அழகான ராட்சசியே -100

100 உன் பார்வையிலே எனை கைது செய்த அழகான ராட்சசி நீ.... பெற்றவர்கள் பட்ட கடன் மட்டுமல்ல.. பாவமும் பிள்ளைகளைத்தான் சேரும் என்பத...


100
உன் பார்வையிலே
எனை கைது செய்த
அழகான ராட்சசி நீ....


பெற்றவர்கள் பட்ட கடன் மட்டுமல்ல.. பாவமும் பிள்ளைகளைத்தான் சேரும் என்பதற்கு ஒரு உதாரணமாக அர்ச்சனா வீற்றிருந்தாள்.. சோகச்சித்திரம் போல தெரிந்த தங்கையின் மனம் எந்த அளவுக்கு வேதனைப் படுகிறது என்பதை நரேந்திரனால் புரிந்து கொள்ள முடிந்தது..
அகல்யாவின் வயிற்றில் மகளாய் பிறந்ததைத் தவிர அவள் வேறு என்ன தவறைச் செய்தாள்..?
'பாவம்..' அவன் மனதில் இரக்கம் சுரந்தது..
அருண்குமார் பரபரப்பாக வந்து விட்டான்.. வந்தவனை பேசு.. பேசு என்று பேசி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டான் நரேந்திரன்..
"வீட்டுக்குள்ளே அராஜகம் பண்ற லேடியை அடக்கத் தெரியலை.. நீயெல்லாம் கம்பெனியில வருகிற லேபர் பிரச்னை முதற்கொண்டு கஸ்டமர் பிரச்னை வரைக்கும் எப்படிடா தீர்த்து வைப்ப..?"
"என்னை என்ன அண்ணா செய்யச் சொல்கிறீங்க.. எதுக்கெடுத்தாலும் பாய்சன் சாப்பிடறேன்னு பய முறுத்தறவங்களை என்னதான் செய்கிறது..?"
"சாப்பிடுன்னு சொல்ல வேண்டியதுதானேடா..?"
நரேந்திரனின் கோபத்தில் அருண்குமார் ஆடி விட்டான்..
"அண்ணா.."
"அவங்க இருந்து என்ன செய்யப் போறாங்க..? உனக்கோ அர்ச்சனாவுக்கோ நல்லது பண்ணிரப் போறாங்களா..? சுயநலம் பிடிச்சவங்க.. எந்தத் தாயாவது கடைஞ்செடுத்த ஸ்கௌண்ட்ரலை தன் மகளுக்கு மாப்பிள்ளையா தோர்ந்தெடுப்பாங்களாடா..? இப்படிப் பட்ட தாய் இருக்கிறதுக்கு சாகிறதே மேல்.."
நரேந்திரன் சொன்னதில் இருந்த உண்மையில் அருண்குமார் பேசாமல் இருந்தான்..
"அர்ச்சனாவுக்கு கூடப் பிறந்த அண்ணன் நீதான்.. மறந்துராதே.. அவளுக்காக நீ சொத்து, நகை, ரொக்கப் பணம்ன்னு எதையும் செய்ய வேணாம்.. எல்லாத்தையும் நான் செய்து வைத்துட்டுத்தான் போயிருக்கிறேன்.. உன் கடமையாய் அவ மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூட உணக்கு முடியாதா..?"
நரேந்திரனின் சாட்டையடி போன்ற கேள்வியில் அருண்குமாரின் தன்மானம் பாதிக்கப்பட்டது.. அவன் முகம் கன்றிச் சிவந்தது..
"எல்லாத்துக்கும் நான் வரனும்னா உன் குடும்பத்திலே மூத்த மகன்ங்கிற பெயர் உனக்கு எதுக்கு..? இதுதான் லாஸ்ட் வார்ணிங் அருண்.. இனி உன் அம்மா ஆடினாங்கங்கிற கம்ப்ளெயிண்ட் எனக்கு வரக்கூடாது.. அவங்களை அடக்கி வைக்கத் தெரிஞ்சா கம்பெனியை நீ நடத்து.. முடியலைன்னா.. ஒரு கம்பெனியை நிர்வகிக்கிற திறமை உனக்கில்லைன்னுதான் அர்த்தம்.. அதை ஒப்புக்கிட்டு கம்பெனியை ரிடர்ன் பண்ணிரு.."
அருணின் செக்கச் சிவந்த முகத்தைப் பார்க்க அர்ச்சனாவுக்கு பயமாக இருந்தது.. நரேந்திரன் இந்த அளவுக்கு கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க வில்லை..
"உன் கூடப் பிறந்த தங்கையோட வாழ்க்கையிலே உங்கம்மா விளையாடிக்கிட்டு இருக்காங்க... நீ எனக்கென்னன்னு பார்த்துக்கிட்டு இருக்க.."
"இல்லேண்ணா.. அம்மாவிடம் சண்டை போட்டேன்.. நீங்க வேண்டும்ன்னா அர்ச்சனாவிடம் கேட்டுப் பாருங்க.."
"ஆமாண்டா.. எனக்கு அதுதான் வேலை.. வேற வேலையே இல்லை பாரு.."
நரேந்திரனின் கேள்வியில் மீண்டும் அருண்குமாரின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. அவன் கண்கள் சிவந்தன.. ரௌத்ரத்துடன்..
"நான் பார்த்துக்கறேன் அண்ணா.. அந்த நாய்க்கு அர்ச்சனாவை மேரேஜ் பண்ணித்தர நான் விடமாட்டேன்.." என்று வாக்குக் கொடுத்தான்..
"இஃது.." தம்பியை மெச்சினான் நரேந்திரன்..
"இதைத்தாண்டா நான் எதிர்பார்த்தேன்.. கடுஞ்சொல்லை பேச வேண்டி வந்திருச்சுன்னாலும்.. என் மனதிலிருந்ததுதான் அதைப் பேசினேன்.. கொஞ்சமாவது நிமிர்ந்து நில்லு அருண்.."
"கொஞ்சமென்ன அண்ணா.. முழுதாவே நிமிர்ந்து நிற்கிறேன்.."
"தட்ஸ் குட்.. இந்தக் கல்யாணத்தை நிறுத்தினால் மட்டும் போதாது.. அர்ச்சனாவைப் பெண் கேட்டு வருகிற ராம்குமாருக்கு அர்ச்சனாவை மேரேஜ் பண்ணி வைக்கனும்.." நரேந்திரன் சொன்னதில்..
"அண்ணா..?" என்று நிமர்ந்தாள் அர்ச்சனா..
"ராம்குமார் உன்னைப் பெண் கேட்டு வருவான்.. அர்ச்சனா.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்க வீட்டுக் குள்ளே உங்க அம்மா பண்ணுகிற களேபரத்தை அருண்தான் பார்த்துக்கனும்.." என்றான் நரேந்திரன..
நினைத்தது நடக்கப் போகிறது என்பதில் உற்சாகமாகி விட்டாள் அர்ச்சனா.. அருண்குமாரும் சமாதானமாகி விட்டான்.. நரேந்திரன் இதைப் போல திட்டாவிட்டால் அவனும் அகல்யாவை அடக்கும் வழி தெரியாமல் திணறிக் கொண்டுதானே இருப்பான்..?
'அண்ணன் கொடுத்தது ஷாக் ட்ரீட்மெண்ட்..'
நரேந்திரனைப் பார்த்த அந்த அண்ணன், தங்கை இருவரின் மனதிலும் நன்றியுணர்வு எழுந்தது.. இவன் இல்லாவிட்டால் என்னவாகியிருப்போம் என்ற பதட்டம் உண்டானது..
"ஏதாவது டிரிங்ஸ் சாப்பிடலாமா..?" நரேந்திரன் கேட்டான்..
அவர்கள் பக்கத்திலிருந்த பழக்கடைக்குப் போனார்கள்.. மூன்று ஆப்பிள் ஜீஸ்களைச் சொல்லி விட்டு உட்கார்ந்த நரேந்திரன்.. தொலைவில் போன பெண்ணைப் பார்த்து விட்டு கையசைத்த அர்ச்சனாவைப் பார்த்து விட்டு..
"அது யார்..? உன்னோட பிரண்டா..?" என்று கேட்டான்..
"ஊஹீம்.. அண்ணியோட பிரண்ட் போலே தெரிஞ்சது.. அதான் கூப்பிட்டேன்.." என்றாள் அர்ச்சனா..
"அண்ணியோட பிரண்டா..?"
நரேந்திரன் திரும்பிப் பார்த்தான்.. அதற்கள் தொலைவில் போன பெண் காரில் ஏறிப் போய் விட்டாள்..
"அன்றைக்கு வந்திருந்தாங்களே.. அவங்களையா பார்த்த..?"
அருண் ஆர்வமாக கேட்டான்.. அவன் பார்வை எங்கே அவள் என்று தேடித் துழாவியது..
"அலையறான் பாருங்கண்ணா.." அர்ச்சனா வாய் மூடிச் சிரித்தாள்..
"ஏய்ய்.." நரேந்திரன் உடனிருக்கும் சங்கடத்துடன் தங்கையை அதட்டினான் அருண்குமார்..
"என்ன ஏய்ய்..? அவங்களை இவன் அடிச்சான் பாருங்க சைட்டு.. அவங்களே தாங்க முடியாம அவங்களுக்கு மேரேஜ் ஆகியிருச்சுன்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கங்களேன்.." அர்ச்சனா மீண்டும் சிரித்தாள்..
"உன்னை.." அருண்குமார் அர்ச்சனாவின் காதைப் பிடித்து திருகினான்..
அந்தக் கலாட்டாவில் கலந்து கொள்ளாமல் சிந்தனையுடனிருந்த நரேந்திரன்..
"எந்த பிரண்டைப் பத்திச் சொல்கிறேம்மா..?" என்று கேட்டான்..
"அண்ணியோட பிரண்டுன்னு இவங்க ஒருத்தங்க தான் வந்து போனாங்க.. அதுக்குள்ளேதான் அண்ணி வீட்டை விட்டுப் போயிட்டாங்களே.. அப்புறம் எத்தனை பிரண்டைப் பத்தி நாங்க பேசுவோமாம்..?" என்றாள் அர்ச்சனா..
"அந்த பிரண்ட் எப்ப வந்தாங்க..?"
"நீங்க பாரின் போயிருந்தப்ப வந்தாங்க.. செம ஜோவியல் தெரியுமா.. என்கூட பிரண்ட்லியா பேசிப் பழகினாங்க.. நான்கூட போனில் சொன்னேனே அண்ணா.. அண்ணி அவங்களோட பிரண்டுடன் பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு.. அந்த பிரண்டுதான் இவங்க.."
இலகுவாக சொல்லிவிட்டு.. ஆப்பிள் ஜீஸ் தம்ளர்களில் ஒன்றை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தாள் அர்ச்சனா..
நரேந்திரனின் காதுகளில் உண்மையைத் தேடு என்ற சித்ரலேகாவின் குரல் ஒலித்தது.. அவன் புருவங்கள் முடிச்சிட்டன..
வந்திருந்தது நண்பனென்றால் அருண்குமார் எப்படி அவனை சைட் அடித்திருப்பான்..?
'எங்கேயோ இடிக்குதே..'
நரேந்திரன் இயல்பாக கேட்பதைப் போல அர்ச்சனாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்..
"அந்த பிரண்டோட பெயர் என்னன்னு சொன்ன..?"
நான் சொல்லவே இல்லையே அண்ணா என்று அப்பாவி அர்ச்சனா சொல்லவில்லை.. மாறாக..
"ராதாண்ணா.. வெரிஸ்வீட் நேமில்ல.." என்று அவனிடம் அபிப்ராயம் வேறு கேட்டாள்..
'ராதா.. ராதாகிருஷ்ணன்..'
மறுபடியும் நிதானித்தான் நரேந்திரன்.. இதை வெகு ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டும்.. வந்திருந்தது ராதா என்ற பெண்ணா..? இல்லை ராதா என்று அழைக்கப் பட்ட ராதாகிருஷ்ணன் என்ற ஆணா..?
இதை நேரடியாக அர்ச்சனாவிடம் அவன் கேட்டு விட முடியாது..
"யெஸ்.. ஐ லைக் தட் நேம்.. ஆமாம் அர்ச்சனா.. அந்த பிரண்டோட நேச்சர் எப்படி..?" அக்கறையில்லாதவனைப் போல வரவழைத்துக் கொண்ட அலட்சியத்துடன் அவன் கேட்டான்..
"வெரி கைண்ட் நேச்சர் அண்ணா.. பார்வையிலேயே புத்திசாலிங்கிறதை கண்டு பிடிச்சிடலாம்.. சிம்பிளா டிரெஸ் பண்ணியிருப்பாங்க.. அலட்டிக்கவே மாட்டாங்க.. வெரி இண்டலெக்சுவல் பெர்சனாலிட்டி யுநோ.."
அவனுக்குத் தேவைப்பட்ட தகவலைத் தவிர மற்ற அனைத்து தகவல்களையும் சொன்னாள் அர்ச்சனா..
'மக்கு..' மனதுக்குள் திட்டித் தீர்த்தான் நரேந்திரன்..
'அந்த புத்திசாலித்தனம் ஏன் உன்னிடம் இல்லை..?'
"பார்க்க எப்படி இருப்பாங்க..? உன் அண்ணியை விட அழகா..?" லேசாக கண்சிமிட்டினான்..
அர்ச்சனாவுக்கு உற்சாகம் வந்து விட்டது.. ஒற்றை விரலை ஆட்டி..
"நீங்களும் அருண் கேஸ்தானா...? இருங்க அண்ணியிடம் சொல்கிறேன்.. அவங்களுக்கு பளபளன்னு அழகான முகம் அண்ணா.. துளிக்கூட மேக்கப் இருக்காது.. எனக்குக் கூட அவங்க மேலே அவ்வளவு பொறாமை.. ஆனாலும் அண்ணா.. அவங்க அண்ணியை விட அழகில்லை.. அண்ணி செம அழகுண்ணா அவங்க பிரண்ட் இண்ட்லெக்சுவான அழகு..."
ஓரளவுக்கு வந்திருந்தது பெண் என்று நரேந்திரனுக்குப் புரிந்து போனது.. அவனுக்குள் கோபாக்னி எழுந்தது..
"உனக்கு அவங்களை ரொம்பவும் பிடிக்கும் போல..?" என்று கேட்டான்..
"எனக்கு மட்டுமா..? இந்த அருணுக்கும்தான் ரொம்பப் பிடிக்கும்... ஜொள்ளுன்னா ஜொள்ளு... அப்படியொரு ஜொள்ளை விடுவான்.. வாட் எ கிளாசிக்கல் பியூட்டிம்பான்.. எனக்கு என்னன்னா.. கை.. கழுத்து.. காதுன்னு எங்கேயுமே பொட்டு நகை போட்டுக்க மாட்டாங்க.. ஜீன்ஸ் பேண்டும்.. காட்டன் சர்ட்டும்தான்.. ஆனா அட்ராக்ட்டிவ்வான அழகோடு இருப்பாங்க.. பெண்கள் தங்களை அழகு படுத்திக்கிட்டுத்தான்
அழகாகத் தெரியறாங்கன்னு சொல்கிறதை உடைத்துக் காண்பித்தவங்க அவங்க.. அதனாலே பிடிக்கும்.."
ஆக வந்திருந்தது 'ராதா' என்ற ஊர்மிளாவின் தோழி.. ராதாகிருஷ்ணன் என்ற தோழனல்ல.. அதனால் தான் அந்தக் கேள்வியில் கோபப்பட்டு நரேந்திரனை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறாள் ஊர்மிளா..
'எப்பேற்பட்ட விளையாட்டை துளிக்கூட பயமில்லாம விளையாடிப் பார்த்திருக்குதே அந்தம்மா..' நரேந்திரனுக்குள் கொலைவெறி மூண்டது..
"அந்த ராதாவைத்தான் அம்மா நிக் நேம் வைச்சு ராதாகிருஷ்ணன்னு சொல்லுவாங்க.. அண்ணிக்கு கோபம் வந்திரும்.. அருணும் நானும் அம்மாவை கண்டிப்போம்.." தொடர்ந்து சொன்னாள் அர்ச்சனா..
"ம்ம்ம்..."
"நீங்க ஏன் அண்ணா அண்ணியிடம் அப்படிக் கேட்டிங்க..? அம்மாவிடம் கேட்டதற்கு ஹஸ்பெண்ட் அண்ட் வொய்புக்குள்ளே ஆயிரம் இருக்கும்.. அது.. இதுன்னு எதையோ சொல்லி வாயை அடைச்சிட்டாங்க.."
"சும்மாதான்.. உன் அம்மாவைப் போல நானும் நிக்நேம் வைத்துட்டேன்.. அதில உங்க அண்ணிக்கு கோபம் வந்திருச்சு.. அவ கிளம்பிப் போனதிலே எனக்கு ஈகோவந்திருச்சு.."
"அப்படி நீங்க கேட்கலாமா அண்ணா..? அண்ணி ரொம்பவும் சென்சிடிவ்.. இப்படிக் கேட்டா யாருக்குத்தான் கோபம் வராது..?"
"பாஸ்ட் இஸ் பாஸ்ட்.."
நரேந்திரன் வெறுமையாக சிரித்து விட்டுக் கிளம்பினான்.. அவன் மனம் முழுவதும் மனைவியிடமே இருந்தது..
'அப்படிக் கேட்டிருக்கக் கூடாது..' நரேந்திரன் நொந்து போனான்..
'எத்தனை முறை இதைப் பற்றிப் பேசியிருப்போம்.. ஒருதடவை கூட அவ வந்திருந்தது தோழிதான்.. தோழனில்லை என்ற விவரத்தை என்னிடம் சொல்லவே இல்லையே.. ராட்சசி..! அழகான ராட்சசி..!'
பல்லைக் கடித்தான்.. அவனுடைய செல்போன் ஒலித்தது.. எடுத்துப் பார்த்தான்.. அறிமுகமில்லாத நம்பர் வந்தது..
"ஹலோ.." என்றான்..
"நான்தான் அனாமிகா.." என்றது மறுமுனை..
"ஓ.. சொல்லுங்க.. சொல்லுங்க.. உங்க காரை டெலிவரி பண்ணிட்டாங்களா..?"
"ஓயெஸ்.. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. தேங்க்யு வெரி மச்.."
"இட்ஸ் ஆல் ரைட்.."
பேசிக் கொண்டிருந்தவனின் மூளையில் மின்னலடித்தது.. அவன் மனதில் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு நின்றவள் அனாமிகா என்ற அழைப்பிற்கு திரும்பாத காட்சி வந்து நின்றது.அவள் சொன்ன முகவரியில் அவன் இறக்கி விட்ட போது அவள் வீட்டுக்குள் போய்விட.. வேறு ஒருவர் வந்து அவனிடம் யார் என்று கேட்கிறார்.. அவன் அனாமிகாவின் தோழியின் கணவன் என்று சொல்கிறான்.. அனாமிகாவா அப்படி யாரும் இங்கே இல்லையே என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அனாமிகா வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறாள்..
'உங்க ஹெட் ஆபிஸ் எங்கே இருக்கு..?'
'நியூயார்க்கில் இருக்கு..'
'நரேந்திரா... அந்த ராதாகிருஷ்ணன் உன் பெண்டாட்டியை நியூயார்க்குக்கு வருகிறயா.. ஓடிப் போயிரலாம்ன்னு கேட்கிறான்ப்பா..'
'அவங்க ஜீன்ஸ் பேண்டும் காட்டன் சர்ட்டுமா நகைகளில்லாம செம அழகா இருப்பாங்கண்ணா... இண்டலெக்சுவல் பெர்சனாலிட்டி..'
அனைத்தும் ஒரே மையப் புள்ளியில் சேர்ந்ததில் நரேந்திரன் சொன்னான்..
"மிஸஸ் ராதா.. நான் உங்களைப் பார்க்கனுமே.."
மறுமுனை மௌனம் சாதித்ததில் நரேந்திரன் கண்களை மூடிக்கொண்டான்.. அனைத்தும் தெளிவானதில் அவனுக்குள் ஓர் அயர்வு வந்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -100
அழகான ராட்சசியே -100
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraaatsasiye-100.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/alakaanaraaatsasiye-100.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy