அழகான ராட்சசியே -99

99 மர்மத்திலே மர்மம் வைத்து.. மர்மமாக எனைப் பிரிந்த.. அழகான ராட்சசி நீ.... பெங்களூரின் பூங்காக்களுக்கே உரிய அத்தனை அழகையும் தன்...


99
மர்மத்திலே மர்மம் வைத்து..
மர்மமாக எனைப் பிரிந்த..
அழகான ராட்சசி நீ....

பெங்களூரின் பூங்காக்களுக்கே உரிய அத்தனை அழகையும் தன்னகத்தே கொண்டிருந்த அந்த அழகான பூங்காவின் மலர்செடியோரமிருந்த சாய்வு பெஞ்சில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.. முகத்தை கைகளால் பொத்திய வண்ணம் தன் துக்கத்தை அடக்க முயன்று கொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்றான் நரேந்திரன்..
உள்ளுணர்வின் உந்துதலில் கை விலக்கி நிமிர்ந்து பார்த்தவள்..
"அண்ணா.." என்று எழுந்து நின்றாள்..
"உட்கார்.." பக்கத்தில் உட்கார்ந்தான் நரேந்திரன்..
"ஐ ஆம் ஸாரி.. நீங்க அத்தனை சொல்லியும் உங்களைக் கால் பண்ணி வரவைச்சிட்டேன்.."
"இட்ஸ் ஆல்ரைட்.. என்ன விசயம்ங்கிறதைச் சொல்லு.."
"எனக்கு வேறு வழியில்லைண்ணா.. நீங்க மட்டும் தான் என்னைக் காப்பாத்த முடியும்.." அர்ச்சனா கேவினாள்..
நரேந்திரனுக்கு இரக்கமாக இருந்தது.. அகல்யாவைப் போன்ற ஒருத்தியின் மகளாக அவள் பிறந்து விட்டதால் அவளுக்கு உதவி செய்யக் கூட அவன் யோசனை செய்கிறான்..
நரேந்திரனின் மனதில் தம்பி, தங்கையின் மீதான பாசம் இருக்கிறது என்பதை மட்டும் அகல்யா அறிந்து விட்டால்.. அதையே பகடைக்காயாக பயன்படுத்தி மீண்டும் புதை சேற்றில் அவனை இழுத்து விட்டு விடுவாள்..
"லுக் அர்ச்சனா.. உனக்கும் சரி.. அருணுக்கும் சரி.. செய்ய வேண்டிய எல்லாத்தையும் அளவுக்கு அதிகமாகவே செய்து உங்களை ஷேஃப் பண்ணிட்டுத்தான் நான் விலகிப் போனேன்.. எனக்கும் குடும்பம் இருக்கிறது.. இத்தனை நாள்களாக நான் அதை தொலைத்து நின்றது போதும்.. இனியும் அது நடக்கக் கூடாது.. அதற்கு உன் அம்மாவிடமிருந்து நான் தள்ளி நிற்பதுதான் சரியான வழியாக இருக்கும்.. நீ உன்னுடைய பிரச்னைகளை அருண்குமாரிடம் சொல்லி சால்வ் பண்ணிக்கப் பழகிக்கனும்.." நரேந்திரனின் கண்டிப்பில்..
"அண்ணா.." என்று விக்கித்துப் போனாள் அர்ச்சனா..
"யாரோ போல பேசுகிறீங்களேண்ணா.."
"யாரோ போல என் வொய்ப் என்னை விட்டுப் பிரிந்து போனாம்மா.. அதுக்கு யார் காரணம்..? நீ அதையும் நினைத்துப் பார்க்கனும்.. உன் அண்ணன் ஒன்றும் கொடுமைக்காரனில்லை.."
"எனக்குத் தெரியாதா அண்ணா..? நீங்க சொல்லனுமா..? இப்ப வந்திருக்கிற பிராப்ளத்தை சால்வ் பண்ண அருண் அண்ணாவால் முடியாது அண்ணா.."
"ஏன்..?"
"அம்மா பாய்சன் சாப்பிட்டுருவேன்னு பயமுறுத்தறாங்க.."
"ஓ.."
சாப்பிட்டால் சாப்பிடட்டுமே என்ற அலட்சியத்துடன் விட்டேற்றியாகச் சொன்னான் நரேந்திரன்.. அர்ச்சனாவின் மனம் புண்ணானது.. அவனைப்போல அவளால் நினைக்க முடியாது.. எப்படிப்பட்ட குணம் படைத்தவளாக இருந்தாலும் அகல்யா அர்ச்சனாவைப் பெற்ற தாய்..!
"என்ன பிராப்ளம்ன்னு கேட்க மாட்டிங்களா..?" ஏக்கத்துடன் கேட்டாள் அர்ச்சனா..
அவனது சிறகுக்கடியில் புகுந்து கொள்ள முயற்சிக்கும் சேய் பறவையின் ஏக்கமாக அது இருந்ததில் நரேந்திரன் மனம் நெகிழ்ந்தான்.. அவளது தலையை கோதிக் கொடுத்தான்..
"நான் வந்தவுடனே கேட்டுட்டேன்.. நீதான் இன்னும் சொல்லலை.." இதமாக சொன்னான்..
"அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க.."
"நல்ல விசயம்தானே.. உனக்கும் கல்யாணவயது வந்திருச்சில்ல.."
"எது நல்ல விசயம் அண்ணா..? அந்த ராஸ்கலைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்கிறாங்களே.. அதுவா நல்ல விசயம்..? அவனைப் பத்தி உங்களுக்கே தெரியுமே அண்ணா.. நல்லவன்போல் வேசம் போடுவான்.. சரியான பொறுக்கி.."
"யாரைச் சொல்கிற..?"
"அவன்தான் கோபால்.."
நரேந்திரன் பல்லைக் கடித்தான்.. அர்ச்சனா சொன்ன அந்த அயோக்கியன் பழி பாவத்திற்கு அஞ்சாதவன்.. ஆனால் பணக்காரன்.. அகல்யாவுக்கு அது போதுமே..
"அம்மாவிடம் போராடினா பணக்காரன்னா நாலு நல்ல பழக்கமும் இருக்கும்.. நாலு கெட்ட பழக்கமும் இருக்கும்ன்னு சொல்கிறாங்க.. என் பேச்சை கேர் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க.."
"அருணிடம் சொன்னயா..?"
"அவன் சண்டை போட்டான்.. உடனே பாய்சன் பாட்டிலைத் தூக்கிக் கையில் வைத்துக்கிட்டாங்க.. என்னை ஏன்னு கேள்வி கேட்க நரேந்திரன் ஒருத்தனுக்குத் தான் உரிமையும், தகுதியும் இருக்கு.. உனக்கு என்னடா இருக்கு..? அப்படின்னு கேட்கிறாங்கண்ணே..."
நரேந்திரனுக்கு அகல்யாவின் திட்டம் என்னவென்று விளங்கிவிட்டது.. கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு அர்ச்சனாவைத் திருமணம் செய்து கொடுக்க முயன்றால்.. அவள் மறுப்பாள்.. ஏனென்று கேட்க நரேந்திரன் ஒருவனால்தான் முடியும் என்று வந்தால் நரேந்திரனிடம் உதவி கேட்டு ஓடுவாள்.. நரேந்திரனும் தங்கையின் மேல் உள்ள பாசத்தில் தலையிடுவான்.. அந்தச் சாக்கில்..
"உன் தங்கையாச்சு.. நீயாச்சு.. இவ நீ வளர்த்த பொண்ணு.. எங்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்னு முடிவெடுக்கிற உரிமை உனக்குத்தான் இருக்குப்பா..இந்த வீட்டுக்கு தலைமகன் நீ.. இந்தக் குடும்பத்துக்கு குடும்பத் தலைவன் நீ.. உன்னை எதிர்த்து இங்கே யாரும் வாயைத் திறக்க மாட்டோம்.." என்று உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் யுக்தி இது..
நரேந்திரன் அலுப்பாக உணர்ந்தான்.. பிறந்தது முதல் அருண்குமாரோடும், அர்ச்சனாவோடும் வளர்ந்திருந்தால் அவன் மனதில் உறுத்தலும், தவிர்க்க முடியாத பாசமும் ஏற்பட்டிருக்குமோ என்னவோ..
அப்படியில்லாமல்.. அர்ச்சனாவை பதினாறு வயதுப் பெண்ணாகவும், அருண்குமாரை இருபது வயது இளைஞனாகவும் சந்திக்க நேர்ந்ததில் நரேந்திரனின் மனதில் பெரிதான ஒட்டுதல் எதுவுமில்லை..
அவர்கள் இருவரும்.. அவனுடைய தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதினால்.. சில பொறுப்புக்களை எடுத்துக் கொண்டான்.. அந்தக் கொடுமைக்குத்தான் அகல்யா செய்யக்கூடாத வேலைகள் அனைத்தையும் செய்து வைத்து விட்டாளே..
"நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறே அர்ச்சனா..?" எரிச்சலுடன் கேட்டான்..
"அண்ணா.." அர்ச்சனா திகைத்துப் போனாள்..
செய்தியைக் கேள்விப்பட்டதும் அகல்யாவை என்னவென்று கேட்கக் கிளம்பாமல் அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள் என்று கேட்டு வைக்கும் இந்த நரேந்திரன் புதியவனாக அவள் கண்களுக்குத் தெரிந்தான்..
"உன் வாழ்க்கையில நீ போராடக் கற்றுக்கனும் அர்ச்சனா.. உனக்குப் பிடிக்காத கல்யாணம்ன்னா துணிஞ்சு எதிர்த்து நில்லு.."
"அம்மா பாய்சன் பாட்டிலைத் தூக்கறாங்களே.."
"நீயும் ஒன்னைத் தூக்கு.. வா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து செத்துப் போகலாம்ன்னு சொல்லு.. அருண் வந்தா அவனையும் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டு.. ரெண்டு பேர்.. மூன்று பேரா மாறிருங்க.."
"அண்ணா..."
"உங்க அம்மாவாவது... சாகிறதாவது.. அதை மத்தவங்கதான் செய்வாங்க.. உங்க அம்மா அந்த நிலைக்கு அவங்களைத் துரத்தறவங்க.. அவங்களுக்கு வாழ்க்கை மேலே பற்றுதல் ஜாஸ்தி.. அவ்வளவு சீக்கிரமா சாக மாட்டாங்க.."
அர்ச்சனாவிற்கும் அது தெரியும்தான் என்றாலும், நிதரிசனமான அந்த உண்மையை முகத்தில் அறைந்ததைப் போல நரேந்திரன் சொன்னதில் அவள் மனதுக்கு துயரமாக இருந்தது.. அதை உணர்ந்தவனைப் போல அவள் விழிகளுக்குள் பார்த்தபடி வெகு நிதானமாக பேசினான் நரேந்திரன்..
"உன் அம்மாவோட குணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் நீ இந்த அளவுக்கு அவங்களை நேசிக்கறயே.. என் அம்மா அப்படியில்லை.. அவங்க கருணையே வடிவானவுங்க.. மத்தவங்களுக்கு கனவிலேயும் தீங்கு நினைக்காதவங்க.. அந்த அம்மாவோட மகனான எனக்கு என் அம்மாவின் மேலே எந்த அளவுக்கு பாசமிருக்கும்..?"
"அண்ணா.."
அதுவரை நளினியைப் பற்றி நினைத்தறியாத அர்ச்சனா தடுமாறிப் போனாள்.. நரேந்திரன் தொடர்ந்தான்..
"உன் அம்மா வேறு.. என் அம்மா வேறு.. இதை முதலில் உன் மனதில் பதிய வைத்துக் கொள் அர்ச்சனா.. என் அப்பா.. என் அம்மா இறந்த மறுமாதமே உன் அம்மாவை மேரேஜ் பண்ணிக்கிட்டார்.. அந்த இன்விடேசனை மகளைச் சாகக் கொடுத்திருந்த வயதான மாமனாருக்கு குரூரமா அனுப்பி வைச்சார்.. இதையும் நீ தெரிந்துக்க.."
"அண்ணா.."
"நம்ம அப்பா அனாதை ஆசிரமத்திலே வளர்ந்தவர்.. அவருக்கு கிடைத்திருந்த ஜி.எம். வேலை... என் அம்மாவின் கணவர் என்ற ஒன்றிற்காக மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.. அந்தச் சம்பளத்திலதான் அவர்.. உன் அம்மாவுக்கும்.. அவங்க வயிற்றில் பிறந்த உங்களுக்கும் செலவு செய்தார்.. இதையும் உன் மனதில் பதிய வை.."
"அண்ணா..."
"உன் அம்மாவோட கோடிஸ்வர வாழ்க்கைக்காக அப்பா எத்தனை கோடி கடன் பட்டிருந்தார்ன்னு உனக்குத் தெரியுமா..? அப்படிக் கடன் வாங்கி குடும்பம் நடத்திய ஹஸ்பெண்டை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு.. அவர் எனக்குத் தகப்பன்னு என் அட்ரஸை ஹாஸ்பிடலில் கொடுத்து என்பக்கம் கைகாட்டி விட்டு உன் அம்மா கையைக் கழுவிட்டுப் போயிட்டாங்க.. இதை மறந்திருந்தா நினைவு படுத்திக்க.."
"அண்ணா.."
"எப்ப என் அம்மாவோட இடத்திலே இன்னொரு லேடியை அவர் கொண்டு வந்தாரோ அப்போதே அவருக்கும்.. எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லைங் கிறதையும் நீ மனதில் வைத்துக்க..."
"அண்ணா.."
"என்னிடமிருந்த அத்தனை சொத்தும் பணமும்.. என் அம்மாவின் மூலமா அவங்க மகனான எனக்கு வந்தவை.. அந்தப் பணத்திலே என் அம்மாவின் 'சககிழத்தி' வாங்கின கடன்களை நான் அடைத்தேன்.. அந்த 'சககிழத்தி'யின் பிள்ளைகளை படிக்க வைத்தேன்.. அவங்க வாழ வழிசெய்தேன்னா.. நான் எந்த அளவுக்கு துர்பாக்கிய சாலிங்கிறதையும் நீ நினைத்துப் பாரு.."
"போதும் அண்ணா.."
அர்ச்சனா அழுது விட்டாள்.. நரேந்திரன் போதாது என்ற பாவனையில் தலையை அசைத்தான்..
"இல்லை.. இன்னும் நான் பேச வேண்டியிருக்கு.. நீயும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கனும் அர்ச்சனா.. நீ சின்னக்குழந்தையில்லை.. எப்படி உங்களைப் பத்தி நான் நினைத்துப் பார்க்கிறேனோ.. அப்படி என்னைப் பத்தியும் நீங்க நினைத்துப் பார்க்கனும்.."
"எதை அண்ணா..?"
"உன் பெரிய அண்ணனோட அம்மாவைப் பத்தி நினைச்சுப் பார்க்கனும்.. அவங்களோட வயதான பேரண்ட்ஸைப் பத்தி நினைத்துப் பார்க்கனும்.. என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்னை விட்டால் யாருமில்லை.. உங்களுக்கு அப்படியில்லை.. உனக்கு அருண்.. அருணுக்கு நீ.. உங்க ரெண்டு பேருக்கும் உங்க அம்மான்னு ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கீங்க.. என் தாத்தாவும் பாட்டியும்.. என் அம்மா இடத்திலே வாழ வந்த உன்னோட அம்மாவையும்.. உங்களையும் ஏற்றுக்க மாட்டாங்க.. என் அம்மாவின் ஆத்மாவும் அதை ஏத்துக்காது.. புரிகிறதா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டான் நரேந்திரன்.. புரிகிறது என்ற பாவனையில் தலையை அசைத்தாள் அர்ச்சனா.. அவளுக்கு புரியத்தான் செய்தது.. அதுநாள்வரை நரேந்திரனின் பக்கத்திலிருக்கும் உறவுகளைப் பற்றி நினைத்து அறியாதவள் முதல் முறையாக அதை நினைத்துப் பார்த்தாள்..
'எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறேன்..' அவளுக்கே என்னவோ போல ஆகிவிட்டது..
மனிதரின் மறுபக்கம் என்பது இதுதானோ..!
"உங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே வாழ வசதி செய்து கொடுத்திருக்கிறேன் அர்ச்சனா.. அப்பா கேட்டுக்கிட்டதை விட அதிகமாவே செய்திருக்கிறேன்.. அருண் பெயரிலே கம்பெனியை எழுதிக் கொடுப்பேன்னு அவனே நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.. நான் அதைச் செய்தேன்.. அந்த வீட்டையும் அவன் பெயருக்கே மாற்றிக் கொடுத்திருக்கேன்.. உன் பெயரில் சென்னையில் வீடு.. வைரநகைகள்.. பேங்கில் பேலன்ஸீன்னு குறைவில்லாம செய்து வைத்திருக்கிறேன்.. இத்தனையும் செய்து கொடுத்தவனை விலக விடாம திரும்பவும் உங்க குடும்பத்துக்குள்ளே இழுக்க நினைப்பது நியாயமில்லை.."
தெளிவாக சொல்லி விட்டான் நரேந்திரன்.. அர்ச்சனாவின் கண்கள் கலங்கின.. அவள் கண்முன்னால் இருந்த மாயை விலகியதைப் போல அவள் உணர்ந்தாள்..
"அப்படின்னா.. நீங்க வேற குடும்பம்.. நாங்க வேற குடும்பமாண்ணா..?" தாள மாட்டாமல் கேட்டுவிட்டாள்..
"நிச்சயமா அப்படித்தான்ம்மா.." மென்மையாக எடுத்துச் சொன்னான் நரேந்திரன்..
"உன் அம்மா வேறு.. என் அம்மா வேறுங்கிறப்ப.. நம்ம இரண்டு குடும்பமும் வேறுவேறுதான்.. நம்மை இணைக்கும் பாலமா அப்பா என்றைக்குமே இருந்ததில்லை.. அவரால் இருக்கவும் முடியாது.. அவர் குற்றவாளி.. என் அம்மாவின் மனதை நோகடித்து சாகடித்தவர்.. அவருக்கு மன்னிப்பே கிடையாது.. என் முகத்தில் விழிக்கும் தைரியமும் அப்பாவுக்கு கிடையாது.. சாகப் போகிற சமயத்திலே அவர் என்னைப் பார்க்க விரும்பினப்ப.. மனிதாபிமான அடிப்படையில நான் போய் பார்த்தேன்.. அவர் பக்க நியாயங்களை அவர் சொன்னார்.. அதை நியாயப் படுத்தலை.. உனக்கும் அருணுக்கும் உதவி செய்யச் சொன்னார்.. நன்றாகக் கவனி.. உங்களை என்னுடன் சேர்த்துக்கச் சொல்லலை.. அதற்கான உரிமை அவருக்கும், உங்களுக்கும் இல்லைங்கிறதை அவர் புரிஞ்சு வைச்சிருந்தார்.. உதவிதான் செய்யச் சொன்னார்.. அந்த உதவியையும் உங்களுக்குத்தான் செய்யச் சொன்னார்.. உங்க அம்மாவுக்கு செய்யச் சொல்லலை.. நான் உதவி மட்டுமா செய்தேன்..?"
நரேந்திரனின் கேள்விக்கு இல்லையென்ற விதமாக தலையை அசைத்து மறுத்தாள் அர்ச்சனா..
அவர்களுடைய குடும்பத்திற்கு ராஜயோக வாழ்வையல்லவா நரேந்திரன் தந்திருந்தான்..?
"அந்த வாழ்க்கையும், வசதியும் நிலைக்க என்ன செய்யனுமோ அதை நான் செய்துட்டேன்.. இனி உங்கள் வழி வேறு.. என்வழி வேறு.. இரண்டு வழியும் எப்போதும் ஒன்றாக முடியாது..."
இப்படிச் சொன்னவன் எழுந்து போகாமல் செல்போனை எடுத்து அருண்குமாரை வரச் சொன்னான்.. அவன் வருகிறவரைக்கும் பொதுவாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அர்ச்சனாவின் மனதில் யார் மீதாவது எண்ணம் இருக்கிறதா என்று நரேந்திரன் கேட்டான்.. அவள் முகத்தில் துயரம் கவிந்தது...
"அதைப் பத்திப் பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை அண்ணா.." என்றாள் துக்கத்துடன்..
"ஏன்ம்மா..?"
"முன்னே பின்னே தெரியாதவங்க என் காதலை மறுத்தாக் கூடத் தாங்கிக்கலாம்.. சொந்த மாமன் மகனே மறுத்தா எப்படித் தாங்கிக்கிறது அண்ணா..?"
"யார்..? ராம்குமாரையா சொல்கிற..?"
ஆச்சரியத்துடன் கேட்டான் நரேந்திரன்.. ஆமென்று தலையை அசைத்தாள் அர்ச்சனா.. அவள் கண்கள் குளமாகின..
"அவன் எதுக்காக உன்னை மறுக்கிறான்..?"
"நான் என் அம்மா வயிற்றில் பிறந்துட்டேனாம்..?"
அர்ச்சனாவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வந்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -99
அழகான ராட்சசியே -99
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-99.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-99.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy