உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -6

6 வானவில்லின் வர்ணங்களைப் பார்த்தபோது.. உன் முகத்தை ஏன் என் மனம் நினைத்தது.. ? நீபாவை அவள் வீட்டில் கண்ட நொடி முதல் அந்த நொடி வ...


6
வானவில்லின் வர்ணங்களைப் பார்த்தபோது..
உன் முகத்தை ஏன் என் மனம் நினைத்தது..?


நீபாவை அவள் வீட்டில் கண்ட நொடி முதல் அந்த நொடி வரை அவளை முறைத்தபடி தான் இருந்தாள் அர்ச்சனா.. எத்தனை தரம் முறைத்திருப்பாளென்று அவளுக்கே கணக்கு தெரியவில்லை.. அப்படி அவள் முறைத்தும் அதை கண்டு கொள்ளாமல் புன்னகை அரசியாகவே நீபா இருந்து அர்ச்சனாவுக்கு மயக்கத்தை வரவழைத்தாள்..
சேர்ந்து படிக்க வந்ததாக பத்மாவிடம் சொன்னவள் அதை மறந்துபோனவளாக.. கதிர்வேலனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததை அர்ச்சனா ரசிக்கவில்லை.. எதற்காக அவளுக்கு கோபம் கோபமாக வருகிறது என்று அவளுக்கே பிடிபடவில்லை..
"ஏன் அத்தை.. இப்ப நான் ஏதும் ஜோக் சொன்னேனா..?" என்று கேட்டு வைத்தான் கதிர்வேலன்.
"இல்லையே கதிர்.." பத்மா கையை விரித்தாள்..
"அப்புறம் எதுக்காக இவங்க இந்தச் சிரிப்பு சிரிக்கிறாங்க..?"
கதிர்வேலன் கேள்விக்கு பத்மா என்ன பதிலைச் சொல்லுவாள்..? அவன் கேட்டதில் நியாயம் இருந்ததே..
"என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க சார்..?" என்று நீபா கேட்டதற்கு..
"சோபாவில் உட்கார்ந்திருக்கேன்.." என்று இடக்காக கதிர்வேலன் பதில் சொன்னான்தான்..
உடனே "குட் ஜோக்.." என்றபடி நீபா சிரிக்க ஆரம்பித்து விட்டால் கதிர்வேலன் அந்தக் கேள்வியை கேட்க மாட்டானா..? நீபா விழுந்து.. புரண்டு.. சிரிக்கும் அளவிற்கு அவன் நகைச்சுவை எதையும் சொல்லி விடவில்லையே...
'இந்தப் பெண் படிக்கத்தான வந்தது..?' என்ற நினைவுடன்..
"அர்ச்சனா.. நீபாவை உன் ரூமுக்கு கூப்பிட்டுக் கிட்டுப் போம்மா.." என்றாள் பத்மா..
கதிர்வேலன் நிமிர்ந்து அர்ச்சனாவின் முகத்தைப் பார்த்தான்...
'ஆமாமாம்.. நான் கூப்பிட்டவுடன் இவ வந்துட்டுத் தான் வேற வேலையைப் பார்ப்பா..' என்று நினைத்துக் கொண்ட அர்ச்சனா பத்மாவின் திருப்திக்காக..
"வாடி.. படிக்கப் போகலாம்.." என்று சொல்லி வைத்தாள்..
அவள் நினைத்ததுதான் நடந்தது..
"அர்ச்சனா.. நீயும்.. நானும் படிச்சா என்னத்தை மண்டையில ஏறப் போகுது..?" நீபா கேட்டாள்..
"அதுக்கு..?" சந்தேகமாக அவளைப் பார்த்தாள் அர்ச்சனா...
"அதுவே சார் முன்னாலே படிச்சோம்ன்னா சிலபஸில வர்ற சந்தேகத்தை அவர்கிட்டயே கிளியர் பண்ணிக்கலாம்.." நீபா கதிர்வேலனை ஆசிரியனாக்கும் முயற்சியில் ஈடுபட... அவன்
"என்னது..?" என்று கண்களை உருட்டி விழித்தான்..
"ஏன் சார் பயமுறுத்தறிங்க.. இப்பத்தானே நீங்க இன்ஜினியர்ன்னு சொன்னீங்க..?"
"சொன்னேன்தான்.."
"அப்ப இன்ஜினியரிங் படிக்கிறவங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் ஆகாதா..?"
"ஆகாதுதான்.."
"ஏன் சார்..?"
"எப்படிம்மா ஆகும்..? நானோ மெக்கானிக்கல் இன்ஜினியர்.. நீங்களோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கைப் படிக்கறிங்க.. இதில் நான் வந்து உங்களுக்கு என்னத்தைச் சொல்லிக் கொடுக்க..? புத்தியோடதான் பேசறிங்களா..?"
நீபாவை அவன் தாளித்ததில் அர்ச்சனா வெகு திருப்தியாக உணர்ந்தாள்.. அவனுடைய முசுட்டுத் தனத்தை அறியாமல் மாட்டிக் கொண்ட நீபாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது..
"ம்ஹீம்.. மெக்கானிக்கல் இன்ஜினியர்கிட்ட.. சாப்ட்வேர் சொலுசனைச் சொல்லித்தரச் சொன்ன அதிபுத்திசாலி நீங்களாத்தான் இருப்பீங்க.." அர்ச்சனாவைப் பார்த்தபடியே அவன் சொல்லி வைக்க..
"என்னையொன்னும் கூட்டுக்கு இழுக்க வேணாம்.." என்று சொல்லி விட்டாள் அர்ச்சனா..
"ஏனாம்..? கம்பைன் ஸ்டடி பண்ணனும்தான பேசிக்கிட்டிங்க.. அதில கம்பைன்னா.. இதிலயும் கம்பைன் தானே..?" புருவங்களை ஏற்றி இறக்கியவனின் கண்களில் சிரிப்பு இருந்தது..
"ஹலோ.. கம்பைன் ஸ்டடின்னு கதை சொன்னவ அவ.. நானில்ல.." முகத்தை திருப்பிக் கொண்டாள் அர்ச்சனா..
"ஹலோ வா..?"
அவன் எதையோ சொல்ல வாயெடுத்து விட்டு.. அதைச்சொல்லாமல் தோள்களை குலுக்கிக் கொண்டான்..
"அத்தை.. நான் வெளியே போயிட்டு வரேன்.." என்றபடி கிளம்பி விட்டான்..
அவன் கிளம்பி விடுவான் என்று நினைத்துப் பார்த்திராத நீபா
"ஹாவ்.." என்று கொட்டாவி விட்டாள்..
தூக்கம் சொக்கிய கண்களின் முன்னால் விரல்களால் சொடக்குப் போட்டபடி சாமியாடினாள்.. இத்தனை தூக்கத்தையும் அவள் எங்கே ஒளித்து வைத்திருந்தாள் என்று திகைத்துப் போனாள் பத்மா..
"ஆண்ட்டி.. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது.."
"அடடா.. அர்ச்சனாவோட ரூமில போய் தூங்கும்மா.."
"வேண்டாம் ஆண்ட்டி.. இடம் மாறிப் படுத்தா எனக்கு உறக்கம் வராது.."
"அடப் பாவமே.. இப்ப என்னம்மா செய்கிறது..?"
"நான் எங்க வீட்டில போய் தூங்கிக்கறேன் ஆண்ட்டி.."
"அப்ப குருப் ஸ்டடி..?"
"நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிட்டாப் போச்சு.."
இலகுவாகச் சொல்லி விட்டு நீபா போய் விட்டாள்.. அர்ச்சனா எரிச்சலுடன் தலையில் அடித்துக் கொண்டு மாடியேறி விட்டாள்.. சின்னதாக ஒரு குட்டித்
தூக்கம் போட்டால்தான் அன்றைய இரவில் அவளால் கண்விழித்துப் படிக்க முடியும்..
மாலை மயங்கும் வேளையில் கண் விழித்தாள் அர்ச்சனா.. பத்மா கொடுத்து விட்ட காபியைக் கொண்டு வந்து பானு கொடுத்து விட்டுப் போனாள்.. முகம் கழுவி சூடாய் காபியை உறிஞ்சிய போது அவளுக்கு தெம்பு வந்திருந்தது..
தலைவாரிப் பின்னலிட்டு.. லேசான ஒப்பனையுடன் புத்தகமும் கையுமாக மாடி ஹாலில் இருந்த சோபாவில் தஞ்சம் புகுந்தாள் அர்ச்சனா.. தலை தூக்காமல் படித்துக் கொண்டிருந்தவள் யாரோ அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றிய உள்ளுணர்வின் உந்துதலில் தலை நிமிர்ந்தாள்..
அங்கே சோபாவில் தோரணையாக சாய்ந்து.. கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் கதிர்வேலன்..
'இவன் எப்போ வந்தான்..?'
அர்ச்சனாவால் இயல்பாக படிக்க முடியவில்லை.. முன்னால் ஒருவன் உட்கார்ந்து மொச்சைக் கொட்டை கண்ணை விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் அவளால் எப்படித்தான் படிக்க முடியும்..?
தலையைச் சாய்த்து அவளையே கூர்மையாக பார்த்தபடி அவன் அமர்ந்திருந்ததில் அவள் பேசாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டாள்..
"படிக்கலை..?" வெகு அக்கறையாக அவன் வினவினான்..
"எப்படிப் படிக்கிறது..?" எரிச்சலுடன் அவள் சொன்னாள்..
"வாட் எ பிட்டி..! எப்படிப் படிக்கனும்னு உனக்குத் தெரியாதா..? அப்புறம் எப்படி இன்ஜினியரிங் காலேஜில சேர்ந்த..?"
அவன் இரக்கப்பட்ட விதத்தில் அவள் அவனை இமைக்காமல் பார்த்து வைத்தாள்.. அதே சமயத்தில் அவன் அவளை ஏகவசனத்தில் பேசுவதையும் கவனித்து விட்டாள்..
"என்னாச்சு..?" புருவங்களை உயர்த்தினாள்..
"எதைக் கேட்கிற..?" என்றான் அவன்..
"வா.. போ..ன்னு கூப்பிட்டாகிறது.. என்ன விசயம்..?"
"நீ என்னை விட இளையவள்தானே.. உன்னை வா.. போன்னு கூப்பிட்டாம எப்படிக் கூப்பிடறது..?"
இந்த ஞானோதயம் இவனுக்கு எப்படி ஏற்பட்டது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பினாள் அவள்..
"என்ன பேச்சையே காணோம்.." அமர்த்தலாக அவன் வினவினான்..
"நேரத்துக்கு ஒரு பேச்சை பேசறவங்ககிட்ட என்னத்தைப் பேசறது..?" சலித்துக் கொண்டாள் அர்ச்சனா..
"நேரத்துக்கு ஒரு பேச்சை நான்தான் பேசுகிறேனா..? அவ்விடத்தில் மட்டும் என்னவாம்..? காலையில யாரோ அத்தான்னு கூப்பிட மாட்டேன்னு வீட்டில முறைச்சாங்க.. அதுவே காலேஜ் போனதும் பிரண்டுகிட்ட.. நான் பார்க்க.. அட்டகாசமா.. ஹேண்ட்சம்மா இருக்கேன்னு சொல்லி வைச்சிருக்காங்க.. இதை என்னன்னு சொல்கிறது..? ம்ம்ம்..?"
அவன் புருவங்கள் வில்லாக வளைந்ததில் அவள் கையிலிருந்த புத்தகத்தை நழுவ விட்டாள்..
'இது இவனுக்கு எப்படித் தெரியும்..?'
"அதான்.. உன் பிரண்ட் கை கழுவுகிறேன் பேர்வழின்னு குழாயைத் திறந்து தண்ணீரை வேஸ்ட் பண்ணிக்கிட்டு கை கழுவாம நின்றுக்கிட்டுச் சொன்னாளே.. அப்போக் கேட்டேன்.."
அவள் மனதைப் படித்தவனைப் போல அவன் சொன்னான்..
"ஒட்டுக் கேட்டிங்களா..?"
அவனைப் பற்றிய அவளது விமரிசனத்தை அவன் அறிந்து கொண்டு விட்டானே என்ற பதட்டத்தில் எழுந்த எரிச்சலுடன் அவள் கேட்டாள்..
"ஒட்டுக் கேட்டேனா..? உன் பிரண்டோட வெங்கலத் தொண்டைக்கு நான் ஒரு கிலோமீட்டர் தள்ளி நின்னிருந்தாலும் என்காதில் அந்தப் பேச்சு விழுந்திருக்கும்.. தொண்டையா அது..? மைக்கே தேவையில்ல.. பேசாம உன் பிரண்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைச்சிரேன்.."
அக்கறையாக அவன் சொன்ன ஆலோசனையில் சிரிப்பு வந்த போதும் அவள் சிரிக்கவில்லை.. ஆனால் அவளின் முகம் அந்தச் சிரிப்பைக் காட்டிக் கொடுத்து விட்டதில்..
"சிரிப்பு வந்தால் சிரிச்சுரனும்.." என்றான் அவன்..
"இவர் பெரிய நகைச்சுவை மன்னன்.. இவர் பேசறதில நாங்க சிரிச்சுட்டோம்.." நொடித்தாள் அர்ச்சனா..
"நாங்கன்னு சொல்றதை விடவே மாட்டியா..?" என்று கேட்டான் அவன்..
"இப்ப அதிலதான் குறைவு வந்திருச்சா..?"
அவனைப் பார்க்காததைப் போல பார்த்தாள் அர்ச்சனா.. சாய்ந்து அமர்ந்திருந்த அவனது தோரணையில் ஓர் அரச கம்பீரத்தை அவளால் உணர முடிந்தது.. அவளுடன் பேசும் போது அடிக்கடி ஏறி இறங்கும் அவனது அடர்ந்த புருவங்கள் அவனது முக அழகை கூட்டிக் காண்பித்தன.. செதுக்கி வைத்ததைப் போன்ற முகவடிவில்.. கூர்மையான நாசியின் அடியில் இருந்த அடர்ந்த மீசை அவனது ஆண்மையின் அழகை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது..
'அழகாத்தான் இருக்கான்..'
அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..
எங்கோ பார்ப்பதைப் போல அவளின் பார்வையைக் கவனித்துக் கொண்டிருந்தவன் நமட்டுச் சிரிப்புடன்...
"முடிச்சாச்சா..?" என்று வினவியதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது..
அவனை அவள் பார்ப்பதை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தானா..?
அவள் முகம் சிவந்து விட்டது.. கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிப்பதைப் போல முகத்தை மறைத்துக் கொண்டாள்..
'நாளைக்கு எக்ஸாமுக்கு படிச்சாப்புலதான்..'
இப்படி ஒரு ஆணழகன் எதிரே அமர்ந்து அவளையே ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி கேலி பேசிக் கொண்டிருந்தால் எப்படித்தான் அவள் படிப்பாள்..?
"எப்படி..? தேறுவேனா..?" அவன் கண்சிமிட்டினான்.
'என்ன இது.. இப்படிச் சொல்லி வைக்கிறானே..' அவளுக்கு திரும்பவும் தூக்கிவாரிப் போட்டது..
"எத்தனை மார்க் கொடுப்ப..? நூற்றுக்கு நூறா..?" அவன் மீண்டும் கண்சிமிட்டியதில் அவளுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் பறந்தோடிப் போனது..
"ஹலோ.. உங்களுக்கென்ன கண்ணைச் சிமிட்டற வியாதி இருக்கா..?" வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவள் கேட்டாள்..
"இல்லையே.." உடனடியாக அவன் மறுத்தான்..
"வலிப்பு வந்ததைப் போல வெட்டி வெட்டி இழுத்துட்டு இல்லைன்னு வேற சொல்றீங்களா..?"
"முறைப் பெண்னைப் பார்த்தா எந்த முறை மாப்பிள்ளைக்கும் தானா இமையை வெட்டி.. வெட்டி இழுக்கத்தான் செய்யும்.. இதுக்கே வியாதின்னு பேரு வைச்சா.. இன்னும் என்னென்னவோ இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பேருவைப்ப..?"
'என்னென்னவோ இருக்கா..?'
அர்ச்சனாவுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமே சுத்தமாக மறந்து போய் விட்டது.. நழுவ விட்ட புத்தகத்தை எடுத்துக் கொள்ளும் நினைவின்றி அவன் சொன்ன அந்த 'என்னென்னவோ' என்னென்னவாக இருக்கக் கூடும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்..
என்னதான் விஞ்ஞானியைப் போல மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் அவன் சொன்ன 'என்னென்னவோ..' என்னவென்றுதான் அவளுக்குத் தெரியவில்லை...
"ரொம்பவும் யோசிக்காதே.." குறும்புச் சிரிப்புடன் அவன் சொன்னான்..
"அதெல்லாம் உன்னைப் போல பப்பாக்களுக்குப் புரியாது.." தொடர்ந்து அவன் சொன்னதில்..
"என்னது..?" என்று வெகுண்டு நிமிர்ந்தாள் அர்ச்சனா..
"பப்பாவா.. நானா..?"
"பின்னே..? உன்னைத்தான் பப்பான்னு சொல்ல முடியும்.. உன்கூட வந்த உன் பிரண்டையா பப்பான்னு சொல்ல முடியும்..? ஆஹா.. அந்தப் பொண்ணுக்கு என்ன தெளிவு.. என்ன அறிவு.. கற்பூரபுத்தியில்ல அதுக்கு.." கதிர்வேலன் நீபாவை வியந்து வியந்து பாராட்டினான்..
அவன் கண்களின் சிரிப்பில் அவன் சொல்லும் தெளிவு என்னவகையான தெளிவு என்று தெள்ளத் தெளிவாக அர்ச்சனாவுக்குப் புரிந்தது..
'இவன் இப்படியெல்லாம் கூடப் பேசுவானா..?'
அவள் லேசாக உதட்டைச் சுழித்தபடி நழுவ விட்ட புத்தகத்தைக் கையில் எடுத்தாள்.. அதைப் பிரித்து படிப்பதைப் போல பாவனை செய்தபடி..
"நீங்க சரியாத்தான் சொல்கிறிங்க.. சில விசயங்களில் நான் பப்பாதான்.. உங்க தெளிவுக்கு அவ தெளிவுதான் ஈக்குவலா இருக்கும்.. அதனால நீங்க சொல்ற 'என்னென்னவோ'க் களைப் பத்தி எனக்கு விளக்கம் சொல்லி டயத்தை வேஸ்ட் பண்ணாம அவளப் போல தெளிவான ஆளுகிட்ட டைரக்டா அப்ளை பண்ணிர வேண்டியதுதானே.." என்று நிமிர்ந்து பார்க்காமல் சொன்னாள்..
"அது எப்படி?" என்றான் கதிர்வேலன்..
"அவளா என் அத்தை மகள்..? நீதானே என் அத்தை மகள்..!"
அவன் குரலில் வழிந்தோடிய விசமம் அவளைத் தலையைத் தூக்கிப் பார்க்க வைத்தது.. அவன் கண்களில் தெரிந்த ரகசியப் பேச்சில் அர்ச்சனாவுக்கு பேச்சு மறந்து போனது...
'என்ன இது..?' அவள் தவித்துப் போனாள்...
இதுபோன்ற இனம் புரியாத உணர்வுகளுக்கு அவள் அதற்கு முன்னால் ஆட்பட்டதில்லையே.. இப்படி எங்கிருந்தோ ஒருவன் வருவான்.. அவள் மனதில் சலனத்தை விதைப்பான் என்று அன்று காலைவரை அவள் நினைத்தும் பார்த்ததில்லையே...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -6
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -6
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy