அழகான ராட்சசியே -97

97 சொல்லி விட்ட வார்த்தைகளால் சோதனையை எனக்குத் தந்த அழகான ராட்சசி நீ.... நரேந்திரனால் ஒரளவுக்குத்தான் அவன் மன உணர்வுகளை சித்ரலே...


97
சொல்லி விட்ட வார்த்தைகளால்
சோதனையை எனக்குத் தந்த
அழகான ராட்சசி நீ....

நரேந்திரனால் ஒரளவுக்குத்தான் அவன் மன உணர்வுகளை சித்ரலேகாவிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.. அனைத்து மன உணர்வுகளையும் அவளிடத்தில் பகிர்ந்து கொள்வதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்..
அவனுக்கான காதல் பார்வையினை ஊர்மிளா தரவில்லை என்பதைக் கூட அவன் சொல்லி விடலாம்.. பலமுறை அவன் வேட்கையுடன் அவளை அணுகியும் அவனுடைய ஆசைக்கு ஊர்மிளா இணங்க மறுத்து விட்டாள் என்பதை எப்படி சித்ரலேகாவிடம் சொல்லுவான்..?
"அவ காதல் எங்கே போனதுன்னு தெரியலை பாட்டி.."
"ஒருவேளை குருவி தூக்கிட்டுப் போயிருச்சோ என்னவோ.."
"ஜோக்..?"
நரேந்திரன் சித்ரலேகாவை முறைத்த பார்வையில் அனல் இருந்தது.. அவள் 'ஹா.. ஹா..' என்று சிரித்து வைக்க.. இவன்..
"எனக்குச் சிரிப்பு வரலை.." என்றான் கடுப்பாக..
"வரலைன்னா தேடிப் போ.." என்றாள் சித்ரலேகா இலகுவாக..
"பாட்டி.." அவன் பல்லைக் கடித்தான்..
"உண்மையாத்தான் சொல்றேண்டா நரேந்திரா.. எப்பவும் நாம உண்மையைத் தேடிப் போகனும்... அப்படியில்லாம பொய்க்குப் பின்னாலே பதுங்கிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாதுடா.."
பூடகமாக பேசிய சித்ரலேகாவின் பேச்சில் இந்தப் பாட்டிக்கு என்ன ஆனது.. என்று குழம்பிப் போனான் நரேந்திரன்.. எப்போதும் சித்ரலேகா பொடி வைத்துப் பேசுபவளல்ல.. நேரடியாகப் பேசுகிறவள்..
'ஒருவேளை.. அகல்யா வீட்டில இருந்ததைத்தான் பாட்டி இப்படிச் சொல்கிறாங்களோ..'
அவனுக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை.. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது..
"ஊர்மிளாவைத் தேடிப் போகலைன்னு சொல்கிறிங்களா..?" யோசனையுடன் கேட்டான்..
"புரிஞ்சாச் சரி.." என்று அவன் குழப்பத்தை தீர்த்து வைத்தாள் சித்ரலேகா..
'இதைத்தான் சொன்னாங்களா..?'
நரேந்திரனுக்கு அது முடிவாகவில்லை.. சித்ரலேகாவின் வார்த்தைகளில் பொதிந்திருந்த உள்பொருள் இது மட்டுமல்ல அன்று ஆய்ந்தறியும் அவனது ஆறாவது அறிவு சொன்னது..
இதற்கு மேலே எதையோ அவனுடைய பாட்டி அவனுக்கு அறிவுறுத்துகிறாள்.. அது என்னவாக இருக்கக் கூடும்..?
"அவளைத் தேடி நான் போகிறது இருக்கட்டும்.. என்னைத் தேடி அவள் வந்தாளா பாட்டி..? என் மகனுக்கான ட்ரீட்மெண்ட் செலவுக்கு பணமில்லாம தவிக்கிறா.. அந்த இக்கட்டான நிலையிலும் என்னை அவள் தேடலை பாட்டி.. அவள் கண்முன்னால் என் மகனைத் தூக்கிக்கிட்டுப் போறேன்.. கதறிக்கிட்டு என் பின்னால் அவள் வரலை.. சும்மா என்னையே குற்றம் சொல்லாதீங்க பாட்டி.. அவள் பக்கமும் தப்பிருக்கு.. அதை யோசிங்க.." நரேந்திரன் கோபப் பட்டான்..
"ஆக.. நீ யோசிக்க மாட்ட.. மத்தவங்களைத்தான் யோசிக்கச் சொல்லுவ..?" சித்ரலேகா கேட்டாள்..
"என்னத்தை யோசிக்கச் சொல்கிறிங்க..?" நரேந்திரன் அலுத்துக் கொண்டான்..
"எந்த இடத்திலிருந்து பிரச்னை ஆரம்பிச்சதோ.. அந்த இடத்திலிருந்து யோசி நரேந்திரா.. உனக்கு வழி கிடைக்கும்.."
சித்ரலேகா எழுந்து நின்றாள்.. தோட்டத்தைப் பார்த்தாள்.. மகனுடன் பேசியபடி ஊர்மிளா வீட்டைப் பார்த்து வந்து கொண்டிருந்தாள்.. மாலை வெளிச்சம் மறைந்து இருள் பரவத் தொடங்கியிருந்தது..
"இருட்ட ஆரம்பிச்சிருச்சில்ல.. மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க கூப்பிட்டுக்கிட்டு வருகிறா.." பெருமையுடன் சொன்னாள் சித்ரலேகா..
"டீச்சரம்மா இல்ல.. எல்லாம் சிஸ்டமேடிக்காத்தான் செய்வா.." எரிச்சலுடன் சொன்னான் நரேந்திரன்..
"இண்டஸ்ட்ரியலிஸ்ட் மட்டும் ஏட்டிக்குப் போட்டியா செய்கிறிங்களாக்கும்..? இங்கேயும் அந்தக் கதைதான்.." நொடித்தாள் சித்ரலேகா..
காம்பவுண்டுக்குள் கஜேந்திரனின் கார் நுழைந்தது.. வெளிச்சப் பாதையை வீசியபடி வந்து போர்டிகோவில் நின்றது..
"இதோ இன்னொரு இண்டஸ்ட்ரியலிஸ்டும் வந்தாச்சு.." என்றாள் சித்ரலேகா..
காலி டிரேயை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்ததில் நரேந்திரனுக்கு மலையளவு பொறாமை உண்டானது..
"எங்கே ஓடறிங்க..?" சித்ரலேகாவிடம் பேச்சுக் கொடுத்து நிறுத்த முயன்றான்..
"உன் தாத்தா வந்திட்டாருடா.." அவள் ஓடுவதிலேயே குறியாய் இருந்தாள்.
"நீங்க மட்டும் உங்க ஹஸ்பெண்ட் வந்ததும் ஓடி ஓடிக் கவனிக்கறிங்களே.. இதைப் போல உங்க பேரனையும் கவனிக்கச் சொல்லி உங்க செல்ல மருமகளுக்கு டியூசன் எடுத்தால் என்ன..?" முறைத்தான் நரேந்திரன்..
"ஓ.. உனக்கு இந்தக் கடுப்பா..? ஊர்மிளா அருமையான பெண் நரேந்திரா.. அவளுக்கு டியூசனெல்லாம் தேவையில்லை.. அவளே ஆயிரம் பேருக்கு டியூசன் எடுப்பா.. அதோடு நரேந்திரா.. உன் தாத்தா ஒன்னும் உன்னைப் போல கேட்பார் பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னை நடுஹாலில நிற்க வைத்து வேலைக்காரங்க முன்னாலே கேட்கக் கூடாத கேள்வியை கேட்டு விடலையே.."
"பாட்டி.."
நரேந்திரன் ஸ்தம்பித்து விட்டான்.. கடைசியில் அவனுடைய பாட்டியும் அவனைக் குற்றம் சொல்கிறாளா..?
"என்னடா செய்கிறது..? பெண்ணாய் பிறந்து தொலைத்திட்டேனே.. நீ கேட்ட கேள்வியை எந்தக் கணவன் கேட்டாலும்.. மனைவியாய் வாய்த்தவளுக்கு கோபமும், ரோசமும் வரத்தான் செய்யும் நரேந்திரா.."
"அதுக்காக அவளைக் கேள்வியே கேட்கக் கூடாதா..?"
"கேளு.. உனக்கில்லாத உரிமையா..? உன் ரூமில் தனியா இருக்கிறப்ப கேளு.. அப்ப அவ பதில் சொல்லலைன்னா கோபப்படு.. அதை விட்டுட்டு.. ஒன்றுக்குமத்த நாய் சொல்லுதுன்னு நடுவீட்டில் அவளை நிற்க வைச்சு கேள்வி கேட்டுட்ட.. அவ கோபமாய் கிளம்பிப் போறப்ப தடுத்து நிறுத்தியிருக்கனுமா இல்லையா..? அதையும் நீ செய்யலை.."
"அவளுக்கிருக்கிற அதே ரோசமும் கோபமும் எனக்கு இருக்காதா பாட்டி..? என் கேள்விக்கு பதில் சொல்லாம எப்படி நீ என்னைக் கேள்வி கேட்கலாம்ன்னு அவ கிளம்பிப் போவா.. வேண்டாம்ன்னு நான் தடுத்து நிறுத்தனுமா..?"
"ஒரு சின்னத்திருத்தம்டா நரேன்.. அவ எப்படி நீ கேள்வி கேட்கலாம்ன்னு கிளம்பிப் போகலை.. என்னைப் பார்த்து எப்படி நீ அப்படியொரு கேள்வியைக் கேட்கலாம்ன்னு கிளம்பிப் போனா.. அதுக்குப் பின்னாலே யாவது நீ அவளைத் தேடிப் போனியா..?"
"அவ வீட்டில இருந்து எனக்குப் போன் பண்ணியிருக் கலாமே பாட்டி.. எல்லாத்துக்கும் கொடி பிடிக்கிறவரு அவளுடைய அப்பா... இதுக்கும் கொடி பிடிச்சிருந்தா சண்டை போடற சாக்கிலே நான் திருச்சிக்குப் போயிருக்க மாட்டேனா..?"
"கொடி பிடிக்கிற விசயமாடா இது..? நான் ஒன்னு கேட்கவாடா நரேன்..?"
"அதான் ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே.. இதில ஒன்னு கேட்கவான்னு பெர்மிசன் வேற கேட்கறிங்களா..? இவ்வளவு நேரமும் பெர்மிசன் வாங்கிட்டுத்தான் கேள்வி கேட்ட மாதிரி என்ன பில்ட் அப் வேண்டிக்கிடக்கு..?" நரேந்திரன் எரிந்து விழுந்தான்..
சித்ரலேகா அதை கண்டு கொள்ளவில்லை.. ஆறாத மனப்புண்ணிற்கு மருந்திடும்போது காயத்தில் எரிச்சல் ஏற்படத்தான் செய்யும்.. அதை பொருட் படுத்திக் கொண்டிருந்தால் காயத்தை ஆற்றி விட முடியாது..
"உன் வீட்டிலிருந்து கிளம்பிய ஊர்மிளா திருச்சிக்குப் போகாம வேறு முடிவுக்குப் போயிருந்தா என்னடா செய்திருப்ப..?"
"நியூயார்க்குக்கு அவ பிரண்ட் கூடப் போயிருந்தா என்ன செய்கிறதுன்னு கேட்கறிங்களா..? ஆல்ரெடி சித்தியும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டு வைச்சாங்க.."
"உன் சித்தி பேச்சை இந்த வீட்டில் எடுத்தா நான் மனுஷியாவே இருக்க மாட்டேண்டா நரேன்.. ச்சே..! என்ன மாதரி பேசியிருக்கிறா.. நீ அவளை பேச விட்டு வேடிக்கை பார்த்திருக்க.."
சித்ரலேகாவுக்கு கோபம் வந்து விட்டது.. நரேந்திரனின் முகம் பார்க்காமல் நகரப் போனாள்.. நரேந்திரன் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அவள் முகவாயைப் பிடித்துக் கெஞ்சி சமாதானம் செய்தாள்..
"என் செல்லப் பாட்டியில்ல.."
"இல்ல.."
"அந்தம்மா பேச்சை என்றைக்கு நான் கேட்டேன் பாட்டி..?"
"போடா.. ஊர்மிளா மனம் வெறுத்துப் போய் தற்கொலை அது இதுன்னு போயிருந்தா என்னடா செய்திருப்ப..? அதைச் சொல்ல வந்தா.. அந்தச் சாக்கடை எதையோ பேசுச்சாம்.. இவனும் அதையே சொல்கிறான்.. என்கிட்டப் பேசாதேடா.."
"பாட்டி.."
நரேந்திரன் முகம் மாறிவிட்டது.. ஊர்மிளா அப்படியொரு முடிவை எடுத்திருந்தால்..?
நினைத்துப் பார்க்கக் கூட அவனால் முடியவில்லை..
"அவ அப்படியெல்லாம் முட்டாள்தனமா யோசிக்க மாட்டா பாட்டி.."
"நினைத்துக்கிட்டு இரு.. அடிபட்ட பெண்மனம் எந்த முடிவுக்கும் போகும்.. உயிருக்குயிராய் காதலிச்சவன் அவனோட சித்திகாரி பேச்சைக் கேட்டுக்கிட்டு எக்குத்தப்பா ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறான்.. அந்த நேரத்திலே துடிச்சுப் போனவ விபரீதமா ஏதாவது யோசித்திருந்தா.. உன் வாழ்க்கையிலே நீ திரும்பவும் ஊர்மிளாவை பார்த்தே இருக்க முடியாதுடா நரேன்.. நல்ல வேலை.. அவ வயிற்றிலே உன் குழந்தை இருந்தது.. அவ எதையும் யோசிக்காம அவ அப்பா வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டா.. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்..? அவ அவளோட அப்பா வீட்டிக்குப் போயிருப்பான்னு நீ நினைச்சுக்கிட்டு இருந்திருப்ப.. அவங்க உன்கூட அவ இருக்கிறான்னு நிம்மதியா இருந்திருப்பாங்க.. இடையில அவ எங்கே போனா.. என்ன ஆனான்னு யாருக்கும் தெரிந்திருக்காது.."
அப்படியும் நடந்திருக்குமா..? நரேந்திரன் அசைவற்று நின்று விட்டான்.. கோபமாக பேசிக் கொண்டே போன சித்ரலேகா..  பேரனிடம் அசைவில்லாமல் போனதும் பேச்சை நிறுத்தி விட்டாள்..
"நரேன்.." நடுக்கத்துடன் அவனைத் தொட்டாள்..
"பாட்டி.." அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் அந்த ஆறடி உயர ஆண்மகன்..
"போனதை விடு நரேந்திரா.. இதெல்லாம் நடந்திருக்கலாம்ங்கிறதை நீ புரிஞ்சுக்கனும்ங்கிறதுக்காகத் தான் நான் எடுத்துச் சொன்னேன்டா.. அதான் ஊர்மிளா பத்திரமா இருக்காளே.."
"அவ என் கேள்விக்கு பதில் சொல்லலைன்னு கோபப் பட்டுட்டேன்பாட்டி.."
"நீ ஏண்டா அப்படிக் கேட்ட..?"
"சித்தி பொய் சொல்லியிருக்கலாம்ன்னு எனக்குத் தோணிச்சு.. அவங்க முன்னாலே ஊர்மிளாவை விசாரிச்சா அவ உண்மையை சொல்லுவா.. அந்தம்மாவை கிழிகிழின்னு கிழிக்கலாம்ன்னு நினைத்தேன்.."
'இவனையும் குற்றம் சொல்ல முடியாது..' சித்ரலேகா பெருமூச்சு விட்டாள்..
யார் மனதிலும் குற்றமில்லை.. வஞ்சமில்லை.. இருந்தும் பிரிந்து நிற்கிறார்கள் என்றால் இறைவனின் தீர்ப்பை என்னவென்றுதான் சொல்லுவது..?
"அந்தப் பாதகி மேலே குற்றமிருக்குன்னு புரூவ் பண்ணிட்டா மட்டும் அவ ஆமாம்ன்னு மன்னிப்புக் கேட்டுறப்போறாளா..? அதுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சாகசநாடகம் ஆடியிருப்பா.. அவ எதுக்குத்தான் அஞ்சினவ..?"
"ம்ப்ச் சும்மா ஊர்மிளா மேலே குற்றம் சொன்னாங்க.. அதைக் கண்டிச்சு வைக்கலாம்ன்னு நினைச்சேன்.. இந்த அளவுக்கு வந்திருச்சு.."
"கடல் போல நம்ம வீட்டை வைச்சுக்கிட்டு.. வயசான தாத்தாவையும், பாட்டியையும் தனியா விட்டுட்டு.. அவகூடப் போய் நம்ம வீட்டுக்கு வாழவந்த பெண்ணை குடித்தனம் வைச்சா அவ அப்படித்தான் பேசுவா.. உனக்குப் புத்தி இருந்திருக்கனும்.. ஊர்மிளாவோட பிரண்டைப் பத்திக் கேட்டதுக்கு ஏன் அவளுக்கு அந்த அளவுக்கு கோபம் வந்ததுன்னு நினைத்துப் பார்த்திருந்தா நீ அவளை போக விட்டிருக்க மாட்டே..."
ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்ட சித்ரலேகா..
"ஏன் பாட்டி அந்த அளவுக்கு கோபப்பட்டா..? உண்மை எதுவோ அதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே..? நானென்ன அவள்மேலே நம்பிக்கை இல்லாமலா அந்தக் கேள்வியைக் கேட்டேன்..?" என்று நரேந்திரன் கேட்டதும் சுதாரித்துக் கொண்டாள்..
ஊர்மிளாவுக்கு வாக்குக் கொடுத்திருப்பதால் உண்மையை அவளால் சொல்லி விட முடியாது.. அதே சமயத்தில் பிரச்னையின் மூல வேரைத் தெரிந்து கொண்ட பின்னால் அதை வேரோடு பிடுங்கிப் போடாமல் அவளால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது..
"யோசி நரேந்திரா.." என்றாள் சித்ரலேகா..
"பாட்டி..?"
"யோசி.. ஏன் உன் பெண்டாட்டி அந்தக் கேள்விnயிலே கோபப் பட்டான்னு யோசி.. ஒருவேளை நீ நினைத்ததைப் போல அவளைப் பார்க்க பிரண்டுன்னு யாரும் வராமலிருந்து நீ அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்திருந்தா..?"
"இல்லை பாட்டி.." நரேந்திரன் மறுப்பாக தலையை அசைத்தான்..
"அர்ச்சனா சொன்னாளே.. அண்ணி அவங்களோட பிரண்ட் கூடப் பேசிக்கிட்டிருக்காங்கன்னு.. அவ பொய் சொல்ல மாட்டாளே.."
"அந்த பிரண்ட் ஆணா.. பெண்ணன்னு சொன்னாளா..?"
"பாட்டி..?" நரேந்திரனின் புருவங்கள் முடிச்சிட்டன..
"என்னவோ.. என் மனசில பட்டதைச் சொல்லிட்டேன்.. யோசிச்சு முடிவு பண்ணு.."
"ஊர்மிளா கூடச் சொன்னா பாட்டி.."
"என்னன்னு..?"
"அவ பிரண்ட் ராதா கூடப் பேசிக்கிட்டு இருந்தான்னு.."
"ராதான்னுதானே சொன்னா..? ராதாகிருஷ்ணன்னு சொல்லலையே.."
சித்ரலேகா உண்மையைச் சொல்லாமல் பேரனை யோசிக்க வைத்து விட்டு மாடியிறங்கிப் போய் விட்டாள்.. நரேந்திரன் ஊஞ்சலிலேயே உட்கார்ந்து விட்டான்.. அவனுக்குத் தனிமை தேவைப் பட்டது.. நடந்து முடிந்த நிகழ்வுகளை மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தான்.. கண்களை மூடிக் கொண்டான்..
"யாரோ அவ பிரண்டாம்.. ராதாகிருஷ்ணன்னு பெயராம்.." அகல்யாவின் குரல் ஒலித்தது..
"அண்ணி அவங்களோட பிரண்ட் கூடப் பேசிக்கிட்டு இருக்காங்க அண்ணா.. கூப்பிடவா.." அர்ச்சனாவின் குரல் சொன்னது..
"ராதாகூடப் பேசிக்கிட்டு இருந்தேங்க.." ஊர்மிளாவின் பதட்டமான குரல் கேட்டது..
"அந்த ராதாகிருஷ்ணனை செல்லமாக ராதா.. ராதான்னு உன் பெண்டாட்டி கூப்பிடறாப்பா.. அருண் முகம் சுளிக்கிறான்.." மீண்டும் அகல்யாவின் குரல் கேட்டது..
"வீட்டிலே பிரச்னையா..? இல்லையே.. எப்பவும் போல்தான் வீடு இருக்குண்ணா.." அருணின் குரல் தழைந்து வந்தது..
நரேந்திரனுக்கு தலையை வலிப்பதைப் போல இருந்தது.. தனிமை அவனை சுமையாய் அழுத்தியது.. யோசித்தபடி படியிறங்கினான்.. ஹாலில் கஜேந்திரன் உடை மாற்றி ஓய்வாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.. ஊர்மிளா டைனிங் டேபிளிலில் சுரேந்திரனுடன் உட்கார்ந்து அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சித்ரலேகா சமையலறையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. பூஜையறையில் விளக்கேற்றப் பட்டிருந்தது.. இதமான ஊதுபத்தியின் நறுமணம் வீட்டை நிரப்பியது.. நரேந்திரன் உயிர்ப்பாக உணர்ந்தான்..
இதுபோன்ற உயிர்ப்பு அகல்யாவின் வீட்டில் ஏன் இல்லை..?
ஊர்மிளாவைப் பார்த்தான்.. அவள் முகம் சாந்தமாக.. ஒரு அழகான தேவதையின் முகம் போல கனிந்திருந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -97
அழகான ராட்சசியே -97
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-97.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-97.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy