அக்கினிப் பறவை -9

9 ஆதித்தன் பைலை தூக்கிப் போட்ட வேகத்திலிருந்தே அவனது கோபத்தின் பரிணாமம் தெரிந்தது.  ' மேக்னா பவர்ஸ் லிமிடெட் '  கம்பெனியில் ம...


9

ஆதித்தன் பைலை தூக்கிப் போட்ட வேகத்திலிருந்தே அவனது கோபத்தின் பரிணாமம் தெரிந்தது. 'மேக்னா பவர்ஸ் லிமிடெட்கம்பெனியில் மேனேஜிங் டைரக்டரான நாராயணனும்அட்மினிஸ்ட் ரேடிவ் ஆபிஸரான விமலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"எதற்காக இவ்வளவு கோபம் மிஸ்டர் ஆதித்தன்..?" என்று அவன் கோபத்தை அலட்சியம் செய்யாமல் விமலா கேட்டாள்.
"நான் செலக்ட் பண்ணின ராமநாதனை ஏன் வேண்டாம்கறீங்க.."
"நாங்கள் இரண்டு பேரும் செலக்ட் பண்ணியிருக்கிற சந்தியாவை நீங்கள் ஏன் வேண்டாமென்று சொல்கிறீர்கள்..?"
"நீங்கள் செலக்ட் பண்ணியிருக்கிற கேண்டிடேட் சரியில்லை."
"எதனால்.. எதளால் சரியில்லை..ப்ளீஸ் டெல் மி த ஆன்ஸர்.. நீங்கள் செலக்ட் பண்ணியிருக்கிற ராமநாதனை விட டெக்னிக்கல் குவாலிபிகேஷன் சந்தியாவிடம் தான் அதிகமிருக்கு.. கம்ப்யூட்டரில் இருக்கிற எல்லா கோர்ஸையும் படித்திருக்கிறது அந்தப் பெண். சந்தியா செக்ரட்டரி கோர்ஸ் முடித்திருப்பது போல ராமநாதன் முடிக்க வில்லை. சந்தியா டிகிரியில் யுனிவர்சிடி ரேங்க் வாங்கியிருக்கும் பெண். ராமநாதன் வெறும் செகண்ட் கிளாஸ். தவிரவும் இன்டர்வியூவில் நீங்கள் உட்பட நாம் மூவரும் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் ராமநாதன் பதில் சொல்லவில்லை. சந்தியா எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் விடவில்லை. நாங்கள் இருவரும் இன்டர்வியூக்கு வந்திருந்தவர்களுக்கு கொடுத்திருக்கும் மார்க்குகளில் முதலிடம் வாங்கியிருப்பது சந்தியாதான். இவ்வளவு காரணங்களிருக்கு நாங்கள் அந்தப் பெண்ணை செலக்ட் செய்ய."
"நான் அந்தப் பெண்ணை ரிஜக்ட் செய்யவும் ஆயிரம் காரணங்கள் இருக்கு.."
"ஆயிரம் காரணங்கள் எதுக்கு மிஸ்டர் ஆதித்தன்ஒரே ஒரு காரணம் போதுமே நீங்கள் அந்தப் பெண்ணை ரிஜக்ட் செய்ய.." டேபிள் வெயிட்டை உருட்டியவாறு விமலா கூறினாள். 
ஆதித்தன் அவளை முறைத்தான்.
"என்ன காரணம்..?"
"அதுதான்.. அந்தப் பெண்.. 'ஒரு பெண்என்கிற காரணம்.."
"வாட் டு யு மீன்..?"
"ஐ மீன் வாட் ஐ ஸே.. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா மிஸ்டர் ஆதித்தன். ? உங்களுக்குப் பெண்கள் என்றால் பிடிக்காது. ஆனால் அதற்காக ஒரு வேலைக்குத் தகுதியான சிறப்பம்சம் எல்லாவற்றையும் வைத்திருக்கும் ஒரு நபரை 'பெண்என்கிற காரணத்துக்காக மறுப்பீங்கன்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை மிஸ்டர் ஆதித்தன். உங்கள் தகுதிக்கு இது அழகல்ல.."
ஆதித்தனின் முகம் விமலாவின் நேரடித் தாக்குதலால் சிவந்தது.
"நீங்க கூறும் குற்றச்சாட்டில் ஆதாரமில்லை மிஸஸ் விமலா.."
"வேறு எதனால் எல்லாத் தகுதியும் இருந்தும் இன்டர்வியூவில் கேள்விகளுக்கு நன்றாகப் பதில் கொடுத்தும் அந்தப் பெண்ணை வேண்டாம் என்கிறீர்கள். இத்தனைக்கும் நீங்கள்தான் அந்தப் பெண்ணை அதிக கேள்விகள் கேட்டீர்கள். இன்னும் சொல்லப் போனால் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணின அத்தனை பேரில் நீங்கள் மிக அதிகமான கேள்விகளைக் கேட்டது சந்தியாவிடம்தான். அதே போல் நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்ன ஒரே கேண்டிடேட் அந்தப் பெண்தான். அப்படியிருந்தும் நீங்க வேணாம்ன்னு சொன்னால் என்ன அர்த்தம்..நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்."
"உங்களுடைய குற்றச்சாட்டையே எடுத்துக் கொள்வோம். சந்தியா ஒரு பெண் என்பதால் நான் வேண்டாம்ன்னு சொல்வதாய் சொல்கிறீர்களே.. நீங்களும் 'ஒரு பெண்என்பதாலேயே சந்தியாவை செலக்ட் பண்ணனும்னு சொல்கிறீர்கள்ன்னு நான் ஏன் சொல்லக் கூடாது..?"
"சொல்லலாமே.. தாராளமாய் சொல்லலாம்.. உண்மையும் அதுதான் மிஸ்டர் ஆதித்தன். நானும் ஒரு பெண் என்பதால்தான் தகுதியுள்ள பெண்ணிற்கு அநியாயம் நடந்து விடக்கூடாது என்று வாதாடுகிறேன்."
அதுவரை அமைதியாய் அவர்களது வாக்கு வாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் வாய் திறந்தார்.
"சந்தியாவை செலக்ட் பண்ணியது விமலா மட்டுமில்லை ஆதித்தன். நானும் தான். விமலா ஒரு பெண் என்பதால் சந்தியாவிற்கு சப்போர்ட் பண்ணிப் பேசுவதாக சொல்கிறீர்கள்.. நான் ஒரு ஆண்.. அந்தப் பெண்ணை செலக்ட் பண்ணியிருக்கும் இந்தக் கம்பெனியின் எம்.டி... என்னை என்ன சொல்லப் போகிறீர்கள்..?"
ஆதித்தன் மௌனம் சாதித்தான். அவன் வார்த்தைகள் அடங்கிப் போயின. நாராயணன் அந்தக் கம்பெனியின் எம்.டி. தியாகி தணிகாசலத்தின் நண்பரின் மகன். ஆதித்தனின் பின்புலம் அறிந்தவர். அவனது குணத்தைப் புரிந்தவர். கோபம் அதிகமிருந்தாலும் அதைவிட அதிகமான.. மிகமிக அதிகமான திறமையை உடையவன் ஆதித்தன். அந்தக் கம்பெனியில் ஆணி வேர் போன்றவன். அதன் வளர்ச்சிக்கு நேரம் காலம் பாராமல் உழைப்பவன். எனவே அவனைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த நாராயணன் எப்போதும் ஆதித்தனின் முடிவுகளில் தலையிட்டதில்லை. ஆனால் இப்போது நடப்பது விமலா சொல்வது போல திறமையான பெண்ணிற்கு நடக்கவிருக்கும் அநியாயம். அந்தக் கம்பெனியின் முதலாளி என்ற முறையில் ஆதித்தனின் இந்த செயல்பாட்டை அவர் தடுக்க வேண்டியது அவசியமாகி விட்டது.
"லுக் ஆதித்தன்.. நமக்கு வேண்டியது திறமையும் உழைப்பும். இது இரண்டும் அந்தப் பெண்கிட்ட இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. எனவே அந்தப் பெண்ணுக்கே அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் அனுப்பி விடுங்கள்.."
முதலாளியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுத் தானே ஆக வேண்டும்..விமலா வெற்றிப் பார்வையுடன் வெளியேறஅவள் மேலிருந்த கோபத்தை யார் மேல் காட்டலாம் என்ற கொதிப்புடன் வந்தவனின் கண்களில் பட்டுத் தொலைத்தாள் டெலிபோன் ஆபரேட்டர் சுசிலா. 
யாருடனோ அவள் போனில் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க இவன் வெறி கொண்ட வேங்கையாய் அவள் அருகில் சென்றான். இவன் வருவதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்த சுசிலா அருகே நிழலாடவும் நிமிர்ந்து ஆதித்தனைப் பார்த்தவள் பதறிப் போய் போனை வைத்தாள். 
ஆதித்தனின் பார்வை இரை தேடும் கழுகாய் முறைக்கஅவன்,
"ஏன் போனைக் கட் பண்ணிட்டிங்க..இன்னும் ரெண்டு மணி நேரம் பேசியிருக்கலாமே.. ஆபிஸ் நேரமும் முடிஞ்சிருக்கும். உங்களுக்கும் பொழுது போனது மாதிரி இருக்கும்.." என்றான் வெகு அக்கறையாக..
 அவசரமாய் எழுந்து நின்ற சுசிலா.
"இல்லை சார். வீட்டில் இருந்து முக்கியமான கால் வந்தது.." என்று நடுங்கினாள்.
"அதைச் சொல்லுங்க.. உங்க வீட்டில் இருந்து வரும் போன் கால்கள் தான் முக்கியமான கால்கள்.. இந்தக் கம்பெனிக்கு அதுதான் வேண்டும். வேறு.. ஏஜென்ஸி எடுத்தவங்க.. இனி எடுக்கப் போறவங்க.. டெண்டர் சம்பந்தமாக பேச வேண்டியவங்க.. யாருக்கும் இந்த லைன் கிடைக்கவே கூடாது. அதுவா இந்தக் கம்பெனிக்கு முக்கியம்..அவங்களுக்கு லைன் கிடைச்சு என்ன ஆகப் போகுது. நீங்க உங்க வீட்டுக்குப் பேசுவதற்காகத்தானே ஆபிஸில் போன் இருக்கு. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க.."
"சாரி சார்.." என்ற சுசிலாவின் கண்களில் நீர் தளும்பியது.
"இதில் ஒன்றும் குறைச்சலில்லை.. இந்தப் பெண்கள் எல்லோருக்கும் எப்படிம்மா முணுக்கென் பதற்குள் கண்ணில் தண்ணீர் வந்து விடுகிறதோ தெரியவில்லை. கண்ணில் டேம் கட்டி வெச்சி ருக்கீங்களா..உடனே பொலபொலன்னு மடை திறந்து கண்ணீர் விடறீங்களே.. ஏன் மேடம் இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு சீன் கிரியேட் பண்றீங்க. ஒழுங்கா வேலையைப் பாருங்கன்னு சொன்னால் ஏதோ பெரிய கொடுமை பண்ணி விட்டது போல் கண்ணீர் விட்டுக் கலக்குறீங்க. போங்க மேடம்வேலையைப் பாருங்க.." என்று திரும்பிய ஆதித்தன் மற்றவர்களில் யார் சிக்குவார்கள் என்பது போல் ஒரு பார்வை பார்க்க அத்தனை பேரின் நெஞ்சமும் அதிர மனதிற்குள் ஊரிலுள்ள கடவுள்களை யெல்லாம் காப்பாற்ற வரும்படி அழைத்தபடி வேலை செய்வதாக பாவனை செய்து கொண்டிருந்தார்கள். 
எரிச்சலுடன் ஆதித்தன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் அத்தனைப் பேரும் சொல்லி வைத்தாற் போல் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து பியூன் பரமசிவம் வந்து ஆதித்தனை வழி மறிக்க மீண்டும் அனைவரும் மூச்சுத் திணற மனதிற்குள் கடவுளை அழைக்க ஆரம்பித்தார்கள்.
"என்ன பரமசிவம்.. என்ன விசயம்..இத்தனை நேரமா எங்கே போயிருந்தாய்..இத்தனை நேரமா பெல்லடிச்சு ஓய்ந்து போனேன். முக்கியமான தபாலைக் கொண்டு போய் ஸ்பீடு போஸ்டில் அனுப்பி விட்டு வரணும்னு உன்னைத் தேடினால் எங்கே மாயமாய் மறைந்து விட்டாய்.. என்ன வேலை வேண்டுமா..வேண்டாமா..வேலையை விட்டுத் தூக்கி விடவா..?" என்றான் ஆதித்தன் கோபமான குரலில்.
"சார்.. சார்.. கோவிச்சுக்காதீங்க சார்.. பையனுக்கு ஒடம்பு சொகமில்லயாம்.. வீட்டிலிருந்து தகவல் வந்துச்சு. அதான் ஓடிப்போய் டாக்டரண்டை காமிச்சு ஒரு ஊசி போட்டு வூட்டில் வுட்டுட்டு ஓடியாந்தேன் சார்.. சார்.. சார்.. டாக்டர் பெரிசா என்னமோ சொல்லுறாரு. கொஞ்சம் காசு பத்தல.. கைமாத்து வாங்கிப் போலாமுன்னு ஆபிசுக்க ஓடியாந்தேன் சார்.."
"பையனுக்கு உடம்புக்கு என்ன..?"
"அது இன்னாமோ மலேரியாக் காய்ச்சலாம் சார்.. மாசக்கடைசியில மனுசனுக்கு சாப்பாட்டுக்கே தாளம் போடணும் சார். இதுல மலேரியா காய்ச்சல் வந்தா நான் இன்னா செய்வேன்..யாரைத் துட்டுக் கேட்பேன்..?"
"சரி சரி புலம்பாதே.. இந்தா வைத்துக் கொள்.." என்று பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுத்தவன் ஜநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
"செலவுக்கு வைத்துக் கொள். பையன் உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள். பத்தவில்லைன்னால் தயங்காமல் என்னிடம் கேள். இப்ப பெர்மிசன் போட்டுட்டு வீட்டுக்குப் போ.. நாளையிலிருந்து தேவையானால் லீவு போட்டுக் கொள்.." என்று கனிவான குரலில் கூறினான்.
பரமசிவம் கைகூப்பி வணங்கி விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தான். இதை என்னவென்று சொல்வது..கல்லுக்குள் ஈரமென்று சொல்வதா..ஆனால் இந்தக் கல் மனம் பெண்களுக்கு மட்டும் ஏன் இளக மாட்டேன் என்று இரும்பாகிறது. ஆண்களிடம் மட்டும் ஈரம் சுரக்கிறது..?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -9
அக்கினிப் பறவை -9
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-9_19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-9_19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy