உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -4

4 பெயர் தெரியாத பறவையின் பாட்டு.. உன் நினைவை என் மனதில் விதைத்தது.. வழக்கமில்லாத வழக்கமாக பத்மாவும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்த...


4
பெயர் தெரியாத பறவையின் பாட்டு..
உன் நினைவை என் மனதில் விதைத்தது..


வழக்கமில்லாத வழக்கமாக பத்மாவும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததில் அர்ச்சனாவுக்கு ஆச்சரியம்தான்.. அதைவிட பெரிய ஆச்சரியமாக அவள் உட்கார்ந்ததை பிரகாசம் மறுத்துப் பேசவில்லை...
ஏதோ ஒரு விதத்தில் கதிர்வேலன் அவரைக் கட்டுப் படுத்தி வைத்திருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவனை பிரகாசத்தினால் கடிந்து பேச இயலவில்லை என்பதை அவள் கண்கூடாக அங்கே கண்டாள்.. கோபத்தில் விரல்களை சோபாவின் மீது படிய விட்டு தாளம் போட்ட போதும் பத்மாவை அவர் தடுக்க வில்லை.. அதைப் போலவே பத்மாவும் அவரின் அனுமதியை எதிர்பார்க்காமல்.. கோபத்தை கண்டு கொள்ளாமல் கதிர்வேலனிடம் பேச ஆரம்பித்தாள்..
இப்படி ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக அவளுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருந்தவனோ வெகு இயல்பாக பத்மாவிடம் பேச ஆரம்பித்தான்..
"அண்ணனும் அண்ணியும் எப்படியிருக்காங்க கதிர்..?"
"இப்பக் கொஞ்சம் பரவாயில்லை அத்தை.. அப்பா தான் சோர்ந்து இருக்கிறார்.. அம்மா முதலில் இருந்ததைப் போல நடமாட்டமில்லாமல் முடங்கிக் கிடக்கிறதில்லை.. வீட்டையும்.. எங்களையும் நல்ல படியா பார்த்துக்கிறாங்க.. அப்பாவை கேரளா ஆயுர்வேத வைத்தியசாலையில சேர்த்திருக்கோம்.."
"கேட்கக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. ம்ஹீம்.. அண்ணனைப் போல ஒரு மனிதருக்கு இத்தனை துன்பங்கள் வரக் கூடாதுதான் அவர் ஓடியாடி வாழ்ந்த வாழ்வை மறக்க முடியாதுதான்.. அண்ணன் நினைப்பில அண்ணி இருக்கிறதில ஆச்சரியம் ஒன்னுமில்லை கதிர்.. அவர் அப்பேற்பட்ட மனிதர்.. அவர் இப்படி முடங்கிப் போயிட்டாரே.."
சோமசுந்தரத்தைப் பற்றிய அவளின் நினைவு கூர்தலை தலையை அசைத்து ஆமோதித்தான் கதிர்வேலன்.. பத்மாவும் அவனும் சோமசுந்தரத்தின் நினைவில் மௌனமாக இருந்தார்கள்..
அவர்களின் பேச்சை மறைமுகத் தாக்குதலைப் போல உணர்ந்தார் பிரகாசம்.. அவரின் முகம் கருத்தது..
"உன் அண்ணன்தான் மனிதர்.. மத்தவங்கள்ளாம் அப்படியில்லைங்கறியா..?" கடுமையாக மனைவியிடம் கேட்டார்..
பத்மா திகைத்தாள்.. அவள் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லையே...  பாசமுள்ள ஒரு மனிதரின் குண இயல்புகளை உயர்த்திப் பேசுவது இயற்கையான ஒன்றுதானே..
அவளின் பதட்டத்தைக் கண்ட அர்ச்சனா தாய்க்கு ஆதரவாகப் பேச வாய் திறப்பதற்குள் கதிர்வேலன் பேச ஆரம்பித்து விட்டான்..
"அவங்க அப்படிச் சொல்லலையே.." நிதானமாகச் சொன்னான்..
"பாருங்க கதிர்வேலன்.. இது எனக்கும்.. என் மனைவிக்குமான பேச்சு.. நீங்க கெஸ்ட்.. இதிலெல்லாம் தலையைக் கொடுக்காதீங்க.." எரிச்சலுடன் சொன்னார் பிரகாசம்..
"அது எப்படிங்க..? நீங்க பேசறது எங்க அப்பாவைப் பத்தி எங்க அத்தை பேசின பேச்சைத்தான்.. அவங்க என்ன சொன்னாங்க..? அவங்க அண்ணனைப் பத்தி உயர்வா.. நல்லதா.. நாலு வார்த்தை பேசினாங்க.. மத்தபடி வேற யாரையும் குறை சொல்லலையே..?"
கதிர்வேலனின் கேள்வியில் உன்னைக் குறை சொல்லவில்லை என்ற செய்தி பொதிந்திருக்க.. அதற்கு மேலும் பத்மாவிடம் இடக்காக பேச முடியாமல் கடுப்பாகிப் போனார் பிரகாசம்..
"எங்க ஊருப் பக்கம்தான் சொல்லுவாங்க.. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்ன்னு.." மறைமுகத் தாக்குதலைத் தொடுத்தான் கதிர்வேலன்...
அதற்கு மேலும் அங்கே அமர்ந்து அவனுடன் அளவளாவ பிரகாசத்தினால் முடியுமா என்ன..? அவர் காபிக் கோப்பையை காலி செய்து டீப்பாயின் மீது கடாசி விட்டு மகளைப் பார்த்தார்..
"காலேஜீக்குக் கிளம்பலை..?"
மகள் அங்கே அமர்ந்திருப்பதை அவர் விரும்ப வில்லை என்பதை அவரது கேள்வி உணர்த்தியது.. எப்போதும் இது போன்ற பிரகாசத்தின் மறைமுகக் கட்டளைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு அதைப் போல செய்து விடும் வழக்கமுடைய அர்ச்சனா அன்று மட்டும் அசைந்து கொடுக்கவில்லை..
அவளுடைய அம்மாவின் அன்புக்கும்.. பாசத்துக்கும் பாத்திரமான அவளின் ஒன்று விட்ட அண்ணனின் மகன் வந்திருக்கிறான்.. பத்மாவும் அவனிடம் மனம் விட்டு உரையாடிக் கொண்டிருக்கிறாள்.. அப்படிப்பட்ட தருணத்தை பார்த்து ரசிப்பதை அவள் தவற விடலாமா..?
"காலேஜீக்கு கிளம்ப இன்னும் டைம் இருக்குப்பா.." என்றாள்..
"ஏம்மா.. நானே ஆபிஸிக்கு கிளம்பப் போறேன்.. நீ இன்னும் டைம் இருக்குங்கறே.." பிரகாசம் அவளைக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார்...
"இது எக்ஸாம் டைம்ப்பா.. லேட் ஆகும்.. நீங்க கிளம்புங்க.." என்று சொல்லி விட்டாள் அர்ச்சனா..
அதற்கும் பத்மாவை குறிவைத்து ஒரு முறைப்பை முறைத்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு அகன்றார் பிரகாசம்..
"ஹப்பா.. இப்பத்தான் நிம்மதியா மூச்சு விட முடியுது.. இவ்வளவு நேரமா மூச்சு முட்டுச்சு.. எப்படித்தான் நீங்க இந்த வீட்டிலே காலம் தள்ளறீங்களோ.." பத்மாவிடம் சொன்னான் கதிர்வேலன்..
அர்ச்சனாவுக்கும் அப்படித்தான் இருந்தது என்றாலும் அதை கதிர்வேலன் வாய் விட்டுச் சொன்னதை அவள் விரும்பவில்லை...
ஆயிரம்தான் குறை இருந்தாலும் பிரகாசம் அவளுடைய அப்பா.. அவரைப் பற்றிக் கதிர்வேலன் எப்படி.. அப்படிச் சொல்லலாம் என்ற கோபம் அவளுக்குள் எழுந்தது..
"ஹலோ.. என்ன சார்.. ஊரில இருந்து எங்க அம்மாவுக்கு சொல்லிக் கொடுக்கனும்னுதான் கிளம்பி வந்தீங்களா..?" முறைப்புடன் கேட்டாள்..
"வேற வழி.. அப்படியாப்பட்ட நிலைமையிலதானே எங்க அத்தையை நீங்க வைத்திருக்கீங்க..? வாயில்லாப் பூச்சிக்கு வாய் வர வைக்கனும்னா யாராவது ஒருத்தங்க ஊருப்பக்கமிருந்து வந்து சொல்லிக் கொடுத்தாத்தான உண்டு.." அலட்டிக் கொள்ளாமல் அவன் பதில் சொன்னான்...
"எங்க அம்மாவுக்கு சொல்லிக் கொடுக்க நாங்க இருக்கோம்.. அவங்க ஒன்னும் தனி ஆளில்ல.." படபடத்தாள் அர்ச்சனா..
"நாங்கன்னா..? யாரு.. யாரு..?" அவன் விசாரித்தான்.
"நாங்கன்னா.. நாங்கன்னா.. நான் மட்டும்தான்.."
"அதானே பார்த்தேன்.. என்னடா அத்தைக்கு வாய் வாரதில என் மாமனுக்கு இஷ்டமிருக்காதேன்னு நினைச்சேன்.. நீங்களும் சொல்லிட்டீங்க.. அதான் தெரியுதில்ல.. நீங்க ஒன் வுமன் ஆர்மின்னு.. உங்க அம்மாவ நீங்க மட்டும்தான் காபந்து பண்ணியாகனும்.. இந்த லட்சணத்தில எதுக்காக உங்க அப்பாவ கூட்டணிக்கு கூப்பிடறிங்க..?"
"ஹலோ.. எங்க அப்பாவை ஓவராக் கிண்டல் பண்ண வேண்டாம்..."
"பண்ணினா..? என்ன பண்ணுவீங்க..? இந்த கோபத்தை எங்க அத்தையை பாதுகாக்கிறதிலயும் காட்ட வேண்டியதுதான..?"
"நாங்க காட்டலைன்னு உங்களுக்குத் தெரியுமா..?"
"திரும்பவும் 'நாங்க'ளா..?"
"ஹலோ.. என்ன நீங்க.. வக்கீலைப் போல மடக்கி.. மடக்கி.. கேள்வி கேட்கறிங்க.. இதுக்குத்தான் ஊரில இருந்து வந்தீங்களா..?"
"ஆமான்னுதான் வைச்சுக்கங்களேன்.."
அவர்கள் இருவரும் மோதிக் கொள்வதை ரசித்துக் கொண்டிருந்த பத்மா வாய்விட்டுச் சிரித்தாள்.. அவள் சிரிக்கும் போது அவள் கண்களும் சேர்ந்து சிரித்த அழகைக் கண்டு சிலிர்த்தாள் அர்ச்சனா..
'இப்படியொரு சிரிப்பை அம்மா சிரித்து எவ்வளவு நாளாகிருச்சு..'
மகளின் மனதில் ஓடும் எண்ணத்தை அறியாதவளாக அவள் கன்னம் தொட்டுக் கொஞ்சினாள் பத்மா..
"என் பொண்ணுக்கு எதுக்கு இம்புட்டுக் கோபம்..?"
"கோபமெல்லாம் ஒன்னுமில்ல.."
"அதைவிடு.. நீயென்ன உன் அத்தானை 'அத்தான்'னு கூப்பிடாம ஹலோ.. ஹலோன்னு போன் பேசற..? ஏன் கதிர்.. நீயும் தான் உன் அத்தை மகளை வா.. போன்னு கூப்பிடாம வாங்க.. போங்கன்னு பேசி வைக்கிற.. இங்கே என்னதான் நடக்குது..?"
அர்ச்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது..
'அத்தானா.. இவனா..' அவனைப் பார்த்தாள்..
அவன் முசுட்டு முகத்துடன் அவளை முறைத்ததில் அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
'இவனை அத்தான்னு கூப்பிட்டாலும்..' அவள் மனம் அலுத்துக் கொண்டது..
"ஆகிற பேச்சைப் பேசுங்கம்மா.." தாயிடம் எரிந்து விழுந்தாள்..
"இதாடி ஆகாத பேச்சு..?" பத்மா அதிசயித்தாள்..
"என்னத்துக்காக யாரையும் நான் அத்தான்னு கூப்பிடனும்..?"
பதிலுக்குப் பதில் என்ற நினைவுடன் அவனை முறைத்தபடி கேள்வி கேட்டாள் அர்ச்சனா.. அவன் எனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லையென்ற ரீதியில் பட்டுக் கொள்ளாத பார்வை பார்த்தபடி யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தான்..
"என்னத்துக்கா..? சரியாப் போச்சு போ.. முறை மாப்பிள்ளையை முறை சொல்லிக் கூப்பிடாம வேறு எப்படிக் கூப்பிடுவ..?" பத்மா சீண்டினாள்..
'முறைமாப்பிள்ளையா..?'
எதை வைத்து அவனை முறைமாப்பிள்ளையென்று அவளுடைய அம்மா சொல்கிறாள் என்ற நினைவுடன் விழியுயர்த்தி அவனைப் பார்த்த போது அவனின் முறைப்பு அவள் கண்ணில் பட்டது..
'ம்ஹீம்.. இந்த முறை.. முறைத்தால்.. முறை மாப்பிள்ளைன்னு சொல்லாம வேற எப்படிச் சொல்லு வாங்களாம்..?' அவள் முடிவுக்கு வந்தாள்..
"ம்மா.. திடிர்ன்னு யாரையும் அத்தான்.. பொத்தான்னு கூப்பிட என்னால முடியாது.." அவள் அறிவிப்பு விடுத்தாள்..
"இங்கேயும் அப்படித்தான் அத்தை.. பணக்காரங்க பெத்த மகளை வா.. போன்னு கூப்பிட என்னாலயும் முடியாது.." அவனும் பதில் அறிவிப்பைக் கொடுத்தான்..
"என்னவோ செய்ங்க.." என்று சொல்லி விட்ட பத்மா..
"ராதா எப்படியிருக்கா கதிர்.." என்று விசாரித்தாள்..
"வளர்ந்துட்டா அத்தை.. காலேஜ் போய்கிட்டு இருக்கா.." கதிர்வேலனின் முகத்தில் பெருமிதம் வந்திருந்தது..
'தங்கை பாசமாக்கும்.. பாசப் பயிரை வளர்த்தாகிற தாக்கும்..' மனதுக்குள் நொடித்துக் கொண்டாள் அர்ச்சனா.
"என்ன படிக்கிறா..?"
"வேற என்ன..? எல்லோரும் படிக்கிறதுதான்.. பி.ஈ." என்றான் கதிர்வேலன்..
"அதைச் சொல்லு.. இங்கேயும் அதே கதைதான்.." மகளைக் கை காட்டினாள் பத்மா..
'இப்ப இதைச் சொல்லச் சொல்லி இவன் கேட்டானா..?'
அர்ச்சனாவுக்கு எரிச்சலாக இருந்தது.. அவன்தான் அர்ச்சனாவைப் பற்றிய எதையும் அசட்டையாக கேட்டுக் கொள்கிறானே.. அவனிடம் போய் இவற்றை ஒப்பித்துத்தான் ஆக வேண்டுமா..?
அவள் நினைத்ததைப் போலவே பத்மாவின் வார்த்தைகளுக்கு அவன் முகத்தில் எந்த விதமான பிரதிபலிப்பும் ஏற்படவில்லை.. லேசான தலையசைவு கூட இல்லாமல் செய்து வைத்த சிலையைப் போல உட்கார்ந்திருந்தான் அவன்..
அர்ச்சனாவின் முகம் சிவந்து விட்டது.. அவளை இந்த அளவுக்கு அவன் அலட்சியப் படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
'இவன்கூட உட்கார்ந்து பேசனும்னு நினைச்சேனே..' தன்னைத்தானே திட்டிக் கொண்டு அவள் எழுந்து கொள்ள முனைந்தாள்..
"எங்கே போற அர்ச்சனாம்மா..?" அவசரமாக கேட்டாள் பத்மா..
"என்னம்மா இது..? நான் காலேஜீக்கு கிளம்ப வேண்டாமா..? இன்னைக்கு எக்ஸாம்மா.. விடியவிடிய தூங்காம படிச்சுக்கிட்டு இருந்தவளைப் பார்த்துக் கேட்கிற கேள்வியா இது..? உங்க அண்ணன் மகனைப் பார்த்ததும் பெத்த பெண்ணை மறந்துட்டிங்களே.." அர்ச்சனா குறைபட்டாள்..
"அதானே பார்த்தேன்.." அமர்த்தலாகச் சொன்னான் அவன்..
'இவன் எதைப் பார்த்தான்..?' அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"நானும் நீங்க வந்ததில இருந்து கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கேன்.. அதென்ன.. எதுக்கெடுத்தாலும்.. 'அதானே பார்த்தேன்'ங்கிற டயலாக்கை அள்ளி விடறிங்க.. இதைத்தவிர வேற பேச்சை பேச வராதா..?"
அவனை மடக்க வாய்ப்புக் கிடைத்து விட்ட சந்தோசத்தோடு இடக்காக கேள்வி கேட்டாள் அர்ச்சனா..
"ஸோ வாட்..? அது என்னோட பேவரிட் டயலாக்காவே இருக்கட்டுமே.. அதை திரும்பத்திரும்ப நான் ரீபீட் பண்ணக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா..?" அவன் அயராமல் கேள்வி கேட்டான்..
"இல்லைதான்.." அரை மனதாக ஒப்புக் கொண்ட அர்ச்சனா..
"இப்ப எதுக்காக உங்க பேவரிட் டயலாக்கை அப்ளை பண்ணினீங்க..?" என்று கேட்டாள்..
"உங்க அப்பாவோட பெண்ணாச்சே.. இப்படித்தானே பேசுவீங்கன்னு நினைத்தேன்.. சொன்னேன்.." என்றான் அவன்..
"என்னங்க இது வம்பாப் போச்சு.. உங்க அத்தைங் கிறதுக்காக.. இவங்க என்னைப் பெத்த அம்மாவா இல்லாம ஆகிடுவாங்களா..?"
"ஆக மாட்டாங்கதான்.."
"என் அம்மாகிட்ட நான் உரிமையா கேள்வி கேட்கிறேன்.. அதில உங்களுக்கென்ன போச்சு..?"
"எதுவும் போகலைதான்.."
"தெரியுதில்ல.. அடக்கி வாசிங்க.."
"அதையும் செய்யலாம்தான்.."
'இவனென்ன என்னைக் கிண்டல் பண்றானா..?'
அர்ச்சனாவுக்கு சந்தேகம் வந்து விட்டது.. அவன் முகத்தை உற்றுப் பார்த்தால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சமர்த்துப் பிள்ளையாக அவன் நின்றான்..
"உங்களுக்கு என்னதான்ம்மா வேணும்..?"
அவனிடம் பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று பத்மாவிடமே அழமாட்டாத குறையாக வினவி வைத்தாள் அர்ச்சனா..
"உன் அத்தானை கெஸ்ட் ரூமுக்கு யார் கூப்பிட்டுக் கிட்டுப் போறது..?" பத்மா கேட்டாள்..
"முதல்ல அத்தான்னு சொல்றதை நிறுத்துங்க.. இவரென்ன பச்சைப் புள்ளையா..? கையைப் பிடிச்சுத்தான் அழைச்சுக்கிட்டுப் போகனுமா..? மாடியில இருக்கிற கெஸ்ட் ரூமுக்குப் போக இவருக்கு வழி தெரியாதா..? அது தெரியாமலா இந்த அளவுக்கு வாய் பேசறார்..?"
உதட்டை மடித்துச் சுழித்து அழகு காட்டியபடி கேட்டாள் அர்ச்சனா.. அதை ஒருமார்க்கமாகப் பார்த்தபடி..
"நான் பச்சைப் புள்ளைன்னு அந்தப் பச்சைப் புள்ளை கூடச் சொல்லாது.." என்றான் கதிர்லேவன்...
"அடேங்கப்பா.. பெரிய உண்மை விளம்பிதான்.." மெச்சிப் போனாள் அர்ச்சனா..
"இல்லையா பின்னே.." அவன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்..
"ஆனாலும் சாரே.. உங்க அத்தைக்கு இப்படியாப் பட்ட அண்ணன் மகன் இருப்பார்ன்னு நேத்து வரை எனக்குத் தெரியாது.." தோளைக் குலுக்கினாள் அர்ச்சனா..
"இப்பத்தான் தெரிஞ்சிருச்சில்ல.. என்ன செய்கிறதாய் உத்தேசம்..?" என்றான் அவன்..
"எதுவும் செய்து என் அம்மாவின் தீராத பகைக்கு ஆளாகனும்கிற உத்தேசம் எனக்கில்லை.. ஆடிக்காத்தில அம்மியே பறக்கிறப்ப சின்னப் பூவால என்ன பண்ண முடியுமாம்..?" கை விரித்தாள் அர்ச்சனா..
"எதுக்காக இந்த உவமையாம்..?" நெற்றிப் புருவங்களை மேலேற கேள்வி கேட்டான் அவன்..
"ஆனானப்பட்ட அப்பாவையே அசர வைச்சுட்டிங்க.. நானெல்லாம் எம்மாத்திரம்ன்னு கேட்கத்தான் இந்த உவமை.." விளக்கம் சொன்னாள் அர்ச்சனா..
"ஆக.. எனக்கு கைடு வேலை பார்க்க ஒப்புக்கறிங்க..?"
"வேற வழி..? அம்மா கையால நான் சாப்பிட்டாகனுமே.."
அர்ச்சனா பானுவை அழைத்து அவன் பெட்டியை மாடியிலிருந்த விருந்தினர் அறைக்கு கொண்டு போகச் சொல்லி விட்டு.. அவனை ஓர் பார்வை பார்த்தாள்.. பாடியேறினாள்.. அவன் பத்மாவிடம் தலையசைத்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்...
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் விழிகளில் சந்தோசம் வந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -4
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -4
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirththeneunnaaleuyirththene-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirththeneunnaaleuyirththene-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy