உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -7

7 அதிகாலைக் குளிரில் என்மனம்.. எதற்காக போர்வையை விட்டுவிட்டு.. உன் அருகாமையைத் தேடியது.. ? அவளின் சிவந்து போன கன்னங்களையே ரசன...


7
அதிகாலைக் குளிரில் என்மனம்..
எதற்காக போர்வையை விட்டுவிட்டு..
உன் அருகாமையைத் தேடியது..?


அவளின் சிவந்து போன கன்னங்களையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளை நேரடியாகச் சந்திக்க அர்ச்சனாவின் விழிகளுக்கு முடிய வில்லை.. அவனின் காந்தப் பார்வையில் அவள் ஆகர்ஷிக்கப் படுவதை உணர்ந்தவளின் மனம் தாளாத தவிப்பில் நனைந்தது..
அவனுடனான அந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் ஊடே அவள் மனதில் ஒரு சஞ்சலம் ஊசலாடியது..
'இவனுக்கு நான் அத்தை மகள் உறவில் இருக்கிறதாலேதான் இவன் என்னிடம் நூல் விட்டுப் பார்க்கிறானா..?'
இதை அவனிடம் கேட்டே ஆக வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் எழுந்தது.. அதற்கான விடை தெரியாமல் அவளால் வேறு எந்த வேலையிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றியதில்.. அவள் மனதில் நினைத்ததைக் கேட்டுவிட எண்ணி வாய் திறந்தாள்..
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் எதிர்பார்ப்பு வந்து அமர்ந்தது..
'என்ன சொல்லப் போறா..'
கூர்மையான பார்வையுடன் அவள் முகத்தையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன்..
"ஒருவேளை.." என்று ஆரம்பித்த அர்ச்சனா.. மாடிப் படிகளில் கனத்த காலடிச் சப்தம் கேட்டதும் வாயை மூடிக் கொண்டாள்..
கேள்வியாக பார்த்தவனின் புருவங்கள் உயர்ந்ததில்..
"அப்பா..!" என்று ஒற்றைச் சொல்லில் அறிவுறுத்தினாள்..
கணப்பொழுதில் அவன் முகத்திலிருந்த உல்லாசம் மறைந்து போய் அவன் முகம் பாறையைப் போல இறுகி விட்டதை அர்ச்சனா வியப்புடன் பார்த்தாள்..
கதிர்வேலன் இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை.. கால்மேல் கால் போட்டு என்ன தோரணையில் அமர்ந்திருந்தானோ அதே தோரணையுடன்தான் அதை மாற்றிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்..
மாடிக்கு வந்த பிரகாசம் அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் முகத்தைச் சுளித்தார்.. கதிர்வேலனுடன் சகஜமாக உட்கார்ந்து அவருடைய மகள் உரையாடுவதில் அவருக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்பதை அவருடைய முகச்சுளிப்பு உணர்த்தியது..
'இங்கே என்ன பண்ற..?' என்று கதிர்வேலனிடம் கேட்கத்தான் அவர் விரும்பினார்..
அவனிடம் அதைக் கேட்க முடியாமல் மகளின் பக்கம் திரும்பி..
"இங்கே என்னம்மா பண்ற..?" என்று கடுமையாக வினவினார்..
"அப்பா..?" ஆச்சரியத்துடன் பதிலுக்கு வினவினாள் அர்ச்சனா..
"என்னப்பா கேள்வி இது..? நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்குதே.. அதுக்காக படிச்சுக்கிட்டு இருக்கேன்ப்பா.. பார்த்தாத் தெரியலை..?"
"அதை உன் ரூமுக்குள் போய் படிக்கலாமேம்மா.."
கதிர்வேலனை முறைத்தபடி அவர் பேசியதில் அவன் முகம் இறுகியது.. கண்கள் இடுங்க அவர் பேசுவதையே கவனித்தான்.. அர்ச்சனாவுக்கும் அவர் பேசிய முறை பிடிக்கவில்லை..
"என்னப்பா இது..? இன்னைக்குன்னு புதுசு புதுசா கேள்வி கேட்கறிங்க.. நான் எப்பவுமே மாடி ஹாலில்தானே படிப்பேன்.."
அர்ச்சனாவுக்கு அந்த வழக்கம் இருந்தது.. அவள் பாடப்புத்தகங்களைப் படிப்பதாக இருந்தால் மாடி ஹாலில் தான் படிப்பாள்.. அங்கே போடப் பட்டிருக்கும் அகன்ற.. நீண்ட சோபாக்களில்.. குப்புறப் படுத்தோ.. கால்களை மடித்து வைத்தோ.. இல்லை ஒருபக்கமாக திரும்பி அமர்ந்து கால் நீட்டி ஆட்டிக் கொண்டோ என்று பற்பல கோணங்களில் அவள் விழுந்து புரண்டு படிக்க அவளுக்கு மாடி ஹாலின் சோபாக்கள்தான் தோதாக இருந்தன..
அவள் படிக்கும் போது கையாளும் வித்தைகளை மற்றவர்கள் பார்த்து விடாமலிருக்கும் பொருட்டே அவள் மாடி ஹாலை தேர்வு செய்திருந்தாள்.. அங்கே பானுவைத் தவிர வேறு அன்னியர்கள் வந்து போக மாட்டார்கள்.. படிப்பில் அலுப்பு வரும் போது எழுந்து நீண்ட ஹாலில் நடந்து கொடுக்கலாம்.. மாடி ஹாலை ஒட்டியிருக்கும் பால்கனியில் தொங்கும் ஊஞ்சலில் சற்று நேரம் ஆடி மகிழலாம்..
இதையெல்லாம் அர்ச்சனாவின் அறைக்குள் அவளால் செய்ய முடியுமா என்ன..?
இதையெல்லாம் அவள் சொல்லித்தான் பிரகாசம் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன..? அவருக்கே இதைப் பற்றி நன்கு தெரியுமே.. இருந்தும் எதற்காக கதிர்வேலனின் முன்பாக அப்படியொரு கேள்வியைக் கேட்டார்..?
"எப்பவும் போல இப்ப இல்லம்மா.. நேரத்துக்கு தகுந்தாற்போல நாம நம்ம வழக்கத்தைய் மாத்திக்கனும்.."
அவரின் கடுமையில் கதிர்வேலன் எழுந்தான்.. அவரை ஊடுறுவும் பார்வை பார்த்தபடி..
"பாவம்.. இது உங்க பெண்ணா இருந்தாலும் நேரத்துக்குத் தகுந்ததைப் போல குணத்தை மாத்திக்கிற வித்தை இதுக்கு இன்னமும் வரலை போல.. ஊரில இருக்கிறவங்க குணத்தையெல்லாம் மாற்ற முடிஞ்ச உங்களாலே.. உங்க பெண்ணோட குணத்தை மாற்ற முடியலைங்கிறது அதிசயம்தான்.." என்றபடி தோளைக் குலுக்கினான்..
அர்ச்சனாவை ஒட்டுதல் இல்லாமல் பார்த்து விட்டு மாடிப் படிகளில் இறங்கிப் போய் விட்டான்..
'கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே என்கிட்ட கேலி பேசினவனா இவன்..?' அர்ச்சனா அசையாமல் அமர்ந்து விட்டாள்..
"இதை முதலிலேயே செய்திருக்க வேண்டியது தானே.."
கதிர்வேலன் போன திசையைப் பார்த்தபடி வெறுப்புடன் சொன்னார் பிரகாசம்.. வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியிடம் அவர் பேசும் முறை சரியானதல்ல என்று அர்ச்சனாவுக்குத் தோன்றியது.. இந்த அளவுக்கு வெறுப்பை எதற்காக கதிர்வேலனின் மீது அவளின் தந்தை கொட்டுகிறார் என்பதைப் புரியாதவளாக புத்தகத்தை கையில் எடுத்தாள் அர்ச்சனா.. படிப்பில் மனம் போக வில்லை.. ஒரு இனிய கனவு கலைந்ததைப் போல அவள் உணர்ந்தாள்..
அழகான பாடலின் இடையே அபஸ்வரம் ஏற்பட்டு விட்டதைப் போல.. இனிமையான பேச்சு அறுந்து போனதில் அவள் மனதுக்குள் துயரம் கவிந்தது..
இதுபோன்ற உரிமைப் பேச்சுடன் எந்த உறவினரும் அந்த வீட்டுக்குள் வந்து போனதில்லை.. வருபவர்கள் எல்லாம் பிரகாசம் வழிச் சொந்தங்களாகவே இருப்பார்கள்.. அவர்கள் பத்மாவிடம் ஒட்டுதலாக பேச மாட்டார்கள்.. பத்மாவும் அவர்களைக் கண்டதும் நத்தை ஓட்டுக்குள் பதுங்கவதைப் போல அவளுடைய அறைக்குள் விலகி பதுங்கிக் கொள்வாள்.. தாயின் மீது அதிக அளவில் பாசம் கொண்டிருக்கும் அர்ச்சனாவினால் அவர்களுடன் இயல்பாக பேசக்கூடப் பிடிக்காமல் போய் விடும்.. அதோடு கதிர்வேலனைப் போல அவர்களில் எவரும் அந்த வீட்டுக்குள் உயிர்ப்பைக் கொண்டு வந்ததில்லை..
"ஏம்மா.. அவன்தான் உன் முன்னால் சட்டமாக உட்கார்ந்திருக்கான்னா நீயும் அவன்கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கனுமா..? சட்டுன்னு எழுந்திருச்சு உன் ரூமுக்குள்ள போயிருந்தேன்னா அவன் முகத்தில் அடித்ததைப் போல இருந்திருக்காதா..?"
'அது என்ன தேவைக்கு..?'
அர்ச்சனா எரிச்சலுடன் பிரகாசத்தைப் பார்த்தாள்.. அவள் பார்வையில் அவரின் பேச்சு நின்று விட்டது.. அவரது புருவங்கள் சுருங்கின...
மகளின் எரிச்சலான பார்வை.. அவருக்கு கதிர்வேலனின் மீதான அவளின் ஆதரவை உணர்த்தி விட அவர் முகம் மாறிப்போனார்..
"வாட் இஸ் திஸ்ப்பா..?" அர்ச்சனா முகம் சுளித்தாள்..
"அவர் யாருப்பா..? நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட்.. அவர் முன்னாலே இப்படித்தான் பிஹேவ் பண்ணு வீங்களா..?"
"அர்ச்சனா.."
"போதும்ப்பா.. அவர் அம்மாவோட அண்ணன் மகன்.. அவரைக் கண்டா நான் பேசாம ஒதுங்கிப் போகனுமா..? அவரை ஒதுக்கி வைக்கனுமா..? ஏன்ப்பா..? ஏன்..?"
ஏனென்று சொல்ல முடியாமல் உதடுகள் துடிக்க மகளைப் பார்த்த பிரகாசத்தின் பார்வையில் எதையோ உணர்ந்தவளாக..
"சொல்லுங்கப்பா.." என்று அவரை ஊக்குவித்தாள் அர்ச்சனா..
அவர் எதையும் சொல்லவில்லை.. மௌனமாக மகளை வெறித்தார்..
"உங்க பக்க சொந்தம் வந்து போகிறப்ப அவங்க கூட நான் பேசிப் பழகக் கூடாதுன்னு அம்மா சொன்னா நீங்க கேட்டுக்கிட்டு இருப்பீங்களாப்பா..? அம்மாவை குதறி எடுத்துற மாட்டிங்க..? இதுவே அம்மாவோட அண்ணன் மகன் வந்திருக்கிறப்ப நீங்க அந்தக் காரியத்தைச் செய்ய நினைக்கறிங்க.. ஏன்ப்பா..? உங்களுக்கு ஒரு நியாயம்.. அவங்களுக்கு ஒரு நியாயமா..? அம்மாவோட சொந்தங்களுக்கு இந்த வீட்டிற்கு வந்து போக உரிமை யில்லையா..? இத்தனை வருசத்தில இப்பத்தானேப்பா முதன் முதலா அவங்க பக்கத்தில இருந்து ஒரு சொந்தக்காரர் வந்திருக்கார்..? அவரையும் நாம ஒழுங்கா ட்ரீட் பண்ணலைன்னா எப்படிப்பா..?"
மகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவருடைய அறைக்குள் போய் விட்டார் பிரகாசம்.. அர்ச்சனாவுக்கு தலையை வலிப்பதைப் போல இருந்தது.. அதற்கு மேலும் அங்கே உட்கார்ந்திருந்தால் படிக்க முடியாது என்று தோன்றிவிட.. அவள் எழுந்து கொள்ளப் போனாள்..
"அர்ச்சனா.." என்ற அழைப்புடன் பத்மா அங்கே வந்தாள்..
அவள் கையில் இருந்த டிரேயில் இரண்டு காபி கப்புகள் இருந்தன..
"இந்தா.." அர்ச்சனாவிடம் ஒரு காபிக்கப்பை நீட்டினாள்..
"நான் ஈவினிங் காபியை குடிச்சிட்டேன்ம்மா.. பானு கொண்டு வந்தா.." என்றாள் அர்ச்சனா..
"இப்ப தலையை வலிக்குதுன்னு செகண்ட் டோஸ் காபியக் கேட்டியாமே.. கதிர் வந்து சொல்லுச்சு.. குடிம்மா.." மகளிடம் பரிவுடன் சொல்லிவிட்டு பிரகாசத்திற்கு காபியைக் கொடுக்கப் போய்விட்டாள் பத்மா...
'அவன் வேலைதானா இது..?'
அர்ச்சனா சூடான காபியைப் பருகினாள்.. தலைவலிக்கு இதமாக இருந்தது.. அவள் காபியைக் குடித்து முடித்த போது பிரகாசத்தின் அறையிலிருந்து வெளியே வந்தாள் பத்மா.. அவள் முகம் வாடியிருந்தது.. அவளை பிரகாசம் வறுத்தெடுத்திருப்பார் என்று அர்ச்சனா புரிந்து கொண்டாள்.. தாயை இரக்கத்துடன் பார்த்தாள்.. பதிலுக்கு மகளைப் பார்த்து கனிவுடன் சிரித்தாள் பத்மா..
"என்னடா..?"
"அப்பா திட்டினாராம்மா..?"
"இல்லையே.."
எப்படி இவளால் இயல்பாக கணவரைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்துப் பேச முடிகிறது என்று மனதுக்குள் குமைந்தாள் அர்ச்சனா.. பொய்மையும் வாய்மையிடத்து என்று இதுபோன்ற கணவரைக் காப்பாற்ற பொய்யாக சிரிக்கும் இந்திய மனைவிகளைப் பார்த்துத்தான் வள்ளுவர் எழுதி வைத்திருப்பாரோ என்னவோ என்ற நினைவுடன் அர்ச்சனா பெருமூச்சு விட்டாள்..
"கொஞ்ச நேரத்துக்கு தோட்டத்தில நடந்துட்டு வா.. மனசுல உற்சாகம் வரும்.. அதுக்கப்புறமா வந்து படி.. அதுக்கு முன்னால என்னதான் நீ விழுந்து விழுந்து படிச்சாலும் உன் மனசுல படிப்பு ஏறாது.." யோசனை சொன்னாள் பத்மா..
'அதுவும் சரிதான்..' என்று அர்ச்சனாவுக்குத் தோன்றியது..
பத்மாவுடன் பேசியபடி அவள் படியிறங்கினாள்.. கதிர்வேலன் தென்படுகிறானா என்று அவள் விழிகள் துழாவின.. அவன் அங்கு இல்லாததில் அவள் மனதில் ஏமாற்றம் கவிந்தது..
"நைட் டிபனுக்கு என்ன செய்யனும்னு சொல்லனும்.. நீ போ.."
பத்மாவுக்கு அவள் வேலை..!
அவள் சமையலறைப் பக்கமாக போய்விட அர்ச்சனா விலகி தோட்டத்துப் பக்கமாக நடந்தாள்.. கதிர்வேலனிடம் பிரகாசம் நடந்து கொண்ட முறையை நினைத்து.. நினைத்து.. அவள் மனம் வலித்தது.. அதில் அவருக்கு என்ன கிடைத்து விட்டது என்ற நினைவில் அவள் மனம் வெம்பியது...
"இது நீரோடு
             செல்கின்ற ஓடம்..
            இதில் நியாயங்கள்
             யார் சொல்லக்கூடும்..?"
அவள் காதுகளில் விழுந்த பாடல் சத்தத்தில் அவள் ஆனந்தத்துடன் திரும்பிப் பார்த்தாள்.. தோட்டத்தில் காம்பவுண்டு சுவரோமாக இருந்த தென்னைமரத்தின் மீது சாய்ந்து முன் பக்கமாக கைகளை மடித்துக் கட்டியபடி கதிர்வேலன் நின்றிருந்தான்...
அர்ச்சனாவின் மனம் ததும்பியது.. என்னவோ ஆண்டாண்டு காலம் அவனுடன் பழகிக் கொண்டிருந்தவளைப் போல.. அந்தப் பழக்கத்தின் இடையே ஆண்டாண்டு காலப் பிரிவை சந்தித்து விட்டவளைப் போல அவள் மனதுக்குள் விம்மினாள்...
    "எந்த தர்மங்கள்..
             எதனாலே மாறும்..?
     எந்தக் குற்றங்கள்..
             எதனாலே தீரும்..?"
அவனது கனத்த குரலில் வந்த பாடலின் வரிகள் கொண்டிருந்த கனத்த அர்த்தத்தில் அர்ச்சனா பேச்சிழந்தாள்.. அவன் நிதானமாக அவளருகில் வந்தான்.. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்..
"நான் உனக்காகத்தான் காத்திருக்கேன்.. எப்படியும் நீ இங்கே வருவாய்ன்னு எனக்குத் தெரியும்.." என்றான்..
"ஜோஸியம் பார்த்தீங்களா..?" விளையாட்டாக கேட்டாள் அர்ச்சனா..
அவனைக் கண்டதும் எப்படி அந்த விளையாட்டும்.. துள்ளலும் அவளிடம் ஓடி வந்து ஒட்டிக் கொண்டன என்று தெரியாமல் அவள் திகைத்தாள்.. அவனோ அதை அறிந்து வைத்திருப்பவனைப் போலச் சிரித்துக் கொண்டான்..
"இதில ஜோஸியம் பார்க்க என்ன இருக்கு..? நான் தான் அத்தையிடம் சொன்னேன்.."
"என்னன்னு..? உங்க மகளை தோட்டத்துக்கு அனுப்பி வையுங்க.. அங்கே பாட்டுப் பாடிக்கிட்டு நான் காத்துக்கிட்டு இருக்கேன்னா..?"
உல்லாசமாக கேட்டாள் அர்ச்சனா.. அவன் விழிகளில் வியப்பு வந்தது.. மெச்சுதலான பார்வையுடன்..
"பாருடா.. என் அத்தைமக இந்தப் போடு போடறத.. உனக்கு இந்த விகடப் பேச்செல்லாம் பேச வருமா..?" என்று கேட்டான்..
"பின்னே அந்த நீபாவுக்குத்தான் அந்தப் பேச்சை யெல்லாம் பேச வரும்ன்னு நினைச்சீங்களா..?" என்று நொடித்தாள் அர்ச்சனா..
"நீபாவா..? யார் அது..?" கதிர்வேலனுக்கு விளங்க வில்லை..
"நீபாவைத் தெரியாதா..?" கண்களை விரித்து பலத்த ஆச்சரியத்துடன் கேட்டாள்..
"மெல்ல.. எதுக்கு இந்த பில்ட் அப்..? நீபான்னா என்ன பெரிய மகாராணியா..? உலகம் பூராவும் அவ பேரைச் சொன்னாலே தெரிஞ்சு வைச்சுக்கிறதுக்கு.." அவன் மிதப்பாக கேட்டான்..
அந்த மிதப்பை அர்ச்சனாவுக்குப் பிடித்திருந்தது.. அவனுக்கு நீபாவைத் தெரியவில்லை என்பதிலேயே மனதுக்குள் மழைச்சாரலை அவள் உணர்ந்தாள்..
"யாரோ சொன்னாங்க.." ராகம் போட்டாள்..
"என்னன்னு..?" அவன் புருவங்களை உயர்த்தினான்..
"நான் பப்பாவாம்.. நீபாவுக்குத்தான் தெளிவாம்.. அறிவாம்.. கற்பூர புத்தியாம்.." அர்ச்சனா அடுக்கினாள்..
"ஏய்ய்.. உன் பிரண்டோட பேரு நீபாவா..?" அவன் ஆச்சரியப்பட்டுப் போனான்.. கூடவே..
"பேரெல்லாம் யாருக்குத் தெரியுது..? உன்னை ஓட்டனும்ங்கிறதுக்காக அந்தப் பெண்ணைப் பத்திப் பேசினேன்.. மத்தபடி அதை யாரு கவனித்தது..?" என்று வேறு கேட்டான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,23,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,9,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -7
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -7
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyiththene-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyiththene-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy