அழகான ராட்சசியே -101

101 நீலவானை பிரிந்துசென்ற நிலவாக ஒளிர்ந்து நிற்கும்.. அழகான ராட்சசி நீ.... "ஸோ... தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரனு...


101
நீலவானை பிரிந்துசென்ற
நிலவாக ஒளிர்ந்து நிற்கும்..
அழகான ராட்சசி நீ....


"ஸோ... தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரனுக்கு என்னைக் கண்டுபிடிக்க இத்தனை வருடங்களாகியிருக்கு.."
நேர் கொண்ட பார்வையுடன் சொன்னாள் ராதா.. அவளிடமிருந்த அந்த இயல்பான நிமிர்வில் நரேந்திரனுக்கு அவள்மீது மரியாதை வந்தது..
"அவள்தான் இடியாடிக்கா பிஹேவ் பண்ணியிருக்கான்னா நீங்களும் அதற்குத் துணை போயிருக்கீங்களே ராதா.. எனக்கொரு போன் பண்ணியிருக்கக் கூடாதா..?"
"ஊர்மிளா வேண்டாம்ன்னு தடுத்துட்டா.. பிராமிஸ் கேட்டா.. என்னால அவ பேச்சை மீற முடியாது.."
அவர்கள் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. ராதாவின் முகத்தில் அதுநாள்வரை காணாத ஓர் அமைதியையும், நிம்மதியையும் அவன் கண்டான்.. அதைப்பற்றி அவளிடம் சொன்னபோது ஒப்புக் கொள்வதைப் போல அவள் தலையசைத்தாள்...
"ஒரு வகையில் இந்தப் பிரச்னையில் நானும் ஓர் அங்கமாகி இருந்தேன் மிஸ்டர் நரேந்திரன்.. என் தோழியைப் பார்க்க வந்தேன்.. வந்த இடத்தில் அவளைச் சுற்றி சிலந்தி வலையைப் போல சதி பின்னிக் கிடந்தது.. அந்த சதியில் முக்கிய சவாலாக என் பெயரை அவங்க பயன்படுத்தியிருந்தாங்க.. ஊர்மிளா உணர்வு பூர்வமானவ.. ஈஸியா அவங்க விரிச்ச வலையிலே போய் மாட்டிக்கிட்டா.. அவ வெளியே வந்தால்தான் எனக்கும் நிம்மதின்னு தோணிருச்சு.. ஒருவகையில் உங்களின் வரவுக்காக நானும் காத்திருந்தேன் மிஸ்டர் நரேந்திரன்.. நீங்களும் வந்தீங்க.. ஊர்மிளாவின் நம்பிக்கையை உடைச்சுட்டிங்க.. எதைக் காரணமாய் வைத்து ஊர்மிளா வீட்டை விட்டு வெளியேறினாளோ... அந்தக் காரணமாய் நானே ஆனபிறகு என்னால் நியூயார்க்குக்கு திரும்ப முடியலை.."
"வாட்..? அப்போதிருந்து நீங்க இந்தியாவில்தான் இருக்கீங்களா..?"
"யெஸ்.. டெபுடேசனை கண்டினியு பண்ணிக் கொண்டு இந்தியாவில்தான் இருக்கிறேன்... என் ஹஸ்பெண்ட் சிக்ஸ் மன்த்ஸ்க்கு ஒருதடவை வந்து பார்த்து விட்டுப் போவார்.."
"என்னங்க இது..?"
நரேந்திரனுக்குள் குற்ற உணர்வு சூழ்ந்தது.. ஒரு பாவமும் அறியாத இந்த நல்ல பெண்.. அவனும், அவனுடைய மனைவியும் பிரிந்திருந்ததினால்.. கணவனைப் பிரிந்து இந்தியாவிலேயே தேங்கி விட்டாளா..?
"என்னால முடியலை மிஸ்டர் நரேந்திரன்.. ஊர்மிளா தஞ்சையில் இருந்தா.. நான் சென்னைக்கு டெபுடேசனை மாற்றிக்கிட்டேன்.. நானும் அமிர்தாவும் ஊர்மிளாவுக்கு துணையாய் நின்றோம்.."
அவன் யோசிக்காமல் கேட்ட ஒரு கேள்வியினால்.. அவன் மனைவி அவன் நிழலிருந்து விலகிச் சென்று தோழிகளின் நிழலில் நிற்க வேண்டி வந்து விட்டதே..
"ஊர்மிளாவைப் பார்க்க.. இல்லையில்லை.. உங்கள் மகனப் பார்க்க நீங்க தஞ்சைக்கு வந்தீங்க... உங்க மகனுக்காக ஊர்மிளாவையும் சென்னைக்கு அழைத்து வந்தீங்க.."
"ஏங்க.. அவளுக்காக நான் அவளை அழைத்துக் கொண்டு வர மாட்டேன்னு எப்படிங்க நீங்க நினைக்கலாம்.."
"நான் நினைக்கலை மிஸ்டர் நரேந்திரன்.. உங்க வொய்ப் அப்படித்தான் நினைத்துக்கிட்டு இருக்கா.."
"அவ எதைத்தான் நினைக்க மாட்டா.. நினைக்க வேண்டிய என்னை நினைக்க மாட்டா.. தேவையில்லாத அத்தனை நினைவையும் நினைப்பா.."
நரேந்திரன் எரிச்சல்பட்டான்... ராதா லேசாக முறுவலித்தபடி அவள் முன்னாலிருந்த காபிபை ஸ்பூனில் கலக்கினாள்..
"ஒரு போன்கால்... அதைக்கூட ஊர்மிளாவை அட்டெண்ட் பண்ண விடலை.. என் கண் முன்னால்தான் அத்தனையும் நடந்தது.. அன்றைக்கு ஊர்மிளா துடித்த துடிப்பை இன்னும் என்னால் மறக்க முடியலை.."
"இவ எதிர்த்துப் போராடியிருக்கனும்.."
"போராடலைன்னு உங்களுக்குத் தெரியுமா..? போராடியவளிடம்தான் அவங்க சவால் விட்டு அவளையும் அதில் சிக்க வைத்துட்டாங்களே..."
ராதா அனைத்தையும் சொன்னாள்.. பிரச்னையின் ஆணிவேரை அறிந்தவள் அவள் என்பதால் அதைப் பிட்டுப் பிட்டு வைத்தாள்.. ஊர்மிளாவின் காதலை அகல்யா பணயம் வைக்க வைத்து விட்ட கதையை தெளிவு படுத்தினாள்..
"அவ உங்களைக் காதலிச்சா மிஸ்டர் நரேந்திரன்.. அந்த அளவு கடந்த காதலினாலே யார் என்ன சொன்னாலும் நீங்கள் அப்படிப்பட்ட கேள்வியை அகல்யாவின் முன்னால் அவளைப் பார்த்துக் கேட்க மாட்டிங்கன்னு நம்பினா.. அந்த நம்பிக்கையைத்தான் நீங்க உடைத்துட்டிங்க மிஸ்டர் நரேந்திரன்.."
"அவ வயிற்றில் என் குழந்தையிருந்ததை மறைக்கலாமா..?"
"மறைக்கலை.. அதைப் பற்றிச் சொன்னா.. அதைக் காரணம்காட்டி உங்க மனதை அவ திசைதிருப்பிட்டான்னு அகல்யா சொல்லிக்காட்டுவாங்கன்னு நினைச்சா.."
"சேச்சே.." அருவெறுத்தான் நரேந்திரன்..
"அதுக்குப் பின்னாலே அவளைத் தேடி நீங்க வருவீங்கன்னு தினம் தினம் அவ எதிர்பார்த்தா மிஸ்டர் நரேந்திரன்.. நீங்க வரலை.. அப்படி வந்தப்ப.. அவளுக்காக வராம உங்க மகனுக்காக வந்து நின்றிங்க.. அப்போதும் சுரேனின் ட்ரீட்மெண்ட் செலவுக்காகத்தான் உங்களிடம் உங்க மகனைப் பற்றி அவள் சொன்னாள்ன்னு பழி போட்டிங்க..."
"கோபத்தில் வந்த வார்த்தைங்க..."
"எப்படி வந்திருந்தாலும் வார்த்தை.. வார்த்தைதானே.."
இதமாக புன் முறுவல் செய்தபடி கூர்மையாக கேட்டாள் ராதா..
'இவள் கெட்டிக்காரி..' நரேந்திரன் சிலாகித்தான்..
பேச வேண்டியதையெல்லாம் பேசி முடித்து விட்ட மனநிறைவுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் ராதா.. நரேந்திரன்..
"தேங்க்ஸ்.." என்று மனமார நன்றி சொன்னான்..
"எதுக்கு..?"
"எல்லாத்துக்கும்.."
அவர்கள் புரிதலுடன் சிரித்துக் கொண்டார்கள்..
"இனி பெயரில்லாத அனாமிகாவாக நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.." நரேந்திரன் சொன்னான்..
"ஷ்யூர்.." என்றாள் ராதா...
"அன்றைக்கு உங்களோட ரிலேடிவ் அனாமிகான்னு யாரும் இங்கே இல்லையேன்னு என்னை சந்தேகமாய் ஓர் பார்வை பார்த்தார் பாருங்க.. மறக்க முடியாது..."
இப்போது அவர்கள் பலமாக சிரித்தார்கள்.. சிரித்து முடிந்த நரேந்திரன்.
"பட்.. அவரோட அந்தக் கொஸ்டின்தான் எனக்கு உங்களை அடையாம் காண்பிச்சது.." என்றான்..
"இனி நான் நிம்மதியாக நியூயார்க்குக்கு ரிட்டர்ன் ஆகலாம்.." என்றாள் ராதா..
அவர்கள் எழுந்து நின்று கை குலுக்கிப் பிரிந்தார்கள்.. எதிரெதிர் திசைகளில் கார்களில் பறந்தார்கள்..
நரேந்திரன் வீட்டுக்குப் போன போது ஊர்மிளா சித்ரலேகாவுடன் சமையலறையில் வேலையாக இருந்தாள்.. கஜேந்திரனுடன் விளையாடிக் கொண்டிருந் சுரேந்திரன்.. நரேந்திரனைக் கண்டதும்...
"டாடி.." என்று தாவினான்..
அவனைத் தூக்கி உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்ட நரேந்திரனின் மனம் விம்மியது.. இந்த மகனை வயிற்றில் சுமந்தவளை அதைச் சொல்ல விடாமல் அகல்யா துரத்தியடித்தாளா..?
மகனை இறக்கி விட்டவன் கண்கள் சிவக்க சமையலறைக்குப் போனான்.. அவனைக் கண்டதும் ஊர்மிளாவின் உடலில் தோன்றிய விறைப்பை உணர்ந்தவனுக்கு வேதனையாக இருந்தது..
"என் பிரண்ட் வீட்டுக்குப் போகனும்.. வா.."
ஊர்மிளாவை அழைத்தான்.. என்னையா அழைக்கிறான் என்ற ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தவள் நகரவில்லை..
"இப்ப அவ வரப்போகிறாளா இல்லையா பாட்டி..?" நரேந்திரன் உறுமினான்..
"போயிட்டு வாம்மா.." சித்ரலேகா சிபாரிசு செய்தாள்..
ஊர்மிளா அப்போதும் தயங்கினாள்..
"ஏனாம்.. இவ ஹஸ்பெண்ட் ஏதாவது சொல்லிரு வானோன்னு பயப்படறாளா பாட்டி..?" என்று கேட்டு வைத்தான் நரேந்திரன்..
'எதுக்கெடுத்தாலும் இதை ஒன்னைக் கேட்டிருவான்..' ஊர்மிளாவின் முகம் குங்குமமானது..
"வழக்கமில்லாத வழக்கமெல்லாம் எதற்கு பாட்டி..?" என்றாள்..
"இனி வழக்கப் படுத்திக் கொள்ளச் சொல்லுங்க பாட்டி.." என்றான் நரேந்திரன்..
"சுரேன் அழுவான்.." ஊர்மிளா அடுத்த காரணத்தைத் தேடினாள்..
"இது ஆளில்லாத வனாந்தரம் பாரு.. சுரேனைப் பார்த்துக்க ஆளில்லாமல் இருக்கிறதுக்கு.." அதற்கும் கடுப்படித்தான் நரேந்திரன்..
"சும்மா அவளைக் கிண்டல் பண்ணாதே நரேன்.." சித்ரலேகா ஊர்மிளாவுக்காக பிரிந்து கொண்டு வந்தாள்..
"அவளைக் கிண்டல் பண்ணனும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா இருக்கு பாட்டி..? கிளம்பச் சொன்னா அசைகிறாளான்னு பாருங்களேன்.. அது இதுன்னு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டே நிற்கிறா.." பல்லைக் கடித்தான் நரேந்திரன்..
ஒரு வழியாய் ஊர்மிளா அவனுடன் காரில் ஏறினாள்.. அவன் முகம் பார்க்காமல் சாலையை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு கார் போகும் பாதை எது என்று தெரியவில்லை... சற்றுப் பொறுத்துத்தான் அதை உணர்ந்தாள்..
'இது அகல்யாவோட வீட்டுக்குப் போகிற பாதை அல்லவா..?'
ஊர்மிளாவின் முகம் மாறிவிட்டது... அவள் கோபத்துடன் கார் கதவைத் திறக்கப் போனாள்... நரேந்திரனின் கை அவள் கையை இறுக்கி சிறை பிடித்தது.. அவள் திமிறினாள்..
"விடுங்க என்னை.. அந்த வீட்டில என் காலடியை வைக்க மாட்டேன்.."
"வைத்தவுடனே வந்து விடப் போகிறோம்.."
"இங்கேதான் கூப்பிட்டுக்கிட்டு வர்றீங்கன்னு ஏன் தாத்தா, பாட்டியிடம் சொல்லலை..? அவங்களுக்குத் தெரிந்திருந்தா என்னை அனுப்பி வைத்திருக்க மாட்டாங்கள்ல.."
"அதனால்தான் சொல்லலை..."
பிடிவாதமாய் பேசியபடி அகல்யாவின் வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்தினான் நரேந்திரன்.. வாசலில் நின்ற செக்யூரிட்டி முதல்.. கார் டிரைவர் ரமேஷ் வரை அவன் முன்னால் ஓடி வந்து நின்றார்கள்.. அவர்களைப் பார்த்து..
"உள்ளே வாங்க.." என்று சொல்லி விட்டு ஊர்மிளாவை கைப்பிடியாய் பிடித்தபடி வேகமாக வீட்டுக்குள் போனான்..
புயல் வரப் போவதை யூகித்தவளாக அடுப்பை அனைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் வனிதா.. அவள் பின்னால் வந்து நின்ற மாதுரி..
"யாருக்கா அவங்க..?" என்று சின்னப் பப்பாவைப் போல ஊர்மிளாவைக் காட்டிக் கேட்டு வைத்தாள்..
"அக்காவா..?" வனிதா முறைத்த முறைப்பில்..
"ஹி..ஹி.. வனிதா.." என்று சிரித்து வைத்தாள்..
"அடங்கவே மாட்டேன்கிறாளே.." வனிதா அங்கலாய்த்தாள்..
நரேந்திரன் வந்திருக்கும் செய்தியறிந்த அருண் குமாரும்.. அர்ச்சனாவும் தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி வந்தார்கள்..
"அண்ணி.. எப்படியிருக்கீங்க..?" ஆவலுடன் வந்த அர்ச்சனா..
"போதும்.." என்ற நரேந்திரனின் கடுகடுப்பில் அப்படியே நின்று விட்டாள்...
"நரேன்.. வாப்பா..."
இருகைகளையும் விரித்தபடி ஆனந்தமயமாக அவளுடைய அறையிலிருந்து விரைந்து வந்தாள் அகல்யா..
"இந்தக் குடும்பத்துக்கு தலைவன் நீதான்ப்பா.. நீ சொல்லி நான் மாட்டேன்னு சொல்லிருவேனா..? அர்ச்சனாவை யாருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்.. எங்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்கனுமுன்னு உனக்குத் தெரியாதா..? அவ நீ வளர்த்த குழந்தைப்பா.. கடைசிவரைக்கும் உன் சிறகுக் கடியில இருக்கப் போகிறவ.. அண்ணனா நீ இருக்கிறப்ப.. அவசரப்பட்டு நான் எந்த முடிவையும் எடுக்கக் கூடாதுதான்.. மன்னிச்சிருப்பா.. நீ இந்த வீட்டிலேயே இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காது.. நம்ம வீட்டை விட்டு நீ வெளியில போனதால்தான் இவ்வளவும் நடந்திருச்சு.. போனது போகட்டும்.. இனி குடும்பப் பொறுப்பை எடுத்துக்க நீ வந்திட்ட.. நான் எதிலயும் தலையிடாம ஒதுங்கி நின்னுக்கறேன்.."
அகலமாக பேசிய அகல்யா நரேந்திரனின் முதுகுக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஊர்மிளாவைக் கண்டதும் வாயடைத்துப் போனாள்..
"என்ன..? டிராமா போடறிங்களா..?" கடுமையாகக் கேட்டான் நரேந்திரன்..
"டிராமாவா..? நானா..?" அகல்யா விதிர்த்துப் போனவளைப் போல உடம்பைக் குலுக்க..
"அடச்சே..!" என்றான் நரேந்திரன்..
அருண்குமார் தாங்க முடியாத சங்கடத்துடன்..
"அம்மா.." என்று ஆட்சேபக் குரலை எழுப்பி அகல்யாவின் விதிர்த்தலை நிறுத்தி வைத்தான்..
"ஆயிரம்தான் சொல்லு வனிதா.. நடிப்புன்னு வந்துட்டா இந்தம்மா ஊர்வசி அவார்டை வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க.." மாதுரி பாராட்டி விட்டு..
"உன்னை விடவா..?" என்ற வனிதாவின் குத்தலை வாங்கிக் கட்டிக் கொண்டாள்..
"ஹலோ.. நானொன்னும் உங்க மகளின் கல்யாண ஏற்பாடை தடுத்த நிறுத்த இங்கே வரலை.. உங்க மகளை நீங்க யாருக்கு வேண்டும்னாலும் மேரேஜ் பண்ணிக் குடுங்க.. எனக்கென்ன வந்தது..?" எடுத்தெரிந்து பேசினான் நரேந்திரன்..
"இப்படிப் பேசாதேப்பா.. நீதானேப்பா இவளுக்கு அண்ணன்.." அகல்யா மூக்கைச் சிந்தினாள்..
"கூடப்பிறந்த அண்ணன் அருண்குமார் மட்டும் தான்.. நானில்லை.. அவனோட தங்கைக்கு ஒன்றுன்னா அவன் தட்டிக் கேட்டுக்குவான்.. எனக்கெதற்கு அந்த வேலை..? நான் வந்த வேலையே வேறு.." பல்லைக் கடித்தான் நரேந்திரன்..
'எதுக்கு வந்திருக்கான்..?' அகல்யா கண்கள் இடுங்க ஊர்மிளாவை முறைத்தாள்..
'இந்தச் சிறுக்கி எதையாவது ஓதிவிட்டுக் கூப்பிட்டுக் கிட்டு வந்திருப்பாளோ.. இருக்காதே.. இது நேர்மை அது இதுன்னு பைத்தியக்காரத்தனமா பினாத்திக்கிட்டு இருக்கிறவளாச்சே.. இவ சொல்லியிருக்க மாட்டா...'
எதுவாக இருக்கும் என்று அனுமானிக்க முடியாமல் தலை காய்ந்து போனாள் அகல்யா.. நரேந்திரன் வீட்டு வேலையாள்களை வரிசையாக நிற்கச் சொன்னான்.. மறுபுறம் அருண்குமாரையும் அர்ச்சனாவையும் நிற்கச் சொன்னான்.. கேட்டான்..
"சொல்லுங்க.. இந்த வீட்டுக்கு வந்து போன ராதாகிருஷ்ணன் யார்..?"
ஊர்மிளா அசைவற்று நின்று விட்டாள்.. வேலையாள்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அருண்குமாரும்.. அர்ச்சனாவும் அதையே செய்தார்கள்..
"அப்படி யாரும் இங்கே வரலையேங்கய்யா.."
"நல்லா யோசிச்சுப் பதில் சொல்லுங்க.. ராதாங்கிற பெயரில யாராவது வந்து போனாங்களா..?"
"ஆமாங்கய்யா.. அம்மாவோட கூடப் படிச்ச சிநேகிதி ஒருத்தங்க ராதான்னு சொன்னாங்க.. நீங்க வெளிநாட்டுக்குப் போயிருந்தப்ப அவங்கதான் இங்கே வந்திருந்தாங்க.."
"அருண்.. அர்ச்சனா..?"
"இது என்ன கேள்வின்னே எங்களுக்குத் தெரிய லைண்ணா.. ராதாங்கிற அண்ணியோட பிரண்டைத்தான் எங்களுக்குத் தெரியும்.. யார் அந்த ராதாகிருஷ்ணன்..?"
"அதை உன் அம்மாவிடம் கேளுடா அருண்.."
நரேந்திரன் ரௌத்திரமாக அகல்யாவின் பக்கம் திரும்பினான்.. அவனது சிவந்த கோபமான விழிகளில் நடுநடுங்கிப் போனாள் அகல்யா...
"சொல்லு... யார் அந்த ராதாகிருஷ்ணன்..?" ஒருமையில் அவளை அழைத்துக் கேள்வி கேட்டான் நரேந்திரன்..
"அது வந்து நரேன்.. சும்மா விளையாட்டுக்கு.." அந்த நிலையிலும் பசப்பினாள் அகல்யா..
"கொன்று புதைச்சிருவேன்.." ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தான் நரேந்திரன்..
"அன்றைக்கு நான் இவளை கேள்வி கேட்டது உன் பேச்சை நம்பியில்லை.. இவளுடைய பிரண்ட் வந்ததை என்னிடம் போட்டுக் கொடுக்க உனக்கு எவ்வளவு தைரியம்ன்னு திட்டி விடலாம்ன்னுதான் கேட்டேன்.. அதுக்குப் பின்னாலே நீ எவ்வளவு சூழ்ச்சிகளைப் பண்ணி வைச்சிருக்க.. என் வொய்பின் செல்போனை தூக்கி ஒளித்து வைக்கனும்னா நீ எப்பேற்பட்ட பிறவி.."
"நரேன்.."
"என் பெயரைச் சொல்லாதே.. நீ செய்திருக்கிற இந்த கேடு கெட்ட வேலையை உன் பிள்ளைகளும் வேலைக் காரங்களும் தெரிந்துக்கனும்னுதான் இங்கே வந்தேன்.. இல்லேன்னா உன்னைப் போல பிறவிகள் இருக்கிற இடத்தில என் காலடிகூடப் படாது.. ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுசி.."
நரேந்திரன் பேச வேண்டிய அளவுக்கு பேசித் தீர்த்து விட்டான்.. அத்தனை பேச்சுக்களையும் வீட்டு வேலையாள்களின் முன்னிலையில் பேசித் தீர்த்தான்..  அகல்யாவின் பிள்ளைகளே அவளை புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்தார்கள்..
"பேசாம நீங்க பாய்சனைக் குடிச்சிருங்கம்மா.. அர்ச்சனாவுக்கு நான் வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணிட்டேன்.." என்று சொல்லி விட்டான் அருண்குமார்..
அதைக் கேட்ட வீட்டு வேலையாள்களின் நமட்டுச் சிரிப்பில் அகல்யா இடிந்து போனாள்.. அவளைத் துச்சமாகப் பார்த்தபடி நரேந்திரனைப் பின் தொடர்ந்து வெளியேறிய ஊர்மிளாவின் நடையில் வெற்றிச் செய்தி இருந்தது..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -101
அழகான ராட்சசியே -101
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-101.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraatsasiye-101.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy