உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -9

9 உன் மனதில் என்னவென்று.. உணராத போதும்.. என்னைக் கண்டால் உனது கண்கள்.. மின்னுவதே எனக்குப் போதும்.. அவன் தொலைதூர தொடுவானத்தை...


9
உன் மனதில் என்னவென்று..
உணராத போதும்..
என்னைக் கண்டால் உனது கண்கள்..
மின்னுவதே எனக்குப் போதும்..


அவன் தொலைதூர தொடுவானத்தை வெறித்துப் பார்த்தபடி கனத்த குரலில் பேசினான்.. அவன் குரலில் கவிந்திருந்த துயரத்தில் அவள் மனம் விம்மியது.. எதற்காக இந்தத் துயரம் என்று தெரியாத போதும்.. அவள் மனதில் இனம் விளங்கா உணர்வுகளை விதைத்தவனின் துன்பத்தில் அவள் மனமும் துயர் கொண்டது..
"என்ன ஆச்சு..?"
கவலையுடன் அவள் கேட்டதும் சமாளித்துக் கொண்டவனாக அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..
"பிரச்சனை பெரிசானதில்ல.. எதையும் எதிர் நோக்க எனக்குச் சக்தியில்லாம போயிடலை.. இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன்.. உன்னை இன்னைக்குக் காலையிலதான் பார்த்திருக்கேன்.. பார்த்தவுடன் பிடிச்சுப் போச்சு.. அத்தை மகங்கிற உறவு வேற.. அதிகப்படியா பேசிப் பழக ஆர்வம் வந்துச்சு.. மத்தபடி இது காதல் இல்லை.."
அவள் முகம் பார்க்காமல் அவன் இதைச் சொன்னதில் அவள் மனம் வலித்தது.. வெறும் பனிரெண்டு மணி நேரம் பழக்கத்தில் காதலித்து விட முடியாது என்பதை அவளும் நினைத்துப் பார்த்தாள்.. வெறும் ஈர்ப்பினால் ஏற்படும் உணர்வலைகளை காதலென்று கணித்து விடலாமா..?
"எங்க ஊருப் பக்கத்தில அத்தை மகள்.. மாமன் மகள் உறவு முறையில் இருக்கிறவங்களை வம்பிழுத்துப் பேசுவோம்.. கேலி செய்வோம்.. அந்தப் பழக்கத்தில்தான் உன்னிடமும் கேலி பேசினேன்.. ஆனால் அர்ச்சனா.. அதை வெறும் உறவு முறைக்காக மட்டும் செய்யலை.. எனக்கு உன்னைப் பிடித்திருந்தது.. கேலி பேசினேன்.. போதுமா..? உன் கேள்விக்கு விடை கிடைச்சிருச்சா..?" இதமாக அவன் கேட்டான்..
"ம்ம்ம்.." அவள் முணுமுணுத்தாள்..
"நீ தேவதை அர்ச்சனா.." அவன் சிரித்தான்..
எதையோ சொல்ல வந்தவன் அதைச் சொல்லாமல் தோளை குலுக்கி விட்டு மௌனமானான்.. மாலை மயங்கி இருள் சூழ ஆரம்பித்ததை உணர்ந்தவன்.. அவளைப் பார்த்தான்..
"இதுக்கு மேலே நீ என்கூட தோட்டத்தில் தனியா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கிறது நல்லது இல்ல அர்ச்சனா.."
"யாருக்கு..?"
கிளம்ப வேண்டுமே என்ற எரிச்சலுடன் அர்ச்சனா கேட்டுவிட்டாள்..
"வேறு யாருக்கு..? எல்லாம் உன் அப்பாவுக்குத் தான்.." என்று அவன் சொல்லவும் சிரித்து விட்டாள்..
அவளுடன் சேர்ந்து அவனும் சிரித்தான்.. இருவரும் மனம் விட்டுச் சிரித்ததில் அவர்களின் மனங்கள் லேசானதை அவர்கள் இருவருமே உணர்ந்தார்கள்..
"படி அர்ச்சனா.." அவன் கனிவுடன் சொன்னான்..
"ம்ம்ம்.." குழந்தையாய் அவள் தலையசைத்தாள்..
"இதைச் சொல்லத்தான் நான் இங்கே உனக்hக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. உன் அப்பாவுக்கும் எனக்கும் இடையில் இருக்கிற கோபதாபத்தை கணக்கில் எடுத்துக்காதே.. அது உன் படிப்பைப் பாதிக்கக் கூடாது.. அப்படி பாதிக்கிறதைப் போல இருந்தா நான் உங்க வீட்டில் தங்காம ஹோட்டலில் ரூம்போட்டு தங்கிருவேன்..."
"வேண்டாம்.. வேண்டாம்.." அவள் அவசரமாகச் சொன்னாள்...
அதில் அவன் முகத்திலும் கண்களிலும் வெளிச்சம் பரவியது.. அவளையே பார்த்தவனின் பிரியமான பார்வை அவள் மனதை வருடிக் கொடுத்தது..
"நீ மட்டும் உன் அப்பாவுக்கு மகளா இல்லாம இருந்திருந்தா எவ்வளவோ நல்லா இருந்திருக்கும் அர்ச்சனா..."
அவனையும் அறியாமல் அவன் சொல்லி விட்டதில் அவள் முகம் மாறியது..
"ஏன்..?" என்று கேட்டாள் அவள்..
"விட்டுரு.." அவன் தோள்களைக் குலுக்கினான்..
"உங்களுக்கு ஏன் அப்பாவைப் பிடிக்கலை..?"
"அவருக்கும் என்னைப் பிடிக்காது.."
"அதுதான் ஏன்..?"
"ஏன்னா.. நான் என் அப்பாவுக்கு மகன்.. அதனால தான்.."
அவன் கைநீட்டி.. அவள் உச்சந்தலையைப் பற்றி அதை ஆட்டிச் சிரித்தான்.. அவனது உள்ளங்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளின் தலையில் மின்சாரம் இறங்கியதைப் போல இருந்தது.. அவன் கை அதை உணர்ந்ததைப் போல ஓர்நொடி தேங்கி நின்று பின்பு மெதுவாக அவள் முடி கோதி விலகியது..
"உன் தலைக்குள்ளே எதையும் போட்டுக் குழப்பிக்காதே.. படி.. அது மட்டும்தான் இப்ப உன் மனசில் இருக்கனும்.. செய்வியா..?"
வாக்குக் கேட்பதைப் போல அவன் கேட்டதும் அவள் மெதுவாக தலையசைத்தாள்..
"தேங்க்ஸ்.." என்றான்..
அவர்கள் மத்தியில் மீண்டும் மௌனம் வந்து அமர்ந்து கொண்டது.. அவன் எழுந்து போகாமல்.. அவளை எழுந்து போகச் சொல்லாமல் பக்கத்தில் இருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது...
"நின்னையே ரதியென்று..
             நினைக்கிறேனடி கண்ணம்மா.."
அவன் மெதுவான குரலில் பாட ஆரம்பித்ததும்.. அவள் ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.. அவன் அவளைப் பார்க்கவில்லை.. ஏதோ ஒரு மோன நிலையுள் அமிழ்ந்தவனைப் போல பாடிக் கொண்டிருந்தான்..
"தன்னையே சகியென்று..
             சரணமெய்தினேன்..."
அர்ச்சனாவையும் அந்த மோன நிலை அரவணைத்துக் கொண்டது... முன்னிரவின் காற்று அவர்களின் முகத்தின் மீது வந்து போதே.. பாடிய அவனும்.. பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அவளும் சிலைபோல இருந்தார்கள்...
"பொன்னையே நிகர்த்த மேனி..
             மின்னையே நிகர்த்த சாயல்.."
அவன் பார்வை அவள் மீது படிந்து பரவியதில்.. அவள் விழிகள் லேசாகக் கலங்கின.. இது என்ன புதுமாதிரியான உணர்வு என்று அவள் கலங்கிப் போனாள்..
"பின்னையே.. நித்ய கன்னியே..
             கண்ணம்மா..!"
கண்ணம்மாவென்று அவன் உணர்ச்சிப் பெருக்குடன் அழைத்தபோது பாரதியின் கண்ணம்மாவாக அவள் மாறிவிடக் கூடாதா என்று அவள் பரிதவித்துப் போனாள்..
"மாறனம்புகள் என்மீது..
             வாரி வாரி வீச நீ
    கண் பாராயோ.. வந்து சேராயோ..
             கண்ணம்மா..."
அர்ச்சனா அவனுடம்பில் துளைத்த கண்ணுக்குத் தெரியாத மாறனின் மலர் அம்புகளைத் தேடுபவளைப் போல தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் எழுந்து விட்டான் அவள் முகம் பார்க்காமல்...
"படிப்பியில்ல.." என்று கேட்டான்...
"ம்ம்ம்.." அவள் தலையசைத்தாள்..
விர்ரென்று போய் விட்டான்.. அர்ச்சனாவை தனிமை சூழ்ந்து கொண்டது... அவளுக்கு அந்தத் தனிமை வேண்டியிருந்தது... எழுந்து போக மனமில்லாமல் அமர்ந்திருந்த போது பத்மா அவளைத் தேடியபடி தோட்டத்திற்கு வருவது தெரிந்தது...
"அர்ச்சனா.." அவளின் அழைப்பில்..
"அம்மா.." என்று அர்ச்சனா எழுந்துகொண்டாள்..
"நீ இங்கே இருக்கேன்னு கதிர் சொன்னான்.. வா.. வா.."
அவளைத் தனிமையில் விடக் கூடாது என்ற அவனது எண்ணத்தை புரிந்து கொண்டவளாக அவள் எழுந்து சென்றாள்.. மாடி ஹாலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள்.. அவனைப் பற்றிய நினைவுகள் வந்த போது  'படி' என்ற அவனின் கட்டளையும் சேர்ந்து நினைவுக்கு வந்ததில்.. பல்லைக் கடித்தபடி அவன் நினைவுகளைத் துரத்திவிட்டு படிப்பில் ஆழ்ந்தாள்..
இரவு உணவின் போது டைனிங் ஹாலில் அவன் இல்லை.. அதில் பிரகாசம் நிம்மதியானதைப் போல அர்ச்சனாவுக்குத் தோன்றியது.. சாப்பிட்டதாக பெயர் பண்ணி விட்டு எழுந்து கொண்டவள்.. பத்மாவிடம் ரகசியமாக..
"உங்க அண்ணன் மகன் எங்கேம்மா..?" என்று விசாரித்தாள்..
"வேலையிருக்காம்.. ரூமுக்கே டிபனைக் கொடுத்து விடச் சொல்லுச்சு.." பத்மா பரபரப்பாக விரைந்தாள்...
அவளை சந்திப்பதை அவன் தவிர்ப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. அது அவளின் அப்பாவும் கூட இருப்பார் என்பதினால் இருக்கலாம் என்று அவள் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்..
அன்று இரவு வெகுநேரம் படித்தாள்.. மறுநாள் அதிகாலையில் விழிக்கும் போதே அவனை அவள் மனம் தேடியது.. அவன்தான் அவள் கண்ணில் அகப்படாமல் எங்கோ ஒளிந்து கொண்டான்...
"கதிர் லேட்டாச் சாப்பிட வருதாம்.."
காலை உணவின் போது பத்மா சொன்னாள்..
'இப்பவும் அவனைப் பார்க்க முடியாதா...?'
ஏமாற்றத்தில் முகம் வாட அவள் வாசலுக்கு வந்து காத்திருந்த காரில் ஏறப் போன போது...
"பெஸ்ட் ஆஃப் லக்.." என்ற குரல் கேட்டது..
மனம் துள்ள திரும்பிப் பார்த்தாள்.. அங்கே அவன் தான் நின்றிருந்தான்.. அவள் பார்வையைச் சந்தித்ததும் அவனுடைய வலது கையின் பெருவிரலை உயர்த்திக் காண்பித்தான்..
"நல்லாப் பரிட்சை எழுதனும்.."
"தேங்க் யு.."
முகம் மலர அவள் காரில் ஏறினாள்.. அந்த குழந்தை முகத்தின் மலர்ச்சியைக் கண்டதும் இவள் தான் எப்பேற்பட்டவளாக இருக்கிறாள் என்று அவன் மனம் நெகிழ்ந்தது..
பிரியத்தைத் தேடுகிறவளாக.. அந்தப் பிரியத்தை அளிப்பவளாக அவள் இருந்ததில் அவன் மனம் குளிர்ந்தது..
அன்றைய பரிட்சையை அர்ச்சனா வெகு சிறப்பாக எழுதினாள்... அதை நண்பகல் உணவு நேரத்தில் வீடு திரும்பியவள் அவனிடம் கூறியபோது அவன் உண்மையான மகிழ்வை முகத்தில் காட்டினான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -9
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -9
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy