைக்கு ஆகாது.. முதவேலையா இவளை ரூம் விட்டு ரூம் கடத்தியாகனும்..'
அவள் விடும் மன்மத மலர் அம்புகளால் தைக்கப்பட்ட அவனது உள்ளம் வழி சொல்லியது..
"இதோ பார்..."
அவளுக்கு விளக்கம் சொல்லப் பார்க்கச் சொன்னவன் அதைச் சொன்னபின்னால் ஏன் அப்படிச் சொல்லித் தொலைத்தோம் என்று ஏகத்துக்கும் வருத்தப் பட்டுப் போனான்...
சும்மாவே அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சும்மா இருப்பாளா..? விழுங்கி விடுவதைப் போல அவனையே பார்க்க ஆரம்பித்தாள்...
"எதுக்குடி இப்படிப் பார்க்கிற..?" பல்லைக் கடித்தான் பாலமுரளி...
அவள் பார்வையால் அவன் படும் இம்சையை அவன்தானே அறிவான்..? அவளோ பால்வடியும் முகத்துடன் அப்பாவியாய் முகத்தை வைத்தபடி...
"நீங்கதானே உங்களைப் பார்க்கச் சொன்னீங்க..?" என்று நியாயம் கேட்டாள்...
"அடேங்கப்பா... அப்படியே புருசன் சொல்லைத் தட்டாத பத்தினி தெய்வமில்ல நீ..."
"சரியாச் சொன்னீங்க போங்க..."
"நான் சொல்றது இருக்கட்டும்.. முதல்ல நீ எழுந்திருச்சு உன் ரூமுக்கு போ..."
அந்த அறையை ஒட்டியிருந்த உடைமாற்றும் அறையைக் காட்டினான் பாலமுரளி...
"ஏன்...?" அவள் அமர்த்தலாக வினவினாள்...
"ஏன்னா..?" அவன் முறைத்தான்...
"இது நம்ம பெட்ரூம்.. அது டிரெஸ்ஸிங் ரூம்.. அங்கே போகச் சொல்லி கையைக் காட்டினா ஏன்னு கேட்காம என்ன செய்வாங்க..?"
"அப்படியா மேடம்.. அப்போ விளக்கம் சொல்லிர வேண்டியதுதான்... இது என் பெட்ரூம்.. உனக்கு இங்கே இடமில்லை..."
"அப்போச்சரி..."
அவள் உடனடியாக எழுந்து கொண்டாள்.. வாய் வளர்க்காமல் அவ்வளவு துரிதத்தில் அவனது முடிவை அவள் ஏற்றுக் கொண்டதில் அவனுக்குள் மெலிதான ஏமாற்றத்தின் நிழல் படிந்தது...
'இவ யாரு..? மோகினிப் பேயாச்சே...'
அவன் அதற்கும் அவளை மனதுக்குள் திட்டித் தீர்த்தான்...
"ஏய்ய்.. நில்லுடி..."
அவன் அதட்டினான்.. அவள் நின்றாள்...
"உன்னை எங்கே போகச் சொன்னேன்.. நீ எங்கே போற...?"
"ஹலோ.." அவள் மிதப்பாக பதில் சொல்ல ஆரம்பிக்க...
'ஹலோவா..? இதை ஒன்னைக் கண்டு பிடிச்சுத் தொலைச்சிருக்கா...' என்று அதற்கும் கடுப்பானான் பாலமுரளி...
"நீங்க வான்னா வாரதுக்கும்.. போன்னா போறதுக்கும் நானென்ன உங்க தோட்டத்தில் விளைஞ்சிருக்கிற கிள்ளுக்கீரையா..?"
"கீரையா..? நீயா...? அதைத் தினமும் சேர்த்துக்கனும்னு சொல்லி வைச்சிருக்காங்க.. உன்னையோ.. வேணவே வேணாம்ன்னு தள்ளி வைச்சிருக்கேன்.. இந்த லட்சணத்தில கிள்ளுக் கீரையான்னு நியாயம் வேற கேட்கிறயா...? நீ விசச் செடிடி.."
"அப்படியா..? அப்போ எனக்கு இந்த ரூமில என்ன வேலை..? நான் வெளியே போறேன்..."
"போயி..?"
"அத்தை ரூமில அவங்ககூட படுத்துத்-தூங்கறறேன்..."
ராதிகா நிதானமாக அணுகுண்டைத் தூக்கி வீச.. அவன் அரண்டே போனான்..
"அடியேய்... இது புருசன்.. பெண்டாட்டி விவகாரம்டி...."
"அதுக்கு...?"
"இதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள இருக்கனும்..."
"இருக்கனும்தான்.. ஆனா நாலு சுவத்துக்குள்ளே தான் எனக்கு இடமில்லேன்னு சொல்கிறிங்களே..."
"உனக்கொரு ரூமை கை காட்டினேனா இல்லையா...?"
"நீங்க கைகாட்டின ரூமுக்குள்ள போயி முடங்கிக்க நானொன்னும் உங்க வீட்டு செல்லப் பிராணியில்லை.. நீங்க தொட்டுத் தாலி கட்டின பெண்டாட்டி..."
"அதுக்கு இப்ப என்னாங்கிற...?"
அவன் மிதமிஞ்சிய எரிச்சலுடன் கேட்டான்.. அவள் மிதப்பாக அவனை பார்வையிட்டபடி பதில் சொன்னாள்...
"எனக்கு ஒரு பழக்கமிருக்கு..."
"அதையெதுக்கு என்கிட்ட வந்து சொல்ற..?"
"வேணும்னா கதவைத் திறந்துக்கிட்டுப் போயி அத்தைகிட்ட சொல்லவா..?"
அவள் அப்பாவியாய் கேள்வி கேட்க... அவன் அடங்கிப்போனான்...
"சொல்லித் தொலை..."
"நான் தங்கை.. தம்பின்னு கூடப் பிறந்தவர்களோடு கலகலப்பா இருந்து பழகினவ..."
"நானும் அக்காகூடப் பிறந்தவன்தான்...."
"யார் இல்லேன்னு சொன்னது...?"
அவள் இடக்காக கேள்வி கேட்க... அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது... இவள் மட்டும்தான் கூடப் பிறந்தவங்களின் பெருமையைப் பேசனுமா.. இவன் பேசக்கூடாதா..?
"ஏண்டி... இப்ப எதுக்காகடி உங்க வீட்டு ராமாயணத்தை இங்கே வந்து பேசற..? நான் சொல்லச் சொல்லிக் கேட்டேனா...?"
"கேட்கலைதான்.. ஆனாலும் நான் சொல்லியாகனுமே...."
"அதுதான் ஏன்...?"
"நீங்க என்னை வேற ரூமுக்கு நாடு கடத்தறிங்களே..."
"ரூம்தாண்டி கடத்தினேன்.. நாடு கடத்தலை..."
"எனக்கு ரெண்டும் ஒன்னுதான்... தனியாத் தூங்கிப் பழக்கமில்லாதவளை அந்த ரூமில் போய் படுத்துத் தூங்கச் சொல்கிறிங்களா...? இருங்க... இதுக்கொரு நியாயத்தை இப்பவே அத்தையிடம் போயி கேட்கிறேன்..."
"ஏய்ய்... அடங்குடி... என்னதாண்டி உன் பிரச்னை..?"
"நான் இங்கேதான் படுப்பேன்..."
"நான் பால்கனிக்குப் போயிருவேன்..."
"அப்போச்சரி... நான் அத்தையிடம் போயிடறேன்..."
"அடியேய்.. ஏண்டி என் உயிரைக் குறைக்கிற..?"
"எனக்கு அதெல்லாம் தெரியாது.. நான் தனியாய் படுக்க மாட்டேன்னா மாட்டேன்தான்.. ஒன்னு.. உங்க பக்கத்தில படுத்துத் தூங்கறேன்... இல்லைன்னா.. அத்தை ரூமில் போய் தூங்கறேன்..."
இப்படி வழக்கடிப்பவளை என்ன செய்வதென்று தெரியாத கொலை வெறியோடு கை பிசைந்தான் பாலமுரளி...
மகனின் திருமணத்திற்காக காத்திருந்த மேகலாவின் தவிப்பு எத்தகையது என்று அவனுக்கு மிக நன்றாகவே தெரியும்....
அவன் ஆசைப்பட்டான் என்ற ஒரே காரணத்திற்காகவே செல்ல மகளையும் பகைத்துக் கொண்டு... ராதிகாவை அவன் திருமணம் செய்து கொள்ள அவள் இசைந்தாள் என்பதையும் அவன் அறிவான்...
அவனது இன்பமான இல்லற வாழ்வில்தான் மேகலாவின் மனநிம்மதி அடங்கியிருக்கிறது என்பதை அவன் நன்றாகப் புரிந்து வைத்திருந்தான்... கூடுதலாக அவளின் இதயநோய் வேறு அவனை அச்சுறுத்தியது...
அப்படிப்பட்டவளிடம் போய் ராதிகா வழக்கு வைத்தால் என்ன ஆகும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன..?
"படுத்துத் தொலை..."
"நீங்க...?"
"இங்கேதாண்டி படுக்கறேன்.. போதுமா..? ஆனா.. இதுதான் சாக்குன்னு கையைத் தூக்கிப் போட்டேன்.. காலைத் தூக்கிப் போட்டேன்னு ஆரம்பிச்சேன்னு வைய்யி... அப்புறம் நடக்கறதே வேற..."
"ஹலோ... இங்கே யாரும் அப்படிச் செய்ய மாட்டாங்க..."
அவள் ரோசத்துடன் சொன்னதும் பாலமுரளி கட்டிலுக்கு அடியில் யாரையோ தேடுவதைப் போல பாவனை செய்தான்...
"என்ன..?" அவள் குழம்பினாள்...
"யாரும்ன்னு சொன்னியே... இங்கே நீயும் நானும் தானே இருக்கோம்.. வேற யாரும் எனக்குத் தெரியாம ஒளிஞ்சிருக்காங்களோன்னு தேடிப் பார்த்தேன்..."
"ஜோக்கு..? எனக்கு சிரிப்பே வரலை..."
"அப்பாடி.. நிம்மதியாப் போச்சு.. உன் சிரிப்பை பார்க்கிற கொடுமையில இருந்து தப்பிச்சிட்டேன்..."
"நான் உங்களைத் தொட மாட்டேன்.. ஆணா நீங்க சொன்ன ரெண்டு வேலையையும் நீங்களே செய்ய மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்..?"
அவள் வம்பிழுக்கத்தான் அவனைக் கேள்வி கேட்டாள்.. வார்த்தைகளை வளர்த்து அவனது கோபத்தீயை தூண்டி விட்டு அதில் குளிர் காயும் நோக்கத்துடன் தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள்...
அவன் நிதானமாக அவளைப் பார்த்தான்.. ஊடுருவும் அந்தப் பார்வையில் அவளது முதுகுத்தண்டு ஜில்லிட்டு.. குளிர் அவள் மனதில் பரவியது.. லேசான நடுக்கத்துடன் அவனைப் பார்த்தாள்...
"தொட மாட்டேண்டி..." அவன் கண்கள் ஜொலித்தன...
"உன்னை நிச்சயம் தொட மாட்டேன்... உன்மேல் தேவையில்லாம என் கைவிரல் கூடப் படாது... ஊருக்குத்தாண்டி நான் உனக்குப் புருசன்.. இந்த நாலு சுவத்துக்குள்ள நீ யாரோ... நான் யாரோ... ஊர் பார்க்க உன்னைத் தொட வேண்டிய சமயத்தில தொடலாம்... அது வெறும் கடமைக்குத்தான்... ஆசையாய் இந்த ரூமுக்குள்ளே நானாய் உன்னைத் தொட மாட்டேன்..."
அவள் விக்கித்து நின்றுவிட.. அத்தோடு பேச்சு வார்த்தை முடிந்தது என்பதைப் போல அவளுக்கு முதுகு காட்டி அவன் படுத்துவிட்டான்...
அங்கே நிற்க முடியாமல் துடித்துப் போனாள் ராதிகா... நெருப்பாய் அவனது விலகல் அவளைத் தகித்தது... காலுக்கு கீழ் சுடுகங்குகள் இருப்பதைப் போலக் கனன்றது.. அந்த அறையை விட்டு ஓடிவிடத் தவித்தாள்...
'பொறு ராதிகா..' அவள் மனம் அதட்டியது...
'ஓடிப்போனால் எல்லாம் முடிந்து விடுமா..? எங்கே ஓடுவாய்..? எதிலிருந்து உன்னால் தப்பிக்க முடியும்..? இன்று விலகி ஓடினால் இந்த விலகலே நிரந்தரமாகி விடாதா..? இது போர் களத்தில் நீ பின் வாங்கக் கூடாது.. ஓடாதே.. அவனை அவன் போக்கிலேயே எதிர்கொள்... அவன் கேட்ட... அவனுடைய பத்தினிப் பெண்ணாக நீ வாழ்ந்து காட்டு... இதுதானே உன் வாழ்வின் ஆரம்பம்..?.. இந்த ஒரு நாளோடு உன் வாழ்நாளெல்லாம் முடிந்து விட்டதா..? வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பது இல்லை... வாழ்ந்து காட்டு.. இந்த நாள் உனக்கு வசப்படாமல் போகலாம்.. வரும் நாளில் ஏதாவது ஒருநாள் உனக்கான நாளாக இல்லாமல் போய் விடுமா..? அந்தநாள் வரும் வரைக்கும் நீ இருந்து பிழைக்க வேண்டாமா..?'
கட்டிலின் அந்த ஓரமாக அவன் படுத்திருக்க.. இந்த ஓரத்தில் சுருண்டு படுத்தாள் ராதிகா... இமை மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது... அதைத் துடைக்க முடியாமல் அவளும்.. அவளது கண்ணீரை அறியாமல் அவனும்... உறக்கத்தை தொலைத்து அந்த இரவைக் கழித்தனர்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -78
அம்மம்மா.. கேளடி தோழி...! -78
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-78.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-78.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy