அம்மம்மா.. கேளடி தோழி...! -77

77 அக்கினிக்குஞ்சை மனதில் சுமந்தபடி... அக்கினியை வலம்வந்தாள் அந்தபருவக்கொடி.. "மாங்கல்யம் தந்துனானே..." அய்யர் திருமண...


77
அக்கினிக்குஞ்சை மனதில் சுமந்தபடி...
அக்கினியை வலம்வந்தாள் அந்தபருவக்கொடி..

"மாங்கல்யம் தந்துனானே..."
அய்யர் திருமண மந்திரங்களின் முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட...
"கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..." என்று யாரோ குரல் கொடுத்தார்கள்...
கெட்டிமேளம் முழங்க... நாதஸ்வரம் ஒலிக்க... ராதிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் பாலமுரளி...
'இதுக்காக எத்தனை போராட்டம்...!'
இருவர் நெஞ்சிலும் அந்த எண்ணம் எழுந்து நின்றது...
"தம்பதி சமேதராய் அக்கினியை சுத்தி வாங்கோ..." அய்யர் ஆணை பிறப்பித்தார்..
வேறு வழியின்றி அவள் கையைப் பிடித்து அக்கினியை வலம் வந்தான் பாலமுரளி...
அவனது ஸ்பரிசத்தை அறிந்தவள் ராதிகா.. அவனது தொடுகையை பரிபூரணமாக உணர்ந்தவள்...
இயல்பாக அவன் கைதொட்டாலே அதில் ஒரு இறுக்கமிருக்கும்.. வேகம் தெரியும்...
அன்று தொட்ட அவன் கை... அவையிரண்டையும் அவளுக்கு உணர்த்தவில்லை... மாறாக ஒர்விதமான விலகலை உணர்த்தியது...
ஒருகாலத்தில் அவளை பலவந்தமாக தொட்டவன் தான் அவன்... இன்று அவள் அவனின் மனைவி.. உரிமையுடன் தொடும் முதல் தொடுகையிலேயே அவனது விலகலை மிகத்தெளிவாக அவளுக்கு உணர்த்துகிறான்...
அந்த விலகல் அவளுக்கு காத்திருக்கும் வாழ்க்கை எத்தகையதாக இருக்கப் போகிறது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியது...
ராதிகாவின் மனம் வலித்தது... அக்கினியை வலம் வந்து முடிந்தவுடன் அவசரமாக விலகிய அவனது கைகளைக் கண்டு அவள் துயரம் கொண்டாள்...
"பெரியவங்களின் பாதம் பணியுங்கோ..."
அடுத்த கட்டளை அய்யரிடமிருந்து வந்தது.. மேகலாவின் பாதம் பணிந்து எழுந்தார்கள்.. மேகலா வெளிப்படையாக கண்ணீர் விட்டபடி மருமகளை அன்புடன் அணைத்து அவள் நெற்றியில் முத்தம் பதித்தாள்...
'மாமியாராலே என் மகளுக்கு ஒரு பிரச்னையும் வராது...'
கடுமை முகமூடியின் பின் ஒளிந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியின் மனம் ஆறுதலடைந்தது...
கிருஷ்ணமூர்த்தி... ராஜேஸ்வரியின் பாதம் பணிந்து எழுந்தபோது... கிருஷ்ணமூர்த்தி கண்கலங்கினார்.. வெளிப்படையாக கண்ணீரைக் காட்ட முடியாத ராஜேஸ்வரி இமைகளைக் கொட்டி கண்ணீரை சரிப்படுத்திக் கொண்டாள்...
மணமக்களுடன் தேனூத்து வீட்டிற்கு அவர்கள் போனபோது அந்த வீட்டின் பிரம்மாண்டத்தைக் கண்டு வாய் பிளந்தாள் கீதா...
"ம்மா.. சினிமாவில கூட இப்படிப்பட்ட வீட்டை நான் பார்த்ததே இல்லைம்மா.. அடேங்கப்பா.. அரண்மனை தோத்துப் போயிரும் போல இருக்கே..."
ராஜேஸ்வரிக்கும் அதே எண்ணம்தான் என்றாலும் வாய் விட்டுத் தன் வியப்பை அவள் வெளிப்படுத்த வில்லை... அப்படி வெளிப்படுத்தினால் அவள் எப்படி ராஜேஸ்வரி ஆவாள்...?
"போதும்.. போதும்.." என்று மகளை அதட்டினாள் அவள்...
"எதுக்கு அவளை அடக்கறே ராஜி..? மாப்பிள்ளை வீட்டைப் பார்க்க நீ வரமாட்டேன்னு சொல்லிட்ட... உன் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து நானும் வந்து பார்க்கலை... இப்பப் பார்த்தியா.. ராதிகா.. எப்பேற்பட்ட இடத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கான்னு.. இதுக்கு அவ போன பிறவியிலே புண்ணியம் பண்ணியிருக்கனும்டி..."
கிருஷ்ணமூர்த்தி இளைய மகளுக்கு ஆதரவாகப் பேசுவதைப் போல... தன் மனதிலிருந்ததை சொன்னார்...
ஒரு முறைப்பை மட்டுமே வெளிப் படுத்திய ராஜேஸ்வரி... அலட்சியமாக வீட்டைப் பார்வையிடுவதைப் போல முகத்தை வைத்தபடி.. வீட்டைச் சுற்றித் தன் பார்வையை படற விட்டாள்...
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்ட செல்வத்தின் செழுமை அவளுக்கு பிரமிப்பைக் கொடுத்தது...
'அந்த மட்டிலும் இவங்க அந்த சங்கர் குடும்பத்துக்கு சளைச்சவங்க இல்ல.. அவங்களைவிட பலமடங்கு பெரிய பணக்காரங்களாத்தான் இருக்காங்க...'
பெரிய மகளின் தேர்வு சோடை போனதல்ல என்பதில் அந்த தாய் மனம் நிம்மதி கொண்டதை யாரறிவார்...?
"பூஜை ரூமில விளக்கேத்தும்மா..."
மேகலா பரிவுடன் சொல்ல... ராதிகா பூஜையறையிலிருந்த விளக்கை ஏற்றி வைத்து.. கரம் குவித்து தெய்வங்களை வணங்கினாள்...
அந்த நொடியிலிருந்து அந்த வீட்டின் ஒரு அங்கமாக தான் மாறிப் போய் விட்டதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
'இனி இதுதான் என் வீடு...'
பிறப்பிடம் வேறாக... இருப்பிடம் கணவனின் வீடாக அமைய நேரிடும் இந்தியப் பெண்களின் வாழ்க்கைதான் எப்படிப் பட்ட தாத்பர்யங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது...!
நேற்று வரை அவள் வீடு என்பது சென்னையில் இருந்தது.. இன்று முதல் அவள் வீடு என்பது பாலமுரளியின் வீடாக ஆகிப் போனது...
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.. இடைவிடாத திருமண வேலைகளாலும்... முதல் நாளிரவு விழா நாளின் கொண்டாட்டத்தில் சரியாக தூங்க முடியாததினாலும்.. அனைவரின் கண்களும் சொக்கிக் கொண்டிருந்தன...
உணவு நேரம் முடிந்தவுடன் எல்லோருமே தூங்கச் சென்றுவிட... ராஜேஸ்வரி கீதாவைப் பார்த்தாள்...
"அக்காவை ரெடி பண்ணனுமேம்மா..."
கீதா... ராதிகாவின் முதலிரவை நாசுக்காக நினைவு படுத்திய விதத்தில் ராதிகாவின் முகம் சிவந்தது...
"ம்ம்ம்..." என்று முணுமுணுத்தாள் ராஜேஸ்வரி...
'இந்த பாலசரஸ்வதி கொஞ்ச நேரம் இருந்து இந்த விசேசத்துக்கு ராதிகாவை ரெடி பண்ணினால் தான் என்ன..?'
மகளின் நாத்தனாரை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள் அவள்...
பாலசரஸ்வதி இருக்க வேண்டிய அவசியமின்றி.. மேகலாவின் உறவுக்காரப் பெண்கள் ராதிகாவை சூழ்ந்திருந்தார்கள்...
'எதற்காக இத்தனை மெனக்கெட்டு அலங்காரம் பண்றாங்க..?' ராதிகா மனம் கசந்தாள்...
எப்படியும் அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கப்போதுதில்லை... அப்படியிருக்கையில் யார் பார்க்க இந்த அலங்காரம்...?
இதை மற்றவர்களிடம் அவளால் சொல்ல முடியுமா..?
"தூள் கிளப்பு..."
அறைவாசல்வரை கூடவந்த கீதா.. தமக்கையின் காதில் கிசுகிசுத்தாள்..
'அடிப்போடி.. நீ வேற...'
அலுப்புடன் நினைத்தபடி அறைக்குள் பிரவேசித்தாள் ராதிகா.. அவளது முதுகிற்குப் பின்னாலிருந்த கதவு மூடிக் கொண்டது... அறைக்கதவை மூடி வெளியே தாழிட்ட பெண்களின் சிரிப்புச் சத்தம் அவள் காதுகளில் கேட்டது...
அறையெங்கும் மலர்களின் நறுமணத்தோடு கூடிய ஒர்விதமான நறுமணம் பரவியிருந்தது... பெரிய தேக்கு மரக் கட்டிலைச் சுற்றி மலர்ச்சரங்கள் தொங்க விடப் பட்டிருந்தன... அருகிலிருந்த டீப்பாயின் மேல் இனிப்பு வகைகளும்... பழ வகைகளும் குவிக்கப் பட்டிருந்தன.. அருகிலிருந்த செம்பு நிறையப் பாலிருந்தது...
'இதெல்லாம் எதுக்கு..?'
அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.. முதலிரவு அறைக்குள் எதற்காக இத்தனைப் பலகார வகைகளை அடுக்கி வைக்கிறார்கள் என்பதற்கான காரணம் அவளுக்கு விளங்கவில்லை...
'ஒருவேளை கீதாவுக்கு இது எதற்குன்னு தெரிஞ்சிருக்குமோ...'
தெரியாவிட்டாலும் யோசித்து.. கட்டாயம் இதற்கான விளக்கத்தை அவள் சொல்லி விடுவாள் என்ற நினைவில் லேசான புன்னகையொன்று அவள் இதழ்களில் அரும்பியது...
"எதுக்குடி சிரிக்கிற...?"
காட்டமான கேள்வி காதில் விழுந்த பின்னால் தான்.. அறைக்குள் நின்றிருந்தவனைப் பார்த்தாள் ராதிகா...
சும்மாவே அவள் மனதை சுண்டியிழுப்பதைப் போல கம்பீரமாக இருந்து வைப்பவன்.. அன்று பட்டுவேட்டி சட்டையில் அதிகமான கம்பீரத்துடன் இருந்தான்...
கைகளை முன்னால் காட்டி.. ஒற்றைக் காலை மடித்து சுவரில் பதித்து சாய்ந்து நின்றிருந்தவனின் தோற்றத்தில் மயங்கிப் போனவளின் மனம் அலை பாய்ந்தது... அவளது மயக்கத்தை அவள் விழி உணர்த்த அவன் முகம் கடுத்துப் போனான்...
இப்படியொரு எதிர்பார்ப்பை அவள் விழிகள் இதற்கு முன்னால் உணர்த்தியதே இல்லை...
இதை... இதை.. இதைத்தான் அவன்.. அவளிடமிருந்து எதிர் பார்த்தான்... அவள் கண்கள் அவனைத் தேடியலைய வேண்டும்... அந்தத் தேடுதலை அவளது விழிகள் பிரதிபலிக்க வேண்டும்...
  'எங்கே  நானென்று..
             தேடட்டும் என்னை...
      சிந்தாத முத்தங்கள் சிந்த...'
அவன் மனதில் ஓடிய பாடல் வரிகளில் அவன் உடல் சூடானது...
இதோ.. அவன் நினைத்தபடி அவனுக்கான தேடலை விழிகளில் பிரதிபலித்தபடி அவள்.. அவன் கண் முன்னால் நிற்கிறாள்...
ஆனால்.. அவனால்தான் அதைக் கொண்டாடி அனுபவிக்க முடியவில்லை.. அவன் நிகழ்காலத்தின் சிலிர்ப்பை மறந்து கடந்த காலத்தின் கசடுகளில் தேங்கி நின்றான்..
'ஏன் தேடமாட்டா...' அவன் மனம் கசந்தது...
'என் கையால தாலி வாங்கிக்கிட்டா... இனி என்னைத் தேடித்தானே ஆகனும்... புருசன் நான்தானே.. இதுவே இவ கழுத்தில் நான் மூணு முடிச்சுப் போடாம இருந்தா.. என்னை இவ இப்படித் தேடியிருப்பாளா..?' முகம் கருக்க அவளை உறுத்துப் பார்த்தான் பாலமுரளி..
அவனது முகமாறுதலில் அவள் முகமும் மாறிப் போக.. அதையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
'பாவி.. ஒரு பேச்சைத் தாங்கமாட்டா.. ஒரு முறைப்பைத் தாங்க மாட்டா... இப்படியிருந்துதானே என்னைப் பித்தாக்கி ஆட்டிவைச்சா... இன்னைக்கு இப்படிப் பார்க்கிறாளே... இதுக்கு முன்னாலே ஒரு நாள் ஒரு பொழுதாவது என்னை இவ இப்படிப் பார்த்திருப்பாளா...? '
அவன் மனம் அவளைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தவளாக தலை கவிழ்ந்தாள் ராதிகா...
"எதுக்குச் சிரிக்கிறன்னு கேட்டேன்.. உனக்கு என் பிழைப்பைப் பார்த்தா சிரிப்பாய் இருக்கா..?" அவன் சிடுசிடுத்தான்...
'இவன் பிழைப்புக்கென்ன குறை...'
அவனது பிரம்மாண்டமான உயரத்தின் அளவைத் தெரிந்து வைத்திருந்த ராதிகா மனம் குமைந்தாள்...
"பேசுடி.. அன்னைக்கு அவன்கிட்ட மட்டும் வாய்கிழியப் பேசின..."
'என்னத்தைப் பேசினேன்...?'
முதலிரவில் இப்படியொரு முள்சாட்டையோடு எந்தக் கணவனாவது புதுமனைவியை எதிர் கொள்வானா என்ற நினைவில் ராதிகாவிற்குள் எரிச்சல் மண்டியது..
"நீயென்ன ஊமையா...?"
அவன் நிறுத்துவதாக இல்லை என்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.. அவளது பார்வையில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன...
"இல்லை.. நான் ஊமையில்லை.. எனக்குப் பேசத் தெரியும்.. அது உங்களுக்கும் தெரியும்..."
"அப்புறம் எதுக்காக வாய் மூடிநிற்கிறவ...?"
"ஏன் பேசனும்..? எதுக்காகப் பேசனும்..? நீங்க பேசுன்னா பேசனும்.. பேசாதேன்னா வாயை மூடிக்கனுமா..? நானென்ன உங்க அடிமையா..?"
சில நாள்களாக சிதைந்திருந்த அவளது மன நிம்மதி சரியாகி விட்டதில் அவளும் பழைய ராதிகாவாக மாறிப் பேச ஆரம்பித்து விட்டாள்..
அவனது புருவங்கள் மெச்சுதலாக உயர்ந்து இறங்கின...
"அடேங்கப்பா.. சவுண்டெல்லாம் பலமாயிருக்கு.. என்ன..? கழுத்தில் மூணு முடிச்சு விழுந்துட்ட தெனாவெட்டா..?"
"ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?"
"பார்த்துடி.. உன்னை அடக்க குலதிலகம்ன்னு என் அம்மா நம்பிக்கிட்டு இருக்காங்க.. கொஞ்சம் அடக்கியே வாசி..."
"டிரை பண்றேன்..."
"எதுக்கு சிரிச்சே...?"
"எதுக்கோ..."
"திமிரா..?"
"ஆமாம்.. நீங்க போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த திமிர்..."
"வேணாம்டி..."
"எது வேணாம்..? நான்தானே..? இருந்துட்டுப் போங்க... எனக்கென்ன போச்சு..? இனி நான்தான் உங்க வொய்ப்.. எனக்கு இது போதும்..."
அவனைக் கண்டுகொள்ளாமல் கட்டிலில் சரிந்தாள் ராதிகா...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -77
அம்மம்மா.. கேளடி தோழி...! -77
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-77.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-77.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy