உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -12

12 நீ உதிர்க்கும் வார்த்தைகளை... பூமழையாய் நான் உணர்வேன்... "உங்களால்தான்..." அர்ச்சனா நிர்தாட்சண்யமாக குற்றம் சாட்...


12
நீ உதிர்க்கும் வார்த்தைகளை...
பூமழையாய் நான் உணர்வேன்...


"உங்களால்தான்..."
அர்ச்சனா நிர்தாட்சண்யமாக குற்றம் சாட்டினாள்.. அவள் விழிகளில் கனல் இருந்தது.. அதை சட்டை செய்யாமல் ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி வாகாக அந்தப் பூங்காவின் பெஞ்சின் மீது சாய்ந்தபடி அவளின் கோபத்தை வேடிக்கை பார்த்தான் கதிர்வேலன்...
"உங்களால்தான் என் அப்பாவும்.. அம்மாவும் பிரிஞ்சு நிற்கிறாங்க.." அர்ச்சனா குமுறினாள்..
"இல்லவே இல்லை.." அழுத்தம் திருத்தமாக அதை மறுத்தான் கதிர்வேலன்..
"எனக்கும் உன்னைப் பெத்தவங்களோட மனசுக பிரிஞ்சு நிற்கிறதுக்கும் யாதொரு சம்பந்தமுமில்ல.. முதல்ல நீ ஒன்னைப் புரிஞ்சுக்க டிரை பண்ணனும்.."
"என்னது..?"
"உன் அப்பாம்மாவோட மனசுக எந்த நாளிலும் ஒன்னு சேர்ந்து இருந்தது கிடையாது.. அது சேர்ந்திருந்தாத்தானே பிரியறதுக்கு..?"
அது உண்மை என்பதில் அர்ச்சனா இக்கமாக உணர்ந்தாள்.. என்னதான் கதிர்வேலனை அவளுக்குப் பிடிக்குமென்றாலும்.. அவன் அவளது அம்மாவின் பாசத்திற்குரிய அண்ணன் மகன் என்றிருந்தாலும் அவன் அவ்வளவு வெளிப்படையாக கடுமையுடன் அவளுடைய தாய் தந்தையின் வாழ்வைப் பற்றி விமரிசித்ததில் அவளுக்கு கொஞ்சும் கூட உடன்பாடில்லை..
"ஷட்.. அப்.." சிடுசிடுத்து விட்டாள்..
கதிர்வேலனின் முகத்தில் இருந்த இளக்கம் மறைந்தது.. அவன் அவளைக் கூர்மையாக பார்த்தான்.. அவள் முகத்தில் தெரிந்த உணர்வலைகளை அவதானிப்பதைப் போல இருந்தது அவனது பார்வை..
"ஸோ.. உன் அப்பாவின் சுயரூபத்தைச் சொன்னா.. நீ ஏத்துக்க மாட்ட..?" நிதானமாக வினவினான்..
"எனக்கு என் அப்பாவைத் தெரியும்.. அதைப் பற்றிச் சொல்ல நீங்க யார்..?" அர்ச்சனா சீறினாள்..
"என்ன தெரியும்..? சொல்லு.. உன் அப்பாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..?" அவன் வேகத்துடன் கேட்டான்...
"என் அப்பாவைப் பற்றி எனக்குத் தான் தெரியும்.. பின்னே உங்களுக்கா அவரைப் பற்றித் தெரியும்..?" பதிலுக்கு அவளும் கேட்டாள்..
"ஆமாம்.." அழுத்தம் திருத்தமாக அவன் சொன்னான்..
"என்ன தெரியும்..?"
"உனக்கு உன் அப்பாவைப் பற்றித் தெரிந்திருக் கிறதைவிட எனக்கு அவரைப் பற்றி அதிகமாவே தெரியும்."
"ஹலோ.."
அவளின் கோபத்தில் அவன் சுற்று முற்றும் யாரையோ தேடுவதை போல பார்த்தான்.. அவளின் கோபம் கூடியது..
"இப்ப யாரைத் தேடறிங்க..?" சுள்ளென்று எரிந்து விழுந்தாள்..
"நீ ஹலோ.. ஹலோன்னு கூப்பிடறயே.. அதான்.. யாரைக் கூப்பிடறேன்னு தேடறேன்.." என்றான் அவன்..
"உங்க கூடப் பேசிக்கிட்டு இருக்கும் போது வேற யாரை ஹலோன்னு கூப்பிடுவேன்..?"
"என்னையா கூப்பிட்ட..?"
அவன் வெகுவாக ஆச்சரியப் பட்டுப் போனதில் அவள் புருவங்கள் மேலேறின.. எதற்காக அவன் இந்த அளவுக்கு ஆச்சரியப்படுகிறான் என்று யோசித்தாள் அர்ச்சனா...
"இப்ப வரைக்கும்.. அதாவது இந்தப் பூங்காவில் நுழைந்து உட்காருகிற வரைக்கும் என்னை அத்தான்.. அத்தான்னு நீ கூப்பிட்டதா ஞாபகம்.."
என்னவோ.. 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..' என்ற ரீதியில் அவன் சொன்னதில் அவள் ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனாள்..
"அதுக்கென்ன இப்ப..?" என்று முறைத்தாள்..
"இல்லை.. இப்ப வரைக்கும் அத்தானா இருந்தவன்.. உன் அப்பாவைக் குறை சொன்னவுடன் 'ஹலோ' வாகிப் போனேனா..?"
நிறுத்தி நிதானமாக அவன் வினவியதற்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை.. அவள் கோபத்துடன் இருந்தாள்.. அதுநாள்வரை வீட்டில் கட்டிப் போடப்பட்ட பசுவாக இருந்த பத்மா.. கட்டவிழ்ந்து கிளம்பிப் போக முனைந்ததற்கு கதிர்வேலன் கொடுத்த தைரியம்தான் காரணம் என்று அவளுக்கு தோன்றிவிட்டது..
"வா கதிர்.." என்று பத்மா பெட்டியுடன் வெளியேற முனைந்தால் அவன் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமோ..
அதை விட்டுவிட்டு.. முதல் ஆளாக அவளது பெட்டியைத் தூக்கிக் கொண்டு.. பத்மாவின் கை பிடித்து..
"போகலாம் அத்தை.." என்று கிளம்ப முனையலாமா..?
பிரகாசம் பதறிப் போய் அர்ச்சனாவிடம் கண்ஜாடை காட்டப்போய் அர்ச்சனா பத்மாவை தடுத்து நிறுத்தினாள்.. அப்போதும் அவள் பையைக் கீழே போட மறுத்து விட்டாள்.. பிரகாசம்தான் இறங்கி வந்து..
"சரி.. சரி.. ஏதோ கோபத்தில ஒரு வார்த்தை சொல்லிட்டேன்.. அதுக்காக இப்படியா அத்தையும்.. மருமகனும் பெட்டியைத் தூக்கிக்கிட்டுக் கிளம்பனும்.. உள்ளே போங்க.." என்று சமாதானமாக பேசினார்...
அப்போதும் கதிர்வேலன் விட்டு விடவில்லையே..
'அப்பாடி.. அப்பாவும்.. அம்மாவும்.. சமாதானமா கிட்டாங்க..' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அர்ச்சனாவின் நிம்மதியில் மலையைத் தூக்கியல்லவா போட்டு வைத்தான்..
"அது எப்படிங்க..? நீங்க அடிமையைப் போல என் அத்தையைப் பேசுவீங்க.. அவங்க அதைக் கேட்டுக்கிட்டு உங்க வீட்டில காலம் தள்ளனுமா..? வேணாங்க.. என் அத்தையை நான் எங்க வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.." என்று பிடிவாதம் பிடித்தானே...
ஆனானப்பட்ட பிரகாசமே ஆடிப் போய் விட்டாரே..
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..? கோவிலுக்குப் போனவ காலாகாலத்தில வீட்டுக்கு வந்தா என்னன்னு தான கேட்டேன்..? அது ஒரு குற்றமா..?"
"அவங்க தினமும் கோவிலுக்குப் போகிறதில்லையே.. வீடுதான் கோவில்ன்னு இருக்கிறவங்களாச்சே.. இன்னைக்கு அர்ச்சனா தான் கோவிலுக்குப் போகனும்னு சொன்னது.. துணைக்கு நானும் போனேன்.. நீங்க திட்டறதா இருந்தா உங்க பெண்ணைத்தான் திட்டியிருக்கனும்.. அதை விட்டுட்டு என் அத்தையை ஏன் திட்டறிங்க..?"
"பாருங்க.. இவ உங்க அத்தைங்கிறதெல்லாம் அப்புறம்.. முதல்ல இவ என் பெண்டாட்டி.."
"அந்த நினைப்பிருந்தா வீட்டில வேலை செய்கிறவங்க முன்னாலே அவங்களை குற்றவாளியப் போல நிறுத்தி வைச்சு விசாரிச்சிருப்பீங்களா..? எங்கே.. உங்க வீட்டு வேலையாளுககிட்ட இதைப்போல சத்தம் போட்டுப் பாருங்க.. அடுத்த நாளே உங்க வேலையே வேணாம்ன்னு விட்டுட்டுப் போயிருவாங்க.. பெண்டாட்டி அப்படிச் செய்ய மாட்டாங்கங்கிற தைரியம்தானே உங்களுக்கு..?"
இதைப் போன்ற கேள்விகளை அர்ச்சனாவும் தாயின் சார்பாக பிரகாசத்திடம் கேட்பாள்தான்.. அதை மற்றவர்களின் முன்னால் கேட்க மாட்டாள்.. கதிர்வேலன் அதைச் செய்ததில் அவளுக்கு என்னவோ போல இருந்தது.. பத்மாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதைவிட.. அதைச் சாக்காக வைத்து பிரகாசத்தைக் காய்ச்சு.. சாய்ச்சென்று காய்ச்ச வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருக்கக் கூடுமோ என்று அவள் சந்தேகப் பட்டாள்..
அந்தச் சந்தேகத்தை நேரடியாக அவனிடம் அவள் கேட்டபோது..
"நினைச்சேன்.." என்று ஒரு தினுசான குரலில் அவன் சொன்னான்..
"என்னத்தை நினைச்சீங்க..?" அர்ச்சனா சீறினாள்..
"பிரகாசத்தின் மகள் பிரகாசத்தைப் போலத்தான் இருப்பாள்ன்னு நினைச்சேன்.. நீ அதை புரூவ் பண்ணிட்ட.."
"ஹலோ.. என் அப்பாவின் மகள் அவளைப் போலத்தான் இருப்பேன்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?"
"எதுவும் சொல்லலை.. சொல்ல நான் யார்..?"
அவன் ஒட்டாத குரலில் பேசவும் அவளுக்கு 'திக்' கென்று ஆகி விட்டது.. இது போன்ற ஒட்டாத தன்மையுடன் அவளிடம் அவன் பேசியதேயில்லையே..
வந்த முதல் நாளில் கூட முசுட்டுத்தனமாய் முறைத்தபடிதான் இருந்தான்.. அதிலும் ஓர் கோபம் இருந்ததேயொழிய ஒட்டாத தன்மை இல்லையே...
மனது சோர்ந்த போதும் பத்மா பிரகாசத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறாள் என்ற நினைவு வந்ததில் அவனின் ஒட்டாத தன்மையை மறந்து அவனை விரோதியைப் போலப் பார்த்தாள்..
"உங்களாலே என் அம்மா.. அப்பாவுடன் பேசறதில்லை.."
"ஓஹோ.. நான்தான் உன் அம்மாகிட்டப் போய் உன் அப்பாகிட்ட 'டூ' விடுங்கன்னு சொல்லிக் கொடுத்தேனா..?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது.. இதுவரைக்கும் அம்மாவின் மனதை புண்படுத்தறதைப் போல அப்பா எத்தனையோ பேசியிருக்கார்.. செய்திருக்கார்.. அதோட ஒப்பிட்டா இரண்டு நாள்களுக்கு முன்னால் நடந்ததெல்லாம் ரொம்பச் சாதாரணம்.."
"அதுக்கு..?"
"அப்பல்லாம் அம்மா அப்பா என்ன பேசினாலும் கண்டுக்க மாட்டாங்க.. சகிச்சுக்குவாங்க.. இப்ப மட்டும் எதுக்காக அப்பாவை எதிர்த்து நிற்கிறாங்க..?"
"இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற..?"
"நீங்கதான் அந்த தைரியத்தை என் அம்மாவுக்கு கொடுத்திருக்கீங்க.. நீங்க மட்டும் வராம இருந்திருந்தா.."
அர்ச்சனா வேக மூச்சுக்களுடன் பேசிக் கொண்டிருந்த போது கதிர்வேலன் இடைமறித்தான்..
"உன் அம்மா முதுகெழும்பில்லாம உன் அப்பா காலடியில புழுவைவிடக் கேவலமா.. அடிமையாக் கிடந்திருப்பாங்க.. அப்படித்தானே..? அதைத்தானே சொல்ல வர்ற..?"
கதிர்வேலனின் முகம் ஜிவுஜிவுவென சிவந்திருந்தது.. அதில் அர்ச்சனா பயந்து போனாலும்.. தைரியத்தைக் கைவிடாமல்..
"ஹஸ்பெண்ட் அண்ட் வொய்புக்குள்ள ஆயிரம் இருக்கும்.. அதில் தலையிட மத்தவங்களுக்கு உரிமை யில்லை.." என்று சொன்னாள்..
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. உன் உடம்பில ஓடுற ரத்தம் மிஸ்டர் பிரகாசத்துடையது தானே.. நீ இப்படித்தான் பேசுவ... மாறிப் பேசியிருந்தால்தான் ஆச்சரியப்படனும்.. உன்னையும் வயித்தில சுமந்து.. பெத்து.. வளர்த்திருக்காங்க பாரு.. என் அருமை அத்தை.. அவங்களைச் சொல்லனும்.." முகம் சுளித்தான் கதிர்வேலன்...
"அவங்களை என்ன சொல்லப் போறிங்க..?" ரோசத்துடன் கேட்டாள் அர்ச்சனா..
"அதைச் சொல்லு.. அவங்களைச் சொல்ல என்ன இருக்கு..? என் அத்தை தங்கமானவங்க.. அவங்க பெண்டாட்டியா கிடைக்க உன் அப்பா கொடுத்து வைச்சிருக்கனும்.. அவங்க வயித்திலே பிறக்க நீ தவம் பண்ணியிருக்கனும்.. எங்கே..? உங்க ரெண்டு பேருக்கும் தான் அவங்க அருமையைத் தெரியலையே.. குப்பையைக் கிளருகிற கோழிக்கு வைரத்தோட அருமையைப் பத்தி என்ன தெரியும்..?"
"ஹலோ..."
அர்ச்சனா தடுத்து ஏதோ சொல்லப் போக.. அதற்குள் எழுந்து விட்ட கதிர்வேலன் ஒற்றை விரலை உயர்த்தி அவளை எச்சரித்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -12
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -12
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirthene-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirthene-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy